பக்கங்கள்

ஞாயிறு, 12 ஜூன், 2016

பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்


பகுத்தறிவு தந்தை பெரியாரவர்கள் 1924-ஆம் ஆண்டில் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம் அறிஞர் அம்பேத் கரின் உள்ளத்தில் ஓர் அரும் தாக்கத்தினை  விளைவித்தது !
திருவாங்கூர் நாட்டின் வைக்கத்தில் தீண்டத்தகாதோர் நுழையலாகாது எனத் தடுக்கப்பட்ட  ஒரு குறிப்பிட்ட  பாதையை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டென்று நிலை நாட்ட,  இராமசாமி நாயக்கர்  அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார்  ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான  போராட்டத் தில் அந்த ஆண்டின் மிகச் சிறப்பு வாய்ந்த  நிகழ்ச்சி அதுவே.
மிகவும் கவலையோடு இக்கிளர்ச்சியைக்  கவனித்துக் கொண்டிருந்த அம்பேத்கர் அந்த அறப்போரையொட்டி எழுதிய ஒரு தலையங்கத்தில் வைக்கம் கிளர்ச்சிபற்றி உள்ளம் நெகிழும் வண்ணம் குறிப்பிட்டார் என்னும் செய்தியை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது.
புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக் காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது  நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென  ஆங்கில நாடாளுமன்றம்  சட்டம் இயற்றும் என்று எதிர் பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !
- சாதியை  ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து.
இந்திய அரசியல் சட்ட அமைச்சராய் அம்பேத்கார் கடமையாற்றிக் கொண்டிருந்த காலம் அது. தம்மைச் சந்தித்த வின்சென்ட்ஷீன் என்ற அமெரிக்க எழுத்தாளரிடம் பார்ப் பனீயத்தால் கற்பிக்கப்பட்ட சாதி முறையின் தீமைகள். இந்திய வரலாறு நெடுகிலும் பார்ப்பனர் பண்ணிய கொடுமைகள் ஆகியவற்றை மணிக்கணக்கில் விரித்துரைத்த அம்பேத்கார் நிறுத்தவில்லை.
அத்தோடு ஷீன் அவர்களே தாங்கள் எங்களின் இந்தப் பார்ப்பன அரசாங்கத்தை விரும்புகிறீர்கள் என்றால், வேண்டுமாயின் இவ்வரசை மூட்டைகட்டித் தூக்கிச் சென்றுவிடுங்களேன். எங்களுக்கு இவ்வரசு தேவையில்லை எனக் கிண்டல் செய்தார்.
தாம் பங்காற்றிக் கொண்டிருந்தது இந்திய அரசியல்தான். எனினும் அதையொரு பார்ப்பன அரசு என்று பச்சையாக அதுவும் அயல்நாட்டு எழுத்தாளரிடம் அடையாளம் காட்டி னாரெனில் அம்பத்காரின் ஆரிய வெறுப்புத்தான் எத்தகையது!
-Nehru: The years of Power by Vincent Sheean
ஒரு பார்ப்பனர் விடுதலையடைந்த இந்தியாவின் முதல் தலைமையமைச்சர் ஆன நிகழ்ச்சியைக் கொண்டாடுவ தெற்கென 15.8.1947 அன்று காசிப் பார்ப்பனர்களால் இயற்றப் பட்ட யக்ஞத்தில் நேரு அமர்ந்து, பார்ப்பனர்களால் வழங்கப் பட்ட ராஜதண்டம் தரித்து, கங்கை நீரைப் பருகவில்லையா? அது போன்று இந்தியக் குடியரசுத் தலைவர் வாரணாசி சென்று பார்ப்பனர்களைத் தொழுது, அவர்தம் கால்கழுவி அத்தண் ணீரைக் குடிக்கவில்லையா?
- Thoughts on Linguistis States by Ambedkar
-விடுதலை,13.5.16