பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

ஏன் தாழ்ந்தோம்? - தாகூர்


மாஸ்கோவிலுள்ள புரொபசர் பீரிட்ரோ என்பவர் கவி. தாகூருக்கு கீழ்க்கண்ட தந்தியை அனுப்பினார். (ஆண்டு 1929)
ருசியாவில் கைத்தொழில், விவசாயம், விஞ்ஞான ஆராய்ச்சி ஸ்தாபனங்கள், சர்வகலாசாலைகள், பாட சாலைகள், கலை வளர்ச்சி இவை உயர்ந்த நிலையை அடைவதற்கு நீங்கள் என்ன காரணம் கூறு
கிறீர்கள்?
அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்குள்ள வேலைத் திட்டம் என்ன? அவைகளுக்குத் தடை யாது?
இதற்கு தாகூர் அவர்கள் அனுப்பிய தந்தி:
உங்களுடைய வெற்றிக் காரணம் தனிப்பட்ட நபர்களிடமிருந்த செல்வம், மானிட சமூகத்தினிடம் வந்து சேர்ந்ததேயாகும். நாங்கள் கீழ்நிலையில் இருப்பதற்கு எங்களுக்கு சமூகத் துறையிலும் அரசியல் துறையிலும் ஏற்பட்டுள்ள பைத்தியக் காரத்தன்மைகளும் வெறிபிடித்த தன்மைகளும், கல்வியில்  முன்னேற்றம் அடையாததும்தான் காரணமாகும்.
குடிஅரசு 29.11.1931

தர்மம் - ராகுலசாங் கிருத்தியாயன்

Image result for ராகுல் சாங்கிருத்யாயன்
தர்மம்! அது ஓர் ஏமாற்று என்றே நான் நினைக்கிறேன். பிறருடைய  உழைப்பின் பலனை அபகரிப்பவர்கள் அமைதியோடு அந்தப் பொருள்களை அனுபவிப்பதற்குச் சந்தர்ப்பம் கொடுப்பதற்காகவே இந்த தர்மம் சிருஷ் டிக்கப்பட்டிருக்கிறது.
தரித்திரர்களைப் பற்றியோ, பலவீனர்களைப் பற்றியோ இந்த தர்மம் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறதா? விரிந்த இந்த உலகத்திலே தர்மத்தை அங்கீகரிக்காத மனித சாதியே கிடையாதென சொல்லலாம். ஆனால் அவர்கள் அடிமைகளும் மனிதர்கள்தான் என்று எப்பொழுதாவது நினைத்ததுண்டா?..
இந்தப் பெண்களுடைய வாழ்க்கை அடிமைகளைப் பார்க்கிலும் உயர்ந்ததாகவா இருக்கிறது? ஆனால் தர்மம் இதை அங்கீகரிக்கிறது.  சரி என்ற சொல்லுக்கு மதம் சொல்லும் பொருளை நான் கொள்ளவில்லை; களங்கமற்ற மனித மனம் கொள்ளும் பொருளையே நான் ஏற்கிறேன்.


- வால்காவிலிருந்து கங்கை வரை நூலிலிருந்து ராகுலசாங் கிருத்தியாயன். தகவல்: மின்அணு
-விடுதலை,13.3.15

புரட்சி ஏன் தோன்றவில்லை?


இந்தியாவில் மட்டும் ஏன் சமூகப் புரட்சிகள் உண்டாகவில்லை? இதைப் பற்றி நான் வெகு நாள் யோசனை செய்தேன்.
இந்த கேள்விக்கு ஒரே ஒரு விடை தான் எனக்கு கிடைத்தது. அதாவது சதுர்வர்ணீயக் கொடுமையினால் (நால்வகை சாதி அமைப்பு) பாமர மக்கள் பலக்குறை வினராக்கப்பட்டிருப்பதனால் அவர்களுக்குப் புரட்சி செய்ய ஆற்றல் இல்லை, அவர்கள்  ஆயுதந்தாங்க முடியாது; ஆயுதமின்றி புரட்சியில் வெற்றி பெற முடியாது.
அவர்கள் எல்லாம் உழவர்கள்; ஏரைக்கட்டி அழவேண்டுமென்று  கட்டாயப்படுத்தப்பட்டவர்கள். கொழுவை - வாளாக மாற்றிக் கொள்ள அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை; உரிமையில்லை. சதுர்வணீயக் கொடுமையினால் அவர் களுக்கு கல்வி கற்கவும் முடியவில்லை. மோட்சத்துக்கு வழிதேடவோ அறியவோ, அவர்களால் முடியவில்லை.
எந்நாளும் அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்று அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலை பெற வழி தெரியாமல் அடிமை வாழ்வு போதுமென்று திருப்தி அடைந்துவிட்டார்கள். சதுர்வர்ணீயத்தைப் போல் மானக்கேடானது வேறு இல்லவே இல்லை. அது மக்களை முயற்சியற்றவராக்கி விட்டது.
டாக்டர் அம்பேத்கர்
(சாதியை ஒழிக்க வழி - பக்கம் 67)
-விடுதலை,13.3.15

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

திருச்சபை திருந்துகிறது

வாடிகன், ஆக.6_ மணவிலக்கு பெற்று கத்தோலிக்கத் திருச் சபைக்கு வெளியே மறு மணம் செய்துகொண் டவர்கள் மீது பெரிய அளவில் கருணைகாட்ட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கிறிஸ்தவப் பாதிரிமார்களிடம் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ் கத்தோலிக்கத் திருச்சபை யில் பல சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறார்
அப்படி மறுமணம் செய்துகொண்ட இணை யரை திருச்சபையில் இருந்து நீக்கி வைக்கக் கூடாது என்றும் அவர் களின் பிள்ளைகள் தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர் கள் என்று கருதும் நிலை ஏற்படக்கூடாது என்றும் போப் பிரான்சிஸ் வலியு றுத்தியுள்ளார்.
கத்தோலிக்கத் திருச் சபையின் பார்வையில் மணவிலக்கு பெற்றவர் களின் முதல் திருமணம் தொடர்ந்து நீடிப்பதா கவே பார்க்கப்படுகிறது என்பதால் மணவிலக்கு பெற்றவர்கள் தேவாலயங் களின் நற்கருணையை பெற முடியாத சூழல் உள்ளது.
முற்போக்கு கருத்துக் களை கொண்டுள்ள ஆயர்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் மாற்றங்கள் தேவை என கூறி வருவ தாகவும், தானும் இந்த விஷயத்தில் நெகிழ்வுத் தன்மையை ஆதரிப்பதாக வும் போப் பிரான்சிஸ் சில குறிப்புகளை வெளி யிட்டு வந்தார் என செய் தியாளர்கள் கூறுகின்றனர்.
-விடுதலை,6.8.15