பக்கங்கள்

தாழ்த்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாழ்த்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 அக்டோபர், 2024

நீதிக்கட்சி அமைச்சரவையும் தாழ்த்தப்பட்டோரும்!-கி. தளபதிராஜ்

2024 ஆகஸ்ட் 1-15, 2024

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் அண்மையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தாழ்த்தப்பட்டோருக்கு அமைச்சரவையில் இடம் அளித்தது காங்கிரஸ்தான் என்று கூறியுள்ளார். அதே வேளையில் நீதிக்கட்சி ஆட்சியில் கூட அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம்பெற முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இது ம.பொ.சி வகையறாக்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட புளித்துப்போன ஒரு குற்றச்சாட்டு. தாழ்த்தப்பட்ட மக்களின் அன்றைய நிலை என்ன?

1935ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டுப் பேருந்துகளில் பஞ்சமருக்கு இடமில்லை என்று சொன்னதோடு பயணச் சீட்டுகளிலும் அப்படி அச்சிடப்பட்டிருந்ததே! அதை ஒழித்துக் கட்டியது இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆட்சிக் குழுத் தலைவராக இருந்த சவுந்தரபாண்டியனார் அல்லவா?

தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சி ஆற்றிய சாதனைகள் எத்தனை? எத்தனை? பேருந்தில் கூட செல்ல முடியாத நிலை. உணவு விடுதிகள், பொது இடங்கள் என எங்கு சென்றாலும் தடை. அனைத்தையும் உடைத்து தகர்த்தது நீதிக் கட்சியும் அதன் நீட்சியான திராவிட இயக்கமும் அல்லவா? இதை உணர்ந்தால் நீதிக்கட்சி அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வியே எழ வாய்ப்பில்லையே!

1919லிருந்து 1935ஆம் ஆண்டு வரை இங்கே இருந்தது இரட்டை ஆட்சி முறை. அதன்படி அமைச்சரவையில் முதலமைச்சர் உட்பட இந்தியர் மொத்தமே மூன்று பேர்தான் இடம்பெற முடியும். அந்தக் காலகட்டத்தில் ஆட்சி புரிந்த நீதிக்கட்சி அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெறவில்லை என்று கூறுபவர்கள், அதனைத் தொடர்ந்து 1937இல் 10பேர் கொண்ட அமைச்சரவையையும், 1952இல் 15பேர் கொண்ட அமைச்சரவையையும் வைத்திருந்த ராஜாஜி அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெறவில்லை என்ற உண்மையை மறைப்பது ஏன்?

1937ல் ஏப்ரல் முதல் ஜூலை வரை சென்னை மாகாணத்தில் சொற்பகாலமே ஆட்சியிலிருந்த கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் தற்காலிக இடைக்கால அமைச்சரவையில் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எம்.சி.ராஜா அவர்கள். அவர் பெரியார் அவர்களைப் பற்றி கூறியது என்ன?

“இம்மேடையில் தோழர் ஈ.வே. ராமசாமி பெரியார் இருப்பதைக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு ஆதி திராவிட மந்திரி நியமிக்கப்பட வேண்டும் என அவர் சென்ற ஆறு- ஏழு வருஷ காலமாக கிளர்ச்சி செய்து வந்திருக்கிறார். அவர் தமது பத்திரிகைகள் மூலமாகவும் அதிகாரிகளிடம் நேரில் சொல்லிக் கொள்வதன் மூலமாகவும் அவர் நமக்காக பெரு முயற்சி செய்து வந்திருக்கிறார். ஆதி திராவிடர்களுக்குரிய இன்றைய மந்திரி ஸ்தானத்துக்கு பெரியாருடைய முயற்சியே பிரதானக் காரணம் என்பது பொய்யல்ல. இந்த மாநாட்டை அவர் நம்மிடம் இருந்து நடத்திக் கொடுக்க உதவியமைக்கு என் நன்றியையும் சந்தோஷத்தையும் அவருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட வில்லையா?

நீதிக்கட்சிக்குப்பின் ஆட்சிக்கு வந்த காமராசர் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர் இடம் பெற்ற முழுப் பெருமையையும் காங்கிரஸ் எடுத்துக் கொள்ள முடியாது! அதற்குக் காரணமாக காமராசரின் பின்புலத்தில் பெரியார் இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் ‘காரணம் பெரியார்! காரியம் காமராசர்!’ என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க இயலாமல்தான் பெரியாரே காங்கிரசை விட்டு வெளியேறினார். காங்கிரசில் தற்போது பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்றைய நிலை அப்படி இல்லை.

அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கை ஒளியாய் காங்கிரஸ் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. காங்கிரசைத் தூக்கிப் பிடிப்பதற்காக, நீதிக்கட்சியைக் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை!

புதன், 3 ஜூலை, 2024

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (46) : ”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்

அக்டோபர் 16-31 2019

 நேயன்

அடுத்த 10ஆவது குற்றச்சாட்டும் தலித் சார்ந்ததாக இருப்பதால் இரண்டுக்கும் சேர்த்து உரிய பதிலைத் தர விரும்புகிறோம்.

10.          தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஈ.வெ.ரா. இருந்ததில்லை.

தந்தை பெரியார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராட முன்வந்தபோது தாழ்த்தப்பட்டோரின் நிலை என்ன?

1.            ஆதிதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்ல முடியாது.

2.            ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.

3.            தங்க நகைகள் அணியக் கூடாது.

4.            மண்குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.

5.            ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக் கூடாது.

6.            அடிமையாக இருக்க வேண்டும்.

7.            சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

8.            திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

9.            பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக் கூடாது.

10.          குதிரை மீது ஊர்வலம் செல்லக்கூடாது.

11.          வண்டி ஏறிச் செல்லக் கூடாது.

12.          பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

13.          சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.

14.          பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.

15.          மேல் அங்கியோ, துண்டு அணிந்து கொண்டோ செல்லக் கூடாது.

16.          பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

17.          நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று இருந்தது. இவற்றை மாற்றவே சுயமரியாதை இயக்கம் அதிகம் போராடியது.

பஞ்சமனும் (தாழ்த்தப்பட்டவர்களும்) நாய்களும், பெருநோயாளிகளும் (தொழுநோயாளிகள்) நுழையக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பேருந்துகளிலும் எழுதி வைத்தனர். நாடக சபாவில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று எழுதி வைத்தனர்.

தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்று தலைப்பில் 24.11.1929 “குடிஅரசில்” எழுதினார்.

அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 ‘குடிஅரசில்’ பெரியார் எழுதினார்.

ஆதிதிராவிடர், தீயர், தீண்டாமை விலக்க மாநாடுகளை பெரியார் நடத்தினார்.

21.7.1929இல் சென்னையிலும், 25.8.1929இல் இராமநாதபுரத்திலும், 10.6.1930இல் திருநெல்வேலியிலும், 16.5.1931இல் சேலத்திலும், 7.6.1931இல் லால்குடியிலும், 5.7.1931இல் கோவையிலும், 4.7.1931இல் தஞ்சையிலும், 7.12.1931இல் கோவையிலும், 7.2.1932இல் லால்குடியிலும், 28.8.1932இல் அருப்புக்கோட்டையிலும், 7.8.1933இல் சென்னையிலும், 1.7.1938இல் சீர்காழியிலும், 7.3.1936இல் திருச்செங்கோட்டிலும், 23.5.1936இல் கொச்சியிலும், 2.9.1936இல் சேலத்திலும், 6.5.1937இல் சிதம்பரத்திலும், 4.7.1937இல் ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டனத் தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார்.

மனித உரிமை பெற அரசின் தடையை மீறுவோம். தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போரை திராவிடர் இயக்கத்தின் எதிரிகளாய் எண்ணி எதிர்ப்போம் என்று திருமங்கலத்தில் பேசினார்.

ஜாதிகளை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிடர் கழகமும்  பழங்குடி மக்களும் (தாழ்த்தப்பட்டோர்) நகமும் சதையும்போல என்று திருச்சியில் பேசினார் பெரியார்.

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு! என்று 9.2.1982இல் ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது. இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்துள்ளது. இவற்றை மேலும் விரிவாய் அறிய ‘குடிஅரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’, தலித்திய ஏடுகள் போன்றவற்றைப் படியுங்கள்.

பெரியார் பேசுகிறார்: “நானோ, திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட்டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுக்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திராவிடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். யான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை; இருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன்? நீங்கள் வேறுவிதமாகக் கருதவேண்டாம். ஆதிதிராவிடன் – திராவிடன் என்கிற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.

இன்னும் விளக்கமாகக் கூறுகிறேன்: திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்றுமிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள் என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதைச் செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.

தோழர்களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர், திராவிடர் என்று வித்தியாசங்கள் வேண்டாம். பறையன் என்று சொல்லாதே, சூத்திரன் என்று கூறாதே என்கிற உணர்ச்சியை அடையச் செய்யுங்கள். தவிர, தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு என் அருமை நண்பரும் அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்று மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர்.

நான் மிக எதிர்பார்த்திருந்தேன் _ அவரின் ஒத்துழைப்பை – இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. ஆனால், எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ  அதே ஆரியத்தின் ஸ்தாபனமாகிய இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நம் அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூறவேண்டுமானால் இந்திய நாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாள்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்ற நான் அஞ்சுகிறேன்.

எனினும் அவருக்குள்ள சூழ்நிலையில் வடநாட்டுத் தொடர்பில் அப்படித்தான் இருக்க வேண்டியிருக்கிறது போலும்! நான் அதைப் பற்றித் தப்பாகவோ குறைவாகவோ கூற முன்வரவில்லை. அவர் என்ன நம் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களே தாழ்த்தப்பட்டோரின் விடுதலையையே குறிக்கோளாகக் கொண்டுள்ள திராவிடர் இயக்கத்தையும், திட்டத்தையும், என்னைப் பற்றியும் வீணாகப் பழிக்கிறார்கள் என்றால் வடநாட்டுப் படிப்பிலுள்ள டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நாம் குறைகூற முடியுமா?

என்னையோ அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும் இல்லாவிட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இருக்கும் இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள்.

திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு.

                                                                      (‘விடுதலை’ 8.7.1947)

செவ்வாய், 22 டிசம்பர், 2020

”தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!” 1982 இல் சொன்னது பெரியார் இயக்கம்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்! அண்ணல் அம்பேத்கர்

நேயன்

 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பம்பாய் சென்றார் பெரியார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாக்களுக்காக அவர் அழைக்கப்பட்டு இருந்தார். தாராவியில் 1.11.1970 மிகப் பெரிய பேரணி நடத்தப்பட்டது. பெரியாருடன் கி.வீரமணி, புலவர் தொல்காப்பியனார் ஆகியோர் திறந்த காரில் அமர்ந்து சென்றார்கள். மாதுங்கா என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. 100க்கு 97 பேர் கீழ் ஜாதி சூத்திரர்களாகவும் பறையர்களாகவும் இருக்க 100க்கு 3 பேர் பார்ப்பனராக பிராமணராக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை விளக்கி ஒன்றரை மணி நேரம் பெரியார் பேசினார்.

                                                     (‘விடுதலை’ 8.11.1970)

மறுநாள் 2.11.1970 அன்று பம்பாயில் பெரியார் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பம்பாய் மாநகராட்சி முன்னாள் மேயரும், டாக்டர் அம்பேத்கரின் சீடரும் சித்தார்த்தா சட்டக் கல்லூரியின் முதல்வருமான டாக்டர் பி.டி.பொராலே பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேச்சு:

“நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கும் இந்தியாவின் தலைசிறந்த சமுதாயப் புரட்சித் தலைவரான பழுத்த பழமாக உள்ள பெரியார் அவர்களது உருவப் படத்தினைத் திறந்து வைப்பதற்கும் மிகவும் பெருமைப்படுகிறேன். எனக்குக் கிட்டிய பெரும் பேறாக இதனை எண்ணி மகிழ்கிறேன்... பெரியார் அவர்கள் இந்த 92 வயதிலும் இப்படிப்பட்ட அழுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபடும் ஒரு மாபெரும் தலைவராகக் காட்சி அளிக்கிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியார் அவர்களை மிகவும் மதித்தார்கள். போற்றினார்கள். டாக்டருக்கு மூன்று பேர் வழிகாட்டியாவார்கள். புத்தர், மகாத்மா ஜோதிபா ஃபூலே, ராமானந்த கபீர் ஆகியோர்.  டாக்டர் மல்லசேகரா அவர்களை நான் இலங்கையில் சந்தித்தபோது அவர்கள், பெரியார் அவர்களைப் பற்றி என்னிடம் நிறையச் சொன்னார்கள். வைக்கத்தில் தெருக்களில் நடக்க உரிமை வாங்கித் தந்த போராட்டத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார். அவர்கள் நூற்றாண்டுக்கு மேலும் பல ஆண்டுகள் வாழ வேண்டும். வாழ்வார் நமக்கு வழிகாட்டுவார் என்ற நல்ல நம்பிக்கை உண்டு. கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்டவர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டிற்கு பெருமை தருவதல்ல. அத்தகைய நிகழ்ச்சிகள் அங்கு மட்டுமல்ல இந்தியாவில் வேற எந்தப் பகுதியிலும் நடைபெறாத அளவுக்கு நடைபெறும் தி.மு.க., ஆட்சி, மேலும் அதனை முழு மூச்சுடன் சமுதாய புரட்சிக்குத் திருப்ப வேண்டும். இத்தகைய புரட்சி இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிகாட்ட வேண்டும். தங்களைப் போன்றவர்கள் அடிக்கடி இங்கு எங்களுக்கு வந்து வழிகாட்ட வேண்டும்.’’

(‘விடுதலை’ 9.11.1970)

என்று பேசினார் பி.டி.பொராலே. இவரது ஆங்கில உரையை ஆசிரியர் கி.வீரமணி தமிழில் மொழிபெயர்த்தார்.

5.11.1970 அன்று பூனா கிர்க்கியில் நடந்த விழாவில் தாழ்த்தப்பட்டோர் நல விடுதலை இயக்கத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு தளபதியாக இருந்து உழைத்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.என்.ராஜ்போஜ் கலந்து கொண்டார். அவரே விழாத் தலைமை. பெரியாரை சந்திப்பதில் பெருமை கொள்வதாக ராஜ்போஜ் சொன்னார்.

1954ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த புத்தர் விழாவுக்கு ராஜ்போஜ் வந்திருந்தார். இதில் பேசும்போது...

“ரகுபதி ராகவ ராஜா ராம்

பதீத்த பாவன சீத்தாராம்

டாட்டா பிர்லா பரிமாஹே பகவன்’’

என்று பேசினார் ராஜ்போஜ்.

இதனை 1970ஆம் ஆண்டு தன்னுடைய 92 வயதில் நினைவூட்டி அன்று பேசினார் பெரியார். இது ராஜ்போஜ்க்கு ஆச்சயர்மாக இருந்தது. இக்கூட்டத்தின் இறுதியாகப் பேசிய ராஜ்போஜ், 14 ஆண்டுகளுக்கு முன் நான் பேசியதை மறக்காமல் 92 வயதில் பெரியார் சொல்கிறார். எவ்வளவு மகத்தான நினைவு ஆற்றல் என்று வியந்தார்.

(‘விடுதலை’ 10.11.1970)

“தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களான தீண்டத்தகாதவர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருந்தது. மேல் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரும் இவர்களின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் கவலைப்பட்டதே இல்லை. இதற்கு மாறாக தீண்டத்தகாதவர்கள் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்பட்ட பொதுக் கிணறுகளைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளின் வழியாகக் கடந்து செல்லவும்கூட அவர்கள் தடுக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட அந்த மக்களை விடுவிக்கவும், இந்து மத ஆச்சாரத்தின் பிடியிலிருந்து அவர்களை விடுவித்துக் காப்பாற்றவும் திராவிடர் கழகம் முன்வந்தது.’’

(‘விடுதலை’ 10.11.1970)

என்று ராஜ்போஜ் பேசினார். அதற்கு முந்தைய நாள் 4.11.1970 அன்று ஜோதிபா ஃபூலே உருவாக்கிய தொழில் நுணுக்கப் பள்ளியில் பெரியாருக்கு வரவேற்பு தரப்பட்டது. ஃபூலே சிலைக்கு பெரியார் மரியாதை செலுத்தினார். அந்நிறுவன இயக்குநர் கெல்சிகர் பேசும்போது,

“இது தந்தை பெரியாருக்கு தாய்வீடு, சொந்த வீடு போன்றது. எப்போதும் அவர்கள் இங்கு வரவேண்டும். உங்கள் வருகையால் நாங்கள் உளப்பூர்வமாக மகிழ்ச்சிக் கடலில் பெருமிதத்தில் ஆழ்ந்தோம்’’ என்று குறிப்பிட்டார். இந்த விழாவிலும் டாக்டர் பொராலே கலந்துகொண்டு பேசினார். “உங்களது கொள்கைகள்தான் எங்களது கொள்கைகள்’’ என்றார்.

(‘விடுதலை’ 11.11.1970)

இந்த அளவுக்கு தமிழகத் தலித் தலைவர்கள் யாரும் பெரியாருடன் உடன்பட முடியவில்லை, முடியாது. இதை வைத்து அம்பேத்கரை மதித்தார். மற்றவர்களை மதிக்கவில்லை என்று சொல்ல முடியாது.

பெரியாரை முற்றிலும் உணர்ந்தவர் அம்பேத்கர்.

பா- ர்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மற்றவர்களிடமிருந்து பார்த்து படித்துக் கொள்ளுங்கள்... தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள். (‘குடிஅரசு’ 30.9.1944) என்று சென்னையில் அறிவுறுத்தியவர் அம்பேத்கர்.

இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

தந்தை பெரியாரிடம் தாழ்த்தப்பட்டோர் நம்பிக்கையும், மதிப்பும் வைத்து அவரைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அம்பேத்கர் அறிவுறுத்தும்போது, பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எவ்வளவு உழைத்திருப்பார், தாழ்த்தப்பட்டோர் இழிவு நீங்கி சமத்துவம் பெற எவ்வளவு அக்கறை கொண்டிருப்பார் என்பதை எவரும் விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, தாழ்த்தப்பட்டோருக்கு பெரியார் ஒன்றும் செய்யவில்லையென்ற அவதூறு அசல் பித்தலாட்டப் பிரச்சாரம் என்பது இப்போது உறுதியாகிறது அல்லவா?

                                                                  (தொடரும்..)

-  உண்மை இதழ், 1-15.6.19

செவ்வாய், 21 நவம்பர், 2017

தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்????

தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்???? நேரம் ஒதுக்கி படிக்கவும்.
மறைக்கப்பட்ட வரலாறுகள்:

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்....

நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது...

அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள் ...
இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு...

நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி...

வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து...சில ராஜ்யங்களை கைப்பற்றினர்..

பிறகு வேதங்களை சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..

பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளை யாக குண்டத்தில் போட்டு யாகம் வளர்த்தனர்...

ரிக் வேதங்களில் மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிட பட்டுள்ளது..

மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்..

பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து அரசர்களை, மக்களை அடிமை படுத்தி ,

அரசவைகளில் அலோசகர்களாக இருந்து மறைமுகமாக ஆட்சி செய்தனர்...

பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினான்....

அப்போது சாக்கிய குலத்தை சார்ந்த சித்தார்த்தன்...

தந்தை பெரியார் போல் சடங்கு,யாகம், உயிர் பலி அணைத்ததையும் எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..

அதன் பிறகு தான் புத்த மதம் உருவாகி வளர தொடங்கியது...

புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன....

சாம்ராட் அசோகா கலிங்க போருக்கு பின் மனமாற்றம் அடைந்து புத்தம் தழுவினார்..

பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, முடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தர்....

அப்போது வாழ் விழந்த ஆரியர்களுக்கு மெளரிய வம்ச மன்னர்கள் வரி சலுகை வழங்கி அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கத்துவம் தரப்பட்டது...

இந்திய, சீனா, தென் கிழக்கு ஆசிய வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது...

700 வருடம் இருந்த மெளரிய பேரரசு இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது...

புத்த மதத்தை அழிக்க முடியாததால் ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்..

இந்திய முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர்..

அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமின மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்..

பிராமணர் உருவாக்கிய புத்த மதத்திற்கு "மஹாயானம் புத்தம்" என்றும்,

உண்மையான புத்த கொள்கைகளை பின்பற்றியவர்களை "ஹீனயானம்" என்றும் அழைத்தனர்.

ஹீனயானம் என்பது ஈன பிறவி..அதாவது தாழ்ந்த ,குறையுடைய புத்தம் என்று இகழ்ந்தனர்..

புத்த மதத்தை அழிவு பாதைக்கு எடுத்து செல்ல முயன்றனர்...

மெளரிய வம்சம்,  பேரரசின் இறுதி மன்னன் பிராகிருதன்,

புஷ்ய மித்ர சுங்கன் என்ற ஆரிய இன படை தளபதியால், சூழ்ச்சியால் சாகடிக்கப்பட்டு...
சுங்க வம்சத்தை நிறுவினான் ..

அப்போது மீண்டும் வேத மதம் எழ தொடங்கியது...

இந்த கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு..

புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன...

புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில் புத்த பிக்ஷுக்கள் தலைக்கு பரிசுகள் அறிவித்து ஒரு இன படு கொலையை நடத்தினான்...

அப்போதுதான் புத்த பிக்ஷுக்களின் தலை வீட்டின் முன்புறம் தொங்கவிடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.

அந்த வழக்கம்  தான் இப்போ நம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது..

குப்த பேரரசு உருவான பிறகு மிகுந்த எழுச்சி பெற்றது வேத மதம்...

அந்த காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்..

ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்து கதைகள் எழுதப்பட்டன...

"சுரா" என்ற மது பாணத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல கொள்கை பின்பற்றி வந்த நாக பௌத்தர்களை ,
அசுரர்கள் எனப்பட்டனர்...

அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பாணத்தை அருந்ததவர்கள் என்று பொருள்.

நல்லெண்ணம் கொண்ட ,
நாக வம்ச அரசர்களை கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்..

இந்திய முழுமையும் வேத மதம் பரப்ப பட்டது...

மரத்தடியில் உள்ள புத்த சிலைகளை எல்லாம்,

அழிக்க வேண்டும் என்பதற்காக அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் கரைத்து அழித்தனர்..

அது தான் தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.

அழகான புத்த விகார் களை அசிங்க படுத்த விகார் என்றால், விகாரம் என்று அசிங்கமான ,அருவருப்பான என்ற சொல்லிற்கு பயன்படுத்த படுகிறது.

புத்த பிக்சு க்களை இகழ்வதற்காக
அவர்களை பிச்சை என்று அசிங்கப்படுத்தி பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்..

மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்..

வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.

அந்த கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள் புத்த மதத்தை தொடர்ந்து பின்பற்றியதால்...
அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அதாவது புத்த பஞ்ச சீல கொள்கையை கடைப்பிடித்து வாழ்பவர்கள்...

அவர்கள் புத்த மதத்தை தழுவி இருந்ததால் தான்  பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்...

தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்..

சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்..

பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களை பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்...

பிறகு ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகளாக்கப்பட்டு...

இழி தொழில் செய்ய பணித்தனர்..

அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல் உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையே காரணம் காட்டி
தீண்ட தகாதவர்களாக பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.

"பஞ்சமார்களை" (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை "இந்து" மதத்தில் சேர்க்கவும் இல்லை.

1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக இந்து மனு தர்ம சாத்திரம் தான் இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்துவந்தது...

அதனால் தான்...

சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்...

வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும் ,

சட்டடத்தை மாற்றி அமைத்தனர்.

பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது...

அதுவும் வேதம் , வானவியல்,ஜோதிடம்,புராணங்கள் போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படாத கல்வி முறைகள் இருந்த்து..

இதை பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி பள்ளி கல்வி முறையை ஏற்படுத்தினார்..

இதற்கு இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது...

மேலும் , ஆங்கிலேயர்கள்  அனைவருக்கும் ஒரே வகையில் குற்ற தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்..

இதற்கு முன்பு வரை பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..

1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது,  இந்து மதத்தை சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதை பயன்படுத்த முடியாது என கூறி போராட்டம் செய்தனர்..(சிப்பாய் கலகம்)

இது போல இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான் ...

பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும் தான் ,

உயர் சாதி இந்துக்கள் " சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை" என கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்..

எனவே இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை...

உயர் சாதி இந்துக்கள்,வரனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்..

அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு...

அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்..

அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்..

இந்து சட்ட மசோதாவின் அம்சங்கள்:
1.பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில்  இட ஒதுக்கீடு.
2.பெண்களுக்கு கல்வியுரிமை.
3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.
4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.
5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை
6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.

பிறகு மிகுந்த
எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது...

இது எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான பதிவு இல்லை ....

உண்மை வரலாறு மட்டுமே...

இவை அனைத்தும் மக்களிடையே மறைக்கப்பட்டுள்ளது...

சுருக்கமகா எழுதி  உள்ளேன்.
Dr.Suresh Babu.

ஆதார நூல்கள்:
1.இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பணவும் ,
அழிந்தனவும்.- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா

2.அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.

3.இந்திய தத்துவ இயல்- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

4.ரிக் வேத கால ஆரியர்கள்-ராகுலை சங்கிருத்தியன்.

5.உலக வரலாறு-ஜவகர்லால் நேரு.

6.யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.

7.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு  பொன்னேடுகள். வீர சர்வாக்கர்.

8.பாகியான்.

9.புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் - உ. வே .சாமிநாதர்.

10.அபிதான சிந்தாமணி-சிங்கார வேலன்.

11.இந்தியாவின் வரலாறு- பொன்காரத் லேவின்.

12.அசோகர் இந்தியாவின் பௌத்த பேரரசர்- வின்சென்ட். எ.ஸ்மித்

13.உலகாயுதம் - தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

இன்னும் பல வரலாற்று ஆய்வாளர்கள்  நூல்கள் உள்ளன.

இன்று வரை யாராலும் இந்த வரலாறை.  மறுத்து கூற இயலவில்லை என்பது தான் உண்மை.

நன்றி: ராஜா ஜிதாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்???? நேரம் ஒதுக்கி படிக்கவும்.

நன்றி: ராஜா ஜி
வாட்ஸ்அப்பில்   படித்தது.
பதிவிட்டவர்: கடவுள் இல்லை : 99767 49028, நன்றி.,