பக்கங்கள்

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

இடி விழுந்தது எனும் பொய்க்கதை - புத்த - சமணம் அழிப்பு


 போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார்.

அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து உங்கள் வெற்றிச் சின்னங்கள் எதற்கு, எங்களுடன் வாதாடி வென்ற பிறகு அல்லவா அவற்றை முடிக்க வேண்டும்?

எங்களுடன் வாதாடத் தயாரா? என்று வினா தொடுத்தனர்.

வினாவை விவேகத்துடன் சந்திக்க முடியாத திருஞான சம்பந்தனோ, ஒரு பாடல் பாடினாராம்.

"புத்தர் சமண கழுக்கையர் பொய் கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின

வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு

அத்திரமாவன அஞ்செழுத்துமே"

இந்தப் பாடலை திருஞான சம்பந்தன் பாடியதுதான் தாமதமாம்; புத்த நந்தி என்ற தலைவன்மீது இடி விழுந்ததாம்; பவுத் தர்கள் நிலை கலங்கி ஓடினராம்.

இப்படியெல்லாம் ஏராளமான கதை கட்டி பவுத்தர்களை வென்றதாக கூறு கிறார்கள்.

அவர்கள் கூற்றுப்படியே பார்த் தாலும் கூட, விவாதம் செய்து வெல்ல வக்கு இல்லாமல், வேறு கொல்லைப்புற வழிகளில் சூழ்ச்சிகள் செய்து பவுத்த நெறியாளர்களைப் பச்சைப் படுகொலை செய்து பரவசம் அடைந்திருக்கிறார்கள்.

கவிஞர் கலி.பூங்குன்றன்,

மனித வாழ்க்கைக்குத்

தேவை நாத்திகமா? ஆத்திகமா? நூலிலிருந்து.,

சனி, 17 ஏப்ரல், 2021

பார்ப்பனர்களுக்கு சர் சி.பி. அறிவுரை


9.3.1946ஆம் தேதி கூடிய சேலம் பிராமண மாநாட்டின் போது சர் சி.பி. இராமசாமி அய்யர் நிகழ்த்திய தலைமை யுரையில் கீழ்க்கண்டவாறு பிராமணர் களுக்கு அறிவுறுத்திப் பேசினார். எந்தப் பத்திரிகையும் அய்யரின் பேச்சை சரியா கப் பிரசுரிக்காததன் காரணம் தெரிகிறது.

1.            பிறப்பின் காரணமாக ஒருவன் பிராமணன் ஆகமாட்டான். குணத்தாலும் செயலாலுமே பிராமணத்வம் நிச்சயிக்கப் படும்.

2.            வாழ்க்கையில் தனக்குரிய உயர்ந்த குறிக்கோளையும் தூயமனத் தையும் துறந்து உத்தியோகத்துக்கும் பத விக்கும் செல்வத்துக்கும், கசாப்புக்கடைக் காரருடனும், சாப்பாட்டுக் கடைக்காரனுட னும், போட்டியிடுவோன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளு வது பித்தலாட்டமாகும்.

3.            "வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தால் அரசியல் நிருவாகத்தில் தகுதியும் வினைத் திட்பமும் (Merit and effiniency) கெடலாயின"  என்ற பல்ல வியை  நீங்கள் பாடப்பாட பிராமணரல்லா தாரின் மனதைப் புண்படுத்துவதுமன்றி அவர்கள் பகைமையையும் பெருக்கிக் கொள்ளுகிறீர்கள்.

4.            பிராமணரல்லாதாரை ஏளனம் செய்து அவரை எதிர்த்துப் பகைக்கின் பிராமண இனம் சீரழிந்து வேரறுந்து போகும்.

5.            யூதர் ஆதியில் அறிவுத்துறை யிலும் அன்பின் வழியிலும் வாழ்ந்து வந்தனர். பின்னர் பணம் தேடுபவர் களாகிக் கடன்கொடுத்து ஏழை மக்க ளைத் துன்புறுத்திப் பல துறைகளிலும் ஆதிக்கம் பெற்றுவிட்டமையால் பிறர் அவர்களிடம் பொறாமை கொண்டு அவர்களை ஒடுக்கத் தொடங்கினர். அதனால் அவர்கள் இன்று கொடுமை யான தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டனர்! ஆதலால் பிராமணர்கள் அந்நிலை எய் தாமல் இருக்க தங்களைக் காலத்திற் கேற்றபடி திருத்திக் கொள்ள வேண்டுவது அத்தியாவசியமாகும்.

6.            நிலைமைக் கேற்பவும், சுற்றுச் சார்புக் கொப்பவும் தம்மைப்பக்குவப் படுத்திக் கொள்ளுவதே பிராமணரது இயல்பென வரலாறு கூறுகின்றது. அம் மரபியல்பை இன்று மறப்பதும் துறப்பதும் பேதமையாகும்.

7.            யாகங்களைச்செய்து புலால் உண்ணுதலும், சோமபானம் அருந்து தலும் நமது பண்டைக்காலத்து வழக்கம். தென்னாடு போந்தபின்னர் இந்நாட்டின் தட்பவெப்ப நிலைமைக்கேற்ப நம்மவர் புலாலையும் குடியையும் அறவே நீக்கிவிட்டனர்.

8.            வேதங்களின் கர்மகாண்டத் தையே பின்பற்றிவந்த நம்மவர் சத்திரி யரிடம் சென்று ஆத்ம வித்தையையும் உபநிடதங்களையும் கற்றுக்கொள்ள வில்லையா?

9.            நமக்கு எதிர்ப்பாகத் தோன்றிய பவுத்தம், ஜைனம் முதலிய மதங்களின் சீரிய கொள்கைகளைத்தழுவி நமதாக்கிக் கொள்ளவில்லையா?

10.         மிகவும் முந்திய காலத்திலேயே நம்மவர் கடல்கடந்து சென்று பல யாகங் களைச் செய்து மன்னர்கள்பால் பரிசு பெறவில்லையா?

11.         நமது இனத்தவராகிய நம் பூதிரிகள் மலையாள நாட்டுப் பழக்க வழக்கங்களுக்கேற்பத் தமது ஒழுக் கங்களை மாற்றியமைத்துக் கொள்ள வில்லையா?

12.         மகம்மதிய ஆட்சி நிலவிய போது நம்மவர்கள் அமைச்சர்களாகவும் அலுவலாளர்களாகவும் இருந்து ஆக்கம் பெறவில்லையா?

13.         ஆங்கிலேயர் வந்தபின்னர் அவர்தம் மொழியைக்கற்று நாம் வாழ வில்லையா?

14.         இங்ஙனம் காலத்திற்கேற்ற கோலம் தாங்கிய நம்மவர் இன்று ஏன் நம் மரபியலைக் கைவிட வேண்டும்? அதனால் இன்று பிராமணரல்லாதார் நமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் கண்டு பொறாமை கொண்டு நம்மை வெறுப்பது உண்மை தான்? நீங்கள் செய்யவேண்டுவது என்னவெனில்; உத்தியோகம் உங்களை நாடிவந்தால் வரட்டும்; இல்லையேல் நீங்கள் அதனை நாடவேண்டாம்.

15.         உங்கள் பிள்ளைகளுக்குக் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இடம் மறுக்கப்படுகிறதென்கிறீர்கள். அப்படி யாயின் திரண்ட நிதியைச் சேர்த்துப் புதிய கல்லூரிகளையும் பல்கலைக் கழகங் களையும், கைத்தொழிற்சாலைகளையும் தொடங்குங்கள். அவற்றில் எல்லா மாண வர்களையும் ஜாதி, குல, மத வேறு பாடின்றிச் சேர்த்துக் கொள்ளுங்கள். பண்டைக்காலத்தில் நமது பொருளாதார நிலைமை தாழ்ந்திருந்தது; இன்று அப்படியில்லை. ஆதலால் பிறர் உதவி யின்றியே பிராமணர்களே இதனைச் செய்யக்கூடும்.

16.         நகத்தில் மண்படாமல் வாழும் பழைய வழக்கத்தைவிட்டு விவசாயம், கைத்தொழில் முதலிய துறைகளில் புகுந்து செயலாற்றுங்கள்.

17.         பிராமணர்களுக்குள் இருக்கும் பல பிரிவுகளும் ஒன்றுபடவேண்டும், ஒன்றுபட்டு உலகத்தோடு ஒட்ட ஒழுகி முன்னேற வேண்டும்.

18.         பழைய பெருமையை மறந்து புதிய உலகத்திற்கேற்ப நடந்துகொள்ள உங்களுக்கு விருப்பமில்லையேல் இம் மாநாடு இக்கணமே கலைந்து விடலாம்.

19.         நமது முன்னோர் இரத்தலை ஒரு தொழிலாகக் கொண்டிருந்தனர். முற்காலத்தில் கொடுப்போரும் விரும்பிக் கொடுத்தனர், பிராமணரும் மகிழ்ந்து ஏற்றனர். இக்காலத்தோ அன்பால் உந் தப்பட்டு பிராமணருக்குக் கொடுப்போர் இலர் என்பது வெள்ளிடை. ஆதலால் எவரிடத்தும் யாசிக்கவேண்டாம். தன் கையே தனக்குத் துணையாகத் தன்மா னத்தோடு வாழுங்கள் - என்று பிராமணர் களுக்கு அறிவுறுத்திப் பேசினார். இதை எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை.  

- 'குடிஅரசு ' - 16.03.1946