பக்கங்கள்

புதன், 29 ஜூலை, 2015

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
தந்தை பெரியாரின் கூற்று மெய்யா? பொய்யா?

இதுவரை நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்துகள்..
2015  ஜூலை 14: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். (பலி எண்ணிக்கை உயரலாம்) 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
2014 ஆகஸ்ட் 25: மத்தியப் பிரதேசம் சாத்னா மாவட்டம் சித்ரகூட் பகுதி கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.
2013 அக்டோபர் 13: மத்தியப் பிர தேசம் டாடியாவில் உள்ள ரத்னாகர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர்.
2013 பிப்ரவரி 10; உத்தரப்பிரதேசம் அலகாபாதில் நடைபெற்ற கும்பமேளா வின்போது ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர்.
2012 நவம்பர் 19: பிஹார் தலைநகர் பாட்னாவில் சாத் பண்டிகையின்போது நெரிசல் ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்தனர்.
2012 செப்டம்பர் 24: ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பெண்கள் உட்பட 9 பக்தர்கள் பலியாகினர்.
2012 பிப்ரவரி 19: குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் உள்ள கோயிலில் மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் முண்டி யடித்ததில் 6 பேர் இறந்தனர்.
2011 நவம்பர் 8:  ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹர்-கி-பாரி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.
2011 ஜனவரி 14: கேரளாவின் சபரி மலையில் நெரிசல் ஏற்பட்டு 106 பக்தர்கள் பலியாகினர்.
2011 ஜனவரி 8: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை  நதியில் புனித நீராட கூட்டம் அலைமோதிய போது 22 பேர் உயிரிழந்தனர்.
2010 மார்ச் 4; உத்தரப் பிரதேசம், பிரதாப்கர் பகுதியில் ராம் ஜானகி கோயி லில் அன்னதானம், இலவச உடைகளை வாங்கச் சென்ற 63 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
2008 செப்டம்பர் 30: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மலைக் கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 120 பேர் உயிரிழந்தனர்.
2008 ஜூலை: ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் ஆலய யாத்திரை யின்போது நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர்.
2007 ஆகஸ்ட் 15: குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டம் பவகாத் மலைப் பகுதியில் உள்ள மகாகாளி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 11 பக்தர்கள் இறந்தனர்.
2006 ஆகஸ்ட் 3: இமாச்சலப் பிர தேசம் நயினா தேவி கோயிலில் மக்கள் கூட்டம் சிதறி ஓடியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
2005 ஜனவரி 26:  மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மாந்தெர் தேவி கோயில் விழாவில் கூட்ட நெரி சலில் சிக்கி 350 பேர் பலியானார்கள். 200 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.
2003 ஆகஸ்ட் 27: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கல் நடைபெற்ற கும்ப மேளா விழாவில் நெரிசல் ஏற்பட்டு 40 பக்தர்கள் இறந்தனர்.
1992 பிப்ரவரி 18: தமிழகத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவில் நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர்.
கடவுளை நம்பியோர் கைவிடப் பட்டார்களே!
-விடுதலை,15.7.15

வியாழன், 23 ஜூலை, 2015

!கோதாவரி புஷ்கரம் விழா நெரிசலில் சிக்கி 27 பேர் பலி


மத மூட நம்பிக்கைகளினால் ஏற்படும் விபரீதங்கள் - இழப்புகள்

சென்னை, ஜூலை 14_ கடவுள் பக்தி, மத நம் பிக்கை, பூஜை புனஷ் காரத்தை நம்பி மக்கள் தம் இன்னுயிரையும், பொருள்களையும் இழந்து வருகின்றனர்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:
கோதாவரி புஷ்கரம் விழா நெரிசலில் சிக்கி 27 பேர் பலி
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இன்று (14.7.2014) கோதாவரி புஷ்கரம் விழா தொடங் கியது.
ராஜ முந்திரியில் ஆந் திர அரசு சார்பில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த கோதாவரி புஷ்கரம் விழாவை காஞ்சி சங்கா ராச்சாரியார் இன்று காலை புனித நீராடி தொடங்கி வைத்தாராம். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் புனித நீராடினாராம். அவரைத் தொடர்ந்து லட் சக்கணக்கான பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடினார்களாம். பக்தர் கள் குளிப்பதற்காக தனி யாக இடங்கள் ஒதுக்கப் பட்டிருந்தது.
ராஜ முந்திரியிலுள்ள கோட்டக்கும்மம் என்ற இடத்தில் கட்டுக்கடங்கா மல் பக்தர்கள் கூட்டம் இருந்தது. ஒரே நேரத்தில் அவர்கள் ஆற்றில் இறங் கியதால் நெரிசல் ஏற்பட் டது.
நெரிசலில் சிக்கி பலர் மயங்கி கீழே விழுந்தனர். கூட்டத்தில் மிதிபட்டு 27 பேர் பலியானார்கள். மேலும் 10-_க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். அவர்கள் ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிட மாக உள்ளது. சாவு எண் ணிக்கை மேலும் அதிகரிக் கக்கூடும் என அஞ்சப்படு கிறது.
விபத்து நடந்த கோட் டக்கும்மம் பகுதி ராஜ முந்திரி ரயில் நிலையம் அருகே உள்ளது. வெளி யூரில் இருந்து வந்த பய ணிகள் நேரடியாக அங்கு சென்றதால் லட்சக்கணக் கான பக்தர்கள் அங்கு திரண்டு விட்டனர்.
சூரிய உதயத்துக்கு முன் நீராட வேண்டும் என்ற எண்ணத்தில் அனை வரும் ஒட்டு மொத்தமாக நதியில் இறங்கியதால் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்துபற்றி தகவல் அறிந்ததும் ராஜமுந்திரி யில் முகாமிட்டு இருந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தார்.

புஷ்கரம் விழாவில் பங்கேற்க பலர் வாகனங் களில் வந்தனர். ஆனால் அதனை நிறுத்துவதற்கு போதிய வசதி செய்யப் படவில்லை.
இதனால் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் தேங்கி நின் றன.
விபத்தில் 2 மகன்கள் பலி:
திதி கொடுத்து விட்டு திரும்பியபோது மற்றொரு விபத்தில் மகனையும் இழந்த சோகம்!
மதுரை செக்காலை மேட்டுத்தெருவைச் சேர்ந் தவர் ஜெயக்கொடி (வயது 50). இவருக்கு 3 மகன்கள். இதில் 2 பேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டனர்.
இதையடுத்து அவர் களுக்கு திதி கொடுப்ப தற்காக நேற்று மதுரையில் இருந்து ராமேசுவரத் துக்கு ஜெயக்கொடி உள் பட 6 பேர் வேனில் சென் றனர். பின்னர் அங்கி ருந்து வேனில் 6 பேரும் மதுரை திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வேன், பார்த்திபனூர் அருகே மரிச்சுக்கட்டி சாலையில் சென்றபோது மாடு ஒன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடியது.
இதில் நிலைதடுமாறிய வேன் எதிரே வந்த கார் மீது மோதி நொறுங்கியது. கார் சாலையில் கவிழ்ந் தது. இதில் ஜெயக்கொடி யின் மற்றொரு மகன் அரவிந்த்குமார்(18) படு காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.
வேனில் இருந்த மற்ற 5 பேர்களும் காயம் அடைந்தனர். கார் கவிழ்ந் ததில் அதில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந் தனர். உடனே படுகாயம் அடைந்த 8 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


விபத்து குறித்து தகவல் அறிந்த பார்த்திபனூர் காவல்துறையினர் விரைந்து சென்று அரவிந்த் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற் காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனை நரபலியிட முயற்சி
மந்திரவாதி கைது!
புதையல் எடுப்பதற்காக, மனநலம் பாதித்த சிறுவனை கடத்தி, நரபலியிட முயற்சித்த மாமியார், மருமகள், மந்திரவாதி உள்ளிட்ட அய்ந்து பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியை அடுத்த கோடாங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராசம்மாள், (60). இவரது மகன் ரவிக்குமார், (40), மருமகள் பானுமதி, 31. ரவிக்குமார் வீட்டில், அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை சேர்ந்த மந்திரவாதி, சத்யமூர்த்தி, (27), என்பவரின் அறிமுகம் கிடைத்தது. வீட்டில், அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதால், மனநிம்மதி இல்லை; வந்து சரி செய்யுங்கள் என, ரவிக்குமார் குடும்பத்தினர், மந்திரவாதியை அழைத்துள்ளனர்.
அங்கு வந்த மந்திரவாதி, 'இந்த வீட்டில் புதையல் இருக்கிறது; அவற்றை எடுத்தால், உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்' என தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக, புதையலை எடுக்க, தினமும் நள்ளிரவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. இதற்காக, வீட்டின் பின்புறம், ஆறு அடி ஆழத்தில் குழி வெட்டி, அதில் மந்திரவாதி இறங்கி பூஜை செய்து வந்துள்ளார். மந்திரவாதியுடன், தஞ்சை தாமஸ், (38), கரூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேந்திரன் ஆகியோர் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், 'குழந்தை, கன்னிப்பெண், கர்ப்பிணிப் பெண்களை நரபலி கொடுத்தால், புதையல் கிடைத்துவிடும்' என, மந்திரவாதி தெரிவித்துள்ளார். அதன்படி, அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் முதல், குழந்தை, கன்னிப்பெண்கள் ஆகியோரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை, 9 மணிக்கு, ரவிக்குமார், ராசம்மாள், பானுமதி, மந்திரவாதி உள்ளிட்ட எட்டு பேர், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை நரபலி கொடுக்க கடத்த முயன்றுள்ளனர். அதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர் களை மடக்கி பிடித்து, அடி கொடுத்தனர்.
பொது மக்களிடம் இருந்து, ரவிக்குமார் உட்பட மூன்று பேர் தப்பினர்; மற்ற அய்ந்து பேரும் சிக்கினர். மந்திரவாதி, ராசம்மாள் உள்ளிட்ட அய்ந்து பேரை, காவல்துறையினரிடம் ஒப்படைக்க மறுத்து, பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். டி.எஸ்.பி., வந்தால் மட்டுமே ஒப்படைப்போம் என, தெரி வித்தனர். அய்ந்து மணி நேர போராட்டத்துக்கு பின், காவல்துறையினரிடம், ராசம்மாள், அவரது மருமகள் பானுமதி, மந்திரவாதி சத்யமூர்த்தி, கார் ஓட்டுநர் ராஜேந்திரன், தஞ்சை தாமஸ் ஆகிய அய்ந்து பேரையும் ஒப்படைத்தனர். பின், அய்வரையும், காவல்துறையினர் கைது செய்தனர்.
பணி முடிந்தும் திறக்கப்படாத நீர்த்தேக்க தொட்டிக்கு சிறப்புப் பூஜை, ஹோமமாம்
சென்னை ஆலந்தூர் பகுதியில் கட்டுமான பணி முடிந்தும் திறக்கப்படாத நீர்த்தேக்கத் தொட்டிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. சென்னை மாநகராட்சி 165 ஆவது வார்டு, ஆலந்தூர் நிலமங்கை நகரில் மெட்ரோ வாட்டர் பகுதி அலுவலகம் மற்றும் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு  கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டட பணி நிறைவு பெற்றதை முன்னிட்டு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நேற்று காலை நிலமங்கை நகரில் நடந்தது. நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் நரேஷ்குமார், மெட்ரோ வாட்டர் அதிகாரிகள், நிலமங்கை நகர் பொது நலச்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால், அலுவலகம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முதல்வர் திறந்து வைப்பதற்காக தேதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.

ஆகஸ்டு 14 (1950) வகுப்புரிமை  நாள்


நாம் அறிந்ததும், அறியாததும்

சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நடைபெற்ற எந்தச் சமூக மாற்றமும், பெரியாரின் கொள்கைத் தாக்கம் இல்லாமல் நடைபெறவில்லை. இந்தியாவில் வேறு எந்தத் தலைவரின் பணியாலும், அவரது மாநிலத்தில் இத்தகைய மாற்றத்தை உருவாக்கி, அது இன்றுவரை நீடித்திருக்கிறது என்று கூற முடியாது.
இந்தப் பெருமை சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் ஒருவருக்கு மட்டும் தான் உண்டு என நாம் பெருமையோடு பறை சாற்றலாம். இத்தகு புரட்சியாளரின் கொள்கையையும், சமூகத்தில் ஏற்படுத்தி யிருக்கும் தாக்கத்தையும் அறிந்து கொண்டவர்களைவிட, பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என மேலோட்டமாக அவரைப் புரிந்து கொண்டவர்களும், இம்மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
அண்மைக் காலத்தில், சமூக நீதி, இட ஒதுக்கீடு சம்பந்தமாக மத்திய அரசின் ஆணைகளும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், சார்ந்தும், எதிர்த்தும் வந்துள்ளன. தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுச் சட்டம், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு செல்லாமல் தடுத்திட, அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்துள்ள நிலையிலும், அதனையும் மறுபரிசீலனை செய்திட தங்களுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், ஒவ்வொரும் ஆண்டும் மருத்துவ கல்லூரியில் இடம் வழங்கிட, சட்டத்திற்கு முரணாக செயல்பட்டும் வருகின்றது.
இவை குறித்து இன்றைய தலைமுறையினருக்கு புரிதல் ஏதும் அவ்வளவாக இல்லை; இருப்பினும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இட ஒதுக்கீடு குறித்து எதிர்மறையான கருத்தை இதுவரை பதிவு செய்யவில்லை என்பதற்கும், ஏனைய மாநிலங்கள் தமிழ கத்தையே சமூக நீதியின் தலைநகராக நோக்குகின்றன என்பதற்கும் உரிய பொருள் இல்லாமல் இல்லை; அதுதான் பெரியார் என்ற புரட்சியாளர் ஏற்படுத்திச் சென்ற தாக்கம் என்பதை குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினர், அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மையாகும்.
1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைகிறது; புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, 26.1.1950 அன்று நாடாளுமன்றத்தால், இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில், தமிழகத்தில் அனைத்து வகுப்பினர்க்கும், இட ஒதுக்கீடு அளித்திடும் வகுப்புவாரி உரிமை (கம்யூனல் ஜிஓ) 1921 முதல் நடை முறையில் இருந்ததையும், இந்த வகுப்புரிமை தான், தமிழகத்தைச் சமூக நீதியின் தலைநகராக இன்றும் பிற மாநிலத்தவர் கருதிட அடிப்படை என்பதையும் சற்று நினைவில் கொள்க.
இந்தியா ஓர் குடியரசு என 26.1.1950 அன்று அறிவித்த நிலையில், நாட்டு மக்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் என அனைவரும் அவ்வாறே புரிந்து கொண்ட நிலை யில், பெரியார் அவர்கள் கூறிய கருத்து மிக வியப்பாகவும், அதிர்ச்சி கலந்த உண்மையாகவும் இன்றும் கருதப்படுகிறது.
பெரியார் பேசுகிறார்: நமது முக்கியக் கொள்கை களில் ஒன்றாகிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஒழிப்பு வேலை துவக்கமாகிவிட்டது. தோழர்களே, இனி நம் வேலை, இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திலும் அதிக கவனம் செலுத்துவதுதான். இது நம் மக்களுக்கு உணர்ச்சி ஊட்டுவதற்கும் ஓர் நல்ல வாய்ப்பாகும். இதையொட்டி நாம் விடாப்போர் நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. எது எதெற்கென்று நாம் அழுவது? தொல்லைமேல் தொல்லை வருகிறது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுவிட்டால் இன்றைய சூழ் நிலையில் நம் வாழ்வு, நம் பின் சந்ததியார் வாழ்வு எல்லாம் பாழாகிப் போய்விடும். மறுபடி நம் சந்ததியார் பழையபடி காட்டுமிராண்டிகளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும். (கரூரில் பெரியார் பேச்சு  விடுதலை 5.2.1950)
இவ்வாறு பெரியார் பேசியதற்கு அர்த்தம் இல்லாமல் இல்லை; சென்னை மாகாண சட்டமன்றத்தில் 4.3.1950 அன்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் கரந்த், தமிழ கத்தில் உள்ள வகுப்புவாரி உரிமை, அரசியல் சட்டத்திற்கு எதிரானது என பேசுகிறார். ராதா கிருஷ்ணன் தலைமையில் அமைந்த பல்கலைக்கழகக் குழு, வகுப்புவாரிமுறை, அரசியல் சட்டத்திற்கு விரோதம் எனக் கூறிய நிலையில், அன்றைய பல்கலைக் கழக சிண்டிகேட்டோ, அதனை,  நீதியும், நேர்மையான செயல் எனக் கருத்து கூறியது. (விடுதலை 7.6.1950)
இவற்றைக் கவனித்து வந்த பெரியார், 13.6.1950 அன்று விடுதலையில் எழுதிய தலையங்கம், வகுப்புரிமைத் தத்துவத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது இந்திய மக்கள், பல மதம், பல ஜாதி, பல வகுப்பு, பல லட்சிய முடையவர்கள் என்பதாகப் பிரிந்திருப்பதனா லேயே, இந்திய மக்களுக்கு ஆட்சித் துறையிலும், உத்யோ கத்திலும், ஜனப் பிரதிநிதித்துவத்திலும், விகிதாச்சாரம் என்பதாக உரிமையும், சந்தர்ப்பமும், கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று. இந்தக் கொள்கைக்கு விரோதமாக, யாருக்காவது, ஏதாவது அதிக உரிமை, அதிக வசதி, அதிக வாய்ப்பு இருக்க வேண்டுமானால், இருக்க நேருமானால், அந்த நிலையைப் பொதுமக்கள் ஆதிக்கம் என்றோ, பொதுமக்கள் ஆட்சி என்றோ, சமதர்ம நாடு என்றோ, சொல்வதற்கு இடமிருக்காது (விடுதலை தலையங்கம் 13.6.1950). பெரியார் முன்னரே எச்சரித்தது போலவே, உயர்நீதி மன்றத்தில் வகுப்பு ரிமைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. செண்பகம் துரைராசன் என்ற பெண்மணி, வகுப்புரிமைக் காரணமாகத் தனக்கு மருத்துவக் கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் 14.6.1950 அன்று வழக்கு தொடருகிறார். உயர்நீதிமன்றம் வழக்கினை ஏற்றுக்கொண்டு அரசுக்கு நோட்டீசு அனுப்புகிறது. விடுதலையில் வகுப்புரிமை சம்மந்தமாகச் செய்தி களைத் தொடர்ந்து வெளியிடுகிறார் பெரியார்; பம்பாயிலும், பஞ்சாபிலும் இட ஒதுக்கீடு கோரிப் போராட்டம் நடைபெறுகிறது. 1930இ-ல் ஜீலை 13-ஆம் தேதி எழுதிய கட்டுரை ஒன்று மீண்டும் மக்களின் நினைவுக்காக விடுதலையில் 9.7.1950 அன்று வெளியிடப் படுகிறது. அந்த கட்டுரையில் தங்களுக்கு உரிய பிரதி நிதித்துவம் வேண்டும் என ஆங்கிலேயரிடம், இந்தி யர்கள் என்ற பெயரில் பார்ப்பனர்கள் போராடியதும், அதற்கு காங்கிரஸ் கட்சி துவக்கப் பட்டதையும் பெரியார் குறிப்பிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை காங்கிரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததை எதிர்த்து, தான் 1925இ-ல் காங்கிரசிலிருந்து வெளியேறியதையும் குறிப்பிட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் வகுப்புரிமைக்கு எதிரான வழக்கின் விவாதம் ஜூலையில் நடைபெறுகிறது. இறுதியாக 28.7.1950 அன்று, இந்திய அரசமைப்புச் சட்டம் 15, 29(2) விதிகளுக்கு கம்யூனல் ஜி.ஓ., எதிரானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, 1928 முதல் நடைமுறையில் இருந்த வகுப்புவாரி உரிமையை ரத்து செய்தது. அன்றைய தினம் விடுதலையில் கம்யூனல் ஜி.ஓ., தீர்ப்பும், கடமையும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கம், வகுப்புரிமைக்குப் போராட மக்களை அழைக்கும்விதமாக இருந்தது.
பெரியாரின் கட்டுரைகளின் எதிரொலியாக, சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 31.7.1950 அன்றும், மீண்டும் 1.8.1950 அன்றும் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஊர்வலம் நடத்தினார்கள். 1.8.1950 அன்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்ட கூட்டத்தில், வகுப்புரிமை ஆணையை நிறைவேற்றிய எஸ்.முத்தையா முதலியார் கலந்து கொண்டு, இவ்வாறு பேசுகிறார்:
அரசியல் சட்டத்தின் 37 விதியில் கூறப்பட்டுள்ள நேரடியான கடமையை ஒரு சர்க்கார் அமல் செய்ய வில்லை என்றால், எந்தக் குடிமகனும், சர்க்காரை நியாயப்படி கட்டாயப்படுத்தவோ, கட்டளையிடவோ முடியாது. ஆனால், சர்க்கார் தனது நிர்வாக முறையில், அக்கடமையை நிறைவேற்ற நேரிட்டால், அவ்வாறு செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறுவதும், கண்டிப்பதும் எவ்வாறு பொருத்தமானதாகும் என்றார் முத்தையா முதலியார். அதே நாளில், திருச்சியில் ஏறத்தாழ முப்பதாயிரம் மக்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசினார்.
சென்னை மாகாண சட்டமன்றத்தில் கம்யூனல் ஜி.ஓ. தேவை என உறுப்பினர்கள் கோசல்ராம், ஏ.சுப்ரமணியம் ஆகியோர் பேசினர். வகுப்புரிமைக் கிளர்ச்சி துவக்கக் கூட்டத்தினைப் பெரியார் துவக்கினார். 7.8.1950 அன்று சென்னை ராபின்சன் பூங்காவில் கூட்டம் நடைபெற்றது. அம்பதாயிரம் மக்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய அந்தக் கூட்டத்தில் அனைத்துப் பிரிவினரும் போராட அழைப்பு விடுத்தார் பெரியார்.
இந்தப் போராட்டம் சாமானியமானது அல்ல; இரண்டிலொன்று பார்த்துவிடுவது என்ற முடிவுடன் இதில் இறங்குவோம். இந்தப் போராட்டத்தின் ஆரம்பக்கட்டமாய் இரண்டு காரியங்களைச் செய்திட வேண்டும். முதலாவது, ஆகஸ்டு-14, நாடு முழுவதும், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஓங்குக என்ற வாழ்த்தொலிகளுடன் ஊர்வலம் வரவேண்டும். நம்முடைய வியாபாரிகள், அன்றைய தினம், கடையடைப்பு செய்ய வேண்டும். நம் முடைய தாய்மார்கள் ஊர்வலமாகச் செல்லவேண்டும். ஊர்வலத்திற்குத் தடை செய்தால், அந்தத் தடைகளை லட்சியம் செய்யக்கூடாது. இந்தக் காரியத்தை நீங்கள் ஆகஸ்டு 14-ஆம் தேதி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரிக்காத பத்திரிக்கைகளை, நம் கிளர்ச்சியைக் கேலி செய்யும், கிண்டல் செய்யும் பத்திரிக்கைகளைப் பொது மக்கள் வாங்கிப்படிக்கக் கூடாது. இந்த இரண்டு காரியத் தையும் முதலில் செய்யுங்கள். பிறகு மேலே செய்ய வேண்டி யது என்ன என்று சொல்லுகிறேன் எனக் கூறினார் பெரியார்.
தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில், சென்னை, காஞ்சி பச்சையப்பன் கல்லூரி, விருதுநகர், சேலம், ஆரணி ஆகிய ஊர்களில் உள்ள கல்வி நிலைய மாணவர்கள், ஒரு நாள் புறக்கணிப்பு செய்தனர். சென்னை மாகாண சட்டமன்றத்தில் 9.8.1950 அன்று பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.என். கோபால்சாமி, பலவீன வகுப்பினர் பட்டியலை மந்திரியார் தரமுடியுமா என கேட்க, பதில் அளித்த கல்வி அமைச்சர் மாதவமேனன், பார்ப்பன சமூகத் தைத் தவிர மற்ற சமூகத்தினர் அனைவரும் பலவீன சமூகத்தி னர்களே என்பது உறுதிப்பட்டதாகும் எனக் கூறினார்.
ஆகஸ்டு 14-இல் கடையடைப்பு நடத்திட மக்களைக் கேட்டுக் கொண்ட பெரியார், உரிமை வேண்டுவது வகுப்புவாதமா? என்ற தலைப்பில் 11.8.1950-இல் கட்டுரை வெளியிட்டார். தமிழகத்தின் பல நகரங்களில் வகுப்பு ரிமைக்கு ஆதரவாக அடுத்த மாதத்தில் மாநாடு நடை பெற உள்ளதாக அறிவித்தார்.
வகுப்புவாரி உரிமைக்கு ஆதரவாக, முதன்முறையாக, சென்னைக் கால் நடைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்தனர். லிபரேட்டர் என்ற ஆங்கில ஏடு, ஆதரவு செய்திகளை வெளியிட்டது. கேரளாவி லிருந்து வெளிவரும் கேரளகவுமதி இதழ் செய்தி வெளி யிட்டது.
வகுப்புரிமைக்கு ஆதரவாக அருப்புக்கோட்டையில் 20.8.1950 அன்றும், ஈரோட்டில் 24.8.1950 அன்றும் பெரியார் மக்களிடையே கருத்துக்களை எடுத்துக் கூறினார். திருச்சியில் 10.9.1950 அன்று கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியில் ஒவ்வொரு மாதமும் 14-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் கம்யூனல் ஜி.ஓ. நாள் கடைப் பிடித்து, மக்களிடம் விளக்கக்கூட்டம் நடத்தத் தீர்மானிக்கப்படுகிறது.
சென்னை மாகாண கவுரவ மாஜிஸ்டிரேட் ஜி.வி.ரெட்டி, பெரியாருக்கு ஆதரவு அளிக்கிறார். கம்யூனல் ஜி.ஓ. இல்லையேல், நம் வாழ்வு மண்ணில் போய்விடும். சிறு கூட்டம், 75 சதவிகித ஸ்தானத்தைக் கைப்பற்றிக்கொள்ளும் என லயோலோ கல்லூரியில் ஆர்.கே.சண்முகம் (செட்டியார்) பேசுகிறார்.
பெரியாரின் தலைமையில் தொடர்ச்சியான போராட்டங்கள் தமிழ் நாட்டில் நடைபெறுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எச்.வி.காமத் என்ற உறுப்பினர் 26.11.1950 அன்று கேள்வி எழுப்புகையில், அதற்கு உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல், கிளர்ச்சி பற்றிய விவரங்களைத் தமிழக அரசிடம் கேட்டுள்ளதாகப் பதிலளிக்கிறார்.
சென்னை மாகாண அரசின் மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, வகுப்புரிமை செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து 27.3.1951 அன்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
விடுதலை, தீர்ப்பைக் கண்டித்து அன்றே தலையங்கம் தீட்டியது. 2.4.1951 அன்று கூடிய திராவிடர் கழக நிர்வாகக்குழு கூட்டம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்தும், மந்திரிகளுக்குக் கருப்புக்கொடி காட்டுவது என்றும், மந்திரிகள் ராஜினாமா செய்ய வற்புறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி, 11.4.1951 அன்று, திருச்செங்கோட்டிற்கு வருகை தந்த அன்றைய சென்னை மாகாண முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது.
வகுப்புவாரி உத்தரவு செல்லத்தக்கது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததனால் எழுந்துள்ள பிரச்சினையின் காரணமாக, சென்னை கோரும் வகுப்புவாரி உத்தரவு பற்றிய கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாகப் புதிய மசோதாவினை மத்திய அரசு கொண்டு வரும் என பிரதமர் நேரு, 12.5.1951 அன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இது தொடர்பான விவாதத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி செய்வது வகுப்புவாத நோக்கமாகாது. சட்ட நுணுக்கச் சிக்கலைத் தீர்க்கத்தான் திருத்த மசோதா என பிரதமர் நேரு அவர்களும்,
கம்யூனல் ஜி.ஓ. பற்றிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு திருப்தியற்றது. பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு உதவி புரிவதே அரசின் கடமை. முன்னேற்றமடையாத மக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக 29(2) வது விதியும், 16(4) விதியும் குறுக்கிடாமலிருக்க, 15-ஆவது விதியைத் திருத்த வேண்டியது அவசியம் என அன்றைய சட்ட அமைச்சர் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களும் 18.5.1951 அன்று நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றுக் கருத்து கூறினர்.
அனைத்து விவாதங்களும் முடிந்து 1.6.1951 அன்று அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் 15-இல் பிரிவு 4 சேர்க்கப்பட்டு, மசோதா மக்களவையின் 245 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
ஏறக்குறைய ஓராண்டுக்கும் மேலாக, சமூக நீதி, வகுப்புவாரி உரிமை எனத் தொடர்ச்சியாக மாநாடுகள், போராட்டங்கள், விடுதலையில் தலையங்கங்கள், அறிக்கைகள் எனப் போராடிய தலைவர் இந்திய துணைக்கண்டத்தில், பெரியார் ஒருவரே என்பதை இன்றைய தலைமுறையினர் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் தன்மான வாழ்வுக்காக சாகும்வரையிலும் போராடிய அந்தப் புரட்சியாளரின் போராட்ட சரித்திரத்தில், ஒரு சில பக்கங்களே இங்கு நாம் சுட்டிக்காட்டியவை; ஆகஸ்டு 14 வகுப்புரிமை நாள் போராட்டம் இதில் ஒரு பகுதிதான்.
பெரியாரைப்பற்றி இன்னும் நாம் அறிந்திராதச் செய்திகளைத் தெரிந்துக் கொள்ள இன்றைய நாள் ஆகஸ்டு 14 (1950)இ-ல் நடைபெற்ற போராட்டம் பற்றிய செய்திகள் ஓர் தூண்டுகோலாக அமைந்திடவே விரும்புகிறோம். இளைய சமுதாயம் பெரியாரைப் பற்றி அறிந்திடுமாயின், வெற்றி சமுதாயத்திற்கே.
வாழ்க பெரியார் வெல்க சமூக நீதி; ஆகஸ்டு 14 போராட்டம் வெல்க.
-
_ -குடந்தை கருணா
-விடுதலை,14.8.14

கடவுள் சக்திமீது நம்பிக்கை இல்லை


முக்கிய கோவில்களில் எல்லாம் கண்காணிப்பு கேமராக்களாம்!

இந்து அறநிலையத்துறை அறிவிப்பு!
மதுரை, ஆக.14-_- இந்து சமய அறநிலையத் துறை கோயில்கள் அனைத் திலும் பாதுகாப்புக்காக கட்டாயம் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட வேண்டும் என, அறநிலை யத் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரையில்  மீனாட்சி சுந்தரேசுவரர்  கோயி லுக்கு தீவிரவாத அச்சுறுத் தல் தொடர்வதால், பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் திருக்கோயில்களின் பாது காப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிகம் கூடும் இந்து சமய அற நிலையத் துறைக்குச் சொந்தமான சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட  கோயில்களில் பாதுகாப்பு காரணமாக, கண்காணிப் புக் கேமராக்கள் அமைக் கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், திரு மோகூர்  காளமேகப் பெருமாள்  கோயிலில் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் பக்தர்கள் அதிகம் கூடுவர். எனவே, அக்கோயிலில் தற்போது 16 இடங்களில் கண் காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின் றன. இதேபோன்று, கோயில் மய்யத்தில் இரும்புக் கோபுரம் அமைத்து, அதில் இடி தாங்கியும் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக் கப்பட்டு வருகிறது.
யா.ஒத்தக்கடை மலை அடிவாரத்தில் உள்ள  யோக நரசிம்மர் கோயி லிலும் கண்காணிப்புக் கேமராவும், இடிதாங்கியும் அமைக்கப்பட உள்ளதாக, கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திருவாதவூர் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில் களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளன. ஏற்கெனவே கண்காணிப்புக் கேம ராக்கள் உள்ள  கோயில் களில் கூடுதலாக கேம ராக்களை பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித் தன.
கோயிலில் உள்ள கடவுள்கள் வெறும் சிலைகள்தான் அவை களுக்குச் சக்தியில்லை என்று இந்து அறநிலை யத்துறை கூறாமல் கூறு கிறது - அப்படித் தானே!
-விடுதலை,14.8.14

புதன், 22 ஜூலை, 2015

69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பு - சில சிந்தனைகள்


தமிழ்நாட்டில் தற்போது செயல் பட்டுவரும் 69 விழுக்காடு இடஒதுக் கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப் பியது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 30.9.2014 அன்று திரா விடர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாப்பது தொடர்பான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 விழுக்காடு சட்டம் 1994-இல் அன் றைய அதிமுக அரசால் நிறை வேற்றப்பட்டபோது, திராவிடர் கழகம் எடுத்த முயற்சிகளை நாடு அறியும்
1.    தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு, அரசமைப்பு சட்டம் 31 சி விதியின் அடிப்படையில் தமிழக அரசால் 1994-ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற் றப்பட்டு, அரசமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளது இதன் மூலம், நீதிமன்ற குறுக்கீடுகள் இந்த சட்டத்திற்கு இருத்தல் கூடாது என அரசமைப்பு சட்டம் 31-பி கூறுகிறது. இந்த சட்டம் அரசமைப்பு சட்டத்தில் 76ஆ-வது  திருத்தத்தின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப் படையான காரணத்தை, அதிமுக அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு தெளிவு படுத்த வேண்டும்.
2. 50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு மீறக் கூடாது என இந்திரா சகானி (1992) வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், சில அசாதாரண மான சூழ்நிலைகளில், இந்த விதியில் சில விலக்குகள் அளித்திடுவது அவசி யமாகிறது என ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அதே தீர்ப்பில் கூறியுள்ளது.
3.    1992 இந்திரா சகானி வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தனது வாதத்தில் 50 விழுக்காட்டிற்கு மேல், இட ஒதுக்கீடு கூடாது என பாலாஜி வழக் கில் கூறப்பட்டது நீதிபதியின் கருத்து மட்டும்தான்; (obiter dicta)  தீர்ப்பு அல்ல என கூறியிருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
4.    1992 இந்திரா சகானி வழக் கின் ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தனது தீர்ப்புரையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்; நிறை வேற்றப்பட வேண்டும் என முடிவு செய்வது, முழுவதும் ஓர் அரசின் வரம்புக்குட்பட்டது; இந்த விஷயங் களில் நீதித்துறை நுழைவதும், மறுஆய்வு செய்வதும் சாதாரணமாக நீதித்துறையின் அதிகாரத்திற்குள் வருவது இல்லை எனக் கூறியுள்ளார்.
5.    இதற்குப்பிறகு, 77-வது அரச மைப்பு சட்டத்தின் திருத்தமாக கொண்டுவரப்பட்டு 16(4) பிரிவில் அ பிரிவு சேர்க்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடருவதற்கான திருத் தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றி யுள்ளது. மேலும் பல திருத்தங்களும் செய்யப்பட்டன.
இந்த திருத்தங்கள் தொடர்பான வழக்கில் ( நாகராஜ் வழக்கு 19.10.2006), உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இந்த திருத்தம் செல்லும் என தீர்ப்பளித்து, மேலும், இந்த திருத்தத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும்போது, நான்கு விச யங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, இட ஒதுக்கீடு பிரிவினரின் எண்ணிக்கை அளவு, அவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மை, போதுமான பிரதிநிதித்துவம் இல் லாமல் இருப்பது, இவற்றுடன், இந்த இடஒதுக்கீட்டால் திறமை பாதிக்கப் படகூடாது அதற்கான புள்ளிவிவர அளவினை அரசு தெரிந்துகொண்டு செய்திட வேண்டும் என கூறியுள்ளது.
(the Constitution Bench held that the State is not bound to make reservation for Scheduled Castes and Scheduled Tribes candidates in matters of promotion but if it wished, it could collect quantifiable data touching backward ness of the applicants and inadequacy of representation of that class in public employment for the purpose of compliance with Article 335 of the Constitution.)
இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ் நாட்டில், தற்போது உள்ள 69 விழுக்காடு தரப்படுவதற்கான நியா யத்தை, மத்திய அரசின் புள்ளியியல் துறை நடத்திய மாதிரி ஆய்வு அறிக்கையில் உள்ள புள்ளி விவரங் களை தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு தெரி வித்து, அவர்கள் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தில் அளித்திட வேண்டும். 6. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ் நாட்டில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடித்து, பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் மக்கள் தொகையினை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இடைப் பட்ட நேரத்தில், மத்திய அரசின் புள்ளியியல் துறையின் தேசிய மாதிரி சர்வேயின் (National Sample Survey) 62-ஆவது சுற்று சர்வே (2004-_05) அறிக்கை மத்திய அரசால் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த சர்வேயில், தமிழ் நாட்டில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர், மலைவாழ் மக்கள், 73.5, 22.16 மற்றும் 1  விழுக் காடாக உள்ளனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத் தையும், அரசு பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
7.    மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களுக்கு 69 விழுக்காடு தான் தரப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் பிரிவு 16(4)-படி, போதிய அளவு இட ஒதுக்கீடு என்கிற அளவுகோலில் இது வழங்கப்பட்டுள் ளது நியாயமானதுதான்.
தமிழ் நாட்டில் நீதிக்கட்சி காலத்தி லிருந்து நடைமுறையில் இருக்கும் சமூக நீதிக் கோட்பாடும்,  1994-ல் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு சட் டமும், இந்தியாவிற்கே ஓர் வழி காட் டியாக இருக்கிறது. ஆகவே, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, 69 விழுக்காடு சட்டத்தினை பாதுகாத் திட அனைத்து முயற்சிகளையும் தமிழ் நாடு அரசு செய்யும் என்று எதிர் பார்க்கிறோம்.
- கோ. கருணாநிதி

இராமன் காக்கவில்லையே! 


பாட்னா, அக்.4: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத் தில் நேற்று நடந்த தசரா விழாவில், கூட்ட நெரி சலில் சிக்கி 33 பேர் பலி யாயினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டா டப்பட்டது. 10ம் நாளான நேற்று ராவணனை, ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சி வடமாநிலங் களில்  நடந்தது. பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத் தில் தசரா விழா நேற்று மாலை  கொண்டாடப் பட்டது. இதைக் காண, சுற்றுப்புற நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள், தங்கள் குழந்தை களுடன் வந்திருந்தனர். இதனால் காந்தி மைதா னத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த விழாவை காண முதல்வர் ஜிதன் ராம் மன்ஜியும் வந்திருந்தார்.
தசரா விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, 60 அடி உயர பத்து தலை ராவணனின் உருவ பொம்மை, அம்பு எய்தி தீ வைத்து கொளுத்தப்பட் டது. அப்போது வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதை கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்த மக்கள் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங் கினர்.
மைதானத்தை ஒட்டி யுள்ள குறுகலான தெரு வழியாக மக்கள் கூட்டம் வெளியேறிக் கொண் டிருந்தது. மைதானத்தில் இருந்த ஒரு வழியாக மட்டுமே மக்கள் வெளி யேற அனுமதிக்கப்பட் டனர். அப்போது திடீ ரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் போதிய காவல் துறையினர் இல்லாததால், மக்கள் போட்டி போட் டுக் கொண்டு மைதா னத்தை விட்டு வெளி யேறினர்.
இந்த நெரிசலில் சிக்கிய குழந்தைகளும், பெண்களும் அலறினர். பலர் மயங்கி கீழே விழுந் தனர். மைதானத்தில் இருந்து வெளியேறும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பலர் கூட்டத்தில் மிதி பட்டனர். மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தவர் கள் உடனடியாக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந் தனர். மொத்தம் 33 பேர் பலியானதாக பீகார் உள்துறை செயலாளர் அமிர் சுபானி தெரிவித் துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை அறி வித்தார்.
விடுதலை,4.10.14

ஞாயிறு, 19 ஜூலை, 2015

கடவுள் சக்தி இவ்வளவுதான்


சதுரகிரி மலையில் உள்ள கோயிலுக்குச் சென்றவர்களில் 10 பேர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்
சிறீவில்லிபுத்தூர், மே 18_- விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை உள்ளது. அமாவாசை, பவுர்ணமி தினங்களில் அங்கு பக்தர் கள் சதுரகிரி மகாலிங் கத்தை தரிசனம் செய்து வருவார்கள். நேற்று விடு முறை நாளில் அமாவாசை வந்ததால் பல்வேறு பகு திகளில் இருந்தும் ஏராள மானோர் சதுரகிரி மகா லிங்கம் கோவிலக்கு வந்து இருந்தனர்.
இவர்களில் பலர் மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை நீர்வீழ்ச்சி யில் நேற்று மதியம் மகிழ்ச் சியாக குளித்துக்கொண்டி ருந்தனர். மதியம் சுமார் ஒரு மணி அளவில் திடீ ரென்று அங்கு பலத்த மழை பெய்தது. இதனால் அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் அங்கு குளித்துக்கொண்டு இருந் தவர்கள் அலறியடித்துக் கொண்டு அருவியின் கரைக்கு சென்று தப்பி னார்கள்.
ஆனால் மறுகரையில் உள்ள அடிவாரப் பகு திக்கு வரமுடியாமல் 200-க்கும் மேற்பட்டவர்கள் தவித்தனர். இதுபற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தாணிப்பாறை பகுதிக்கு விரைந்தனர். காட்டாற்று வெள்ளத் தில் சிக்கி தவிப்பவர்களை மீட்க அவர்கள் நட வடிக்கை மேற்கொண்ட னர்.
இவர்கள் தவிர சதுர கிரி மலை மீது பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரம் பேர் தங்கி இருப் பதும், அவர்களும் வெள் ளத்தை தாண்டி கீழே இறங்கி வரமுடியாமல் தவிப்பதும் தெரியவந்தது. வெள்ளத்தில் சிக்கியவர் களை கயிறு மூலம் மீட் புக்குழுவினர் மூலம் மீட்டனர்.
மலையில் உள்ள மரங் களில் ஏராளமானோர் மரக்கிளைகளை பிடித்து தொங்கியபடி இருப்பதாக தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் 8 குழுக்களாக பிரிந்து மலைப்பகுதிக்கு சென்று மீட்புப் பணி களை மேற்கொண்டனர்.
சதுரகிரி மலையில் உள்ள பிலாவடி கருப்ப சாமி கோவில் மற்றும் விநாயகர் கோவில் அருகே மொத்தம் 10 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று தெரி கிறது. இதில் ஒரு இளை ஞரின் உடலை மலையில் இருந்து இறங்கி வந்தவர் கள் மீட்டு மீட்புக்குழு வினரிடம் ஒப்படைத்தனர். அவர் வத்திராயிருப்பைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 19) என்பது தெரியவந்தது. இது தவிர மேலும் 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
வேறு உடல்கள் எது வும் கிடக்கிறதா? என்று மீட்புக்குழுவினர் கண் காணித்தனர். ஆனால் உடல் எதுவும் கிடைக்க வில்லை. மீட்கப்பட்ட வர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து அரசு பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர். தகவல் கிடைத்து அமைச் சர் கே.டி.ராஜேந்திரபா லாஜி, ஆட்சியர் ராஜா ராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை பார்வையிட் டனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் காட் டாற்று வெள்ளம் பெருக் கெடுத்து 125-க்கும் மேற் பட்டோர் இறந்து போனது குறிப்பிடத்தக்கது.