பக்கங்கள்

இந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 மே, 2022

இணைப்பு மொழியாக இருப்பதற்கு பயன் நிறைந்ததாக இருப்பது 'ஹிந்தி'யா அல்லது 'ஆங்கில'மா?

 

  • சீனிவாசன் ரமணி, விக்னேஷ் ராதா கிருஷ்ணன் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி
  • பிரபல ஆய்வு எழுத்தாளர்களால்  'இந்து' ஏட்டில் (15.4.2022 பக்கம் 9) எழுதப்பட்டுள்ள ஆய்வுப் பூர்வமான தரவுகள் நிறைந்த கட்டுரை இது.
  • போஜ்புரி, ராஜஸ்தானி உள்ளிட்ட 56 பிரிவுகளை உள்ளடக்கியதுதான் ஹிந்தி.
  • இந்தியாவின் தகவல் நுட்ப தலைநகரமாக பெங்களூரு திகழ்வதற்குக் காரணமே ஆங்கிலம்தான்.
  • பயன் நிறைந்ததாக இருப்பது ஆங்கிலமா? ஹிந்தியா? என்பதுதான் முக்கிய கேள்வி - பயன்பாடுதான் முக்கியம்.
  • ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் மாநிலங்கள்தான் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளைக் காட்டுகின்றன (படம் 1)
  • ஹிந்தி பேசும் மாநிலங்களிலிருந்து தான் ஏராளமான மக்கள் ஹிந்தி  பேசாத மாநிலங்களுக்குக் குடியேறுகின்றனர்.
  • இதுபோன்ற அரிய தகவல்கள் இக்கட்டுரையில் குவிந்து கிடக்கின்றன.

(இணைப்பு மொழியாக ஹிந்தியைவிட ஆங்கிலம் இருப்பதே பயன் நிறைந்தது என்று குடியேற்றம் மற்றும் முன்னேற்ற சூழ்நிலை மாற் றத்தைக் கணிக்கும் புள்ளி விவரங்கள் ஒரு உறுதியான வழக்கைக் காட்டுகின்றன).

2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது தங்களது  கடிதப் போக்குவரத்துக்கு ஹிந்தி மொழிதான் முதல் தேர்வு என்று 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 15 மாநில யூனியன் பிரதேச மக்கள்தான் தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் ஒரு நிபந்தனை உள்ளது. போஜ்புரி, ராஜ்ஸ்தானி, ஹிந்தி, சத்தீஷ்கர் உள்ளிட்ட 56 மொழிகள் (தாய் மொழிகள்) உள்ளடங்கிய மொழி யாக ஹிந்தி (ஒரு குடை) மொழி இருக்கிறது.

43% இந்தியர்கள் ஹிந்தி பேசுவதாகக் கூறப்பட்டாலும் 8.26% மக்கள் மட்டுமே குறிப்பாக தங்கள் தாய்மொழியாக ஹிந்தி பேசுகிறார்கள். ஹிந்தி இணைப்பு மொழியாக செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இதைக் குறிப்பிட்டுதான், மாநில மக்கள் ஒருவருடன் ஒருவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளும் போது ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியாவின் ஹிந்தி மொழியில் செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

அவ்வாறு அவர் கூறியது எதிர்க்கட்சிகளிடமிருந்து கண்டனங் களையும் விமர்சனங்களையும் எழுப்பியது. பெங்களூரு இந்தியா வின் தகவல் தொழில் நுட்ப தலைநகரமாக ஆனதற்கு ஆங்கில மொழியே காரணம் என்று கருநாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலை வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஆங்கில மொழிக்கு மாற்றாக, ஹிந்தியைத் திணிப்பதற்கான வாதமே அது பெரும்பான்மையான இந்திய மக்களால் பேசப்படுகிறது என்பதுதான். ஆனால் ஹிந்தி மொழி பெரும்பான்மையான இந்தியர் களால் பேசப்படும் மொழி என்றுகூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு பதில், ஒரு பயன்பாட்டு கேள்விக்கு பதில் கூற வேண்டும். இந்திய குடிமக்கள் மேன்மையான வாழ்க்கை ஒன்றைத் தேடும்போது, ஹிந்தி - ஆங்கிலம் இரண்டு மொழிகளில் எந்த மொழி பயன் நிறைந்ததாக இருக்கும் என்பதுதான் அந்தக் கேள்வி. வேறு சொற்களில் கூறுவதானால், ஹிந்தி பேசும் உள்ளூர் மக்கள் ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதால் அதிக பயன் அடைவார்களா அல்லது ஹிந்தி மொழி பேசாத மக்கள் மீது அவர்கள் பயன் பெறுவதற்கு ஹிந்தி மொழி திணிக்கப்பட வேண்டுமா?

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மனிதவள மேம்பாட்டு அட்டவணையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதிக மக்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் பகுதிகள் மேலான மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளைக் காட்டுகின்றன. (படம் 1) ஹிந்தி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ள பகுதிகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், அதை விடக் குறைவான மனிதவள மேம்பாட்டு குறியீடுகளைக் காட்டுகின்றன. (படம் 2) இதன் பொருள் என்ன வென்றால், உயர்ந்த வாழ்க்கைத் தரத்துக்கும் அதிக அளவில் ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதற்கும் இடையே ஒரு ஆக்க பூர்வமான தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.

இதுவும்கூட குடி பெயர்பவர்களுடன் தொடர் புள்ள எண்ணிக்கையில் இருந்து பெறப்பட்டதாகும். மேலான வாழ்வாதாரங்களைத் தேடி ஹிந்தி பேசும் மக்கள் கொண்ட மாநிலங்களில் இருந்து கூடுதலான மக்கள் ஹிந்தி பேசாத மாநிலங்களுக்குக் குடிபெயர் கின்றனர். 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பொருளாதார ஆய்வில் பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் விவரங் களைப் பகுத்தாய்வு செய்வதன் மூலம் வேலையுடன் தொடர்புடைய குடியேற்ற விவரங்களை அளவிடு வதற்கு பயன்படுத்தப்பட்டது. இத்தகைய கீழ் வகுப்பு ஒன்றில் பயணம் செய்யும் அதிக அளவு பொருளாதார வசதியற்ற மக்கள் பெரும்பாலும் வேலை தொடர்பான காரணங்களுக்காகவே பயணம் செய்கிறார்கள் என்று அந்த ஆய்வறிக்கை வாதாடுகிறது. 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் அது போன்ற 90 லட்சம் பயணிகள் மேற்கொண்ட பயணங்களில் 200 கி.மீ. தொலைவுக்கும் குறைவான தூரம் பயணித்த பயணிகள் சேர்க்கப்படவில்லை.

2015-2016 ஆம் நிதியாண்டில் மாநில அளவில் பயணம் செய்த இறுதியான பயணிகளின் எண்ணிக்கை பற்றிய வரை படத்தை (படம் 4) காட்டுகிறது. தமிழ்நாடு, மகாராட்டிரா, குஜராத், மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், கருநாடகா, பஞ்சாப் மற்றும் டில்லி போன்ற மாநிலங்களில் அதிக அளவிலான மக்கள் மற்ற மாநி லங்களில் இருந்து குடிபெயர்ந்து உள்ளனர். உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், அரியானா, இமாசல பிரதேசம், சத்திஷ்கர் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான மக்கள் மற்ற மாநிலங்களக்குக் குடி பெயர்ந்துள்ளனர்.

அதிக அளவில் மக்கள் குடிபெயர்ந்த மாநிலங் களைக் காட்டும் 3ஆவது வரைபடத்துடன் இதனைப் பொருத்திப் பார்க்கும்போது, அதிக அளவில் மக்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களுடன் இந்த புள்ளி விவரங்கள் பொருந்துகின்றன. அதற்கு மாறாக அதிக அளவில் ஹிந்தி பேசும் மக்கள் குடியேறிய ஹிந்தி பேசாத மக்கள் வாழும் பகுதிகளில் இந்தி பேசும் மக்கள் வெகு சிலரே இருக்கின்றனர். இதற்கு விதி விலக்காக இருப்பவை கேரள, ஒடிசா மாநிலங்களும், மகாராட்டிரா மாநிலத் தின் சில பகுதிகளும்தான்.

இந்தியை தாய் மொழியாக பேசுபவர்களை மட் டுமே படம் 3 காட்டவில்லை; தங்களது இரண்டாவது மொழி அல்லது மூன்றாவது மொழி என்று ஹிந்தியைத் தேர்ந்து எடுத்திருக்கும் மக்களையும் இந்த படம் காட்டுகிறது. ஹிந்தி பேசும் மக்கள் 50% சதவிகிதம் அளவில் வாழும் ஹிந்தி மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்குக் குடியேறிய மக்கள் பற்றி 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் பகுத்தாய்வு ஒன்று (படம் 3) எதிர்மறைப் போக்கைக் காட்டுகிறது. இந்த மாநிலங்களில் இருந்து இதர மாநிலங் களுக்குக் குடியேறிச் செல்லும் மக்கள் மற்ற மாநிலங் களில் இருந்து ஹிந்தி பேசப்படும் மாநிலங்களுக்குக் குடிபெயரும் மக்களின் எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கை கொண்டதாக இருப்பதாகும் என்பதையே இந்த புள்ளி விவரங்களை காட்டுகின்றன. வேலை மற்றும் கல்வி ஆகிய காரணங்களுக்காக குடிபெயர்தல் உள்ளிட்ட அனைத்து வகையிலான குடிபெயர்தல்களும் இந்த பாணியில் தான் இருக் கின்றன என்பது தெரிய வருகிறது.

சுருங்கக் கூறினால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கை கொண்ட மக்கள் ஹிந்தி பேசப்படாத மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்து செல்கின்றனர் என்றும் ஒரு பகுதியின் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டுக்கும் அதிக அளவிலான மக்கள் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி மொழி இருப்பதைவிட ஆங்கில மொழி இருப்பதையே இவை வலியுறுத்திக் கூறுகின்றன. இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு இது.

நன்றி: 'தி இந்து' 15.4.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

திங்கள், 7 மே, 2018

இதுதான் உ.பி. அரசின் சாதனை

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி  நடை பெற்று வருகிறது. அங்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10ஆவது மற்றும் 12ஆவது  அரசுப் பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற்றன.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த 29.4.2018 அன்று வெளியானது. அதில்,மாநிலத்தில் உள்ள 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத அவலம் நிகழ்ந்துள்ளது மிகப் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. இந்த 150 பள்ளிகளில், 98 பள்ளிகளில் எந்த மாணவரும் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றும், மேலும்  52 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருந்தது என்றும் அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. உ.பி.யின் காஷிப்பூர் மாவட்டத்தில்தான் அதிக அளவிலான பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும், ஆக்ரா மாவட்டத்தில் 9 பள்ளிகளிலும் பூஜ்ய சதவிகித அளவிலான தேர்ச்சி என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் காஸிபூர், மிர்ஸாபூர், அலிகார் ஆகிய மாவட்டங்களில் தேர்ச்சி .சதவிகிதம்  மோசமான நிலையில் இருக்கிறது. இதில் ஆச்சரியப்படத்தக்க தகவல் என்னவென்றால் அரசு பள்ளிகள் மட்டுமல்லாமல், தனியார் பள்ளிகளும் இதில் அடக்கம். மேலும் 237 பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 20 சதவிகிதம் மட்டுமே என்றும் கூறப் பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் வினோத் குமார் ராய் தெரிவித்துள்ளார். உ.பி. அரசு கல்வித் துறையில்  எவ்வளவு அழகாக செயல்பட்டு வருகிறது என்பதை  இந்தத் தேர்வு முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.  மாணவர்கள் இந்த அளவு மிகவும் மோசமான முறையில் தேர்ச்சி பெறாமல் போனது இதுவே முதல் முறை ஆகும். இது சாமியார் ஆதித்யநாத் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு நடக்கும் இரண்டாவது பொதுத்தேர்வாகும். 2016-2017 ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த போது "நான் ஆட்சி ஏற்று இரண்டு மாதங்கள்தான் ஆகியுள்ளது. ஆகவே அடுத்த பொதுத்தேர்வுகளில் உ.பி. மாணவர்கள் தேர்விற்காக எனது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்" என்று கூறிய நிலையில், அவரது ஆட்சியிலே உத்தரப்பிரதேச வரலாற் றிலேயே மிகவும் மோசமான தோல்வியை பள்ளிக் கல்வித் துறை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

உ.பி.யில் சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்ற நிலையில், இரகளையில் ஈடுபட்டு முதல் அமைச்சர் பதவியைப் பிடித்தவர் இந்த சாமியார் ஆதித்யநாத்.

இவர் ஆட்சிக்கு வந்த நாள் முதல் மதச் சச்சரவுகளும், ஜாதிக் கலவரங்களும் தான் தலைதூக்கி நிற்கின்றன. ஒருக்கால் இவற்றைத்தான் தன் ஆட்சியின் சாதனையாகக் கூறுவார் போலும்!

அரசு அலுவலகங்களுக்கெல்லாம் காவி வண்ணம் பூசுதல் என்பதில் ஆரம்பித்து வேறு வளர்ச்சித் திட்டம் எதிலும் கவனம் செலுத்தாத சீரழிவு ஆட்சிக்குப் பெயர்தான் சாமியார் ஆதித்யநாத் ஆட்சி!

நடைபெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஜேபிக்குத் தோல்வியைக் கொடுத்து சாமியார் ஆட்சிக்கு மக்கள் தக்கப் பாடம் கற்பித்தனர்.

போதும் போதாதற்கு 10ஆம் வகுப்பு அரசு தேர்வில் பூஜ்ஜியம் வெற்றி!

கல்வி தானே நல்லாட்சிக்கான நற்சான்றுப் பத்திரம்! அதிலே பூஜ்ஜியம் என்றால் ஆட்சியே பூஜ்ஜியம் என்றுதான் பொருள்.

2019 மக்களவைத் தேர்தலில் உ.பி. மக்கள் மரண அடியைப் பிஜேபிக்குக் கொடுக்கக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.
- விடுதலை நாளேடு, 5.5.18