பக்கங்கள்

இந்துமத கொடுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்துமத கொடுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜூலை, 2018

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் நடந்த கொடூரம்



கீழே கிடந்த மாம்பழத்தை சாப்பிட்டதற்காக தாழ்த்தப்பட்ட பெண் அடித்துக் கொலைபதேபூர், ஜூன் 30 -உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில், கீழே கிடந்த மாம்பழத்தை எடுத்துச் சாப் பிட்டதற்காக, தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் நடந்துள்ளது.பதேபூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் ராணிதேவி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர், கால்நடைகள் மேய்க்கும் தொழிலாளி ஆவார். அந்த வகையில், மாந் தோப்பு ஒன்றுக்குள் கால்நடை களை மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்குள்ள மரத்திலிருந்து மாம் பழம் ஒன்று கீழே விழுந்து கிடந்துள்ளது. அதை ராணி தேவி எடுத்துச் சாப்பிட்டுள்ளார்.  அதைப் பார்த்துவிட்ட தோப் பின் உரிமையாளர், ராணி தேவியை ஒரு பெண்என்றும் பாராமல், சரமாரியாக மிகக் கொடூரமான முறையில் தாக் கியுள்ளார். இதில் ராணி தேவி படுகாயமடைந்துள்ளார்.

எனினும் தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வந்த ராணி தேவி, மயங்கி கீழே விழவே,அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் கான் பூருக்கு அழைத்துச் செல்லு மாறு கூறியுள்ளனர். அதன்படி கான்பூருக்கு சென்று கொண்டி ருந்தபோது, வழியிலேயே ராணி தேவி இறந்துள்ளார். பழுத்து அதுவாகவே உதிர்ந்த மாம்பழத்தைச் சாப்பிட்டதற் காக, தாழ்த்தப்பட்ட பெண் அடித்துக் கொல்லப்பட்டது, பதேபூர் மாவட்டத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணி தேவியை அடித்துக் கொன்றவரை கைதுசெய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், தோப்பின் உரிமையாளர் தற்போது தலை மறைவாகி இருக்கிறார்.

- விடுதலை நாளேடு, 30.6.18

வெள்ளி, 2 மார்ச், 2018

புரட்டி பார்க்கிறோம்! பழைய வரலாற்றை!


பார்ப்பனீய சீழில் புழுத்த பரிதாபத்துக்கு உரியவர்களே!

புரட்டி பார்க்கிறோம்! பழைய வரலாற்றை!

கொலையே புரியும் கொடிய  இந்துத்துவம்!

ஆயிரக்கணக்கான சமணர்களை கழுவில் ஏற்றி

கொன்ற இந்துத்துவம்!

கொத்து  கொத்தாய் பவுத்தர்களை,

ஒழித்த இந்துத்துவம்!

விரட்டி அடித்து, குகைகளில், சித்தர்களை

புதைத்த இந்துத்துவம்!

பிரமாண்டமாய் கோவில் கட்ட அப்பாவிக் கூலிகளை

பலி கொடுத்த இந்துத்துவம்!

விதவை பெண்களை உடன் கட்டை ஏற்றி

எரித்த இந்துத்துவம்!

நம் இன ராவணனை வஞ்சகமாய் கொன்ற இந்துத்துவம்!

நம் இன சம்பூகனை தந்திரமாய் அழித்த இந்துத்துவம்!

நம் இன நரகாசுரனை  நயவஞ்சகமாய் ,

கொன்ற இந்துத்துவம்!

நம் இன மாவலியை மண்ணோடு

புதைத்த இந்துத்துவம்!

நம் இன நந்தனாரை உயிரோடு, தீயிலே

இறக்கிய இந்துத்துவம்!

நம் இன வள்ளலாரை தீ வைத்து

கொன்ற இந்துத்துவம்!

நம் இன வாலியினை அம்பெய்தி அழித்த இந்துத்துவம்!

கோட்சேவை வைத்து  காந்தியாரைக் கொன்ற இந்துத்துவம்!

காமராஜரை உயிரோடு எரிக்க முயன்ற இந்துத்துவம்!

ஆயிரம் ஆயிரமாய் விவசாயிகளை

தற்கொலைக்கு தூண்டிய இந்துத்துவம்!

குஜராத்திலே மனித வேட்டையாடி

மலை மலையாய் மக்களை குவித்த  இந்துத்துவம்!

ரோஹித் வேமூலாக்களை, சரவணன்களை,

முத்துக் குமார்களை மறைமுகமாய்,

கொலை செய்த இந்துத்துவம்!

நரேந்திர தபோல்கரை, கோவிந்த் பன்சாரேக்களை,

கல்புர்கிகளை, கவுரி லங்கேஷ்களை,

கொன்ற இந்துத்துவம்!

வியாபம் ஊழலை மறைக்க,

உயிர்களை மர்மமாய் கொன்ற இந்துத்துவம்!

நீட்டு கயிறால் அனிதாவை, இறுக்கி

கொன்றதும்  இந்துத்துவம்!

புரட்டிப் பார்க்கிறோம்! பழைய வரலாற்றை!

கொலையே புரியும் கொடிய  இந்துத்துவம்!

- தகடூர் தமிழ்ச்செல்வி

- விடுதலை ஞாயிறு மலர், 24.2.18