பக்கங்கள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

ஆரிய மாயை!நாலு தலைச் சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண்சாமி, ஆறுதலைச்சாமி, ஆனை முகச்சாமி, ஆழிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் சுகமனுபவிக்க நடு நிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக் கொண்டு தொழ வேண்டுமே. இந்தச் செய்தியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்ணறாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக் கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான் நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.

'திராவிட நாடு' - (26.9.1943).

- விடுதலை நாளேடு, 15 .9. 19

ஏழை நாடா?பணம் கோயில்களிலே நகை யாய், வாகனமாய் நிலமாய் முடங் கிக் கிடக்கிறது. இந்த முடக்கு வாதம் தீர்ந்தால் முடிவுறும் வறுமை, கொடுமை, இல்லாமை என்பனவெல்லாம். இது எதை உணர்த்துகிறது. இந்த நாடு ஏழை என்பதையா? எப்படி ஏழை என்று கூற முடியும் இந்நாட்டை? தில்லைக் கூத்தரின் தங்கஓடு வேய்ந்த சன்னிதானத்தையும், வரதரின் வயிர நாமத்தையும் காஞ்சிகாமாட்சியின் வைடூரியக் கற்களையும், அரங்கநாதரின் அற்புத இரத்தினங்களையும் வேங்கடத்தானின் பத்து இலட்சம் பெறும் வைரமுடியையும் காணும்போதும், கேட்கும் போதும் - அதிலும் இந்தத் திரவியம் எவ்வித நலனுமின்றி மூலையில் முடங்கிக் கிடக்கிறது. ஒரு சில சாமி (ஆசாமி)கள் உல்லாச வாழ்வைக் கருதி என்பதை அறிந்த பிறகு இந்த நாட்டை ஏழைநாடென்று எவராவது கூற முடியுமா? பொருளில்லையா இந்த நாட்டில்? இருக்கிறது. யாரிடம் பொருள் உளது? மதத்தின் பெயரால் கோயிலாகவும், வாகனமாகவும், ஆண்டவர் சொத்தாகவும் அடைந்து கிடக்கிறது. அந்த பொருள் பிறவி முதலாளிகளைக் (ஆரியரை) கொழுக்க வைக்கப் பயன்படுகிறது.

பரமன் பேரால் உள்ள பணம் அதிர்வெடிக்கும், அலங்கார ஆர்ப்பாட்டப் பூசைக்கும், தேருக்கும் திருவிழாவிற்கும் உபயோகமாகிறது. அநாவசியமாக, அர்த்தமற்று இது நீதியா? முறையா? என்று கண்டிக்கிறோம் இதில் தவறென்ன?

செல்வமிக்க இந்த நாட்டில் வறுமையால் வதங்கி வெளிநாடு செல்லும் தோழர்கள் இந்த நாட்டை வாழ்த்தியிருப்பர் என்றா நினைக்கிறீர்கள்? துக்கம் நெஞ்சையடைக்கக் கண்ணீரைக் கடல் நீரிலே கலக்கி, அந்தக் கதியற்றவர்கள் இந்நாட்டைப் பார்த்து, அளவற்ற செல்வம் உன்னிடம் இருந்தென்ன? நாங்கள் அனாதை கள்தானே! வற்றாத நதிகள் இங்கே பாய்ந்தென்ன? எங்கள் வாழ்க் கைப் பாலைவனம்தானே! நஞ்சையும் புஞ்சையும் இருந்தென்ன?  நாங்கள் பஞ்சைகள்தானே! பணமிருந்தென்ன? பராரிகள்தானே நாங்கள்! ஒரு கவளம் சோறில்லாது ஓடுகிறோம் நாட்டை விட்டு, தங்க ஓடு வேய்ந்த கோயில் உள்ள தில்லையான் (சிதம்பரம் நடராசர்) வாழும் இந்த நாட்டில் வதியும் நாங்கள்! செல்வமுண்டு இந்த நாட்டில், ஈசனைப் போற்றியேத்தும் மக்களிடம், நாங்கள் வாழ வழி செய்யாமல் எங்களை வெளிநாட்டிற்குப் போகச் செய்யும் திருநாடே! அரசியலை ஆங்கிலேயனிடமும் ஆத்மார்த் தத்தை ஆரியனிடமும், வாணிபத்தை வடநாட்டானிடமும் ஒப்படைத்து விட்டுக் கிடக்கும் ஏ அடிமை நாடே! சோறில்லை எங்களுக்கு, சொர்ணம் விளையும் இந்த நாட்டில், எங்களை இக்கதியில் விடும் நீ இருந்தென்ன? போயென்ன? அக்ரமத்துக்கு இடமளித்து அனாதைகளைத் துரத்துகிறாய் அறிவிழந்து. ஏ அறிவிழந்த நாடே! நீ அழிந்து படு! அழிந்து படு என்று தான் சபித் திருப்பர்; தம் நெஞ்சக் குமுறலைக் கொட்டியிருப்பர்.

சொற்பொழிவு, குடந்தை - (1948)

 - விடுதலை நாளேடு, 15 .9 .19

தேவாரம்தேவாரம் பாடப்பட்டதன் நோக்கமே, பிறரைத் துன்புறுத் துவதுதான் என்பதனைத் தேவா ரத்தை நடுநிலை யுடன் படிக்கும் எவரும் எளிதில் உணர்ந்து கொள்வர். தேவாரத்தைப் படிக்கும்போது ஒரு வைணவன் பக்கத் தில் நிற்க மாட்டான் - ஒரு சமணன் நிற்க மாட்டான் - ஒரு புத்தன் நிற்க மாட்டான் - இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சமரச சன் மார்க்கம் பேசும் ஒரு சைவன் கூட அதன் பக்கத்தில் நிற்க மாட்டான் - அந்த அளவுக்கு வசை மொழிகளை வாரிவாரி இறைத்திருக்கிறார்கள் தேவாரத்தைப் பாடிய திருஞான சம்பந்தரும் பிற நாயன்மாரும்! தெருச் சண்டைக்கு நிற்பவன் வாயில்கூட வராத வசைமொழி கள் பல தேவாரம் பாடிய நாயன் மார்கள் வாயினின்றும் வந்திருக் கின்றனவே!

- “திராவிட நாடு" (14.10.1956)

 - விடுதலை நாளேடு, 15 .9 .19


இந்து மதமும் தமிழரும்(நக்கீரன் என்ற புனை பெயரில் எழுதியது)


மலடி மைந்தன், முயல் கொம்பை ஏணியாக அமைத்து வான்வெளியிலுள்ள மலரைப் பறித்து வந்தான் என்று ஒருவன் கூறும் கதையைப் போல, தொடக்கமோ, முடிவோ அற்ற ஒரு முழு முதல் பொருளை மத நூல்கள் கூறும் வழியே சென்று அப்பெரும் பொருள் அளிக்கும் இன்பத்தைப் பெறலாம் என்று கூறுவது போன்ற அறியாமை பிறிதொன்று இல்லை. மலடி மைந்தன் போன்றது கடவுள்; முயல்கொம்பு போன்றது மத நூல்கள் கூறும் நெறி; வான் மலர் போன்றது கடவுள் அளிக்கும் பேரின்பம். இதுகாறும் கூறியவை கடவுளைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும். இதிலும் தெளிவடைய மாட்டார்க்கு விரும்பினால், பின்னும் தெளிவாக விளக்கப்படும்.

'திராவிட நாடு' இதழ் - (17.5.1942)

- விடுதலை நாளேடு, 15. 9.19

சனி, 14 செப்டம்பர், 2019

அட, மன(ற)ர கழன்ற மனு 'நூலாரே!'

மின்சாரம்
ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்வதில் சில பொதி சுமக்கும் மிருகங்களுக்கு ஒரு வகையான சுகமே! இந்தப் போட்டியில் முதல் பரிசு 'துக்ளக்குக்கு'த்தான். அதனால் தான் அடிக்கடி கழுதை கார்ட்டூனைப் போட்டுக் கொண்டிருக்கும்.

இவர்களின் ஜெகத் குருவின் யோக்கியதையை  - சங்கதியைக் கழுவிக் கழுவி ஊத்தியாச்சு! ஜெயேந்திரருக்காக வக்காலத்து வாங்கி, எழுத்தாளர் அனுராதா ரமணன் மீது பழி தூற்றிய நிலையில் அந்த அம்மையார் கொடுத்த சாட்டையடி குருமூர்த்திகளின் தோலை உரித்துத் தொங்கப் போட்டது. இதை எல்லாம் 'விடுதலை' எடுத்து எழுதுகிறது. அதற்கு ஒரு வரி பதில் சொல்லத் துப்பில்லை.

ஆனால் ஆத்திரத்தை மட்டும் அடக்க முடியவில்லை. அதற்காக அந்த ஆத்திரத்தை எந்த வகையிலாவது சொரிந்து தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

ஒவ்வொரு வாரமும் திராவிடர் கழகத் தலைவரைத் தீண்டாவிட்டால் ஆத்துலே போஜனம் கிடைக்காது போலி ருக்கு. இந்த வாரமும் (18.9.2019) எரிச்சலைக் காட்டியிருக்கு.

கேள்வி: பவள விழா நடத்திய தி.க. மாநாட்டில், வெளி யிடப்பட்ட தீர்மானங்கள் பற்றி துக்ளக் கருத்து?

பதில்: 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறி, 'பிறப்பினால் எல்லோரும் ஒன்று' என்பது தன் முதன் மைக் கொள்கை என்கிறது தி.க. தீர்மானம். ஆனால், அது திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை தி.க. மறைத்திருக்கிறது. ஏன்? திருக்குறளை பெரியார், மலம் என்று கூறிவிட்டாரே. (அப்படியா எங்கே கூறினாராம்?) அடுத்தது, 'யாதும் ஊரே யாவ ரும் கேளிர்' (எல்லாம் நம் நாடு - அனைவரும் நம் உற வினர்) என்பதும் தன் கொள்கை என்கிறது தி.க. ஆனால், அது புறநானூறிலிருந்து எடுக்கப்பட்டது என்று கூற அதற்குத் துணிவில்லை. காரணம், அடுத்த வரியிலேயே கர்ம விதியைக் கூறுகிறது புறநானூறு. முடிவாக 'உலகமே ஒரு குடும்பம்' என்பதும் தன் கொள்கை என்கிறது தி.க. ஆனால், அது தி.க. வெறுக்கும் சம்ஸ்க்ருத (ஆரிய நூலான) மகா உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது. 'ஒருவர் நம் உறவினர், மற்றவர் வேற்று மனிதர்' என்று குறுகிய மனது உள்ளவர்கள் கூறுவார்கள். பரந்த மனது உள்ளவர்கள் - உலகமே ஒரு குடும்பம் என்று கூறுவார்கள்' என்று கூறுகிற மகா உபநிஷத், நம் நாடாளுமன்றத்தில் பொதித்து வைக்கப் பட்டிருக்கிறது. இதைத்தான் தி.க. தன் கொள்கை என் கிறது. தான் கூறியது மகா உபநிஷத்தில் இருக்கிறது என்று கூறினால் தி.க.வின் மானமே போய்விடும். தி.க.வின் பவளவிழாத் தீர்மானங்க ளின் மூன்று கொள் கைகளும் திருடப்பட்ட கருத்துக்கள்.

இதுதான் 'துக்ளக்'கின் கேள்வி பதில் பகுதி.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று திக பவள விழா மாநாட்டில் கூறப்பட்டதாம். இது திகவின் கொள்கையில்லை - திருக்குறளில் உள்ள கருத்து இது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தன் கொள்கை என்கிறது தி.க.

அது புறநானூற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

உலகமே தன் குடும்பம் என்பதும் தி.க. வெறுக்கும் சமஸ்கிருத மகா உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆக தி.க. சொல்லும் இந்த மூன்றுமே திருடப்பட்ட கருத்துக்கள்.

சரி... இருக்கட்டும். 'துக்ளக்' தன் கொள்கையாக - நோக்கமாக எடுத்து வைக்கும் ஒவ்வொன்றும் தன் சுயபுத்தியிலிருந்தே சொல்லுவதாக நம்ப வேண்டும்.

'துக்ளக்கும்' சரி, பார்ப்பனக் கும்பலுக்கும் சரி, ஒன்றைச் சொல்லும்பொழுது ஒரு ஆதாரத்தையும் எடுத்துக் காட்டும் புத்தியே கிடையாது. மனம் போன போக்கில் உளறித் தொலைப்பதுதான் அவாளின் வழமை.

நாம் கொடுக்கும் பதிலடி ஒவ்வொன்றுமே ஆதாரம் பேசும் - அது அவாளின் ஆயுதத்தைக் கொண்டே நன்னா மொத்தி எடுக்கும். 'விடுதலை'யையும், 'துக்ளக்'கையும் படிக்கும் எவருமே இந்த உண்மையை அறிவார்கள்.

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை 'துக்ளக்' பின்பற்றி வருகிறதே; என்றைக்காகவது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம் என்று 'துக்ளக்' சொன்னதுண்டா?

மின்சார விளக்கை 'துக்ளக்' பயன்படுத்துகிறதே - தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சார விளக்கைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று குருமூர்த்தி எழுதிய துண்டா? ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார் என்று என்றைக்காகவது 'துக்ளக்' கும்பல் எழுதியதுண்டா?

மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது கட்டப்பட்ட மேம்பாலத்தின் வழியாகத்தான் காரை ஓட்டி வந்தோம் என்று எழுதியதுண்டா?

இந்த வார 'துக்ளக்'கின் அட்டைப் படத்தில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறப்பட்டுள்ளதே, அது என்ன துக்ளக்கின் சொந்த கண்டுபிடிப்பா? எங்கிருந்து வந்தது என்று குறிப்பிடாதது ஏன்?

அடேயப்பா - திருவள்ளுவர் இவ்வளவு உயர்வாக எழுதி இருக்கிறார் என்றால் - வள்ளுவரின் அப்பன் பார்ப்பான் என்று எழுதும் திமிர் பிடித்த கூட்டத்தின் அகம்பாவம் இன்னும் அடங்கவில்லை என்றால் - அது அடக்கப்பட்டே தீரும் - அந்த அளவுக்கு இளைஞர்கள் இப்பொழுது வீறு கொண்டு எழுந்துள்ளனர்.

திருவள்ளுவர் கூறியுள்ளதையும், புறநானூறில் கூறியுள்ளதையும் தன் கொள்கை என்று தி.க. கூறியுள்ளது என்பது குற்றச்சாட்டா? விமர்சனமா?

குற்றச் சாற்று என்றால் அதனை எதிர்த்து எழுதாதது ஏன்? விமர்சனம் என்றால் எந்த விமர்சனத்தையும் முன் வைக்காதது ஏன்?

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருவள்ளுவரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று 'துக்ளக்' கும்பலால் கூற முடியாது.

காரணம் கீதை என்ற உலக்கை அவர்கள் மண்டையில் ஒரு போடு போடும். நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் - சதுர் வருணம் 'மயாசிருஷ்டம்‘ என்றுதானே கீதையிலே கிருஷ்ணன் கூறுகிறார். அவர்கள் எப்படி குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்? கீதைக்கு எதிரான குறளின் மீதுள்ள ஆத்தி ரத்தை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கை யுடைய தி.க.வின் மீது காட்டுகிறார்கள் அவ்வளவு தான்!

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதையும் அவர் களால் ஏற்கவே முடியவே முடியாது.

கடலைத் தாண்டிப் போவதே தோஷம் என்று சாஸ்திரம் எழுதி வைத்திருக்கும் 'சாஸ்திராக்கள்' யாதும் ஊரே என்று சொல்ல முடியுமா?

"யாவரும் கேளிர்" என்றும் சொல்ல முடியாது. அவர்களுக்குள்ளேயே வடகலை, தென்கலை குஸ்திகள் கொஞ்சமா நஞ்சமா?

வடகலைக்காரனை தென்கலைக்காரன் கண்டால் சுவரில் முட்டிக் கொள்வானே - அதற்குப் பெயர் 'கண்டு முட்டு' - ஒருவன் இன்னொருவனைப் பற்றிக் காதில் கேட்டா லும் சுவரில் முட்டிக் கொள்வான் - அதற்குப் பெயர் “கேட்டு முட்டு‘.

இந்த யோக்கியதையில் யாவரும் கேளிர் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவாராம்?

தங்கள் கலாச்சாரத்துக்கும், சாஸ்திர சம்பிரதாயத்துக்கும் எதிராக இந்தப் புறநானூறு வரி இருப்பதால் இந்தக் கொள்கையுடைய தி.க.வின் மீது தீரா ஆத்திரம் அலை மோதுகிறது - அதன் எரிச்சல்தான் இந்தக் கேள்விப் பதில்.

திருவள்ளுவர் கூறுவதையோ, புறநானூறு கூறுவ தையோ தி.க. ஏற்றுக்கொள்கிறது என்பது எப்படித் திருட்டாகும்?

நாகையிலிருந்து அய்ம்பொன்னாலான புத்த விகாரத்தைத் திருடி சீறிரங்கத்துக் கோயிலுக்கு மதில் சுவர் எழுப்பினான் திருமங்கை ஆழ்வார் என்றால் அந்த நேரத்தில் கடவுட்டன்மையுடையவராதலால், அவர் செய்கையை யாரும் குறை கூறார் என்று திருட்டுக்கு தில்லு முல்லு வக்காலத்து வாங்கும் வருணாசிரமக் கும்பல் "ஒழுக்கம் பொதுச் சொத்து - பக்தி தனிச் சொத்து" என்ற கொள்கையுடைய திராவிடர் கழகத்தின் செயலை திருட்டு என்று கூறுவது பித்தலாட்டத் தகடுதத்தத்தைத் தான் குறிக்கும்.

பெண்களைப் பற்றி தத்துப் பித்து என்று உளறி நாலாப்பக்கங்களிலும் நையப்புடைக்கப்படுகிறார் திருவாளர் குருமூர்த்தி; இதற்கெல்லாம் மூல காரணமே இந்தப் பெரியாரும், தி.க.வும், வீரமணியும் தானே என்ற ஆத்திரம் சும்மா புரட்டிப் புரட்டி எடுக்கிறது. இந்த ஆத்திரத்தாலே மரை கழன்று போய் விட்டது போலும்!

அய்யோ பாவம் - நமது அனுதாபங்கள்!

மானத்தைப் பற்றி 'துக்ளக்' கூட்டம் பேசலாமா?


உலகமே ஒரு குடும்பம் என்கிறது மகா உப நிஷத் அதிலிருந்து தன் கொள்கைகளை திருடியிருக்கிறது தி.க. என்று எழுதுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்.

பரவாயில்லையே, மகா உப நிஷத்தை எல்லாம் படித்துவிட்டுத் தான் தி.க. எழுதுகிறது என்று ஒப்புக் கொண்டுவிட்டார் - அதுவரை பாராட்டவும் செய் யலாம். சரி, உலகமே ஒரு குடும்பம் என்று உங்கள் மகா உபநிஷத் கூறுகிறதே, அதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

ஒரே குடும்பம் என்று ஆகிவிட்ட பிறகு ஜாதி ஏன்? கோத்திரம் ஏன்? எல்லாம் ஒன்றாகிட வேண்டியது தானே! தி.க.வை மட்டம் தட்ட வேண்டுமானால் அவாளுக்கு மகா உபநிஷத் தேவைப்படுகிறது.

உபநிஷத்தைப் பற்றி கதை அளக்கிறார்கள் - இவை மூலமா? தழுவலா? இது பற்றி சுவாமி சிவானந்த சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

உபநிஷத்தை உண்டு பண்ணியவர்கள், புத்த பகவானது உயர்ந்த கொள்கைகள் அனைத்தையும், வேதமாகுமென்று, உறுதிப்படுத்துவதற்கு இந்த ஜாலத்தைக் காட்டி மக்களை மயக்குகிறார்கள்.

அல்லா உபநிஷத்து, கிறிஸ்து உபநிஷத்து என்றெல்லாம் கூட உண்டே!

உபநிஷத் சொன்னதைத்தான் தி.க. சொல்லுகிறது என்கிறதே 'துக்ளக்' - அதை நம்பினால் திகவை ஏன் எதிர்க்க வேண்டும்? ஆதரிக்க வேண்டியதுதானே!

உபநிஷத்தே திருட்டு என்கிறபோது, திருட்டைப் பற்றி ரொம்பத்தான் கவலைப்படுகிறது? இந்தக் கைபர்கள் கூட்டம். தி.க. கூறுவது உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது என்றால் திகவின் மானமே போய்விடும் என்கிறது. மானத்தைப் பற்றியெல்லாம் மகாபாரதக் கும்பலா எழுதுவது? புத்தரிடமிருந்து திருடியது என்றால் இங்கே மானம் போவது யாருக்கு?

- விடுதலை நாளேடு, 7 .9 .19

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

மறைமலை அடிகள் கருத்துரை

மறைமலை அடிகள் பேசுகிறார்...

ஹிந்தி ஆரிய தர்மத்தை அடிப்படையாகக் கொண் டது. ஆரிய தர்மம் வர்ணாஸ் ரம தர்மத்தை, சாதி வேறு பாடுகளை, சாதி உயர்வு தாழ்வுகளை அடிப்படை யாகக் கொண்டது. தமிழர் கலாச்சாரமோ இதற்கு முற்றி லும் மாறுபாடானது.

அப்படி இருக்க, ஜாதி வேற்றுமைகளையே அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி மொழியைத் தமிழ்நாட்டில் புகுத்துவதென்றால் இங்கு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வரும் ஒற்றுமை மனப்பான்மையைக் கெடுக்க ஆரியர்களால் செய்யப்படும் சூழ்ச்சி இது என்றுதானே கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் ஹிந்தி வேண்டாம் என் றால் சமஸ்கிருதம் படியுங்கள் என்று கூறுவதன் கருத்து இதுதானே! இரண்டும் மக்க ளுள் வேற்றுமை உணர்ச்சி களை வளர்க்கும் மொழிகள் என்பதுதான் இதற்குக் கார ணம். தமிழர்களிடையே தோன்றியுள்ள புத்துணர்ச்சியை, பகுத்தறிவு உணர்ச்சியைக் கெடுக்க, நாசமாக்க, தம்மா லியன்ற எல்லா வகையாலும் தொல்லை கொடுக்க முற் பட்டு விட்டனர் என்பதன் அறிகுறிதான் இது.

(பெரியாருக்குப் பாராட்டு)

இதை ஆரம்பத்திலிருந்தே உணர்ந்து கொண்டுள்ள பெரியார் இராமசாமி அவர்களும் ஆரியத்தை இந்நாட்டிலிருந்து எவ்வகையிலேனும் ஒழித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு முயற்சி செய்து வருகிறார்கள். இத் தொண்டு மிக விரைவில் வெற்றி காண இருக்கிறது என்பது இங்குக் கூடியுள்ள மக்கள் உணர்ச்சியால் நன்கு தெரியப்படுகின்றது. நான் சைவ சமயத்தில் பிறந்து விட்டேன். ஆகையால் இவருடன் ஆரம்ப காலத்திலிருந்தே ஒத்து வேலை செய்யும் வாய்ப் புக் கிடைக்காமற் போய் விட்டது.

சைவ சமயத்தவரைத் திருத்துவதையே எனது நோக்க மாகக் கொண்டு, சமஸ்கிருதம் கற்று சைவ சமய உண்மை களை ஆராய புகுந்தேன். பார்ப்பனர்களின் தந்திரங்களை, சூழ்ச்சிகளை அறிந்து சில வெளியீடுகளின் மூலம் அவைகளை அம்பலமாக்கினேன். பார்ப்பனர் தம்மை உயர் ஜாதி என்று சொல்லிக் கொள்ளத் தகுதியற்றவர்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கிக் காட்டினேன். இதன் பயனாய் பார்ப்பனர்கள் என்னை `வேத விரோதி என்றும் `பார்ப்பனத் துவேஷி என்றும் பழித்துக் கூறி எம்ம வரிடத்திலேயே எனக்குப் பகைமையை மூட்டி விட் டனர். இதனால் நான் எடுத்த காரியம் எதிர்பார்த்த பல னைத் தராமல் போய் விட்டது என்றாலும் இந்த 55 ஆண்டு களில் சுமார் 40 நூல்கள் வரை தமிழில் வெளியிட்டேன், ஆங் கிலத்திலும் சில நூல்கள் வெளியிட்டுள்ளேன். இவை கள் இளைஞர் உள்ளத்தில் ஓரளவுக்கேனும் எழுச்சியை உண்டாக்க பயன்பட்டிருக் கும் என்று நினைக்கிறேன். செல்வந்தர்களும் மடாதி பதிகளும் ஆரிய தாசர்களாய் ஆகிவிட்ட போதிலும் இந் நாட்டு இளைஞர்கள், தமிழ் அணங்குகள் யாவரும் பெரியார் சொற்படி அறப்போர் துவக்கி ஹிந்தியை ஒழிப்பதில் விரைவில் வெற்றிகாண வேண்டுமென்று கூறிக் கொண்டு என் தலைமை உரையை முடித்துக் கொள்கிறேன்.

-------------- 17.1.1948-இல் சென்னையில் நடைபெற்ற மாகாண இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்து மறைமலை அடிகளார் ஆற்றிய உரை

நன்றி : தமிழ் ஓவியா

16-9-1943 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது... ஒருவர், ‘‘திராவிட நாடு பற்றி தங்கள் கருத்து யாது’’ எனக் கேள்வி கேட்டார். அதற்கு அடிகள், ‘‘இந்தியா முழுவதுமே திராவிட நாடுதான்’’ என்றார்.

     நன்றி : பிரகாஷ்,  விகடன்

கடவுள், சமயம், கோயில், வழிபாடு, சமய நுல்களில் ஆழ்ந்த ஆர்வங்கொண்ட சிவத் தொண்டராம் அடிகள் தாம் பரப்பவிருந்த தமிழ் இன நாகரிக, மொழி சீர்திருத்தக் கருத்துக்கள் யாவற்றையும் ஈ.வே.ரா. பரப்பி வருவது கண்டு ஆழ்ந்த மகிழ்ச்சி கொண்டார்.

யான், ஆராய்ந்து எழுதி அரிதே அச்சிட்டு வெளிப்படுத்தும் கோட்பாடுகள் யாவும் கலைஞர்க்கும், புலவர்க்கும், பொது மக்களிற் சிறந்தார் சிலருக்குகே பயன் தருகின்றன. ஆனால், ஈ.வே.ராவின் கிளர்ச்சியோ சிற்றூர், பேரூர்களிலெல்லாம் பரவிப் பயன் விளைக் கின்றது. இதனால் எனது நோக்கங்களும், விருப்பங்களும் அவராலே எளிதில் எங்கும் பரவுகின்றன. என்னோக்கம் எனக்கு வருத்தம் தருதலின்றி எளிதே முற்றுரு கின்றன. ஆதலால், ஈ.வே.ரா. நெடிதினிது வாழ்க! அவர் முயற்சி வெல்க! என்று தம்மைக் காண வருவோரிடமெல்லாம் அடிகள் கூறவே, ஈ.வே.ராவை வாயார வாழ்த்திக் கொண்டிருந்தார்.
(நூல்: மறைமலை அடிகள் வரலாறு ஆசிரியர் மறை.திருநாவுக்கரசு

'கம்பராமாயணம் பற்றி அடிகள்’ என்று தலைப்பிட்டு அவர் எழுதுவன பின்வருமாறு :

நம் அடிகளோ, கம்பர் பாடல்கள் சிறந்த நல்லி சைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண் டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால், கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால் - ஆரவாரமான - ஏராளமான பொருளற்ற கற்பனை களால் வரைதுறையின்றி யாக்கப்பட்டவை என்றும், கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்டதென்றும், தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கெடுத்துவிட்டார் என்றும் கருதினார்...

அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக சமய - இன உணர்வுக்கு மாறான - கம்பராமாயணத்தைப் பயிலுதலும், அவைக்களங்களில் அதனை விரித்தெ டுத்து ஓதிப் பரப்புதலும் தவறென்று தம் சொற்பொழிவு களிலும், எழுத்துகளிலும் வெளியிட்டும் எழுதியும் வந்தார். (மேற்படி நூல், பக்.568).

ஆக, தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதை யால் கம்பர் கெடுத்துவிட்டார்; அதனால் கம்பராமாய ணத்தைப் பயிலுதலும் ஓதிப்பரப்புதலும் தவறென்று தமிழ்க்கடலாம் மறைமலையடிகள் சொன்னார். ‘தேவையற்ற அந்நூல் ஏன்? எரித்துவிடுங்கள்!’ என்று பெரியார் சொன்னார்.
நன்றி  : கவிஞர் தமிழேந்தி - செய்தி: தளபதி, மதுரை.

'தினமலரே' புரிஞ்சுண்டுதோ?'தமிழகத்தில் ஜாதியை, தன் காலத்தில் ஒழிக்கவே முடியாது' என்பதை, மறை முகமாக தன் அமைப்பினருக்கு உணர்த்தும் வகையில், திராவிடர் கழகத் தலைவரும், 'விடுதலை' நாளிதழ் ஆசிரியருமான, கி.வீரமணி பேச்சு:

ஜாதியை ஒழித்து, சமத்துவத்தை சமைப்பது தான், திராவிடர் கழகத்தின் கொள்கை, அதை சாதிக்கும் வரை, நம் போராட்டம் தொடரும். அந்த சாதனை நிறைவேறும் கால கட்டத்தில் நாங்கள் இல்லாமல் போனால், இளைஞர்களே... நீங்கள் அந்த லட்சியக் கொடியை உயர்த்திப் பிடித்து, சாதித்து காட்டுங்கள்.

'தினமலர்' 8.9.2019 பக்கம் 6

திராவிடர் கழகத் தலைவர் கூறியது உண்மைதான். இதில் 'தினமலர்' என்ன குறையைக் கண்டு பிடித்து விட்டதாம்?

ஜாதி ஒழிய வேண்டும் என்கிறதா? கூடாது என்கிறதா? முதலில் அதற்குப் பதில் சொல்லட்டும்.

ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகாலமாக ஆரிய நச்சு நோயால் ஏற்பட்ட ஜாதிப்பாம்பானது ஒரு நூற்றாண்டுக் காலத்தில் எவ்வளவோ நசுக்கப்பட்டுள்ளது. ஆணிவேரும் ஆட்டம் கண்டுள்ளது.

ஏன், 'தினமலர்' கிருஷ்ணமூர்த்திகள் கூட மொட்டையாகத் தான் பெயரைப் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. அய்யர் வா(ளை)லை ஒட்ட நறுக்கிக் கொண்டது ஏன்? அய்யரைப் போட்டுக்கொள்ள வெட்கப்படும்படி செய்தது யார்? தந்தை பெரியார் தானே - இயக்கம் திராவிடர் கழகம் தானே!

அந்த அளவுக்கு வீரமணிக்கு வெற்றிதானே! சட்டப்பூர்வ மாகவே ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு.

அது இன்றைக்கு நடைபெறவில்லை. அந்த அடிப்படையில் தான் திராவிடர் கழகத் தலைவர் சொல்லுகிறார். போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு  இருக்கிறது.

இதில் தோல்வி என்ற பேச்சுக்கு இடம் ஏது? ஜாதி ஒழிக்கப் பட வேண்டும் என்பது மனிதப்பண்பும், மனிதநேயமும், மனிதத்துவமும், உரிமையும் விரும்புவோர் கூறும் கருத்து.

இதில் 'தினமலர்' எந்த இடத்தில் நிற்கிறது என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லட்டுமே பார்க்கலாம்.

காலரா ஒழியவில்லை, ஒழியவில்லை, அம்மை ஒழிய வில்லை, ஒழியவில்லை, எய்ட்ஸ் ஒழியவில்லை, ஒழிய வில்லை என்று ஒருவன் மகிழ்ச்சியில் கூத்தாடுவானானால் - அவன் கடைந்தெடுத்த மனநோயாளியும், மனுதர்மத்தின் ஆசை நாயகனுமே ஆவான்.

என்ன இன மலரே புரிஞ்சுண்டுதோ?

- கருஞ்சட்டை

- விடுதலை நாளேடு, 12.9.19