பக்கங்கள்

ஒற்றைப்பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒற்றைப்பத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 செப்டம்பர், 2023

சாகு மகராஜ்





இன்று சாகுமகராஜ் பிறந்த நாள் (1902). மகாராட்டிர மாநிலத்தில் முதன் முறையாக இடஒதுக்கீடுக்கு வித்தூன்றிய பெருமகனார்மன்னர் சிவாஜியின் வழி வந்தவர்கோலாப்பூர் பகுதியை ஆண்டவர்.
அவர் செய்த மகத்தான ஒரு புரட்சியுண்டுதாழ்த்தப்பட்ட தோழர் ஒருவரைத் தேநீர் கடை திறக்கச் செய்துநாள்தோறும் நண்பர்களுடன்அதிகாரிகளுடன் அங்கு சென்று தேநீர் அருந்தி வந்தவர்.
நூறு ஆண்டுகளுக்குமுன் இந்தத் துணிவும்முற்போக்கும் அவரைச் சூழ்ந்திருந்தன என்பது சாதாரணமல்ல!  அண்ணல் அம்பேத்கர் அவர்களை அடையாளம் கண்டுபிற்காலத்தில் பெரிய தலைவராக வரக் கூடியவர் என்று தொலைநோக்கோடு கணித்தவர்அம்பேத்கர் அவர்கள் லண்டன் சென்று மேற்பட்டம் பெறுவதற்குத் துணை புரிந்தவர்.
அரசனை அந்தக் காலத்து பார்ப்பனர்கள் எப்படி நடத்தினர்நாள்தோறும் ஆற்றுக்குச் சென்று குளிப்பார் அரசர் சாகு மகராஜ்;  அப்பொழுது அரண்மனைப் புரோகிதப் பார்ப்பனர்கள் மன்னனுக்கு வேத மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.
ஆனால்அந்தப் புரோகிதர்களோ வேத மந்திரங்களை ஓதுவதில்லைமாறாகப் புராணங்களிலிருந்து ஓதி வந்தனர்காரணம் கேட்டபோதுசூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம்   என்ன கொடுமை!
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்நாள்தோறும் மன்னர் சாகு மகராஜ் ஆற்றுக்குக்  குளிக்கச் செல்லும்போது அரசாங்கப் புரோகிதரை அழைத்து வர அரண்மனையிலிருந்து ஆள் அனுப்பி வைக்கப்படுவது  வழக்கம்.
அந்த நேரத்தில் அந்தப் புரோகிதர் எங்கு இருப்பார் தெரியுமா?
தேவடியாள் வீட்டில் இரவு பூராவும் சல்லாபம்காலையிலோ குளிக்காமல் முழுகாமல் மன்னனுக்கு மந்திரங்களை ஓதுவார்!
இதுதான் பார்ப்பனர்களின் யோக்கியதை;  அவர்களுக்குள்ள தகுதியும் திறமையும் இதுதான்.
பிறப்பின் அடிப்படையில் உயர்ஜாதி என்ற நிலையைக் கற்பிக்கும் இந்து மதத்தில் ஒழுக்கத்துக்கும்உண்மையான தகுதிக்கும் இடம் எப்படியிருக்க முடியும்?
2002 இல் சாகுமகராஜ் அவர்களின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் நடைபெற்றதுமறைந்த நீதியரசர் சமூகநீதிப் போராளி பி.எஸ்..சாமி விழாவினை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கிவீரமணி அவர்கள் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  26.7.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

திங்கள், 8 பிப்ரவரி, 2021

'அறிவு நாணயம்'

ஒற்றைப் பத்தி : ‘அறிவு நாணயம்'

வீராதி வீரர் என்றும், சூராதி சூரர் என்றும், எதையும் ,எவரையும் விமர்சிக்கும் எழுத்தர் என்றும் தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளும் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி 'துக்ளக்' ஆண்டு விழாவில் (எல்லோருக்கும் அனுமதி கிடையாது. கை தட்டும் - ஜால்ராக்களுக்கு மட்டுமே அனுமதி - தஞ்சையில் வெட்ட வெளி மைதானத்தில் ஆண்டு விழா நடத்தி பட்ட அவமானம் போதாதா?) பேசியவை வாராவாரம் துக்ளக்கில்' வந்து கொண்டுள்ளன. இவ்வாரம் (10.2.2021, பக்கம் 11) வெளிவந்துள்ள பேச்சில் இடம் பெற்றிருப்பது என்ன?

"நீதிபதிகளாக வரவிரும்பி விண்ணப்பம் போடுபவர்களில் பலர், அரசியல்வாதிகளின் தயவையும் சிபாரிசையும் நாடி வருகிறர்கள்" (கை தட்டல்) என்று குருமூர்த்திவாள் பேசியதாக வெளிவந்துள்ளது.

அப்படியென்றால் இந்தப் பேச்சுக்காகத்தான் மன்னிப்பு வாங்கினாரா? உண்மையில் அவர் பேசியது என்ன?

"உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருப்பவர்கள் ஆட்சியிலிருக்கும் கட்சிக்காரர்களின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்களே!" என்று தானே பேசினார்.

அந்தப் பேச்சு பிரச்சினையான நிலையில் 'ஆம், நான் தான் அப்படிப் பேசினேன்' என்று அறிவு நாணயத்தோடு (மற்றவர்களைப் பார்த்து 'ஆண்மை'யிருக்கிறதா என்று கேட்டவராயிற்றே!) ஒப்புக் கொள்ளும் திராணியில்லாமல் மன்னிப்புக் கேட்ட மானமற்றதுகள் - வீராதி வீரர்கள் போல பேசலாமா, எழுதலாமா?

ஏற்கெனவே வாய் கொழுப்பில் பேசிவிட்டு பின் மன்னிப்புக் கேட்டு ஜகா வாங்கிய ராஜாக்கள் உண்டு.

பேசியது ஒன்று - 'துக்ளக்'கில் வெளிவந்தது வேறு ஒன்று. இதுதான் 'துக்ளக்'கின் நேர்மைக்கு அடையாளமா?

இதில் குறிப்பிடத்தக்கது என்ன வென்றால் 'அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்டதைக் கூட துக்ளக்கில்' வெளியிடும் யோக்கியதை இல்லை என்பது தான்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆசனத்தில் அமர்ந்திருந்த இரு பார்ப்பன நீதிபதிகளைப் பார்த்து 'பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு!' என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே - இந்தத் தர்ப்பைகள் எங்கே?

- மயிலாடன்

புதன், 1 ஜூலை, 2020

அக்கிரகாரம் தோன்றியது எப்படி!


‘தமிழ்த் தாத்தா' என்று கூறப்படும் உ.வே.சாமிநாதய் யர் தனது சுயசரிதையில் தன் சொந்த ஊரான உத்தமதான புரம் எப்படி உண்டாயிற்று என்ற விவரத்தை எழுதியுள் ளார்.

‘‘சற்றேறக் குறைய இரு நூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தங்களுடைய பரிவாரங்களு டன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். ஆங்காங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டு களித்தும், தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடை யில் தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து மைல் தூரத்தில் உள்ள பாபநாசத்துக்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம் போல உணவு முடித்துக் கொண்ட பிறகு, தாம்பூலம் போட்டுக்கொண்டு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்தி ருந்தார்.

தம்முடன் வந்தவர்களோடு பேசிக் கொண்டு, பொழுது போக்குகையில், பேச்சுக்கி டையே அன்று ஏகாதசியென்று தெரிய வந்தது. அரசர் ஏகாதசி யன்று ஒருவேளை மாத்திரம் உணவு கொள்ளும் விரதம் உள்ளவர். விரதத் தினத்தன்று தாம்பூலம் தரித்துக் கொள்ளும் வழக்கமும் இல்லை. அப்படி யிருக்க, அவர் ஏகாதசி என்று தெரியாமல் அன்று தாம்பூலத் தைத் தரித்துக் கொண்டார். எதிர்பாராதபடி விரதத்திற்குப் பங்கம் நேர்ந்ததைப்பற்றி வருந்திய அரசர், அதற்கு என்ன பரிகாரம் செய்யலா மென்று சில பெரியோர்களைக் கேட்டார். அப்பெரியோர்கள், ‘‘ஓர் அக்ரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேத வித்துகளாகிய அந்தணர் களுக்கு கல் வீடுகளோடு, பூமியையும் தானம் செய்தால், இந்தத் தோஷம் நீங்கும்'' என்றார்கள்.

‘‘இதுதானா பிரமாதம்? அப்படியே செய்துவிடுவோம். இதே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம்'' என்று அரசர் மனமுவந்து கூறி, உடனே அங்கே ஓர் அக்ரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி, வேதாத்தியயனம் செய்ய 48 பிராமணர்களை அருகிலும், தூரத்திலும் உள்ள ஊர்களிலி ருந்து வருவித்து, வீடுகளையும், நிலத்தையும் தானம் செய்தார். அந்த உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால், அவ்வூர் ‘‘உத்தமதானபுரம்'' என்னும் பெயரால் வழங்கலா யிற்று. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உத்தமதானபுரத் தில் வைதீக ஒழுக்கம் பிறழா மல் வாழ்ந்து வந்தார்கள். இந்த உத்தமதானபுரம் இன்னும் தன் பெயரை இழக்காமல் தஞ்சாவூர் ஜில்லாவில் பாபநாசம் தாலுகாவில் ஒரு கிராமமாக இருந்து வருகின்றது'' என்று  உ.வே.சாமிநாதய்யர் எழுதி யுள்ளார்.

ஒரு முட்டாள் அரசனின் மதக் கிறுக்குத்தனத்திற்கு - மத போதைக்கு இலாபப் பரிசு யாருக்கு அமைகிறது என்பது தான் முக்கியமாகக் கவனிக் கத்தக்கது.

வாளெடுத்துப் போர் புரிந்து எதிரிகளின் தலை சாய்த்து வாகை சூடும் மன் னர்கள், தர்ப்பைப் புல் முன் னாலே தலைசாய்ந்த நிலை யைத்தானே தந்தை பெரியார், நம் மக்களுக்குப் பாடம் போல் சொல்லிக் கொடுத்தார். இன் றளவும் திராவிடர் கழகம் அத னைத்தானே செய்து கொண்டு இருக்கிறது.

அக்ரகாரங்கள் எப்படித் தோன்றின என்பது இப் பொழுது புரிகிறதா?

- மயிலாடன்

திங்கள், 29 ஜூன், 2020

அண்ணாவும் - அய்யரும்!


‘‘தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழ ரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற் றாலும், சங்கநூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அத னைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தின்மீது தான்!
- அறிஞர் அண்ணா
(‘திராவிட நாடு', 2.11.1947,
பக்கம் 18)
ஏதோ வெறுப்பில் அண்ணா எழுதியதில்லை. உண்மையின் உந்துதலின் நடைமுறைக் காணலில் உரைத்ததுதான். இதோ ஓர் எடுத்துக்காட்டு:
கோட்டையூர் இராமநாதன் -உமையாள் 60 ஆம் ஆண்டு திருமணத்தில் அழகப்பச் செட்டியார் ஒரு லட்சத்து ஒரு ரூபாயை திருவிதாங்கூர் சர்வ கலா சாலையில் தமிழ்க் கல் விக்கு ஒரு நிறுவனம் ஏற்படுத் திடவேண்டும் என்று சர்.சி.பி. ராமசாமி அய்யரிடம் கொடுத் தார். அதனைப் பெற்றுக் கொண்ட சர்.சி.பி.யோ, ‘‘தமிழ் வளர்ச்சிக்கும், வடமொழி வளர்ச்சிக்கும் கொடுப்பதாக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று, அதே கூட்டத்தில் பேசி இருக் கிறார்.
இதுபற்றி ‘விடுதலை' ஒரு தலையங்கம் தீட்டியது.
அதில் ஒரு பகுதி இதோ:
‘‘பணம் கொடுத்தவர் தமி ழுக்கு என்று கொடுத்தால், வாங்கிக் கொண்டவர் வட மொழிக்கு என்று சொல்லத் தைரியம் வருமா என்று யோசித்துப் பாருங்கள். இந்த நாடகம் நடக்கும்போது அங்கு இருந்த தமிழ் மக்கள் யார் யார் என அறிய வாசகர்கள் ஆசைப்படக் கூடும். செட்டி நாட்டு ராஜா அவர்கள், செட்டி நாட்டு குமார ராஜா அவர்கள், சர் ஷண்முகம் அவர்கள் உள்பட அனேக ஆயிரம் தமிழ் மக்களும் ஆவார்கள்.
இதில் 1,00,001 ரூபாய் கொடுத்த செட்டியார் அடைந்த ஏமாற்றத்தை நாம் குறிப்பிட வரவில்லை. 1,00,001 ரூபாயைப் பெற்றுக் கொண்டு, இத்தனைப் பேர் முன்னிலை யில், ‘‘நான் இதை சமஸ்கிருத வளர்ச்சிக்குக் கொடுத்த அடை யாளமாகக் கருதுகிறேன்'' என்று சொன்ன சர்.சி.பி.யின் வீரத்தனத்தை மெச்சுகிறோம்.'' (இது 14.9.1943 ஆம் தேதி, ‘மெயில்' ஏட்டில் இருக்கிறது).
இந்த மாதிரி ஒரு வீரன் தமிழரில், ‘‘வீரத் திராவிடரில் இருக்கிறார்களா?'' என்று கேட் கிறோம். இந்த மாதிரி இல்லா விட்டாலும், ‘‘ஓ! சர்.சி.பி. அவர் களே, தாங்கள் செட்டியார் சொன்னதை சரியாகக் கவ னிக்கவில்லை போல் இருக் கிறது. அவர் ரூ.1,00,001 ரூபாய் தமிழுக்குக் கொடுத்தார்'' என்று ஞாபகப்படுத்தவாவது ஒரு தமிழன், சுத்தத் தமிழன் யாராவது இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்'' (‘விடுதலை' 14.9.1943, தலை யங்கத்திலிருந்து).
அண்ணா சொன்னதை இந்த இடத்தில் ஒருமுறை சிந் தித்துப் பாருங்கள் - பொருள் புரியும்!
- மயிலாடன்
- விடுதலை நாளேடு 29 6 20

ஞாயிறு, 14 ஜூன், 2020

இந்தியாவின் பிரதானமான பிரச்சினை ஜாதி -வீரேந்திரகுமாரின் பேட்டி (கேரளா)

'மாத்ருபூமி' நாயகரின் பேட்டி
கேரளத்தின் முதுபெரும் சோசலிஸ்டுகளில் ஒருவரும், 'மாத்ருபூமி' என்ற கேரளாவின் புகழ் பெற்ற ஏட்டின் தலைவ ராகவும், நிருவாக இயக்குநராக இருந்தவருமான தோழர் வீரேந்திரகுமாரின் பேட்டி ஒன்று மொழி பெயர்க்கப்பட்டு 'இந்து தமிழ்திசை' ஏட்டில் நடு பக்கக் கட்டுரையாக வெளி வந்தது (6.6.2020) (அண்மையில்தான் இவர் மறைந்தார்).
அந்தக் கட்டுரையில் வீரேந்திர குமார் அளித்துள்ள பேட்டியில் சில முக்கியமான தகவல்கள் வெளிவந்துள்ளன; அவை பல சிந்தனைக் கணைகளையும் ஏவி விட்டன.
(1) 'இந்தியாவின் பிரதானமான பிரச்சினை ஜாதி  - அதற்கு முகம் கொடுக்காமல் சமூகத்தின் ஆழமான பிரச்சினைகளை நம்மால் கையாள முடியாது என்பதை முழுமையாக உணர்ந்தேன்' என்று கூறியுள்ளார்.
- இந்தக் கருத்து எவ்வளவு ஆழமானது - உண்மையானது. பிறப்பின் அடிப்படையில் பேதம் என்ற கொடுமையின் கேவலமான பெயர்தான் ஜாதி - எந்தப் பேதங்களும் இந்தக் கோர வடிவத்தின் முன் நிற்க முடியாது.
அதனால்தான் பகுத்தறிவு பகலவனான தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பையே தன் முதன்மையான முன்னணிப் பணியாகக் கொண்டு, கண்ணின் கடைசி இமையைச் சிமிட்டும் வரை பெரும்பாடுபட்டார்.
ஜாதிக்கு மூல ஆதாரம் கடவுள், மதம், வேதம், ஸ்மிருதி, இதிகாசம், புராணங்கள் என்ற பட்டியல்  நீளும் நிலையில், அவற்றை எல்லாம் நிர்மூலப் படுத்தும் மகத்தான பணியில் தந்தை பெரியார் ஈடுபட்டார் - அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகமும் இந்த வகையில் எந்த விலை கொடுத்தும் ஜாதியை ஒழித்திட ஓயாது உழைத்து வருகிறது.
இன்னும் சொல்லப் போனால் மதப்பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஜாதியைப் பாதுகாத்து வருகிறது.
அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி ஒரு மாநாட்டின் மூலம் வேண்டுகோள் விடுத்தும், அதனை செயல்படுத்த மத்திய அரசு முன் வராத நிலையில், ஜாதியைப் பாதுகாக்கும் சட்ட எரிப்புப் போராட்டத்தினை நடத்தினார் தந்தை பெரியார். பல்லாயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டு வரை கடுங்காவல் அனுபவித்தனர்.
ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் ஒரு நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு இதுவரை எந்தவித பதிலுமில்லை.
இந்த நிலையில் இன்றைக்கு மத்தியிலும், பல மாநிலங் களிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடிய பிஜேபி என்னும் அமைப்பு நாட்டில் இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் - ராமராஜ்ஜியத்தை  நிறுவப் போகிறோம் என்று பிரகடனப்படுத்துவதன் பொருள் என்ன?
ஜாதி அடிப்படையிலான சமூக அமைப்பை மேலும் கெட்டிப்படுத்துவதுதானே! இப்பொழுதே அதன் செயல்பாடு களை நுகரவும் முடிகிறது. உயர் ஜாதியினர்களை உயர் பதவிகளில் நிலை நிறுத்துவது  - ஜாதிகளின் காரணமாக நீண்ட  காலமாகக் கல்வி வாய்ப்பு அறவே மறுக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் வேரை வெட்டும் விபரீத வேலைகளில் ஈடுபடுவது  எதைக் காட்டுகிறது?
மீண்டும் மனுதர்ம ஜாதி அடிப்படையிலான ஒன்றை நிறுவுவதுதானே இதன் அடிப்படை! இந்த நிலையில் இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று அறிவு நாணயமாக எண்ணும் எவரும் - அவர்கள் எந்த சாரிகளாக இருந்தாலும் அவர்களின் தலையாய பணி ஜாதி ஒழிப்புப் பணிதானே!
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த முன்னோடிகளுள் ஒருவரும், தலை சிறந்த தொழிற்சங்க வாதியுமான சிந்தன் அவர்கள் ஒரு தொழிற்சங்க மாநாட்டில் மனந்திறந்து தன் வேதனைகளை வெளிப்படுத்தியதுண்டு.
தொழிற்சங்கங்களைக் கட்டுவதில்கூட ஜாதி பெரும் தடையாக உள்ளது என்று சொல்லவில்லையா?
ஜாதி ஒழிப்பில் கூர்மையான நோக்கும், இலக்கும் உடைய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களின் பெயர் களில்கூட - குறிப்பாக வட புலங்களில் ஜாதியும் பின்னோட் டமாக இருப்பதை எண்ணிப் பார்த்தால் இந்த ஜாதிதான் எத்தகைய மூர்க்கமானது  - கொடூரமானது - இதனை ஒழிக் காமல் இந்த நாட்டுக்கு வேறு எது முதன்மையான - முக்கியமான தொண்டாக இருக்க முடியும்?
மறைந்த வீரேந்திரகுமாரின் கருத்து மிக முக்கியமானதே!
-  கவிஞர் கலி.பூங்குன்றன்

திங்கள், 1 ஜூன், 2020

ஒற்றைப் பத்தி - ‘ஆண் - பெண்' பெரியார்!


ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் வல்லுநர் கார்டிலியா ஃபைன் என்பவர் ‘‘பாலினம்பற்றிய பொய் நம் பிக்கை'' எனும் நூலை எழுதியுள்ளார்! ஆண் - பெண் ஆகியோரிடையே உள்ள வேற்றுமைகளுக்குக் காரணம் அவர்களை வளர்க்கும் முறை தான் என்றும், பிறப்பின் இயல்பு அல்லவென்றும் அந் நூலில் விளக்கப்பட்டுள்ளது.
ஆண் - பெண்ணுக்கு இடையில் பெரும் அளவிலான நரம்புச் செயல்பாட்டு வேறு பாடுகள் மட்டுமே இருக்கலாம் என்றும் அந்நூல் கூறுகிறது.
இதே கருத்தை சிகாகோ மருத்துவப் பள்ளியில் உள்ள விசி எலியட் என்பவரும் தெரிவிக்கிறார். ‘அறிவு வேற்று மையைக் குழந்தைகள் முன் னோர்கள் அல்லது பெற்றோர் களிடம் இருந்து பெறுவ தில்லை. அறிவை அவர்கள் வளர்ப்பிலேயே பெறுகிறார் கள், கற்கிறார்கள்.
ஒரு சிறுவன் அல்லது ஒரு சிறுமி எவ்வாறு வளரவேண் டும் என எதிர்பார்த்து நாம் வளர்க்கிறோமோ அதற்குத்தக அவர்கள் உருவாகிறார்கள். ஆம், சிறுவர் - சிறுமியர், ஆண்கள் - பெண்கள் வேறு பட்டவர்கள். ஆனால்,  இந்த வேற்றுமைகளில் மிகப்பெரும் பாலானவை மிகக் குறைந்த அளவானவை.
‘ஆண்கள் செவ்வாய்க் (மார்ஸ்) கோளில் இருந்து வந்தவர்கள்; பெண்கள் வெள்ளி (வீனஸ்) கோளில் இருந்து வந்தவர்கள் எனும் அளவிற்கு அந்த வேற்றுமை கள் இல்லை' என்கிறார் விசி எலியட்.
இவ்வளவும் வெளிவந்தது ‘விடுதலை' ஏட்டில் அல்ல - ஓர் ஆங்கில நாளேட்டில்.
இதில் அடுத்துவரும் கடைசிப் பத்திதான் முக்கியம்.
அது இதோ:
Here we must recollect what Periyar said that the Male and Female Children should not be brought up in different ways considering the small differences found between them, but they should be brought up in same manner providing same food, dress, education, sports games and work to both of them.
‘The Times of India', 17.8.2010
உடல் உறுப்புகளில் உள்ள ஒன்றிரண்டு வேற்றுமை களைக் கொண்டு ஆண் - பெண் குழந்தைகளை வெவ் வேறு வகையில் வளர்க்கக் கூடாது என்றும், ஒரே வகை யான உணவு, உடை, கல்வி, விளையாட்டு, வேலை முத லியவற்றை அவர்கள் பெற வேண்டும் என்று பெரியார் ஈ.வெ.ரா. வற்புறுத்தியதை நினைவு கூர்க என்கிறது அந்த ஆங்கில ஏடு.
‘‘பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்று அழைக்காமல், ஆண் என்றே அழைக்கவேண்டும் - உடை களை ஆண்களைப் போலவே கட்டுவித்தல் வேண்டும். ஆணா - பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாத மாதி ரியில் தயாரிக்கவேண்டும்.''
- தந்தை பெரியார்
‘குடிஅரசு', 15.9.1946)
- மயிலாடன்