பக்கங்கள்

திங்கள், 30 நவம்பர், 2020

பெரியார் இந்தியருக்கு எதிரானவரா?அம்பேத்கர் இந்திய கலாச்சார விரும்பியா?


எத்தர்களை

இரட்டைமலை சீனிவாசன்

பார்ப்பனர்கள் தமிழர்களா?

செவ்வாய், 24 நவம்பர், 2020

மனித உருவில் நடமாடிக் கொண்டிருக்கும் மனிதநேய உயிர்க்கொல்லிக் கிருமிகள்

 ஜாதியையும் ஒருபடி தாண்டி தீண்டாமையையே ஆதரிக்கும் மனிதநேய உயிர்க்கொல்லிக் கிருமிகளின் உற்பத்திப் பீடம்தான் இந்த சங்கர மடங்கள்.



தீண்டாமை க்ஷேமகரமானது ('ஸ்ரீ ஜெகத் குருவின் உபதேசங்கள்' - இரண்டாம் பாகம்) என்கிற அளவுக்கு மனித குல வெறுப்பாளர்தான் இவர்களின் இந்த ராஜகுரு.
தீண்டாமை ஒழிப்புக்காகக் காந்தியார் காஞ்சி மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியை கேரள மாநிலம் பாலக்கோட்டில் போய் சந்தித்தார். காந்தியாரை எந்த இடத்தில் உட்கார வைத்து சந்திரசேகரேந்திரர் சந்தித்தார் தெரியுமா? மாட்டுக் கொட்டகையில் (ஆயிரம் இருந்தாலும் காந்தியார் சூத்திரர் தானே!) தான் சந்தித்தார்.
இதுகுறித்த தகவலை "தமிழ்நாட்டில் காந்தியார்" (பக்கம் 575, 576) தெளிவுபடுத்துகிறது.
"16.10.1927 அன்று பாலக்கோட்டில் மாட்டுக் கொட்ட கையில் சங்கராச்சாரியாரைச் சந்தித்த காந்தியாரிடம் சங்கரச்சாரியார் கூறுகிறார் - ஹிரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியி ருக்கின்றது என்றும் ஸ்வாமிகள் (காஞ்சி சீனியர் சங்கராச்சாரியார்) காந்தியடிகளிடம் தெரிவித்தார்."
இந்தச் செய்தியைப் படிக்கும் பொழுது அட இப்படியும் மனித உருவில் நடமாடிக் கொண்டு இருக்கிறார்களே என்று எண்ணத்தானே தோன்றும்.
நாம் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கி றோம் என்ற உழைக்கும் மக்களின் உணர்வைப்பற்றிக் கவலைப்படவில்லை. தீண்டாமையை அனுசரிக்கும் மக்களின் மனம் நோவது பற்றிதான் கவலையாம் - இந்தப் பேர்வழிகளுக்குப் பெயர்தான் ஜெகத் குருவாம் - புடலங்காயாம்!
- கவிஞர் கலி.பூங்குன்றன் ( கட்டுரையின் ஒரு பகுதி)
- விடுதலை நாளேடு, 24.11.18