பக்கங்கள்

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்????


*
நேரம் ஒதுக்கிப் படிக்கவும்.
மறைக்கப்பட்ட வரலாறுகள்:---
*
சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்....
*
நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா,மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது...
*
அப்போது,நாடோடிகளாக,ஆடு,மாடுகளோடு வந்த ,வெளிறிய ஆரியர்கள் ..இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்...
*
நீண்ட  காலப் போரில் ஈடுபட்டனர்.நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து,அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்...
*
வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து...சில ராஜ்யங்களைக் கைப்பற்றினர்..
*
பிறகு வேதங்களைச் சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..
*
பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளைப் பலியிட்டு, யாக குண்டத்தில் சிறிது போட்டு யாகம் வளர்த்தனர்...பலியான மிருகங்களை சமைத்து விருந்துண்பார்கள்.
*
ரிக் வேதங்களில் ,மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிடப் பட்டுள்ளது..
*
மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்..
*
பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து, அரசர்களை, மக்களை அடிமை படுத்தினார்கள்.
*
அரசவைகளில் அலோசகர்களாக இருந்து, மறைமுகமாக ஆட்சி செய்தனர்...
*
பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினர்...
*
அப்போது, சாக்கிய குலத்தைச் சார்ந்த சித்தார்த்தன்...
*
தந்தை பெரியார் போல், சடங்கு,யாகம், உயிர்ப் பலி அனைத்தையும் எதிர்த்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..
*
அதன் பிறகு தான்,புத்த மதம் உருவாகி வளரத் தொடங்கியது...
*
புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன....
*
சாம்ராட் அசோகா,கலிங்கப் போருக்குப்வபின் மனமாற்றம் அடைந்து, புத்தம் தழுவினார்..
*
பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, மூடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தார்....
*
அப்போது ,வாழ்விழந்த ஆரியர்களுக்கு மெளரிய வம்ச மன்னர்கள்,வரிச் சலுகை வழங்கி, அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி, காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கியத்துவம் தரப்பட்டது...
*
இந்தியா, இலங்கை,ஆப்பிரிக்கா,சீனா, மங்கோலியா,ரஷ்யா,தென் கிழக்கு ஆசிய நாடுகள்வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது...
*
700 வருடம் ஆட்சியில் இருந்த மெளரிய பேரரசு ,இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது...
*
புத்த மதத்தை அழிக்க முடியாததால், ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்..
*
இந்திய முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு, மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர்..சமணமும் செல்வாக்கோடு இருந்தது.
*
அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமன மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து,புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்..
*
பிராமணர் உருவாக்கிய புத்தமதப் பிரிவிற்கு "மஹாயானம் புத்தம்" என்றும்,
*
உண்மையான புத்த கொள்கைகளைப் பின்பற்றியவர்களின் பிரிவைக் குறிக்க "ஹீனயானம்" என்றும் அழைத்தனர்.
*
ஹீனயானம் என்பது ஈன பிறவி..அதாவது தாழ்ந்த ,குறையுடைய புத்தம் என்ற பொருளில், இகழ்ந்தனர்..
*
புத்த மதத்தை அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்...
*
மெளரிய வம்சப் பேரரசின், இறுதி மன்னன் பிராகிருதன்,இவர்,
*
புஷ்ய மித்ர சுங்கன் என்ற, ஆரிய இனப் படைத் தளபதியால், சூழ்ச்சியால் கொல்லப்பட்டார்....
*
புஷ்ய மித்ரன் ,சுங்க வம்சத்தை நிறுவினான் ..
*
அப்போது, மீண்டும் வேத மதம் எழத் தொடங்கியது...
*
இந்தக் கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு..
*
புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன...
*
புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில், புத்த பிக்ஷுக்களி்ன் தலைக்குப் பரிசுகள் அறிவித்து, ஒரு இனப் படு கொலையை நடத்தினான்..
*
எப்படியென்றால்,புத்த பிக்ஷுக்களின் தலை, வீட்டின் முன்புறம் தொங்கவிடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.
*
அந்த வழக்கம்  தான்,இப்போது நாம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது..
*
குப்த பேரரசு உருவான பிறகுதான் மிகுந்த எழுச்சி பெற்றது ,வேத மதம்... புத்தமும்,சமணமும் திட்டமிட்டே அழிக்கப் பட்டன.
*
அந்தக் காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்..
*
ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்துக் கதைகள் எழுதப்பட்டன...
*
"சுரா" என்ற மது பானத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல கொள்கைகளைப் பின்பற்றி வந்த நாக பௌத்தர்கள் , அசுரர்கள் எனப்பட்டனர்...
*
அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பானத்தை அருந்தாதவர்கள் என்று பொருள்.(உங்கள் புரிதலுக்காக, சுத்தம்Xஅசுத்தம் என்ற எதிர்ச்சொல்லின்  பொருளைப் பாருங்கள்.)
*
நல்லெண்ணம் கொண்ட ,
நாக வம்ச அரசர்களைக் கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த, கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்..
*
இந்திய முழுமையும் வேத மதம் பரப்பப் பட்டது...
*
அரச மரத்தடியில் உள்ள புத்தர் சிலைகளை எல்லாம்,அழிக்க வேண்டும் என்பதற்காக, அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி, யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் போட்டு அழித்தனர்..
*
அது தான், தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.
*
அழகான புத்த விகார் களை அசிங்க படுத்த, விகார் என்றால், விகாரம் என்றும் அசிங்கமான ,அருவருப்பான என்ற பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது.
*
புத்த பிக்சு க்களை இகழ்வதற்காக,
அவர்களைப் பிச்சை என்று அசிங்கப்படுத்தி, பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்..
*
மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்..
*
வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.
*
அந்தக் கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத ,பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள், புத்த மதத்தைத் தொடர்ந்து பின்பற்றியதால்...
அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
*
அதாவது, புத்தரின் பஞ்ச சீல கொள்கையைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்...
*
அவர்கள் புத்த மதத்தைத் தழுவி இருந்ததால் தான், பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்...
*
தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்..
*
சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்..
*
பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களைப் பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்...
*
பிறகு ,ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகளாக்கப்பட்டு...
*
இழி தொழில் செய்யப் பணித்தனர்..
*
அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு,இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல், உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.
*
இதையே காரணம் காட்டித்
தீண்ட தகாதவர்களாக, பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.
*
"பஞ்சமர்களை" (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை "இந்து" மதத்தில் சேர்க்கவும் இல்லை.
*
1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக,இந்து மனு தர்ம சாத்திரம் தான் ,இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்துவந்தது...
*
அதனால் தான்...
*
சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்...
*
வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும் ,
*
சட்டடத்தை மாற்றி அமைத்தனர்.
*
பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது...
*
அதுவும் வேதம் , கிரக வானவியல்,புரோகிதம் ஜோதிடம்,புராணங்கள் போன், சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படாத கல்வி முறைகள் இருந்ன...
*
இதைப் பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி ,பள்ளிக் கல்வி முறையை ஏற்படுத்தினார்..
*
இதற்கு, இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது...
*
மேலும் , ஆங்கிலேயர்கள்  அனைவருக்கும் ஒரே வகையில் குற்றத் தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்..
*
இதற்கு முன்பு வரை, பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..
*
1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது,  இந்து மதத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி போராட்டம் செய்தனர்..(சிப்பாய் கலகம்)
*
இது போல, இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான் ...
*
பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும ,
*
உயர் சாதி இந்துக்கள் " சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை" எனக் கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்..
*
எனவே ,இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை...
*
உயர் சாதி இந்துக்கள்,வருனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்..
*
அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு...
*
அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்..
*
அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்..
*
இந்து சட்ட மசோதாவின் அம்சங்கள்:--
------------------------------------------------------------

1.பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில்  இட ஒதுக்கீடு.
2.பெண்களுக்கு கல்வியுரிமை.
3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.
4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.
5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை
6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.
*
பிறகு, மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது...
*
இது எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கும் எதிரான பதிவு இல்லை ....
*
உண்மை வரலாறு மட்டுமே...
*
இவை அனைத்தும் மக்களிடையே மறைக்கப்பட்டுள்ளன...
*
சுருக்கமாக எழுதி  உள்ளேன்.By செந்தமிழன்
*
ஆதார நூல்கள்:----
--------------------------
*
1.இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் ,
அழிந்தனவும்.- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா
*
2.அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.
*
3.இந்திய தத்துவ இயல்- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.
*
4.ரிக் வேத கால ஆரியர்கள்-ராகுல சாங்கிருத்தியாயன்.
*
5.உலக வரலாறு-ஜவகர்லால் நேரு.
*
6.யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.
*
7.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு  பொன்னேடுகள். வீர.சாவர்க்கர்.
*
8.பாகியான்.
*
9.புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் - உ. வே .சாமிநாதர்.
*
10.அபிதான சிந்தாமணி-சிங்கார வேலன்.
*
11.இந்தியாவின் வரலாறு- பொன்காரத் லேவின்.
*
12.அசோகர் இந்தியாவின் பௌத்த பேரரசர்- வின்சென்ட். எ.ஸ்மித்
*
13.உலகாயுதம் - தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.
*
இன்னும் பல வரலாற்று ஆய்வாளர்கள்  நூல்கள் உள்ளன...
*
இன்று வரை யாராலும் இந்த வரலாறை மறுத்து கூற இயலவில்லை என்பது தான் உண்மை.
*

மீள் பதிவு

இந்திய கணசங்க கட்சி முகநூல்

புதன், 19 ஏப்ரல், 2017

அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள்!

அம்பேத்கரைப்பற்றி தெரிந்துகொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டுமானால், அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்தை தழுவினார் என்பது மட்டுமல்ல, அதில் அவர் எடுத்துக்கொண்ட 22 உறுதி மொழிகள் இருக்கிறது பாருங்கள், அதனை அவரே தயாரித்தார்.

அம்பேத்கர், அக்டோபர் 15, 1956 அன்று நாக்பூரில் பவுத்த சமயத்தைத் தழுவியபோது ஏற்றுக்கொண்ட 22 உறுதிமொழிகள்.

1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.

2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.

3. கணபதி, ‘கவுரி’ மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.

4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.

5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.

6. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட்டேன்.

7. புத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறமாட்டேன்.

8. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.

9. மானுட சமத்துவத்தை நம்புவேன்.

10. சமத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.

11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவேன்.

12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்

13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.

14. பொய் பேச மாட்டேன்.

15. களவு செய்ய மாட்டேன்.

16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.

17. மது அருந்த மாட்டேன்.

18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.

19. மனித நேயத்துக்கு முரணான, சமத்துவம் இல்லாத கேடு கெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பவுத்தத்தை தழுவிக் கொள்கிறேன்.

20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.

21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.

22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.

என்று உறுதி மொழி எடுத்தார்.

இதுதான் மறைக்கப்பட்ட பவுத்தத்திற்குப் புத்தொளியை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான் சேர்ந்தபோது கொடுத்திருக்கிறார்.

-விடுதலை,19.4.17

சனி, 1 ஏப்ரல், 2017

வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள்




முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பாக முதன்முதலில் வருண அமைப்பை எதிர்த்து பகுத்தறிவுச் சிந்தனை அடிப்படையில் குரல் கொடுத் தவர் கவுதம புத்தர் (கி.மு.500) ஆவார். அவரைத் தொடர்ந்து மகாவீரர் திருவள்ளு வர் (கி.மு.31) அதேபோன்று 900 ஆண்டு களுக்கு முன் வைதீக மத ஆச்சாரங் களையும் தீண்டாமைக் கொடுமைகளை யும் கண்டித்தவர் ஆதிசங்கரரும், இராமா னுஜரும். தொடர்ந்து கபிலர், திருமூலர், அசோகர் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகளா வர்.
அந்த வரிசையில் 19ஆம் நூற்றாண்டில் வருண அமைப்பை எதிர்த்தும் மனித நேயத்தை வலியுறுத்தியும் சமத்துவ - சமதர்ம - பொது உடமை - சீரதிருத்தக் கருத்துகளையும் மூடநம்பிக்கைக்கு எதி ரான பகுத்தறிவுச் சிந்தனை கருத்துகளை யும் தமது படைப்புகளால் முன்வைத்த முன்னோடி தத்துவஞானி வள்ளலார் இராமலிங்கர் (1816-1874) என்பதனை இவ் ஆய்வுக் கட்டுரையில் காண்போம்.
சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி வள்ளலார்
வள்ளலார் தம் படைப்புகளாக 6000-க் கும் மேற்பட்ட அருட்பா பாடல்களையும் கீர்த்தனைகளையும் கன்னித்தமிழில் அரசியல் - சமூகம் - பொருளாதாரம் - கலை இலக்கியம் - பண்பாடு  - மருத்துவம் - சமயம் - மதம் - சமரசம் - தேசியம் - பக்தி,  முக்தி, சித்தி என அனைத்து துறைகளோடு சமூக சீரதிருத்த  பகுத்தறிவுச் சிந்தனை களையும் உள்ளடக்கிய சமரச சுத்த சன்மார்க்க கொள்கைகளாகப் பாடியுள் ளார். அந்த வகையில் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தையான பெரியார் அவர்களுக்கு முன்னோடியாக வள்ள லாரை அவரது படைப்புகளிலிருந்து ஒப் பிடலாம்.
வள்ளலார் தாம் வாழ்ந்த 50 ஆண்டு களில் முதல் 40ஆண்டுகள் வழிபாட்டுத் துதிப் பாடல்களையே பாடினார். இறுதி 10ஆண்டுகளில் தமது சிந்தனைகளில் பகுத்தறிவு தெளிவு பெற்று சமூக சீர் திருத்தத் திருப்புமுனை ஏற்பட்டு உருவ மற்ற வழிபாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்து மனிதநேயத்தை போதித் தார். மேலும் ஜாதி சமயப் பூசல்களையும், மத வேறுபாடுகளையும் கடுமையாகச் சாடினார். மூடநம்பிக்கைகளைக் கண்டித் தார் சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்தார். அதன் வெளிப்பாடே ஆறாம் திருமுறை யில் காணும் அரும்பொருளாக, சமூக சீர்திருத்தக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
நால்வருணம் ஆசிரமம் ஆனநம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மெய்வருணம் தோல்வருணம் கண்டறிவா ரிலைநீ
விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே
(திருவருட்பா பாடல்:4174)
மனிதநேய-பகுத்தறிவுச் சிந்தனையின் திறவுகோல் வள்ளலார்
இதுமாதிரியான புரட்சிக் கருத்துகள் இடம்பெற்றிருந்த வள்ளலாரின் படைப்பு களைக் கண்ணுற்ற தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கக் கருத்து களுக்கு வித்தானது அருட்பா எனக்கூறி ஆறாம் திருமுறையிலிருந்து 100 பாடல் களைத் திரட்டி 1935இல் தமது குடிஅரசுப் பதிப்பகத்தின் 3 ஆவது வெளியீடாக ‘இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு’ எனும் பெயரில் புலவர் சாமி.சிதம்பரனார் மூலம் தொகுத்து வெளியிட்டார். அதிலி ருந்து வள்ளார் படைப்பின் ஆறாம் திருமுறைகளில் காணும் சமூக சீர்திருத்த - பகுத்தறிவுக் கருத்துகளடங்கிய பாடல் களை திராவிட இயக்க மரபு வரித்துக் கொண்டது எனலாம்.
உள்ளம் உருகும் உன்னதப் பாடல் களையும் கல்லையும் கனிந்துருகச் செய் யும் கருணைமிகு பாடல்களையும் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டும் மனிதநேயப் பாடல்களையும் திருஅருட்பா எனும் படைப்பால் வள்ளலார் இயற்றியுள் ளதோடு தமிழக மக்களின் மூளையில் இடப்பட்டிருந்த மூடநம்பிக்கை எனும் விலங்கினை தம் பகுத்தறிவுச் சிந்தனை யெனும் திறவுகோலால் திறந்திட்ட பெரு மானாவார்!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
(திருவருட்பா பாடல்:3471)
என்று சொன்ன தலைசிறந்த மனித நேயச் சிந்தனை கொண்ட ஆன்மீகவாதி அருட்பிரகாச வள்ளலாரைத் தவிர வேறு ஒருவரை இவ்வுலகில் காண்பது அரி தாகும். புத்தருக்குப் பிறகும் பெரியாருக்கு முன்பாகவும் இடைப்பட்ட காலத்தில் வள்ளலார் இங்கு வாய்த்தது தமிழ் சமூகத் திற்கு மட்டுமல்லாது தமிழ் மொழிக்கும் புதுவை உள்ளிட்ட தமிழ் நாட்டிற்கும் பெருமை என்றே கொள்ளலாம். அவர் நம் மக்களைப் பார்த்து கூவி அழைக்கும் பாங்கினை நோக்குங்கால்:
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
(திருவருட்பா பாடல்:5564)
இவ்வாறாக பக்திமார்க்கத்திலிருந் தோருக்கும் தம் பகுத்தறிவு சிந்தனைக் கருத்துகளால் பாலமிட்டவர் வள்ளலார் ஆவர். எனவே வள்ளலாரை பகுத்தறிவுச் சிந்தனையின் திறவுகோல் என்றே எடுத் துக்கொள்ளலாம். அதேபோன்று வள்ள லாரை ஒரு ஆன்மீகவாதியாக எடுத்துக் கொண்டாலும் அவரது தளத்திலிருந்து புரட்சிக் கருத்துகளை துணிந்து சொன்ன முன்னோடி முதல் புரட்சியாளராகவும் வள்ளலாரைக் கொள்ளலாம். உதாரணமாக:
கலைஉணர்த்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக.
(திருவருட்பா பாடல்:3768)
என்றதும், மேலும்:
இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
வழக்கம் எல்லாம் குழிகொட்டி மண்மூடிப்போக
(திருவருட்பா பாடல்:4654)
மற்றொரு இடத்தில்:
“சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி!”
(திருவருட்பா பாடல்:4075)
மேலும்:
“மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டிலே இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார்”
(திருவருட்பா பாடல்: 4728)
வள்ளலாரின் திருவருட்பா ஆறாம் திருமுறையும் - பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையும் ஒப்பீடு
வள்ளலாரின் திருவருட்பாவில் ஆறு திருமுறைகளையும் அலசி ஆராயந்ததில் ஆறாம் திருமுறையின் முன்பகுதியான பூர்வஞான சிதம்பரப் பகுதி இடைப் பகுதியான உத்தரஞான சிதம்பரப் பகுதி அதேபோன்று முடிந்த பகுதியான சித்தி வளாகப் பகுதி ஆகியவை முழுக்க முழுக்க பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை களையும் அறிவியல் சிந்தனைகளையுமே வெளிப்படுத்துவதாக இயற்றப்பட்டுள்ளது.
பெரியார் அவர்கள் மக்களிடையே கூறிவந்த ஜாதி மதம் வேதம் சாஸ்திரம் புராணம் இதிகாசம் முதலியவைகளைப் பற்றிய ஒவ்வொரு கருத்தையும் வள்ளலார் இராமலிங்கரும் வாய்ப்பு கிடைக்குமிடங் களிலெல்லாம் குறிப்பிடத்தவறவில்லை.
தீண்டாமை எப்படி வந்தது என்றால் மதத்தால் வந்தது என்கின்றனர்; மதத்தால் ஏன் வந்தது என்று கேட்டால் அது சாஸ்திரப்படி என்கிறார்கள்; இந்த சாஸ் திரம் எப்படி வந்தது என்றால் அது ஆண் டவனின் ஆணை என்கிறார்கள்! அப்படி யானால், தீண்டாமையை நிலைக் கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதர வளிக்கும் சாஸ்திரத்தையும், அதை ஏற் படுத்திய கடவுளையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும் என்றார் பெரியார்.
(‘விடுதலை’, 19.04.1950)
சமத்துவத்திற்காகவும். தீண்டாமைப் பிணி போக்கும் மருத்துவராகவும் நோய் நாடி நோய் முதல்நாடி சீரதிருத்தம் செய் தார் பெரியார். மேலும் கோயிலில் தாழ்த் தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது அவர்களே புஜை செய்யவேண் டும், தட்சணைக் காசுகளை அவர்களே அடையவேண்டும். அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போடவேண்டுமென்று கிளர்ச்சி செய்யத் தான் போகின்றேன் என்றார் பெரியார்!...
(‘விடுதலை’, 22.08.1948)
வள்ளலார் நெறியில் மக்கள் வாழ்ந் தால் மனிதநேயம் மலரும்; அன்பு செழிக் கும்; ஒழுக்கம் உயர்ந்தோங்கும்; பண்பு மலர்ந்தோங்கும்; தீமைகள் யாவும் அழிந்து நன்மை மலரும். சமயவாதிகள் உன் தெய் வம் என் தெய்வம் எனப் பூசலிடுவதை வள்ளலார் அறியாமை என்கிறார்:
“பேருற்ற உலகிலுள்ள சமயமத நெறியெல்லாம்
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்பிள்ளை விளையாட்டு”
(திருவருட்பா பாடல்: 3677)
என்பதிலிருந்து தர்மத்தை தவிர சமய மும் இல்லை - தெய்வமும் இல்லை என்ப தாக அறியமுடிகிறது. எல்லா உயிர்களை யும் தமது உயிர்போல் நினைத்து சம உரிமை வழங்குபவர்தான் மனிதனாவான. எங்கும் வேறுபாடு பிளவு மக்களிடம் ஒற்றுமை இல்லை. சைவம்-வைணவம் இப்படித்தான் போனது பார்ப்பனர் - பறையர் என இப்படித்தான் பிரியக் காரணமானது.
எளிமையான ஆரவாரமில்லா வழி பாடுதான் சன்மார்க்க வழிபாடு என்கிறார் வள்ளலார். ஆனால் இன்றைய வழிபாட்டு முறையோ தேர்த்திருவிழா புனித நீராடல் பூப்பல்லக்குத் திருவிழா, குடமுழுக்கு, பங்குனி உத்திரம், பால் காவடி எனும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
முனைவர் த.ஜெயக்குமார்
உதவிப் பேராசிரியர்
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்,
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்
(தொடரும்)
25.2.2017 விடுதலை ஞா.ம.


25.2.2017 அன்று வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி...
(இதில் எங்கு வள்ளலார் கூறிய எளிமை உள்ளது. சன்மார்க்க வழிபாடு என்பது எளிமையைச் சார்ந்து உள்ளது. ஆனால் இன்று எல்லாவற்றிலும் உயர்வு - தாழ்வு ஏற்றம் - இறக்கம் என வேறுபாடுகள் நிறைய தெரிகின்றன. உதாரணத்திற்கு வள்ளலாரின் அருட்பாக்களிலிருந்து:
“உயர்வு தாழ்வு கொள்ளுதல் கூடாது
ஒத்தாரும் உலர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்”                  
(திருவருட்பா பாடல்:4082)
அதேபோன்று “சாதியும் மதமும் சமயமும் பொய்என”                
(திருவருட்பா பாடல்:4615)
“மதம்எனும் பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்”                 
(திருவருட்பா பாடல்:5799)
“சாதி சமயங்களிலே விதிபல வகுத்த
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே”                
(திருவருட்பா பாடல்:5805)
சாதியும் சமயமும் இன்று மனிதனை ஆட்டிப் படைக்கிறது. சாதிகள் இன்று பலருக்கு பிடிக்காத சொல்லாக உள் ளது. அதுபோல சமயமும் இன்று புதை குழிக்குள் தள்ளப்பட்டுவிட்டது. சாதி யிலும் சமயத்திலும் மாட்டிக்கொண்ட மனிதன் உண்மையிலேயே அவதிக் குள்ளாகிறான். அதனையே பெரியார் அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடு கிறார் அதாவது:
“இன்றைக்கு ஜாதிபேதம் காட்டுவதற்கு கோயில் கரப்பக்கிருகம் ஒன்றுதான் இருக் கிறது. மற்ற இடங்களில் ஒழிந்ததுபோல இங்கும் ஒழிந்தாக வேண்டும். வேறு எந்த மதத்திலும் இதுபோன்ற தடை இல்லை. சாமி இருக்கிறதோ! இல்லையோ வெங் காயம்! அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. மனிதனுக்கு மனிதன் ஜாதிபேதம்  இருக்கக்கூடாது என்பதுதான் எனது கொள்கை” எனப் பிரகடனப்படுத்தினார் பெரியார்.
(‘விடுதலை’, 16.11.1969)
மதம் இன்று வரை வெறியை ஊட்ட, வெறுப்பை ஊட்ட பயன்பட்டு வந்திருக் கிறதே ஒழிய, யாரையும் சீர்திருத்தப் பயன் படவில்லையே! எனவே முதலில் மத வெறியை ஒழிக்க வேண்டும் என்றார் பெரியார்.                                                          
(‘விடுதலை’, 11.03.1948)
மனித முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவை சடங்குகளும் சம்பிரதாயங் களும் என்கிறார் வள்ளலார். பழைமை மூட நம்பிக்கைகளை உதறித் தள்ளி அறிவியல் சார்ந்த பகுத்தறிவு சிந்தனை வழியில் முன்னேற வள்ளலாரின் நெறி உந்து சக்தியாக இருந்தன.
மனித சமுதாயம் மகிழ்ச்சியால் நிலைக்கவேண்டுமானால், “நாம் எல் லோரும் ஓர் குலம் -  எல்லோரும் ஓர் இனம்” என்ற ஒற்றுமை வரவேண்டும் என் கிறார் வள்ளலார். ஒழுக்கம் நம்மிடையே இல்லாததால் ஒன்றுபட்ட வாழ்வு இல்லை என்பதும் அவரது கூற்றாகும். அதையே பெரியார் அவர்கள்:
“ஒழுக்கமும் அன்பும் இல்லையானால் மனித சமுதாயமே வேண்டாம் என்று தோன்றுகிறது”
(‘விடுதலை’, 21.02.1948)
“ஒழுக்கம் என்பது ஒரு மனிதன் தன் னிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றானோ எதிர்ப்பார்க் கின்றானோ அப்படியே இவன் மற்றவர் களிடமும் நடந்து கொள்வதுதான்” என்றார் பெரியார்.
(‘விடுதலை’, 26.09.1956)
வள்ளலார் நெறியும் - பெரியார் நெறியும் ஒத்த சிந்தனைகள் கொண்டவையே!
இவ்வாறு பல சீரதிருத்த சிந்தனைகளை ஒத்த கருத்துகளில் வலியுறுத்தியுள்ள தந்தை பெரியார் அவர்களைப்போலவே, வள்ளலாரும் நம்மிடையே வாழ்ந்தும், அவரின் எண்ணங்கள் - எழுத்துகள் நம் மிடையே மலர்ந்தும் நாம் இன்னும் வேறு பட்டே வாழ்கிறோம். ஜாதி. சமயம் போன் றவை நம்மை பிரிக்கின்றன. வள்ளலாரின் படைப்புகளை புதுப்பித்து வள்ளலார் கூறிய பகுத்தறிவு - சமதர்ம - மனிதநேய நெறிகளைப் பரப்பி வாழ்ந்தாலன்றி தமிழர்களுக்கு விடிவில்லை. வள்ளலாரின் அறிவார்ந்த பகுத்தறிவுக்கொத்த எதிர் காலச் சிந்தனைகள் இன்றைக்கும் எண் ணிப்பார்க்கத் தக்கதாகவும் சிந்திக்கத்தக் கதாகவும் உள்ளன.
மனித நேயத்திற்குத் தடையாக உள்ள ஜாதி  மதம் - சமயம் - குலம் - கோத்திரம் - சாஸ்திரம் முதலியவற்றை அழித்தொழிக்க பாடுபட்ட தமிழக முதல் சீர்திருத்தவாதி வள்ளலார் என்பதும், மேலும் அவரது குறிப் பிட்ட சில கருத்துகள் பெரியாரின் நெறி யோடு ஒன்றிய வள்ளலாரின் நெறிகளா கும் என்பதும் புலனாகிறது.
பிறவி பேதத்தை சாடி சீர்திருத்தம் செய் ததோடல்லாமல் ஒழிக்கவும் முயன்றவர் பெரியார். அதேபோன்று வள்ளலார் நெறி களை ஒத்த சிந்தனைகளைக் கொண்டே மனித சமூகக் கேடுகள் நீங்கி பேதங்கள் களைந்து சமத்துவம் பெற்றிட பெரியார் நெறியும் வலியுறுத்துகிறது. ஜாதி  மதம் ஆகியவற்றை கட்டிக் காப்பது கடவுள் என்ற கற்பனைத் தன்மை என்றால் அந்தக் கடவுளை ஒழிப்பதுதான் சமத்துவத்திற்கு வழிவகுக்கும்!
அதேபோன்று சுரண்டலுக்கு வழிவகுக் கும் மூடநம்பிக்கைகள் - கோயில் திரு விழா, பிரார்த்தனை,  ஜோதிட மோசடி களையும் அறவே விட்டொழிக்க வேண் டும் என்றார் தந்தை பெரியார்.                                                                             
(‘குடிஅரசு’, 11.08.1929)
சமூக சீரதிருத்தத்தின் முன்னோடி வள்ளலார்
சைவத்தையும் ஆரியத்தையும் எதிர்த் தவர் வள்ளலார். வள்ளலார் கடவுள் மறுப் பாளர் அல்லர். ஆனால் கடவுள் மறுப் பாளரான பெரியாரே அங்கீகரித்து வள்ள லாரின் ஆறாம் திருமுறையைப் பரப்பி னார். வள்ளலார் தீவிர சைவ சமயப் பற் றாளராக இருந்ததால் முதல் 5 திருமுறை களும் சிவனைத் துதிப்பதாக இருந்தது. 1860 களுக்குப் பிறகு, வள்ளலாரின் சிந்தனைப் போக்கில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. ‘அன்பே கடவுள், உடம்பே கோயில்’ என்ற திருமூலரின் வழி வள்ளலாரின் சிந்தனை கள் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது.
சமயங்கள், வேதங்கள், சடங்குகள், சாதி ஆகியவற்றை கடுமையான கேள்வி களுக்கு உட்படுத்துகிறார் வள்ளலார். சைவ சமயப்பற்றோடு இருந்த வள்ளலார் சுற்றித் தெளிவுபெற்றபின் சமயம் கடந்த சன் மார்க்க நெறிக்கு மாறியதாக 22.10.1873இல் குறிப்பிடுகிறார். தனது சமயத்தை அருள் நெறி என்கிறார். முன்பு மொழிக்காக சங்கம் இருந்தது. புத்தரின் பவுத்த சங்கத்திற்கு பின், சமயத்திற்காக முதன்முதலில் சங்கம் அமைத்தவர் வள்ளலார். 1865இல் ‘சமரச சுத்த சன்மார்க்கத்தை’ அமைத்தார்.
சமய ஞானிகள் மடங்களையே நிறுவி னார். ஆனால் வள்ளலார் சங்கம் நிறுவி னார். அதுவும் மடம் என்றால் ஆண் துறவி களுக்கானது என்பதனை மாற்றி ஆண்-பெண் இருவருக்குமான மடமாக நிறுவி னார் வள்ளலார். உருவ வழிபாட்டை விலக்கினார். காவிக்கு மாற்றாக வெள்ளை ஆடை அணிந்தார். சைவ சமய சன்மார்க் கத்தை சுத்த சன்மார்க்கமாக மாற்றினார். சிறு தெய்வ வழிபாட்டையும் உயிர் பலியிடு தலையும் ஏற்றுக்கொள்ளாதவர். சமரச சன் மாரக்க நெறி என்பதனை பக்திக்கு மட்டு மன்றி தொண்டு நெறியாக உருவாக்கினார்.
கோவிலை சபை என்றார் ஒளியே வழிபாட்டிற்கு உரியது என்றார். தீபமல்ல ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒளிரவேண் டிய ஜோதி என்றார் வள்ளலார். ஜோதி வழிபாட்டை புகுத்தினார். 1870 களில் துணிந்து வேதம், ஆகமம், புராணம், இதி காசம் முதலியவற்றை ஜாலம் (பொய்) என மறுத்தார். தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காத காலகட் டத்தில் அவர்களையும் சேர்த்து சகல மதத்தவர்களும் ஒன்றுகூடி வழிபடக்கூடிய சத்திய ஞானசபையை அமைத்தார்.
பெண் கல்விக்கு ஊக்கமளித்து ஆன்ம ஞானக் கல்வி தருவது கட்டாயம் என்றார். கடவுள் என்பது அன்பே என்றார் புராணங் களை கற்பனை என்றார். மதத்தின் மூடநம்பிக்கைகளை மறுத்தார். தெய்வ வழிபாட்டு முறையினையும் பகுத்தறிவு அடிப்படையில் மாற்றினார். மேலும் ஆண் பெண் சமத்துவத்தை போதித்தார். கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்கவேண் டாம் என்று கூறினார். தமிழ் தொன்மை யானது அதிலிருந்துதான் உலக மொழிகள் கிளைத்தன என்றார்.
வள்ளலாரிடம் காணும் சீர்திருத்தவாதிக்கான தனித்தன்மைகள்
வள்ளலார் ஒரு அருட்கவிஞர் - அருள் ஞானி-நூலாசிரியர் - உரையாசிரியர் -  போத காசிரியர் - ஞானாசிரியர் - பதிப்பாசிரியர் -  பத்திரிகையாசிரியர் - சித்த மருத்துவர் - சீர் திருத்தவாதி என சகலதுறை வல்லுநராக விளங்கினார்.
தமிழகத்தின் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர்; முதன் முதலில் முதியோர் கல் வியை ஏற்படுத்தியவர்; முதல் கல்வெட் டாராய்ச்சியாளர்; முதன் முதலில் மும் மொழி பாடசாலை (தமிழ்-வடமொழி-ஆங்கிலம்) நிறுவியவர்.
தமது கொள்கைக்கெனத் தனி மார்க் கத்தைக் கண்டவர்!
தனது மார்க்கத்திற்கென்று-ஒரு தனிச் சங்கத்தை நிறுவியவர்!
தனது மார்க்கத்திற்கென்று  ஒரு தனிக்கொடி கண்டவர்!
தனது மார்க்கத்திற்கென்று  ஒரு தனி மந்திரம் கண்டவர்!
தனது மாரக்கத்திற்கென்று  ஒரு தனி சபையைக் கட்டியவர்!
மேலும் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்! என்பதுவே
வள்ளலாரின் - சமரச சுத்த சன்மார்க்க நெறி! எனலாம்.
முடிவுரை
வள்ளலார்தான் முதன்முதலாக முதி யோர் கல்வியை ஏற்படுத்திய கல்வியா ளராவார். ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளைக் கண்டித்த முதல் பொது உடமைவாதியும் வள்ளலாரே! பாகுபாடுகள் ஏற்றத் தாழ்வுகள் என்பது அவரவர் பாவ புண்ணியம் தலைவிதி என்ற மதவாதிகளின் வாதங்களை மறுத்த புரட்சியாளர் வள்ளலார். இந்துக்களில் மேல் ஜாதிக்காரர்கள்  மட்டுமே கோயில் களில் நுழைய அனுமதித்த அந்தக் காலத் தில், எல்லா ஜாதி சமய மதத்தினரும் ஒன்றுகூடி வழிபாடு செய்யவே சத்திய ஞானசபை ஏற்படுத்திய தமிழக முதல் சமதர்மவாதியும் வள்ளலாரே எனலாம்.
சங்கராச்சாரி ஒருமுறை வள்ளலாரை சந்தித்தபோது சமஸ்கிருதம் மாத்ரு பாஷை (அதாவது தாய்மொழி) எனக் குறிப்பிட்டார். உடனே வள்ளலார் தமிழ் பித்ரு பாஷை (அதாவது தந்தை மொழி) என ஆணித் தரமாக பதிலளித்து வாயடைத்தார். எனவே வள்ளலார் ஒரு தலைசிறந்த மொழி அறி ஞரும் ஆவர். அதேபோன்று 1872இல் அந்நியர் ஆட்சியால் ஜாதி இடுக்கண் களை நீக்கும் சட்டம் கொண்டுவந்து ஜாதி மறுப்புத் திருமணங்கள் செல்லுபடியாகச் செய்ததும் வள்ளலாரின் பிரச்சாரத்தால் தான் என அறிய முடிகிறது.
எனவே வள்ளலார் அவர்கள்  பகுத் தறிவு - சீர்திருத்த சிந்தனை உள்ளிட்ட பன்முகச் சிந்தனையாளர் என்பதனை அவரது படைப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. வள்ளலாரின் தொண்டு நெறி அமைதிக்கான அருமருந்தாகும். வள்ள லாரின் பாக்களை மட்டும் மதித்துப் போற்றாமல் அவரது பகுத்தறிவு சீர்திருத்த புரட்சி நெறியினையும் ஏற்று பரப்புவோம்.
முதன்மைச் சான்று மூலம்
1. ஊரன் அடிகள், இராமலிங்க அடி களார் அருளிய திருஅருட்பா ஆறாம் திருமுறை, சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், 1989.
2.ஆ.பாலகிருஷ்ணாபிள்ளை,  திரு அருட்பா பாகம்-2 & 4 சாரதா பதிப்பகம், சென்னை-7, 2006.
3. பொன்மொழிகள், பெரியாரும் இராம லிங்கரும், பெரியார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவன வெளியீடு சென்னை-7, 2007.
துணை நின்ற நூல்கள்
1. டாக்டர் எஸ்.குலசேகரன், வள்ளல் பெருமான், சிறப்புமிகு சிந்தனைகள், பாலமுரளி வெளியீடு, வேலூர், 2007.
2. திருவேங்கடம், சாதி எதிரப்பு மொழி கள், கொள்கை முழக்கம், மலேசியா, 1981.
3.ஆ.பெரியார் அருட்திரு வள்ளல் பெருமான் புரட்சிக்கவிஞர் மன்றம், மதுரை, 2016.
-விடுதலை ஞா.ம.’, 04.03.17