பக்கங்கள்

திங்கள், 25 மே, 2020

ஜோதிராவ் பூலே (1827-1890)

 - 
May 24, 2020 • Viduthalai • மற்றவை

1848 இல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது இருபத்தோரு வயதான ஜோதிராவ் பூலே ஒரு பிராமண நண்பனின் திருமண ஊர்வலத்தில் பங்கேற்கத் துணிந்ததற்கு அவர் அவமானப்படுத்தப்பட்டார். புலே யின் ஜாதியை அறிந்து எரிச்சலுக்கு உள்ளான பிராமணர்கள் சிலர், அவ ரைத் திட்டினார்கள். கண்ணீரோடு பூலே வீட்டுக்குத் திரும்பினார். நடந்ததைத் தந்தைக்குச் சொன்னார். அவர் ‘இதை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது' என்று சொல்லி மகனை சமாதானப்படுத்தினார். ‘‘நம்மைப் போன்ற கீழான சூத்திரர்கள் எப்படி பிராமணர்களுக்குச் சமமாக முடியும்? உன்னை நன்றாக அடிப்ப தற்குப் பதிலாக, ஏதோ விரட்டி அனுப்பி விட்டார்களே, அதுவே அவர்களின் கருணையைக் காட்ட வில்லையா?'' கீழான பிறப்பு உள்ள வர்களுக்கு இப்படி அவமரியாதை இழைக்கப்பட்ட பல சம்பவங்களை புலேயினுடைய தந்தை மகனுக்குக் கூறினார்.
இப்படிப்பட்ட தவறுகளுக்கு பிராமணர் அல்லாதவர்கள் யானை யின் காலின் கீழே இடறச் செய்து அவமானப்படுத்தப்படுவதைத் தானே பார்த்ததாகவும் கூறினார்.
ஆனால், பூலே அவருடைய தந்தையைப்போல் இல்லை. பூலே கிறித்துவப் பள்ளியில் படித்தவர். அப்போதே அவர் மனிதனின் உரிமைகள் என்ற தாமஸ் பெயனின் நூலைப் படித்திருந்தார். ஃபிரெஞ்சுப் புரட்சியும், அமெரிக்காவின் ஜன நாயகப் போரும் அவருடைய மன தில் பதிந்து போயிருந்தன. தனது சொந்த அவமதிப்பு தந்தையின் பரிதாபகரமான எதிர்வினை ஆகிய வற்றால் சமூக அடிமைத்தனத்தின் பயங்கர பிரம்மாண்டத்தை அவரால் உணர முடிந்தது. சோர்வும், கோபமும் மிஞ்ச அந்தக் கணத்தில் அவர் அடிமைப்பட்டவர்களுக்காகப் போராடவும், மீட்கவும் உறுதி கொண் டார். இந்திய சமூகத்தின் மோசமான எதிரி ஜாதி அடிமைத்தனம் என்று உணர்ந்து கொண்டார்.
உண்மை தேச பக்தி என்பது இந்த அடிமைத்தனத்தின் விலங்கு களை உடைப்பதில் இருக்கிறது.
பேஷ்வா அதிகாரத்தின் வீழ்ச்சி பிரிட்டீஷ் ஆட்சியின் நுழைவு ஒருபுறம் இருப்பினும், சமூகம் என் னவோ பிராமணச் சக்திகளின் ஆதிக்கத்தில்தான் இருந்தது. மதத் தின் தலைமைக்கு கல்வியின் மீதி ருந்த ஒற்றை ஆதிக்கமும் பிராமணர் களை இத்தகைய ஆதிக்கத்தை நிறுவ உதவி செய்தன.
பிராமண அரசியல் - சமூக உற வுகளுக்குள் வாழ்ந்த தலித் வெகு மக்கள், உயர்ஜாதி நலன்களை பொதுவான நலன்கள் என்று தவறாக எடுத்துக் கொண்டனர். மக்களின் மனங்களில் ஒரு புரட்சிக்கான கலாச் சார அடிப்படையை உருவாக்குவது தமக்கு முன்னுள்ள ஒரு சவால் என்பதைப் பூலே புரிந்துகொண்டார் - அதன் வாயிலாகத்தான் பொருளி யல், கருத்தியல் மாற்றத்தை உருவாக்க முடியும். அதனால் பார்ப்பனீயத்தின் மீதான அவரது தாக்குதல், இதுவரை ஜாதி வேறுபடுத்தலுக்கு எதிராக நடந்த முயற்சிகளைவிட வேறாக அமைந்தது.
1873 இல் சத்ய சோதக் சமாஜத்தை நிறுவினார். கல்வி மறுக்கப்பட்ட மக் களுக்குக் கல்வியின் உரிமை, பெண் கள் விடுதலை, விதவை மறுமணம், ஜோசிய நம்பிக்கை எதிர்ப்பு, பார்ப் பனப் புரோகிதரை அழைக்காமை என்ற தடத்தில் அவர் அமைப்பு பயணித்தது.
தந்தை பெரியார், பூலே போன்ற வர்கள் எத்தகைய நேர்க்கோட்டில் பயணிக்கிறார்கள் பார்த்தீர்களா?
பூலேபற்றி அண்ணல் அம் பேத்கர் இதோ கூறுகிறார்:
‘‘மற்றவர்கள் எங்கு விருப்பமோ அங்கு போகட்டும்; நாம் ஜோதிபா பூலேவின் பாதையைப் பின்பற்று வோம். நம்முடன் மார்க்சை எடுத்துச் செல்லலாம்; விட்டுவிடலாம். ஆனால், உறுதியாக, ஜோதிபாபூலே வின் தத்துவத்தைக் கைவிடமாட் டோம்.
- அண்ணல் அம்பேத்கர்.
(ஆதாரம்: ‘‘வரலாற்றில் பிராமண நீக்கம்'' - ப்ரஜ் ரஞ்சன் மணி தமிழில் க.பூரணச்சந்திரன்.)
 - மயிலாடன்

வியாழன், 21 மே, 2020

குடகை விட்டு விட்டு காவிரி நதி நீர் ஆணையத்தை நம்பியுள்ளோம்

Published:Updated:

குடகை விட்டு விட்டு காவிரி நதி நீர் ஆணையத்தை நம்பியுள்ளோம்

குடகை விட்டு விட்டு காவிரி நதி நீர் ஆணையத்தை நம்பியுள்ளோம்
குடகை விட்டு விட்டு காவிரி நதி நீர் ஆணையத்தை நம்பியுள்ளோம்

இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் பகுதி கர்நாடகத்தின் குடகு மலைப்பகுதி. இது கூர்க் என்று இப்போது அழைக்கப்படுகிறது.  மூவேந்தர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த காலம் தொட்டே குடகு நம் தமிழகத்தின் கீழ் இருந்த சிற்றரசாகவே இருந்து வந்துள்ளது. சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று அழைக்கப்பட்டதால்தான் அங்கிருந்து ஓடி வந்த காவிரியை 'பொன்னி' என்றே அழைத்தோம். காலம் மாறியது, மன்னர்கள் ஒழிந்தார்கள், கிழக்கிந்தியக் கம்பெனி வந்தது. 1834-ம் ஆண்டு மைசூர் அரசை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் குடகை தங்கள் ஆட்சியின் கீழ் இணைத்துக்கொண்டார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டு ஒருமித்த இந்தியா உருவானது. அப்போது தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையில் தனிப்பகுதியாக துளு மொழியின் அடிப்படையில் குடகு இருந்து வந்தது. மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நிலை 1956-ம் ஆண்டில் வலுத்து வந்தது. அப்போது குடகு பகுதியை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று மக்களால் கூறப்பட்டது. பிரதமர் நேரு தமிழகம் அல்லது கர்நாடகா என ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்துக் கொள்ளுங்கள் என ஆலோசனை கூறினார்.

- விகடன் இணையம்

https://www.vikatan.com/news/tamilnadu/95301-we-leave-the-coorg-and-rely-on-the-cauvery-river-water-authority.html

1956 ஆம் ஆண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, தனிமாநிலமாக   குடகு மொழியின் அடிப்படையில் ‘குடகு’ என்கிற மாநிலம் உருவாக இருந்தது. தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் மிகச் சிறிய பகுதி குடகு. அப்போது குடகு மக்கள் தங்களை இந்தியாவின் யூனியன் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நேரு, யூனியனாக உங்களை இணைக்க முடியாது, ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.


குடகு மக்கள், தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர். ஆனால் தமிழகத்தில் அப்போதிருந்த ஆட்சியாளர்கள் அதனை மறுத்து விட்டார்கள். 


தமிழகம் போல் கர்நாடகமும் முதலில் மறுத்தது. ஆனால் பிறகு சம்மதித்து தம்முடன் குடகு பகுதியை இணைத்து ஒரு மாவட்டமாக ஏற்றுக் கொண்டது.


எந்த குடகு பகுதியை தமிழகம் வேண்டாம் என்று சொல்லியதோ அந்த குடகில்தான் தலிக்காவிரி என்னும் இடத்தில்தான் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறது. . 


அப்போது தந்தை பெரியார், குடகை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென உரிமைக் குரல் கொடுத்தார். விடுதலைப் பத்திரிகையில் எழுதினார். பேரணி நடத்தினார். இருந்தும் அவரின் குரலை அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் அலட்சியம் செய்தது. 


அன்றைக்கு குடகு மக்களின் எண்ணம் போல் நாம் அவர்களை அந்தப் பகுதியை தமிழகத்துடன் சேர்த்து இருந்தால்காவிரி ஆற்றுநீர் பிரச்சினை இந்த அளவு முற்றி இருக்காது தமிழகத்தின் உரிமை இன்னும் மிக பலப்பட்டு இருக்கும். அத்தகைய வாய்ப்பை விட்டுக் கொடுத்தவர்கள் யார் ? இந்திய தேசியக் காங்கிரசும் அக்கட்சியின் முதல்வராக அப்போது தமிழகத்தை ஆண்ட பெருந்தலைவர் காமராஜரும்தான் என்பது கசப்பான உண்மை.  எதற்கெடுத்தாலும் திராவிடத்தையும் திமுகழகத்தையும் கலைஞரையும் குறை சொல்லித் திரியும் தில்லுமுல்லுப் பேர்வழிகள் தெரிந்து கொள்ளட்டும் இந்த வரலாற்றை.

-அருள்பிரகாசம் முகநூல் பக்கம், 16.5.19சனி, 16 மே, 2020

கோல்வால்கரும் நம்பூதிரியும்

முதல் பிள்ளைக்கு ஒரு #நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அர்த்தமுள்ள #இந்துமதம் சொல்லித்தருவது.
இப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று இந்த ஒழுக்கசீலர்கள் மறுக்க முடியுமா?.
வடநாட்டைச் சேர்ந்த #நம்பூதிரிபிராமணர்கள் கேரளத்தில் குடியமர்த்தப்பட்டனர். நம்பூதிரி குடும்பத்தின் முதல் மகன் வைசிய, சத்திரிய அல்லது சூத்திரப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்ற விதி அன்று உருவாக்கப்பட்டது. இதைவிடத் தைரியமான இன்னொரு விதி என்னவென்றால், எந்த சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு #நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்.
அதற்குப் பின்னர்தான் அவளுடைய #கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. இன்றைக்கு இதை #ஒழுக்கக்கேடு என்று கூறுவார்கள். இந்த விதி முதல் குழந்தைக்கு மட்டும்தான் என்பதால் அதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது என்றார்கள் அன்று. (எம்.எஸ்.கோல்வால்கர், ஆர்கனைசர், ஜனவரி-2, 1961, பக்கம்-5)”
2004 ஆம் ஆண்டில் #கோல்வால்கரின் எழுத்துகளை 12 தொகுதிகளாக வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்., 5-வது தொகுதியில் 28-32 பக்கங்களில் இடம்பெற்றுள்ள இந்த உரையிலிருந்து மேற்கண்ட வரிகளை சத்தம் போடாமல் நீக்கிவிட்டது. ஆனால் என்ன செய்வது, நூலகங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ்-ன் அதிகாரபூர்வ ஏடான #ஆர்கனைசர் பத்திரிகையை இதுவரை நீக்க முடியவில்லை.
“பிள்ளை இல்லாமல் அந்தந்தக் குலம் நசிவதாக இருந்தால் அப்போது அந்தப் பெண்ணானவள் தன் கணவன் மற்றும் மாமனாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்கிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம் (மனு 9-59)“ என மனு அன்றே #அயோக்கியத்தனத்திற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டான். இப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று இந்த ஒழுக்கசீலர்கள் மறுக்க முடியுமா?.
#முட்டாளே வரலாற்றை படி. தனது வரலாறு தெரியாத எவனும் தனக்கான #எதிர்காலத்தை சரியாக அமைத்துக்கொள்ள முடியாது.
- ஆனந்குமார் முகநூல் பக்கம், 13.5.19

ஞாயிறு, 10 மே, 2020

தமிழ்வேல் உமாமகேஸ்வரன்தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த  எனது தாத்தா "தமிழவேள்" உமாமகேசுவரன்பிள்ளை நினைவு நாள் இன்று 09.05. 1941
இவர்  ஆற்றியதொண்டு சில
இலவசமாக  ஏழைகளுக்கு வழக்காடி அனைத்து வழக்குகளில் வெற்றி பெற்றதால் பிரிட்டிஷ் அரசு தானே முன்வந்து  அரசு கூடுதல் வழக்கறிஞர் பதிவி வழங்கப்பட்டது.
  14.05.1911 முதன்முதலில் கரந்தை தமிழ்ச்சங்கம் தோற்றுவித்தவர்
27.09.1915 பல்லாயிரம் நூல்கள்  அமைத்து தமிழகத்தில்முதன்முதலில் நூலகம்  அமைத்தவர்.
1915 முதன்முதலில் கட்டணம் இல்லா நூலகம் அமைத்தவர்  
06.10.1916 தமிழ்ச்சங்கத்தின் சார்பில் செந்தமிழ் கைத்தொழில் தொடங்கியவர்
1919 தமிழ் செம்மொழியாக முதன்முதலில்ள தீர்மானம் போட்டவர் 
04.09.1921 கரந்தை தமிழ்ச்சங்கம் 10 ஆம் ஆண்டு விழா கீழையூர் சிவ சிதம்பரம் பிள்ளை தலைமையில் நடத்தினார்.
1922 தமிழுக்கு தனியே பல்கலைக்கழகம் அமைக்க முதன்முதலில் தீர்மானம் கொண்டு வந்தவர் 
16.02.1927 தமிழகத்தில் முதன்முதலில் கூட்டுறவுச்சங்கம் அமைத்தவர் 
28.04.1928 தஞ்சையில் கட்டணம் இல்லா மருத்துவமனை தனது சொந்த செலவில்  அமைத்தவர் 
 நீராறும் கடலுடுத்த என தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக முதன்முதலில்  அறிமுகப்படுத்தியவர்
திருவையாறு கல்லூரியில் சமஸ்கிருத மொழி மட்டும் கற்பித்து வந்ததை மாற்றி தமிழை கற்பிக்க செய்தவர் 
சமஸ்கிருத மொழி கல்லூரி என்று இருந்ததை மாற்றி அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்தார் 
அரசு கோப்புகளில் ஸ்ரீமான், ஸ்ரீமதி, என்ற வடசொறகளை நீக்கி "திருமகன்", "திருவாட்டி" என்ற சொல்லையும்
"பத்திராதிபர்", சந்தா", விலாசம்", வி.பி.பி", போன்ற சொற்களுக்குபதில் நல்ல தமிழில் "பொழிற்றொண்டர்", கையொப்பத்தொகை", உறையுள்", விலைகொளும் அஞ்சல்", போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசு இதழில் முதன்முதலில் உத்தரவு பெற்றவர்.
யாழ் நூல்,கபிலர், நக்கீரர், தொல்காப்பியம் போன்ற எண்ணற்ற நூல்களை பதிப்பித்து கொடுத்தவர்,
நீதிகட்சி (தென்னிந்தி நலமுடன் உரிமை சங்கம்) தஞ்சை மாவட்டம் முழுவதும் பொறுப்பேற்று தீவிரமாக செயல்பட்டவர்.
ஏழைகளுக்கு உதவிகள் வீடு, நிலம், பள்ளிகள், கிராமபுற மக்களுக்காக உழைத்ததால் 1936 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு சார்பில் பனங்கல் அரசர்  ( ராமநிங்கர்) அவர்களால் " ராவ்பகதூர்" பட்டம் வழங்கி பாராட்டு பெற்றவர்.
முதல்,இடை, கடைச்சங்கம் அழிவிற்குப்பிறகு தமிழ் மொழி தாழ்வு நிலை அடைந்தது, இதனைப்பண்டையகாலம்போல் மீண்டும் ஏற்றம் பெற உழைத்தவர்கள் இருவர் ஒருவர் த.வே உமாமகேசுவரன் பிள்ளை, அடுத்தவர் பாண்டித்துரை தேவர்.   
மதுரைத்தமிழ்ச்சங்கதிற்கு தோற்றுவிக்கப்பட்டச்சங்கம் கரந்தை தமிழ்ச்சங்கம் இதனை ஐந்தாம் தமிழ்ச்சங்கம் என்று உயர்த்தியதற்காக          " நுங்கன்" ( நுங்கன் என்றால் வலிமையானவன்)
என்ற பட்டம் பெற்றவர் 
 மாகாத்மா காந்தி தஞ்சை உக்கடை அவுசில் தங்கியிருந்தபோது பிராமணர் அல்லாதாருக்கு இழைக்கப்படும் அவலங்கள், இன்னல்கள் அனைத்தும் விரிவாக காந்தி யிடம் எடுத்துரைத்தார்.
11.06.1934, தமிழை அழிக்க முற்படும் தமிழ் பகைவர்களை கண்டித்து சென்னையில் மாபெரும் மாநாடு நடத்தியவர்
27.08.1937 ராஜாஜி கொண்டுவந்த கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து கரந்தை தமிழ்ச்சங்கத்தில் முதன்முதலில் கண்ட கூட்டமும், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பிறகு தான் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு தீவிரம் அடைந்தது.

   26.12.1937 கி.ஆ பெ. விசுவநாதம் ஒருங்கிணைப்பில் சென்னை மாகாண தமிழ் மாநாடு நடைபெற்றது பத்தாயிரம் பேர் களுக்கு மேல் கலந்து கொண்ட எழுச்சி ஊர்வலம் நடத்தி வெற்றி கண்டார். சொமசுந்தரபாரதியார் தலைமையில்,  த.வே.உமாமகேசுவரன் பிள்ளை வரவேற்பாளராக இருந்து நடத்திய மிகப்பெரிய மாநாடு            இதில் தந்தை பெரியார்,  தமிழ் அறிஞர்களோடு முதன்முதலில் கலந்து கொண்டு இந்தியை எதிர்த்து பேசியுள்ளார்
15.04.1938 கரந்தை தமிழ்ச்சங்கம் வெள்ளிவிழாவில் " " "தமிழவேள்" என்ற பட்டத்தை நாவலர் சசோமசுந்தரபாரதியார  உமாமகேசுவரன்பிள்ளைக்கு வழங்கி பாராட்டு பெற்றார்.
1939 திருச்சியில் நடந்த    அகில இந்திய தமிழ் மாநாட்டில் நாவலர் சோமசுந்தர பாரதியார், திரு. வி.க. மறைமலை அடிகள், பாரதிதாசன், தந்தை பெரியார் ஆகியோரை ஒருங்கிணைத்தவர் த.வே.உமாமகேசுவரன்பிள்ளை. இந்த மாநாட்டில் " தை முதல் நாள்" தமிழ்ப்புத்தாண்டு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரவிந்தரநாத்தாகூர் உருவாக்கிய " சாந்தினிகேத்தனை ப்போல்"  கரந்தை தமிழ்ச்சங்கத்தையும் அமைக்க வேண்டும் என்று நினைத்து அதன் தன்மையை நேரில் அறிய கல்கத்தா தனது நண்பர் கணேசனோடு சென்று பார்த்து, பிறகு இந்த பல்கலைக்கழகம் காசியில் இருப்பதை அறிந்து அங்குசென்று அதன்  அமைப்புகளை பார்வைமிட்டு கடுமையான அலைச்சலினால் நலிவுற்று நோய்வாய்ப்பட்டு சரியா ன சிகிச்சை அளிக்கப்படாமல் அய்யோத்தி மருத்துவமனையில 09.05.1941 அன்று காலமானார்.
தமிழுக்காக வாழ்ந்த இப்பெருமகனாரை தமிழ் சமுதாயம் மரக்கக்கூடாது என்பதற்காக அன்னாரின் பெயரனாகி நான் இப்பதிவை தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன் வாழ்க எனது தாத்தா தமிழவேள் உமாமகேசுவரன்பிள்ளை 
வெல்க இவரது தமிழ்த்தொண்டு 
தங்களின் அன்பிற்குறியவன்
அரிமா.த.கு. திவாகரன்  
த.வே.உமாமகேசுவரன் பிள்ளை பெயரன்

வெள்ளி, 8 மே, 2020

அயோத்திதாசரும் பெரியாரும்

"பெரியாருக்கு "அப்பன்" அயோத்தி தாசர் 
பெரியார் படித்த பள்ளியில்  அயோத்திதாசர், Head master.... என்று 

அயோத்திதாசரை உயர்த்துவதற்காக பெரியாரைத் தாழ்த்தும் சில "அறிவீளிகளே" உங்களுக்குத்தான் இப்பதிவு.

ஒரு முன் குறிப்புடன் பதிவைத் தொடங்குதலே சிறப்பாயிருக்கும்.

பெங்களூரில் நடைபெற்ற பெரியாரின் 68வது பிறந்த நாள் விழாவில், பெரியார் இப்படி பேசினார்.....

“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் 
முன் னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டித மணி அயோத்திதாசரும், தங்க வயல் ஜி.  அப்பாதுரையார் அவர்களும் ஆவார்கள்”

இன்றைய போலி தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் போகிற போக்கில் சொல்லுகிற வார்த்தைகளைப்போல் பெரியாரின் வார்த்தைகளைப் பார்க்கக் கூடாது.

நீதிக் கட்சித் தலைவர்களான சி.நடேசமுதலியார், தியாகராயச் செட்டியார், டி.எம். நாயர் போன்ற தலைவர்களின் வரிசையில்தான் அயோத்திதாசரையும் வைத்திருக்கிறார், என்பது அவரது வார்த்தைகளில் நன்கு புரிகிறது.

தலித் மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர், 

"திராவிடர் கழகம்” என்ற அமைப்பை முதன் முதலில் தோற்றுவித்தவர்,

தாழ்த்தப்பட்ட இனத்தின் விடிவெள்ளி, 
தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர்; இந்தியாவில் பேரரசை நிறுவிய அசோக மன்னனுக்குப் பிறகு, தமிழகத்தில் பவுத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்.....இப்படி இவரின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

மேற்குறிப்பிட்டவையெல்லாம் பெரியார் அரசியலில் தீவிரம் காட்டுவதற்கு முன்னதாகவே அயோத்திதாசர் இயங்கிய தளங்கள்.

அதனால்தான் அவரை முன்னோடி என்று பெருமையோடு கொண்டாடி இருக்கிறார் பெரியார். 

தந்தை பெரியாரால் போற்றப்பட்ட காத்தவராயன் என்ற அயோத்திதாசரை
நானும் போற்றுகிறேன். வணங்குகிறேன்.

முன் குறிப்பு முடித்தது...

இனி என் குறிப்பு.....

ஆங்கிலர் ஆட்சியில் 1843 ஆம் ஆண்டில் "அடிமை ஒழிப்புச் சட்டம்" 
1861 ஆம் ஆண்டில் "இந்தியன் பீனல்கோடு சட்டம்" ஆகியவற்றின் மூலம் "சண்டாளர்கள்" என அழைக்கப்பட்ட தீண்டப்படாதத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்ட பூர்வ விடுதலை கிடைத்தது என்றாலும்.... சமுதாய நடைமுறையில் விடுதலை இல்லை;சமூக ரீதியில் அவர்கள் தொடர்ந்து அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். 

இந்து sorry "ஹிந்து" மேல்ஜாதியக் கொடுமைகளுக்கு அவர்கள் ஆட்பட்டு அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த கொடுமை தமிழகத்தில் மிகவும் தீவிரமாக இருந்தது. மக்களிடையே சாதிவேறுபாடு மிகவும் வேரூன்றி யிருந்தது.மக்கள் ஒருவரை ஒருவர் சாதிப்பெயரைச் சொல்லியே அழைத்துக் கொண்டனர்

"சாதிதான் தமிழ் நாட்டு மக்களின் அடையாளமாக இருந்தது" 

ஆதலால் தீண்டப்படாத மக்களை "பறையர்" என்றே மேட்டுக்குடியினர் அழைத்து இழிவு செய்தனர்.எனவே சாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்க அவர் காலத்தில் "என்ன" செய்ய முடியுமோ, அதை தீவிரமாக செய்தவர் அயோத்திதாசர்.

"தான் சார்ந்த இனம்" இப்படி தாழ்த்தப்பட்டு கிடக்கிறதே என்று பொங்கியெழுந்து போராடியவர் அயோத்திதாசர்.

ஆனால் பெரியார் அப்படி அல்ல....

தனது இனத்துக்காகவோ, தனது மொழிக்காகவோ, தனது பாலினத்துக்காகவோ, தனது மாநிலத்துக்காகவோ, என்று 

"தனிப்பட்டு போராடியவரல்ல".

சமூகத்தில் நிலவும் பல்வேறு வடிவிலான பாலினப் பாகுபாடுகள், சமுதாய அடக்குமுறைகளின்  ஆணிவேரைக் கண்டறிந்து, அதனை அடியோடு அழித்தொழிக்க, பல அதிரடிக் கருத்துகளை எடுத்துரைத்து, அவை நிறைவேறும் வரை 
"நின்று போராடியவர்" பெரியார்.

ஜாதி ஒழிப்பு, 
பெண்விடுதலை, 
சமூக நீதி, 
சாதிய எதிர்ப்பு, 
மூடநம்பிக்கை எதிர்ப்பு, 
இறைமறுப்பு, 
பெண்கள் முன்னேற்றம், 
பெண் கல்வி, 
பொதுவுடைமை, 
பகுத்தறிவு, 
சுயமரியாதை, 
தமிழ்நாட்டு உரிமை, 
அகில இந்திய அளவில் பார்ப்பனர் அல்லாதார் உரிமை, 
இந்திய அரசியல், 
தமிழ்நாட்டு அரசியல், 
போன்ற சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் கடுமையாக  "சமரசமின்றிப் போராடியவர்" பெரியார். 

"சமுதாய முன்னேற்றம்" என்ற "சங்கிலியில்" பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு தலைவர்கள் தோன்றி தம்மை ஒரு கண்ணியாக இணைத்துக் கொண்டு போராடி வந்துள்ளனர்.

அந்தச் சங்கிலியின் ஒரு "கண்ணி" அயோத்திதாசர் என்றால் அந்த சங்கிலியின் பல "கண்ணிகளை" தான் ஒருவனே தனித்து நின்று 

"இணைத்தவர் தான் பெரியார்".

பிறப்பினைக் காரணம் காட்டி  
"சக மனிதனை" எது வரை இச்சமுதாயம் இகழ்கிறதோ , 

சரிநிகர் சமான சமுதாயம் என்று மலர்கிறதோ, 

கடவுளின் பெயரால் ஆதிக்க சக்தி எதுவரை நம்மை அடிமைப்படுத்தி வைக்கிறதோ,

ஜாதியற்ற சமுதாயம் என்று மலர்கிறதோ....

அதுவரை "ஒருவர் இருப்பார்" ....
அதன் பின்னும் இருப்பார்.....

அவர்தான் பெரியார்.....

என்ற பெருமித பூரிப்போடு கூறும்.....

பெரியாரின் பேரன் நான்.
-  பெரியாரின் பேரன் நான் முகநூல் பக்கம், 8.5.20

செவ்வாய், 5 மே, 2020

அயோத்திதாசர்சென்னை இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் தமிழ் என்ற வார இதழை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

பார்ப்பன வேதாந்த விவரம், நந்தன் சரித்திர விளக்கம், நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை, திருவள்ளுவ நாயனார்  பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்.

தோழர் ஒளிச்செங்கோ (கண்கொடுத்தவனிதம்) இவர் குறித்து  விடுதலை தந்தை பெரியார் மலரில் (1967) தெரிவித்த தகவலும், கருத்தும் இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

1892 இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் திரு.சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது, வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கல சுரோனிதம் கலப்பறியாது என்று குறிப்பிட்ட போது, அக்கூட்டத்தில் இருந்த அயோத்திதாச பண்டிதர் எழுந்து, நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால் நான் சில கேள்விகள் கேட்கவேண்டும் என்றார்.

அதற்கு சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு-படுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ., பி.ஏ., படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே, அவர்கள்யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று எண்ணுகிறீர்? என்று கேட்டார் அயோத்திதாசர். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்றுகொண்டிருந்தார்.

தொடர்ந்து, பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்கள் என்று நீர் நினைக்கிறீர்? என்று அடுத்து வினாக்களைத் தொடுத்தார்.

திருதிருவென்று விழித்தார் சாஸ்திரிவாள். ஏன்பதில் சொல்லாமல் நிற்கிறீர்? சொல்லும் என்று சினந்து கேட்டுக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஆனரபிள் திரு.பி. அரங்கையா நாயுடுவும், திரு.எம்.வீரராகவாச்சாரியாரும் அயோத்தி தாசரை அமைதிப்படுத்தினர்.  கூட்டத்தில் இருந்தவர்களும் சிவநாம சாஸ்திரியை இகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டனர். சாஸ்திரிவாள் நைசாக உட்கார்ந்து, சிறிது நேரத்தில் நடையைக் கட்டிவிட்டார்.

அதுமட்டுமல்ல இன்றும் பார்ப்பனர்கள் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறந்தால் மாதம் மும்மாரி பொழியுமா என்று கேட்கும் மனப்பான்மையில்தான் உள்ளனர்.

இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன் தமிழினத் தன்மான உணர்வோடு உஞ்சவிருத்திக் கூட்டத்தை  உதைக்காமல் உதைத்த அயோத்தி தாசரை நினைவு கூர்வோம்!
- கவிஞர் கலிபூங்குன்றன்