பக்கங்கள்

வியாழன், 28 மே, 2015

நன்னெறியாம் நாத்திகம் வளர்கிறது!

நன்னெறியாம் நாத்திகம் வளர்கிறது!

கவிஞர் கலி. பூங்குன்றன்
நாத்திகமா? நல்லதன்று - நாட்டையும் நல்ல மனிதர்களையும் கெடுக்கக் கூடியது.
உலகத்தைப் படைத்த ஆண்ட வனையே மறுக்கக் கூடியவர்கள் - உதவாக் கரைகள் - உருப்பட மாட்டார்கள் என்று சாபம் விடுவோர் உண்டு.
சாபம் விடுவதாலேயோ, சண்டைக்கு வருவதாலேயோ ஆகப் போவது என்ன? அவர்களின் முட்டாள்தனத்தை மூர்க்க மாகப் பாதுகாத்துக் கொள்வதைத் தவிர மூளக்கூடிய பலன் ஏதுமில்லை.
கடவுள் உண்டா, இல்லையா என்று கோதாவுக்குள் குதிப்பதைவிட அந்தக் கடவுளை நம்புவதாகக் கூறுபவர்கள் உண் மையிலேயே நடைமுறையிலே நம்பு கிறார்களா? நம்பி எந்தக் காரியத்தைக் கடவுளிடம் ஒப்படைக்கிறார்கள்?
உண்ணும் உணவிலிருந்து, உடலைப் பாதுகாப்பது உட்பட வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளிலும் தானே கையை ஊன்றிக் கரணம்போடுகிறானே தவிர, கடவுள் கவனித்துக் கொள்வார் என்று எதனை  கடவுளிடம் விட்டு வைக்கிறான்?
சங்கராச்சாரியாரே கண் பார்வை சரி யில்லை என்றால் சங்கரா  நேத்திராலயத் துக்குத்தானே ஓடினார்?
கடவுள் அவதாரம் என்று அடேயப்பா கடல் அளவுப் பிரச்சாரத்தையும், விளம்பரத் தையும் அவிழ்த்துக் கொட்டினார்களே - புட்டபர்த்தி சாயிபாபா - மூன்று மாதம் படுத்த படுக்கையில் கிடக்கவில்லையா? புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்கள் எல்லாம் கூடிக் கூடி ஆலோசித்து ஆலோசித்து வைத்தியம் பார்த்தும் பிள்ளை பிழைக்க வில்லையே!
இதேபோல் எத்தனை எத்தனையோ கேள்விகளைக் கேட்டதுண்டு, அறிவு நாண யமான முறையில் பதில் சொன்ன ஒரே ஒரு மனிதனையும் காண முடியவில்லை.
உலகம் இன்று உண்மையை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது. உண்மையை உணரும் ஆர்வத்தில் ஆயிரம் ஆயிரம் பரி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
பெரு வெடிப்புச் சோதனை (பிக்பேங் தியரி) நடத்தி பூமி உண்டான விதத்திற்கு விஞ்ஞானத்தின் மூலம் விடை கண்டுள் ளனர்.
மரபணு இரகசியங்களைக் கண்டறிந்து மரணமற்ற வாழ்வை மனிதன் மேற் கொள்ள முடியுமா எனும் ஆய்வில் குதித் துள்ளனர்.
இந்த ஏவுகணை வேகத்தால் மத நம்பிக் கைகளும் கடவுள் நம்பிக்கைகளும் புதை குழியை நாடுகின்றன.
கிறித்தவ நாடுகளில்கூட சர்ச்சுகள் விலைக்கு என்று விளம்பரம் செய்யப்படுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பியு ஆய்வு நிறுவனம் உலக மதங்களின் எதிர்காலம் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் உலக அளவில் கடவுள் மறுப்பாளர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அறிவியல் வளர்ச்சி மற்றும் நவீன மய மாகும் மேலை நாடுகளில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கல்வி யறிவு, அறிவியல், பொருளாதார சுதந்திரம், சமத்துவம், சமூக அமைதி கொண்ட மேலை நாடுகளில் நாத்திகர்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கிராமங்களை விட நகரங்களில் கடவுள் நம்பிக்கையற்றவர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மிகவும் வேகமாக இல்லாவிட்டாலும் உள் ளூர் கடவுள் மறுப்பு, நாத்திக சித்தாந்தம் கொண்ட மக்கள் அதிகரித்து வருகின்றனர்.
இந்தியாவில் இன்றளவிலும் சமூகச்சூழலில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் பக்திமான்களாக காட்டிக்கொண்டாலும் உள்ளூர அவர்கள் கடவுள் மறுப்புச் சிந்தனையைக் கொண்டுள்ளனர்.  பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகள் அனைத்திலும் கடவுள் நம்பிக்கை யாளர்கள் அதிகம் உள்ளனர்.
கடவுள் நம் பிக்கை அதிகம் உள்ள நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்திலும் இன்னும் பின்னடை வைக் கண்டு வருவதும் குறிப்பிடத்தக்க தாகும். முக்கியமாக ஆசியாவில் உள்ள இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆப்பி ரிக்காவில் உள்ள சூடான், நைஜீரியா, மத்திய ஆப்ரிக்க குடியரசு, கானா போன்றவற்று டன் தென் அமெரிக்காவில் பெரு,சிலி, ஈக்வெடார், மெக்ஸிகோ என பல நாடுகள் மத நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு வருகின்றன.
இந்த நாடுகள் அனைத்தும் மூன்றாம் உலக நாடுகள் இவற்றில் பல பொருளாதார நிறைவு பெறாத நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.       2014 அமெரிக்கவின் ஹுட்சன் மாகா ணத்தில் உள்ள ரைஸ் பல்கலைகழக பேரா சிரியர் எலைன் ஹவார்ட் தலைமையில் கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள பல் வேறு அறிவியல் அறிஞர்களின் கடவுள் நம்பிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத் தினர்.
இந்தக் கணக்கெடுப்பை இங்கி லாந்தின் அறிவியல் அறிஞர்களுடன் ஒப்பிட்டு வெளியிட்டுள்ளனர். அதில் கடவுள் நம்பிக்கையற்ற அறிவியல் அறிஞர்கள்  இந்தியா 6 விழுக்காடு இங்கிலாந்து 71 விழுக்காடு உள்ளனர்.
மத விழாக்கள் மற்றும் மதம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அறிவி யல் அறிஞர்கள் இந்தியாவில் 32 இங்கி லாந்தில் 10 பேர்.
மதவிழாக்களை முற்றிலும் புறக்கணிக் கும் அறிவியல் அறிஞர்கள் இந்தியா 19 விழுக்காடு, இங்கிலாந்து 69 விழுக்காடு. கடவுள் இருக்கிறார் என்று நம்பும் அறிவியல் அறிஞர்கள் இந்தியா 32 விழுக்காடு, இங்கிலாந்து 10 விழுக்காடு.
நம்மைக் காப்பாற்றும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பிக்கைகொள்ளும் அறிவியல் அறிஞர்கள்  இந்தியா 38 விழுக்காடு இங்கிலாந்து 8 விழுக்காடு.
Rationalist International Bulletin  2013 எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில்  79 விழுக்காடு மதநம்பிக்கை கொண்ட வராகவும்,. 13 விழுக்காடு எந்த மதத்தை சாராதவர்கள் என்றும், 6 விழுக்காடு நாத்திகர்கள் என்றும் பதிவு செய்துள்ளனர்.
வாசிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க இதழ் மே மாதம் 2013 ஆண்டு மக்கள் தொகை மற்றும் மத நம்பிக்கை தொடர்பான விவாதத்திற்காக உலகம் முழுவதும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மூலம் மத நம்பிக்கை குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் இளைய தலை முறையைச் சேர்ந்தோர்களில் 42விழுக்காடு நபர்கள் கடவுள் மறுப்பு கருத்தைத் தெரிவித்திருந்தனர்.
2020 ஆண்டு 100 பேரில் 30 பேர் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருப் பார்கள் என்று தெரிவித்துள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் உலகில் கடவுள் மறுப்பாளர்கள் மக்கள் தொகையில் மூன்றாமிடத்தை பிடித்துவிடுவார்கள் என்று தெரியவருகிறது. வரும் காலத்தில் தொடர் அறிவியல் வளர்ச்சி மற்றும் பொருளாதார மாற்றம் காரணமாக கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை தற்போதுள்ளதை விட மிகவும் அதிகமாக வாய்புள்ளதாக கூறியுள்ளது.
நாடு            கடவுள் மறுப்பாளர்
(நாத்திகர்)
1.  ஸ்வீடன்        65.5%
2. செக் குடியரசு    64.3%
3. வியட்நாம்       63.55%
4. டென்மார்க்     61.5%
5. அல்பேனியா    60%
6. அய்க்கிய இராச்சியம் 52%
7.  ஜப்பான்    51.8%
8.  அஸ்ர்பைஜான் 51%
9.  சீனா 50.5%
10.  எஸ்தோனியா 49%
11.  பிரான்ஸ் 48.5%
12.  ரஸ்யா 48.1%
13.  பெல்லாரஸ் 47.8%
14.  பின்லாந்து 44%
15.  அங்கேரி 42.6%
16.  உக்ரைன் 42.4%
17.  நெதர்லாந்து 41.5%
18.  லாத்வியா 40.6%
19.  தென் கொரியா 36.4%
20. பெல்ஜியம் 35.4%
21.  நியூசிலாந்து 34.7%
22.  ஜெர்மனி 34.6%
23.  சிலி 33.8%
24.  லக்ஸம்பேர்க் 29.9%
25.  ஸ்லோவீனியா 29.9%
26.  வெனிசுவேலா 27.0%
27.  கனடா 23.9%
28.  எஸ்ப்பானியா 23.3%
29.  ஸ்லவாக்கியா 23.1%
30.  ஆஸ்திரேலியா 22.3%
31.  மெக்சிகோ 20.5%
32.  அமெரிக்கா 19.6%
33.  லிதுவேனியா 19.4%
34.  இத்தாலி 17.8%
35.  அர்ஜென்டினா 16.0%
36. தென்னாப்பிரிக்கா 15.1%
37.  குரோவாசியா 13.2%
38.  ஆஸ்திரியா 12.2%
39.  போர்த்துகல் 11.4%
40.  புவேர்ட்டோ ரிக்கோ 11.1%
41.  பல்கேரியா 11.1%
42.  பிலிப்பைன்ஸ் 10.9%
43.  பிரேசில் 8.0%
44.  அயர்லாந்து 7.0%
45.  இந்தியா 6.6%
46.  செர்பியா 5.8%
47.  பெரு 4.7%
48.  போலந்து 4.6%
49.  அய்ஸ்லாந்து  4.3%
50.  கிரேக்கம் 4.0%
51.  துருக்கி 2.5%
52.  ருமேனியா 2.4%
53.  தன்சானியா 1.7%
54.  மால்ட்டா 1.3%
55.  ஈரான் 1.1%
56.  உகாண்டா 1.1%
57.  நைஜீரியா 0.7%
58. வங்காளதேசம் 0.1%
இந்தியத் தொழில் நுட்பக் கழக மாணவர்களிடையே நாத்திகக் கருத்து வலுவாகப் பரவியுள்ளது. 2013-14 ஆம் கல்வி யாண்டில் பயிலும் மாணவர்களிடையே கடவுள் நம்பிக்கை மற்றும் மதம் குறித்த கருத்துக்கள் மீது நம்பிக்கையில்லை என்று கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந் துள்ளது.
இந்திய தொழில் நுட்பக் கழகங்களில் பயிலும் மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த கல்விகற்கும் நிலையில், அவர்களின் கடவுள், மத நம்பிக்கை குறித்த ஆய்வை மும்பையைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வில் 22.8 விழுக்காடு தொழில்நுட்ப மேற்கல்வி பயிலும் மாணவர்கள் ஆத்திக கருத்துள் ளவர்கள் என்றும், 30.1 விழுக்காடு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும்  தெரிய வந்துள்ளது.
இளங்கலை தொழில் நுட்ப மாணவர்கள் தங்களுக்கு இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் பயில கிடைத்த அரியவாய்ப்பு தங்களது கடுமையான உழைப்புத்தான்; கல்வி கற்கும் போது அறிவியல் உபகர ணங்கள் மற்றும் நாங்கள் கற்ற கல்வியின் திறனால் தான் இங்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் தொழில் நுட்பக் கல்வி என்பது அறிவியல் சார்ந்த ஒன்று இங்கு கடவுளுக்கு வேலையில்லை என்று கூறினர். பல மாணவர்கள் தொழில் நுட்பம் பயிலுவதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எந்த தொடர்புமில்லை, என்று கூறினர். மதப்பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த மாணவர்கள் கூட தொழில் நுட்பம் என்று வந்த உடன் தங்கள் கடவுள் நம்பிக் கையைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டுத் தான் இங்கு வருகிறார்கள்.
2013-14-ஆம் கல்வியாண்டில் பயிலும் 260 மும்பை தொழில் நுட்பக் கழக மாணவர்களில் பெரும்பாலானோர் கல்வி என்று வரும் போது தங்களது கடவுள் நம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்திவிடுகின்றனர். தேர்வு என்று வரும்போது 36 விழுக்காடு மாணவர்கள் தங்களின் திறமையை மட்டுமே நம்பியுள்ளனர்.
மாணவர்களின் நாத்திக மனநிலை குறித்து தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் ஒருவர் கூறும் போது இங்கு கல்விபயில வரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் எதிர்காலம் குறித்து நிர்ண யித்துவிட்டுத் தான் வருகிறார்கள். தொழில் நுட்பக்கல்லூரி பட்டம் என்பது அவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடியது.
இங்கு பயிலும் கல்விக்கென்று நல்ல எதிர்காலம் உள்ளது. ஆகையால் மாணவர்கள் தங்களின் மதநம்பிக்கைகளை கொஞ்சம் மூட்டைகட்டிவைத்துவிட்டுத்தான் வருகிறார்கள் இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் நாத்திக கருத்துக் களை வெளியில் காட்டிக்கொள்வதில்லை என்று கூறினார்.
முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை தொடர்ச்சியான உழைப்பு, பாடங் களில் கவனம் செலுத்துதல், அறிவியல் கருத்துக்களை உள்வாங்குதல் போன்றவை களால்தான்  தலைசிறந்த மாணவர்களாக அவர்கள் இங்கிருந்து வெளியேற முடியும் என்பதும் தொழில் நுட்பக் கழகங்களில் கூட மதநம்பிக்கை மற்றும் சமயசிந்தனைகளு டன் பயிலும்போது சரியான எல்லையை அடைய முடியாமல் போவதுடன் அவர் களால் சுதந்திரமான மனநிலையுடன் செயல்பட முடியாமல் போய்விடுகிறது.
இதுதான் உண்மை நிலை!
இந்தியாவில் இந்து மதத்தில் நாத்திகம் - ஆத்திகம் என்பது என்ன?
உலகம் முழுவதும் கடவுள் மறுப்புதான் நாத்திகம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இந்து மதமோ நாத்திகம் என்பதற்கும், ஆத்திகம் என்பதற்கும் வேறு கண்ணோட்டத்தில் விளக்கம் தருகிறது.
சங்கராச்சாரியார்கள் என்ன சொல்லு கிறார்கள்? குறிப்பாக காஞ்சீபுரம் மூத்த சங்கராச்சாரியார் என்றும் சங்கராச்சாரியார் களிலேயே மிகவும் மதிப்புக்குரியவர் என்று அவர்களின் வட்டாரத்திலேயே பெரிதாகப் பேசப்படும் திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறும் கருத்து இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானதே.
நாஸ்திகம் என்றால் ஸ்வாமி யில்லை என்று சொல்கிற நிரீச்வர வாதம் என்று தானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமி, ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டேகூட ஆஸ்திகர் களாக இருக்க முடியும்
அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக் கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது?  அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்!
வைதீக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது - ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல என்கிறார் காஞ்சி சந்திரசேக ரேந்திர சரஸ்வதி (ஆதாரம்: தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதி பக்கம் 407 - 408).
இது ஏதோ காஞ்சி சங்கராச்சாரியார் தன்னோக்கில் தான்தோன்றித்தனமாகச் சொல்லி விட்டாரா?
அதுதான் இல்லை; அவர்தான் சாஸ் திரங்களைக் கரைத்துக் குடித்தவர் ஆயிற்றே! மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல் லுகிறது? வேதம் (சுருதி) தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக் தியைக் கொண்டு
மறுப்பவன் நாஸ்திக னாகின்றான் (மனுதர்மம் அத்தியாயம் - 2; சுலோகம் 11)
கடவுளை நிந்தித்தாலும் பரவாயில்லை; வேதங்களை, தரும சாஸ்திரங்களை மட்டும் விமர்சிக்கக் கூடாது, எதிர்த்துக் கேள்விக் கேட்கக் கூடாது என்று பார்ப்பனர்கள் விரும்புவது - ஏன்? அதற்கான விடை எளிதானதுதான்.
வேதங்கள்தான் பார்ப்பனர்களை பிர்மா வின் நெற்றியில் பிறந்ததாகக் கூறுகின்றன.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் ததேவதா
தன்மந்த்ரம் பிரம்மாதீனம்
பிராமணா மம தேவதா
(ரிக்வேதம் 62ஆவது பிரிவு 10ஆம் சுலோகம்)
உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது. தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்ட வர்கள், மந்திரம்  பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. எனவே பிராமணர்களே கடவுள் என்கிறது வேதம்.
இதற்கு விளக்கம் கூடத் தேவை யில்லை. கடவுள்களுக்கு மேல் பிராம ணர்கள் என்று கூறுகிற வேதங்கள், சாத் திரங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட் டவை - அப்படி விமர்சிப்பதுதான் நாத்திகம் என்று கூறப்படுவதன் பொருள் - இரகசியம் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே!
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது பெரும்பாலும் பார்ப்பனர் அல்லா தார் தந்தை பெரியார் அவர்களாலும் அவர்கள் கண்ட கழகத்தாலும் தன்மான உணர்வு பெற்றவர்கள் அத்தனைப் பேரும் நாத்திகர்களே! இதற்கொரு எடுத்துக் காட்டும் உண்டு.
1971இல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது, திராவிடர் கழகத்தாரால் ராமன் செருப்பாலடிக்கப்பட்டான் என்று கூறிப் பெரு மழைப் பிரச்சாரத்தைப் பார்ப்பனர் களும், அவர்களின் ஊடகங்களும் செய்த நிலையில்,  தவத்திரு குன்றக்குடி அடி களார் அவர்கள் தெரிவித்த கருத்தை இந்த இடத்தில் சாட்சிக்கு அழைக்கலாம்.
இன்று ஆஸ்திகம் என்பது உயர் சாதியினரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்? (விடுதலை 19.2.1971) என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னதை கருத்திற் கொண்டால் இந்து மதத்தில் ஆஸ்திகம் என்பது உயர் ஜாதியினராகக் கருதப்படும் பார்ப்பனர்களுக்கானது நாஸ் திகம் என்பது பிறப்பின் அடிப்படையில் சூத்திரர், பஞ்சமர்களாக்கப்பட்ட மக்களின் நலமாகும்.
யதாஹிசவ்ர:
ஸ்யத தயாஹிபுத்த
ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி
என்கிறது வால்மீகி இராமாயணம். திருடனும் புத்தனும் ஒன்றாவான், அவன் நாத்திகன் என்று கூறப்பட்டுள்ளது.
அறிவியல் ரீதியாக உலகம் நாத்திகத் திசையில் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவிலோ இந்து மத வாதிகள் பிறப்பின் அடிப்படையில் மேல் ஜாதி ஆதிக்கவாதிகளாக வரித்துக் கொள்ள ஆஸ்திகர்களாக இருந்து வருகின்றனர்.
இந்தப் பிறவி முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்கள் கடவுள் நம்பிக்கையாளர் களானாலும் நாத்திகர்களாகவே இருந்து தீர வேண்டிய கட்டாயமாகி விட்டதா இல்லையா?
-விடுதலை ஞாயிறு மலர்,9.5.15

செவ்வாய், 26 மே, 2015

அய்ன்ஸ்டைன் ஒரு நாத்திகர் அவரது கடிதமே சான்றாவணம்!


ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் -
இயற்பியல் அறிவியலாளர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் கடவுள் மற்றும் மதம் பற்றிய அவரது கருத்துகளை பிரதி பலிக்கும் இரண்டு அரிய கடிதங்கள் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்தன. இந்தக்கடிதம் இந்திய ரூபாய் மதிப்பில் 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஏலம் போகும் என்று தெரிகிறது.    இந்தக் கடிதங்களில் அய்ன்ஸ்டைனின் மனைவி மிலெவா மாரிக் மற்றும் அவரது மகன்களான ஹான்ஸ், எட்வார்ட் ஆகியோருக்கு 1949-ஆம் ஆண்டு அய்ன்ஸ்டைன் தனது கைப்பட எழுதிய கடிதமும் அடங்கும்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தனது அணுப்பிளவுக் கொள்கை மற்றும் சார்பியல் கோட்பாடு குறித்தும், மற்றும் மதம் கடவுள் குறித்த தனது நிலைப் பாட்டையும் எழுதியுள்ளார். முக்கியமாக ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் மீண்டும் பதவிக்கு வருநிலை உள்ளதால் தான் ஜெர்மன் திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தகடிதம் குறித்து வரலாற்று ஆய்வாளர், மற்றும் புகழ்பெற்ற நபர்களின் கடிதங்களைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்துவரும் அமைப்பின் தலைவரான ஜோசப் மெடலினா கூறியதாவது,: அய்ன்ஸ் டைனின் புகழ்பெற்ற இக்கடிதங்கள் ஜூன் மாதம் 11-ஆம் தேதி ஏலத்திற்கு வரும், இந்தக் கடிதங்கள் அய்ன்ஸ்டைனின் கடவுள் குறித்த பார்வையை தெளிவாகக் கூறும் விதத்தில் உள்ளது.  ஒரு தலைசிறந்த இயற்பியலாளர் கடவுள் குறித்த தனது பார்வையை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும் 1945-ஆம் ஆண்டு கய் எச் ரானேர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் நான் யூதனாக அறியப்பட்டாலும் நான் ஒரு நாத்திகனே என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் அவர் ரானேருக்கு எழுதிய கடிதத்தில் அவர் தான் ஒரு நாத்திகன் என்பதை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார்.
கடவுள் நம்பிக்கை என்பது குழந்தைத்தனமானது, புரியாத வயதில் எளிதில் எதையும் நம்புவது போன்றது,  ஆனால் நாத்திகம் என்பது தெளிவான ஒரு மனநிலையில் எந்த ஒரு செயலையும் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாகும், இங்கு நான் ஒரு கடவுள் மறுப்பாளராகவே இருக்கிறேன் என்று எழுதியுள்ளார்.
அய்ன்ஸ்டைன் தனது இளைய மகன் ஹன்ஸ்ற்கு எழுதிய கடிதத்தில் அணு குண்டு பற்றியும் அது ஹிரோஷிமா, நாகாசாகி போன்ற நகரங்களில் ஏற் படுத்திய பேரழிவு பற்றி குறிப்பிட்டு தனது சார்பியல் கோட்பாட்டை அதனுடன் இணைத்துத் தனது கருத்தைப் பகிர்ந் துள்ளார். மற்றொரு கடித்தில் அவர் நாஜிக்களின் மோசமான நடவடிக்கையால் ஜெர்மனியி லிருந்து அமெரிக்காவிற்கு இடம் பெயர வேண்டியிருந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் ஜெர்மனியில் வாழும் யூதர்கள் பற்றியும்,யூதக்குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் தனது கடிதத்தில் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.  1933-ஆம் ஆண்டு ஜெர்மன் குடியுரிமை தொடர்பாக தனது மகனுக்கு எழுதிய கடிதம் மற்றும்  மனைவிக்கு எழுதிய கடித்தில் தனது மகனின் திருமணம் மற்றும் தனது கண்டுபிடிப்புகள் குறித்த தனது மனநிலையை எழுதியுள் ளார்.  இந்தக் கடிதங்கள் அனைத்தும் ஏலத்திற்கு வரும்போது  அமெரிக்க டாலர் மதிப்பில் 15,000 முதல் 25,000 டாலர் வரை விலைபோகும் என்று தெரிகிறது.

விடுதலை18.5.15


ஞாயிறு, 17 மே, 2015

சாக்ரட்டீஸின் பொன்மொழிகள்விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களை சிருஷ்டித்து அந்தக் கடவுள்களின் கதைகளைச் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே  பல குற்றங் களை செய்திருக்கிறபோது நாமும்தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடுகிறார்கள். இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமான மற்றொரு தெய்வம் சதி செய்வதாகவோ, யுத்தம் செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக் கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது. மனிதர்கள் ஒருவரை யொரு வர் நேசிக்க வேண்டுமென்றும், ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.
***************
அதிகமான செல்வமோ அதிகமான வறுமையோ தங்கள் ராஜ்யத்திற்குள் வரவொட்டாதபடி அரசர்கள் பாதுகாக்க வேண்டும். அதிக செல்வத்தினால் ஆடம்பரத் தன்மையில் சோம்பேறித்தனமும் உண்டாகும். அதிக வறுமையினால் புரட்சியும், இழிதகைமையும், துரோகமும் ஏற்படும்.

மழை பொழியவில்லை என்றால்...மழை பொழியவில்லை என்றால், கொடும்பாவி கட்டி இழுப்போமா, கோபால பஜனை செய்வோமா, என்று தான் புத்தி போகிறது. இது வெறும் ஏமாளிப் புத்தி. இதிலேயே, எத்தரின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்தால் மழை பெய்வதற்கு வருண ஜெபம் செய்வது என்று ஆரம்பிக் கிறார்கள். இப்படிப்பட்ட விதமாகத்தான் நம்மவர்களின் சிந்தனை சென்று கொண்டிருக்கிறதேயொழிய, மேனாட்டு விஞ்ஞானிகள் போலவா, மழை இயற்கை நிகழ்ச்சிதான் என்றாலும், அதையே ஏதேனும் செயற்கை முறையால் நாம் உண்டாக்க முடியாதா, என்று செல்கிறது. அவர்களின் சிந்தனை அந்தத் துறையிலேயும் சென்று, இப்போது மழையை உண்டாக்கும் முறையையும் விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் - இனி இத்துறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்திய வண்ணம் இருக்கின்றனர்.
இங்கு வான மழை போலே, மேனி வண்ணம் கொண்டான் என்று பாடிக்கொண்டே காலந்தள்ளுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஒரு ஊரில், மழை இல்லாமல் போகவே, அவ்வூர் புத்திசாலிகள், சூரியன் மீது கல்லை விட்டெறிந்தார்கள். மழை வேண்டும் என்று, பயிர் வளரவில்லை எதிர்பார்த்தப்படி என்றால், விதையால் வந்த தவறா, உழவுமுறையால் வந்த தவறா, ஏதேனும் பூச்சி புழு அரிக்கிறதா, அல்லது மண்ணின் சத்தே கெட்டுவிட்டதா என்பன போன்றவைகளிலே நம்மவர்களின் எண்ணம் போவதில்லை - பச்சையம்மனுக்கு பொங்கலிடுவது, அரசமரத்துக்கு மஞ்சள் பூசுவது என்று இப்படி ஏதாவதொரு அர்த்தமற்ற விஷயத்தின் மீது தான் எண்ணம் போகிறது.
தமிழ்நாட்டுப் பிற்கால மன்னர்கள் பலர், மழை காலா காலத்திலே பொழியாமற் போனால் என்ன செய்வதென்று, பயந்து மழையைச் பொழியச் செய்ய, வருண ஜெபம் செய்வதற்காகவே, அவர்களுக்கு மானியங்கள் - இனாம்கள் தரப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலே, இப்படி வருண ஜெபம் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாம்கள், இன்றும் அந்தப் பரம்பரையினரிடம் உள்ளன
(
நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)
எந்த அரசர்கள் பிற்போக்காளராயிருந்து வருண ஜெபம் செய்தனர் என்று அண்ணா அவர்கள் குற்றசாட்டுகிறார் களோ, அதே அண்ணா பெயரைக்  கட்சியில் தாங்கிய கட்சி - ஆட்சி அதே வருண ஜெபத்தைச் செய்கிறது என்றால் அண்ணாவைப் புரிந்த அழகும் அவரை மதிக்கும் அழகும் மிகப் பரிதாபமாகும்.
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் இந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்கள் இயற்கையை நோக்கி வழிபாடு செய்வோரை படு கிண்டல் செய்து எழுதி இருக்கிறார். இயற்கையையோ அல்லது இயற்கைப் பொருட்களின் பண்புகளையோ வழிபாட்டுரையால் நாம் மாற்றிவிட முடியுமாவழிபடுவதன் மூலம் கலைகளை விரிவு படுத்துவதோ அல்லது அடக்கி வைக்கவோ நம்மால் ஆகுமா? பலியிடுவதன் மூலம் காற்றுகளின் திசையை மாற்றிட நம்மால் இயலுமா? மண்டியிடுதல் நமக்குச் சொத்துகளைச் சேர்த்து தருமா? வேண்டுதலைச் செய்வதன் மூலம் நாம் நோயைப் போக்கி கொள்ள முடியுமா? சடங்கு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்ள இயலுமா? படையல் போடுவதன் மூலம் நன்மையையோ அல்லது மதிப்பையோ நாம் பெற்றுவிடக் கூடுமா? (மதமும் மூட நம்பிக்கையும் பக்கம் 23)
இவ்வளவையும் எழுதிய நாவலர் இரா.நெடுஞ்செழியன் தான் மாண்புமிகு நிதி அமைச்சராக இருக்கிறார். இந்த ஆட்சியில்தான் மழை பொழிவதற்காக வழிபாடு நடத்தப்படுகிறது. அறிவிலும் இல்லை
அய்யா வழியுமில்லை
அண்ணா வழியுமில்லை
என்றாலும் இந்த ஆட்சியில் வருண ஜெபம் நடக்கிறது!
(
நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)
-விடுதலை,24.4.15

பகுத்தறிவு வினாக்கள்உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?
 -விடுதலை,24.4.15

நாத்திகர்களின் எண்ணிக்கை வளர்கிறது


மதநம்பிக்கை, சமயச்சிந்தனைகள் எதிர்காலத்தை வளப்படுத்தாது
இந்தியத் தொழில் நுட்பக் கழக மாணவர்களின் கருத்து
மும்பை ஏப்ரல் 21  இந்தியத் தொழில் நுட் பக்கழக மாணவர்களி டையே நாத்திகக் கருத்து வலுவாக பரவியுள்ளது. 2013-_14 ஆம் கல்வியாண் டில் பயிலும் மாணவர் களிடையே கடவுள் நம்பிக்கை மற்றும் மதம் குறித்த கருத்துக்கள் மீது நம்பிக்கையில்லை என்று கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்திய தொழில் நுட்ப கழகங்களில் பயி லும் மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த கல்வி கற்கும் நிலையில் அவர் களின் கடவுள்/மத நம் பிக்கை குறித்த ஆய்வை மும்பையைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வில் 22.8 விழுக்காடு தொழில் நுட்ப மேற்கல்வி பயி லும் மாணவர்கள் முழு மையான நாத்திக கருத்துள்ளவர்கள் என் றும், 30.1 விழுக்காடு கடவுள் நம்பிக்கை பற்றிக் கவலை இல் லாதவர்கள் என்றும் 47.1 விழுக்காடு மாண வர்கள் கடவுள் நம்பிக் கையுடையவர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இளங்கலை தொழில் நுட்ப மாணவர்கள் தங் களுக்கு இந்தியத் தொழில் நுட்பக்கழகத்தில் பயில கிடைத்த அரியவாய்ப்பு தங்களது கடுமையான உழைப்புத்தான், கல்வி கற்கும் போது அறிவியல் உபகரணங்கள் மற்றும் நாங்கள் கற்ற கல்வியின் திறனால் தான் இங்கு படிக்கும் வாய்ப்பு கிடைத் தது. மேலும் தொழில் நுட்பக் கல்வி என்பது அறிவியல் சார்ந்த ஒன்று இங்கு கடவுளுக்கு வேலை யில்லை என்று கூறினர்.
பல மாணவர்கள் தொழில் நுட்பம் பயிலுவதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எந்தத் தொடர்புமில்லை, என்று கூறினர். மதப் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த மாணவர் கள் கூட தொழில் நுட்பம் என்று வந்த உடன் தங்கள் கடவுள் நம்பிக் கையைக் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டுத் தான் இங்கு வருகிறார்கள். 2013-_14-ஆம் கல்வியாண்டில் பயிலும் 260 மும்பை தொழில் நுட்பகழக மாண வர்களில் பெருமாபாலா னோர் கல்வி என்று வரும் போது தங்களது கடவுள் நம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்தி விடு கின்றனர். தேர்வு என்று வரும் போது 36 விழுக்காடு மாணவர்கள் தங்களின் திறமையை மட்டுமே நம்பியுள்ளனர்.    மாணவர்களின் நாத்திக மனநிலை குறித்து தொழில்நுட்பக் கழக பேராசிரியர் ஒருவர் கூறும் போது இங்கு கல்விபயில வரும் அனைத்து மாண வர்களுக்கும் அவர்களின் எதிர்காலம் குறித்து நிர்ணயித்துவிட்டுத் தான் வருகிறார்கள். தொழில் நுட்பக்கல்லூரி பட்டம் என்பது அவர்களின் வாழ்க்கையை மாற்றக் கூடியது. இங்கு பயிலும் கல்விக்கென்று நல்ல எதிர்காலம் உள்ளது.
ஆகையால் மாணவர்கள் தங்களின் மதநம்பிக்கை களை கொஞ்சம் மூட்டை கட்டி வைத்து விட்டுத் தான் வருகிறார்கள்.  முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை தொடர்ச்சியான உழைப்பு,பாடங்களில் கவனம் செலுத்துதல், அறிவியல் கருத்துக்களை உள்வாங்குதல் போன்றவைகளால் தான் ஒரு தலைசிறந்த மாணவர் களாக அவர்கள் இங் கிருந்து வெளியேற முடி யும் என்பதும், தொழில் நுட்ப கழகங்களில் கூட மதநம்பிக்கை மற்றும் சமயசிந்தனைகளுடன் பயிலும் போது சரியான எல்லையை அடைய முடியாமால் போவதுடன் அவர்களால் சுதந்திர மான மனநிலையுடன் செயல் பட முடியாமல் போய் விடுகிறது என்று கணிப்பு வெளியாகியுள்ளது.

.


-விடுதலை,22.4.15

புதன், 13 மே, 2015

நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! -தஸ்லிமா நஸ்ரீன்


நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்!

-
தஸ்லிமா நஸ்ரீன்
ங்கதேசத்தின் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு சுவோஜித் பக்சிக்கு அளித்த பேட்டியின்போது, என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம், நான் ஒரு நாத்திகர் என்று கூறி யுள்ளார்.
மத அடிப்படைவாதத்தால் பாதிப் புக்கு உள்ளானவரான எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கூறும்போது, மதத்தின்மீதான விமர்சனம் என்பது முசுலீம் அல்லாத அறிஞர்கள் மட்டுமே செய்துவருவதன்று என்று கூறியுள்ளார்.
1994ஆம் ஆண்டில் பங்களாதேஷி லிருந்து எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார். இசுலாம் மதத்தின்மீது விமர்சனத்தை முன்வைத்த காரணத் தால், மதத் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். அதிலிருந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளி நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்.
அண்மைக்காலங்களில் அவர் நாடான பங்களாதேஷிலிருந்து அறிஞர்கள் ஒன்று நாட்டைவிட்டு வெளியேறு கிறார்கள் அல்லது அங்கேயே  இருப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்கிற நிலைமை உள்ளது.
நாத்திக இணைய எழுத்தாளர் அகமத் ரஜீப் ஹைதார் என்பவர் இணையத்தில் தன்னுடைய பிளாக்கில் தாபா பாபா என்கிற பெயரில் எழுதி வந்தார். அவர் ஷாபாக் போராட்டத் தின்போது   2013 ஆம் ஆண்டில்  தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
அதேபோன்று நாத்திக இணைய எழுத்தாளரான அவிஜித் ராய் பங்களா பிளாக் எனும் வங்க மொழி பிளாக்காக முக்டோ-_மோனா (சுதந்திர சிந்தனை) இணையப் பக்கத்தை உருவாக்கி, நாத்திகக் கருத்துகளை எழுதிவந்தவர். அவர் இந்த ஆண்டில் கடந்த மாதம் தலைநகர் டாக்காவில் மதத்தீவிரவாதக் குழுக்களால் தாக்கப்பட்டு கொல்லப் பட்டார்.
பெண்ணுரிமையாளரும், மதசார்பற்ற மனிதநேயருமான தஸ்லிமா நஸ்ரீன் தற்போது டில்லியில் தஞ்சமடைந்து வசித்துவருகிறார்.
தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தியாளர் சுவோஜித் பக்சியிடம் நேர்காணலின்போது தஸ்லிமா நஸ்ரீன் கூறும்போது, பங்களாதேஷ் இப்போது சுதந்திர சிந்தனையாளர்களுக்கான இடத்தை மிகவும் சுருக்கிக்கொண்டு விட்டது. மற்ற மதங்களைவிட இசு லாம் மதம் மோசமாக இருப்பதில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இல்லை என்று கூறினார்.
கேள்வி: அவிஜித் ராய் குறித்து கூறுங்களேன்.
தஸ்லிமா நஸ்ரீன்: நீண்ட கால மாக அவிஜித் ராயை எனக்குத் தெரியும். செய்தித்தாள்கள் வெளியிடாத நாத்தி கம் மற்றும் மனிதநேயக் கருத்துகள், பணிகளை முக்டோ_மோனாவைத் தொடங்கி அவைகளுக்கான இடத்தை அளித்துவந்தார். அவிஜித் ராய் அறிவியல் எழுத்தாளர், சுதந்திர சிந்தனையாளர், ஒரு நாத்திகர், ஒரு பகுத்தறிவாளர் ஆவார்.
அவை குறித்த விவாதங்கள்மூலம் எதிரானவைகளை உடைத்து நிர்மூலமாக்க விரும்பி, தம் கருத்துகளுக்கான இடத்தை பாதுகாக்க விரும்பினார். பின்னாளில், பிளாக்கி லிருந்து கருத்துகளை நூல்களாக உருவாக்கத் தொடங்கினார். இசுலாம் உள்பட மதம்குறித்த கேள்விகளை  ஒருவருக்கொருவர் எழுப்புவதற்கு முக்டோ_மோனா  இணையம் நுழை வாயிலாக அமைந்தது.
பங்களாதேஷில் குறிப்பிட்ட காலத்தைக் கடந்து, சுதந்திர சிந்தனை யாளர்களுக்கான இடம் மறைந்து வருகிறது. அவிஜித் ராய் அந்த இடத்தை மீண்டும் புதிய தளத்தின்வாயிலாக நிரப் பினார். மிக உன்னதமான அவருடைய பங்களிப்புகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.
கேள்வி: சுதந்திர சிந்தனையாளர் களுக்கான இடம் சுருஙகியது எப் போது? எப்படி?
தஸ்லிமா நஸ்ரீன்: 1980களின் மத்தியில் ஜெனரல் ஹூசைன் எர்ஷாத் காலத்தில் இந்த மாற்றம் ஏற்படுத்தப் பட்டது. மதச் சார்பின்மைக்கான அரசமைப்புச்சட்டம் நீக்கப்பட்டு, இசுலாமிய நாடாக மாற்றப்பட்ட போது, 1969ஆம் ஆண்டில் அதை எதிர்த்து நடைபெற்ற இயக்கத்தைக் கண்ட நான் சாட்சியாக உள்ளேன். 1970களில் புதிய சுதந்திரமடைந்த நாடாக ஆனபிறகு நிலைமை முற்றிலும் மாறியது. மக்கள் தங்களின் கருத்துகளை கூற முடிந்தது.
எப்போதாவது பெண்கள்  பர்தாவை அணிவார்கள். ஆனால், சமூகம் படிப்படியாக மாற்ற மடைந்தது. இசுலாமியச் சமுதாயத்தில் உள்ள பெண்கள் நிலைகுறித்தும், இசுலாம் மதத்தின்மீது நான் எழுதிய விமர்சனங்களும் அவ்வப்போது 1980களில், 1990களின் தொடக்கத்தில் அதிகமாக விற்பனையாகும் செய்தித் தாள்களில் பதிவாயின.
ஆனால், அதை யெல்லாம் இப்போது நினைத்துகூடப்  பார்க்க முடியாது. கருத்துகளை வெளியிடுவதில் சுதந்திரம் என்பது ஒரு காலத்தில் இருந்தது என்கிற நிலை தான் தற்போது உள்ளது.
கேள்வி: அந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது?
தஸ்லிமா நஸ்ரீன்: முன்னேறக் கூடிய சமுதாயத்தில்  குறிப்பிட்ட பிரிவினரே அதற்கு பொறுப்பாவார்கள். 1994 ஆம் ஆண்டில் நான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன். அப் போது ஒட்டுமொத்த சமுதாயமும் அமைதியாகவே இருந்தது. அப்போதே அதை எதிர்த்திருந்தால், அவிஜித் அடித்து கொல்லப்பட்டமை நடந்திருக் காது. ஹூமாயூன் ஆசாத் குறிவைக்கப் பட்டார் அல்லது அகமத் ரஜிப் ஹைதார் இசுலாத்தை விமர்சனம் செய்தமையால் கொல்லப்பட்டார்.
எது எப்படியானாலும், பங்களா தேஷ் நாட்டில் ஏற்படுகின்ற முரண் பாடுகள் மொழியின் அடிப்படையிலா, மதத்தின் அடிப்படையிலா என்பதில் முரண்பாடுகள் உள்ளன.
கேள்வி: இதில் எப்படி தீர்வு காண முடியும்?

தஸ்லிமா நஸ்ரீன்: மதத்தின் பெயரால் கல்லெறிந்து பெண்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். சமத்துவத்துக்கான சட்டமாக இருக்க வேண்டுமே தவிர, மதத்துக்கான சட்டமாக இருக்கக்கூடாது.
பங்களாதேஷ் பிறக்கும்போது மதச்சார்பற்ற  கொள்கையுடன் வங் காளிகளுக்கான நாடாகவே பிறந்தது. 1952லிருந்து இன்றுவரையிலும் வங்க முசுலீம்கள், இந்துக்கள், புத்த மற்றும் கிறித்தவ மதத்தவர்கள் ஆகியோர் நாட்டின் மொழியாக வங்காள மொழி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். உருது மொழியை அல்ல.
எங்களுடைய சுதந்திரத்தை எதிர்ப் பவர்கள் பாகிஸ்தான் இராணுவத்துடன் சேர்ந்து 1971ஆம் ஆண்டில் முப்பது இலட்சம் (மூன்று மில்லியன்) மக்களைக் கொன்றார்கள். அவர்கள்தான் இப் போது பங்களாதேஷை இசுலாமிய மயமாக்குவதில் ஈடுபட்டுக் கொண்டி ருப்பவர்களாக உள்ளார்கள். சுதந்திர சிந்தனையாளர்கள், அறிஞர்களை அவர்கள்தான் கொலை செய்கிறார்கள்.
பாகிஸ்தான் நாடு மதச்சார்புள்ள நாடு. ஆனால், பங்களாதேஷ் அரச மைப்பு மதச்சார்பின்மையில் தொடர்ந்து நீடித்திருக்கவேண்டும். மதத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். மதரசாக்கள் மூலமாக கல்வி புகட்டுவதைவிட, மதச்சார்பற்ற கல்வியையே கட்டாயமாக நாம் அளிக்க வேண்டும். மதத்தீவிர வாதிகளின் புகலிடமாக நாடு மாறு வதற்கு அரசு இடம் கொடுக்கக் கூடாது.
கேள்வி: மதத்தின்மீதான உங்களு டைய விமரிசனம் அதிகப்படியானது என்றும், ஆத்திரத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் மக்கள் கருது கிறார்களே?
தஸ்லிமா நஸ்ரீன்: மதம் பெண் களை ஒடுக்குகிறது. சட்டங்கள் சமத் துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, மதத்தின் அடிப் படையில் இருக்கக்கூடாது. பெண் களுக்கு திருமண உரிமை, மணவிலக்கு உரிமை, குழந்தை பராமரிப்பு மற்றும் மரபுவழி உரிமைகள் இருக்கவேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல், மதத்தின்பெயரால், கல்வீசிப் பெண் களைக் கொல்வதை நிறுத்த வேண்டும்.
இதுவா ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது? நாகரிகமுள்ள எல்லா நாடுகளிலும் அரசுடன் மதம் கொண்டுள்ள உறவு குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அரசுடன் மதத்தைச் சேர்க்காமல் விடுவிக்கப்படுவதுடன் அரசுடன் சேராமல் இருக்கவும் வேண்டும். மற்ற மதங்களை ஆய்வுக்குட்படுத்தும்போது இசுலாம் மட்டும் விதிவிலக்காக இருக் கக்கூடாது.
மதச்சார்பற்ற மனிதநேயத்தின் அடிப்படையில் என்னுடைய கருத்துகள் உள்ளனவாகும். ஆத்திரத்தை ஏற்படுத் துவது என்று கூறினால், அதுதான் முழுமையாக கோபப்பட  வேண்டிய தாக இருக்கும்.
கேள்வி: ஆனால், உங்களுடைய எழுத்துகள் அடிப்படைவாதங்களை வலுப்படுத்துவதாக கூறப்படுகிறதே?
தஸ்லிமா நஸ்ரீன்: அரசுகள்தான் அடிப்படைவாதங்களை வலுப்படுத்தி வருகின்றன. என்னைப்போன்றவர்களை ஆதரிக்கவில்லை. மதத் தீவிரவாதிகள் என்னுடைய தலைக்கு விலை வைக்கும் போது, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், என்மீது அரசு குறிவைத்தது.
அவாமி லீக் கட்சியும், பங்களாதேஷ் தேசியக் கட்சியும் அவர்களோடு கைகோர்த்துக்கொண்டு மக்கள்நல அரசாகத்தான்(?) செயல்பட்டு வரு கின்றன. மேற்கு வங்கத்தில்கூட இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி தலைமையிலான அரசு என்னை வெளியேற்றியது. திப்பு சுல்தான் இமாம் என்னுடைய தலைக்கு விலைகூறியதை  தலைவணங்கி ஏற்றுக்கொண்டார்கள் மார்க்சிஸ்ட்டுகள். அதிலும், மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த உடனேயே இமாமுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
கேள்வி: உங்கள்மீது கூறப்படும் மற் றொரு குற்றச்சாற்று என்னவென்றால், இசுலாமை எதிர்ப்பதன்மூலமாக நீங்கள் வலதுசாரிகளை வலுப்படுத்துவதாகக் கூறப்படுகிறதே?
தஸ்லிமா நஸ்ரீன்: முற்றிலும் முட்டாள்தனமானது.  நான் இந்துமதம் உள்பட எல்லா மதங்களையும் விமரி சனம் செய்கிறேன். இந்து சாமியார் களை, கார்வா சவ்த் மற்றும் சிவராத்திரி போன்ற சடங்குகளையும், குஜராத்தில் முசுலீம்கள்மீதான ஒடுக்குமுறைகளையும்   நான் எதிர்த்துள்ளேன்.
குஜராத் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட் டிய ஷாந்தா கோஷ் கவிஞரிடம் நன் கொடையாக பத்தாயிரம் ரூபாய் தொகையை அளித்துள்ளேன். பங்களாதேஷில் இந்துக்கள்மீதான ஒடுக்குமுறைகளை நான் எதிர்த் துள்ளேன். ஜெர்மன் நாசிக்கள், போஸ் னியா, பாலஸ்தீனம் மீது யூதர்களின் ஒடுக்குமுறைகள், பாகிஸ்தானில் கிறித்தவர்மீதான ஒடுக்குமுறைகள் இவை அனைத்தையும் எதிர்த் துள்ளேன்.
பிகே, வாட்டர் மற்றும் லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிறிஸ்ட் (PK, Water and The Last Temptation of Christ) ஆகிய படங்களுக்கு ஆதரவாக எழுதியும் வந்துள்ளேன்.
தயவு செய்து என்னை முசுலிம் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு நாத்திகர்.
கேள்வி: இந்திய பகுத்தறிவாளர் களான நரேந்திர தபோல்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்தலைவர் கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்பட்ட போது நீங்கள் அமைதியாகத்தானே இருந்தீர்கள்?
தஸ்லிமா நஸ்ரீன்: யார் உங் களுக்கு சொன்னார்கள்? என்னுடைய டிவிட்டரைப் பார்த்து, சரி பார்த்துக் கொள்ளுங்கள். உடனடியாக என்னு டைய கருத்தை பதிவு செய்தேன். அதனாலேயே இந்துத்துவா சக்திகள் என்னை வசை பாடினார்கள். ஆனா லும், இசுலாமிய மதத்தீவிரவாதிகளின் என்மீதான அச்சுறுத்தல் பெரிதாக உள்ளது என்பதும் உண்மை.
பல்வேறு மேற்கத்திய நாடுகளில் இருப்பதுபோல், மேற்கத்திய உலகு மட்டும்தான் இசுலாமிய அடிப்படை வாதத்தை ஆபத்து இருப்பதாக எண்ணு கிறார்களா? அதை ஏற்கமுடியாது. மேற்குலகம் இசுலாமிய அடிப்படை வாதிகளிடம் இருவேறு அணுகு முறைகளில் உள்ளன.
கேள்வி: ஒரு முசுலீம் எழுத்தாளர் என்கிற முறையில் உங்களின் எழுத்து களில் இசுலாம்குறித்த மேற்கத்திய உலகின் கற்பனைகளை எதிரொலிப் பவையாக உள்ளன. மேற்குலகத்தின் விருப்பங்களை சொல்வதற்கு உங்களைக் கட்டாயப்படுத்துகின்றனவா?
தஸ்லிமா நஸ்ரீன்: முசுலிம்கள் அவர்களின் மதத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு மூளை இல்லாத வர்கள் என்று சொல்கிறீர்களா? இசுலாத்தை விமர்சனம் செய்ய முசுலீம் அல்லாத அறிஞர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக எண்ணுகிறீர்களா? அப்படி பார்ப்பது, முஸ்லீம்களின் மீதான விரோதப் போக்காகவே மிக மோசமாக அமைந்துவிடும்.
கேள்வி: பங்களாதேஷ் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
தஸ்லிமா நஸ்ரீன்: நாட்டை ஆளுபவர்கள் முழுமையாக அழிவு வேலைகளைச் செய்துவரும் இசுலா மியத் தீவிரவாதிகளை நீதியின் முன் கொண்டுவரமாட்டார்கள். எப்படி ஆனாலும், அதுதான் கடந்த கால வரலாறு. எதுவுமே நடைபெறாது. அதுமட்டுமன்றி, இயல்பாகவே அரசியலில் தொடர்போடு உள்ளார்கள் என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் வரும் மாதங்களிலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும்.
_இவ்வாறு தி இந்து ஆங்கில செய் தியாளர் சுவோஜித் பக்சி கேட்ட கேள் விகளுக்கு தஸ்லிமா நஸ்ரீன் பதி லளித்தார்.
_ தி இந்து ஆங்கில நாளிதழ், 21.3.2015

-விடுதலை ஞாயிறு மலர்,28.3.15,பக்கம்-2