பக்கங்கள்

செவ்வாய், 23 மார்ச், 2021

மகாத்மா ஜோதி பாஃபூலே, பெரியார், அண்ணல் அம்பேத்கர்


அரசியல் - பொருளாதார ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. சமுதாய - பண்பாட்டு ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிவது இல்லை. உள்ளுறைந்து நிற்கிறது. வெளிப்படத் தெரியும் மேலாதிக்கத்தை கண்டிக்கவும், அதை எதிர்த்துக் கிளர்ந்தெழ வும், எளிதாக மக்களை திரட்ட முடியும், எளிதாகத் தெரியாத பண்பாட்டுச் சமுதாய மேலாதிக்கத்தை அகற்றுவதற்கு மக்க ளைத் திரட்டுவது கடினமானது.

பிரிட்டிஷ் அரசின் (தொடக்கத்தில் ஆங்கிலக் கிழக்கிந்திய குழுமத்தின்) மேலாதிக்கத்தை ஜோதிபா ஃபூலே (1827-1890), மற்றவர்களைப் போலவே எளிதாக இனங்கண்டார். அவருடைய சிறுவயது காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மகாராட்டிரத்தில் பல கிளர்ச்சிகள், சிறு போராட்டங்கள் நடந்தன.  1826இல் உமாஜி நாயக், 1830இல் புனே மாவட்ட மீனவர்கள், 1839 மற்றும் 1846இல் பவ் கரெ, சிமனாஜி ஜாதவ், நானா தர்பரே, 1848இல் பாபு மங்கரே மற்றும் ஏடோஜி மங்கரே ஆகி யோரின் போராட்டங்கள் இவ் வகைப்பட் டனவாகும். இக்கிளர்ச்சிகளின் தாக்கமும், உயர்நிலைப் பள்ளியில், பார்ப்பன ஆசிரி யர்கள் மற்றும் உடன் பயின்ற மாணவர் களின் எண்ணமும் ஜோதிபா ஃபூலேயின் மனதில் ஆங்கில ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற வேட்கையை விதைக்கக் காரணமாயிருந்தன. பேஷ்வாக்களின் ஆட்சி வீழ்ந்த பின்பு இத்தகைய ஒரு கருத் தையே பெரும்பாலான பார்ப்பனர்கள் பரப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் பார்ப்பனரின் திருமண ஊர்வலம் ஒன்றில் தமக்குப் பார்ப்பனர்கள் செய்த அவமான மும், சமுதாய நிலையைப் பற்றிய எதார்த்த நிலையும் ஃபூலேயின் மனநிலையை மாற்றின. சமுதாய மாற்றமைப்புப் பணிதான் மகாராட்டிரத்தில் முதலில் வேண்டப்படு வது என உணர்ந்தார்.

காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தும் (1917-1919), பின் அதில் சேர்ந்தும் (1919-1925) பணியாற்றிய பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879- 1873), அரசியல் ஆதிக்கத்தை அகற்ற முக்கியத்துவம் கொடுத்து அந்த இயக்கத் திற்கு முதலில் ஆக்கம் தேடினார்.

அமெரிக்காவில் கொலம்பியா பல் கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த பொழுது (1913-1916), அண்ணல் அம்பேத்கர் (1891-1956) இந்திய நாட்டின் அரசியல் விடுதலையைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிய நாட்டுப்பற்றாளராகவே இருந்தார்.

மகாத்மா ஜோதிபா ஃபூலே தமது பட்ட றிவால் உணர்ந்தது போன்றே, பெரியாரும் அம்பேத்கரும் தங்கள் பட்டறிவு தந்த படிப்பினையைப் பெற்றனர். சமுதாய ஆதிக்கம் நிலவுகிற இடத்தில் அரசியல் விடுதலையும், பொருளாதார சமன்மையும், உள்ளீடற்றனவாகவும், பயனற்றனவாக வும், நிலையற்றனவாகவும் ஆகிவிடும் என்பதைக் கண்டனர்.

ஆகையால் தங்களுடைய வாழ்வைச் சமுதாய மாற்றமைப்புப் பணிக்கு முழுமை யாக ஈடுபடுத்தினர்.

ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பிறவியின் அடிப்படையிலும், நிறத்தின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படை யிலும் வேறுபாட்டு உணர்வுடன், வேறு படும் வகையில் நடத்தப்பட்டால், அச்சமு தாயத்தில் நல்லிணக்கமும் - ஒற்றுமையும் நிலவுவதற்கு வாய்ப்பில்லை. பிணக்கும், பிளவும், பிரிவுகளும் ஆதிக்கமும் அடக்கு முறையும் சுரண்டலும், அவற்றால் விளை யும் மோதலும் கலகமும் சமுதாயத்தைச் சீரழித்து, அதைச்சார்ந்த மக்களின் வாழ்வை பின்னோக்கியதாகவும் துன்பமு டையதாகவும் ஆக்குகின்றன.

குறிப்பாகப் பிறப்பால் ஏற்றத்தாழ்வும், இழிவும் இருக்கின்ற சமுதாயத்தில் எந்த அளவிற்கு மக்கள் தாழ்வாகக் கருதப்பட்டு அவ்வாறே நடத்தப்படுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் மனித உரிமைகளை இழக்கிறார்கள்; அரசியல், பொருளாதாரம் பண்பாட்டு வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர் கள் ஆகிறார்கள்.

வேதியம், புராணியம், சனாதனம், பார்ப் பனியம் என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்து மதம், சதுர் வர்ணத் தையும் ஜாதியத்தையும் புனிதப்படுத்தும் ஒன்றாகும். இவ்வாறு மத நம்பிக்கையின் பெயரால் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சியா ளர்களால் வருண - ஜாதி ஏற்பாடு முனைப் பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதை ஒரு அடிப்படை கடமையாக இந்திய அரசர்கள் பொதுவாக ஏற்றிருந்தனர். அவ் வாறு ஏற்காத மவுரிய அரசன் பிருகத்ரதன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புஷ்யமித் திர சுங்கா எனும் பார்ப்பனத் தளபதியால் கொல்லப்பட்டான். பிற்காலத்தில் பேரரசர் ஹர்ஷர், பவுத்த மதத்தை ஆதரித்ததால் அதே ஆபத்திற்கு ஆளாக இருந்தார்; ஒருவாறு தப்பினார். இருப்பினும் தங்க ளுடைய கட்டுப்பாடான பவுத்த எதிர்ப்பு நிலைப்பாட்டை பயன்படுத்தி ஹர்ஷரின் பவுத்த ஆதரவுப் போக்கை பார்ப்பனர்கள் நீர்க்கச் செய்தனர். வர்ண தர்ம ஆட்சியை நீடிக்கச் செய்தனர்.

இந்திய துணைக் கண்டத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என எல்லாப் பகுதி களிலும் பார்ப்பனிய மனுதர்மத்தின் படியே அரசர்கள் ஆளவேண்டிய நிலைக்கு  புரோ கிதக் கூட்டம் மத ஆதிக்கம் செலுத்தியது. கடவுளைப் பற்றிய கதைகளும், மத ஆதாரங்களான வேத, இதிகாச, புராண, தர்ம சாஸ்திரங்களும், வர்ண ஏற்றத் தாழ் வையும், ஜாதிப் பிரிவுகளையும் நியாயப் படுத்தின. மறுபிறவி முன்வினைப் பயன் முதலிய மதக் கோட்பாடுகள் அநியாயங் களுக்கு ஆதாரங்களாகக் காட்டப்பட்டன.

மனித சமனியத்தை வலியுறுத்திய இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சுல்தான்களும், மொகலாயர்களும், நவாப்புகளும், நிஜாம் களும் ஆண்ட காலத்தில் கூட ஜாதியின் பாற்பட்ட பிறவி ஏற்றத்தாழ்வுகளும், பெண் கொடுமையும் நீடிக்கவே செய்தன.

ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பின்பு வர்ண தர்மத்தை நிலைநாட்டுவது ஆட்சியின் கடமையாக இல்லை. ஒரு குலத்திற்கு ஒரு நீதி என்ற வகையில் அமைந்த குற்றவியல் சட்டங்கள் தள்ளப்பட்டன. சட்டத்தின் ஆட்சி  (Rule ofLaw)  சட்டத்தின் பார்வை யில் அனைவரும் சமம்  (All are equal in the eyes of Law) என்பதும் நீதி நிர்வாகத்தில் அடிப்படைகள் ஆயின. இருப்பினும் மதத் துறையிலும், நபர் சார்ந்த சட்டங்களிலும் (Personal Laws)வருண தர்மம் சார்ந்த இந்துமத சட்டங்கள் தொடர்ந்து பின்பற்றப் பட்டன. குடும்ப வாழ்வு. வாரிசுரிமை .கோயில். மடம், சமுதாய உறவு, அந்தஸ்து முதலியன தொடர்பான சட்டங்களும், நடப்புகளும் இந்து மதத்தின் சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் முத லியவற்றின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆகையால் ஆயிரக்கணக்கான ஜாதி களின் கூடாரமாகவே ஆங்கில ஆட்சி யிலும் இந்தியா தொடர்ந்தது.

 சிலராக இருந்தாலும், மதம் மற்றும் சமுதாயத் துறையில் ‘பிராமணர்’ என்ற மேல் வருண நம்பிக்கையைப் பயன்படுத் திப் பார்ப்பனர்கள் மிக உயர் அந்தஸ்தை யும், அதிகாரத்தையும், செல்வாக்கையும், சலுகைகளையும் பிறவியின் காரணமாகப் பெற முடிந்தது. அத்துடன் கல்வியில் பல நூற்றாண்டுக்கால பாரம்பரிய முற்றுரி மையை அவர்களே பெற்றிருந்தனர். அவர்களுக்கு எவ்வித உடல் உழைப்பும் இல்லை; ‘தான, தர்மங்களின்’ பயன்களை முழுமையாக நுகர்ந்தவர்களும் அவர் களே. இந்தச் சூழலில் ஆங்கிலேயர் நிறு விய கல்வி நிறுவனங்களின் பயனையும் அவர்களே பெற முடிந்தது. நவீன ஆங் கிலக் கல்வியின் பயனாகப் பதவிகளைப் பெற்ற பார்ப்பனர்கள், நிருவாகங்களை நிரப்பினார்கள், அறிவு சார்ந்த தொழில் களிலும், ஊடகங்களிலும், ஆதிக்கம் செலுத்தினர். அந்த ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதிலும், சூத்திர ஜாதியின ரையும் பஞ்சம ஜாதியினரையும், எப் பொழுதும் போலவே தாழ்ந்த மற்றும் இழிந்த நிலையிலேயே வைத்திருப்பதிலும் தங்கள் கருத்தை செலுத்தினர். அதற்கான சாதனங்களை உண்டாக்கினர்; நடப்புகளை மேற்கொண்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியத் தேசிய இனங்கள் மறுமலர்ச்சியைக் காணத் தொடங்கின. மேலைநாட்டுக் கல்வி, மற்றும் நிருவாகத்தின் தாக்கத்தால் இந்தியாவில் புதிய விழிப்பு ஏற்பட்டது. மெய்மை சார்ந்த அறிவுத் தெளிவை உண்டாக்கும் கல்வி யைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது. புவியி யல், வேதியியல், இயற்பியல், வரலாறு, பொறியியல், வானியல், உயிரியல், உளவி யல் என்ற வகையில் பயன்மிகு படிப்புகள் அறிமுகமாயின. கதை அளப்புகளுக்கு மாற்றாக இந்தியத் திறனாய்வு புதிய முறையில் அறிமுகமாயிற்று. மத நம்பிக் கைகளையும், நடப்புகளையும் கண்மூடித் தனமாக ஏற்பதற்கு மாறாக, ஒப்பிட்டுப் பார்க்கும் போக்கு உண்டாயிற்று. தங்களு டைய நம்பிக்கைகளையும், நடப்புகளையும் வாழ்க்கை முறைகளையும் திறனாய்வுக்கு உட்படுத்தி, மாற்றவும் திருத்தவுமான நிலை உருவாயிற்று. புதிய மதிப்பீடுகள், கொள் கைகள், வேட்கைகள், இலக்குகள் முகிழ்த் தன. மறுவுலகச் சிந்தனைக்கு மாற்றாக, இவ் வுலக வாழ்வைச் செழுமைப்படுத்தக்கூடிய உரிமை, சமனியம், உடன்மை,  Liberty. Equality. Fraternity  எனும் முழக்கங்கள் எண்ணங்களைக் கவ்வின. ஆணுக்குப் பெண் என்றும் அடங்கிப் போக வேண்டும், மேல் வருணத்தாரின் நலனுக்கே சூத்திர வருணத்தார் பிறப்பிக்கப்பட்டுள்ளனர் - என்பன போன்ற மத நம்பிக்கைகள் கேள்விக்குறிகளாயின.

இந்தச் சூழலில் படித்தவர்களிடையே பிறந்த மறுமலர்ச்சியின் காரணமாக, மதத் திலும், சமுதாயத்திலும் மாற்றங்கள் தேவை என்ற விழைவு தோன்றியது. அதன் விளை வாக சீர்திருத்த இயக்கங்கள் அமைந்தன. அவை மேல்தட்டு மக்களுக்கு ஆனவை யாகவும், மிதமான போக்கு உடையன வாகவும் இருந்தன. உடன் கட்டை ஏற்று வதைத் தடுக்க (1829) ஆங்கில ஆட்சிக்குத் துணை நின்றவரும், பிரம்ம சமாஜத்தை நிறுவியவருமான ராம்மோகன் (1772-1833), சிலை வழிபாட்டையும், பல கடவுள் நம் பிக்கையையும் கைவிட வேண்டினார். (இவருடைய பெயருக்கு முன்னால் உள்ள ராஜா எனும் பட்டத்தை மொகலாயப் பேரரசு அவருக்கு வழங்கியது. பெயருக்குப் பின்னால் இருக்கும் ராய் என்ற சிறப்பை வங்காள நவாப் அவருக்கு அளித்தார்) அவருடைய நிலையை கேசவ் சந்த்ர சென் (1838-1884) ஆதரித்தார். வங்காளத்தின் மற்றொரு சீர்திருத்த வாதியான பண்டிட் ஈஸ்வர் சந்தர் வித்யா சாகர் (1820-1891) மற்றும் பம்பாயில் (மும்பையில்) வாழ்ந்த பார்சி சமூகத்தவரான பேராம்ஜி எம்.மலபாரி (ஙிமீலீக்ஷீணீனீழீவீ வி.விணீறீணீதீணீக்ஷீவீ, 1853 -1912) ஆகியோர், பெண்களின் கல்வி, குழந்தை மணத் தடுப்பு, விதவை மறுமணம் ஆகிய சீர்திருத்தங்களைச் செய்ய உழைத்தனர். தெலுங்கு மொழியின் மறுமலர்ச்சி எழுத் தாளரான கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு (1848 - 1919) ஆந்திரத்தில் இப்பணியை செய்தார். நீதிபதியாகவும், கல்வியாளரா கவும் திகழ்ந்த மகாதேவ கோவிந்த ரானடெ (1842 - 1901) மகாராட்டிரத்தில் இவ்வகைப் பட்ட சீர்திருத்தத்தை பிரார்த்தனை சமா ஜம் என்ற அமைப்பின் வழியே செய்ய முற்பட்டார்.

மேல்மட்டத்தினரிடையே இத்தகைய மிதமான மத - சமுதாய மாற்றத்திற்கான முயற்சிகள் நடந்த பொழுது, மத மீட்பு (ஸிமீஸ்ணீறீவீsஸீ) முயற்சியும் நிகழ்ந்தது. மத மீட்பு முயற்சி, நாளடைவில் மதத்தை அரசிய லுடன் இணைக்கும் போக்கிற்கு இட்டுச் சென்றது. ராமகிருஷ்ணன் பரமஹம்சர் (1836 - 1886), சுவாமி விவேகானந்தர் (1863 - 1902), ஆரிய சமாஜத்தை நிறுவியவரும், சத்தியார்த் பிரகாஷ் எனும் நூலை (1877) எழுதியவருமான சுவாமி தயானந்த சரஸ் வதி (1825 - 83), ஆனந்த மடம், கிருஷ்ணா சரித்திரம், தர்ம தத்துவம், சிறீமத் பகவத் கீதா ஆகிய நூல்களை வங்காள மொழியில் எழுதிய பங்கிம் சந்திர சட்டோ பாத்யாயர் (1838 - 94), முதலியவர்களின் கருத்துக்கள் இந்து மதத்தின் பெருமையை விளம்பின; மத மீட்பு முயற்சிக்குத் துணையாயின. மதத்தை அரசியலுடன் கலப்பதற்கு வழி கோலின.

இதன் காரணமாக இந்து மதப் பின்னணியில் அரசியல் உரிமை கோரும் பழக்கம் உருவானது. நீதிபதியாக இருந்த வரும்,  பம்பாய் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களில் முதல் இந்தியருமான காஷிநாத் திரம்பக் தெலாங் (K.T.Telang.  1850-93) அப்படிப்பட்டவர்களில் ஒரு முன்னோடி ஆவார். அரசியலில் தன்னுரி மையை நோக்கி முன்னேறுவதற்குச் சமுதாய சீர்திருத்தம் ஒரு தடையல்ல என்ற நிலைப்பாட்டை 1886இல் அவர் தெரி வித்தார். பாலகங்காதர திலகர் (1856 - 1920) சமனியம் சார்ந்த மத, சமுதாயச் சீர்திருத் தங்களையும் ,பகுத்தறிவின் அடிப்படை யிலான மாற்றங்களையும் எதிர்த்ததுடன், இந்துமத அடையாளங்களை உண்டாக்கி, அவற்றின் அடிப்படையில் அரசியலுக்கு பெருமக்களைத் திரட்டத் தொடங்கினார். பீஜப்பூர் சுல்தானையும், மொகலாய பேரரசர் அவுரங்கசீப்பையும் எதிர்த்துப் போரிட்டு ஓர் அரசை உண்டாக்கிய சத்திரபதி சிவாஜியை வீரம் மிக்க ஓர் இந்து அரசனாக அறிமுகப்படுத்தி மக்களுக்கு மத எழுச்சி ஊட்டினார். கணபதி வழி பாட்டைப் பிரபலப்படுத்தி ஆண்டுதோறும் ஆரவாரமான விழா எடுத்துக் கூட்டத்தைத் திரட்டி அரசியலுக்குப் பயன்படுத்தினார். இந்து மதப் பழைமையையும் ஆரிய நாகரிகத்தினையும் போற்றினார்.

ஆகையால் மத மீட்பு அல்லது மதத்தின் புதுப்பிப்பு எனும் நடப்பு, சீர்திருத்தங்கள் மிதமான அளவில் நிகழ்வதற்குக் கூட உத வும் வகையில் அமையவில்லை. வேதிய, சனாதன மதத்தின் கீழ் வர்ண தர்ம சமுதாய ஏற்றத்தாழ்வுகள், இழிவுகள், வாய்ப்புக் கேடுகள் தொடரும் நிலையிலேயே, பார்ப்பனிய உயர்ஜாதியாரின் மேலாதிக்கம் தொடரும் வகையில், அரசியல் உரிமை யைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்தன.

இந்து மதக் கோட்பாடுகளையும் நம் பிக்கைகளையும், சம்பிரதாயங்களையும், நடப்புகளையும், மரபுகளையும் ஒட்டியோ அல்லது இயன்ற வரை மாற்றியோ சமுதா யத்தில் சீர்திருத்தங்களை செய்யும் முயற்சி கள் இத்தகைய நிலைக்குக் கொண்டு சென்றன.

ஆனால் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், நம்பிக்கைகள், மரபுகள் முதலியன சமுதாயச் செம்மைக்கு ஊறு விளைவிப்பன என்றும், பிறவியில் ஏற்றத் தாழ்வுகளைக் களைய வேண்டுமானால், அதன் ஆதாரக் கொள்கையான வருண தர்மம், வினைப்பயன் ஆகியவற்றை ஒழித்து, மனித மாண்பு, சுயமரியாதை, உரிமை, சமனியம், மனிதநேயம் முதலிய வற்றின் அடிப்படையில் புதிய சமுதாயப் பண்பாட்டு உறவுமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியவர்கள் மகாத்மா ஜோதிபா ஃபூலே, பெரியார் ஈ.வெ.ராமசாமி. அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் ஆவர்.

ஜீவனோபாயம்


சு.அறிவுக்கரசு

ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் வேரூன்றிய நேரம் ஒட்டுண்ண¤ ஆரிய இனமான பார்ப்பனர்கள், இங்கிலீஷ் மொழியைப் படிக்கத் தொடங்கினர். எழுத்தாளர் “கல்கி” கிருஷ்ணமூர்த்தி “அலை ஓசை” எனும் பெயரில் சமூக நாவல் ஒன்றை எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலில் இடம்பெற்ற, பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழி படிக்கத் தொடங்கியதைக் குறிப்பிட்டிருப்பார். இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் ஜெர்மனியின் ஹிட்லர் வெற்றி பெற்ற போது, சில நாடுகள் சண்டையிடாமல் சரணடைந்தன. அப்போது உலகம் முழுமையும் ஹிட்லரின் ஆதிக்கத்தில் வந்துவிடுமென்ற கருத்து - பீதி பரவியது. உடனே மயிலாப்பூர் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழி கற்றுக்கொண்டால் ஹிட்லர் அரசாங்கத்தில் பணி செய்யலாம் என்கிற எண்ணத்தில் படிக்கத் தொடங்கினார்கள் என்று எழுதியிருப்பார். பார்ப்பனரான அவரே பார்ப்பனரைக் கிண்டல் செய்து எழுதினார். என்றாலும் அது பார்ப்பனரின் வாழ்வு முறையைத் தெளிவாக படம்பிடித்து காட்டியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில்தான் பார்ப்பனர் ஆங்கிலேயர் ஆட்சியில் கொடிகட்டிப் பறந்தனர். அவர்களில் ஓர் ஆள் தஞ்சை மாவட்டம் வலங்கைமான் ரைட் ஆனரபிள் வி.எஸ்.சீனிவாசா சாஸ்திரி என்பார். ஆங்கிலேயரை விட அருமையாகவும் சரியாகவும் ஆங்கில மொழியை பேசுபவர் என்று பார்ப்பனர்கள் பூரிப்புடன் கூறுவர். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முதல்வர் ஏ.ஏ.ஹால் என்பவர் சில சொற்களை உச்சரித்த முறை தவறு என்று இவர் சொன்னாராம். சரியான உச்சரிப்பு தானென்று முதல்வர் கூறினாராம். ஆங்கில அகராதியை வைத்து சரிபார்த்தபோது சீனிவாச சாஸ்திரி கூறியதுதான் சரி என நிரூபணம் ஆனதாம். டி.என். ஜகதீசன் என்பார் எழுதிய நூலின் எட்டாம் பக்கத்தில் இச்செய்தி உள்ளது. ஆனாலும் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் மொழியைச் சரிவரப் பேச மாட்டார்கள். சமஸ்கிருதம் கலந்து பேசத்தான் தெரியும். சமஸ்கிருதமாவது சரியாகத் தெரியுமா என்றால் கிடையாது. பெயரளவுக்கு மட்டுமே தெரியும். ஆனால் இங்கிலீஷ் மட்டும் எப்படி? அதுதான் சோறு போடுகிறது. அது அவாளுக்கு ஜீவனோபாயம். (பிழைக்கும் வழி)

பி.எஸ்.சிவசாமி அய்யர் 1914இல் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பேசும்போது, சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்றார். எதற்காக என்றால், அதில்தான் ஹிந்து மதத்தத்துவமும், கோட்பாடுகளும் பதிவாகி உள்ளனவாம். எனவே ஒவ்வொரு ஹிந்துவும் சமஸ்கிருதம் படிக்க வேண்டுமாம். அவர் படித்தாரா? ஆங்கிலேயர் ஆட்சி என்பதால் இங்கிலீஷில் சட்டம் படித்து விட்டு லட்சம் லட்சமாய்ச் சம்பாதித்தார் என்பதுதானே வரலாறு! தமிழ் அறிவு கொஞ்சமும் இல்லாத அவர் தமிழைப் பற்றிக் குறை கூறினார். சமஸ்கிருதம் பெற்றெடுத்தது என்றார். தமிழில் “கமலாம்பாள் சரித்திரம்“ எனும் புனைகதை எழுதிய ராஜம் அய்யர், மரத்தின் இலை, தழைகளிடையே தலைத்தூக்கும் மலர் போன்றது சமஸ்கிருதம் என்றார். (கமலாம்பாள் சரித்திரம் நூல் பக்கம் 15) இந்நூல் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. “சூத்திர மொழியான தமிழ் மொழியை தன்னால் பார்ப்பனரல்லாதார் போல் பேச இயலாது” என ஒத்துக் கொண்டவர். (மேற்கண்ட நூலின் பக்கம் 19) தமிழில் நாவல் எழுதினார். ஜீவனோபாயம் (பிழைக்கும் வழி) என்பதல்லாமல் வேறென்ன? ஷெல்லியையும், சேக்ஸ்பியரையும் படித்த நான் (சுப்பிரமணிய) பாரதியை கவிஞர் என ஏற்க மாட்டேன்” என்று எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. 1941இல் தமிழ் இசைக்காக போராட்டம் நடத்திய செட்டி நாட்டரசர், பெரியார் முதலியோருடன் சேர்ந்து போராடியவர் இவர். அப்போது முத்து கிருஷ்ணய்யர் என்பவர் ஒரு கடிதம் எழுதினார். “தமிழர் என்றும் தமிழ் மக்கள் என்றும் யாரை நீங்கள் உங்கள் பத்திரிகையில் எழுதுகிறீர்கள்? உங்களையே பார்ப்பனரல்லாதார்” என்று நினைக்கிறார்கள் சிலர். ஏனென்றால், நீங்கள் தமிழ் இசை பற்றி பேசியும் எழுதியும் வருகிறீர்கள். தமிழிசை இயக்கம் என்பது பார்ப்பனரல்லாதாரின் இயக்கம் என்றே அவர்கள் கருதுகிறார்கள். ஆகவே “கல்கி” ஏடு பார்ப்பனருக்கு எதிரான ஏடு என்று நினைக்கின்றனர். என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து சரியான விளக்கத்தை தரவும்“ என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளார் (மா.சு.சம்பந்தம் எழுதிய “தமிழ் இதழியல் வரலாறு” - 1987, பக்கம் 92-93) என்றால் என்ன பொருள்? கல்கி கிருஷ்ணமூர்த்தி பார்ப்பனராக இருந்தபோதிலும், தமிழ் மொழிக்காக பரிந்து பேசியதால் அவரைக் கேள்வி கேட்டனர். அவரது பிறப்பு பற்றி கேள்வி கேட்டனர் என்றால் இத்தகைய பார்ப்பனத் தனத்திற்கு என்ன பெயர்? “வடமொழியால் வாழா நாய்கள்” என்ற புரட்சிக் கவிஞர் போல் சாட வேண்டும், தானே!

1879இல் வெளிவந்த, தமிழின் முதல் நாவல் “பிரதாப முதலியார் சரித்திரம்“ மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதியது. அதில் ஒரு காட்சி - வழக்கு மன்றம் போய் வழக்கு விசாரணையில் கலந்துகொண்டு திரும்பிய காட்சியை விவரிக்கும்போது, குருடன் நாடகம் பார்க்கப் போனது போலவும், செவிடன் சங்கீதம் கேட்கப¢போனது மாதிரியும் இருந்தது என்று வரும். நாவல் எழுதியவரே முன்சீப் (நீதிபதி) வேற்று மொழியில் விசாரணை நடந்ததைக் குறிப்பிட்டார். ஞானாம்பாள் எனும் கதாபாத்திரம் பேசும்போது, “இங்கிலீஷ் படித்தவரை இங்கிலாந்துக்கு அனுப்பலாம், பிரெஞ்ச் படித்தவரை ஃபிரான்ஸ் அனுப்பலாம் .லத்தினும், சமஸ்கிருதமும் படித்தவர்களை எங்கு அனுப்புவது? இந்த மொழிகளைப் பேசும் மக்களுக்கு சொந்த நாடே கிடையாதே! பெயரில்லாத தீவு எதற்காகவாவது துரத்தத்தான் வேண்டும் போலிருக்கு” என்று கூறும் மக்கள் மொழி ஒன்றாகவும் ஆட்சிமொழி வேறாகவும் அமைந்திருந்த அவலத்தை எடுத்துக் காட்டும் வரிகள். அதே அவலம் இன்னும் நீடிக்கும் அவலம். நீதிமன்றத்தை விடுங்கள். “கடவுள்” என்கிறார்களே, அதனைத் தாய்மொழியில் வழிபட விடுகிறார்களா, பார்ப்பனர்கள்? 1970இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றபோது பார்ப்பனர்கள் எதிர்த்தார்களே! தேவ பாஷையில் செய்யவேண்டும் என்றார்களே! அதுவும் “ஜீவனோபாயம்“ தானே!

மக்களின் மொழி தெரியாத கடவுளை வெளியேற்ற வேண்டும், ஒழிக்க வேண்டும் என்றவர் பெரியார்! மொழிப் பற்றுக் கொண்ட பக்தர்கள் யோசிக்க வேண்டும்.

“பயங்கர பார்ப்பனர்கள்” எனப் பொருள்படும் The Dynamic Brahmins எனும் நூலை பி.என்.நாயர் என்பார் எழுதினார், 1959இல், பக்கம் 78-79களில் அவர் “சமூகத்தைக் கட்டுப்படுத்திடப் பார்ப்பனர்களின் செயல்முறை என்ற வகையில் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டது. கலாச்சாரத் துறையில் அவர்கள் வெற்றி பெற்றவர்களாகி விட்டனர்” என்றே குறிப்பிட்டுள்ளார். தம் மொழியைக் கொண்டு பிறர் மொழிகளை மதிப்பிழக்கச் செய்துவிட்டனர். அந்த மொழிச் சொற்களைக் கலந்து பேசுவது பெருமை தரத்தக்கது என அடிமையாக்கப்பட்ட பெரும்பான்மையினர் கருதும் சூழலை உருவாக்கிவிட்டனர்.

இம்முயற்சிக்குப் பார்ப்பனர்கள் பக்தியை பயன்படுத்தினர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சிலர் செய்த பக்தி இலக்கியங்கள் இப்படுபாதகத்தைச் செய்தன. மணியும் பவழமும் கலந்தாற்போன்ற அழகு தமிழ் என்றனர். மணிப்பிரவாளம் என்றனர். பார்ப்பனரல்லாதார் ஏமாந்தனர். ஏமாற்றப் பட்டுள்ளோம் என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அறிந்தனர். கலப்படத் தமிழைத் தூய்மை செய்ய முயற்சிகள் எடுத்தனர். தனித்தமிழ் இயக்கம் நடத்தினர். மறைமலை அடிகள் தொடங்கிப் பாவாணர் பெருஞ்சித்திரன் உட்பட்டோர் உழைத்தனர். ஓரளவு வெற்றி பெற்றனர். என்றாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் சமஸ்கிருதம் மீண்டும் ஆதிக்கம் பெற்றிடும் நிலை. இப்படி வரும் என எதிர்பார்த்த தீர்க்கதரிசி - தொலைநோக்காளர் - பெரியார் 1927இல் எச்சரித்தார். அந்த ஆபத்து வந்தேவிட்டது.

மண்ணுக்குரிய மக்கள் ஹிந்து மதத்தவரின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹிந்து மதத்திற்கே உரிய கெடுதலான ஜாதிப் பிளவுகள் அவர்கள் மீதும் திணிக்கப்பட்டன. ராஜராஜ சோழன் காலத்தில் இடங்கை ஜாதிகள் என்றும் வலங்கை ஜாதிகள் என்றும் பிரிக்கப்பட்ட ஜாதிகளுக்குள் மோதல்கள் நடைபெறுவதும் அடங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. டாக்டர் அம்பேத்கர் கூறியதுபோல, ஜாதிகளின் தொகுப்பே ஹிந்து மதம். ஜாதி அமைப்பு குலைந்தால் ஹிந்து மதமே குலைந்து போகும், எனவே மதம் பற்றி கவலைப்படுவோர் யாரும் ஜாதி பற்றிப் பேசுவதில்லை. ஜாதி, மத விஷயங்களில் தலையிடுவதில்லை என 1858இல் அளித்த வாக்குறுதியை மீற ஆங்கில அரசும் தயாராக இல்லை. எனவே பார்ப்பனரல்லாத பெரும்பான்மையினருக்குக் கோவிலுக்குள் செல்லவோ, வழிபடவோ தடை விதித்திருந்தனர் பார்ப்பனர்கள். கோயில் நுழைவுக் கோரிக்கை எழுந்தபோது பார்ப்பனர்களுடன் சேர்ந்து பார்ப்பனரல்லாதாரும் எதிர்ப்பு காட்டினர். பார்ப்பனர்களுடன் சேர்ந்த பார்ப்பனரல்லாதார் சற்சூத்திரர்கள் என்று பெயர் பெற்றனர். சூத்திரர் எனும் சொல்லுக்கு மனு சாஸ்திரம் கூறும் பல பொருள்களில் தாசிபுத்திரன் என்பதும் ஒன்று. எனவே, சற்சூத்திரன் என்றால் நல்ல தாசிப்புத்திரன் என்று தானே பொருள்படும்?

இத்தகையக் கேவலத்தை ஜரிகை அங்கவஸ்திரமாக அணிந்துகொண்ட பார்ப்பனரல்லாதாரின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா? பார்ப்பனரின் அடிமைகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பார்ப்பனரல்லாதாரின் செயலால்,  மொழி அழிந்தது. பண்பாடு கெட்டது. உரிமைகள் பிடுங்கப்பட்டன. வெறும் ஜடப்பொருளாக, உயிர் இருந்தும் உணர்வோ, உணர்ச்சியோ அற்ற பிண்டங்களாக பார்ப்பனரல்லாதார் ஆக்கப்பட்டு விட்டனர். அரசியல், பதவி, அதிகாரப் பதவி எல்லாம் பெற்றிருந்தாலும் சமுதாயத்தில் சூத்திரனாக, பஞ்சமனாக கேவலப்படுத்தப்படும் நிலை தான் இன்றளவும். அதனை மாற்ற வேண்டும். பறையர் எனும் சொல்லைவிட சூத்திரன் எனும் சொல் அசிங்கமானது என பெரியார் கூறியதைக் கருத்தில் கொண்டு அதை ஒழிக்கப் பாடுபடுவோம்.

திங்கள், 22 மார்ச், 2021

பாராட்டு’ கருதாமல் பொதுப் பணி புரிவோம்!

நீதி பரிபாலனம் நூறு ஆண்டுகளுக்கு முன்

வெள்ளி, 19 மார்ச், 2021

சித்தர்களும் சமூகப் புரட்சியும்



சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : சித்தர்களும் சமூகப் புரட்சியும்



நூல்: சித்தர்களும் சமூகப் புரட்சியும்


ஆசிரியர்: வழக்குரைஞர் இரா.சி.தங்கசாமி


பதிப்பாளர்:  மொழிஞாயிறு பதிப்பகம்,


 பால்நகர், சங்கர்நகர் - 627 357.


 திருநெல்வேலி மாவட்டம்.


 அலைபேசி : 93603 58114


  பக்கங்கள்: 200 விலை: ரூ.500/-


 


தமிழக வரலாற்றுத் திரிபுகளிலிருந்து விடுதலை


(களப்பிரர் ஆட்சிக் காலம் பொற்காலம்)


கி.பி.20 ஆம் நூற்றாண்டு வரையில் மறைந்து போயிருந்த களப்பிரர் அரசரைப் பற்றின வரலாற்றுச் செய்தி பாண்டியருடைய செப்பேடுகள் கிடைத்த பிறகு அவைகளிலிருந்து தெரிய வந்தன. சில ஆண்டுகளுக்குப் பிறகு தளவாய்புரச் செப்பேடு கிடைத்ததும் இந்தச் செப்பேட்டிலிருந்தும் களப்பிர அரசரைப் பற்றி அறிகிறோம். களப்பிரர் பற்றிய விளக்கங்கள் வேள்விக்குடிச் செப்பேடுகளிலும் பல்லவர்கள் மற்றும் சாளுக்கியர் ஆகியோருடைய செப்பேடுகளிலும் கிடைத்துள்ளன. பாண்டியன் கடுங்கோன் பாண்டிய நாட்டைக் களப்பிரரிடமிருந்து மீட்டுக் கொண்ட போது ஏறக்குறைய அதே காலத்தில் தொண்டை நாட்டு அரசனான பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டான். இந்த வரலாற்றைப் பள்ளன் கோவில் செப்பேடும் வேலூர்பாளையம் செப்பேடும் கூறுகின்றன. ஏறத்தாழ கி.பி. 250 முதல் கி.பி. 575 வரை தமிழ்நாட்டைக் களப்பிரர் ஆண்டனர் என்று கருதுவது தவறாகாது என அறிஞர் மயிலை வேங்கடசாமி அவர்கள் கூறுகிறார். களப்பிரர் ஆட்சியின் கீழ் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, துளுநாடு, கொங்குநாடு, இரேணாடு, ஈழநாடு ஆகியவை அடங்கும்.


களப்பிரர் காலம் என அழைக்கப்படுகின்ற கி.பி. 250-550 வரை 300 ஆண்டுகள் இருண்ட காலம் எனவும், கலியரசர்களின் ஆட்சிக்காலம் எனவும், தமிழ் நாகரிகம் அழிக்கப்பட்ட பிறமொழி மன்னர்களின் காட்டாட்சிக்காலம் எனவும், தமிழக வரலாறெழுதிகளால் இதுவரை பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இக்கருத்தை வலியுறுத்தும் வரலாற்றாசிரியர்களில் சேக்கிழார், நீலகண்ட சாஸ்திரி, மு.அருணாசலம் பிள்ளை , அவ்வை துரைசாமிப் பிள்ளை , அ.சா.ஞானசம்பந்தன், கே.கே.பிள்ளை , குணா போன்றோர் அடங்குவர்.


பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சோழன் செங்கணான், சேரமான் கோக்கோதை மார்பன் கொங்குநாட்டு கணைக்கால் இரும்பொறை ஆகியோர் கடைச் சங்க காலத்தின் இறுதியில் இருந்த தமிழரசர்கள். இவர்களுக்குப் பிறகு ஏறத்தாழ கி.பி. 250 இல் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியை நிறுவினர்.


களப்பிரர் கலியரசர்கள் என்றும், அவர்களது ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என்றும் கூறுவதற்கு அடிப்படையான காரணம் வேள்விக்குடிச் செப்பேடு தரும் செய்தியாகும். இச்செப்பேடு வடமொழியான சமற்கிருதம் தென்மொழியான தமிழ் இரண்டிலும் எழுதப்பட்டு பதினெட்டு பக்கங்களில் அடங்கியுள்ளது. ஆரியப் பிராமணர் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும், பண்பாட்டிற்கும் கெடுதலை உண்டாக்கியவர்கள் கலியரசர்கள் எனக் கூறினர்.


களப்பிரர் காலத்தைப் பற்றி ஆய்வு செய்துள்ள பேராசிரியர் சத்தியநாதய்யர், டாக்டர் மா. இராசமாணிக்கனார், டாக்டர் க.ப.அறவாணன், மு. இராகவ அய்யங்கார் போன்ற ஆய்வறிஞர்கள் களப்பிரர் தமிழர்கள் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர். சேர, சோழ, பாண்டியர் களப்பாளரைத் (களப்பிரரை) தமிழ்ச் செய்யுளில் பாடினபடியால் களப்பிரர் தமிழர்கள் என பி.டி.சீனிவாச அய்யங்கார் கூறுகிறார். எஸ்.கே.அய்யங்கார் களப்பிரரை திருப்பதி மலைப் பகுதியைச் சேர்ந்த களவர் என்கிறார். டி.என்.சுப்பிரமணியன் களப்பிரர் சங்கம் மருவிய கால ஜைனர்கள் எனக் கூறுகிறார்.


தமிழ் இலக்கியத்திலும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறவர்களும் வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்களுமான களப்பாளர் என்பார் களப்பிரர் என்ற பெயரில் விளங்குகின்றனர் என்று சிலர் கருதுகின்றனர். தொண்டை நாட்டில் களந்தை என்னும் இடத்தில் கூற்றுவன் என்றொரு மன்னன் ஆண்டு வந்தனன் எனவும், அவனே கூற்றுவநாயனராகத் திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றான் எனவும் பெரிய புராணம் கூறும். இவன் களப்பிரர் குலத்தைச் சேர்ந்தவன் என்று சிலர் கருதுகின்றனர்.


பாண்டியனுடைய மீன் கொடியையும், சேரனுடைய வில் கொடியையும், சோழனுடைய புலிக் கொடியையும் களப்பிரர் தங்களுடைய கொடியாகக் கொண்டிருந்தனர் என்பதைக் “கெடலருமா முனிவர்’’ என்று தொடங்கும் செய்யுளால் அறிகிறோம். பாண்டியர் வரலாறு என்னும் தமது நூலில் காவேரி விளை நிலப்பகுதியை ஆண்ட களப்பாளர் என்பாரே களப்பிரர் ஆவார் என டி.வி.சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார். கன்னடப் பகுதியைச் சேர்ந்த களபப்பு நாடு பகுதியைச் சேர்ந்தவர்களே களப்பிரர் என அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி கூறுகிறார். மேலும் அவர் களப்பிரர் தமிழரல்லர் என்றும், கன்னட வடுகர் என்றும் அதே சமயம் அவர்கள் ஆரியருமல்ல வென்றும் கூறுகிறார். சந்திரகுப்த மவுரியர் துறவு பூண்டு தன் குரு பத்ரபாகு தலைமையில் வந்து தங்கியிருந்த கர்நாடக சிரவணபெலகொலா பகுதியே பழைய களபப்பு நாடாகும் என்றும், சமணத்துறவிகள் பலர் அங்கு தங்கியிருந்தனர் என்றும் மயிலையார் கூறுகிறார்.


தமிழ் இலக்கிய வரலாறு என்னும் தமது நூலில் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே கன்னடமும் தெலுங்கும் வடிவம் கொண்டன எனக் கூறுகிறார், டாக்டர் மு.வரதராசனார். மு.வ. அவர்களின் கூற்றுப்படி கன்னடம், தெலுங்கு மொழிகளின் தோற்றத்திற்கு முன்பு அவற்றின் தாய்மொழியான தமிழ் மொழிதான் அப்பகுதிகளில் இருந்திருக்க முடியும். எனவே,  சமற்கிருதம் தாக்கமில்லாத அப்பகுதியைச் சேர்ந்த களப்பிரர் தமிழர்களே என்று கருதுவதில் தவறில்லை.


களப்பிரர் முதலில் பவுத்தர்களாக இருந்தனர். அதன் பின்பு தங்களை மாற்றிக் கொண்டனர். இவர்களது ஆட்சிக் காலத்தை இருண்ட காலம் என்று பார்ப்பனர் மற்றும் பார்ப்பனிய மயமாக்கப்பட்ட பார்ப்பனரல்லாத வரலாற்றாசிரியர்களும் இலக்கியவாதிகளும் செய்து விட்டனர். அவர்கள் அனைவரும் இன்றுவரை களப்பிரர் ஆட்சிக்காலம் யாருக்கு இருண்ட காலம் என்பதைக் கூற மறுத்து விட்டனர். பார்ப்பன சத்சூத்திரரான வேளாளப் பண்பாட்டைத் திட்டமிட்டுத் தமிழர் மீது திணித்து வரும் வரலாற்றாசிரியர்கள் மு. அருணாசலம் பிள்ளை, அவ்வை துரைசாமிப் பிள்ளை, அ.சா.ஞானசம்பன், கே.கே.பிள்ளை போன்றோர் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்ற முடிவுக்கு வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் வருமாறு.


1. தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.


2. களப்பிரர் தங்கள் மொழியான பாலிமொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். (களப்பிரர் தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது).


3. களப்பிரர் தமிழ், தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர். தமிழையும் தமிழ் பண்பாட்டையும் அழித்தவர்கள்.


4. வேள்விப் பாரம்பரியத்தையும் சைவப் பாரம்பரியத்தையும் அழித்தவர்கள்.


5. பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட தானங்களை ஒழித்துக் கட்டியவர்கள்.


6. களப்பிரர் என்னும் கலியரசர்கள் ஆட்சியை அபகரித்துக் கொண்டனர்.


7. களப்பிரர் தமிழரல்லர்.


“களபரன் என்னும் கலி அரசன் தமிழகத்தைக் கைக்கொள்ள’’ என்று குறிப்பிடும் வேள்விக்குடிச் செப்பேடு பாண்டியன் நெடுஞ்செழியன் (பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி) பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்த வேள்விக்குடி என்னும் கிராமத்தை களப்பிர அரசன் பறித்துக் கொண்டான் என்ற செய்தியைக் கூறுகிறது. உண்மை என்னவெனில், யாகம் நடத்திய வகைக்கு மன்னன் அரசதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வேள்விக்குடி கிராமத்தை தமிழ் பழங்குடி மக்களிடமிருந்து பறித்து யாகப் புரோகிதனுக்கு தாரை வார்த்ததை களப்பிரர் அரசன் மீட்டி அம்மக்களுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டான்.         


கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :


தமிழகத்தில் அந்த 300 ஆண்டு காலத்தில் வரலாறு என்பதே இல்லை எனக்கூறி பிராமணர்கள் பாதிக்கப்பட்டதை பரிதாப உணர்வுடன் பார்ப்பது மட்டுமின்றி, தமிழக வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்.


மு.அருணாசலம் பிள்ளை


“களப்பிரர்கள் எந்தவொரு இராஜ பாரம்பரியத்திலும் வந்தவர்கள் அல்லர். பழங்காலத்தில் இராஜ பாரம்பரியத்தில் வந்தவர்களே ஆளுமை உடையவர்களாக இருந்தனர். இந்த இராஜ பாரம்பரிய ஆளுமை என்பது அக்காலக் கட்டத்தில் எல்லா இலக்கியங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றில் தனது முத்திரையைப் பதித்திருந்தது. எனவே, இராஜ பாரம்பரியமற்ற களப்பிரர்கள் பழந்தமிழ்ப் பெருமையைக் கட்டிக் காப்பதற்கு சாத்தியமற்றவர்களாக இருந்தனர். மொழியையும், பண்பாட்டையும் அழித்த எதிர்மறை ஆட்சியாகவே அவர்களது ஆட்சி இருந்தது.’’


அவ்வை துரைசாமி பிள்ளை:


“களப்பிரர்கள் புகுதற்கு முன் தமிழகம், நாடு புகழும் நலஞ்சிறந்து விளங்கிற்று. அத்தகைய தமிழகம் கல்வி, வாணிபம், பொருள், அரசியல், சமயம் ஆகிய துறைகளில் களப்பிரர் வரவால் பெரு வீழ்ச்சியுற்றது. அவ்வத்துறைகளை விளக்கும் தமிழ் நூல்கள் அழிந்தது அக்காலத்தேயாகும். சுருங்கச் சொல்லுமிடத்து, தமிழர்களின் கல்வியைச் செல்வாக்கிழப்பித்து கடல் வாணிபத்தை உடலறக்கெடுத்துப் பொருள் விளக்கத்தை இருள்படுத்தி, அரசியலை அலைக்கழித்து, சமயத்தைக் குலைத்து நின்றது களப்பிரரது கடுங்கோலாட்சி என்பது அமையும். பாண்டிய நாட்டில் இடைக்காலத்தே தோன்றிய கடுங்கோன் முதலிய பாண்டியர்களால் அவர்கள் வேரோடு தொலைக்கப் பெற்றனர்.”


அ.சா.ஞானசம்பந்தன்


களப்பிரர்கள் கொள்ளைக் கூட்டத்தினர் என்றுதான் நினைக்க வேண்டியதிருக்கிறது.


கே.கே.பிள்ளை


“தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்“ என்னும் தமது நூலில், “தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் ஆகியவற்றில் ஒன்றேனும் இவர்களுடைய கொடுமையினின்று தப்பவில்லை. தமிழகத்துக்கு இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள். இவர்களைப் பற்றிய விளக்கங்கள் வேள்விக்குடி செப்பேடுகளிலும் பல்லவர், சாளுக்கியர் ஆகியோருடைய செப்பேடுகளிலும் கிடைத்துள்ளன. கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் ஒருவனாலும், சிம்மவிஷ்ணு, முதலாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ மன்னர்களாலும், முதலாம் விக்கிரமாதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னர்களாலும் களப்பிரர்கள் அழிவுற்றனர் என அறிகின்றோம்’’ என்று கூறுகின்றார்.


முதுபெரும் தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி


களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழர் தமிழ்மொழியை புதியமுறையில் வளர்த்தார்கள். இந்த முயற்சியில் அக்காலத்து தமிழர் மதபேதம் பாராட்டாமல் ஒன்றாக இணைந்து தாய்மொழியை வளர்த்தனர். பவுத்த, சமண, சைவ, வைணவ சமயத்துத் தமிழ்ப்புலவர் அனைவரும் தமிழை வளர்த்தார்கள். புது வகையான பாக்களும் புது வகையான இலக்கியங்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உண்டாக்கப்பட்டன. பனை ஓலையும், எழுத்தாணியுமே அக்காலத்து எழுது கருவிகளாக இருந்தபடியால் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமி எழுத்தின் மாற்றமும் முழு மாற்றமாகிப் பையப் புதுவகையான எழுத்தாயிற்று. இப்புதுவகையான எழுத்து வட்டெழுத்து என்று பெயர் பெற்றது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் வட்டெழுத்து வழங்கியது என்பதில் அய்யமில்லை.


(தொடரும்...)

.- உண்மை இதழ், 1-15.2.21

- உண்மை இதழ் 1- 15. 3 .21

புதன், 17 மார்ச், 2021

சேரிகள்_ஏன்_ஊரைத்_தாண்டி_உள்ளன

#சேரிகள்_ஏன்_ஊரைத்_தாண்டி_உள்ளன

ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகள் ஊரைத் தாண்டி இருப்பதற்குக் காரணம் வைதிக சைவ வைணவ ஆகமங்களே. 

ஆகம நூல்களின் உள்ள விதிகளின்படி கிராமங்களும் அதனுள் உள்ள கோயில்களும் தென்னிந்தியாவில் அமையப் பெற்றுள்ளதை அறிகிறோம். சைவ ஆகம நூல்களையும் வைணவ ஆகம நூல்களையும் படிப்போருக்கு இந்த உண்மை விளங்கும்.
தவிர ஆகமங்கள் இன்னன்ன சாதியார் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதியில்லை என்றும், இன்னன்ன சாதியினர் கோயிலுக்குள் உள்ள பிரகாரம் வரையிலும், இன்னன்ன சாதியினர் கோயிலின் உள் பகுதியில் எங்கு வரை செல்லலாம் எனவும்,இன்னன்ன சாதியினர்  கர்ப்பகிரகம் வரையிலும் செல்லலாம் என்பதையும் வரையறுக்கிறது. 

இந்தப்பதிவில், ஆகம நூல்களைத் தழுவி எழுதப்பட்ட “சிவாகமங்கள் கூறும் சிவாலய தரிசனமும் சிவ விரதங்களும்” நூலில் உள்ள ஒரு பகுதியைக் காண்போம்;

****

வெளிப்பிரகாரத்திற்குப் புறத்தே
சிவாச்சாரியாரின் வாஸஸ்தானம் இடம்பெறும்.மேற்கே வேண்டுவது பரிகார கரின் வீடு, தெற்குப்பக்கத்தில் வைத்தியருக்கு இடமுண்டு.இதையடுத்து சோதிடத்தில் வல்லோர் இடம்பெறுவர். வாத்தியம்
வாசிப்பவர்கள் கிழக்கே வசிப்பர். சைவமகாசனங்கள் வசிப்பதற்கு
கிழக்கு சிறந்த இடமாகக் கூறப்படுகின்றது. மாவிரதர்களுக்குரிய(சைவர்களில் ஒரு வகை) திக்கு தென்கிழக்கு, பாசுபதர்களுக்கு தெற்கு, காளாமுகர்களுக்கு
தென்மேற்கு, பௌத்தர்களுக்கு மேற்கு, ஆருகதர்களுக்கு வடமேற்கு, பூர்மமீமாம்சர்களுக்கு வடக்கு, ஞானநெறிநிற்போருக்கு கிழக்கு, கிழக்கிற்கும் தெற்கிழக்கிற்கும் நடுவே இடம்
பெறுவது இன்னுமொரு கிணறு, தெற்கிலும், வடமேற்கிலும் பேணி அமையும். தெற்கிற்கும், தென்மேற்கிற்கும் இடையே மாட்டுத்
தொழுவம், தென்மேற்கிற்கும் மேற்கிற்கும் இடையே பிரசவசாலை,மேற்கிற்கும் வடமேற்கிற்குமிடையே நோய்தீர்க்கும் நிலையம்,வடக்கில் பாடசாலை, வடக்கிற்கும் வடகிழக்கிற்கும் நடுவில்
நெற்களஞ்சியம், வடகிழக்கிற்கும், கிழக்கிற்கும் நடுவில் வேதாத்யயன மண்டபம். அதற்குப் புறத்தே வெளியே உருத்திர கணிகை யருக்குரிய இடம். இவ்விடத்திலேயே பூ, எண்ணெய் ஆகிய பொருட்கள் விற்கும் வணிகர் உறைவதற்கு இடம் உண்டு.குயவர், சேணியர், மாமிசம் புசிப்பவர், நாவிதர், இடையர், காவல்
புரிவோர் இடம் பெறுவார். ஈசானத்தில் இருப்பது சுடலை.இதையடுத்து வடக்கில் இன்னும் வெளியே தச்சர், வண்ணான்
முதலியோருக்கு இடம் வகுக்கப்பட்டள்ளது. இவையனைத்திற்கும் வெளியே சண்டாளர்கள் வசிக்கும் இடம் இருக்கும்.

****

சிவ ஆலயங்களைக் கொண்டுள்ள பெரும்பாண்மையான ஊர்களில் கிராமங்களில் இந்த கட்டமைப்பு இருந்து வருகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை. அந்தந்த சாதியினர் குடியிருக்கும் தெருக்களின் வரிசைகளிலும் இன்று வரை பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட வில்லை.கோயில்களை ஒட்டி உள்ள தெருக்கள், அடுத்தடுத்துள்ள தெருக்களில் சாதி ஹிந்துக்களின் குடியிருப்புக்களை மட்டுமே இன்றளவும் காண முடிகிறது.வர்ணாசிரம பாகுபாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கு அன்றைய நாட்களில் பயன்பட்ட அதிகாரப் பூர்வமான சட்ட விதிகளே “ஆகமங்கள்”.

பி.கு: பின்னூட்டத்தில் “சிவாகமங்கள் கூறும் சிவாலய தரிசனமும் சிவ விரதங்களும்” நூலின் அட்டைப்படமும் சில பக்கங்களும்.
- தினகரன் செல்லையா முகநூல் பதிவு,15.3.21

புதன், 10 மார்ச், 2021

கி. வீரமணிக்கு "ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது"


சிந்தனைத்துளிகள் - காமராசர்

Home -> 2011 இதழ்கள் -> ஜூலை 01-15 -> சிந்தனைத்துளிகள் - காமராசர்

2011 இதழ்கள் -> ஜூலை 01-15 -> 

செவ்வாய், 9 மார்ச், 2021

மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசியார்