பக்கங்கள்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சீர்திருத்தத்தை வரவேற்கிறது கிறித்துவ மதம்


வாடிகன், செப்.11_ கிறித்தவ மதத்தின் ரோமன் கத்தோலிக்க மதப் பிரிவில் திருமண விலக்கு அளிப்பதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மண விலக்கு விரைவாகவும், எளி தாகவும் இணையர்களுக்கு கிடைத்திட பிஷப்புகள் உதவிடவேண்டும் என்றும்  போப் பிரான்சிஸ்  அறிவுறுத்தி உள்ளார்.
கத்தோலிக்க கிறித்தவர்களுக்கு கவலையளிப்பதாக மணவிலக்கு பிரச்சினை இருந்துவந்தது. கிறித்தவ சர்ச்சுகளால் அங்கீகரிக்கப்படாத மண விலக்கு பெற்றவர்கள் 120 கோடிபேர் உள்ளனர்.  போப் பிரான்சிஸ் காலத் தில் இம்மதம் பெருமளவிலான மாற்றத்தை கண்டுள்ளது. நூற்றாண்டு காலத்தைக் கடந்தபின்னர் கருணை மிகுந்த முடிவாக இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கிறித்தவ கத்தோலிக்கர்களுக்கு மணவிலக்கு அளிப்பதில் போப் செய்துள்ள மாற்றங்கள் குறித்து மோடூ புரோப்ரியோ எனும் பாதிரியார் குறிப் பிடுகையில், மண விலக்கு பெறுவது சிக்கலான  அதிகப்படியான செலவாக வும் இருப்பதாக கருதப்பட்டுவந்த நிலையில், போப்  புரட்சிகரமான மாற் றங்களை ஏற்படுத்தி உள்ளார்.   மதத் தில் குறிப்பிட்டுள்ளபடி, திருமணம் என்பது பிரிக்கப்படக் கூடாதது என்று இருந்ததை மாற்றுவதற்கு தாமாகவே போப் பிரான்சிஸ் பெருமுயற்சி எடுத்துள்ளார்.
மணவிலக்கு அளிக்கும் முடிவில் கிறித்துவ சபையினரின் நடுவர் மன்றம் விசாரணை மேற்கொண்டு மறுஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாக இருந்ததை போப் நீக்கிவிட்டார். மண விலக்கு வழக்குகளில் விரைந்து தீர்ப்பு அளிக்க ஏதுவாக, பிஷப்புகளின் அதி காரத்தை, விசாரணை செய்யும் நீதி பதிக்கே மாற்றி அளித்துள்ளார். இதன் மூலம் நீதிபதிகள் தெளிவான தீர்ப்பு களை விரைவாக வழங்க முடியும் என்றார்.
போப் அளித்துள்ள மாற்றங்களுக் கான அறிக்கையின் தலைப்பாக கடவுள் இயேசு, கருணைமிக்க நீதிபதி என்று குறிப்பிட்டுள்ளனர். திருமணம் என்பது குறித்து கடந்த காலங்களில் வெறுமைக்கான ஆணையாக குறிப் பிடப்பட்டது.
சர்ச்சு விதிகளின் கீழ் திருமணம் குறித்து விதிகளை வகுப்பது என்பது செல்லாததற்கு முக்கிய காரணம் கருத்து சுதந்திர விருப்பம், உளவியல் முதிர்ச்சி, வெளிப்படையாக குழந்தைகளைப் பெற் றுக்கொள்வதில் ஈடுபாடின்மை ஆகிய வையே முக்கிய காரணிகளாக இருந்தன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மணவிலக்கு அளிப்பதுகுறித்த முடிவை எட்டுவதற்காக அவருக்கு ஆலோ சனைகள் வழங்குவதற்காக வல்லுநர் குழுவை அமைத்தார். மண விலக்கு கோரும் இணையர்க்கு மணவிலக்கை வழங்குவதற்குத் தேவையான நடை முறைகள், விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்றும், அவர்களின் திருமண முறிவு அல்லது மணவிலக்கு செல்லத்தக்கதா? என்பதில் நீண்ட காலமாக இருட்டறையில் அய்யத்துக்கு இடமாகி, ஒடுக்குமுறையாக இருந்து விடக்கூடாது.
இந்தப் பிரச்சினையில் சட்டம் ஏற் படுத்த போப்பின் தலைமை ஆலோச கராகப் பணியாற்றியவரான கர்டினல் பிரான்செஸ்கோ கோகோபால்மேரியோ கூறும்போது, 45 நாள்களில் பிஷப்புகள் எளிமையான நடைமுறைகளைப் பின்பற்றி தீர்வு காண வேண்டும். மணவிலக்கு கோருபவர்களுக்கு தீர்வு காண்பதில் நடைமுறைகளைப் பின் பற்றுவதில் கடந்த காலங்களில் பல ஆண்டுகள் ஆயின. ஆனால், தற்போது மணமுறிவு குறித்த புதிய சட்டத்தின் படி, போப் மண முறிவை ஆதரிப்பதாக அல்ல, ஆனால் மணமுறிவு கோருப வர்களுக்கு விரைந்த நடவடிக்கையை எடுப்பதற்கு வழி ஏற்படுத்தி உள்ளார் என்று  குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, மண முறிவு கோரும் வழக்குகளில் ஆயிரம் டாலர்கள் வழக்கு கட்டணமாக இருந்தது. தற்போது அது முற்றிலும் இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு வழக்கு களாக உள்ளவை உள்ளூர் நீதிமன்றத் தில் முடித்துக்கொள்ளவும், மிகவும் சிக்கலான வழக்குகள்  மட்டும் வாடி கனில் உள்ள சிறப்பு நீதிமன்றமான ரோடாவில் நடத்திக்கொள்ள வேண் டும் என்று புதிய சட்டத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.
வாடிகன் நீதிமன்றத்தின் தலைவர் மோன்சைனர் பியோ விடோ பிண்டோ மணமுறிவு சட்டம்குறித்து கூறும்போது, 1740ஆம் ஆண்டு முதல் 1758ஆம் ஆண்டு வரை ஆட்சிபுரிந்த 14ஆம் பெனடிக்ட் காலத்துக்குப்பிறகு தற்பொழுதுதான் மணமுறிவு குறித்த புதிய சட்டத்தில் ஏராளமான மாற்றங் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார். பாஸ்டன் கல்லூரி பேராசிரியர் ஜேம்ஸ் பிரெட்ஸ்கி கூறும்போது, முறிந்து போன திருமணத்தால்,  மிகுந்த தொல்லைகளை அனுபவித்து வரும் 10ஆயிரம் இணையர்களுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று போப் கிறித்தவ சபை நடத்துவோருக்கு (பாஸ்டர்களுக்கு) அறிவுறுத்தியுள்ளார் என்றார்.
கிறித்தவர்களிடையே மத ரீதியாக, மிகவும் கவலையளிப்பதாக இருந்து வந்த இப்பிரச்சினையில், சர்ச்சுக்கு வெளியே மண விலக்கு மற்றும் மறு மணம் புரிந்துகொண்டுள்ள கத்தோலிக் கர்கள் பலரும் சீர்திருத்தத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
நடைமுறைகளில் மண முறிவு ஏற்பட்டு மறுமணம் புரிந்துகொண்ட கத்தோலிக்கர்களின் முன்னதாக செய்து கொண்ட திருமணம் நீடிப்பதான பொருளில் இருந்து வந்தமையால், மறுமணம் பாவமானதாக கருதப்பட் டது.  புதிய சட்டத்தால், அவர்கள் மத அங்கீகாரமும், மன்னிப்பும் பெறுவதற்கு இருந்த தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
சட்டப்படியான மணமுறிவு பெற விரும்பியவர்களுக்கு மணமுறிவு வழங்கிட பின்பற்றப்பட்ட நடைமுறை மிகுந்த சிரமமாக இருந்தது. இணையர் மற்றும் மத போதகர்களாக இருப்ப வர்கள் தொடர்ந்து இதுகுறித்து கிறித் தவ மதத் தலைவர்களுக்கு மாற்றம் கோரி, புகார்களைத் தெரிவித்து வந்தனர்.
அமெரிக்கா  மற்றும ஜெர்மனி போன்ற நாடுகளில் மண முறிவு பெற்ற வர்கள் மற்றும் மறுமணம் புரிந்து கொண்டவர்கள் சர்ச்சு நடவடிக்கை களில் முழுமையாக பங்கேற்க விரும்பி யுள்ளனர். இதுதான் மிகப்பெரிய விவாதமாக இருந்தது. இந்தியாவின் மக்கள் தொகையில் 1.55 விழுக்காட் டளவில் கிறித்தவர்கள் உள்ளனர்.
இம்மாதத்தில் அமெரிக்க அய்க்கிய நாடுகளுக்கு முக்கிய பயணமாக போப் செல்கிறார். அப்போது 2014ஆம் ஆண்டு முதல் பன்னாட்டளவில் உள்ள மணமுறிவு கோருபவர்களில் பாதி அளவில் 23,000 மண முறிவு நிகழ்வுகளை போப் நடத்த உள்ளார் என்று  ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழகத் தில் அப்போஸ்தலர்களுக்கான ஆய்வு மய்யம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்புகின்ற பெண்களுக்கு மதத்தின் சட்டம் எளிதாக்கப்பட்டு பெண்களின் கருக்கலைப்பு உரிமை குறித்து போப் செய்த மாற்றங்கள் வெளியான ஒரு வாரத்தில் மணமுறிவு சீர்திருத்தம் செய்துள்ளார். கிறித்தவ சர்ச்சுகளில் டிசம்பரில் தொடங்கப்பட உள்ள கருணை ஆண்டு விழாவையொட்டி போப் பிரான்சிஸ் இம்மாற்றங்களை செய்து வருகிறார். போப்  செய்து வரும் மாற்றங்கள்  கிறித்தவர்களிடையேயும், பெண்ணுரிமை, மனித உரிமை செயற் பாட்டாளர்கள் மத்தியிலும் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை.11.9.15

மெக்கா மசூதி மீது கிரேன் சரிந்து விபத்து: சாவு எண்ணிக்கை 107 ஆக உயர்வு


மெக்கா, செப். 12_ சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள பெரிய மசூதி மீது மிகப்பெரிய கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்த தில் 2 இந்தியர்கள் உட்பட 107 பேர் துடிதுடித்து பலியா கினர். 230-க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 9 பேர் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண் டவர்கள் என்றும், அவர் களை பாதுகாக்கும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வ ரூப் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொடூர விபத்து குறித்து அங்குள்ள அதி காரி ஒருவர் கூறுகையில், மெக்காவில் உள்ள பெரிய மசூதியை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இத னால், நேற்றிரவு (இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு) மசூதியை சுற்றி லும் ஏராளமான மிகப் பெரிய கிரேன்கள் நிறுத் தப்பட்டிருந்தன. இந்நிலை யில், வெள்ளிக்கிழமை பிற் பகல் தொழுகைக்காக ஏரா ளமானோர் வந்திருந்தனர்.
அந்த நேரம், பலத்த இடி யுடன் மழையும் வலுத்து பெய்து கொண்டிருந்ததால் அனைவரும் ஒரே இடத் தில் திரண்டிருந்தனர். அப் போது மூன்றாவது தளத் தில் நிறுத்தப்பட்டிருந்த மிகப்பெரிய கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து மசூதியின் கூரையை உடைத்துக் கொண்டு அங் கிருந்தவர்கள் மீது விழுந் தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி 107 பேர் துடிதுடித்து பலியாகினர். காயமடைந்த 238 பேர் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
விபத்துக்கு முன்னதாக கிரேன் இருக்கும் இடத் தில் மின்னல் தாக்கும் நிழற்படங்கள் சமூக ஊட கங்களில் பரவி வருகிறது. எதிர்பாராத இந்த கொடூர விபத்தால் மசூதியே ரத்த வெள்ளமாகக் காட்சியளித் தது. இந்த விபத்து குறித்து சவுதி அரசு தீவிர விசா ரணை நடத்தி வருகின்றது. அதே வேளையில், விபத் தில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படை யில் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், மீட்புப்பணி அதிக வேகத்தில் நடை பெற்று வருகின்றது. 
-விடுதலை,12.9.15