பக்கங்கள்

மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 ஜூலை, 2025

பேசுவது பெரியாரல்ல; காமராசர்! கடவுள், மதம், திருவிழா, சடங்கு சம்பிரதாயம் பற்றி காமராசர்




இன்று ஜூலை 15 – கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசரின் 123ஆவது ஆண்டு பிறந்த நாள். இதையொட்டி “மாலைமலர்” நாளேடு பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலர் என்று நேற்று (14.7.2025) வெளியிட்டுள்ள சிறப்பு மலரில் “காமராஜரும் ஆன்மீகமும்…” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு முக்கியப் பேட்டி அப்படியே எடுத்துக் கொடுக்கப்படுகிறது!
உண்மையான காமராசர் தொண்டர்கள் இதுபற்றி படிக்கவும் சிந்திக்கவும், பரப்பவும் முன் வரவேண்டும்.
– ஆசிரியர்

ஆன்மீகம் பற்றி ஒரு முறை காமராஜர் அளித்த பேட்டி வருமாறு:-

“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”

“இருக்கு, இல்லைங்கிறதைப்பத்தி எனக்கு எந்தக்கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப்போச்சா?”

“கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒன்னாயிருக்கும் போலிருக்கே”

நேரு ரெண்டப்பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனால் மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார். அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில் போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச்சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிறதத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறனும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான் இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா?”.

“அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக்கிறீங்களா?

இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதி ன்னு படைச்சிருக்க மாட்டாரே?”  “மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடு ன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன்? சூத்திரன்? ரொம்ப அயோக்கியத்தனம்!”.

“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ளவில்லை?”

சிறப்புக் கட்டுரை

“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்” னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது.

நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல் வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக்கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்” பண்றவனோட வேலை.

“நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை. புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்”.

“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா?”

“அதெல்லாம் வேலை, வெட்டியில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத் ராடனம் போறான் எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலை’ன்னு இவன்கிட்டே கோவிச்சுகிட்டான்? அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன். அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா?

“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க? பதினெட்டு வருஷமா கடன் காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக.ஒரு அனாதை இல்லத்துக்கோ. முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லியா.

ஊருக்கு நூறு சாமி வேளைக்கு நூறு பூஜைன்னா. மனுஷன் என்னிக்கு உருப்படறது? நாட்டுல வேலை யில்லாத் திண்டாட்டம். வறுமை, சுகாதாரக்கேடு. ஏற்றத்தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு. பூஜைன்னேன்..?

ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்?”

“அப்படியானா, நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா? இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா?”

“லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டு தான் இருப்பாரா?”

அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு “டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான்.

மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பசுவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவராயன், கழு வடையான். முனியன், வீரன்னு கும்பிட்டான்.

எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்? அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்.

மதம் மனிதனுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களப் போக்குமா? இந்தக் குறைந்தபட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?”

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே! அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?”

“டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டான்னேன்!

இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா அது மாதிரி அக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான்.

அந்தப் புத்தகங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி.

“அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க.

புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான்.”

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல புதுசு கட்டுனதுமில்ல பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம கலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்”.

“மதம் என்பதே மனிதனுக்கு அபின்!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத்தோணுதே?”.

“நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா?

ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான்.

கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க்கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான்.

மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்.”

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா? அதிலேருந்து எப்போ விலகுனீங்க?”

“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன்.

1930க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன்.

அப்புறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும் போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன்.

ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?”

“அப்படியானா மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே அதப்பத்தி?”.

“அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு, ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்மள வாழ்த்தும்னேன்!”

– நன்றி: ‘மாலை மலர்‘, பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் சிறப்பு மலர், 2025
(பக்கம் 36, 37) 14.7.2025

 - விடுதலை நாளேடு, 15.7.25

வெள்ளி, 5 நவம்பர், 2021

சும்மா இருந்தால் மாற்றம் வந்திருக்குமா?

விருப்பு, வெறுப்பு இல்லாமல் சிந்தித்து பாருங்கள்...be unbiased ,impartial etc

பெண்களை 
#உடன்கட்டை ஏற்றி 
கொளுத்திக்  கொல்வது
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
உடன்கட்டை தடுப்பு சட்டம் வந்திருக்குமா ?

#பால்யவயதில்_திருமணம் 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
பால்ய விவாக 
தடுப்பு சட்டம் 
வந்திருக்குமா ?

#வர்ணாசிரம_சாதி_ஏற்றத்தாழ்வுகள் 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அனைவரும் 
சட்டதின் முன் சமம் 
என்னும் உரிமை கிடைத்திருக்குமா??

கணவன் இறந்தால், 
மனைவிக்கு 
#மொட்டை_அடித்து, 
முக்காடு போட்டு, 
மூலையில் 
உட்க்காரவைப்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
இந்த சமூக தீமை ஒழிந்திருக்குமா ?

பெண்களுக்கு 
பொட்டுகட்டி 
கோவில் 
#தேவதாசியாக்குவது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா ?

பார்ப்பனர் 
அல்லாதோர்
#படிக்கக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
நாட்டின் 
பெரும்பான்மையான 
மக்கள் படித்திருக்க
முடியுமா??

சில பிரிவு பெண்கள் 
#மேலாடை_உடுத்தக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அனைத்து 
பெண்களுக்கும் 
மேலாடை அணிய 
உரிமையுண்டு 
என்ற சட்டம் 
வந்திருக்குமா ?

#அடுப்பூதும்_பெண்களுக்கு_படிப்பெதற்கு 
என்பது
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
பெண் கல்வி சாத்தியப்பட்டிருக்குமா ?

திருமணம் 
முடிந்த பெண், 
முதல் நாள் 
#பார்ப்பன_நம்பூதிரியுடன்தான்_முதலிரவு கொள்ளவேண்டும் 
என்பது 

இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால்,
இந்த இழி பழக்கம்
மறைந்திருக்குமா??      

ஒரே மத அமைப்பு 
என்று சொல்லிக்கொண்டு, 
ஒரு பிரிவின் மீது 
#தீண்டாமை 
கடைபிடிப்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
தீண்டாமை தடை சட்டம்
வந்திருக்குமா ?

ஒரே மத அமைப்பு 
என்று சொல்லிக்கொண்டு,
எங்கள் 
#கோவிலினுள்_நுழையாதே என்று மக்களின் ஒரு பிரிவினரை
தடுப்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அனைத்து சாதிக்கும் 
ஆலய நுழைவு
சாத்தியப்பட்டிருக்குமா ?

#பார்ப்பனர்கள்_கடல்தாண்டி_போகக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
இன்றைய நிலையில்
லட்சகணக்கான 
பார்ப்பனர்கள் 
வெளிநாடுகளில் 
வசிக்க, 
வேலைசெய்ய 
முடியுமா ?

#உலகம்_தட்டையானது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
உலகம் 
உருண்டையானது 
என்பது 
நிருபிக்கப்பட்டிருக்குமா ?

#பூமியைத்தான்_சூரியன்_சந்திரன் 
போன்றவை 
#சுற்றிவருகின்றன 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
அறிவியல் 
வளர்ந்திருக்குமா ?

#ராகுகேது 
என்ற #பாம்புகள் 
சூரியனையும் 
சந்திரனையும் 
விழுகுவதால்தான் 
#கிரகணங்கள் 
உருவாகின்றன 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
வான்வெளி அறிவு
வளர்ந்திருக்குமா ?

#பிராத்தனைசெய்தால்_குணமாகும் 
என்பது 
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால், 
மருத்துவ அறிவியல்
வளர்ந்திருக்குமா ?

#தமிழ்_நீசபாஷை, 
தமிழில் கடவுளை 
வழிபடக்கூடாது 
என்பது 
இந்து மத நம்பிக்கை 
என விட்டிருந்தால், 
தமிழ் அர்ச்சனை 
என்னும் சட்டம் 
நடைமுறைக்கு 
வந்திருக்குமா ?

யார் சொல்லியிருந்தாலும் எதைச் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும், அதை நம்பாதே !
உன் பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய்ந்து அறிவு பெறு என்று
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தைப் பெரியார்  கூறியதால் தான் மேலே  உள்ள அனைத்தும் சாத்தியமானது.

மாற்றம் ஒன்று தான் மாறாதது.

அன்று அகல் விளக்கில் முகம் காட்டிய அய்யப்பன் இன்று LED விளக்கில் ஜொலிக்கிறான், இப்போது எங்கு போனது உங்கள் 'ஆகம விதி' ?

48 நாள் விரதமிருந்த உங்களது Vargin சாமிகள், இன்று 'காலையில் மாலை போட்டு சிறப்பு தரிசனத்தில் அன்றே மலையேறி , அன்று மாலையே Tasmac மலையேறும் போது எங்கேடா  போனது 'உங்க ஆகம விதி' ?

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கோஷத்துடன் பெரு வழியில் 48 மைல்கள் நடந்த கால்கள் இன்று 4 கி.மீ களாக சுருங்கிய போது எங்கே போனது உங்கள் 
'ஆகம விதி' ?

இருமுடி கட்டிய பின் 'சென்று வருகிறேன் ' என்று கூட சொல்லக் கூடாது , என்ற உங்களது ஆகம விதி எவ்வாறு Android phone களை அனுமதிக்கிறது ?

இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் உங்களது
"ஆகம விதி"
பெண்களை மட்டும் அனுமதிக்காது என்றால் ஒன்று மட்டுமே எண்ணத் தோன்றுகிறது....

உங்களது அய்யப்பனுக்கு பெண்கள் ஏற்புடையவர்கள் அல்லவெனில் 
எங்களது தமிழ்ச் சமூகத்திற்கே அய்யப்பன் தேவையே இல்லை!

Rangasamy Rajaraman
-கட்செவி வழியாக

செவ்வாய், 1 டிசம்பர், 2020

கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்!

வெள்ளி, 28 டிசம்பர், 2018

ஆசீவகம்

*ஆசீவகம்*

(Aseevagam / Ājīvika)

*தமிழரின் அழிக்கப்பட்ட நெறி*

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்

*ஆசீவகம்*
பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே.

அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர்.

ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில்

ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆஸ்த்திரேலியரான *ஏ.எல். பாசம்*
(Arthur Llewellyn Basham) ஆவார்.

ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை

பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர்.

அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும்.

தருக்கவியலில் இதனை
‘அயலார் கூற்று’ என்பர்.

நன்னூலார்
‘பிறர் மதம் கூறல்’ என்பார்.

மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான

மணிமேகலை, நீலகேசி,
சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும்

ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார்.

பேரா.முனைவர் டி.வி.மகாலிங்கம்,

இரா. விஜயலட்சுமி,

முனைவர் க.நெடுஞ்செழியன்,

ஆதி.சங்கரன்

ஆகிய தற்கால அறிஞர்கள் ஆசிவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

*முனைவர் க.நெடுஞ்செழியன்*

‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம் (Ajivikism: a vanished Indian religion)’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம்,

ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார்.

மௌரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர்

ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள்,

தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும்

ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர்.

அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல்.பாசம்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர்.

ஆசீவகம் பற்றிய செய்திகளை தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கூட ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடங்கப் பெறவில்லை.

*ஆசீவகம் என்றால் என்ன?*

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம்.

எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார்.

வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார்.

எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை.
இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு.

ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர்.

ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம்.

கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும்
நாம் காணும் விடை
ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர்

வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும்,

அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில்

பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன.

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு
ஒரு இடம் இருந்தது.

அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை.

அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம்

(ஈவு+அகம்)
எனப் பெயர் பெற்றது.

(உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.)

இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக

ஈவு தந்ததால்

ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது.

கைம்மாறு கருதாத செம்மையான

கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல்,

இக்கற்படுக்கைகள்

ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும்,

இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம்
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு – தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் ஆசீவக சித்தர்கள் ஆவர்.

*ஆசீவக நெறியின் வேறு பெயர்கள் யாவை?*

1.அமணம்

அம்மண்ணம்(அம்+அண்ணம்)>அம்மணம்>அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்)>ஸ்ரமணம்>ஸ்ரமணா(Sramana)

அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்) என்றத் திரிபுக்கு

அம்மண்ணம் = அம்+அண்ணம் = அம்+ம்+அண்ணம்(தன்னொற்று மிகல்)

அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அண்ணம் - ஊழ்கியின் மேலண்ணம்

அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கப் பயிற்சி.

ஆசீவக நெறி – பின்னாளில் வடஇந்தியாவில் ஆஜீவிகா என்று மருவியது.

ஆசீவகம்>ஆஜீவகம்>ஆஜீவகா>ஆஜீவிகா(Ajivika)

தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா.முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.

இதன்மூலம்,

அமணம் – ஆசீவக நெறியைக் குறித்தது
அருகம் – ஜைன நெறியைக் குறித்தது

என்பது நமக்குப் புலப்படும்.

பிற்கால சொல்லான சமணம் எனும் கொடுந்தமிழ்ச் சொல் தமிழகத்தின் வடக்கில் ஸ்ரமணா(Sramana) எனத் திரிந்தது(கோட்பாடுகளும் சேர்த்துதான் திரிந்தன). இந்த ஸ்ரமணத்திலிருந்து தான் பின்னாளில், ஜைனம் மற்றும் புத்தம் பிரிந்தன. ஜைனமும் புத்தமும் பிரிந்த பிறகு, ஒரு காலக்கட்டத்தில் சமணம் என்ற சொல் ஆசீவகம், ஜைனம், புத்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துக் குறிக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் தான் ஆய்வாளர்கள் ஆசீவகம் ஜைனத்தின் ஒரு பிரிவாகவும், ஜைனம் என்பதற்கு சமணம் என்றும் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.

*ஆசீவகச் சித்தர்களின் வேறு பெயர்கள்*

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் ‘போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார்.

மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக
ஆண்பாற் பெயராகும்.

கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.

1.அமணர்

2.ஆசீவகர் (அ) ஆசீவகச் சித்தர் (அ) சித்தர்

3.ஐயன், ஐயனார், நல்வெள்ளையார் - கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை நிறத்தை அடைந்தவர்கள்

4.அண்ணர் (அ) அண்ணல்
3

References:
1.    History and Doctrines of the Ajivikas:3 A Vanished Indian Religion,1951
by A.L. Basham

2.    தமிழகத்தில் ஆசிவகர்கள்
by முனைவர் ர. விஜயலக்ஷ்மி

<<<<<<>>>>>>>>>>><<