வெள்ளி, 21 ஜூலை, 2023
அண்ணா எழுதிய வசனம் - ஆதாரம் எங்கே? கோயபல்ஸ்களே பதில் சொல்லுங்கள்!
செவ்வாய், 20 ஏப்ரல், 2021
இடி விழுந்தது எனும் பொய்க்கதை - புத்த - சமணம் அழிப்பு
போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார்.
அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து உங்கள் வெற்றிச் சின்னங்கள் எதற்கு, எங்களுடன் வாதாடி வென்ற பிறகு அல்லவா அவற்றை முடிக்க வேண்டும்?
எங்களுடன் வாதாடத் தயாரா? என்று வினா தொடுத்தனர்.
வினாவை விவேகத்துடன் சந்திக்க முடியாத திருஞான சம்பந்தனோ, ஒரு பாடல் பாடினாராம்.
"புத்தர் சமண கழுக்கையர் பொய் கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு
அத்திரமாவன அஞ்செழுத்துமே"
இந்தப் பாடலை திருஞான சம்பந்தன் பாடியதுதான் தாமதமாம்; புத்த நந்தி என்ற தலைவன்மீது இடி விழுந்ததாம்; பவுத் தர்கள் நிலை கலங்கி ஓடினராம்.
இப்படியெல்லாம் ஏராளமான கதை கட்டி பவுத்தர்களை வென்றதாக கூறு கிறார்கள்.
அவர்கள் கூற்றுப்படியே பார்த் தாலும் கூட, விவாதம் செய்து வெல்ல வக்கு இல்லாமல், வேறு கொல்லைப்புற வழிகளில் சூழ்ச்சிகள் செய்து பவுத்த நெறியாளர்களைப் பச்சைப் படுகொலை செய்து பரவசம் அடைந்திருக்கிறார்கள்.
கவிஞர் கலி.பூங்குன்றன்,
மனித வாழ்க்கைக்குத்
தேவை நாத்திகமா? ஆத்திகமா? நூலிலிருந்து.,
திங்கள், 8 பிப்ரவரி, 2021
'கப்சா'-வுக்கு அளவேயில்லையா?
மின்சாரம்
‘குமுதம்‘ - வரதராசன் என்ற அய்யங்கார் பார்ப்பனரின் கைக்குச் சிக்கிய நாள் முதல் (ஜெயிலுக்குப் போக வேண்டிய வரைக் காப்பாற்றியவர் முதல் அமைச்சர் கலைஞர்) ஒவ் வொரு இதழிலும் சாயிபாபாவை விஞ்சும் அளவில் அற்புதக் கை சரக்குகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்.
சங்கராச்சாரியாரின் செல்வாக்கைக் கூட்டினால், அதன் பலன் பார்ப்பனர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் இந்த எ(சி)த்து வேலைகளில் இறங்குவது கண்கூடு!
இந்தவார குமுதத்தில்கூட (10.2.2021) ஒரு கப்சா!
“பக்தரிடம் எள்ளுப் புண்ணாக்கு கேட்ட பரமாசார்யா!” என்பது தலைப்பு
கட்டுரை இதோ:
மகா பெரியவர் முக்கியமாகக் கடைப்பிடிக்கச் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று,
வேதம் படித்தவர்கள் சமுத்திரம் அதாவது கடல் தாண்டிச் செல்லக் கூடாது என்பது.
அப்படிச் சென்றவர்கள் மீண்டும் தன்னை தரிசிக்க வரும்போது அவர்களுக்குத் தீர்த்தம் தருவது, பிரசாதம் கொடுப்பது, அவர்கள் தரும் காணிக்கைகளை ஏற்பதில் தான் ஏற்றிருக்கும் சன்யாச தர்மத்திற்கு பங்கம் வராத முறையையே அனுசரித்தார்.
பரமாசார்யாளின் பரம பக்தரான ஒருவர், தவிர்க்க முடியாத காரணத்தால் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய சூழல் வந்தது.
வேறு வழியில்லாமல், மனதுக்குள் மகானையே நினைத்துக் கொண்டு, மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டு புறப்பட்டார் அவர்.
அங்கே சென்று தன் அலுவலகப் பணிகளைச் செய்த சமயத்திலும்கூட மனதுக்குள் ஆசார்யாளையே நினைத்துக் கொண்டார். ஒரு வழியாக சென்ற வேலை முடிந்து அவர் ஊருக்குத் திரும்பும் நாளும் வந்தது. அங்கே இருந்து புறப்படும்போதே மனதுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார் அவர்.
புறப்படும் நிமிஷத்தில் இருந்து, இங்கே வந்து சேர்ந்து மகானை தரிசிக்கும் வரை ஆகாரம் எதுவும் சாப்பிடுவதில்லை. ஆசார்யாளை தரிசித்து அவர் கேட்கும் காணிக்கையை வாங்கித் தந்த பிறகுதான் சபதத்தை முடிக்க வேண்டும். இதுதான் சாஸ்திரத்தை மீறி சமுத்திரம் தாண்டிச் சென்ற தன் செயலுக்குப் பரிகாரமாக இருக்கும் என்று தனக்குத்தானே நிபந்தனை விதித்துக் கொண்டார் அவர்.
விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் நேராக வீட்டுக்குச் சென்று நீராடிவிட்டு உடனடியாக காஞ்சி மடத்துக்குப் புறப்பட்டார்.
மகானை தரிசிக்க நீண்ட வரிசை காத்திருந்தது. அந்த வரிசையில் அவர் சென்று நின்றபோது மதிய நேரம் நெருங்கியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு நாளாக சாப்பிடாத பசி மயக்கத்தோடு நின்று கொண்டிருந்த அவர், திடீரென்று தன் பெயரைச் சொல்லி யாரோ அழைக்க தயக்கத்தோடு திரும்பிப் பார்த்தார்.
“சார்..உங்களைத்தான் கூப்பிடறேன். அதோ பெரியவா உங்களைப் பார்த்து சைகை செய்யறார் பாருங்க!”
அணுக்கத் தொண்டர் ஒருவர் சொல்ல, மகான் இருந்த பக்கம் திரும்பினார், பக்தர். அங்கே இருந்தே பேசினார் மகான்.
“என்னைப் பார்க்கற வரைக்கும் சாப்ட மாட்டேன்னு விரதம் எடுத்துக் கொண்டிருந்தாயே.. இதோ பார்த்துட்டேன். முதல்ல அவர் கூட போய் சாப்பிட்டுட்டு வா!"
மகான் சொல்ல , அப்படியே அதிர்ந்துபோனார், பக்தர். தான் எங்கோ ஒரு வெளிநாட்டில் இருந்து மனதில் வேண்டிக் கொண்டது எப்படி மகானுக்குத் தெரிந்தது? அந்த ஆச் சரியம் விலகாமலே தொண்டரோடு சென்று, சாப்பிட்டுவிட்டு வந்தவருக்கு அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.
புன்னகை வதனத்துடன் அவரை அழைத்த மகான், “என்ன போஜனம் ஆச்சா? அடுத்தது என்ன? நான் கேட்கறதை வாங்கித் தரணும். ஆனா, ஆசாரத்தை மீறினவாகிட்டே இருந்து நான் எதுவும் எனக்குன்னு வாங்கிக்க முடியாதே.. அதனால், நீ ஒண்ணு பண்ணு . உன்னால முடிஞ்ச அளவு தையல் இலையும் எள்ளுப் புண்ணாக்கும் வாங்கிக் குடு!னு சொல்ல, அப்படியே திகைத்து திக்கு முக்காடிப் போனார் பக்தர். தன் மனதுக்குள்ளேயே இருந்து பார்த்தவர் மாதிரியல்லவா பேசுகிறார் மகான்! விழி நீர் நிரம்ப நின்றவர் மனதுக்குள், ஒரு சந்தேகம் முளைத்தது.
எல்லாம் சரி..ஆனால், தையல் இலையும் எள்ளுப் புண்ணாக்கும் அல்லவா கேட்கிறார். நாம் நினைத்தது மகானுக்குத் தரவேண்டும் என்றுதானே! இவை எப்படி அவருக்குப் பயன்படும்? பக்தர் மனதுக்குள் மட்டுமல்ல, அங்கே இருந்த பலருக்கும்கூட மகான் எதற்காக இவற்றைக் கேட்கிறார்? என்ற சந்தேகம் எழுந்தது.
அதை உணர்ந்தவர்போல மகானே சொல்லத் தொடங்கினார். “என்னடா இவர் இதையெல்லாம் கேட்கறாரேன்னு யோசிக் கறியா? எள்ளுப் புண்ணாக்கை மடத்துல இருக்கற பசுக்களுக்கு குடுப்பா. அதுகள் தர்ற பால் சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கு ஆகும். தையல் இலை வர்ற பக்தர்களுக்கு அன்ன தானம் செய்ய உதவும்...! அதாவது நேரடியா பலன் தராது. ஆனா உபயோக மாகும். சாஸ்திர விதியை மீறாதபடி உன் கிட்டே இப்படித்தான் வாங்கிக்க முடியும். புரிஞ்சுதா?"
புரிந்து கொண்ட பக்தர் மெய்சிலிர்க்க, நா தழுதழுக்க, விழிகள் நீர் சுரக்க மகான் திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்தார்.
பக்தரின் மனம் அறிந்து பரமாசார்யா நடத்திய திருவிளையாடலை நினைத்து சிலிர்த்துப் போனார்கள் எல்லோரும்.
‘குமுதம்‘ 10.2.2021 பக்.94-97.
இதில் ஒன்றைக் கவனிக்கத் தவறிடக் கூடாது. சமுத்திரம் தாண்டிச் சென்ற அந்தப் பக்தர் யார்? அவர் பெயர் என்ன? ஊர் என்ன? கடலைத் தாண்டி எந்த நாட்டுக்குச் சென்றார்? இது போன்ற விவரங்கள் எல்லாம் எப்பொழுதுமே இருக்காது. உண் மையாக அப்படி நடந்திருந்தால்தானே - அவர் பெயர் என்ன? ஊர் என்ன என்பதை எழுத முடியும்.
தங்கள் சமூகத்து ஆசாமி ஒருவரைத் தூக்கி நிறுத்தி, அந்த ஆசாமி மூலம் பலன் பெறும் பார்ப்பன யுக்தியைப் புரிந்து கொள்வதற்குப் பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.
மாயா ஜாலங்கள் குறித்து காஞ்சி சங் கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யின் கருத்து வேறு வகையானது (பெட்டி செய்தி காண்க).
1975ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு. 1975 ஆகஸ்டு 15இல் சென்னையில் தொலைக் காட்சி தொடக்க விழா. காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் பாதப் பூஜையைப் படம் எடுத்துத் தொலைக் காட்சியில் காட்டிட வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனத்தாரின் துடிப்பு! (அப்பொழுதெல்லாம் அவாள் மயம்தானே!)
படம் எடுக்க முயற்சி செய்தபோது ஆச் சாரியார் மறுத்தாராம். மீறி எடுத்தார்களாம்! விளைவு காமிராக்காரரின் கை விளங்கவில் லையாம் - இந்தச் செய்தியை வெளியிட்டது ‘தினமணி கதிர்’ என்னும் புளுகு மணியே (22.8.1975).
அது உண்மையில்லை என்று பிறகு வெளி வந்தது. இப்படித்தான் தங்கள் ஆச் சார்யாள்களைத் தலையில் தூக்கி வைத்து தல புராணங்களை எழுதிக் குவிப்பார்கள்.
அப்பொழுதே தினமணிக்கு உண்மை இதழ் வாயிலாக (1.9.1975 பக்கம் 30) சவால் விட்டோம். ஆச்சாரியாரின் மறுப்பை மீறி நாங்கள் படம் எடுக்க வருகிறோம் - எங்கள் கையை விளங்காமல் செய்யட்டுமே பார்க்கலாம் என்று சவால் விட்டோம்!
‘தினமணி கதிர்’ 45 ஆண்டுகளுக்கு முன் சங்கராச்சாரியார்பற்றி கயிறு திரித்தது. இப்பொழுது வரதராஜ அய்யங்கார் வசம், வசமாக சிக்கிய ‘குமுதத்தில்’ ஒவ்வொரு வார இதழும் சங்கராச்சாரியார் பற்றி அற்புத அதிசயங்களை அள்ளிவிட்டுக் கொண்டு உள்ளது.
இந்த வார ‘துக்ளக்‘கில் வெளி வந்த ஒன்று இதோ:
ஆர்.உமா மகேஸ்வரி: உங்களுக்கு இருந்த பார்வைக் கோளாறை, காஞ்சி பெரியவர் சரி செய்ததாகக் கேள்விப்பட் டோம். அது உண்மையா?
பத்மா சுப்ரமணியம்: சிறு வயதிலிருந்தே எனக்கு காஞ்சி மஹா பெரியவரிடம் ஒரு அபரிமிதமான பக்தி உண்டு. ஒரு முறை எனக்கு கண்ணில் பிரச்சினை தோன்றியது. திடீரென்று கண் சிவந்து எரிச்சல் தரும். திடீரென்று வரும்; அதுவாகவே போய் விடும். அப்படி கண் சிவக்கும்போது என்னால் எதை யுமே சரியாக பார்க்க முடியாது; படிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒன்றரை வரு டங்கள் இந்தப் பிரச்சினையுடன் நான் அவதிப்பட்டேன். எவ்வளவோ சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. இந்தப் பிரச்சினை பற்றி மஹா பெரியவரிடம் சொல்ல வேண்டும் என்றெல்லாம் எனக்கு தோன்றவே இல்லை. ஆனால் ஒரு சமயம் நான் காஞ்சி மடத்திற்கு சென்றிருந்த சமயத்தில், எனக்கு அந்த கண் பிரச்சினை வந்துவிட்டது. அதைத் தூரத்திலிருந்தே கண்டுபிடித்த மஹா பெரியவர் என்னை அருகில் வரச் சொல்லி, என்னுடைய கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்தார். சொன்னால் எவ்வளவு பேர் நம்புவார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை. அதற்குப் பிறகு நான் எந்தவித சிகிச்சையும் எடுக்கவில்லை. ஆனால் என்னுடைய கண் பிரச்சினை சரியாகி விட்டது. இன் றைக்கு வரைக்கும் எந்தப் பிரச்சினை யும் இல்லை. அன்றைக்கும் சரி, இன் றைக்கும் சரி எனது கண்கண்ட தெய்வம் காஞ்சி மஹா பெரியவர்தான்.
('துக்ளக்', 10.2.2021)
சங்கராச்சாரியார் பார்த்த பார்வையி லேயே கண் பிரச்சினை தீர்ந்து விட்டதாம் - சொல்லுகிறார் பார்ப்பன அம்மையார்.
அப்படியானால் சாட்சாத் அதே சங்க ராச்சாரியார் தன் கண்ணுக்கான அறுவைச் சிகிச்சையை சங்கர நேத்ராலயாவில் செய்து கொண்டாரே! அது ஏன்? சங்கராச் சாரியார் பெயரில் (சங்கர நேத்ராலயா) கண் மருத்துவமனை ஏன்? ஏன்?
பார்ப்பனத் தன்மையிலும், சமஸ்கிருதத் திலும் தீரா வெறி கொண்ட பார்ப்பன அம் மையார் பத்மா சுப்ரமணியம் அளித்துள்ள பேட்டியும் இந்த வகையைச் சார்ந்ததே!
இந்தப் பார்ப்பன இனப் பற்று, பார்ப்பனர் அல்லாதாரிடம் இல்லையே - என் செய்வது! அவாள் மாதிரி கற்பனை செய்து தூக்கிப் பிடிக்க வேண்டாம், உள்ளதை உள்ளபடி உரைத்து நம் இன மக்களைச் சீராட்ட வேண்டாமா?
செவ்வாய், 30 ஜூன், 2020
'தினமலருக்குப் பதிலடி!' எது 'பிராமண' துவேஷம்!

சனி, 13 ஜூன், 2020
ஜெயேந்திரர் கம்பி எண்ணியதும் கர்மப் பலன்தானா !

சனி, 14 செப்டம்பர், 2019
அட, மன(ற)ர கழன்ற மனு 'நூலாரே!'
மின்சாரம்
ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்வதில் சில பொதி சுமக்கும் மிருகங்களுக்கு ஒரு வகையான சுகமே! இந்தப் போட்டியில் முதல் பரிசு 'துக்ளக்குக்கு'த்தான். அதனால் தான் அடிக்கடி கழுதை கார்ட்டூனைப் போட்டுக் கொண்டிருக்கும்.
இவர்களின் ஜெகத் குருவின் யோக்கியதையை - சங்கதியைக் கழுவிக் கழுவி ஊத்தியாச்சு! ஜெயேந்திரருக்காக வக்காலத்து வாங்கி, எழுத்தாளர் அனுராதா ரமணன் மீது பழி தூற்றிய நிலையில் அந்த அம்மையார் கொடுத்த சாட்டையடி குருமூர்த்திகளின் தோலை உரித்துத் தொங்கப் போட்டது. இதை எல்லாம் 'விடுதலை' எடுத்து எழுதுகிறது. அதற்கு ஒரு வரி பதில் சொல்லத் துப்பில்லை.
ஆனால் ஆத்திரத்தை மட்டும் அடக்க முடியவில்லை. அதற்காக அந்த ஆத்திரத்தை எந்த வகையிலாவது சொரிந்து தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?
ஒவ்வொரு வாரமும் திராவிடர் கழகத் தலைவரைத் தீண்டாவிட்டால் ஆத்துலே போஜனம் கிடைக்காது போலி ருக்கு. இந்த வாரமும் (18.9.2019) எரிச்சலைக் காட்டியிருக்கு.
கேள்வி: பவள விழா நடத்திய தி.க. மாநாட்டில், வெளி யிடப்பட்ட தீர்மானங்கள் பற்றி துக்ளக் கருத்து?
பதில்: 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறி, 'பிறப்பினால் எல்லோரும் ஒன்று' என்பது தன் முதன் மைக் கொள்கை என்கிறது தி.க. தீர்மானம். ஆனால், அது திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை தி.க. மறைத்திருக்கிறது. ஏன்? திருக்குறளை பெரியார், மலம் என்று கூறிவிட்டாரே. (அப்படியா எங்கே கூறினாராம்?) அடுத்தது, 'யாதும் ஊரே யாவ ரும் கேளிர்' (எல்லாம் நம் நாடு - அனைவரும் நம் உற வினர்) என்பதும் தன் கொள்கை என்கிறது தி.க. ஆனால், அது புறநானூறிலிருந்து எடுக்கப்பட்டது என்று கூற அதற்குத் துணிவில்லை. காரணம், அடுத்த வரியிலேயே கர்ம விதியைக் கூறுகிறது புறநானூறு. முடிவாக 'உலகமே ஒரு குடும்பம்' என்பதும் தன் கொள்கை என்கிறது தி.க. ஆனால், அது தி.க. வெறுக்கும் சம்ஸ்க்ருத (ஆரிய நூலான) மகா உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது. 'ஒருவர் நம் உறவினர், மற்றவர் வேற்று மனிதர்' என்று குறுகிய மனது உள்ளவர்கள் கூறுவார்கள். பரந்த மனது உள்ளவர்கள் - உலகமே ஒரு குடும்பம் என்று கூறுவார்கள்' என்று கூறுகிற மகா உபநிஷத், நம் நாடாளுமன்றத்தில் பொதித்து வைக்கப் பட்டிருக்கிறது. இதைத்தான் தி.க. தன் கொள்கை என் கிறது. தான் கூறியது மகா உபநிஷத்தில் இருக்கிறது என்று கூறினால் தி.க.வின் மானமே போய்விடும். தி.க.வின் பவளவிழாத் தீர்மானங்க ளின் மூன்று கொள் கைகளும் திருடப்பட்ட கருத்துக்கள்.
இதுதான் 'துக்ளக்'கின் கேள்வி பதில் பகுதி.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று திக பவள விழா மாநாட்டில் கூறப்பட்டதாம். இது திகவின் கொள்கையில்லை - திருக்குறளில் உள்ள கருத்து இது.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தன் கொள்கை என்கிறது தி.க.
அது புறநானூற்றிலிருந்து எடுக்கப்பட்டது.
உலகமே தன் குடும்பம் என்பதும் தி.க. வெறுக்கும் சமஸ்கிருத மகா உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆக தி.க. சொல்லும் இந்த மூன்றுமே திருடப்பட்ட கருத்துக்கள்.
சரி... இருக்கட்டும். 'துக்ளக்' தன் கொள்கையாக - நோக்கமாக எடுத்து வைக்கும் ஒவ்வொன்றும் தன் சுயபுத்தியிலிருந்தே சொல்லுவதாக நம்ப வேண்டும்.
'துக்ளக்கும்' சரி, பார்ப்பனக் கும்பலுக்கும் சரி, ஒன்றைச் சொல்லும்பொழுது ஒரு ஆதாரத்தையும் எடுத்துக் காட்டும் புத்தியே கிடையாது. மனம் போன போக்கில் உளறித் தொலைப்பதுதான் அவாளின் வழமை.
நாம் கொடுக்கும் பதிலடி ஒவ்வொன்றுமே ஆதாரம் பேசும் - அது அவாளின் ஆயுதத்தைக் கொண்டே நன்னா மொத்தி எடுக்கும். 'விடுதலை'யையும், 'துக்ளக்'கையும் படிக்கும் எவருமே இந்த உண்மையை அறிவார்கள்.
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை 'துக்ளக்' பின்பற்றி வருகிறதே; என்றைக்காகவது பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம் என்று 'துக்ளக்' சொன்னதுண்டா?
மின்சார விளக்கை 'துக்ளக்' பயன்படுத்துகிறதே - தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சார விளக்கைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்று குருமூர்த்தி எழுதிய துண்டா? ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார் என்று என்றைக்காகவது 'துக்ளக்' கும்பல் எழுதியதுண்டா?
மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது கட்டப்பட்ட மேம்பாலத்தின் வழியாகத்தான் காரை ஓட்டி வந்தோம் என்று எழுதியதுண்டா?
இந்த வார 'துக்ளக்'கின் அட்டைப் படத்தில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறப்பட்டுள்ளதே, அது என்ன துக்ளக்கின் சொந்த கண்டுபிடிப்பா? எங்கிருந்து வந்தது என்று குறிப்பிடாதது ஏன்?
அடேயப்பா - திருவள்ளுவர் இவ்வளவு உயர்வாக எழுதி இருக்கிறார் என்றால் - வள்ளுவரின் அப்பன் பார்ப்பான் என்று எழுதும் திமிர் பிடித்த கூட்டத்தின் அகம்பாவம் இன்னும் அடங்கவில்லை என்றால் - அது அடக்கப்பட்டே தீரும் - அந்த அளவுக்கு இளைஞர்கள் இப்பொழுது வீறு கொண்டு எழுந்துள்ளனர்.
திருவள்ளுவர் கூறியுள்ளதையும், புறநானூறில் கூறியுள்ளதையும் தன் கொள்கை என்று தி.க. கூறியுள்ளது என்பது குற்றச்சாட்டா? விமர்சனமா?
குற்றச் சாற்று என்றால் அதனை எதிர்த்து எழுதாதது ஏன்? விமர்சனம் என்றால் எந்த விமர்சனத்தையும் முன் வைக்காதது ஏன்?
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருவள்ளுவரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று 'துக்ளக்' கும்பலால் கூற முடியாது.
காரணம் கீதை என்ற உலக்கை அவர்கள் மண்டையில் ஒரு போடு போடும். நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் - சதுர் வருணம் 'மயாசிருஷ்டம்‘ என்றுதானே கீதையிலே கிருஷ்ணன் கூறுகிறார். அவர்கள் எப்படி குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்? கீதைக்கு எதிரான குறளின் மீதுள்ள ஆத்தி ரத்தை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கை யுடைய தி.க.வின் மீது காட்டுகிறார்கள் அவ்வளவு தான்!
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதையும் அவர் களால் ஏற்கவே முடியவே முடியாது.
கடலைத் தாண்டிப் போவதே தோஷம் என்று சாஸ்திரம் எழுதி வைத்திருக்கும் 'சாஸ்திராக்கள்' யாதும் ஊரே என்று சொல்ல முடியுமா?
"யாவரும் கேளிர்" என்றும் சொல்ல முடியாது. அவர்களுக்குள்ளேயே வடகலை, தென்கலை குஸ்திகள் கொஞ்சமா நஞ்சமா?
வடகலைக்காரனை தென்கலைக்காரன் கண்டால் சுவரில் முட்டிக் கொள்வானே - அதற்குப் பெயர் 'கண்டு முட்டு' - ஒருவன் இன்னொருவனைப் பற்றிக் காதில் கேட்டா லும் சுவரில் முட்டிக் கொள்வான் - அதற்குப் பெயர் “கேட்டு முட்டு‘.
இந்த யோக்கியதையில் யாவரும் கேளிர் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவாராம்?
தங்கள் கலாச்சாரத்துக்கும், சாஸ்திர சம்பிரதாயத்துக்கும் எதிராக இந்தப் புறநானூறு வரி இருப்பதால் இந்தக் கொள்கையுடைய தி.க.வின் மீது தீரா ஆத்திரம் அலை மோதுகிறது - அதன் எரிச்சல்தான் இந்தக் கேள்விப் பதில்.
திருவள்ளுவர் கூறுவதையோ, புறநானூறு கூறுவ தையோ தி.க. ஏற்றுக்கொள்கிறது என்பது எப்படித் திருட்டாகும்?
நாகையிலிருந்து அய்ம்பொன்னாலான புத்த விகாரத்தைத் திருடி சீறிரங்கத்துக் கோயிலுக்கு மதில் சுவர் எழுப்பினான் திருமங்கை ஆழ்வார் என்றால் அந்த நேரத்தில் கடவுட்டன்மையுடையவராதலால், அவர் செய்கையை யாரும் குறை கூறார் என்று திருட்டுக்கு தில்லு முல்லு வக்காலத்து வாங்கும் வருணாசிரமக் கும்பல் "ஒழுக்கம் பொதுச் சொத்து - பக்தி தனிச் சொத்து" என்ற கொள்கையுடைய திராவிடர் கழகத்தின் செயலை திருட்டு என்று கூறுவது பித்தலாட்டத் தகடுதத்தத்தைத் தான் குறிக்கும்.
பெண்களைப் பற்றி தத்துப் பித்து என்று உளறி நாலாப்பக்கங்களிலும் நையப்புடைக்கப்படுகிறார் திருவாளர் குருமூர்த்தி; இதற்கெல்லாம் மூல காரணமே இந்தப் பெரியாரும், தி.க.வும், வீரமணியும் தானே என்ற ஆத்திரம் சும்மா புரட்டிப் புரட்டி எடுக்கிறது. இந்த ஆத்திரத்தாலே மரை கழன்று போய் விட்டது போலும்!
அய்யோ பாவம் - நமது அனுதாபங்கள்!
மானத்தைப் பற்றி 'துக்ளக்' கூட்டம் பேசலாமா?
உலகமே ஒரு குடும்பம் என்கிறது மகா உப நிஷத் அதிலிருந்து தன் கொள்கைகளை திருடியிருக்கிறது தி.க. என்று எழுதுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்.
பரவாயில்லையே, மகா உப நிஷத்தை எல்லாம் படித்துவிட்டுத் தான் தி.க. எழுதுகிறது என்று ஒப்புக் கொண்டுவிட்டார் - அதுவரை பாராட்டவும் செய் யலாம். சரி, உலகமே ஒரு குடும்பம் என்று உங்கள் மகா உபநிஷத் கூறுகிறதே, அதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
ஒரே குடும்பம் என்று ஆகிவிட்ட பிறகு ஜாதி ஏன்? கோத்திரம் ஏன்? எல்லாம் ஒன்றாகிட வேண்டியது தானே! தி.க.வை மட்டம் தட்ட வேண்டுமானால் அவாளுக்கு மகா உபநிஷத் தேவைப்படுகிறது.
உபநிஷத்தைப் பற்றி கதை அளக்கிறார்கள் - இவை மூலமா? தழுவலா? இது பற்றி சுவாமி சிவானந்த சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?
உபநிஷத்தை உண்டு பண்ணியவர்கள், புத்த பகவானது உயர்ந்த கொள்கைகள் அனைத்தையும், வேதமாகுமென்று, உறுதிப்படுத்துவதற்கு இந்த ஜாலத்தைக் காட்டி மக்களை மயக்குகிறார்கள்.
அல்லா உபநிஷத்து, கிறிஸ்து உபநிஷத்து என்றெல்லாம் கூட உண்டே!
உபநிஷத் சொன்னதைத்தான் தி.க. சொல்லுகிறது என்கிறதே 'துக்ளக்' - அதை நம்பினால் திகவை ஏன் எதிர்க்க வேண்டும்? ஆதரிக்க வேண்டியதுதானே!
உபநிஷத்தே திருட்டு என்கிறபோது, திருட்டைப் பற்றி ரொம்பத்தான் கவலைப்படுகிறது? இந்தக் கைபர்கள் கூட்டம். தி.க. கூறுவது உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது என்றால் திகவின் மானமே போய்விடும் என்கிறது. மானத்தைப் பற்றியெல்லாம் மகாபாரதக் கும்பலா எழுதுவது? புத்தரிடமிருந்து திருடியது என்றால் இங்கே மானம் போவது யாருக்கு?
- விடுதலை நாளேடு, 7 .9 .19