பக்கங்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2020

அகவிலைப்படி போராட்டம்

*பஞ்சப்படி DA* போராடிப்பெற்ற உரிமை...
--------------



 அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வரை பஞ்சப்படி ( Dearness allowance) நிறுத்தி வைப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக  உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக களத்தில் துணிச்சலோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் அரசின் "கைதட்டல்" இதுதானா?
அண்ணண் எப்படா சாவான் திண்னை எப்போ காலியாகும்? என்ற பழமொழி தெரிஞ்சுருக்கும்,  கொரோனோ இவர்களுக்கு ஒரு சாக்கு...
ஒய்வூதியமே கொடுக்க கூடாது என்ற கொள்கை கொண்டவர்கள் பஞ்சப்படியை நிறுத்தி வைத்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
சிக்கன் நடவடிக்கை என்றாலே ஆட்சியாளர்களின் கண்களுக்கு முதலில் அரசாங்க ஊழியர்கள் தான் தெரிவார்கள்."ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பது அரசாங்க ஊழியர்களுக்கு அப்படியே பொருந்தும்.

பஞ்சப்படிக்கு ( Dearness allowance)
நீண்ட நெடிய  போராட்ட வரலாறு இருக்கிறது.கொஞ்சம் 
ஃபிளாஷ் பேக் போயிட்டு வரலாம்....
முதல் உலகப்போர் நடந்த 1917 காலகட்டத்தில்தான் படுகுழியில் இருந்த தொழிலாளர்களின்  வாழ்க்கை தரத்தை பாதுகாக்க போர்க்குரல் எழுப்பப்பட்டு பஞ்சப்படி முதன் முதலாக வழங்கப்பட்டது.வாழ்க்கை பஞ்சத்தை காத்திட வந்த படி "பஞ்சப்படி"பொருத்தமான காரணம் பெயர்.
முதலில்  பம்பாய் ஆலை தொழிலாளர்கள்  பெற்றார்கள்.தர மறுத்த முதலாளிகளுக்கு எதிராக மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்பது வரலாறு.1929 ல் ரயில்வே ஊழியர்கள் பஞ்சப்படி பெற்றார்கள்.இரண்டாம் உலகப் போரின் போது அனைத்து  தொழிலாளர்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும் பஞ்சப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.அதற்கு முன்பாக உணவு படியாக (Dear Food Allowance) வழங்கப்பட்டது.
பஞ்சப்படியை தீர்மானிக்க 1944 ல்
வரதாசாரியார் குழு ஒன்று போடப்பட்டது.குறைந்த சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு உணவு படியும் வழங்கப்பட்டன.

விடுதலைக்கு பிறகு
இரண்டு விதமாக பஞ்சப்படி கொடுப்பது வழக்கத்துக்கு வந்தது. 
ஒன்று, ஒரே மாதிரியான பஞ்சப்படியை  அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு வழங்குவது,  மேலும் வேலைக்கு வந்த நாட்களுக்கு மட்டும் வழங்குவது... 
இரண்டு, விலைவாசி நுகர்வோர் குறியீட்டோடு ( CPI )
இணைத்து வழங்குவது.இதன்படி விலைவாசிக்கு ஏற்ப ஏறும் அல்லது இறங்கும். பஞ்சப்படியை கணக்கிட 1960 ம் ஆண்டு அடிப்படையாக ஆண்டாகவும் விலைவாசி  உயர்வு,100 புள்ளிகள் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.(1960  =100). அன்றிலிருந்து இன்று வரை அரசு ஊழியர்கள் பெறும் பஞ்சப்படிக்கு பின்னால் தொழிலாளர்களின் நூறு ஆண்டுகால போராட்டம் இருக்கிறது.தொழிலாளர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமே வருமானத்திற்காக ஆதாரம். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுவும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அல்ல வாழ்வதற்கான சம்பளம் தான்.வேறு எந்த வருமானமும் இல்லாத தொழிலாளர்களுக்கு உயரும் விலைவாசியை சற்றே எதிர் கொள்ள தருவதுதான் இந்த பஞ்சப்படி. அரசாங்கம் model employer  "மாடல் எம்பளாயர்" என்று சொல்வார்கள்.
அரசாங்கம் பஞ்சப்படியை முடக்கினால் தனியார் கம்பெனிகள் சம்பளமே தரமாட்டார்கள். இதுதான் அரசு பேரிடரை எதிர் கொள்ளும் வழியா??

அரசாங்க ஊழியர்களுக்கு குடும்பம் இல்லையா? உறவுகள் இல்லையா? செலவுகள்தான் இல்லையா? அவர்கள் என்ன அரசாங்கத்தின் "ரோபோக்களா"?. 
அரசு ஊழியர்களுக்கு மட்டும் விலை உயர்வு  இல்லையா?
சாதாரண மக்கள் அரசாங்க ஊழியர்களை பார்த்து "நம்ம நிலைக்கு அவங்க பரவாயில்லை" என்று எதுவும் தெரியாமல்  ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள் என்றால் எல்லாம் தெரிந்த அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கலாமா?
பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் 10 லட்சம் என்றால்... தன் வாழ்நாள் முழுவதும்  குடும்பம், குட்டிகளை பார்க்காமல்,நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் ஆபிசே கதி என்று கிடந்த பல ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் 10 லட்சம் பேர் இருப்பார்கள்.இவர்களை நம்பி  ஒரு கோடி பேர் இருக்கிறார்கள்.
ஒரே உத்திரவின் மூலம் அவர்களின் அடிமடியிலே அரசு கை வைத்து விட்டது. 

அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர் கொண்டிருக்கிறது ! இது தவிர்க்க முடியாது ! அரசு ஊழியர்களும்,வயதான ஓய்வூதியம் பெறுவோரும் ஒன்றரை வருடத்திற்கு வயித்துல ஈர துணியை சுத்திகோங்க... என்று சொல்லி இந்த செயலை நியாயபடுத்தலாம்.
கேட்பவர்கள் கூட அட சரிதானே என்று தோன்றலாம்.!
ஆனால் இது அரசின் அராஜகம் இல்லையா?
உழைப்பின் பயனை மறுக்க இவர்கள் யார்?
நேற்று ஒரு தோழர் கோபமாக ..."உலகம் முழுவதும் ஊரடங்கி இருக்கும் வேளையில்  மக்களை பாதுகாக்க பல நாடுகளில் உள்ள அரசாங்கம் அவர்களுக்கு நிதியாக,நிவாரணமாக உதவிகளை செய்து வரும் நிலையில் இந்திய அரசு மக்களிடமிருந்து பிடுங்குகிறதே" என பதிவிட்டிருந்தார்.

 அரசு ஊழியர்கள் ஏதோ  வேற்று கிரக வாசிகள் போன்ற பார்வை மக்களிடையே இருக்கிறது.இதை ஆட்சியாளர்களும்,முதலாளிகளும்,ஊடகங்களும் மிக சாமர்த்தியமாக பயன்படுத்தி கொள்வதை பார்க்கலாம்.ஒவ்வொரு அரசு ஊழியரும் விவசாயி,  தொழிலாளி வீட்டிலிருந்து தான் படித்து, பட்டம் வாங்கி,பரிட்சை எழுதி முட்டி,மோதி  வேலைக்கு வருகிறான்.அவன் செய்யும் வேலைக்கு அரசாங்கம் கூலி கொடுக்கிறது.தனது மதிப்புமிக்க உழைப்பை செலுத்தி கூலி பெறுகிறான்.இதுதான் அரசுக்கும் அவனுக்கும் உள்ள உற்பத்தி உறவு.(சிலபேர் தங்களை சந்திரமுகியாகவே நினைத்துக் கொள்வார்கள் அவர்களை விட்டு விடலாம்) அப்படி உழைப்பை தரும் ஊழியர்களுக்கு அரசு தரவேண்டிய கூலியை தர மறுப்பது நியாமா?

இந்தியாவில்  நியாயமாக தான் பெறும் ஊதியத்துக்கு ஒழுங்காக நயா பைசா பாக்கி இல்லாம பத்து சதம் முதல் முப்பது சதம் வரை வருமான வரி கட்டுபவர்கள் அரசாங்க, பொதுத்துறை ஊழியர்கள் மட்டுமே.
பெறுவதை விட இழப்பதே அதிகம்...சனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்துல பல பேர் சம்பளம் முழுக்க வருமான வரி கட்டுவதற்கே போய்விடும்...
அரசாங்க ஊழியர் என்பதால் ரேசன் கிடையாது...ரேசன் கடையில் மானிய விலையில் மற்றவர்கள் அரிசி,பருப்பு வாங்கும் போது இவர்கள் மட்டும் வெளி மார்கெட்டுல அரிசி, பருப்பை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கும் நிலை.பேரிடர் காலங்களில் மற்றவர்களை போல் இவர்களும்,குடும்பமும் பாதிக்கப்பட்டாலும் எந்த நிவாரணமும் கிடைக்காது ஏனென்றால் இவர்கள் அரசு ஊழியர்கள்.பண்டிகை,திருவிழா காலங்களில் மற்றவர்கள் எல்லாம் குடும்பங்களோடு சுகித்திருக்க இவர்கள் டூட்டி பார்க்க வேண்டும்.
அரசியல்வாதிகள்,
ஆளுங்கட்சிகளின் கோபத்திற்கு முதல் பலிகடா ஊழியர்களே!
இப்போதும்...அரசின் திறமையற்ற நிர்வாகத்திற்கு,கொள்கைகளுக்கு அரசு ஊழியர்களே பலிகடா! 
அரசின் சிக்கனத்திற்கும்,நெருக்கடியை எதிர் கொள்ளவும் எவ்வளவோ வழிகள் இருக்கே...
பெரிய முதலாளிகளும்,கார்ப்பரேட்டுகளும்  செலுத்த வேண்டிய வருமான வரிகளை  உடனே செலுத்த உத்திரவிடுங்கள்! அவங்க வைச்சிருக்கிற பாக்கி ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும்...
வங்கிகளில் வாங்கிய திரும்ப செலுத்தாத கடன் 10 லட்சம் கோடியை இப்போது வசூல் செய்யாமல் எப்போது செய்ய போறீங்க?
முதலாளிகளுக்கு கொடுக்கும் வரிச் சலுகைகளை ஓராண்டுக்கு நிறுத்தி வையுங்கள் நியாயமாரே!
எல்லா பணக்காரர்கள் வீட்டுக்கும் வருமானவரி துறை ரெய்டு போலாமே!
அப்படியே பெங்களுருல, மும்பையில,போபால கட்சி தாவிய எம். எல். ஏ  வீடுகளுக்கும் அவங்கள கூட்டிகிட்டு போனவங்க வீட்டுக்கும் ரெய்டு போகலாமா?
புதிய நாடாளுமன்ற கட்டிட பணி, புல்லட் ரயில் திட்டம், கங்கை  தூய்மை திட்டம், போன்றவற்றை நெருக்கடி தீரும் வரை நிறுத்தி வைங்க!
இவையெல்லாம் செய்த பிறகும் நிதி தேவை எனில் எங்களிடம் வாருங்கள்...
எங்கள் உதிரத்தை தருகிறோம்...

- கட்செவியில் வந்தது

அம்பேத்கரும் தொழிலாளரும்

*தொழிலாளர்_தினத்தில்_மறைக்கப்பட்ட_தலைவர்.*

உலகெங்கிலும் மே 1 தொழிலாளர் தினமாக நெகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்களுக்காக குரல் கொடுத்த, போராடிய, பாதுகாப்பளித்த, சட்டம் நிறைவேற்றிய தலைவர்களை நினைவு கூறுவர். 

இந்திய தேசத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த பல  போராட்டங்களை அமைப்புகளும் தனி மனிதர்கள் பலரும் ஆங்காங்கே பிரச்சனைகளின் அடிப்படையில்  முன்னெடுத்தனர் என்கிறது நம் வரலாறு.

ஆனால் ஒரு தலைவர் மட்டும் தொழிலாளர் நலன் சார்ந்த 28 சட்ட மசோதாக்களை சத்தமில்லாமல் நிறைவேற்றினார். 

அவரிடம் எந்த தொழிலாளர்களும் தங்களது துயரங்களை போக்க மனு கொடுக்கவில்லை. தங்களுக்காக போராட அழைக்கவில்லை. ஆனாலும் மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பினாலும், மனிதர்களை பாரபட்சமின்றி சமமாக நடத்தும் பண்பை கொண்டிருந்ததாலும் தன்னிச்சையாக அந்த 28 சட்ட மசோதாக்களை வடிவமைத்தார், முன்மொழிந்தார், நிறைவேற்றினார், அமுல்படுத்தினார் 

அவர் தான் நமது நவீன இந்தியாவின் தந்தை பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt) அவர்கள். 

அவை:-
1. சம வேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம்

2. தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேர வேலை திட்டத்தை அமுல்படுத்தினார்

3. முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை, ஆகஸ்டு 7, 1942ல் புது டில்லியில் நடத்தினார். முத்தரப்பு பேச்சுவார்த்தையை அமுல்படுத்தினார். 

4. சுரங்க பெண் தொழிலாளர்கள்​ மகப்பேறு அனுகூலச் சட்டம்

5. பெண் தொழிலாளர்கள் சேமநல நிதி

6. பெண்கள் மற்றும் குழந்தைகள், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம்

7. பெண் தொழிலாளர் மகப்பேறு அனுகூலம்

8. நிலக்கரி சுரங்கங்களில் நிலத்தடி வேலைத் திட்டத்தில் பெண்கள் வேலைவாய்ப்பு குறித்த தடை மீட்பு 

9. தொழிற்சங்கங்களை கட்டாயமாக அங்கீகரித்தல் 

10. தேசிய வேலைவாய்ப்பு மையங்கள்

11. ஊழியர் அரசாங்க காப்பீட்டு திட்டம்

12. குறைந்தபட்ச ஊதிய திட்டம்

13. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கங்கள் வருங்கால வைப்புநிதி திட்டம்

14. தொழிலாளர் சேமநல நிதி

15. தொழில்நுட்ப பயிற்சி திட்டம் மற்றும் திறன் தொழிலாளர்கள் திட்டம்

16. மகப்பேறு நலச் சட்டம்

17. கிராக்கிப்படி

18. தொழிற்சாலை தொழிலாளர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள்

19. தொழிற்துறை ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு

20. சட்டப்பூர்வ வேலைநிறுத்தம்

21. வருங்கால வைப்புநிதி சட்டம்

22. ஊழியர் சம்பள உயர்வு மீளாய்வு செய்தல்

23. இந்திய தொழிற்சாலை சட்டம்

24. இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா,

25. இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம்,

26. மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா

27. தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம் 

28. தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா

இந்தியாவில் வருடாவருடம் மே 1 தொழிலாளர் தினத்தை அனுசரிக்கிறோம். ஆனால் ஏனோ தெரியவில்லை இவ்வளவு நன்மைகளை செய்த நவீன இந்தியாவின் தந்தை பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் அவர்களை மட்டும் தொழிலாளர் தினத்தன்று நினைவுகூற மறந்துவிடுகிறோம் 

இது மறதியின் விளைவா அல்லது இருட்டடிப்பா என்று நமக்கு நாமே நேர்மையாக சுயபரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம்

இந்தியாவில் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களும் அதன் தாய் கட்சிகளும் அம்பேத்கரை கொண்டாடுவதை தவிர்த்தது மறதியல்ல. இருட்டடிப்பே. 

தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அட்டவணை சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே அம்பேத்கர் கொண்டாடப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை 

காரணம் பெரும்பாலான தொழிற்சங்க தலைவர்களும், அதன் தாய் கட்சிகளின் தலைமைகளும் பார்ப்பனர்களாகவும் சூத்திரர்களாகவும் இருப்பதே இந்த இருட்டடிபுக்கு பின்னணி. 

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” 

இந்த குறள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த விடயத்தில் பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்களை கொண்டாட மறந்த நமக்கு பொருந்தும். 

*மே 1 தொழிலாளர் தினத்தை கொண்டாடுவோம்                                அம்பேத்கர்  அவர்களை நினைவு கூறுவோம்...*
- கட்செவியில் வந்தது

புதன், 29 ஏப்ரல், 2020

புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்....

(Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

பாரதிதாசன்

புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
பிறப்பு
சுப்புரத்னம்
ஏப்ரல் 29, 1891
புதுவை, இந்தியா
இறப்பு
ஏப்ரல் 21, 1964 (அகவை 72)
சென்னை
புனைப்பெயர்
பாரதிதாசன்
தொழில்
தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
நாடு
இந்தியர்
இனம்
தமிழர்
கல்வி
புலவர்
கல்வி நிலையம்
கல்வே கல்லூரி, புதுவை
எழுதிய காலம்
20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
இலக்கிய வகை
தமிழிலக்கியம் - கவிதை, நாடகம், கட்டுரை, கதை
கருப்பொருட்கள்
இனமானம், அரசியல்
இயக்கம்
திராவிட இயக்கம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
பாண்டியன் பரிசு
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சாகித்திய அகாதமி விருது
துணைவர்(கள்)
பழநி அம்மையார்
பிள்ளைகள்
சரசுவதி.கண்ணப்பன்
வசந்தா.தண்டபாணி
இரமணி.சிவசுப்ரமணியன்
மன்னர்மன்னன்
தாக்கங்கள்
பின்பற்றுவோர்
கையொப்பம்
Bharathidasan-signature.png
வாழ்க்கைக் குறிப்பு தொகு
Bharathidasan.png
புரட்சிக்கவி பாரதிதாசன் ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன.

மறைவு தொகு
பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள் தொகு
"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே"

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

பாரதிதாசனின் ஆக்கங்கள் தொகு
பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:

அம்மைச்சி (நாடகம்) [1]
உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
எது பழிப்பு, குயில் (1948)
கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
கழைக்கூத்தியின் காதல் (நாடகம்) [1]
கலை மன்றம் (1955)
கற்புக் காப்பியம், குயில் (1960)
சத்திமுத்தப் புலவர் (நாடகம்) [1]
நீலவண்ணன் புறப்பாடு
பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967) [1]
பெண்கள் விடுதலை
விடுதலை வேட்கை
வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
ரஸ்புடீன் (நாடகம்) [1]
இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிதாசன் நூல்கள் தொகு
பாரதிதாசன் படைப்புகள் பல அவர் வாழ்ந்தபொழுதும் அவரின் மறைவிற்குப் பின்னரும் நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:

வ.எண் நூலின் பெயர் முதற்பதிப்பு ஆண்டு வகை பதிப்பகம் குறிப்பு
01 அகத்தியன்விட்ட புதுக்கரடி 1948 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
02 சத்திமுத்தப்புலவர் 1950 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை 
03 இன்பக்கடல் 1950 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை 
04 அமிழ்து எது? 1951 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
05 அமைதி 1946 நாடகம் செந்தமிழ் நிலையம், இராமச்சந்திராபுரம் 
06 அழகின் சிரிப்பு 1944 கவிதை முல்லை பதிப்பகம், சென்னை 
07 இசையமுது (முதலாம் தொகுதி) 1942 இசைப்பாடல் பாரத சக்தி நிலையம், புதுவை 
08 இசையமுது (இரண்டாம் தொகுதி) 1952 இசைப்பாடல் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 
09 இந்தி எதிர்ப்புப் பாடல்கள் 1948 இசைப்பாடல் 
10 இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1939 நாடகம் குடியரசுப் பதிப்பகம் 1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.
11 இருண்டவீடு 1944 காவியம் முத்தமிழ் நிலையம், கோனாபட்டு, புதுக்கோட்டை 
12 இலக்கியக் கோலங்கள் 1994 குறிப்புகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
13 இளைஞர் இலக்கியம் 1958 கவிதை 
14 உலகம் உன் உயிர் 1994 கவிதை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை வெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு
15 உலகுக்கோர் ஐந்தொழுக்கம் 1994 கட்டுரைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள்
16 எதிர்பாராத முத்தம் 1938 கவிதை - 
17 எது இசை? 1945 சொற்பொழிவும் பாடல்களும் கமலா பிரசுராலயம், 59 பிராட்வே, சென்னை பாரதிதாசனும் பாடல்களும் அண்ணாதுரையின் கட்டுரையும் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர் மு. அண்ணாமலை செட்டியார், ராஜாகோபாலாச்சாரியார் ஆகியோரின் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு[2]
18 ஏழைகள் சிரிக்கிறார்கள் 1980 சிறுகதைகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு.
19 ஏற்றப் பாட்டு 1949 இசைப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
20 ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது 1978 இசைப்பாடல் பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
21 கடற்மேற் குமிழிகள் 1948 காவியம் பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
22 கண்ணகி புரட்சிக் காப்பியம் 1962 காவியம் அன்பு நிலையம், சென்னை 
23 கதர் இராட்டினப்பாட்டு, 1930 இசைப்பாடல் காசி ஈ லஷ்மண் பிரசாத், ஶ்ரீவேல் நிலையம், புதுச்சேரி 
24 கவிஞர் பேசுகிறார் 1947 சொற்பொழிவு திருச்சி அன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது
25 கழைக்கூத்தியின் காதல் 1951 நாடகம் 
26 கற்கண்டு 1945 நாடகம் பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது
27 காதலா? கடமையா? 1948 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 
28 காதல் நினைவுகள் 1944 கவிதை செந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம் 
29 காதல் பாடல்கள் 1977 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
30 குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி 1942 காவியம் பாரத சக்தி நிலையம், புதுவை 
31 குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல் 1944 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை 
32 குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம் 1948 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை 
33 குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு 1950 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை 
34 குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல் 1950 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை ஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது.
35 குமரகுருபரர் 1992 நாடகம் காவ்யா, பெங்களூர் 1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது
36 குயில் பாடல்கள் 1977 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
37 குறிஞ்சித்திட்டு 1959 காவியம் பாரி நிலையம், சென்னை 
38 கேட்டலும் கிளத்தலும் 1981 கேள்வி-பதில் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
39 கோயில் இருகோணங்கள் 1980 நாடகம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
40 சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 1930 காவியம் ம. நோயேல் வெளியீடு, புதுவை பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
41 சிரிக்கும் சிந்தனைகள் 1981 துணுக்குகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
42 சிறுவர் சிறுமியர் தேசியகீதம் 1930 கவிதை 
43 சுயமரியாதைச் சுடர் 1931 பாட்டு கிண்டற்காரன் என்னும் புனைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல்
44 செளமியன் 1947 நாடகம் 
45 சேரதாண்டவம் 1949 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 
46 தமிழச்சியின் கத்தி 1949 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 
47 தமிழியக்கம் 1945 கவிதை செந்தமிழ் நிலையம், ராயவரம் ஒரே இரவில் எழுதியது
48 தமிழுக்கு அமிழ்தென்று பேர் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
49 தலைமலை கண்ட தேவர் 1978 நாடகம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
50 தாயின் மேல் ஆணை 1958 கவிதை 
51 தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு 1930 பாட்டு ம. நோயேல் வெளியீடு, புதுவை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
52 திராவிடர் திருப்பாடல் 1948 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
53 திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் 1949 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
54 தேனருவி 1956 இசைப்பாடல் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
55 தொண்டர் வழிநடைப் பாட்டு 1930 பாட்டு 
56 நல்லதீர்ப்பு 1944 நாடகம் முல்லைப் பதிப்பகம், சென்னை 
57 நாள் மலர்கள் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
58 படித்த பெண்கள் 1948 நாடகம் 
59 பன்மணித்திரள் 1964 கவிதை 
60 பாட்டுக்கு இலக்கணம் 1980 இலக்கணம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
61 பாண்டியன் பரிசு 1943 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை 
62 பாரதிதாசன் ஆத்திசூடி 1948 கவிதை 
63 பாரதிதாசன் கதைகள் 1955 சிறுகதை ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி சிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு
64 பாரதிதாசனின் கடிதங்கள் 2008 கடிதங்கள் ச.சு.இளங்கோ பதிப்பு
65 பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) 1938 கவிதை குஞ்சிதம் குருசாமி, கடலூர் 
66 பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) 1949 கவிதை பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி இ.பதிப்பு 1952
67 பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) 1955 கவிதை 
68 பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) 1977 கவிதை பாரி நிலையம், சென்னை. 
69 பாரதிதாசன் நாடகங்கள் 1959 கவிதை பாரி நிலையம், சென்னை 
70 பாரதிதாசனின் புதிய நாடகங்கள் 1994 நாடகங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
71 பாரதிதாசனின் புதினங்கள் 1992 புதினம் ச.சு.இளங்கோ பதிப்பு
72 பாரதிதாசன் பேசுகிறார் 1981 சொற்பொழிவு ச.சு.இளங்கோ பதிப்பு.
73 பாரதிதாசன் திருக்குறள் உரை 1992 உரை பாரி நிலையம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
74 பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் 2012 திரைக்கதை பாரி நிலையம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும்
75 பிசிராந்தையார் 1967 நாடகம் 1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
76 புகழ்மலர்கள் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
77 புரட்சிக் கவி 1937 கவிதை ஶ்ரீசாரதா பிரஸ், புதுவை பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
78 பொங்கல் வாழ்த்துக் குவியல் 1954 கவிதை பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 
79 மணிமேகலை வெண்பா 1962 கவிதை 
80 மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 1926 இசைப் பாடல் காசி-லஷ்மண் பிரசாத், வேல் நிலையம், புதுச்சேரி 
81 மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம் 1925 கவிதை ஜெகநாதம் பிரஸ், புதுவை 
82 மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 1920 இசைப்பாடல் ஜெகநாதம் பிரஸ், புதுவை 
83 மானுடம் போற்று 1984 கட்டுரைகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
84 முல்லைக்காடு 1948 கவிதை ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி 
85 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? 1980 இலக்கணம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
86 வேங்கையே எழுக 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
திரையுலகில் பாரதிதாசன் [3] தொகு
திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாக திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்கு கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு என பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.

திரைக்கதை, உரையாடல் தொகு
அவ்வகையில் அவர் பின்வரும் படங்களுக்கு திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதியனார்:

வ.எண். திரைப்படத்தின் பெயர் ஆண்டு இயக்குநர் கதாநாயகன் தயாரிப்பாளர் குறிப்பு
1 பாலாமணி அல்லது பக்காத்திருடன் 1937 - தி. க. சண்முகம் - 
2 இராமானுஜர் 1938 வ. ராமசாமி சங்கு சுப்ரமணியம் - 
3 கவிகாளமேகம் 1940 எல்லிஸ் ஆர். டங்கன் டி. என். ராஜரத்தினம் - 
4 சுலோசனா 1944 டி. ஆர். சுந்தரம் டி.ஆர்.சுந்தரம் மார்டன் தியேட்டர்ஸ் 
5 ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 - பி. எஸ். கோவிந்தன் - 
6 பொன்முடி 1949 - பி. வி. நரசிம்மபாரதி - 
7 வளையாபதி 1952 - ஜி.முத்துக்கிருட்டிணன் - 
8 குமரகுருபரர் - - - மாடர்ன் தியேட்டர்ஸ் 
8 பாண்டியன் பரிசு - சிவாஜி கணேசன் பாரதிதாசன் பிக்சர்ஸ் தொடக்கவிழாவோடு நின்றுவிட்டது
9 முரடன்முத்து - - - பாரதிதாசன் பிக்சர்ஸ் படமாக உருவாகவில்லை
10 மகாகவி பாரதியார் - - - பாரதிதாசன் பிக்சர்ஸ் படமாக உருவாகவில்லை
இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களை தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

திரைப்படப்பாடல்கள் தொகு
பாரதிதாசன் திரைப்படத்திற்கென தானே பல பாடல்களை இயற்றினார். அவர் வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றை சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். அப்பாடல்களும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும் பின்வருமாறு:

வ.எண் பாடல்கள் திரைப்படம் ஆண்டு பாடகர் இசையமைப்பாளர்
1 அனைத்துப் பாடல்களும் பாலாமணி அல்லது பக்காத்திருடன் 1937 - -
2 அனைத்துப் பாடல்களும் ஸ்ரீ ராமானுஜர் 1938 - -
3 அனைத்துப் பாடல்களும் கவி காளமேகம் 1940 - -
4 வெண்ணிலாவும் வானும் போல... பொன்முடி 1950 - -
5 துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... ஓர் இரவு 1951 - -
6 அதோ பாரடி அவரே என் கணவர்... கல்யாணி 1952 - -
7 வாழ்க வாழ்க வாழ்கவே... பராசக்தி 1952 - -
8 பசியென்று வந்தால் ஒரு பிடி சோறு... பணம் 1952 - -
9 அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?... அந்தமான் கைதி 1952 - -
10 குளிர்த்தாமரை மலர்ப்பொய்கை... வளையாபதி 1952 - -
11 குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி... வளையாபதி 1952 - -
12 தாயகமே வாழ்க தாயகமே வாழ்க... பூங்கோதை 1953 - -
13 பாண்டியன் என் சொல்லை..... திரும்பிப்பார் 1953 - -
14 ஆலையின் சங்கே நீ ஊதாயோ… ரத்தக் கண்ணீர் 1954 - -
15 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என் மகள் 1954 - -
16 நீலவான் ஆடைக்குள் உடல் ... கோமதியின் காதலன் 1955 - -
17 ஆடற்கலைக்கழகு தேடப்பிறந்தவள்... நானே ராஜா 1955 - -
18 தலைவாரி பூச்சூடி உன்னை-பாட... ரங்கோன் ராதா 1956 - -
19 கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே... குலதெய்வம் 1956 - -
20 ஒரே ஒரு பைசா தருவது பெரிசா... பெற்ற மனம் 1960 - -
21 பாடிப் பாடிப் பாடி வாடி... பெற்ற மனம் 1960 - -
22 மனதிற்குகந்த மயிலே வான்விட்டு... பெற்ற மனம் 1960 - -
23 தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்த... பஞ்சவர்ணக்கிளி 1965 - -
24 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்... கலங்கரை விளக்கம் 1965 - -
25 வலியோர் சிலர் எளியோர் தமை... மணிமகுடம் 1966 - -
26 புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட சந்திரோதயம் 1966 - -
27 எங்கெங்குக் காணிணும் சக்தியடா !... நம்ம வீட்டுத் தெய்வம் 1970 - -
28 சித்திரச் சோலைகளே-உமை நன்கு.... நான் ஏன் பிறந்தேன் 1972 - -
29 புதியதோர் உலகம் செய்வோம் பல்லாண்டு வாழ்க 1975 - -
30 காலையிளம் பரிதியிலே ... கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978 - -
31 அம்மா உன்றன் கைவளையாய் ... நிஜங்கள் 1984 - -
32 கொலை வாளினை எடடா... சிவப்பதிகாரம் - - -
33 அவளும் நானும் அமுதும் தமிழும் அச்சம் என்பது மடமையடா

திங்கள், 27 ஏப்ரல், 2020

மனோன்மணியம் சுந்தரனார்

தமிழறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரனார் நினைவு நாள்
‌26.4.1897

‌நம் செந்தமிழ் மொழிக்கு முத்தமிழ் எனப்பெயருண்டு. இயல் , இசை, கூத்து அல்லது நாடகம் ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரித்து  தமிழ் தொன்று தொட்டு அழைக்கப்பட்டு வருகிறது. 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இயல், இசையை விட நாடகத்தமிழ் நலிவுற்றுக் காணப்பட்டது. இதை எண்ணி தத்துவப் பேராசிரியர் ஒருவர் மனம் வருந்தினார். 
‌தொல்காப்பியம் குறிப்பிடும் “நாடக வழக்கினும்  உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம்” கருத்தையும், பட்டினப்பாலை குறிப்பிடும் “பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் ” பாடலை அறிந்த போதும், குறுந்தொகையில் வரும் “நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்து விசிவீங்கு இன்னியங் கடுப்ப” பாடலை வாசித்த போதும் அந்த தத்துவப் பேராசிரியருக்கு புது உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியது. நாடகத் தமிழுக்கு உயிரூட்டுவதே தமது முதற்கடமையாக எண்ணி, தானே “மனோன்மணீயம்” எனும் பெயரில் நாடக நூல் ஒன்றை இயற்றி வெளியிட்டார்.
‌நாடக மறுமலர்ச்சிக்கு திருப்புமுனையாக அந்நூல் வித்திடும் என்று அவரே எண்ணியிராத வேளையில், நாடகத் தமிழுலகம் அந்நூலை உயர் தமிழ்ச் சொத்தாக அறிவித்ததோடு,  அந்த தத்துவப் பேராசிரியரை உச்சி மோந்து கொண்டாடியது. பிறகு அந்த தத்துவப் பேராசிரியர் வரலாற்றுத் துறைக்கும், தமிழ்த்துறைக்கும் வழிகாட்டியாக உயர்வு அடைந்தார். அவர் வேறு யாருமல்ல; நாமெல்லாம் பாடும்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தந்த “மனோன் மணீயம்” சுந்தரனார் தான்.
‌‌இவர் அன்றைய திருவிதாங்கூர் சமசுதானத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் 4.4.1855இல் பெருமாள் பிள்ளை – மாடத்தி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தந்தையார் மதுரை சோமசுந்தரக் கடவுளின் நினைவாக சுந்தரர் எனப் பெயரிட்டார். நாஞ்சில் நாட்டை பூர்விகமாக கொண்ட  இவரின்  தந்தையார் தொழில் நிமித்தம் காரணமாக ஆலப்புழைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தார்.
‌சுந்தரர் ஐந்து வயதுக்குள்ளேயே தமது தந்தையாரிடமிருந்து திருவாசகம், தேவாரம் ஆகிய பாடல் பாசுரங்களையும், திருக்குறள், நாலடியார், ஆத்திச் சூடி , கொன்றை வேந்தன் முதலிய அறநெறி நூல்களையும் கற்றுத் தெளிந்தார். பின்னர் ஆலப்புழையில் இருந்த ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்து படித்தார். உயர்நிலைப்பள்ளிப்படிப்பை முடித்த பிறகு திருவனந்தபுரம் அரசர் பாலராமவர்மன் அரசர் கல்லூரியில் (தற்போது திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகம்)  சுந்ரனார் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அரசுத் தேர்வில் முதன் மாணாக்கராக தேர்வு பெற்று கல்லூரி நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெற்றார். 1876இல் தமது 21-ஆம் வயதில் பி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்று பட்டம் பெற்றார். 
‌அக்கல்லூரியில் மேல்படிப்பை தொடர சுந்ரனார் விரும்பிய போது அக்கல்லூரி முதல்வர் இராஸ் என்பவர் சுந்தரனாரின் கற்கும் தனித்த ஆற்றலைக் கண்டு வியந்து நேரில் அழைத்தார். மேற்படிப்பை படித்துக் கொண்டே தத்துவப் பேராசிரியராக பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார்.
‌திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ் பள்ளிக்குத் தலைமையாசிரியாகப் பணியாற்றும் வாய்ப்பு சுந்தரனாருக்கு கிடைத்தது. அப்பள்ளியின் வளர்ச்சியில் பெரிதும் ஆர்வங் கொண்ட  அவர் அப்பள்ளியை  திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியாக மாற்றி அதன் முதல்வராக 1877 முதல் 1879 வரை பணியாற்றினார். 
‌அவர் பணியாற்றிய திருநெல்வேலி சைவத்திற்கும், தமிழுக்கும் பெயர் பெற்றது. அங்கு நடக்கும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு , தாமும் மேடை நிகழ்வுகளில் உரை நிகழ்த்தினார். தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளூர் இதழ்களில் தொடர்ந்து எழுதி தமிழறிஞர்களின் பேராதரவைப் பெற்றார். திருநெல்வேலிக்கு அருகில் உள்ள  கோடக நல்லூரில் உள்ள சுந்தர சுவாமிகள் என்பவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டார். சமய நெறி, வேதாந்தம், சித்தாந்தம், தத்துவம் ஆகியவற்றில் தமக்கு ஏற்படும் ஐயங்களை தீர்த்துக் கொண்டார். 
‌‌சுந்தர சுவாமிகளை தன் ஞான குருவாகவே ஏற்றுக் கொண்ட சுந்தரனார் தனது நாடக நூலான மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பை வழங்கி அவருக்கு சிறப்பு செய்தார். 
‌1877இல் சிவகாமி அம்மையாரை திருமணம் செய்து கொண்டு இல்லறம் கண்டார். 1879இல் திருவனந்தபுரம் அரசர் கல்லூரி தத்துவப் பேராசிரியர் இராபர்ட் ஹார்வி என்பவர்  ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகி தாயகம் செல்ல  முடிவெடுத்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் சுந்தரனார் மீண்டும் தத்துவப் பேராசிரியரானார். 
‌அப்போது தத்துவத்துறைப் பேராசியருக்கு நாடகத்தமிழ் மீது காதல் பிறந்தது. அவர் காலத்தில் நடைபெற்ற நாடகங்கள் அனைத்தும் சமசுகிருதம், தெலுங்கு, ஆங்கிலக் கலப்போடு அரங்கேற்றம் செய்யப்பட்டு வந்தன. மேலைப் பண்பாட்டை பிரதிபலிப்பவையாக அந்த நாடகங்கள் அமைந்திருந்தன. 
‌தமிழ் மரபுக்கேற்ப நாடகக்கலையை உருவாக்க விரும்பிய சுந்தரனார் தமது கல்லூரி நிறுவனரான அரசரிடம் கூறி , லிட்டன் பிரபு எழுதிய நாடக நூல்களை வரவழைத்துப் படித்தார். லிட்டன் பிரபு எழுதிய “இரகசிய வழி” (The secret way) நாடகம் பிடித்துப் போனது. அக்கதையை மூலக் கருவாக அமைத்து “மனோன் மணீயம்” நாடக நூலைப் படைத்தார். 1891இல் வெளியிடப் பட்ட இந்நூல் தமிழ் நாடக வரலாற்றில் தன்னிகரில்லா இடத்தைப் பிடித்தது. இதன் இரண்டாம் பதிப்பை வையாபுரி பிள்ளை வெளியிட்டார். மூன்றாம் பதிப்பை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் (1933) வெளியிட்டது. 25 பதிப்புகளுக்கு மேல் வெளிவந்து இன்றளவும் படிப்பவர் மனதைப் பறித்து வருகிறது.
‌மனோன்மணீயம் நூலின் மற்றொரு உயிரான பகுதி தமிழ்மொழியை கடவுளாக உருவகப்படுத்தி சித்தரிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகும். அதில் திராவிடநல் திரு நாடு என்று தமிழ்நாடு சுட்டப் பெற்றிருக்கும்.  
‌1856இல் இராபர்ட் கால்டுவெல் அவர்கள் தனது “தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” நூலில் திராவிடம் என்ற சொல்லாடலைப் புகுத்தியிருப்பார். அன்றைக்கு அச்சொல் தவறாகப் பரப்பப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வந்தது. அன்றைக்கு சுந்தரனாரையும் அச்சொல் ஆட்கொண்டு விட்டது. திராவிடம் என்ற சொல்லை சுந்தரனார் பயன்படுத்தியிருந்தாலும் தமிழ் மொழியில்  இருந்துதான் ஏனைய தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிகள் தோன்றியதாக குறிப்பிடுவார். ஆரியமொழியையும் அப்பாடலில் சாடியிருப்பார். 
‌1970ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு (தி.மு.க.ஆட்சி ) அப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக  அறிவித்தது.  அதில் பல வரிகள் நீக்கப்பட்டன.  சுந்தரனார் உயிரோடு இருந்திருந்தால் இச்செயலுக்கு வன்மையான தனது கண்டனத்தை பதிவு செய்திருப்பார். முழுமையான தமிழ்த் தாய் வாழ்த்துப் (UnEdited Version of Tamil Thai vazhthu) பாடல் பின்வருமாறு:
‌”நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
‌சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
‌தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
‌தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
‌அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
‌எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
‌பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
‌எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
‌கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
‌உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
‌ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன
‌சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!” 
‌‌சுந்தரனார் ஆரியம்போல் அழியாமல் இருப்பது தமிழ் என்று கூறுவது ஆரியம் பேச்சு வழக்கொழிந்த மொழி, எந்தத் தேசத்திற்கும் தாய்மொழியாக இல்லாதது என்று பொருள் கொண்டதாகும். 
‌ 19.12.1896இல்  ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளைக்கு அவர் எழுதிய பின்வரும் கடிதம் தெரிவிக்கிறது. “பொதுவாக ஆரியத்தத்துவம், ஆரிய நாகரிகம் என்றெல்லாம் சொல்லப்படுவனவற்றில் பெரும்பகுதி உண்மையில், அடித்தளத்தில் திராவிட அல்லது தமிழ்த்தத்துவமே ஆகும் ( “Most of what is ignorantly called Aryan Philosophy, Aryan civilization is literally Dravidian or Tamilian at the bottom.” (19-12-1896)
‌திருவிதாங்கூர் அரசு 1896 ஆம் ஆண்டு கல்வெட்டுத்துறையை உருவாக்கியது.  சுந்தரனார், அரசுக் கல்வெட்டுத் துறையின் ‘மதிப்புறு தொல்லியல் ஆய்வாளராக’ நியமிக்கப்பட்டார். அவர் திருவிதாங்கூரின் பல பகுதிகளிலும் கிடைத்த கல்வெட்டுக்களைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.
‌12 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வேணாட்டு திருவடி அரசர்கள் வரலாற்றையும் அதில் வரலாற்றில் அறியப்படாத 9 வேணாட்டு அரசர்கள் குறித்தும் கல்வெட்டுச் சான்றுகளோடு எழுதினார். சுந்தரனாருக்கு முன்பு சுகுணி மேனன்  எழுதிய திருவிதாங்கூர் வரலாறு எனும்  நூலானது நம்பத்தகுதியற்ற ஆதாரமற்றது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சுந்தரனார் எழுதிய கல்வெட்டு குறித்த ஆய்வுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
‌நூற்றொகை விளக்கம்,  ‘சிவகாமி சரிதம்’, ‘ஒரு நற்றாயின் புலம்பல்’, ‘பொதுப் பள்ளியெழுச்சி’, ‘அன்பின் அகநிலை’ ஆகிய கவிதை நூல்களும், ‘ஜீவராசிகளின் இலக்கணம்’,  ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய உரைநடை நூல்களும்,  ‘உரை நடை மடல்,’ ‘கவிதை மடல்’ ஆகிய மடல் நூல்களும் சுந்தரனார் எழுதிய பிற நூல்களாகும்.
‌வாழ்வின் இறுதிக் காலத்தில்,  தான் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்கு ஹார்வி புரம் எனப் பெயர் சூட்டினார்.  தனக்கு உதவிய தத்துவப் பேராசிரியர் இராபர்ட் ஹார்விக்கு நன்றி செலுத்தவே இப்பெயரை தேர்ந்தெடுத்ததாக கூறினார்.
‌ தத்துவத்துறையிலும், தமிழ்நாடகத் துறையிலும், கல்வெட்டுத்துறையிலும் பெரும் புகழ் பெற்ற  சுந்தரனார் 26.04.1897 ஆம் நாள்  நாற்பத்திரெண்டாவது வயதில் காலமானார்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

ஜி. யு. போப்



ஜி. யு. போப் 
(George Uglow Pope)
கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர்.தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது.19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

தமிழ்நாட்டிற்கு வருகை

விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.

சென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப், சென்னையில் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அங்கு ’குரு’ பட்டம் பெற்றார். எஸ். பி. ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்

சாயர்புரத்தில்

தூத்துக்குடிக்கு அருகே உள்ளசாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கணஇலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிரதெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு திருமணம் செய்து கொண்டார்.

போப்பின் சாயர்புர பணி சமயப்பணி, கல்விப்பணி என இரு பகுதிகள் கொண்டது.

தஞ்சாவூரில்

தன் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.

போப்பின் தஞ்சாவூர் பணி சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது.

உதகமண்டலத்தில்

தஞ்சையில் கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னர் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காத உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டோர் தங்களுக்கு முதலிடம் கேட்டனர். போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து முதலிடம் கேட்டோரால் ஏற்கப்படவில்லை. கிறித்துவ சபையான நற்செய்திக் கழகத்தாரும் உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டவர்களைச் சார்ந்து நின்றதால், போப் தமது 16 வருட நற்செய்திக் கழகத் தொண்டர் பணியிலிருந்து விலகி கிறித்துவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவியின்றி தனிப்பட்ட முறையில் சமயப் பணியாற்றும் நோக்குடன், போதிய பொருளின்றி தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் ஐந்து மக்களுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து உதகமண்டலம் சென்றார்.

உதகையில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக அமர்ந்து பாடம் சொன்னார், பின்னர் உதகையில் சிறந்த பள்ளியை உருவாக்கினார், சிறைத் தண்டனை பெற்றிருந்த ஐரோப்பிய குற்றவாளிகளைக் கண்டு பேசுவார். இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்றுவந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார்.

உதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ’மறை நூற் புலவர்’ எனும் பட்டம் அளித்தார். 

பெங்களூரில்

1871இல் சில சூழல் காரணமாக பெங்களூர் சென்று அங்கு கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு உடல் நலம் குன்றியதால் 1882இல் இங்கிலாந்து திரும்பினார்.

தமிழ்த் தொண்டுகள

இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.1886 ஆம் ஆண்டு திருக்குறளைஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர்நாலடியார், திருவாசகம்ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

மூன்று இறுதி விருப்பங்கள்

முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.

இறப்புக்கு பின் தனது கல்லறையில்இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும்(அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.

கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பது.

ஜி. யு. போப்  அவர்களின் பிறந்தநாள் இன்று
(ஏப்ரல் 24, ஆண்டு1820 ) 

மெரினா கடற்கரையில்இருக்கும் ஜி. யு. போப் சிலை

ஆசிரியர் நகுல்சாமி

அந்தணர் – பார்ப்பனர் – பிராமணர்! - சில சங்க இலக்கியச் சான்றுகள்.

-ம.செந்தமிழன்

சில சங்க இலக்கியச் சான்றுகள்.
-ம.செந்தமிழன்


ஆரியத்தின் சாதியம் ஐந்து அடிப்படைகளைக் கொண்டது;
1. பிறப்பு அடிப்படை
2. குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என்ற விதி
3. பிற பிரிவினருடன் கலவாமை / தனித்துவம் காத்தல்
4. தீண்டாமை
5. இவற்றை மீறுவோருக்குக் கடும் தண்டனைகள்


தொல்காப்பிய நால்வகைத் தொழிற்பிரிவுகளில் இந்த ஐந்து அடிப்படைகளுமே இல்லை. மேலும், தொல்காப்பியர் மிகத் தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;


’ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும்
யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’ (மரபியல் 75)
-இதன் பொருள்,
’ஊர், பெயர்,தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’ என்பதாகும். எந்தப் பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்ட ’தர்மம்’ அல்ல என்பதை இந்த விதி விளக்குகிறது.


‘தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்க’ (மரபியல் 76)
-என்கிறார் தொல்காப்பியர். 


தலைமைப் பண்பைப் பொறுத்தவரை, அவரவரும் தமது நிலைமைக்கேற்பவே நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது இவ்விதி. தலைமைப் பண்பு என்பது, பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது, தொடர்புடையவர், குறிப்பிட்ட சூழலில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். 


மேற்கண்ட இரு விதிகளும் மிக விரிவாகப் பொருள் கொள்ளத்தக்கவை ஆகும். நால்வருணத்தின் அடிப்படைகளுக்கும் இவ்விதிகளுக்கும் முரண்பாடுகள் மட்டுமே இருக்கின்றன. 


மேலும், நால்வருணக் கோட்பாடு வகுத்த அதிகாரப்படிநிலை,
1. பிராமணர்
2. சத்ரியர்
3. வைசியர்
4. சூத்திரர்
-என்பதாகும். 
தொல்காப்பியம் வகுத்த நான்குவகைப் பிரிவுகளின் அதிகாரப்படிநிலை,
1. அரசர்
2. அந்தணர்
3. வணிகர்
4. வேளாளர்
-என்பது. இதில், பிராமணர் என்ற பிரிவே இல்லை. பிராமணர் இருக்க வேண்டிய இடத்தில் அரசர் உள்ளார். அவருக்குப் பிறகே, அந்தணர் வருகிறார். அந்தணர் என்றால், அது ஆரிய பிராமணரைக் குறிப்பதாக, கற்பனையாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.


அந்தணர் என்போர் யார் என விரிவாகக் காண்போம்.


தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே, சங்க இலக்கியங்கள் பதிவு செய்த வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடியும்.


ஐயர் என்ற சொல் ’தலைவர் / சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும். 
’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ’ஐயை’ என்பது தலைவியைக் குறிக்கும். ’ஐயா’ என்பது மரியாதையுடன் ஒருவரை விளிக்கும் சொல். இவ்வகையில்தான், ஐயர் என்னும் சொல், தலைவர் என்ற பொருள் தாங்கி நின்றது. 


சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். சிந்துவெளித் தமிழரின் எழுத்துக்களைப் படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார் முனைவர்.இரா.மதிவாணன்.


சிந்துவெளி எழுத்துக்கள் அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதை இந்நூல் வாயிலாக உணரலாம். 
இந்நூலில் உள்ள அகர வரிசைச் சொற்களில் ஒன்று,


‘அய்யன்’ என்பதாகும்.
(Indus Script Dravidian / Dr.R.Mathivanan / Tamil Chanror Peravai / 1995 / பக் – 137)


(அ)ய்யஅன்
(அ)ய்ய(ன்) மாசோண(ன்) மன்னன்
(அ)ய்ய(ன்) வைகா சானஅன்
(அ)ய்ய(ன்) காங்கணஅன்
(அ)ய்ய(ன்)


(மேலது நூல் – பல்வேறு பக்கங்களில்)


ஐயர், என்றால் அதுவும் பிராமணர்தான், என்றால், சிந்துவெளித் தமிழரும் ஆரிய பிராமணர்தான் என்பார்களோ, திராவிடக் கோட்பாட்டாளர்கள்!
மேற்கண்ட நூலில் உள்ள ’சானஅன்’ என்னும் சொல் விரிவான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட வேண்டியதாகும். ஏனெனில், இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில், அந்தனன், அய்யன் போன்ற, அறிவுத் துறைச் சொற்கள் உடன்வருகின்றன. 


சாணார், என்போர் சான்றோர். இவரே, பின்னாட்களில் நாடாரெனும் சாதியரானார் என்ற கருத்து நெடு நாட்களாகக் கருத்துலகில் உள்ளது. சிந்துவெளிச் சொற்களில், சானாஅர், அந்தனஅர், அய்யஅன் ஆகிய மூன்று சொற்களுக்கும் இந்த உறவு உள்ளதாகத் தெரிகிறது.


ஆரியர் வருகைக்கு முன்னரே, அய்யன் என்னும் சொல்லைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.


ஐயர் என்பது, பிராமணரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பிராமணர்களாலேயே மாற்றிக்கொள்ளப்பட்டது.


அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே. 


சான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர்(பதிற்றுப் பத்து தெளிவுரை –புலியூர் கேசிகன்). இவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர். குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.


இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன். இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமையவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை,
’இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார். மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமையவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.


குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்;


’இமையவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா? இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும். (அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய். மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்துகொண்டிருந்தன. வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கிவிட்டன. அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’


அந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு மகிழ்வுடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா?


தாம் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.


‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே. வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. 


பாணர்கள் என்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள். ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு. அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள். விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.


இதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர். உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர். பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.


எனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;


‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்....’உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன (அகத்திணையியல் 44).


இவ்விதியில், ’தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார். அதாவது, குழுத் தலைவன், குடும்பத் தலைவன் என்று அனைத்து அலகுகளின் தலைமையில் உள்ளவன் என்று பொருள். இந்தத் தலைவன், அரசருக்காக செய்ய வேண்டிய / செய்யத்தக்க பங்களிப்புகள்தான் அகத்திணையியலில் கூறப்பட்டது.


அரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.


இந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.


ஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை.
’அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக்கொண்டால்தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக்கொள்ள வேண்டும்.அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரிய பிராமணர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர். அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.


எல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரிய பிராமணரே, உண்மையான / மறைமுக ஆட்சியாளர்களாக இருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரிய பிராமணர்கள் செய்து முடித்தனர்.


இந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.


ஆரிய பிராமணரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.


நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே. இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ’வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பிக்கையாக மாற்றியவரே ஆரிய பிராமணர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். ஆயினும், அறிஞர் குணா அவர்களின் அரசியல் நிலைகளில் எனக்கு மாறுபாடுகள் உண்டு.


சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர். இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர். தமிழகத்திற்கு வந்தேறிய ஆரிய பிராமணரில் பலரும் தமிழகப் பார்ப்பாரோடு கலந்தனர். ஆகவே, பார்ப்பார் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பிரிவினரில் தமிழரும் உண்டு, ஆரிய பிராமணரும் உண்டு. பார்ப்பார் எனும் சொல், குலத் தொழிலைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டது. 


தமிழகத்திற்குப் பிழைப்பு தேடி வந்த எல்லா ஆரிய பிராமணரும், உயர் நிலையில் வைக்கப்படவில்லை. அவர்களது நிலை, தமிழர் அரசுகள் வீழ்ந்த பிறகுதான் உயர்ந்தது. 


பார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை;
’தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’
(தொல்காப்பியம், கற்பியல்-36)


அகநானூற்று பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது:
’உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (’தூதொய் பார்ப்பான்’) செல்கிறான். அப் பார்ப்பான், மடியிலே வெள்ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’
(அகநாநூறு 337)


குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.


‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’
(குறுந்தொகை 156)


பார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன. மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம். தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது. மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை. ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே...உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா?’ எனக் கேட்கிறார் புலவர்.


இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர். குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரிய பிராமணன் எனத் தெரிகிறது.

நான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும். இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.


ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியப் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம். 


குறிப்பாக, அந்தணர் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டது, தமிழ் மெய்யறிவாளர்களைத்தானே தவிர, ஆரிய பிராமணர்களை அல்ல. தொல்காப்பியர், தமிழ்ச் சமூகத்தின் பிரிவுகளில் ஆரிய பிராமணர்களைக் குறிப்பிடக் கூட இல்லை. ஆனால், மிகத் தவறான புரிதல்களால், திராவிடக் கோட்பாட்டாளர்கள், ‘தொல்காப்பியரே ஓர் ஆரிய பிராமணர்தான்’ என்று பரப்பிவிட்டார்கள். 
மூலமான சான்றுகளைப் படித்து, மெய்யான தமிழர் வரலாற்றை அறிய வேண்டியது தமிழர் கடமை!

(From Facebook)

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பார்ப்பனர்கள் தமிழர்களா?


===============================================
 -பாவலரேறு பெருஞ்சித்திரனார் பதில் அளிக்கிறார்.

 சீமான்கள் சிந்திக்கட்டும்!

பொது வாழ்க்கையில் இவர்களின் கட்டுப்பாடு தனி. இவர்கள் வாழும் பகுதிகளில் வேறு இனத்தவர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு வீடுகள் கிடைப்பதே அரிது. பல குடியிருப்புகள் கொண்ட பெரிய வீடுகளில் இவர்களைத் தப்பித் தவறிக் குடியமர்த்தினால் ஒரிராண்டுகளில் அங்குள்ள தமிழ்க் குடும்பங்களைச் சண்டையிட்டு வெளியேற்றிவிட்டுப் பார்ப்பனர் குடும்பங்களாகவே பார்த்துக் குடியமர்த்திக் கொள்ளுதல் இவர்கள் பழக்கம்.

சில வீட்டுப் பகுதிகளில் பிராமணர்களுக்கே வீடு விடப்படும். (To let only for Brahmins) என்று எழுதப்பட்ட பலகைகள் தொங்குவதைப் பார்க்கலாம். இவர்கள் வீடுகளில் பணியாற்றும் வேலைக்காரர்களை இவர்கள் என்றும் மதிப்பு வைத்தே அழைப்பதில்லை. அவர்களையும் சரி, பார்ப்பன அதிகாரிகளின்கீழ்ப் பணியாற்றும் பணியாட்களையும் சரி, அடே, அடி என்னும் சொற்களால்தாம் அழைக்கின்றனர். அவர்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களும்கூட அவர்களை வாய்கூசாமல் 'அடே, அடி' எனக் கூப்பிடுவதைக் கண்டு மனம் நோக வேண்டியுள்ளது.

நிலா மண்டிலம் போகும் இக்காலத்திலும் பிற இனத்தவரைத் தொட்டால் தீட்டு என்று கடுமையாகக் கருதும் பார்ப்பனர்கள் பெரும் பகுதியும் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் வீடுகளில் பிற இனத்தவரை உள்ளேவிட இன்றுகூட இசைவதில்லை.

இராசாசியின் தீண்டாமைப் போராட்டத்தைப் பாராட்டும் தினமணிச் சிவராமன்கள் இவ்வகையில் எப்படி நடக்கின்றார்கள் என்பதைக் கண்டால், இவர்கள் பேசுவதும் எழுதுவதும் பொதுமக்களை ஏமாற்றுவதற்கே என்பது தெற்றெனப் புலப்படும். துக்ளக்கில் இவர்களுக்காகப் பரிந்து எழுதிவரும் அரைப் பிராமணனான செயகாந்தனுக்குப் பார்ப்பன இனத்தவரின் முழுக்கேடுகளும் தெரிய வழியில்லை. அவர்களின் நச்சுத்தனத்தை இந்த இருபதாம் நூற்றாண்டிலும் அகற்ற வழியில்லையானால் அவர்களை எப்படித் தமிழ் இனத்தோடு ஒப்ப எண்ணுவது? தமிழ் பேசுவதால் மட்டுமே ஒருவன் தமிழன் என்று கருதப்பட வேண்டும் என்றால், ஆங்கிலம் பேசுகின்ற தமிழரை ஆங்கிலேயர் என்றன்றோ கருதுதல் வேண்டும்? ஆங்கிலம் பேசும் ஆப்பிரிக்கரைக்கூட ஆங்கிலேயர் என்று அவர்களே ஒப்புக்கொள்ளாத போது, தமிழ் பேசும் எவரும் எப்படித் தமிழர் ஆவார்? வேண்டுமானால் செயகாந்தன் என்னுடன் வரட்டும்; எனக்குத் தெரிந்த 'சமசுக்கிருத' ஆசிரியர் பலர் தமிழர்களாய் உள்ளனர். அவர்களை 'பிராமணர்கள்' என்று அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா என்று பார்ப்போம். சமசுக்கிருதம் பயிற்றும் ஆசிரியர் ஒருவர் தமிழராகவிருந்தார்  என்பதற்காக, அவரிடம் அம்மொழியைக் கற்க விரும்பாத பார்ப்பன மாணவர்கள் அத்தனை பெயரும் இந்தி வகுப்புக்குச் சென்றதை நானறிவேன்.

இப்பொழுதும் நிலை மாறிவிடவில்லை. அண்ணாமலையில் தமிழ்ப் பேராசிரியராகவிருந்த ஒருவர், வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தும் பார்ப்பனர் அவரைப் போற்றவில்லை.

பார்ப்பனப் பெண்களில் சிலர் நம் தமிழ இளைஞர்களை வறிதே வந்து மணந்து கொள்கின்றனர். பார்ப்பன வீடுகளில் பணியாற்றும் தமிழ இளைஞர் சிலர் பார்ப்பனப் பெண்களை விரும்பி மணந்து கொள்வதையும் பார்க்கின்றோம். எனினும் பார்ப்பன இளைஞர்கள் தமிழ்ப் பெண்களை மணந்து கொண்ட செய்தி மிகவும் அரியது. தமிழ் இளைஞர்கள் பார்ப்பனப் பெண்களை மணந்து கொள்ளும் வகையில் பல அடிப்படைக் கோளாறுகளே கரணியங்களாக இருக்கின்றன. அவ்வாறு மணந்து கொண்ட பெண்களும் அவ் விளைஞர்களின் கொள்கைகளையும் போக்குகளையும் அறவே திசைதிருப்பி விட்டு விடுகின்றனர். இவற்றிற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும்.

பார்ப்பனத்தமிழினக் கலப்பு தவிர்க்க முடியாததே! அதனால் பார்ப்பனர்கள் தமிழர்களைத் தழுவிக் கொண்டனர் என்று கூற முடியாது. மக்களினம் எல்லாம் ஒன்றுதான். அதை வரவேற்கவே செய்வர். ஆனால் கொள்கை வேறுபாடு போன்றவையே இன, மொழி வேறுபாடுகள் இனத்தாலும் மொழியாலும் ஒன்றினாலன்றி ஒரு நிலத்தில் வாழ்கின்ற மக்கள் கூட்டத்தை ஓரினத்தவர் என்று கூறிவிட முடியாது.

பார்ப்பனர்களை நாம் தமிழர்கள் என்று ஒப்பினாலும் அவர்கள் தம்மைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை. இன்னும் சமசுக்கிருதத்திற்கு அவர்கள் மதிப்பு வைப்பது போல் தமிழ் மொழிக்கு வைப்பதில்லை. எங்கோ ஒரு பாரதியார் பரிதிமாற் கலைஞர் இருந்தார் என்பதற்காகப் பார்ப்பனர்கள் தமிழர்களாகிவிட அவர்களே அணியமாக இல்லை. சமசுக்கிருதத்தைக் கலக்காத தமிழை அவர்கள் ஒப்புக்கொள்வதேயில்லை! பார்ப்பனர்களில் தமிழுக்காக உழைத்தவர்கள் போல் ஆங்கிலேயர்களிலும், பிரஞ்சுக்காரரிலும், செருமானியரிலும், அரபியர்களிலும், தமிழுக்குழைத்தவர்கள் ஏராளமான பெயர்கள் உளர். அவர்களெல்லாரும் தமிழர்கள் என்று கூறி விட முடியாது. இதைச் செயகாந்தன்கள் உணரவேண்டும்.

ஒரு மொழியில் புலமை பெறுதல் வேறு. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கருதுதல் வேறு. ஒரு பெண் வேறொரு குழந்தையைத் தன் குழந்தைப் போலவே கருதி வளர்க்கலாம். ஆனால் அக்குழந்தை அவளைத் தன் தாய் என்று கருத வேண்டும். பார்ப்பனர்கள் தமிழைத் தம் தாய்மொழியாகக் கொள்ளாதவரை அவர்களைத் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது; அவர்களும் தங்களைத் தமிழர்களாகக் கருதிக் கொள்ளவும் மாட்டார்கள். 
அவர்கள் அவ்வாறு தமிழைத் தங்கள் தாய்மொழியாகக் கருதினால் அதில் கலப்பு நேர்வதைப் பொறுக்கமாட்டார்கள். சமசுக்கிருதத்தில் ஆங்கிலச் சொற்களையோ பிரஞ்சுச் சொற்களையோ கலந்து பேச விரும்பாத ஒருவன், தமிழில் அவ்வாறு கலப்புச் செய்வதை விரும்புகின்றான் எனில், அவன் தமிழைத் தாய்மொழியாகக் கருதுகிறான் என்று எப்படி ஒப்புக்கொள்வது? செயகாந்தன் போன்றவர்களுக்குத் தமிழ்மொழியைத் தூய்மையாக எழுதத் தெரியாத கரணியத்திற்காக அவர் எழுதுவதுதான் தமிழ் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமா? அவ்வாறு ஒப்புக் கொண்டால் சென்னையில் உள்ள ஓர் உயர் விடுதியின் பரிமாறி (Butllor) பேசும் ஆங்கிலத்தையும் ஆங்கிலம் என்றுதானே ஒப்புக் கொள்ள வேண்டும். 'காவிரி ஜலம், கலாசார பலவினம்', 'பாரத ஞானபூமி' என்பவற்றைத் தமிழாகக் கொள்ள வேண்டுமானால், ‘பானை வாட்டர்' 'இருதய வீக்னசு' 'பாரத நாலெட்ச் பூமி' என்பவற்றை ஆங்கிலமாகக் கொள்ளவும், 'வாய்மை மேவ் செய்தா' 'பண்பாட்டு ஞானீபட' என்பவற்றைச் சமசுக்கிருதமாகக் கொள்ளவும் முன்வரவேண்டும்!

தமிழ்மொழியை மட்டும் அவர்கள் வந்து ஒண்டுதற்குரிய குட்டிச் சுவராக்கலாம். அவர்கள் மொழியான சமசுக்கிருதத்தை மட்டும் சிதைக்கக்கூடாது என்பதில் என்ன நடுநிலை உள்ளது? மொழித் துய்மையும் இனத் தூய்மையும் எல்லா மொழிக்கும் இனத்துக்கும் தானே. மொழியிலும் இனத்திலும் தூய்மை பார்க்க வேண்டா என்பதும் எல்லா மொழிக்கும் இனத்துக்குமான பொது அறமாகத் தானே இருத்தல் வேண்டும். பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்குச் சார்பானவர்களும் தங்கள் தங்கள் கருத்துகளைத் தங்களுடைய மனம் போனவாறு எழுதவும், மக்களிடையே எளிதில் பரப்பவும் ஏராளமாக வாய்ப்பு உள்ளது என்பதற்காகவே பிறர் கருத்து வலிவிழந்து போய் விட்டதாகக் கருதிவிட முடியுமா?

தேசிய மொழித் திருட்டு விளையாடல்!

இந்தியாவில் உள்ள 79 பல்கலைக் கழகங்களில் 63இல் சமசுக்கிருதம் பயில வாய்ப்பிருக்கின்றது. தமிழ் மொழியைச் சொல்லித் தர 12 பல்கலைக் கழகங்களே உள்ளன. தமிழைவிடச் சமசுக்கிருதம் பேசுபவர்கள் மிகுதியாக உள்ளனரா? இந்தியாவில் உள்ள நாலரைக் கோடி மக்கள் தமிழ் பேசுகின்றனர். சரியாகக் கணக்கிட்டால் ஏழு கோடிக்குக் குறையாது. (கணக்கெடுப்பவரிலும்? கணக்குப் பார்க்கும் அதிகாரிகளிலும் பெரும்பாலோர் தமிழர்க்கு மாறானவர்களாக இருப்பதால் இத்தகைய புள்ளி விளத்தங்கள் சரியாகவே இருப்பதில்லை). சமசுக்கிருதம் பேசுபவர் ஏறத்தாழ ஐநூறு பேர்களே ! இந்த ஐநூறு பேர்களின் மொழியைக் கற்றுக்கொடுக்க 63 பல்கலைக் கழகங்கள்! நாலரைக் கோடி மக்கள் பேசும் மொழியைக் கற்றுக் கொடுக்க 63 பல்கலைக் கழகங்கள்! நாலரைக் கோடி மக்கள் பேசும் மொழியைக் கற்பிக்க 12 பல்கலைக் கழகங்கள் இதுதான் தேசிய மொழித் திருட்டு) விளையாடலா?

மேலும் தமிழ்மொழிப் புலமையிலும் வேறுபாடு காட்டப் பெறுகின்றது. வடமொழி பயின்றவனுக்கு ஒரு மதிப்பு. தமிழ்மொழி பயின்றவனுக்கு ஒரு மதிப்பு. தமிழே தெரியாத சமசுக்கிருதப் பார்ப்பனப் புலவராகிய சுனிதி குமார் சட்டர்சி போன்றவர்கள் தமிழுக்கதிகாரிகள்! தமிழையும் பிற திரவிட மொழிகளையும் சமசுக்கிருதம், இலத்தீன், கிரேக்கம், சாக்சானியம் போன்ற மொழியிலக்கணங்களையும் பழுதறக் கற்ற பாவாணர் போன்றவர்கள் வெறும் தமிழ்ப்புலவர்கள். இந்த வேறுபாட்டு நிலை உள்ள வரை பார்ப்பனர்களைத் தமிழர்களோடு மொழி, இன நிலையில் இணைத்துக் கருதமுடியுமா?

மொழித் தூய்மையைப் பார்ப்பனர்களும் அவர் அடிவருடிகளும் ஒப்புக்கொள்வதே இல்லை. வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு மொழி கற்க வரும் மாணவ அறிஞர்களிடம் தங்களுக்குள்ள மேனிலை வாய்ப்புகளால் பிறரினும் முந்திக் கொண்டு போய்த் தாங்கள் பேசுவதே மொழியென்றும் எழுதுவதே எழுத்து என்றும் அவர்களிடம் இட்டுக்கட்டி உரைப்பதும், ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, தீபம் முதலிய தமிழ்க்கொலை செய்யும் ஏடுகளையே இலக்கிய ஏடுகள் என்று அவர்களிடம் காட்டி விதந்துரைப்பதும், அம் மாணவ அறிஞர்களின் பரிவால் மொழி ஆய்வுக்கென்றும் இலக்கிய வளர்ச்சிக் கென்றும், அமெரிக்கா, செருமனி முதலிய மேலை நாடுகளினின்று அனுப்பப் பெறும் அளவிறந்த பொருளுதவிகளைத் தாங்களே அமுக்கிக் கொள்வதும் அன்றாட நடைமுறைகளாகவிருக்கின்றன. இத்துறையில் பார்ப்பனர்கள் செய்யும் கள்ளத்தனங்களுக்கும், முல்லை மாறித்தனங்களுக்கும் ஒரு வரம்பே கிடையாது. சாகித்திய அகாடமி என்றும் சங்கீத நாடக அகாடமி என்றும் நேரு பரிசு, கலிங்கா பரிசு, ஞானபீடப் பரிசு என்றும், பல வகையிலும் தரப்பெறுகின்ற அறிவியல், கல்வி, கலைப் பரிசுகள் யாவும் அவர்கள் இனத்தவர்க்கே தேடிப் பிடித்துத் தரப்பெறுகின்றன. ஓரிரண்டு பரிசுகள் தமிழர்களுக்குத் தரப் பெறுவதானாலும் அவர்களின் அடிமைகளுக்கே தரப்பெறுகின்றன.

இலைகளிடைக் காய்போல் எங்கோ ஒரு பரிசு இவர்களின் கொள்கைக்கு மாறானவர்களுக்குத் தரப்பெற நேர்ந்தால், பிறர் நகைக்குமளவிற்கு நூல்களைத் தேர்வு செய்து கொடுக்கின்றனர். பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற வாழ்வியல், இயற்கை, சீர்திருத்தம் ஆகிய கூறுபாடுகளைக் கொண்டனவும், நோபல் பரிசுக்கும் தகுதி பெற்றனவும், அவர் புலமைக்கே கொடுமுடி போன்றனவுமான நூல்கள் இருக்க, அவர் நூல்களில் மிக எளியதும், அவர்தம் பாவியல் புலமைக்கு வேறுபட்ட நாடக வடிவில் உள்ளதுமான பிசிராந்தையார் என்னும் நூலுக்கு - அதில் அவரின் தலையாய கொள்கையான ஆரிய மறுப்புக் கருத்துகள் ஒன்றுமில்லை என்பதற்காகவே சாகித்திய அகாடமி பரிசு கொடுக்கப் பெற்றுள்ளது. இது தமிழர்களையும் அவர்தம் ஆற்றல்களையும் இருட்டடிப்புச் செய்கின்ற வஞ்சகமான செயலாகும் என்பதை எல்லாரும் எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதியாரைவிடப் பாரதிதாசன் இலக்கியத் திறனிலும், பா வன்மையிலும் எவ்வளவோ சிறப்புற்று விளங்கியும் அவர் ஒரு தமிழர் என்பதாலும், பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதாலும் காட்டப்பெறும் வேறுபாடுகளும் போற்றப்பெறும் வகையில் உள்ள மாறுபாடுகளுட்ம கொஞ்ச நஞ்சமல்ல.

மேலும், தேசிய விருதுகளாகிய 'பாரத ரத்னா', 'பத்மவிபூசண்' 'பத்மபூசண்' போலும் உயர்ந்த பாராட்டுகளும் பெரும்பாலும் அவர் இனத்தவர்களுக்கும் வடநாட்டவர்களுக்குமே கொடுக்கப் பெறுகின்றன. எங்கேனும் தகுதி வாய்ந்த தமிழர்கள் இருந்தால் அவர்களுக்கு அவ்வரிசையில் கடைநிலையதான 'பத்மஸ்ரீயே' தரப் பெறுகின்றது. இதுவரை மிக உயர்ந்த விருதான 'பாரத ரத்னா'வை பெற்ற பதினைவரில் ஒருவரும் தமிழரல்லர். தமிழ் பேசுபவராகக் கருதிக் கொடுக்கப் பெற்ற திரு. இராசாசியும் பிராமணரே. மற்றுத் தமிழர் தொடர்புள்ள திரு. இராதாகிருட்டிணன் அவர்களும் சி.வி. இராமனும் கூடப் பிராமணர்களே. இந்தியா விடுதலை பெற்ற 25 ஆண்டுகளில் தமிழர்கள் அனைவரிலும் பாரத மணியாகத் திகழத் தக்கவர் ஒருவரும் இலர் என்று அவர்கள் கருதுவார்களானால், இந்தத் தமிழர்களும், தமிழ்நாடும் வடநாட்டுத் தலைமையின்கீழ் இருந்துதான் ஆகவேண்டும் என்பதில் என்ன கட்டாயம் இருக்கின்றது?

இவர்கள் விளக்கணி (தீபாவளி )விழாவைக் கொண்டாடுவது போல் பொங்கலைக் கொண்டாடுவது இல்லை. மேலும் சிலை (மார்கழி) மாதங்களில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை ஒலிபெருக்கிகளைப் போட்டுக்கொண்டு பாவைப் பாடல்களை இப் பார்ப்பனப் பூசாரிகள் முழக்குவதும் கொட்டுமுழக்கோடு கூடிப் பாடிக்கொண்டு தெருவலம் வருவதும் ஊரை இவர்களுக்காகவே ஆக்கிக் கொள்வதும் போல இல்லையா? அக்கால் தேர்வுக்காக மாணவர்கள் படிக்கவும் இடையூறு நேர்வதை அரசும் கவனிப்பதில்லை. இந்தப் பாவைப் பாடல் வழக்கம் தேவைதானா? இந்தப் பாடலைப் பாடாத நாட்களில் விடிவதே இல்லையா? இவர்களின் இதழ்களும் விளக்கணி  (தீபாவளி )விழாவுக்காக மலர்கள் வெளியிடுகின்றனவே தவிர, பொங்கலுக்கு வெளியிடுவதில்லை .

தனிப்பட்ட ஒருவர் செய்யுந் தீங்கைவிடக் கொடியது. குறிப்பிட்ட ஓரினம், பொதுவான ஒருவகை மொழி, இன வெறுப்புடன், பல நூற்றாண்டுகள் இத் தமிழகத்தில் இயங்கி வருவது பார்ப்பனப் பதடிகள் தமிழையும் தமிழகத்தையும் பாழ் செய்வதை மனமார உணர்ந்த ஒருவன் அவர்களைத் தமிழர்கள் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளவே மாட்டான். பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராக வேண்டும். அப்படி அவர்களைத் திராவிடர்கள்தாம் என்றால் ஆரியர் என்பவர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர் திறத்தாலும், மொழியாலும், பழக்கவழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும்! இவை யெல்லாவற்றையும் விடுத்து, மாந்தர் குலம் எல்லாமும் ஒன்றுதான் என்றால் மத, இன, குல வேறுபாடுகளும் மாந்தரின் உயர்வு தாழ்வு முறைகளும் அடியோடு தொலைக்கப்பட வேண்டும். பார்ப்பனர் தமிழர் என்பதால் பார்ப்பனர்க்கு ஊதியமென்றால், தமிழர்களுக்கு இழப்பன்றோ ஏற்படுகின்றது. மொழியாலும், இனத்தாலும், நாட்டாலும் ஏற்படும் அவ்விழப்பை எப்படித் தாங்கிக் கொள்வது? மேலும் பார்ப்பான் தமிழனென்றால் அவன் வீட்டுப் பெண்ணையும் நம் வீட்டுப் பையன் கட்ட அவனிசைய வேண்டும்; நம் வீட்டுப் பெண்ணை அவன் வீட்டுப் பையன் கட்டிக்கொள்ள மறுப்புச் சொல்லுதல் கூடாது. அவன் தன்னை உயர்வு என்பதையும், தன் தாய்மொழி சமசுக்கிருதம் என்பதையும் அவற்றிலுள்ள ஈடுபாட்டையும் அறவே விட்டுவிடுதல் வேண்டும். வாழ்க்கைப் பொதுநிலையில் அவன் எல்லாரையும் போலவே வாழ்தல் வேண்டும். இப்படி ஒரு நிலை ஏற்படும்வரை அவனுந் தமிழன்தான் என்னும் பேச்சை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.
-  மஞ்சை வசந்தன் முகநூல் பக்கம், !8.4.20

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

எது தமிழ்த் திருமணம்

புதிய தொடர் :

எது தமிழ்த் திருமணம்

- சு.அறிவுக்கரசு

மாதர்கள் கருப்பந் தரிப்பதற்கும், ஆடவர்கள் கருப்பமுண்டு பண்ணுகிறதற்கும், பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டார்கள் என்கிறது மனுசாஸ்திரம் ஒன்பதாம் அத்தியாயம், 96ஆம் பாடல். இந்த மனு சாத்திரத்தின் அடிப்படையில்தான் இந்து சட்டம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுயராஜ்யம் வந்தால் மனுஸ்மிருதிதான் சட்டமாக இருக்க வேண்டும் என்றார் பாலகங்காதர் திலக். என் வழி திலகர் வழியாக இல்லை என்பதால் என்னைச் சிலர் எதிர்க்கிறார்கள் என்று காந்தியார் மனம் நொந்து கூறினார். திலகர் வன்செயலாளர். காந்தி வன்செயல் தவிர்த்தவர். ஆகவே காந்தியாரை எதிர்த்தவர்கள் பிறகு கொன்றே விட்டார்கள். வன்செயல் விரும்பிகள் தற்போது பதவிக்கு வந்துவிட்டனர். முழு மனுஸ்மிருதியே சட்டமாக வரலாம். பாடமாக வரலாம்.

பிள்ளை பெறுகிற எந்திரமா பெண்கள்? என்று கேட்டார் பெரியார். பிள்ளை தரிக்கிற உறுப்பையே வெட்டி அப்புறப்படுத்திட வேண்டும் என்கிற அளவுக்கே போனார் பெரியார். ஆனால் இந்து சாத்திரம் பெண்கள் பிள்ளை பெற்றுப் போடுவதற்கே படைக்கப்பட்டவர்கள் என்கிறது. இந்தக் காரியத்தைச் செய்வதற்காக ஆடவர், பெண்டிர் இணைவதற்கான சடங்கை விவாகம் என்கிறது சாத்திரம். திருமணம் என்கிறது தமிழ். கல்யாணம் என்றும் சிலர் குறிப்பிடுவர். கலியாணம் என்று குறிப்பிடுகிறது வடமொழி.

நாலடியார் கல்யாணம் (பாடல் 86) என்கிறது. ஆசாரக் கோவை (பாடல் 48) கலியாணம் என்கிறது. குறிஞ்சிப் பாட்டு (232) மணம் என்கிறது. அய்ங்குறுநூறு வதுவை (61) என்கிறது. மன்றல் என்கிறது அகநானூறு (136) தொல்காப்பியம் மன்றல் என்பதோடு கடி என்றும் குறிப்பிடுகிறது. வரைவு என்றும் குறிப்பிடுகிறது தொல்காப்பியம் (383). வதுவை எனும் சொல்லும் தொல்காப்பியத்தில் குறிக்கப் பெறுகிறது.

திருமணம் என்று சொன்னால், ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூடி வாழ்க்கை நடத்துவதுதான். அதற்கு ஒரு குறிப்பு இருக்க வேண்டும் என்பதுதானே தவிர மற்றபடி வேறு ஒன்றும் வேண்டியது இல்லை. விவாகம் அல்லது திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் காரியமே ஆகும் என்றார் தந்தை பெரியார்.

ஆரியத் திருமணம்

இந்தத் திருமண முறைகள் எட்டு வகைப்படும் என்றது மனுஸ்மிருதி. இந்த எட்டு வகைகள்தான் இந்து சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அவை, இவை: பிராமம், தெய்வம், ஆருஷம், பிரஜாபத்யம், ஆசுரம், காந்தருவம், இராட்சசம், தாழ்ந்ததான பைசாசம் என 8. (மனுஸ்மிருதி 2:21) பிராமணனுக்கு பிராமம் முதல் காந்தருவம் வரையில் கிரமமாக ஆறும் சத்திரியனுக்கு ஆசுரம் முதல் பைசாசம் வரையில் நான்கும் வைசிய சூத்திரனுக்கு மேற்சொன்ன நான்கில் ராட்சசம் நீங்கலாக மூன்று தருமத்தைக் கொடுக்கத்தக்க விவாகங்களென்றறிய வேண்டியது என்கிறது மனுஸ்மிருதி (2_23).

வேதம் ஓதுகிறவனை அழைத்து, கன்னிகையைத் தானம் செய்வது பிராம விவாகமாம். யாகம் செய்யும்போது தனக்கு உதவியாளாக இருப்பவனுக்குத் தன் பெண்ணைத் தருவது தெய்வ விவாகமாம். யாகம் செய்யும் செலவுக்காக ஒரு பசு அல்லது இரண்டு பசு வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்து கொடுப்பது ஆருஷ விவாகமாம். ஒரு பையனுக்கு ஒரு பெண்ணைத் தந்து தருமங்களைச் செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுப்பது பிரஜாபத்யமாம். பெண்ணின் தந்தை கேட்கும் தொகைதந்து பெண்ணுக்கு நகைபோட்டு வாங்கிச் செய்து கொள்வது ஆசுர விவாகமாம். ஆணும் பெண்ணும் விரும்பி, உறவு கொண்டு, தாங்களே செய்து கொள்வது காந்தருவ விவாகமாம். உடல் வலுவால் உறவினர்களைத் தாக்கிப் பெண்ணைத் தூக்கிச் சென்று விவாகம் செய்வது ராட்சச விவாகமாம். தூங்குபவளையோ, குடியினால் மயங்கியிருப்பவளையோ, பித்துப் பிடித்தவளையோ வன்கலவி செய்து விவாகம் செய்வது பைசாச விவாகம் என்கிறது மனுஸ்மிருதி.

தொல்காப்பியச் சப்பைக்கட்டு

இதையே தமிழ்த் தொல்காப்பியம், மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் எனக் கூறுகிறது. தமிழ் படித்த பண்டிதர்கள் இந்த எட்டுக்கும் எடுத்துக்காட்டு கூறுகின்றனர். பிராம விவாகத்திற்கு மீனாட்சி_சொக்கநாதன் திருமணம் எடுத்துக்காட்டு. பிரசாபத்ய விவாகத்திற்கு சீதா_ராமன் திருமணம். ஆருஷம் என்பது பழங்கால பண்டமாற்றுமுறை விவாகமாம். தெய்வ விவாகத்திற்கு எடுத்துக்காட்டு ரிஷ்யசிருங்கர்_சாந்தை விவாகமாம். பராசரர்_மச்சகந்தி புணர்ச்சியும், துஷ்யந்தன்_சகுந்தலை உடலுறவும் கந்தருவ விவாகமாம். ஆசுர விவாகத்திற்கு வில் ஒடித்துச் சீதையை ராமன் மணந்ததும், வில் எய்து துரோபதையை அருச்சுனன் மணந்ததும் எடுத்துக்காட்டாம். அம்பை முதலிய பெண்களைத் தன் தம்பியர்க்கு மணமுடித்த வீடுமன் செயல் இராட்சச விவாகத்திற்கு எடுத்துக்காட்டாம். பைசாச விவாகத்திற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் புராணங்களில் உள்ளன.

தொல்காப்பியக் கூற்றுகளின்படி தமிழர் மணம் காதலால் கட்டுண்ட ஆணும் பெண்ணும் தம் களவொழுக்கம் பெற்றோர்க்கும் உற்றார்க்கும் தெரியும் முன் மணம் முடித்தல், களவுக்காதல் தெரிந்தபின் உடன்போக்கு நிகழ்ந்து மணம் முடித்தல் என்ற வகையில் ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை காணக் கிடைக்கிறது. ஆரிய முறைகளில்...?

ஆகா, என்ன பொருத்தம்?

தனிச்சிறப்பு கொண்ட தமிழர், இந்துக்கள் என்ற நாமகரணம் செய்விக்கப்பட்டதன் கெட்ட விளைவாக எட்டுவகைத் திருமணங்கள் அவர்களின் தலையில் கட்டப்பட்டுள்ளன. பத்து வகைப் பொருத்தங்கள் அவர்களின் விவாகங்களுக்குப் பார்க்கப்படுகின்றன. தினம், கணம், மகேந்திரம், ஸ்த்ரீ தீர்க்கம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என்பன தசா பொருத்தங்களாம். இந்தப் பொருத்தங்கள் அமைந்துள்ளனவா என்பதைக் கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் பார்த்தே கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் பேஷாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும், அவன் ஆண்மை அற்றவன் என்பது. அதுபோலவே அவள் வயதுக்கு வரவில்லை என்பது! எத்தனை பார்க்கிறோம், குடும்ப நீதிமன்றத்தில்! மணவிலக்கு வழக்குகளில்?

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த, காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு திருவென
முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே

என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது.

இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் கூறுகிறது.

நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்.

தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்றனர் தமிழர்!

வாழ்வில் இணைந்து தொடக்க நிலையில் இருப்போர்க்கான வாழ்வியல் தேவைகளையும் இருக்கக் கூடாத பண்புகளையும் தெளிவாக்கித் தருகிறது தமிழர் பண்பாடு!

(தொடரும்)

-  உண்மை இதழ், 1-15.8.14

எது தமிழ்த் திருமணம் - 10

பொருளற்ற சடங்குகள் :

இதைப்போலவே இன்னுமொரு அர்த்தம் அற்ற சடங்கை பொரியிடுதல் என்கிறார்கள். நெருப்பில் பொரியைப் போடுகிறார்கள். மணமகளின் கைகளை ஒன்றாக வைத்து அவளின் சகோதரன் பொரியைப் போடுவான். பொரியுடன் நெய் சேர்த்து மணமகள் கையைப் பிடித்துப் பொரியை நெருப்பில் போடுவான். கணவன் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் எனப் பொருள்படும் மந்த்ரம் கூறுவார் புரோகிதர். இதனால் ஆயுள் நீளுமா?

 

பொரி மங்களகரமான பொருளாம். மன்னர்கள் தெருவலம் வரும்போது பொரியைத் தெருக்களில் இறைப்பார்களாம் அக்காலத்தில்! கொங்குவேளிர் எழுதிய பெருங்கதையில் வரும் நன்னெய் தீட்டிய செம்மலர் அங்கைப் பொம்மல் வெண்பொரி பொலியப் பெய்தபின் என்ற வரிகளால் அறியலாம்.

பிணத்தைச் சுடுகாட்டுக்கோ/இடுகாட்டுக்கோ எடுத்துச் செல்லும்போது சிலர் பொரியை ஒரு முறத்தில் வைத்துத் தெருவில் இறைத்துக் கொண்டு போகிறார்கள்! பொரியை மங்களம் என்கிறார்கள். சாவுப் பயணத்தில் மங்களப் பொருள் எப்படி இடம் பிடித்தது?

ஆண்டாள் திருமணத்திலும் அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து/பொரிமுகத் தட்டக் கனாக்கண்டேன் எனப் பாடப்படுகிறது.

ஒருவர்க்கு அணிவித்த மாலையை மற்றவர்க்கு அணிவிப்பதோ, அணிவதோ கூடாது என்கிறார்கள். ஆனால், மணமக்கள் தத்தம் மாலையை மாற்றிக்கொள்ளும் சடங்கும் நடக்கிறது. அதுவும் மூன்று முறை கழற்றிக் கழற்றிப் போட்டுக் கொள்கிறார்கள். கணவனும் மனைவியுமாக ஆகிவிட்ட இவர்களது பந்தம் இதனால் உறுதியாகிறதாம். இருவரும் ஒன்றாகி விடுகின்றனராம். மனதளவில்கூட வேறுபாடு வராமல் வாழ வேண்டும் என்பதற்காக இந்தச் சடங்காம்.

ஏன் மணவிலக்கு?

பின் ஏன் விவாகரத்து வழக்குகள்? பின் ஏன் ஜீவனாம்சம் கோரும் வழக்குகள்? சடங்குகளுக்குப் பொருள் இல்லாமல் போய் விட்டதால்தானே! அப்புறமும் ஏன் இந்தச் சடங்குகள்? சிந்திக்க வேண்டாமா?

வைணவப் பார்ப்பனர்கள் கூடுதல் கோமாளிகள். சிலர் ஊஞ்சலில் நின்று மாலை மாற்றிக் கொள்கின்றனர். சிலர் அவர்களின் தாய்மாமன்களின் தோளில் ஏறிக்கொண்டு மாலை மாற்றிக் கொள்கின்றனர். குதிர்போல வளர்ந்த ஆணும் பெண்ணும் இப்படி ஆட்டம் போடும் காட்சியினை சாவி எனும் பார்ப்பனர் எழுதிய வாஷிங்டனில் திருமணம் எனும் கதையில் படிக்கலாம். மாமன் அல்லாத வேறு நபர்களும் தூக்கிக் கொண்டு ஆடும் நிகழ்ச்சியும் இக்குடும்பங்களில் இன்றும்கூட நடக்கின்றது. வைணவர்கள் நிறைந்த காஞ்சிபுரத்தில் இப்படித் தோள் கொடுப்பதற்காகவே நன்றாகத் தின்று கொழுத்த அய்யங்கார்கள் நிறையப் பேர் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். (படிக்க: உ.வே.சா. நினைவு மஞ்சரி) இந்தச் சடங்குகளுக்கெல்லாம் என்ன நோக்கம்? பழங்காலப் பழக்கம், கம்ப்யூட்டர் காலத்திலும் கடைப்பிடித்துவரும் காட்டு விலங்காண்டிகள் என்பதைத் தவிர வேறு என்ன?

மணமக்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது ஒரு சடங்கு. ஊஞ்சலின் தொங்கு சங்கிலி மேலிருந்து தொங்குவதால், மானுடப் பிறவியை மேலே இருக்கும் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறதாம். ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆட்டுவது, வாழ்க்கை சலனமுள்ளது என்பதைக் காட்டுகிறதாம். வாழ்க்கை ஆடினாலும் மனம் சஞ்சலம் அடையாமல் இருக்க வேண்டும் எனும் உயரிய தத்துவத்தை ஊஞ்சல் ஆடி உணர்த்துகிறார்களாம். இந்த அரிய தத்துவத்தை(?) இக்காலத்தில் தொட்டில் ராட்டினம், ஜயன்ட் வீல், ரோலர் கோஸ்டர் போன்றவை இன்னும் சிறப்பாக உணர்த்துமே! சடங்கைச் செய்பவர்கள் இதைப் பரிசீலிக்கலாம்.

அட்சதை யோக்கியதை

மணமக்கள் தாலிகட்டும்போது அட்சதை போட்டு ஆசி கூறுகிறார்களாம். மணச் சடங்குகள் முடிந்த பிறகு அவர்கள் தரையில் விழுந்து வணங்கும்போதும் அட்சதைபோட்டு ஆசி கூறுகிறார்களாம். இந்த அட்சதையில் மஞ்சள் தடவிய அரிசியும் மலர்ந்த பூக்களும் இருக்கும். எதற்கு இந்த அட்சதை? தரையில் விழும் தானியம் முளைத்துச் செழுமை தருவது போலவும் மலர் மணம் வீசுவதுபோலவும் மணமக்களின் வாழ்வு இருக்க வேண்டும் என வாழ்த்துகிறார்களாம், இந்த அட்சதை போட்டு! யோசித்துப் பாருங்கள்! அரிசி முளைக்குமா? முன்னமேயே மலர்ந்துவிட்ட மலரின் மணம் நிறைவாக இருக்குமா? பழந்தமிழர் திருமணத்தில் கூறப்பட்ட நீர் தெளித்த நெல் முளைத்துச் செழுமை தரும். அரும்பு மலராகி மணம் பரப்பும். அதை விடுத்து, பார்ப்பனப் பழக்கமான அட்சதை எவ்வளவுக்கு அர்த்தம் கெட்டுப் போய்விட்டது என்பதை உணர வேண்டாவா? திருந்த வேண்டாவா? இது எப்படித் தமிழ்த் திருமணமாகும்?

எல்லாம் முடிந்தபிறகும் கொசுறுச் சடங்காக நாகவல்லி முகூர்த்தம் என்று செய்கிறார்கள். நாகவல்லி என்றால் வெற்றிலை எனும் பொருளும் உண்டு. வெற்றியைத் தருவதற்காக வெற்றிலையின் முக்கியத்துவத்தைக் கொண்டாடித் தாம்பூலம்  கொடுக்கிறார்களாம். வெற்றிலை எப்படி வெற்றி தரும்? அது வெற்றி இலை என்கிறார்கள். ஆனால் வெற்று இலை என்பதுதான் சரி! ஏன் வெற்று இலை தெரியுமா? வெற்றிலைக் கொடியில் பூ பூக்காது, காய் காய்க்காது, எனவே பழமும் கிடையாது. வெறும் இலை மட்டுமே வளரும் கொடியானதால் பூவாத, காய்க்காத தன்மையைக் குறிக்க வெற்று இலை, வெற்றிலை என்கிறார்கள். வெற்றியைத் தரும் இலை என்றாக்கி ஒரு சடங்கைச் செய்கிறார்கள்! மருமகன் கையில் மாமனார் குங்குமப் பூவை இழைத்துப் பூச வேண்டுமாம்.

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மங்கல வீதிவலம் செய்து மணநீர் அங்கு அவனோடும் உடன் சென்றங்கானை மேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் என்று ஆண்டாள் பாடுகிறாள். ரங்கமன்னார் எனும் திருமாலைத் திருவில்லிபுத்தூரில் திருமணம் செய்துகொண்ட விதங்களைப் பாடி வைத்திருக்கிறாள். இந்தச் சடங்குகள் எல்லாமே விடாமல் செய்பவர்களாக வைதீக வைணவர்கள் இருக்கிறார்கள். இதுவும் தமிழ்த் திருமணமாம்!

பின்னர் மணமக்கள் எதிர் எதிரே உட்கார வைக்கப்பட்டுத் தேங்காயை உருட்டி விளையாடுகிறார்கள். பூவைப் பந்துபோல் சுருட்டி ஒருவர் மீது மற்றவர் எறிந்து விளையாடுகிறார்கள். பல்லாங்குழி ஆட்டம் ஆடுகிறார்கள். வெற்றிலை பாக்குப் போட்டு மடித்துக் கொடுத்தும் விளையாடுகிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கணவனும் மனைவியும் போட்டி போட்டுக் கொண்டு தேட வேண்டும் எனும் தத்துவார்த்தம் கூறுகிறார்கள். இருவரும் சம்பாதிக்க வேண்டும் என்ற செய்தியை மறைவாக உணர்த்தும் சடங்குகளோ?

தமிழ்க் களஞ்சியக் களங்கம்

அறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னார்: நம்முடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் பலன் என்னவென்றால், மூடத்தனமான பழக்கவழக்கங்களுக்கு விஞ்ஞான ரீதியான காரணங்களைக் கற்பித்துக் கூறுகிறார்கள் என்றார். அதைப்போலவே மேற்கண்ட மூடச்சடங்குகளுக்கு என்ன பொருள் என்று கலைக் களஞ்சியம் கூறுகிறது தெரியுமா? 1961இல் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தின் பக்கம் 66இல் எழுதப்பட்டுள்ளது கீழே:

மணச் சடங்குகளில் தம்பதிகளுக்கு உண்டாகும் புதிய நிலையையும், மாறுதல்களையும், பந்தல் அமைத்தல், ஊர்வலம் வருதல், மத்தளம் கொட்டல், சங்கம் ஊதல் போன்றவைகள் விளம்பரப்படுத்துகின்றன. பரிசமிடுதல், நிச்சயம் செய்தல், கோத்திரம் கூறல் போன்ற சடங்குகள் மண ஒப்பந்தத்தையும் அதற்கு வேண்டிய சான்றுகளையும் அளிக்கும். தீபம் ஏந்தல், ஆரத்தி, நலங்கு முதலிய சடங்குகள் கண்ணேறு படாமல் காப்பதற்காகச் செய்யப்படுபவை. விரதம், உபநயனம், காப்பு போன்ற சடங்குகள் தம்பதிகள் இதுவரையிலிருந்த நிலையில் இருந்து விலகி இருத்தலைக் குறிக்கும். புத்தாடை அணிதல், தாலி, மெட்டி போன்ற நகைகளை அணிதல், மாலை, மோதிரம் மாற்றல் தம்பதிகள் புதிய நிலைக்கு மாறுதலை அறிவிக்கும். தீவலம் செய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், குங்குமம் அப்பல், பட்டம் கட்டுதல், மஞ்சனமாடல், தாரை வார்த்துத் தருதல், கைத்தலம் பற்றல் போன்ற சடங்குகள் தம்பதிகளுடைய புதிய கடமைகள், உரிமைகள், நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும். ஆசிர்வாதம், விருந்தளித்தல் போன்ற சடங்குகள் தம்பதிகளுடைய புதிய வாழ்க்கைக்கு வேண்டிய ஆதரவு அளிப்பனவாகும்.

இந்த வியாக்கியானங்களினால் தமிழர் வாழ முடியுமா? தமிழ் வளருமா? முழுக்க முழுக்கப் பார்ப்பனர்களின் சடங்குகள்! தமிழர்க்கும் ஆனவை எனப் புகுத்தப்பட்டுவிட்டன. இந்த நிலையில் இதனைத் தமிழர் திருமணம் என்றோ, தமிழ்த் திருமணம் என்றோ கூறமுடியுமோ? கூறுகிறார்கள். அதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தமிழ்முறைத் திருமணம் என்கிறார்கள். வகுப்பு உணர்ச்சியின் அடிப்படையில் நடத்தப்படுவது தமிழ்த் திருமணம். அறிவு உணர்ச்சியின் அடிப்படையில் நடத்தப்-படுவது சுயமரியாதைத் திருமணம் ஆகும் என்று தந்தை பெரியார் 1940ஆம் ஆண்டே கூறியுள்ளார். எதனால் கூறினார்? பார்ப்பனப் புரோகிதர் கூடாது என்கிற வகுப்பு (ஜாதி) உணர்ச்சியினால் அவரை நீக்கித் தமிழ்த் திருமணம் என்ற பெயரில் நடத்துகிறார்கள். ஆனால் அர்த்தம் அற்ற சடங்குகளையெல்லாம் செய்கிறார்கள். கடைப்பிடிக்கிறார்கள். எந்த வகையில் இது தமிழ்த் திருமணம்?

தேங்காய் உருட்டுவது ஏன் என்றால், வாழ்க்கைக்குத் தேவையானவற்றை இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தேட வேண்டும் என்கிறார்கள். இது தமிழ்த் திருமணச் சடங்குக்குப் பொருள் என்கிறார்கள்.

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றுஎனக்
கொடுத்த தந்தை கொழும்சோறு உள்ளான்
ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்
பொழுதுமறுத்து உண்ணும் சிறுமதுகையளே

என்று திருமணமான மகளிர் வாழ்ந்ததாக நற்றிணைப் பாடல் கூறுகிறது. கணவனின் குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்த அவளின் தந்தை தந்த உணவுப் பண்டங்களை மறுதலித்துவிட்டாள். கணவனைப் போலவே அவளும் நடக்கிறாள். வேளை தவறி உணவு உட்கொள்கிறாள். இத்தகைய உறுதியை உடையவளாக இருக்கும் அவள் விளையாட்டுப் பெண்ணாக இருந்தவள். திருமணத்திற்குப் பின்பு மனைவிக்குரிய ஒழுக்கம் கற்றுக்கொண்டு கணவன் தேடித் தரும் வருவாயைக் கொண்டு வாழக் கற்றுக் கொண்டாள் எனப் பாடுகிறது.

இன்றைய நிலை என்ன? மணம் செய்து கொள்ளும் முன்பே மணமகளின் தந்தையிடம் வரதட்சணை பெறுகிறதும், மணம் செய்தபின் மேலும் கேட்பதும் பழக்கமாக உள்ளது.

தமிழ்த் திருமண கர்த்தாக்கள்

19ஆம் நூற்றாண்டில் இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்கசகாயன் என்பவர் முதலில் பார்ப்பனப் புரோகிதரை விலக்கிய திருமணம் செய்வித்தவர் எனும் குறிப்பு உண்டு. அதன் பின்னர் தமிழ்முறைத் திருமணம் எனும் வகையில் சுவாமி வேதாசலம் என்று அழைக்கப்பட்டு மறைமலை அடிகள் என்று பெயர் மாற்றம் செய்துகொண்ட தனித்தமிழ்த் தந்தையால் திருமணங்கள் நடத்துவிக்கப்-பட்டன. பார்ப்பனப் புரோகிதர் மட்டுமே விலக்கப்பட்டார். பார்ப்பன மந்திரங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஓதப்பட்டன. பார்ப்பனரின் திருமணச் சடங்குகள் எவையும் விலக்கப்படவில்லை. நெருப்பு மூட்டுதல், நெருப்பைச் சுற்றி வருதல், மணவறை அமைத்தல், மங்கலப் பொருள்கள் வைத்தல் போன்ற எல்லாமும் கடைப்-பிடிக்கப்பட்டன. வடமொழிக்குப் பதிலாக தமிழ்மொழி என்பதைத் தவிர வேறு எவ்வித அறிவு வயப்பட்ட மாற்றமும் இவரால் செய்யப்படவில்லை. மொழி மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டது. புரோகிதர் பார்ப்பனராக இல்லாமல் தமிழராக இருந்தார். அவ்வளவே! வகுப்பு (ஜாதி) உணர்ச்சி அடிப்படையில் இந்த மாற்றமும்கூடச் செய்யப்பட்டது. அறிவு உணர்ச்சியின் அடிப்படையில் எந்த மாற்றமும் இவரால் கைக்கொள்ளப்படவில்லை. இவர் சிவனியக் கருத்துகள் கொண்டவராக இருந்தது காரணி!

மறைமலை அடிகளாரைப் போலவே தமிழ்த் திருமண முறையைப் போற்றியவர் மற்றொரு தமிழறிஞரான திருவாரூர் வி.கலியாணசுந்தரம் எனும் திரு.வி.க. அவர்கள். அடிகளாரின் முறைக்கும் இவரது முறைக்கும் வேறுபாடே கிடையாது. செந்தமிழ் மாமறை மந்திரப் பாடல்கள் கொண்டு இறைவழிபாடு செய்து திருமணம் செய்தல் தமிழ்த் திருமணம் என்கிறார்கள்.

திருமணம் நிகழிடம் அலங்காரம் செய்தல், மணமுரசு முழங்குதல், விளக்குகள் ஏற்றல் (பகலில்கூட) முதலியன உண்டு. திருமணம் நடத்தி வைக்கும் (தமிழ்ப் புரோகிதர்) நபர் வடக்கு நோக்கியே அமர வேண்டும். மலர், மஞ்சள், குங்குமம், அரிசி, தேங்காய், பழம், வெற்றிலை முதலிய பொருட்கள் எல்லாம் அவரது வலப்பக்கத்தில் ஓர் இலை அல்லது தட்டில் இருக்கும். முப்புரி நூலில் ஓர் அடி அளவில் இரண்டு துண்டுகள், மஞ்சள் பூசி நடுவில் மஞ்சள் துண்டு ஒன்றினை வைத்துக் கட்டி முடித்துத் தேங்காய் மீது சுற்றி, ஒரு தட்டில் அரிசிபோட்டு அதன் நடுவில் இந்தத் தேங்காய் வைக்கப்படும். மேலே மலர் தூவப்பட வேண்டும். தாலிக்கு உள்ள நூலும் மஞ்சள் பூசப்பட்டு அதில் தாலி கோக்கப்பட்டு இரு பக்கங்களிலும் மூடிபோட்டு மஞ்சள் பூசி, குங்குமம் இட்ட தேங்காயின் மீது சுற்றி ஒரு தட்டில் வைக்கப்பட வேண்டும். இந்தத் தட்டிலும் அரிசி வைக்கப்பட வேண்டும். மணமக்களுக்குத் தரப்பட வேண்டிய புத்தாடைகள் தனித்தனியாக இரு தட்டுகளில் வைக்கப்பட வேண்டும்.

இவை பார்ப்பனப் புரோகிதர் நடத்தி வைக்கும் வைதீக அல்லது புரோகித முறைத் திருமணங்களிலும் செய்யப்படுகின்றன. தனியாகத் தமிழ்முறை எங்கே வாழ்கிறது?

மணமக்கள் கிழக்கு நோக்கி அமர வைக்கப்படுவர். தமிழ்ப் புரோகிதர் ஓர் இலையில் அரைத்த மஞ்சளால் பிள்ளையார் போல் பிடித்து வைப்பார். (பிள்ளையார் பிடிக்கக் குரங்காக அமைந்துவிடாமல் கவனம் தேவை!) அதில் குங்குமம் பூசுவார். ஈண்டு எழுந்தருளுக எந்தாய் போற்றி என்றும், இவ்வடிவம் அமர்க ஈச போற்றி என்றும் அருளது புரிக அண்ணால் போற்றி என்றும் கூறிக் கடவுளை வணங்கி தூப தீபங்காட்டுவார் தமிழ்ப் புரோகிதர். நமஹ என்பதற்குப் பதில் போற்றி! அவ்வளவே!

- சு.அறிவுக்கரசு