பக்கங்கள்

செவ்வாய், 30 ஜூன், 2020

இரு செய்திகள்! பார்ப்பனர் தன்மை


அண்ணாமலைப் பல்கலைக் கழக வெள்ளி விழாவில் கலந்துகொண்ட திருவாங்கூர் மகாராஜா ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். அத்தொகை யினை வடமொழிப் பயிற்சிக் கும், வடமொழி சாஸ்திர ஆராய்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்பது கருத் தாகக் கொண்ட திட்டம் ஒன் றைக் குறிப்பு அனுப்பினார். அந்தக் காரியத்திற்காக நன்கொடையின் வரும்படி செலவழிக்கப்படுவதாய் இருந்தால், அந்த நன்கொடை யைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்றும், வட மொழி பரப்பப்பட வேண்டும் என்கின்ற கருத்துடையவர் களுக்கு ஆயுதமாக அண்ணாமலை யுனிவர்சிட்டி இருக்கக் கூடாது என்றும் பெரியார் வலியுறுத்தினார். திருவாங்கூர் மகாராஜா அவர்களுக்கும், வள்ளல் அண்ணாமலையார் அவர் களுக்கும், அறிஞர் இரத்தி னசாமி அவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த் தையின் பலனாய், மகாராஜா தான் அளித்த நன்கொடை யைப் பல்கலைக் கழகத்தார் இஷ்டப்படி செலவழித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தார். மாணவர் விடுதி யினை விரிவுபடுத்த அத் தொகையினைப் பயன்படுத் துவது என்று நிர்வாகம் முடிவெடுத்ததைப் பெரியார் பாராட்டினார். ‘‘போற்றுங்கள்'' என்று தலைப்பிட்டு 12.7.1943 ‘விடுதலை'யில் தலையங் கமே எழுதினார்.
வடமொழிக்கு செலவிடக் கூடாது என்பது அதன்மீது இனம் தெரியாத வெறுப்பால் அல்ல - விவேகானந்தர்  கூறி னாரே நினைவிருக்கிறதா?
‘‘மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமைக் கலகங் களும் பல்குவதற்கு ஒரு பெருங்கருவியாய் இருந்த தும் - இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப்போராட் டங்களும் தொலைந்து போகும்'' (‘‘தமிழர் மதம்'', மறைமலையடிகள், நூல் பக்கம் 24) என்று விவேகா னந்தரே கூறியதை நினை வூட்டிக் கொண்டால், தந்தை பெரியாரின் கணிப்பு எத்தகை யது என்பது விளங்காமற் போகாது.
இன்னொரு தகவல்:
கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி 1953 இல் மலேசியா சென்றி ருந்தபோது, அந்த நாட்டு அரசு, இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை மலேயா பல்கலைக் கழகத்தில் பாட மாக வைக்க இவரிடம் கருத் துக் கேட்டனர். அவர் சமஸ் கிருத மொழியைப் பாடமாக வைக்கலாம்; தமிழைத் துணைப் பாடமாக வைக்க லாம் என்று பரிந்துரை செய்தார். மலேயா பல்கலைக் கழகமும், அந்நாட்டு அரசும் அவர் கருத்தை ஏற்க மறுத்துவிட்டு, தமிழைப் பாட மொழியாகச் செய்தனர். நீல கண்ட சாஸ்திரியின் சமஸ் கிருத வெறி மலாயாவில் மூக் கறுபட்டது. (‘நம்நாடு', 4.5.1953).
இரு தகவல்கள் - இதற் குள்ளிருக்கும் இனவுணர்வை யும், மொழி உணர்வையும் புரிந்துகொள்வீர்!
- மயிலாடன்

'தினமலருக்குப் பதிலடி!' எது 'பிராமண' துவேஷம்!

லாலா லஜபதி ஒரு முறை சொன்னார் தென்னாட்டுப் பிராமணர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து ‘துவேஷிகள், துவேஷிகள்!’ என்று சொல்லுவார்கள் என்ற கருத்துதான் ‘தினமலரில்’ (28.6.2020 பக்கம் 7) வெளிவந்த ஒரு கட்டுரையைப் பார்த்தவுடன் பளிச் சென்று நினைவிற்கு வருகிறது Òஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்?Ó என்பது அக்கட்டுரையின் தலைப்பு. எழுதுகோல் பிடித்தவர் எஸ். கார்த்திகேயன் - சமூக ஆர்வலராம்.
சமூக ஆர்வலர் என்ற போர்வையில் தொலைக்காட்சி களில்கூட அவ்வப்போது வந்துவந்து போவார்கள் பெரும்பாலும் பூணூல்காரர்கள்.
கட்டுரை முழுவதும் இவர் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ளார். ‘நான் ஜாதி பார்ப்பதில்லை. நான் ஜாதி பார்ப்பதில்லை -  நான் பரிசுத்தம்!’ என்பதுபோல அடிக்கடி ஒரு தடவை தன்னைப் பற்றி தன் முதுகைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்.
அவரிடம் ஒரே ஒரு கேள்வி உங்கள் முதுகில் பூணூல் தொங்குகிறதா? என்பதுதான்.
பூணூல் எல்லோரும் தான் போடுகிறார்கள் என்றெல் லாம் சொல்லித் தப்பிக்க வேண்டாம் - ஒரு முறை ‘சோ’ இராமசாமி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் ஒரு பே¢ட்டியில் சரியாக சிக்கி மூச்சுத் திணறினார். ‘வீட்டாரைத் திருப்திபடுத்தத்தான் சங்கடப்படுத்தாமல் இருக்கத்தான்! என்றார்.
பூணூல் கல்யாணம் நடத்தி முதுகில் அதைத் தொங்க விட்ட பிறகுதான் பிராமணன் -அதாவது துவிஜாதி - இருபிறப்பாளன் ஆகிறான்.
இது சரியா, தவறா என்பதை சங்கர மடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்!
பிராமணர்கள் மட்டுமா போடுகிறார்கள்? ஆசாரி, பத்தர் செட்டியார் கூடத்தான் போடுகிறார்கள் என்று தப்பித்து ஓட வேண்டாம். அதற்கு இந்து மத சாத்திரத்தில் இடம் உண்டா என்பதற்குப் பதில் சொல்லட்டும்.
பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும், வைசிய னுக்கு க்ஷணப்பநாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல் லியதாகப் பின்னி மூன்று வடமா மேலரைஞாண் கட்ட வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் 42).
இதில் எங்காவது சூத்திரர் பூணூல் அணியலாம் என்று கூறப்பட்டுள்ளதா?
சந்தேகமில்லாமல் இன்னொரு இடத்தில் மிகவும் வெளிப்படையாகவே மனுதர்மம் அறைந்து கூறுகிறது.
சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலி யதைத் தரித்தால் அரசர் சூத்திரனின் அங்கங்களை வெட்டி விட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் - 224).
இதை எடுத்துச் சொன்னால், இப்போதெல்லாம் மனுவை யாருங்க கடைப்பிடிக்கிறாங்க - நீங்கதான்  ஞாபகப்படுத்துறீங்க என்று நழுவும் Ôமீன்களைÕப் பார்க்க முடிகிறது.
‘துக்ளக்‘ இதழில் வரிந்து வரிந்து மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கி ‘சோ’ இராமசாமி எழுதியதுண்டே!
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ‘'திருக்குறளும் மனுதர்மமும் ஒன்றுதான்” என்று காஞ்சிபுரம் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் பேசினாரே (12.8.1976).
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் திருக்குறளும், பிறவியின் அடிப்படையிலேயே வருணபேதம் கற்பிக்கும் மனுதர்மமும் ஒன்று என்று சொல்லுகிறார் இவர்களின் ஜெகத்குரு என்றால், மனுதர்மத்தை எந்த அளவுக்கு  அவர்கள் இன்றளவும் போற்றுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாமே!
📷📷
ஏதோ அதே நேரத்தில் தப்பிப்பதற்காக தப்பிலித் தனமாகப் பேசலாமா? பதினெட்டு ஸ்மிருதிகளில் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதி களும் ஒரே வாக்காய்ச் சொல்லியிருந்தாலும், அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று என்று மனுதர்ம சாஸ்திரத்தின்  பீடிகையில் கூறப்பட்டுள்ளதே!
இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்த முடியாத நிலையில், இப்போதெல்லாம் யார் பார்க்கிறார்கள் - கடைப்பிடிக்கிறார்கள் என்று கூறுவது அசல் ஏமாற்று வேலையே!
வேண்டுமானால் ஒன்று செய்யட்டுமே! சங்கராச் சாரியார் தலைமையில் ஒரு நாளைக் குறிப்பிட்டு, மனுதர்மத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியை நடத்த முன் வரட்டுமே - வருவார்களா என்று சவால் விட்டே கேட்கின்றோம்.
மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஏன் கொளுத்தினார்கள் என்பதை உணரட்டும்.
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளுக்கே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தங்கத்தினால் செய்த பூணூலைப் போட்டதுதான். திருப்பதி ஏழுமலையானுக்கே மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் (5.4.2002) திருப்பரங்குன்றம் முருகனுக்கு ரூ.15 லட்சம் செலவில் பூணூல் (தினமணி 27.2.2014 படத்துடன் வெளியிட்டு இருந்தது) சீரங்க ரங்கநாதனுக்கோ ரூ.50 லட்சம் மதிப்பில் வைரப் பூணூல் போட்டவர்தானே ஜீயர்.
சங்கராச்சாரியார் ஒருவர் பிரதிஷ்டை செய்யப் படும் போது - அவர் அதுவரை அணிந்திருந்த பூணூலை அகற்றி விடுவார்கள் எந்தவித ஆசாபாசங்களுக்கும் ஆளாகக் கூடாது என்று; ஆனால், அதே சங்கராச்சாரியார் அவர்கள் நம்பும் கடவுள்களுக்கே பூணூல் அணிவித்து, ‘கடவுள்களும், நாங்களும் ஒரே ஜாதி!’ என்று காட்டுவதுதானே இதன் நோக்கம்? என்று தணியும் இந்த பிராமண துவேஷம்!” என்று தினமலரில் கட்டுரை எழுதும் திருவாளர் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.
பிராமணர்கள் எல்லாம் சாதுவானவர்களாம் - எந்த அடிதடிக்கும், சச்சரவுக்கும் போகாதவர்களாம். அத்தகைய பிராமணர்களைத் துவேஷிக்கிறார்கள் என்று துக்கம் தொண்டையை அடைக்க தூரிகை பிடிக்கும் இவர் என்ன எழுதுகிறார்? எந்த சொல்லைக் கையாளுகிறார்?
“ஒன்று பட்டிருந்த சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்த சில சண்டாளர்கள்தான் பிராமண துவேஷம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து, பிராமணர்களுக்கு எதிராக, பிற ஜாதியினரை தூண்டிவிட முயன்றனர்” என்று எழுதுகிறார்.
சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்தவர்கள் யார்? பிறப்பிலேயே பேதம் கற்பிக்கும் வருணாசிரமத்தை உருவாக்கியவர்கள் யார்? இன்றுவரை ஆவணி அவிட் டம் என்ற பெயராலே நாங்கள் பிர்மாவின் முகத்திலே பிறந்த துவிஜாதி என்பதற்கான பூணூலை புதுப்பித்துக் கொள்பவர்கள் யார்?
சண்டாளர்கள் என்கிற தடித்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதிலிருந்தே இவர் போடும் நரி வேஷம் என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!
சண்டாளர் என்றால் என்ன பொருள் இந்து மதத்திலே தெரியுமா? சூத்திரன் மூலம் பிராமணன் மற்றும் இதர வருணத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பிறந்தவன் என்று பொருள்.
‘இழிந்த சூத்திரன் - உயர் வருணத்துப் பெண்ணைக் கூடிப் பிள்ளை பெற்றதை ஆத்திரத்தோடு கண்டிக்கும் அந்த சொல்லை - இந்த ஜாதி ஒழிப்பு(?) வீரர் பயன்படுத்துகிறார் என்றால் என்ன பொருள்? இவர் வேடத்தை இவரே கலைத்துக்கொண்டு விட்டாரே!
“எத்தனையோ காலத்திற்கு முன், யாராலோ நடத்தப் பட்டதாகக் கூறி, அதற்கு இப்போதைய பிராமணர்களான என்னைப் போன்றவர்களை துவேஷத்துடன் பார்க்கின்றன'' என்று எழுதுகிறார்.
📷📷
9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற Ôஅருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ நூல் வெளியிட்டு விழாவிலே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்?
“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போதும், அந்தணர்கள்தான் குருவாக இருந்தார்கள். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் காஞ்சி பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணன்தான் முதலில் என்று பேச வில்லையா? அனைத்தையும் கட்டறுத்தவர் என்பதற் காகப் பூணூலை அறுத்துக் கொண்ட சங்கராச்சாரியார் தான் ஒரு பிராமணர் என்ற அகந்தையிலிருந்து விலகவில்லையே!
கடவுளுக்கு மேலே பிராமணன் எனும் ஆரிய ஆணவம் தலைக்கேறி பேசிய காலம் - தினமலர் எழுத்தாளர் கூறும் எத்தனையோ காலத்திற்கு முன்பு தானா? நாம் வாழும் காலத்தில்தானே!
இந்து மதத்தில்கூட அனைவருக்கும் ஒரு சுடுகாடு கூடாது என்று சொன்னவரும் அதே காஞ்சி பெரியவாள்தானே (8.3.1962).
தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர் மகா பெரியவாள் என்று மகத்தான குரலில்-போக்கில் பேசப்படும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி தானே! (நூல் - ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள்)
தீண்டாமையை வலியுறுத்திய இவரை பிணையில் வெளிவர முடியாத சட்டத்தின் கீழ் நியாயமாக (PCR act) சிறையில் தள்ளியிருக்க வேண்டாமா?
வெகு நாட்களுக்கு முன் போக வேண்டாம் - இந்தியாவின் முதல் குடிமகனான முப்படையின் தலைவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் காப்பாளரான இந்தியக் குடியரசு தலைவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்தால், வடநாட்டில் இரண்டுகோயில்களில் உள்ளே செல்ல விடாமல் தடுக்கப்பட்டது மனுமந்தாதா காலத்திலா? நம் கண் முன்னாலா?
அஜ்மீர் பிர்மா கோயிலிலும் ('டைம்ஸ் ஆப் இந்தியா' 15.5.2018), பூரி ஜெகநாதர் கோயிலிலும் ('டைம்ஸ் ஆப் இந்தியா' 27.6.2018) ஒரு குடியரசுத் தலைவருக்கே இந்த அவமானம் நடந்ததே!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள்தானே மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் சிறீபெரும்புதூர் ஜீயர் பின்னணியில் அது நடக்கவில்லையா?
ராஜாஜியின் சிபாரிசின் பெயரில்  ஃபீஸ் வாங்காத வக்கீலாக பல்கிவாலா ஆஜராகி வாதாடவில்லையா?
வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி சூத்திரன் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி செத்து விடும், தீட்டுப்பட்டு விடும், அந்தத் தீட்டைக் கழிக்க ஆயிரம் கலசங்களைப் புதிதாக வைக்க வேண்டும், பிராமண போஜனம் நடத்த வேண்டும் என்று சொன்னவர்கள் யார் - தினமலர் எழுத்தாளரே?
உங்களுக்கு அடியாட்கள் தேவைப்படும் பொழுது இந்துக்களே ஒன்று சேர்வீர் என்பீர்! மற்ற நேரத்தில் சூத்திரன் அர்ச்சகரானால் சாமி செத்துப் போய்விடும், தீட்டுப் பட்டு விடும் என்பீர்!
காஞ்சிமடத்திலே சுப்பிரமணியசாமி சென்றால் சங்கராச்சாரி பக்கத்திலே சமமாக நாற்காலி போட்டு ஜம்மென்று உட்கார முடிகிறது. அப்துல் கலாமும், அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனும் தரையில் உட்கார வேண்டியிருந்ததே!
இவை எல்லாம் எப்பொழுதோ நடந்தது என்று சொல்லப் போகிறீர்களா திருவாளர் கார்த்திகேயன் அய்யர் அவர்களே?
ஈ.வெ.ரா. தூண்டி விட்டது ஜாதி துவேஷம் என்று குறிப்பிட் டுள்ளீர்களே -
ஈ.வெ.ரா. ஜாதியையும் உண்டாக்கவில்லை, யாரையும் தூண்டியும் விடவில்லை - ஜாதியை உண்டாக்கியது நீங்கள்; ‘இன்றும் நாங்கள் பிராமணர், பூணூல்காரர் கடவுளுக்கும் மேலே நாங்கள்!” என்று சொல்லுவது நீங்கள்.
நீங்கள் பிராமணர்கள் என்றால் நாங்கள் சூத்திரர்களா? நான்கு வருண அமைப்பில் அப்படிதானே பொருளாகும்! சூத்திரர்கள் என்றால் ஏழு வகைப்படும் -அதில் ஒன்று வேசி மக்கள் என்பதுதானே உங்களின் ஹிந்து மதம்!
இதை எதிர்த்துக் கேட்டால் துவேஷமா? உண்மையிலேயே திருடியவனை விரட்டினால் ‘திருடன் திருடன்’ என்று உண்மைத் திருடனும் சேர்ந்து கத்திக் கொண்டு ஓடித் தப்பிக்கும் தந்திரம் பெரியார் சகாப்தத்தில் நடக்காது, நடக்க விடவும் மாட்டோம் - அதற்கான ஆணித்தரமான அசல் தலைமையும் உண்டு - எஃகு பலம் படைத்த இயக்கமும் உண்டு!
உண்மையைச் சொல்லப் போனால் உங்களுக்கு ஒரு வகையில் பாதுகாப்பாக இருந்தவர்தான் பெரியார். மக்கள் மத்தியிலே தக்க பிரச்சாரத்தின்மூலம் விழிப்புணர்வை உண்டாக்கி ஜாதியை ஒழித்து பிராமணனும் இல்லை - சூத்திரனும் இல்லை, “அனைவரும் மனிதர்தான்” என்ற நிலையை உண்டாக்கத்தான் 95ஆம் வயதிலும் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன்தான் தந்தை பெரியார்! நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டீர்கள்.
உடல் எல்லாம் மூளை என்று கூறிக் கொள்ளும் ராஜாஜியே இவ்வாறு சொன்னதுண்டு!
In fact in one occasion Rajaji Proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (caravan april 1, 1978. Gandhiji’s Crusade against Casteism) முதல் அமைச்சர் பதவியைவிட பிராமணராக இருப்பதில்தான் பெருமைப்படுவதாகச் சொன்னார் என்றால் வேறு யாரை எதிர்ப்பார்ப்பது?
தீண்டாமை ஒழிக, ஜாதி ஒழிக என்று சங்கராச்சாரியார் சொல்லுவாரா? பார்ப்பனர் சங்கம் தீர்மானம் போடுமா?
பார்ப்பனிய ஆதிக்க நஞ்சை ஏதோ பெரியார்தான் எதிர்த்தாரா? சமூகத்தில் மாற்றம் தேவை  என்று எண்ணியவர்கள் எல்லாம் பார்ப்பனர்களை வெறுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையா?
புத்தர் முதல் சித்தர்கள் உட்பட, ஜோதி பாபூலே, நாராயண குரு, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் (ஏன் விவேகானந்தர்கூட) என்று தொடர்ச்சியாக ஏன் எதிர்த்தனர் - வெறுத்தனர் என்பதைக் கொஞ்சம் அறிவோடு சிந்திக்க வேண்டாமா? பூணூல், பூணூல் ஆணவத்தோடு அணுகினால் அவர்களின் புத்தி தினமலர், ‘துக்ளக் போல்தான் மேயப் போகும்.
காந்தியாரை மகாராட்டிரத்தைச் சேர்ந்த நாதுராம் கோட்சே எனும் சித்பவன் பார்ப்பான் சுட்டுக் கொன்றபோது, மும்பையில் அக்கிரகாரங்கள் எரிந்தன; பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர்.
பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புணர்வு கொதி நிலையில் உள்ள தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் தாக்குதலைத் தொடுத்திருக்கும் என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது; அதனைத் தடுத்தாட்கொண்டவர் தந்தை பெரியார் என்ற நன்றியை மறந்து விட்டு, தர்ப்பைப் புற்கள் தலைகொழுத்துத் திரிய வேண்டாம்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு வேட்பாளராகக்கூட பார்ப்பனரை நிறுத்த எந்த கட்சியும் முன்வராததற்கு என்ன காரணம்? நாதியற்ற நிலையைத் தேடிக் கொண்டது யார் என்பதை திரிநூல் பத்திரிகை எண்ணிப் பார்க்கட்டும்.
இந்தக் கட்டுரையில் கூட, Ôஎன்று தணியும் இந்த பிராமண துவேஷம்?Õ - என்று தானே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆம். இந்தப் பிராமணன் எனும் தொனியும், உச்சரிப்பும், அடையாளமும், உங்களிடம் ஆணவமாக துள்ளித் திரியும்  வரையிலே, ஆவணி அவிட்டங்கள் தொடரும் வரையில், அதனை  எதிர்த்து- துவேஷமல்ல - மனித உரிமையும், சமத்துவ உணர்வும் - சமர் செய்து கொண்டுதானிருக்கும். மேலும் மேலும் உங்களின் புலம்பலும், உங்கள்மீதான வெகு மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் எரிமலையாய்க் கனன்று கொண்டுதானிருக்கும்-ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள் ஆவணி அவிட்டப் பூணூல்கார்களே!
யாரால் பாதுகாப்பு?
இதற்கு மேல் இழைக்கப்பட முடியாது என்கிற அளவுக்குக் கொடுமைகளையும், இழிவுகளையும், உரிமைப்பறிப்புகளையும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் பெரும்பாலான-மண்ணுக்கு உரிய மக்கள்மீது சுமத்திய-திணித்த உண்மையை - ஒரு மாபெரும் தலைவரால், ஒரு மாபெரும் இயக்கத் தால் புரிய வைக்கப்பட்ட நிலையில், இன்றளவும் பிராமண - சூத்திரத் தன்மையை நிலை நிறுத்து வதில் குறியாக இருக்கும் ஓர் ஆதிக்க வெறிக் கூட்டம் பாதுகாப்பாக, நிம்மதியாக, தங்கள் விகிதாச்சாரத்துக்கும் மேல் பன்மடங்கு எல்லாவற் றிலும் அனுபவிப்பவர்களாக இங்கு வாழ முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அந்தத் தலைவர் தந்தை பெரியாரும், அந்த இயக்கமும்தான் அதன் பண்பாட்டால்தான்  என்பதை உணர வேண்டிய வர்கள் உணர வேண்டும். இதைப் பலகீனமாக எடுத்துக் கொள்ளுகிறார்களா என்று தெரிய வில்லை. முடிவு அவர்கள் கையில்!
-மின்சாரம்

திங்கள், 29 ஜூன், 2020

அண்ணாவும் - அய்யரும்!


‘‘தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழ ரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற் றாலும், சங்கநூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அத னைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தின்மீது தான்!
- அறிஞர் அண்ணா
(‘திராவிட நாடு', 2.11.1947,
பக்கம் 18)
ஏதோ வெறுப்பில் அண்ணா எழுதியதில்லை. உண்மையின் உந்துதலின் நடைமுறைக் காணலில் உரைத்ததுதான். இதோ ஓர் எடுத்துக்காட்டு:
கோட்டையூர் இராமநாதன் -உமையாள் 60 ஆம் ஆண்டு திருமணத்தில் அழகப்பச் செட்டியார் ஒரு லட்சத்து ஒரு ரூபாயை திருவிதாங்கூர் சர்வ கலா சாலையில் தமிழ்க் கல் விக்கு ஒரு நிறுவனம் ஏற்படுத் திடவேண்டும் என்று சர்.சி.பி. ராமசாமி அய்யரிடம் கொடுத் தார். அதனைப் பெற்றுக் கொண்ட சர்.சி.பி.யோ, ‘‘தமிழ் வளர்ச்சிக்கும், வடமொழி வளர்ச்சிக்கும் கொடுப்பதாக ஏற்றுக் கொள்கிறேன்'' என்று, அதே கூட்டத்தில் பேசி இருக் கிறார்.
இதுபற்றி ‘விடுதலை' ஒரு தலையங்கம் தீட்டியது.
அதில் ஒரு பகுதி இதோ:
‘‘பணம் கொடுத்தவர் தமி ழுக்கு என்று கொடுத்தால், வாங்கிக் கொண்டவர் வட மொழிக்கு என்று சொல்லத் தைரியம் வருமா என்று யோசித்துப் பாருங்கள். இந்த நாடகம் நடக்கும்போது அங்கு இருந்த தமிழ் மக்கள் யார் யார் என அறிய வாசகர்கள் ஆசைப்படக் கூடும். செட்டி நாட்டு ராஜா அவர்கள், செட்டி நாட்டு குமார ராஜா அவர்கள், சர் ஷண்முகம் அவர்கள் உள்பட அனேக ஆயிரம் தமிழ் மக்களும் ஆவார்கள்.
இதில் 1,00,001 ரூபாய் கொடுத்த செட்டியார் அடைந்த ஏமாற்றத்தை நாம் குறிப்பிட வரவில்லை. 1,00,001 ரூபாயைப் பெற்றுக் கொண்டு, இத்தனைப் பேர் முன்னிலை யில், ‘‘நான் இதை சமஸ்கிருத வளர்ச்சிக்குக் கொடுத்த அடை யாளமாகக் கருதுகிறேன்'' என்று சொன்ன சர்.சி.பி.யின் வீரத்தனத்தை மெச்சுகிறோம்.'' (இது 14.9.1943 ஆம் தேதி, ‘மெயில்' ஏட்டில் இருக்கிறது).
இந்த மாதிரி ஒரு வீரன் தமிழரில், ‘‘வீரத் திராவிடரில் இருக்கிறார்களா?'' என்று கேட் கிறோம். இந்த மாதிரி இல்லா விட்டாலும், ‘‘ஓ! சர்.சி.பி. அவர் களே, தாங்கள் செட்டியார் சொன்னதை சரியாகக் கவ னிக்கவில்லை போல் இருக் கிறது. அவர் ரூ.1,00,001 ரூபாய் தமிழுக்குக் கொடுத்தார்'' என்று ஞாபகப்படுத்தவாவது ஒரு தமிழன், சுத்தத் தமிழன் யாராவது இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்'' (‘விடுதலை' 14.9.1943, தலை யங்கத்திலிருந்து).
அண்ணா சொன்னதை இந்த இடத்தில் ஒருமுறை சிந் தித்துப் பாருங்கள் - பொருள் புரியும்!
- மயிலாடன்
- விடுதலை நாளேடு 29 6 20

ஞாயிறு, 21 ஜூன், 2020

திராவிட_இயக்க_முன்னோடி

தாழ்வுற்றுப் பாழ்பட்டுக் கிடக்கும் சமூகத்தைக் கைதூக்கிவிட அவ்வப்போது புரட்சியாளர்கள் உதிக்கத் தவறுவதில்லை. வீழ்ந்து கிடந்த தமிழகத்தைத் தன்னிரகரில்லாத மறுமலர்ச்சிப் பணிகளால் எழுச்சியுறச் செய்ய முயன்றவர்களில் அயோத்திதாசப் பண்டிதர் முதன்மையானவர்.

#அயோத்திதாச_பண்டிதர்
இயற்பெயர்: காத்தவராயன்
தந்தை: கந்தசாமி பண்டிதர்
மனைவி: தனலட்சுமி (ரெட்டைமலை சீனிவாசன் தங்கை)
பிறப்பு: 20/05/1845
ஊர்: சென்னை ஆயிரம் விளக்கு பகுதி
மொழி புலமை: தமிழ், ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம்
தொழில்: சித்த மருத்துவர், ஆசிரியர், பதிப்பாளர்
மறைவு: 05/05/1914
தென்னிந்திய சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர் அயோத்திதாசர். பகுத்தறிவு, சீர்திருத்தம், சமத்துவம், போன்ற கொள்கைகள் கொண்டவர் எனவே இவரை பெரியார் தனது முன்னோடி என்றார்.

இந்தியாவில் பேரரசை நிறுவிய அசோகருக்கு பிறகு, தமிழகத்தில் பவுத்த மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்
அயோத்திதாச பண்டிதர் 
இலக்கிய, சமூக, சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமூகம் படைக்கும் பணியில் தம்மை முழுவதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர்; தென்னிந்தியாவில் தலித் மக்களின் விடுதலையைத் தொடங்கி வைத்தவர்.  

“திராவிடர்_கழகம்” என்ற அமைப்பை முதன் முதலில் தோற்றுவித்தவர்.

அயோத்திதாச_பண்டிதர் 
1870இல் தனது 25ஆவது வயதில் “அத்வைதானந்த சபை'' ஒன்றைத் தொடங்கி தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையினப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்துச் சாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார். மலையினப் (தோடர்)பெண்ணைக் கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
அயோத்திதாச_பண்டிதர்
இவர் சில காலம் இரங்கூனில் (பர்மிய நாடு) வாழ்ந்தார். இங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையும் அவரது மனைவியும் நோயினால் இறந்து போயினர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரிக்கு திரும்பியவர், தனது உறவினர் இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
1881ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது, தாழ்த்தப்பட்டவர்களை "ஆதித் தமிழன்' என்று பதிவு செய்ய கோரிக்கை வைத்தார்.

1986ஆம் ஆண்டு ஆதித்தமிழர்கள் (தாழ்த்தப்பட்டோர்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல என பிரகடனப்படுத்தினார்.

1882ஆம் ஆண்டு “திராவிடர் கழகம்'' என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வந்த ஜான்ரத்தினம், 1885ல் “திராவிட_பாண்டியன்'' என்ற இதழைத் தொடங்கினார்

அயோத்திதாசர் அந்த இதழின் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகவும், அவர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார்  
அரசியல், பொருளாதார ரீதியில் நசுக்கப்படும் தலித் மக்களின் விடுதலையில் அதிகமான அக்கறை செலுத்தினார்.

1890ஆம் ஆண்டு நீலகிரியில் “திராவிட_மகாஜன_சபை'' என்ற அமைப்பை துவங்கி ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்தார். அமைப்பின் சார்பில் 1891ஆம் ஆண்டு ஒரு மாநாட்டை நடத்தி தீர்மானங்கள் இயற்றினார்.

1892ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மகாஜன சபை மாநாட்டில், நீலகிரியின் பிரதிநிதியாக கலந்து கொண்டு "ஒடுக்கப்பட்டோர் கோவிலுக்குள் நுழைய அனுமதி வேண்டும்" என்று குரல் கொடுத்தார். இதில் கலந்து கொண்ட ஆதிக்க சாதியினர் அவரை எதிர்த்துக் கண்டனக் குரல் எழுப்பினர்.

கல்வியால் மட்டுமே தலித் மக்கள் முன்னேற முடியும் என்று கருதி, பிரம்ம ஞான சபை ஆல்காட் அவர்களுடனான நட்பை பயன்படுத்தி 1892இல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 பள்ளிகளை கொண்டு வந்தார். 

1894ல் சென்னை மற்றும் வட ஆர்க்காடு மாவட்டங்களில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.

"திராவிட மாகாஜன சபை" சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றி தலித்துகளுக்கு இலவசக் கல்வி, கோயில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 முற்போக்குக் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பினார். அந்த மனு மறுக்கப்பட்டு அலட்சியப் படுத்தப்பட்டது.
இந்து மதம் மீதும், பார்ப்பனியத்தின் மீதும் வெறுப்புற்றுப்போன அவர், இறைக் கொள்கை, சடங்கு வாதம், பார்ப்பனிய ஆதிக்கம், மத, பண்பாட்டுத் தளங்கள் ஆகியவைகளைக் கேள்விக்குள்ளாக்கி சுய சிந்தனை அடிப்படையில் புதிய தேடல்களுக்குத் தயாரானார். பகுத்தறிவை நோக்கிப் பயணப்பட்டார்.

1902 ஆம் ஆண்டு "தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கத்தை" ஏற்படுத்தினார். 

19/06/1907 அன்று “ஒரு பைசாத் தமிழன்'' என்ற பெயரில் ஒரு வார இதழைச் சென்னை இராயப்பேட்டையில் தொடங்கி வெளியிட்டார். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். 

ஒரு_பைசாத்_தமிழன்
ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்கு பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார் எனத் தன் இதழுக்கு பெயர்க் காரணம் கொடுத்தார்

1908ஆம் ஆண்டு இதழின் பெயரைத் ”தமிழன்'' என்று பெயர் மாற்றம் செய்து வெளியிட்டார்.  

தமிழகத்தில் தமிழர்களுக்கென்று எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் "தமிழன்" இதழ் மூலம் பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மூடநம்பிக்கை, மொழிப்பற்று, இன உணர்வு, சமூகநீதி மற்றும் சுயமரியாதை இவற்றை மையமாகக் கொண்டு இதழை நடத்தினார். 

"இந்தி மொழி இந்து சாதி மதத்தோடு தொடர்புடையது எனவே அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது ஆங்கிலமே தகுதியுடையது" என்று 1911ல் எழுதினார்

சுதேசிமித்திரன் போன்ற இதழ்கள் இந்திய விடுதலை பற்றி எழுதியபோது இவர் முதலில் இங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை வேண்டுமென்று எழுதினார்.

ஆதிக்க சாதியினர் 'ஒற்றுமை' பேசியபடி ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றபோது, "சுத்த ஜலம் மொண்டு குடிக்க விடாத படுபாவிகளின் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீர்கள்! உங்கள் சத்துருக்கள் செய்த தீங்கினை மறந்து விடாதீர்கள்" என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்து மதத்தில் தலித்துகளை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட பண்பாட்டு, மதத்தடைகளைத் தூக்கியெறிவதுதான் விடுதலைக்கானது.
- முகநூல் செய்தி மூலம் வந்தது

நான் இந்துவல்ல. நீங்கள்?


தொ. பரமசிவன் 

இந்து என்ற சொல் இந்தியாவில் பிறந்த வேதங்களிலோ, உபநிஷதங்களிலோ, ஆரண்யங்களிலோ, பிராமண்யங்கள் என்று சொல்லக் கூடிய வேறு வகையான  பழைய இலக்கியங்களிலோ, இதிகாசங்களிலோ கிடையாது.

இந்து என்ற சொல் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய orientalist அதாவது கீழ்த்திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்தியது, இந்த சொல்லுக்கான மரியாதை என்ன என்று கேட்டால் இது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த சொல் என்பது தான். 

மறைந்து போன சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் வெள்ளைக்காரன் வந்து நமக்கு இந்து என்று பெயர் வைத்தானோ இல்லையோ நாம் பிழைத்தோம் என்று எழுதி உள்ளார்.  ஆம் இந்து என்று வெள்ளைக்காரன் பெயர் சூட்டியதில் பலன் அடைந்தது பார்ப்பனர்கள் மட்டுமே.

1799இல் உள்நாட்டு நெறிகளைத் தொகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கல்கத்தாவில்  சர் வில்லியம் ஜோன்ஸ் (இந்தப் பெயரை RSS காரர்கள் இன்றும் கொண்டாடுவார்கள்) என்ற அதிகாரி நாட்டின் நெறிகளைத் தொகுத்து அதற்கு Hindu Law என்று பெயரிட்டார். அப்போது தான் hindu என்ற சொல் முதன் முதலாக அரசியல் 
அங்கீகாரம் பெற்றது. இந்து என்ற சொல் எந்த இந்திய மொழிகளிலும் கிடையாது.  நம் சங்க இலக்கியத்தில் "ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்" என்று வருகிறது. 13ஆம் நூற்றாண்டின் வட மொழி நூல்களில் தென்னக மக்களை திராவிடர் என்று குறிப்பிட்டுள்ளனர். இப்படி எந்த வரலாறும் இந்து என்ற சொல்லுக்கு இல்லை. 

13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ உரையாசிரியர்களைக் கேட்டால் "திராவிட உபநிஷத்" என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழியைச் சொல்வார்கள். திராவிட இயக்கம் பிறக்கும் முன் வரை தென்னிந்திய பார்ப்பனர்கள் "பஞ்ச திராவிடப் பிராமணர்கள்" என்று தான் தங்களை அழைத்துக் கொண்டனர்.

அரசியல் சட்டப்படியே இந்து என்ற சொல்லுக்கு நேரடி வரைவிலக்கணம் கிடையாது. கிருத்துவரல்லாத, இசுலாமியர் அல்லாத, பார்சி அல்லாத மக்கள் எல்லாம் இந்துக்கள் என்று எதிர்மறை வரைவிலக்கணம் தான் உண்டு.

ஒரு மதம் என்றால் அதற்கு 3 முக்கியமான அடிப்படைகள் இருக்கும் 

1. ஒரு முழு முதற்கடவுள் 

2.ஆகமங்கள் 

3.குறிப்பிட்ட வழிபாட்டு நெறிகள்

இந்து மதம் என்று அடையாளம் காட்டப்படும் மதத்திற்கு அப்படி ஏதும் அடிப்படை இல்லை.

இந்து என்ற சொல் குறித்த பல்வேறு அறிஞர்களின் கருத்துகள் கீழே

1.பாரசீக இலக்கியங்களில் ஹிண்டு-இ- ஃபலக்(Hindu-e-falak) என்றால் வானத்தின் கருப்பு அதாவது சனி என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. இந்தப் புனித மண்ணில் கால் வைத்த பாரசீகர்கள் இந்த மண்ணில் பரவி வாழ்ந்து வந்த மக்களை இழித்துக் கூறிய அந்த இந்து என்ற சொல்லைப் பயன்படுத்துவது இழிவானதாகும்.(R.N.Surya Narayan, Universal Religion page 1-2,published from Mysore in 1952).

பலர் இந்து என்பது சிந்து என்பதன் சிதைந்த வடிவம் என்கிறார்கள்.அது தவறு. சிந்து என்பது ஆறே அன்றி மக்கள் இனக் குழு அல்ல. நாட்டை ஆக்கிரமித்த இஸ்லாமியர்கள் அப்பகுதியில் வாழ்ந்த ஆரியர்களைக் கேவலப்படுத்த இந்து என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள், இந்து என்றால் பாரசீக மொழியில் அடிமை, அஞ்ஞானி என்று பொருள், இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தைப் பின் பற்றாதவர்களை அவ்வாறு அழைப்பது வழக்கம் என்கிறார் தயானந்த சரஸ்வதி. (Maharishi Dayaanand saraswati Aur Unkaa Kaam, Edited by Lala Lajapat Rai,Published from Lahore in 1898, in d chapter of introduction)  

1964இல் லக்னோவில் இருந்து வெளியிடப்பட்ட Lughet-e-Kishwari என்ற பாரசீக அகராதியில் இந்து(hindu) என்பதற்கு திருடன்(chore-Thief) கொள்ளைக்காரன்(dakoo-Dacoit), வழிப்பறி செய்பவன்(raahzvan-Waylayer), அடிமை(ghulam-Slave) என்று பொருள்கள் கூறப்பட்டுள்ளன.

Urdu-Feroze-ul-Laghat என்று தலைப்பிட்ட மற்றோரு அகராதியில்(vol 1-p 615)

1. In Turkish: chore(திருடன்),raahzan(வழிப்பறிக்காரன்,Lutera(Looter)- கொள்ளைக்காரன் 

2. Persian:Ghulam(அடிமை), barda(Obedient servant- கீழ்ப்படிதலுள்ள ஊழியன்), sia faaon( கருப்பு நிறம்), kaalam(கருப்பு).

இந்தியா முழுவதும் கருப்பு நிற மக்கள் பரவி வாழ்ந்த நாடாகவே இருந்தது ஆரியர் வருகைக்கு முன். சிந்து சமவெளியில் வாழ்ந்த அம்மக்களை வட மேற்கே பரவ விடாமல் தடுத்தன அங்கிருந்த செங்குத்தான பனி பொழியும் மலைத் தொடர்கள்.

அன்றைய இந்திய(கருப்பு நிற) மக்கள் அந்த மலைத் தொடர்களைக் கடக்க முயன்ற போது பனிப்பொழிவில் பெருமளவில் இறந்து போயினர். அதைக் கண்ட வெள்ளை நிற(ஆரியர்கள்) மக்கள் அம்மலைத் தொடருக்கு "கருப்பர்களைக் கொல்லும் மலை என்ற பொருளில் Hindu Kush(Hindu killer) என்று பெயர் வைத்ததாக 
Bai kahan singh Naba என்பவர் எழுதிய Mahan kosh ,என்ற 1996 இல் வெளியான நூலில்(பக்கம் 275) உள்ளதாக பதிவுகள் உள்ளன. மேலும் இந்தி சப்தர் சாகர் எனும் இந்தி மொழிப் பேரகராதியை வாரணாசியில் உள்ள நாக நிலைப் பிரச்சார சபா வெளியிட்டுள்ளது.

 அதில் 

இந்து என்ற சொல்லுக்கு

1. black and ugly

2. Uncultured brute

3.A Decoit

4.Any thief Belonging to india என்று பொருள் கூறப்பட்டுள்ளது..

           ~இந்து தேசியம்~

....தொ. பரமசிவன்

ஞாயிறு, 14 ஜூன், 2020

இந்தியாவின் பிரதானமான பிரச்சினை ஜாதி -வீரேந்திரகுமாரின் பேட்டி (கேரளா)

'மாத்ருபூமி' நாயகரின் பேட்டி
கேரளத்தின் முதுபெரும் சோசலிஸ்டுகளில் ஒருவரும், 'மாத்ருபூமி' என்ற கேரளாவின் புகழ் பெற்ற ஏட்டின் தலைவ ராகவும், நிருவாக இயக்குநராக இருந்தவருமான தோழர் வீரேந்திரகுமாரின் பேட்டி ஒன்று மொழி பெயர்க்கப்பட்டு 'இந்து தமிழ்திசை' ஏட்டில் நடு பக்கக் கட்டுரையாக வெளி வந்தது (6.6.2020) (அண்மையில்தான் இவர் மறைந்தார்).
அந்தக் கட்டுரையில் வீரேந்திர குமார் அளித்துள்ள பேட்டியில் சில முக்கியமான தகவல்கள் வெளிவந்துள்ளன; அவை பல சிந்தனைக் கணைகளையும் ஏவி விட்டன.
(1) 'இந்தியாவின் பிரதானமான பிரச்சினை ஜாதி  - அதற்கு முகம் கொடுக்காமல் சமூகத்தின் ஆழமான பிரச்சினைகளை நம்மால் கையாள முடியாது என்பதை முழுமையாக உணர்ந்தேன்' என்று கூறியுள்ளார்.
- இந்தக் கருத்து எவ்வளவு ஆழமானது - உண்மையானது. பிறப்பின் அடிப்படையில் பேதம் என்ற கொடுமையின் கேவலமான பெயர்தான் ஜாதி - எந்தப் பேதங்களும் இந்தக் கோர வடிவத்தின் முன் நிற்க முடியாது.
அதனால்தான் பகுத்தறிவு பகலவனான தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பையே தன் முதன்மையான முன்னணிப் பணியாகக் கொண்டு, கண்ணின் கடைசி இமையைச் சிமிட்டும் வரை பெரும்பாடுபட்டார்.
ஜாதிக்கு மூல ஆதாரம் கடவுள், மதம், வேதம், ஸ்மிருதி, இதிகாசம், புராணங்கள் என்ற பட்டியல்  நீளும் நிலையில், அவற்றை எல்லாம் நிர்மூலப் படுத்தும் மகத்தான பணியில் தந்தை பெரியார் ஈடுபட்டார் - அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகமும் இந்த வகையில் எந்த விலை கொடுத்தும் ஜாதியை ஒழித்திட ஓயாது உழைத்து வருகிறது.
இன்னும் சொல்லப் போனால் மதப்பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஜாதியைப் பாதுகாத்து வருகிறது.
அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி ஒரு மாநாட்டின் மூலம் வேண்டுகோள் விடுத்தும், அதனை செயல்படுத்த மத்திய அரசு முன் வராத நிலையில், ஜாதியைப் பாதுகாக்கும் சட்ட எரிப்புப் போராட்டத்தினை நடத்தினார் தந்தை பெரியார். பல்லாயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டு வரை கடுங்காவல் அனுபவித்தனர்.
ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் ஒரு நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு இதுவரை எந்தவித பதிலுமில்லை.
இந்த நிலையில் இன்றைக்கு மத்தியிலும், பல மாநிலங் களிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடிய பிஜேபி என்னும் அமைப்பு நாட்டில் இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் - ராமராஜ்ஜியத்தை  நிறுவப் போகிறோம் என்று பிரகடனப்படுத்துவதன் பொருள் என்ன?
ஜாதி அடிப்படையிலான சமூக அமைப்பை மேலும் கெட்டிப்படுத்துவதுதானே! இப்பொழுதே அதன் செயல்பாடு களை நுகரவும் முடிகிறது. உயர் ஜாதியினர்களை உயர் பதவிகளில் நிலை நிறுத்துவது  - ஜாதிகளின் காரணமாக நீண்ட  காலமாகக் கல்வி வாய்ப்பு அறவே மறுக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படும் இடஒதுக்கீட்டின் வேரை வெட்டும் விபரீத வேலைகளில் ஈடுபடுவது  எதைக் காட்டுகிறது?
மீண்டும் மனுதர்ம ஜாதி அடிப்படையிலான ஒன்றை நிறுவுவதுதானே இதன் அடிப்படை! இந்த நிலையில் இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று அறிவு நாணயமாக எண்ணும் எவரும் - அவர்கள் எந்த சாரிகளாக இருந்தாலும் அவர்களின் தலையாய பணி ஜாதி ஒழிப்புப் பணிதானே!
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த முன்னோடிகளுள் ஒருவரும், தலை சிறந்த தொழிற்சங்க வாதியுமான சிந்தன் அவர்கள் ஒரு தொழிற்சங்க மாநாட்டில் மனந்திறந்து தன் வேதனைகளை வெளிப்படுத்தியதுண்டு.
தொழிற்சங்கங்களைக் கட்டுவதில்கூட ஜாதி பெரும் தடையாக உள்ளது என்று சொல்லவில்லையா?
ஜாதி ஒழிப்பில் கூர்மையான நோக்கும், இலக்கும் உடைய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களின் பெயர் களில்கூட - குறிப்பாக வட புலங்களில் ஜாதியும் பின்னோட் டமாக இருப்பதை எண்ணிப் பார்த்தால் இந்த ஜாதிதான் எத்தகைய மூர்க்கமானது  - கொடூரமானது - இதனை ஒழிக் காமல் இந்த நாட்டுக்கு வேறு எது முதன்மையான - முக்கியமான தொண்டாக இருக்க முடியும்?
மறைந்த வீரேந்திரகுமாரின் கருத்து மிக முக்கியமானதே!
-  கவிஞர் கலி.பூங்குன்றன்

சனி, 13 ஜூன், 2020

ஜெயேந்திரர் கம்பி எண்ணியதும் கர்மப் பலன்தானா !


மின்சாரம்
'நீ உன் தாய் வயிற்றில் பத்து மாதம் இருந்து தானே பிறந்தாய் ஏன் கீழ் ஜாதி?'
"அது எனது கர்மபலன் சாமி!"
"பார்ப்பானும் பத்து மாதம் தாயின் வயிற்றிலிருந்து தானே பிறந்தான் - அவன் ஏன் உயர் ஜாதி - பிராமணன்?
"அது அவன் கர்ம பலன்சாமி"
"நீ ஏன் உழைத்து உருக்குலைந்து போனாய்?"
"அது என் தலை எழுத்து அய்யா! பகவான் பிண்டம் பிடித்துப் போடும் பொழுதே எங்கள் தலையில் எழுதி விட்டானே!' அதனை மாற்றி எழுதிட முடியுமா அய்யா?"
"அவன் உழைக்காமல் உப்பரிகையிலே வாழ்கிறானே - அது எப்படி?"
"அதற்குப் போன ஜென்மத்தில் அவன் செய்த புண்ணியம் - மகராசன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்"
"நீ ஏன் படிக்கவில்லை?"
"எல்லோரும் படிக்க முடியுமா? படிப்புன்னா - அதற் காகப் பிறந்தவன் பிராமணன் - அவன் பிறந்த நேரம்!"
"நீ ஏன் ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஓலைக் குடிசையில் வாழ்கிறாய்?"
"எல்லாம் அவன் செயல் - அதை யாரே மாற்றிட முடியும்?"
- இப்படி எதற்கெடுத்தாலும் தன் தாழ்மைக்கும், இழி நிலைக்கும் தாங்களே தர்ம - நியாயம் பேசும் விசித் திரத்தை வேறு எங்காவது கண்டதுண்டா?
பாதிக்கப்பட்டவனே அந்தப் பாதிப்புக்கான நியாயத்தைப் பதிலாகக் கூறும் பரிதாபத்திற்குரிய பஞ்சமர்களை எந்த நாடு கண்டது?
இந்தக் கீழ்ஜாதி மனப்பான்மையை எப்படி மாற் றுவது?
வறுமையின் கோரப்பிடியில் வாழ்ந்து கெட்டவனை மேலே தூக்கி விடுவது எப்படி?
உழைத்தும் உருக்குலைந்து கிடக்கும் இந்த மக்களை உன்னத நிலைக்குக் கொண்டு வருவது எப்படி?
இப்படி சிந்தித்தவர் புத்தர் - புத்தருக்குப்பின் ஆரியர் களின் முன் ஜென்மம், தலைவிதி, கர்மபலன் என்னும் சதிக் காட்டின் வேரை வெட்டிவீழ்த்தியவர்தான் வெண் தாடி வேந்தர் பெரியார்.
நீ கீழ் ஜாதியல்ல - ஜாதி என்பதற்கு அடையாளம் என்ன? அவன் உயர் ஜாதிக்காரனும் அல்ல. பிர்மா முகத்தில் அவன் பிறந்தவன் என்று சொல்லுவதெல்லாம் அசல் பித்தலாட்டம்.
பிர்மா ஆண் கடவுளா - பெண் கடவுளா? ஆண் கடவுளின் முகத்தில் ஒருவன் பிறக்க முடியுமா? இல்லை இல்லை பிர்மாவின் முகத்தில்தான் பிராமணன் பிறந்தான் என்றால் அவன் முகத்தை ஓவியமாகத் தீட்டினால் அது எப்படி இருக்கும்?
விதியை நம்பாதே. அது வீணர்களின் கூற்று. கர்ம பலன் என்பது கயவர்களின் ஏற்பாடு.
ஒரு பொழுதும் உனக்கு உரிமை உணர்ச்சி வந்து விடக் கூடாது என்பதற்காக வந்தேறிகள் செய்த வடிகட்டின பித்தலாட்டம். கர்மவினை என்பதெல்லாம் உன் உழைப்பைச் சுரண்டும் சூழ்ச்சிக் கருவி.
உன் தலையில் எழுதியவன் யார்? எந்த மொழியில் எழுதினான்? அவன் எழுதியது உண்மை என்றால், அந்த எழுத்துக்கள் இப்பொழுது எங்கே - எங்கே! என்று எண்ணற்ற கேள்விக் கணைகளை ஏவி ஏவி ஆமைகளாய் கிடந்த மக்களை அரிமாவாக ஆர்ப்பரித்து எழச் செய்ய, ஊமைகளாகக் கிடந்தவர்கள் மத்தியில் உரிமைக் கனலைத் தட்டி எழுப்பினார். அறிவார்ந்த வினா வெடி குண்டுகளை வீசி வேதியக் காட்டை எரித்துச் சாம்பலாக்கினார். வீழ்ந்துபட்ட மக்களை வேங்கைகளாய்ச் சிலிர்த்து எழச் செய்தன் விளைவு - உழைத்தவன் உரிமைச் சங்கு ஊதுகிறான். உழைப் பாளியைப் பங்காளியாக்கு என்று உரத்தக் குரலில் முழங்குகிறான்.
கல்வியைக் கொடு - கை நாட்டுப் பேர்வழிகளாக நாங்கள் இருந்தது போதும் போதும் என்று கர்ச்சனை புரிந்து பஞ்சமர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆக்கப் பட்ட இந்த மண்ணின் மக்கள் சூத்திரர்கள் ஆட்சி செய்தால் அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசு போல் அழிந்து விடும் என்னும் சாத்திரக் குப்பைகளைச் சாம்பலாக்கி -
"சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் ஆட்சி இது - இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை" என்று சட்டப் பேரவையில் சங்கநாதம் கேட்டதே!
ஆதி திராவிடர் அய்.ஏ.எஸ். ஆகி விட்டாரே! ஏன் குடியரசு தலைவராக ஆகி விட்டாரே!
குப்பன் மகன் சுப்பன் குளு குளு காரில் வந்து இறங்குகிறாரே!
பேயென்று இழித்துப் பேசப்பட்ட பெண்கள் இன்று, பேண்ட் - சூட் அணிந்து ஆணா, பெண்ணா என்று அடையாளம் தெரியாத அளவுக்கு ஆட்சியினைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிய நிலைக்கு வந்து விட்டார்களே!
பார்ப்பனர்களின் தனிக் குத்தகையாக்கிக் கொண்ட கோயில் கருவறைக்குள்ளும் கறுப்பர்கள் நுழைந்து அர்ச்சனை செய்யும் நிலை ஏற்பட்டு விட்டதே. அடுத்துப் பெண்களும் அர்ச்சகர்.உரிமைக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனரே!
பஞ்சகச்சம் கட்டி திறந்த பூணூல் மேனியுடன் அவிட்டுத் திரியுடன் வீதிகளில் வீறு நடைபோட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டதே! அப்படி இப்பொழுது சென்றால் கோலி விளையாடும் சிறுவன்கூடக் கேலி பேசுவானே!
ஆமாம்.. கலிகாலம் முற்றி விட்டதுஎன்ன செய்யலாம்?
பார்ப்பனர்கள் கூடிக் கூடி "குசுகுசு"வென்று பேசு கிறார்கள். மத்தியில் நம்மவர்கள் ஆட்சி வந்தாலும் இந்தப் பாழாய்ப் போன தமிழ்நாட்டில் மட்டும் நம் ஜம்பம் பலிக்கவில்லையே!
என்ன செய்யலாம்! ஒரு கை பார்ப்போம் - ஊடகங்கள் தான் நம் கைகளில் இருக்கிறதே! பத்திரிக்கை நடத்தும் 'சூத்திரவாள்கள்'கூட இன்னும் ஆன்மிகச் செய்திகளை அள்ளி விட்டுக் கொண்டு தானே இருக்கின்றனர்.
இவாளை வீழ்த்த வேண்டுமானால் மீண்டும் நம் வேதியப் புத்தியைக் காட்ட வேண்டும். விதி, கர்மபலன், பாவம், புண்ணியம், தலையெழுத்து சங்கதிகளை அவிழ்த்துக் கொட்டுவோம்!
'அடிக்க அடிக்க அம்மியும்கூட அசையத்தானே செய்யும் என்ற முடிவுக்கு' அக்கிரகாரம் வந்து விட்டதாக தெரிகிறது?
இந்தக் காலத்திலேகூட அப்படிஒரு எண்ணம் வந்து விட்டதா? நம்ப முடியவில்லையே என்று எண்ண வேண்டாம்.
திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் தான் அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். 'ஆன்மிகக் கண்காட்சி' - 'விவேகானந்தர் ரத ஊர்வலம்' இன்னோ ரன்ன ஏற்பாடுகளை ஜாம்ஜாமென்று முடித்து விட்ட நிலையில் - அடுத்த கட்டத்துக்குத் தாவியி ருக்கிறார். 'சோ' குடும்பத்திடமிருந்து 'துக்ளக்'கைப் பறித்துக் கொண்ட திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் 'துக்ளக்'கை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்து விட்டார்.
இது 'துக்ளக்'கில் (10.6.2020) அவர் பெயரால் எழுதப் பட்ட கட்டுரையின் சில பகுதிகள்:
பிறவிக் குருடன், செவிடனாக மனிதன் ஏன் பிறக் கிறான்? இதற்கெல்லாம் விளக்கம் இருக்கிறது. ஹிந்து மதத்தில். மறுபிறப்பு என்கிற தத்துவத்தில் நம்பிக்கை இருந்தால்தான் இதற்கு விளக்கம் கிடைக்கும்.
றீவினைப் பயனையும், மறுபிறப்பையும் பிரிக்க முடியாது.
றீமறுபிறவியில் நம்பிக்கை இல்லாமல் வினைப் பயனில் நம்பிக்கை இருக்க முடியாது.
இவ்வளவையும் எழுதிவிட்டு, கடைசியில் முடிக்கும் வரிகள்தான் முக்கியம்.
"இறை நம்பிக்கையை ஒழித்து, மனிதச் சிலை களையும், நினைவகங்களையும் வழிபடும் திராவிட பகுத்தறிவு விபரீதத்தால், நம் மகான்கள் கூறிய ஆன் மிகக் கருத்துகளை நாம் மறந்து விட்டோம் - எனவே முற்பிறப்பின் நம் வினைகளில் இந்தப் பிறவிப் பயன் களை ஓர வஞ்சனைகளாகப் பார்க்கிறோம்" என்று மங்கலம் பாடி முடித்துள்ளார் திரு. குருமூர்த்தி அய்யர்வாள்!
கோணிப்பைக்குள்ளிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே பார்த்தீர்களா?
கர்ம பலன், தலை எழுத்து என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்நாட்டு பார்ப்பனர் அல்லாத மக் களின் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தோம். அதன் அடிமடியில் கை வைத்து நம் தலையில் மிளகாய் அரைக்கும் அளவுக்குத் தலைகீழாகப் புரட்டியடித்தது திராவிட பகுத்தறிவு என்பதை அவர்களை அறியா மலேயே ஒப்புக் கொண்டு விட்டனரே!
அப்படிப்பட்ட தலைவர்களுக்குச் சிலைகளும், நினைவகங்களும் உருவாகி விட்டதாம். வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கதறும் கண்கொள்ளாக் காட்சி இது.
ஒரு பக்கத்தில் பெரியார் மண்ணா இது என்று கிண்டலடிப்பது, இன்னொரு பக்கத்திலே ஆம், இது பெரியார் மண்தான் என்று மனப்புழுக்கத்தோடு புலம் புவது - பலே, பலே படிப்பதற்கு ரொம்பவும் மகிழ்ச்சி யாகத்தானிருக்கிறது - மண்டியிடும் ஆரியத்தின் மண் மேட்டிலே ஒடுக்கப்பட்ட மக்களின் உப்பரிகை மாளிகை தான் எழும்!
எல்லாம் தலை எழுத்தின்படிதான் நடக்கும் என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பூணூல் பேனா பிடிக்கும் குருமூர்த்திகளுக்குச் சில கேள்விகள்.
உணர்ச்சி வயப்பட்ட யாரோ சில இளைஞர்கள் சில பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்தனர் என்ற செய்தி வந்ததே - அதுகூட தலை எழுத்தின்படிதானே நடந்தது என்று ஏற்றுக் கொள்வீர்களா? கோயில் சிலைகளின் திருட்டும்கூட தலை எழுத்தின்படிதானா? வெடிகுண்டு வீச்சுகளும்கூட சம்பந்தப்பட்டவர் போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்கான பரிசா?
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயிலில் கம்பி எண்ணினாரே - அதுவும் கர்மபலனின் விளைவு தானா? பார்வதியிடம் ஞானப்பால் உண்ட, தேவாரம் பாடிய திருஞான சம்பந்தன் 16 வயதில் அற்பாயுசாக மாண்டானே! அதுகூட கர்மப் பலனின் விளைவா? இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த 2020ஆம் ஆண்டிலும் இப்படி, விதியையும், கர்ம பலனையும் கட்டிக் கொண்டு அழுதால் - எழுத ஆரம்பித்தால் அனேகமாக அவர்களுக்கு அனர்த்த மாகத் தான் முடியும் .. ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம்!
விநாசகாலே விபரீத புத்தி!'
- விடுதலை நாளேடு,13.6.20

திங்கள், 8 ஜூன், 2020

தேசியம் குறித்து அறிஞர் அண்ணா உரை

திராவிட தேசீயம் - பேரறிஞர் அண்ணா -1

திரு சம்பத் அவர்கள் தி.மு.க.வை விட்டுப் பிரிந்தபோது அறிஞர் அண்ணா ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி

பேரறிஞர் அண்ணா

பெரிதும் வணிகப் பெருங்குடி மக்கள் நடமாடும் இந்த சென்னை வட்டாரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்து, அருள் கூர்ந்து தேர்தல் நிதியும் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக, கொத்தவால்சாவடிக்கு நாம் வந்தால், காசு கொடுத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் சரக்கை எடைபோட்டு வாங்கிக் கொண்டு செல்வது வாடிக்கை. ஆனால், இன்று நாம் கொடுக்கும் சரக்கை (பேச்சை) அவர்கள் எடை போட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

எப்படி மதிப்போம்? 

ஒரு கடையில் நீண்ட நாள் வேலை பார்த்த ஒரு தொழிலாளி, அக்கடையி லிருந்து விலகிச் சென்றபின், ‘அந்தக் கடையில் தராசு சரியில்லை; வீசைக் குண்டு 40 பலம் இருக்காது’ என்று சொன்னால் என்ன பொருள்? ‘ஏனப்பா, நீ தானே அந்தக் கடையில் இதுவரை நிறுத்துக் கொடுத்து வந்தாய்? அப்பொழுது உனக்கு இது தெரியாதா? இப்பொழுது வந்து இப்படிச் சொல்லு கிறாயே’ என்றுதான் கேட்போம். அதற்கு அவன், ‘அப்பொழுது அப்படி! ஆனால், இப்பொழுது இப்படி’ என்பானானால் அவனை நாம் எப்படி மதிப்போம்.
அறம் அதுதான்!

ஒருவர் கொத்தவால்சாவடிக்குச் சாமான் வாங்க வந்தால், சாமான் வாங்கும் போதே, அது நல்ல சரக்குதானா ‡ அளவு சரியாக இருக்கிறதா ‡ என்று ஆராய்ந்து பார்த்து உன்னிப்பாகக் கவனிப்பதுதான் வாங்குவோரின் கடமை ; சரியாக நிறுத்துக் கொடுப்பதுதான் வியாபாரிக்கும் அறமாகும்.

அந்திக் கடையுமல்ல, அழுகல் சரக்குமல்ல!

இன்று சிலர் திராவிட நாடு இலட்சியத்தை மறுக்கிறார்கள்; மனமாச்சரியத் தால் இந்த இலட்சியம் தேவையில்லை என்கிறார்கள்.

ஒருவர் இப்படிச் சொல்லி, இந்த இலட்சியத்தை எடுத்துவிடுவதற்கு, இது ஒன்றும் அவசர வியாபாரமுமல்ல ; சைனாபஜாரில் ‘போனால் வராது  - பொழுது விடிந்தால் கிடைக்காது’ என்று விற்பார்களே - அப்படிப்பட்ட அந்திக் கடையுமல்ல. ஒரு வாரம் போனால் அழுகி விடக் கூடிய அழுகல் சரக்குமல்ல நம்மிடமிருப்பது.

எனவே, உங்களுக்குள்ள சந்தேகம் தீரும்வரை கழகத்திற்கு வராதீர்கள்; சந்தேகம் தீர்ந்த பிறகு வந்தால், பின்னர் சந்தேகப் படாதீர்கள்! சந்தேகம் அறவே நீங்கும் வரை உள்ளே வரவேண்டாம்.

அந்த பதில் நமக்குத் தேவைதானா?

கடையில் சாமான் வாங்கும் போதே, ‘சரியாக நிறுக்கப்படுகிறதா?’ என்று பாருங்கள். அப்படியல்லாமல், வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் அதன் பிறகு திரும்பி வந்து, ‘சாமான் அளவு சரியில்லை என்று என் மனைவி சொன்னாள் ; அதனால் திரும்பி வந்தேன்’ என்று சொன்னால், புத்தியுள்ள கடைக்காரன் என்ன சொல்வான்? ‘இனிமேல் அந்த அம்மாவையே சாமான் வாங்க வரச் சொல்லுங்கள் ; நீங்கள் வரவேண்டாம்’ என்றுதான் சொல்லு வான்!

ஏமாளியல்ல நாம்!

திராவிட நாட்டுக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு முன் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு ஆராய்ந்து பாருங்கள். ஒரு கட்டத்தில் ஒரு வி¬யம் புரிந்தது ; இன்னொரு வி-யம் புரியவில்லை என்றால், இன்னொரு கூட்டத்தையும் கேளுங்கள் ; உங்கள் சந்தேகம் தீரும் வரை நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லாம் புரிந்துவிட்டதாகக் கழகத்திற்குள் வந்துவிட்டு, அதன்பிறகு கொள்கை பிடிக்கவில்லை என்றால், கொத்தவால்சாவடியில் சரக்கை வாங்கி இராயபுரத்திலுள்ள வீட்டுக்குச் சென்று பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்து விட்டுக் கூட அல்ல-பக்குவமாகச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு மிச்சமிருப்பதைப் பொட்டலமாக மடித்துக் கொண்டுவந்து கடையில் கொடுத்து, ‘சரக்கு நன்றாக இல்லை’ என்றால்,  எந்தக் கடைக்காரனும் வாங்க மாட்டான். அதைப் போல்,  இந்தக் கடைக்காரனும் (தி.மு.க.) ஏமாளியல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

எனவே, ஆற அமர ஆராயுங்கள். இது 1962 ‡க்குப் பிறகு அழிந்துவிடும் என்றல்ல ; அதன்பிறகு அறிவுக்கண் அடைப்பட்டு போய்விடாது. நன்றாகக் கழகக் கொள்கைகளை ஆராயுங்கள்; இவ்வளவுக்கும் இடம் கொடுத்துதான் இயக்கம் நடத்துகிறோம் நாங்கள்.

கதையும்-கருத்தும்!

ஒரு சிறு கதையை உங்களுக்கு உதாரணமாகக் கூற விரும்புகிறேன். ஒரு வைத்தியர், ஜோதிடர், சங்கீத வித்துவான் ஆகிய மூன்று பேரும் வெளி யூருக்குப் போனார்கள். பாழடைந்த சத்திரம் ஒன்றில் அவர்கள் தங்கி, சமைத்துச் சாப்பிடத் திட்டமிட்டார்கள்; வைத்தியர் காய்கறி வாங்கப் போனார் ; ஜோதிடர் அரிசி வாங்கப் போனார் ; சங்கீத வித்துவான் அடுப்பு மூட்டினார் ; வைத்தியர் காய்கறிக் கடைக்குச் சென்று ‘என்ன இருக்கிறது?’ என்று கடைக்காரனைக் கேட்டார். கடைக்காரன், ‘கத்தரிக்காய் இருக்கிறது’ என்றான்.  ‘கத்திரிக்காய் சூடு’ என்றார் வைத்தியர். ‘அப்படியானால் வெண்டைக்காய் வாங்கிப் போங்கள்’ என்றான் கடைக்காரன்.  ‘வெண்டைக் காய் உடம்புக்கு நல்லது என்றாலும், இது குளிர் காலமாகையால் சளி பிடிக்கும்’ என்றார் வைத்தியர்.  இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஆராய்ச்சி செய்தார். கடைசியில் அவர்வாங்குவதற்குப் பொருத்தமான காய்கறி என்ன என்று பார்த்தால் அந்தக் கடையிலே ஒன்றும் இல்லை. தட்டும் கூடையும் தான் மிஞ்சின.

அரிசி வாங்கப் புறப்பட்ட ஜோதிடர் குறுக்கே கருப்புப் பூனை ஒன்று வந்ததால் ‘அபசகுனம்’ என்று கருதி அந்த இடத்திலேயே ஒரு மணி நேரம் அமர்ந்துவிட்டார். அதன் பிறகு புறப்பட்டார். அப்பொழுதும் சில ‘அப சகுனங்கள்’ ஏற்பட்டதால் தனது இராசி பலனை ஆராய்ந்தார். ‘நமது ராசிக்கு இன்று சரியில்லை ; இன்னும் மூன்று மணி நேரம் போக வேண்டும் ; இப்பொழுது போனால் அரிசியும் கிடைக்காது ; அப்படிக் கிடைத்தாலும் வேகாது; வெந்தாலும் உடம்புக்கு ஆகாது’ என்று கருதி அங்கேயே மூன்று மணி நேரம் உட்கார்ந்துவிட்டார்.

பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அடுப்பு மூட்டிய சங்கீத வித்துவான் தண்ணீர் நன்கு கொதித்து ‘தள தள’ வென்று ஓசை எழுப்பியதும், அந்த ஓசைக்குத் தகுந்தாற் போல் தாளம் போட ஆரம்பித்துவிட்டார். தமது தாளமும் தண்ணீர் கொதிக்கும் ‘தளதள’ வென்னும் ஓசையும் ஒத்துவராததால், ‘இந்தத் தப்புத்தாளம் சபைக்கு எடுக்காது!’ எனக் கூறி, சட்டுவத்தை எடுத்து அந்தப் பானை மீது அடித்து உடைத்துவிட்டார் - இப்படி ஒரு கதை உண்டு.
எவ்வாறு கிட்டும் வெற்றி!

இலட்சியப் பாதையில் செல்லும்போது இந்தக் கதையில் சொல்லப் பட்ட மூன்று பேருக்கும் ஏற்பட்டதைப் போல, சந்தேகம் ஏற்படுமானால் இலட்சியத்தில் வெற்றிகிட்டாது.

நம்முடைய இலட்சியத்தைப் பற்றி பல பேருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. படித்தவர்களுக்கும் ஏற்பட்டது; படிக்காதவர்களுக்கும் ஏற்பட்டது; காங்கிரஸ் காரர்களுக்கும் ஏற்பட்டது ; கம்யூனிஸ்ட்களுக்கும் ஏற்பட்டது. அவர்களுடைய சந்தேகங்களையயல்லாம் தம்பி சம்பத் போக்கினார் ; துரதிருஷ்டவசமாக, போக்கிய அவருக்கே அந்தச் சந்தேகம் வந்துவிட்டது.

காலரா நோய்க்கு மருந்து கொடுப்பார் டாக்டர் ; பலருக்கு அந்த நோய் தீரும்; ஆனால், அவருக்கே அந்த நோய் வருதுண்டு. குஷ்ட நோய்க்கு மருந்து கொடுத்துப் பலருடைய நோயைத் தீர்க்கும் டாக்டருக்கே அந்த நோய் ஏற்படுவதுண்டு. அதைப்போல, நம் சம்பத்துக்கே அந்தச் சந்தேகம் வந்திருக்கிறது.

பிரதமப் ‘பூசாரி’ யானாரே!

சந்தேகப் பேயை ஓட்டுவதற்கு ஒரு நல்ல பூசாரியாக சம்பத்தை அமர்த்தியது தி.மு.க.

பேய் பிடித்தவர்கள் பல ரகம் ; ஒவ்வொரு பேயையும் ஓட்டும்போது அந்தப் பேய், தான் யார் என்றும், தனக்குத் தேவை இன்னதென்றும் சொல்லும். அதைப் பேய் சொல்லுவதில்லை - சொல்ல வைப்பவன் பூசாரி!

அதைப்போல, நம்முடைய பிரமப் ‘பூசாரி’ யான சம்பத் சந்தேகப்பட்டவர் களை யயல்லாம் ஆட்டிவைத்தார். ‘காமராசரே! உமக்குச் சந்தேகமா? உமக்குப் பூகோளம் தெரியாததால் இந்தச் சந்தேகம் வந்தது ; பூகோளம் வாங்கித் தருகிறேன் ‡ படித்துப் பாரும்’ என்று சம்பத் சொன்னார். இப்படிப் பலபேருடைய சந்தேகப் பேயை விரட்டினார். ஆனால், அவருக்கே அந்தச் சந்தேகப் பேய் பிடித்திருக்கிறது.

எனவே, சந்தேகம் ஏற்படுபவர்கள், தங்கள் சந்தேகத்தை என்னிடம் தனியாக எடுத்துரைத்தாலும் அதற்கு விளக்கம் தரக் காத்திருக்கிறேன். இப்படிப்பட்ட கூட்டத்தில் கேள்வியாகவும் கேட்கலாம். எந்த வழியிலேனும் உங்கள் சந்தேகத்தைத் தெளிய வைத்துக் கொள்ள 
வேண்டும்.

நன்றி: பெரியார் பார்வை

திரு சம்பத் அவர்கள் தி.மு.க.வை விட்டுப் பிரிந்தபோது அறிஞர் அண்ணா ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதியைப் பகிர்ந்திருந்தேன். பலரும் படித்துக் கருத்துகளைத் தெரிவித்திருந்தீர்கள். 

அந்தச் சொற்பொழிவின் இரண்டாவது பகுதியைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  இந்தப் பகுதியில் ‘தேசியம்’ என்னும் சொல்லாட்சியை  அண்ணா அலசியுள்ளார். தேசியம் என்பதை இயங்கியல் அடிப்படியில் பார்க்க வேண்டும் என்றும் வேறு வகையாக அதை அணுகுதல் கொச்சைப்படுத்தும் போக்கு எனச் சில பொதுஉடைமையர் கூறக்கூடும். ஆயினும் அண்ணா விளக்கியுள்ள பாங்கு, ‘தேசியம்’ என்பதை நாம் விளங்கிகொள்ள உதவுவதாகவே உள்ளதைப் படிக்கும்போது உணர்கிறோம்.

பேரறிஞர் அண்ணாவின் திராவிடத் தேசியம் -2

தேசீயம் என்பதற்கு இலக்கணம் எது?

தேசீயம், தேசீயம் என்று இப்பொழுது பழக்கப் படுத்துவதால் அதைப் பற்றிச் சிறிது விளக்க விரும்புகிறேன்.

‘அழகு, அழகு’ என்கிறோமே எது உண்மையான அழகு? ‘இதுதான் அழகு’ என்று இதுவரை இலக்கணம் வரையறுக்கப்படவில்லை.

‘வீரம் என்றால் இதுதான் வீரம்’ என்று உறுதியிட்டு உறுதிப்படுத்தி இலக்கணம் சொல்ல முடியாது.

‘தேசீயம்’ என்று காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள். ‘திராவிடத் தேசீயம்’ என்கிறோம் நாம். ‘இல்லை, இல்லை’ ‘தமிழ்த்தேசீயம்’ தான் இருக்கிறது என்கிறார்கள் ஒரு சாரர்.

‘இந்தியத் தேசீயம்’ என்று வடநாட்டில் இருப்பவர்களும், இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ‘ஆசிய தேசீயம்’ என்றும், ஆசியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ‘தேசீயம் என்பதே இல்லை! எல்லாம் சர்வ தேசீயம்தான்’ என்றும் சொல்கிறார்கள்.

இன்னும் வானவெளிக்குச் சென்று வந்தால், அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரே தேசீயம் என்பார்கள்.

இப்படி எது ‘தேசீயம்’ என்று இன்னமும் வரையறுத்துச் சொல்ல முடிய வில்லை.

இதற்குச் சிறிய உதாரணம் கூறி உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். உங்களிடத்திலே பெரிய பெரிய புத்தகங்களைப் படித்துக்காட்டி விளக்கங் கூறத் தேவையில்லை எனக் கருதுகிறேன். நான் அப்படிப்பட்ட புத்தகங்களைப் பார்க்காததால் அல்ல ; அந்த அளவுக்கு நாடு பக்குவப்படாததால் நான் சிறிய எளிய உதாரணங்களைச் சொல்லுவது வாடிக்கை.

இந்தக் கூட்டத்தில் உங்களைப் பார்த்து ‘பாட்டுப் பாடத் தெரிந்தவர் களெல்லாம் ஒரு பக்கம் வாருங்கள் ; பாடத் தெரியாதவர்களெல்லாம் மற்றொரு பக்கம் இருங்கள்’ என்று நான் கேட்டுக் கொண்டு, அதன்படி நீங்கள் வந்தால், பாட்டுப்பாடத் தெரிந்தவர்களில் சிலர் உயரமாக இருக்கலாம்; சிலர் குட்டையாக இருக்கலாம்; பலர் கருப்பாக இருக்கலாம் - சிலர் சிவப்பாக இருக்கலாம்; அவர்களில் இந்துக்களும் இருக்கலாம் -முஸ்லிம்களும் இருக்கக்கூடும் ; கிறிஸ்தவரும் இருப்பார் -சைவரும் இருப்பார் ; வைணவரும் இருப்பார். பொதுவாக ‘பாட்டுப்பாடத் தெரிந்தவர்-தெரியாதவர்’ என்ற அடிப்படையில்தான் இங்கே பிரிக்கப்படும்.

அந்த இரு பிரிவினரையும் பாட்டுப் பாடத் தெரிந்த ‘தேசீயம்’ என்று சொல்லலாம்.

இன்னொருவர் வந்து ‘இந்தக் கூட்டத்திலுள்ள உயரமானவர்களெல்லாம் ஒரு பக்கமும், குட்டையானவர்கள் மற்றொரு பக்கமும் வாருங்கள்’ என்று சொன்னால், பாடத் தெரிந்த பிரிவினரும், பாடத் தெரியாத பிரிவினரும் கலைவார்கள். பாடத் தெரிந்தவர்களில் இருந்த உயரமானவர்களும், பாடத் தெரியாதவர் பிரிவிலிருந்த உயரமானவர்களும் ஒன்று சேர்வார்கள் ; அப்போதும் முஸ்லிம், கிறிஸ்துவர், இந்து என்ற வித்தியாசம் இருக்காது ; உயரத்தின் அளவிலேதான் பிரிக்கப்படுவார்கள்.

இன்னொருவர் வந்து, கையிலே காசு உள்ளவர்கள் ஒரு பக்கமும், இல்லாதவர் மற்றொரு பக்கமும் வாருங்கள் என்றால் காசு இருப்பவர்கள் தான் முந்திக் கொண்டு கசு இல்லாதவர்கள பக்கம் செல்வர். ஏனென்றால், தங்கள் காசுக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுவர். அதனால் அப்பொழுது இரண்டு பிரிவு ஏற்படாது ; எல்லாரும் ஒரே அணியில் இருப்பார்கள்.

உலகில் சேர்ந்து வாழும் மக்கள், இப்படி ஒவ்வொரு முறையில் பரம்பரை பரம்பரையாக ‡ தலைமுறை தலைமுறையாக - பல நூற்றாண்டுகளாக, ஒரே வகை எண்ணம், ஒரே வகை பண்புகளால் வாழ்ந்த மக்கள், ஒரே தேசீய இயக்கமாகக் கருதப்பட்டார்கள்.

வாட்டும் வடக்கும் தேம்பும் தெற்கும்

ஆங்கிலேயன் இந்தியாவுக்கு வந்த பின், ஆங்கிலேயன் ஆள்பவனாகவும் இந்தியர்கள் ஆளப்படுபவர்களாகவும் பிரிக்கப்பட்டனர்.

ஆளுபவர் ஒரு பக்கமும், ஆளப்படுபவர்கள் மற்றொரு பக்கமும் இருந்தனர்- இந்து- முஸ்லிம் - பவுத்தர் என்பதைவிட, ஆங்கிலேயர் - இந்தியர் என்ற பிரிவினை முக்கியத்துவம் பெற்றது.

உயரமாக இருப்பவர்களை அழைத்ததும், பாடத் தெரிந்த அணியிலிருந்த உயரமானவர்கள் பிரிந்து இன்னொரு பக்கம் வந்தது போல், வெள்ளையன் வெளியேறிய பின் கொடுமைப் படுத்தப்படும் மக்கள் ஒரு பக்கமும், கொடுமைப் படுத்துபவர் மற்றொரு பக்கமும் இருந்தார்கள்.

கொடுமைப்படுத்துவோர் வடநாட்டினராகவும், கொடுமைப் படுவோர் தென்னாட்டினராகவும் இருந்தார்கள்.

வடநாட்டினர் சுரண்டுபவராகவும், தென்னாட்டினர் சுரண்டப்படுபவராகவும் இருந்தனர்.

ஆட்டிப்படைப் படைப்பது வடக்காகவும் ஆடி ஆழிவது தெற்காகவும் இருந்தன.
வடவர் அரசு சுரண்டிக் கொழுக்கிறது அங்கே - கொட்டிக் கொடுத்துவிட்டுத் தேம்பித் தவிக்கிறது தெற்கு இங்கே.

பழக்கடை - பூக்கடை

பூக்கடைகளில் சில பழங்களும் இருக்கும் ; பழக்கடையில் சில பூக்களும் இருக்கும். பழக்கடையில் மாட்டியுள்ள சாமி படத்துக்கு பூ வைத்திருப்பார்கள். பூக்கடையில் உள்ள படத்தின் அருகே பழம் வைத்திருப்பார்கள்.
இதைப் பார்த்துவிட்டு, ‘என்ன பழக்கடையில் பூ இருக்கிறதே’ என்றோ, ‘பூக்கடையில் பழம் இருக்கிறதே’ என்றோ கேட்பதில் பொருளில்லை. அப்படிக் கேட்பவர் தத்துவ விசாரணை இல்லாதவர் என்றுதான் பொருள்.
அதைப்போல, நாம் திராவிடநாடு கேட்கும்போது, திராவிடநாடு இல்லை என்பவர்களும் இருக்கிறார்களே என்றால் இது பழக்கடையில் பூ இருப்பதற்கு ஒப்பானதாகும்.

பழக்கடையில் சில அழுகிய பழங்களும் இருக்கும் ‡ பழக்கடைக்காரர் இங்கு யாராவது இருந்தால் வருத்தப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்; உண்மையைத்தான் சொல்கிறேன் ‡ அதற்கும் பழக்கடை என்றுதான் பெயர்.
அதைப் போல ஒரு சிலர் திராவிட நாட்டை ஒத்துக் கொள்ளாவிட்டாலும், இது திராவிட நாடுதான்.

முயற்சி தேவை - திராவிட நாடு கிட்ட!

வடக்கால் நாம் கஷ்டப்படவில்லை என்றால், அப்படிச் சொல்பவர்கள் வடக்குப் பக்கமே இருக்கட்டும். நாங்கள் அவர்களைத் தடுக்கவில்லை. ஆனால், வடநாட்டால் நாம் சீரழிக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கை இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் திராவிடர் என்கிறோம்; அதனால், இந்நாட்டைத் திராவிடம் என்கிறோம். இப்படிச் சொல்லிச் சொல்லி உள்ளத்தில் பதிந்துவிட்டால் இது ஒரு தேசீயமாகிறது.

ஒரு கிண்ணத்தில் சந்தனம் இருக்கிறது ; அதை எடுப்பதற்கு கையும் இருக்கிறது; பூசிக் கொள்ள மார்பும் இருக்கிறது. அதை எடுத்துப் பூசிக் கொண்டால்தான் மணக்கும். கிண்ணத்தின் அருகில் அமர்ந்து கொண்டு வா வா என்றால் சந்தனம் தானே வந்தா மார்பில் ஏறும்? எடுத்துப் பூசிக் கொள்ளாமல், ‘சந்தனம் வரவில்லையே எதைப் பூசிக்கொள்வது?’ என்றால் அதற்கு நான் என்ன செய்ய?

அதைப் போல முயற்சி செய்யாமல் எப்படித் திராவிட நாடு கிட்டும்?

காமராசர் இப்போது கேட்கக்கூடும் “படித்தவர்களே திராவிட நாடு வேண்டாம் என்கிறார்களே” என்று! இதற்கும் என்னால் பதில் சொல்ல முடியும். படித்தவர்கள் வேண்டாம் என்று சொல்லும் போதே, நாங்கள் திராவிடநாடு கேட்கிறோம் என்றால் படிக்காதவர் சொல்வதை எப்படி நம்புவது?

இதில் படித்தவரா படிக்காதவரா என்பதல்ல பிரச்சனை; உண்மையை உணர்ந்தவரா இல்லையா என்பதே பிரச்சனையாகும்.

குருநாதர் கூறியதையே ‘மாயை’ என்பதா?

‘திராவிட உத்கல வங்கா’ என்று இரவீந்திரநாத் தாகூர் பாடிய பாடலைப் பாடித்தான் கொடியேற்ற வேண்டும் என்று அரசாங்க விதி இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு விழா நிகழ்ச்சியிலும் இந்தப் பாடலைப் பாடுகிறார்கள். இத்தனை ஆண்டுக்காலம் இந்தப் பாடலைப் பாடியும் ‘திராவிடம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள். இந்தப் பாட்டை நாள்தோறும் பாடுபவர் கள், அதிகமாகச் சம்பளம் வாங்காத பள்ளி ஆசிரியர்களும், பள்ளிப் பிள்ளை களும்தான்.

‘ஜனகண மன’ என்று தொடங்கும் இந்தப் பாடல், எந்த மொழி என்பதே பலருக்குத் தெரியாது. பலபேர் அதை, இந்திமொழி என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது இந்தியல்ல; வங்காள மொழியாகும்.

‘வங்கத்தில்’ பிறந்து, உலகம் மதிக்கத்தக்க மேதையாக விளங்கிய இரவீந்தரநாத் தாகூர், அறிவில்லாமல் இப்படிப் பாடவில்லை. ஒவ்வொரு நாடாகப் பிரித்துப் பிரித்துப் பாடினார். சிந்து நதி பாயும் நாட்டை சிந்து என்றும், கங்கை நதி பாயும் நாட்டை கங்கா என்றும், யமுனை நதி பாயும் நாட்டை யமுனா என்றும் தமது தாயகத்தை வங்கம் என்றும் உ.பி., பிகார், ஒரிசா முதலிய மாநிலங்கள் உள்ள பகுதியை உத்கல் என்றும் குறிப்பிட்டுப் பாடினார். ஆனால், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் என்று பாடவில்லை ; இந்த நான்கு பகுதிகளையும் சேர்த்து ‘திராவிடம்’ என்றுதான் பாடினார். ஏன் இப்படிச் சொன்னார்? விவரம் தெரியாததால் சொன்னாரா?

பத்து நாட்களுக்கு முன்புதான் நாடெங்கும் தாகூருக்கு விழா கொண்டாடினார்கள். அவரைத் தங்கள் குருநாதர் என்று ஒரு நாள் பேசுவது ; பிறகு அவர் சொன்ன திராவிடம் ‘மாயை’ என்பதா? எங்கே திராவிடம் என்றா கேட்பது?

உன்னுதிரத்தே உதித்தெழுந்து என்றனரே அவர்கள்!

ஏன் அவர் தமிழ், தெலுங்கு என்று பிரித்துச் சொல்லாமல் திராவிடம் என்றார்.

‘கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவமும் உன்னுதிரத்தில் உதித்தெழுந்து...’ என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பாடினார். சுந்தரம் பிள்ளையும் கவிஞர் பரம்பரையாகையால், அவர் பாடியதை அறிந்து தாகூரும் பாடினார்.

சிற்பங்களும் கூறுகின்றன திராவிடக் கலாச்சாரம்

‘தாகூர் கல்லறைக்கு எங்கே போவது அதற்கு எங்களுக்கு நேரமில்லை’ என்று சொல்லுவீர்களேயானால் பத்து ரூபாய் செலவு செய்யக் கூடியவர் களுக்கு நான் இன்னொரு யோசனை கூறுகிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் மாமல்லப்புரத்திற்கு அரசாங்கம் பஸ் விடுகிறது; அதில் ஒரு நாளைக்கு ஏறிப் போய்ப் பாருங்கள். மாமல்லபுர சிற்பங்களுக்கு அரசாங்கமே விளக்கம் தந்திருக்கிறது. அந்த விளக்கங்களிலெல்லாம் ‘திராவிடக் கலாச்சாரம்’ (Dravidian Culture) என்றும் ‘சிற்பக்கலை’(Dravidian Architeture)  என்றும் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதேபோல் ஆந்திரத்தில் உள்ள கோபுரமானாலும், கருநாடகத்திலுள்ள மண்டபமானாலும் அவைகளிலெல்லாம் திராவிடக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவை என்றுதான் குறிப்பிடுவார்கள்.

‘அவ்வளவு தொலைவு போக முடியாதே’ என்றால், இன்னொரு யோசனை சொல்கிறேன். திராவிடம் கிடையாது என்பவர்களே கல்லிலே ‘திராவிடம்’ என்று பொறித்து வைத்திருப்பதைக் காணலாம். ஒரு எட்டணா செலவு செய்து கொண்டு திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் செல்லுங்கள். அங்கேயுள்ள ‘பிரசிடென்சி கல்லூரி’ எதிரில் டாக்டர் உ.வே.சாமிநாத (அய்யர்) சிலை இருக்கிறது. அதைப் பாருங்கள் - எங்கே பெரியார் கோபித்துக் கொள்வாரோ என்ற பயம் உங்களுக்கு வேண்டாம். ஏனென்றால் செத்துப் போன ‘அய்யர்’களிடத்தில் பெரியாருக்குக் கோபம் கிடையாது - அந்தச் சிலைக்கு அடியில் ‘திராவிடக் கலாநிதி’ என்று கல்வெட்டிலே பொறித்திருக்கிறார்கள்.

இதுவும் வேண்டாமென்றால் அப்படியே அங்குள்ள பல்கலைக் கழகத்துக்குள் சென்று, டாக்டர் ஏ. இலட்சுமணிசாமி அவர்களைப் பார்த்து, ‘தமிழ், தெலுங்கு, மலையளம், கன்னடம் ஆகிய மொழிகளின் துறைக்கு என்னபெயரிட்டிருக்கிறீர்கள்?’ என்று கேளுங்கள். அதற்கு அவர், ‘Department of Dravidian Languages’என்று பதிலளிப்பார்.

வேற்றுமைகள் உண்டு- விளக்கங்கள் - காணீர் !

அய்ந்தாறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில் தலைமை வகித்த அரியக்குடி இராமாநுசம் அய்யங்கார் சொன்னார் ‡ ‘தென்னாட்டு இசைதான் கர்நாடக இசை ; கர்நாடக இசைதான் தமிழ்நாட்டு இசையும்’ என்று. தமிழ் இசை உந்திக்கமலத்திலிருந்து எழுவது ; வடநாட்டு இசை தொண்டைக்குக் கீழே இறங்காது! வடநாட்டு இசையைக் கேட்டவுடன் பாடமுடியும் ‡ தென்னாட்டு இசை பாடலாம் போலத் தோன்றும். ஆனால், எளிதில் பாட முடியாது. வடநாட்டு இசைக்கு சுர பேதங்கள் அவ்வளவாகக் கிடையாது. அதுவும் பாதி மூக்கை அடைத்துக் கொண்டு பாட வேண்டும்.

இப்படி சங்கீதத்தில் மட்டும் அல்ல - வைத்தியத்திலும் வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் வேற்றுமை இருக்கிறது. இங்குள்ள வைத்தியம் சித்த வைத்தியம் ; வடநாட்டு வைத்தியம் ஆயுர்வேத வைத்தியம் என்பதாகும்.

வடக்கேயிருந்து வீசும் காற்று வாடை என்றும், தெற்கேயிருந்து வீசும் காற்று தென்னல் என்றும் பெயர் பெறும்.

இலக்கியம் தெரியவில்லை எனில் இப்படிச் சொல்வதா?

அந்தக் காலத்தில் உண்ணாதிருந்து உயிர்விடுவது - அதாவது சாவதற்காகவே உண்ணாவிரதமிருப்பது ஒரு பழக்கமாக இருந்தது. அப்படி உண்ணாவிரதமிருப்பவர்கள் வடக்கு நோக்கி இருந்து சாவார்கள். அப்படிச் சாவதற்காக உண்ணாவிரதத்தை ‘வடக்கிருத்தல்’ என்றால் சொத்துப் போவது என்று பொருள்.

இப்பொழுது ‘வடநாடு நரகலோகமும் அல்ல, அங்கே எமகிங்கரரு மில்லை’ என்பவர்கள் பழந்தமிழ் இலக்கியம் தெரியாததால் அப்படிச் சொல்கிறார்கள்.

இப்பொழுதுகூட நமது வீடுகளில் உள்ள பெரியவர்கள், ‘வடக்கே தலை வைத்துப் படுக்காதே’ என்கிறார்கள். ஏன் என்று கேட்டால் காரணம் சொல்லத் தெரியாது. இந்தப் பழமொழி நெடுங்காலமாக வழங்கிவருகிறது. வடக்கே ஏதோ ஒரு கூட்டம் இருக்கிறது ; அது நமது தலையைத் தடவிவிடும் என்பதுதான் இந்தப் பழமொழி ஏற்படக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.

படித்துப் பாருங்கள் விளக்கம் கிடைக்கும்!

‘அகில இந்தியாவின் முடிசூடா மன்னர்’ என்று புகழப்படுகிறாரே பண்டித ஜவஹர்லால் நேரு ‡ அவர் சிறையிலிருந்த போது, தம் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் விந்திய மலைக்குத் தெற்கே இருப்பதைத் ‘திராவிடம்’ என்றும் வடக்கே இருப்பதை ‘ஆரிய வர்த்தம்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தில் தெற்கே இருப்பவர்கள் திராவிடர்கள் என்றும் வடக்கே இருப்பவர்கள் ஆரியர் என்றும் இந்த இருசாராரும் கலந்திருந்த போதிலும், தென்னாட்டில் 100 க்கு 90 பேர் திராவிடக் கலாச்சாரத்தையே இப்போதும் பின்பற்றி வருகிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் காங்கிரசுப் படிப்பகங்களில் இருக்குமானால் படிக்கும் பழக்கமுள்ள காங்கிரசுக்காரர்கள் வாங்கிப் படித்துப் பார்க்கலாம்.

அவர்களை விட நான் ஆற்றல் பெற்றவனல்ல!

அமைச்சர் சி. சுப்பிரமணியம் டில்லியிலே திராவிடத்துக்காகவும் வாதாடினேன் என்று பேசியது அவர் மனம் மாறியதால் அல்ல ; நான் அழகாகப் பேசியதாலும் அல்ல ; அழகாகப் பேசுவதற்கு என்றால் நாம் சட்ட மன்றத்திற்குப் போகவும் தேவையில்லை.

சிறந்த பேச்சாளர் தேவை என்றால் - ஏ. இராமசாமி (முதலியார்) இருக்கிறார் ; கல்வித் துறையில் வல்லுநர் தேவை என்றால், ஏ.லட்சுமண சாமி இருக்கிறார் ; இன்னும் சர். சி.பி.இராமசாமி, இராசகோபாலாச்சாரி போன்றவர்களெல்லாம் இருக்கிறார்கள் ; எப்படிப்பட்ட எதிர்ப்புக்கும் அஞ்சாது, காரியத்தில் வெற்றி பெறக் கூடியவரான என்னுடைய ஒரே தலைவர் பெரியார் இராமசாமி இருக்கிறார்-

இப்படிப்பட்டவர்களையயல்லாம் விட நான் பெரிய ஆற்றல் பெற்றவனல்ல.

சென்றவர்களைக் கேட்டோம் சொன்னது இதுதான்!

ஒரு சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் நடந்த ‘தேசீய அபிவிருத்திக் குழுக்’ கூட்டத்திற்கு நம் நிதி அமைச்சர் சென்றுவந்தார். ‘தேசீய அபிவிருத்துக் குழு’ என்று அதற்குப் பெயர் இருப்பதே, இன்னும் தேசீயம் வளரவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகிறது. தேசீயம் உண்மையில் இருக்குமானால், அதற்கு அபிவிருத்தி தேவையில்லை! ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச் சரும் சென்று, ‘எங்கள் மாநிலத்துக்கு அந்தத் திட்டம் வேண்டும், இந்தத் திட்டம் வேண்டும்’ என்றெல்லாம் கேட்பார்கள் ; விவாதம் நடைபெற்ற பிறகு அக்குழு இறுதியாக, எதைச் செய்வது என்று முடிவு செய்யும்.

அந்தத் தடவை, திரு. சுப்பிரமணியம் டெல்லிக்குச் சென்று திரும்பியதும், நாங்கள் அவரைப் பார்த்து, ‘டெல்லிக்குச் சென்றீர்களே, என்ன கொண்டு வந்தீர்கள்?’ என்று கேட்டோம். கொத்தவல்சாவடிக்குப் போனால் வாழைப் பழமாவது வாங்கி வருவார்கள் ; டெல்லிக்குச் சென்றீர்களே, அங்கிருந்து வாங்கி வந்ததுதான் என்ன? எதைக் காட்டப் போகிறீர்கள்? கொசு கடித்த தழும்பைக் காட்டப் போகிறீர்களா? நாம் கேட்ட திட்டங்களில் கொடுத்தது போக, கிழித்துப்போட்டதைக் காட்டப் போகிறீர்களா?’ என்று கேட்டோம்.

அதற்கு அவர், ‘நான் டெல்லியிலே வாதாடினேன். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் திராவிடத்துக்காகவும் வாதாடினேன் ; இது அண்ணா துரைக்குச் திருப்தியாக இருக்கும் என்று கருதுகிறேன்’ என்று பதில் சென்னார்.

‘அய்ந்தாண்டுத் திட்டத்தில் தென்னாட்டுக்கே ஒதுக்க வேண்டிய திட்டங்களை மொத்தமாக ஒதுக்கிவிடுங்கள். அதன்பிறகு தென்னாட்டிலுள்ள நாங்களே எந்த மாநிலத்துக்கு என்னென்ன திட்டங்கள் என்பதைப் பிரித்துக் கொள்கி றோம் என்று டெல்லியில் வாதாடினேன்’ என்று அவர் சொன்னார்.

தேன் சொட்டப் பேசியவர் தெருக்கோடியில் மாறினார்!

மற்றொரு முறை, நிதி அமைச்சர்  அவர்கள், கிண்டியில் ஏற்படுத்தப்பட விருக்கும் உயர் தரப் பொறியியல் கல்வி நிலையம் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில் ‘இந்தக் கல்வி நிலையம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, திராவிடத்துக்கும் உதவும் என்று கூறி, இப்படிச் சொல்வதுதான் அண்ணா துரைக்கு திருப்தி ஏற்படலாம் என்று நினைக்கிறேன்!’ என்றார்.

இப்படி சட்டசபைக்குள் என் நாக்கில் தேனைத் தடவி விட்டு, தெருக் கோடியில் பேசுகையில் ‘ஏது திராவிடம்’ என்றால், என்ன பொருள்?

தேவையான மாறுதல் எவ்வாறு இருப்பது?

நாம் சொல்லும் திராவிடம் வரலாற்றிலே இருக்கிறது ; கல்வெட்டிலே இருக்கிறது; சிலர் மாறிவிட்டார்களே என்றால், அதற்காக நாம் பொறுப்பாளி கள் அல்லர்.

சாத்துக்குடியின் தோல் பச்சையாக இருந்தாலும் உள்ளே இருக்கும் சுளை இனிக்கும்; வில்வப் பழத்தின் மேல்புறம் செக்கச் செவேலென்று இருந்தாலும் உள்ளே இருப்பதைத் தின்ன முடியாது. இதை நான் சொல்லுவதால் யாரையும் கேவலப்படுத்துவதாகக் கருத வேண்டாம்.

மாறுதல் தேவைதான் என்றாலும், அந்த மாறுதல் நல்ல மாறுதலாக இருக்க வேண்டும். பால் மோராக மாறுவது நல்ல மாறுதல் ; மோர் காடியாக மாறுவது நல்ல மாறுதலாகது. குழந்தை பெரியவனாக மாறுவது நல்லது; நல்ல மனிதன் கூனனாக மாறுவது நல்லதல்ல!

துச்சமாகக் கருதினாரே!

ஜனாப் ஜின்னா முதலில் முஸ்லிம் சமுதாய நலனுக்காக 14 கோரிக்கை களைத் தந்தார். முஸ்லிம் சமுதாயத்துக்கு சட்டமன்றத்தில் தனி இடம், உருது மொழிக்குப் பாதுகாப்பு முதலிய கோரிக்கைகள் அவற்றில் இருந்தன. ‘இதைக் கேட்க நீ யார்?’ என்று காங்கிரசுக் கட்சியினர் கேட்டனர்; அதற்கு ‘நான் முஸ்லிம்களின் தலைவன்’ என்றார் ஜின்னா. அதற்குக் காங்கிரசார், ‘ஓகோ, நீயா தலைவன்? அபுல் கலாம் ஆசாத், முஹம்மது அலி, ரபி அகமத் கித்வாய், ­வுகத் அலி ஆகியவர்களெல்லாம் இருக்கிறார்களே?’ என்று கேட்டனர் ; ‘அவர்களையயல்லாம் நான் துச்சமாகக் கருதுகிறேன்’ என்றார் ஜின்னா.

தேசிய முஸ்லிம்கள் தமது திட்டத்தை ஏற்கவில்லை என்பதால் அவர் ‡திராவிட நாடு வேண்டாம்; தமிழ் நாடு மட்டும் கொடு என்று இங்கு கேட்பவர் களைப் போல ‡ தனது இலட்சியத்தைச் சுருக்கிக் கொள்ளவில்லை ; ‘நாட்டுப் பிரிவினையே வேண்டாம். பிரிவினையை ஒப்புக்கொண்டால் போதும்’ என்றும் கூறவில்லை. தனது கோரிக்கைகளின் எண்ணிக்கையை 14 இலிருந்து 31 ஆக உயர்த்தினார் ; அதன் பிறகு, ‘கூட்டு மந்திரிசபை உண்டா?’ என்று கேட்டார்! அடுத்து, ‘நாட்டைப் பிரித்துக் கொடு’ என்று கேட்டார் ; பிரித்தார்கள்.
அந்தப் பொறுமை நமக்கு வேண்டாமா?

மார்கழி மாதத்தில் குடுகுடுப்பாண்டிகள் நாள்தோறும் அதிகாலையில் வந்து ‘நல்லகாலம் பிறக்குது ; நல்ல காலம் பிறக்குது’ என்று சொல்லிக் கொண்டு செல்வார்கள். ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஒன்றும் போடவில்லை யயன்றாலும், ‘மாதம் முடிந்த பிறகாவது ஏதேனும் போடமாட்டார்களா’ என்று எதிர்பார்த்து, மாதம் முழுவதும் பொறுமையாக வந்து செல்கிறான் ; மாதக் கடைசியில் அவனுக்கு ஏதேனும் கிடைக்கும்.

குடுகுடுப்பாண்டிக்கு இருக்கும் பொறுமை கூட அரசியலில் வேண்டாமா? நாம் என்ன 8 அடி உயரம் 34 அங்குல மார்பு படைத்த பகவத் சிங் பரம்பரையா? நாம் பாடவேண்டிய பாட்டைப் பாடிவிட்டோமா? கொடுக்க வேண்டிய விலையைக் கொடுத்துவிட்டோமா? நீட்ட வேண்டிய தியாகப் பட்டியலை நீட்டிவிட்டோமா? இன்னும் நீள வேண்டிய தியாகப் பட்டியல் எவ்வளவோ இருக்கிறது!

( அறிஞர் அண்ணா அவர்கள் 4.6.1961 அன்று சென்னை கொத்தவால் சாவடியில் ஆற்றிய உரை இது)
- முத்துச்செல்வன் முகநூல் பதிவு, 7.6.20

திங்கள், 1 ஜூன், 2020

ஒற்றைப் பத்தி - ‘ஆண் - பெண்' பெரியார்!


ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் வல்லுநர் கார்டிலியா ஃபைன் என்பவர் ‘‘பாலினம்பற்றிய பொய் நம் பிக்கை'' எனும் நூலை எழுதியுள்ளார்! ஆண் - பெண் ஆகியோரிடையே உள்ள வேற்றுமைகளுக்குக் காரணம் அவர்களை வளர்க்கும் முறை தான் என்றும், பிறப்பின் இயல்பு அல்லவென்றும் அந் நூலில் விளக்கப்பட்டுள்ளது.
ஆண் - பெண்ணுக்கு இடையில் பெரும் அளவிலான நரம்புச் செயல்பாட்டு வேறு பாடுகள் மட்டுமே இருக்கலாம் என்றும் அந்நூல் கூறுகிறது.
இதே கருத்தை சிகாகோ மருத்துவப் பள்ளியில் உள்ள விசி எலியட் என்பவரும் தெரிவிக்கிறார். ‘அறிவு வேற்று மையைக் குழந்தைகள் முன் னோர்கள் அல்லது பெற்றோர் களிடம் இருந்து பெறுவ தில்லை. அறிவை அவர்கள் வளர்ப்பிலேயே பெறுகிறார் கள், கற்கிறார்கள்.
ஒரு சிறுவன் அல்லது ஒரு சிறுமி எவ்வாறு வளரவேண் டும் என எதிர்பார்த்து நாம் வளர்க்கிறோமோ அதற்குத்தக அவர்கள் உருவாகிறார்கள். ஆம், சிறுவர் - சிறுமியர், ஆண்கள் - பெண்கள் வேறு பட்டவர்கள். ஆனால்,  இந்த வேற்றுமைகளில் மிகப்பெரும் பாலானவை மிகக் குறைந்த அளவானவை.
‘ஆண்கள் செவ்வாய்க் (மார்ஸ்) கோளில் இருந்து வந்தவர்கள்; பெண்கள் வெள்ளி (வீனஸ்) கோளில் இருந்து வந்தவர்கள் எனும் அளவிற்கு அந்த வேற்றுமை கள் இல்லை' என்கிறார் விசி எலியட்.
இவ்வளவும் வெளிவந்தது ‘விடுதலை' ஏட்டில் அல்ல - ஓர் ஆங்கில நாளேட்டில்.
இதில் அடுத்துவரும் கடைசிப் பத்திதான் முக்கியம்.
அது இதோ:
Here we must recollect what Periyar said that the Male and Female Children should not be brought up in different ways considering the small differences found between them, but they should be brought up in same manner providing same food, dress, education, sports games and work to both of them.
‘The Times of India', 17.8.2010
உடல் உறுப்புகளில் உள்ள ஒன்றிரண்டு வேற்றுமை களைக் கொண்டு ஆண் - பெண் குழந்தைகளை வெவ் வேறு வகையில் வளர்க்கக் கூடாது என்றும், ஒரே வகை யான உணவு, உடை, கல்வி, விளையாட்டு, வேலை முத லியவற்றை அவர்கள் பெற வேண்டும் என்று பெரியார் ஈ.வெ.ரா. வற்புறுத்தியதை நினைவு கூர்க என்கிறது அந்த ஆங்கில ஏடு.
‘‘பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்று அழைக்காமல், ஆண் என்றே அழைக்கவேண்டும் - உடை களை ஆண்களைப் போலவே கட்டுவித்தல் வேண்டும். ஆணா - பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாத மாதி ரியில் தயாரிக்கவேண்டும்.''
- தந்தை பெரியார்
‘குடிஅரசு', 15.9.1946)
- மயிலாடன்