பக்கங்கள்

சனி, 16 பிப்ரவரி, 2019

பார்ப்பானுக்கே தீட்டுக் கழிக்கும் பழங்குடி மக்கள்!ஆரிய பார்ப்பனர்கள் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று கூறி மற்றவர்களுக்குத் தீட்டு உண்டு என்று கூறுவது வழக்கம்.

ஆனால், தங்கள் வீட்டுக்குள் பார்ப்பான் வந்தால், தீட்டுப்பட்டுவிட்டதாகக் கருதுகின்றனர் குறிச்சான் என்ற பழங்குடி மக்கள். பார்ப்பான் தங்கள் வீட்டுக்குள் வந்து சென்றால், தீட்டு போக்குவதற்காக, பார்ப்பான் அமர்ந்த இடத்தை பசுவின் சாணத்தால் மெழுகும் வழக்கத்தைக் குறிச்சான் மக்கள் கொண்டுள்ளனர். இவர்கள் நீலகிரி மற்றும் கேரள வயநாடு பகுதிகளில் வாழ்கின்றனர்.

-  உண்மை இதழ், 16-30.11.18

புதன், 6 பிப்ரவரி, 2019

திருப்பதி கோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான 3 தங்க வைடூரிய கிரீடம் கொள்ளை

திருப்பதி, பிப்.4 திருப்பதி ரயில் நிலையம் அருகே திருப்பதி தேவஸ் தானத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜூலு பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகிலேயே கோவில் உள்ளதால் உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள் அந்தக் கோவிலுக்குச் செல்வார்களாம்.

இதே கோவிலில் பிரம்மோற்சவ விழா மற்றும் திருவிழா காலங் களில் கடவுளர் சிலை வீதிஉலா நடைபெறும் போது ஏராளமான தங்க, வைர, வைடூரியம் நகைகள் அணிவித்து அலங்காரம் செய்வார்களாம்.

கடவுளர் சிலை வீதி உலா முடிந்த உடன் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து அறையில் பூட்டி வைக்கப்படும்.

பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தினமும் இரவு பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து கடவுளர் சிலை நகைகளை கணக்கெடுத்து சரிபார்ப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 9 மணியளவில் திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் கடவுளர் சிலை நகைகள் உள்ள அறையை திறந்து கணக்கெடுத்தனர். அப்போது சிலைக்கு அணிவிக்கும் 3 தங்க வைடூரிய கிரீடங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அறை முழுவதும் தேடிபார்த்தனர். எங்கும் கிரீடம் இல்லை. வெங்கடேசபெருமாள் கிரீடம் 528 கிராம், சிறீதேவி கிரீடம் 405 கிராம், பூதேவி கிரீடம் 415 கிராம் என மொத்தம் ஒரு கிலோ 351 கிராம் மற்றும் வைர, வைடூரியம் பதிக்கப்பட்ட கிரீடங்கள் என கூறப்படுகிறது. மொத்தம் 3 தங்க கிரீடமும் சேர்த்து 1348 கிராம் ஆகும். இந்த கிரீடத்தில் பழங்கால தங்க நகைகள், வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண தேவராயர் இந்த தங்க கிரீடங்களை கோவிலுக்கு வழங்கியுள்ளார். அப்போதைய மதிப்பு ரூ. ஒரு கோடி. தற்போது ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஞானபிரகாசம் திருப்பதி காவல்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அன்புராஜன் மற்றும் காவல் துறையினர் கோவிலுக்குச் சென்று நகை பாதுகாப்பு அறை மற்றும் கோவிலில் வைக்கப்பட்ட சி.சி.டிவி. 12 கேமரா பதிப்புகளை ஆய்வு செய்தனர்.  கல்யாண உற்சவத்தின் போது 3 தங்கக் கிரீடமும் இருந் துள்ளது.

காவல்துறையினரின் சோதனையில் கல்யாண உற்சவம் நடைபெறும் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டிவி. கேமரா கடந்த ஒரு மாதமாக பழுதாகி இருந்தது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் பிரதான அர்ச்சகர்கள் 3 பேரிடமும், கோவில் ஊழியர்கள் சிலரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-  விடுதலை நாளேடு, 4.2.19

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

ஒடிசாவில் ‘பில்லி சூனியம்’ மூடநம்பிக்கையால் விளைந்த கொடூரம்!தாயுடன் 4 குழந்தைகளும் கொல்லப்பட்ட கேவலம்


புவனேசுவரம், பிப்.1 ‘சூனி யக்காரர்கள்’ என கூறிக்கொண்டு நான்கு குழந்தைகளுடன் தாயை யும் கொலை செய்த கொடூரம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள் ளது. அக்கொலைகள் தொடர் பானவர்களை ஒடிசா மாநில காவல்துறையினர் தேடி வரு கின்றனர்.

இவ்வழக்கில் ஏற்கெ னவே ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் பலர் கொலை வழக்கில் தொடர்பிருக் கலாம் என்று காவல்துறையின் விசாரணை நடைபெற்று வரு கிறது. மான்கிரி முண்டா என்ற பெண் மற்றும் அவரது நான்கு குழந்தைகளின் உடல்கள், அவர் களின் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் 26.1.2019 அன்று கண்டெடுக்கப்பட்டது.

சூனியக்காரர்கள் எனும் மூடநம்பிக்கையால் வயதான வர்கள் உள்பட பெண்களை இலக்கு வைத்து தாக்குவது வட மாநிலங்களில் நடந்து வரு கிறது. மூத்த காவல்துறை அதிகாரி கவிதா ஜலான் இது பற்றி கூறுகையில், "கைது செய் யப்பட்ட முக்கிய குற்றவாளி தான் ஒரு "மந்திரவாதி" என்று கூறியுள்ளார்.

சுந்தர்காத் மாவட்டத்திலுள்ள பழங்குடியின குடியிருப்பில் வாழ்ந்த பெண் மான்கிரி முண் டாவும், அவரது குழந்தைகளும் அந்த கிராமத்திலுள்ள இன்னொ ரு குடும்பத்தின் மீது சூனியம் செய்துள்ளதாக கைதானவர் களில் ஒருவர் கூறியுள்ளார். 25.1.2019 அன்றிரவு மான்கிரி முண்டாவும், அவரது குழந்தை களும் தூங்கிக்கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளது. மான்கிரி முண்டாவுக்கு ஒரு வயது குழந்தை உள்பட நான்கு குழந்தைகள் உள்ளனர்.

மான்கிரி முண்டாவும், அவரது நான்கு குழந்தைகளும்  கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் வீட்டுக்கு அருகி லுள்ள கிணற்றுக்குள் இறந்து கிடந்தனர். உடல்களை அருகி லுள்ள கிணற்றில் வீசுவதற்கு முன்னால் மரக்கட்டையாலும், கோடரியாலும் அவர்களை வன் முறைக் கும்பல் தாக்கியுள்ளது.

பெண்களை சூனியக்காரிகள் என முத்திரை குத்துவது ஒடிசாவிலுள்ள பழங்குடியின சமூகங்களில் இன்னும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. இந்த கொலையில் ஈடுபட்டுள்ள பிறரையும் தேடி வருவதாகவும், அதிக கைதுகள் இருக்கும் என் றும் காவல்துறை தெரிவிக்கிறது.

"இத்தகைய மூட நம்பிக் கைகள் மீதான விழிப்புணர்வை கிராம மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்" என்று ஜலான் தெரிவித்திருக் கிறார். சூனியம் தடைசெய்யப் பட்டிருந்தாலும், சூனியத்தோடு தொடர்புடைய கொலைகள் ஒடிசாவில் அதிகரித்து வருகின் றன. சூனியக்காரர்களாக குற் றஞ்சாட்டப்பட்ட ஒரு குடும்பத் திலுள்ள மூன்று பேரை கடந்த ஆண்டு கொலை செய்த ஒன்பது பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இதே மாதிரியான காரணங் களால் அசாம் மற்றும் ஜார் கண்ட் மாநிலங்களில் பெண்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.

2017ஆம் ஆண்டு ஒடிசாவில் சூனியம் தொடர்பாக 99 வழக் குகள் காவல்துறையில் பதிவாகி யுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பதிவான 83 வழக்கு களைவிட இது அதிகமாகும்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் மூட நம்பிக் கைகள் உள்ளன  கணவனை இழந்த பெண்களின்  நிலம் மற்றும் சொத்துக்களைக் குறி வைத்தும் இதுபோன்ற தாக் குதல்களை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.

- விடுதலை நாளேடு, 1.2.19

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

‘அட ஆஞ்சநேயா!’ அர்ச்சகனைக்கூட காப்பாற்றும் சக்தியில்லையே!

ஆஞ்சநேயருக்கு மாலை போட்ட அர்ச்சகர் பரிதாப மரணம்
நாமக்கல், ஜன. 30- நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). அர்ச்சகரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி பொது மேலாளராகவும் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாட்களில் நாமக்கல் ஆஞ்ச நேயருக்கு பணிவிடை செய்ய வருவார். அந்த வகையில் குடியரசு தினத்தன்று வெங்கடேசன் ஆஞ்சநேயருக்கு பணி விடை செய்ய வந்தார்.

18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு அவர் சுமார் 8 அடி உயரத்தில் பலகையில் நின்றபடி மலர்மாலை அணிவித்துக் கொண்டு இருந்தார். பின்னர் அந்த பலகையில் பின்னோக்கி வந்த வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக பலகையில் இருந்து கீழே தவறி விழுந் தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரிதாப சாவு


இந்த நிலையில், வெங்கடேசனின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆன தால் மேல்சிகிச்சைக்காக அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் நள்ளிரவு இறந்தார்.

இது குறித்து நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன வெங்கடேசனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், அரவிந்த் (25) என்ற மக னும் உள்ளனர். அரவிந்த் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கோவில் கருவ றைக்குள் வெங்கடேசன் தவறி விழுந்த தால், நேற்று முன்தினம் ஆஞ்சநேயர் கோவில் முழுவதும் தூய்மை செய்யப் பட்டு, அர்ச்சகர்கள் மூலம் கலசங்கள் வைத்து பரிகார பூஜை செய்யப்பட்ட தாம்.

-  விடுதலை நாளேடு, 30.1.19

காந்தியார் படுகொலையும் பெரியாரின் எதிர்வினையும்

சு.குமாரதேவன்
இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் "தந்தை" என்று போற்றப்பட்ட காந்தியார் வி.டி. சாவர்க்கரால் மூளைச் சலவை செய்யப்பட்ட நாதுராம் வினாயக் கோட்சேவால் கொல்லப்பட்டார். அரசியலில் மதத்தைக் கலப்பது என்பது வாயகன்ற அகலப் பாத்திரத்தில் நிரப்பப்பட்டுள்ள பாலில் ஒரு சில துளிகள் விஷம் கலந்தால் மொத்த பாலும் விஷமாகி யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்பதை உலக மக்கள் குறிப்பாக இந்திய மக்கள் அறிந்துகொண்ட நாள் ஜனவரி 30 என்று சொன்னால் அது உண்மைக் கலப்பில்லாத ஒரு சொல்லாகும். "ராம ராஜ்யம்" தேவையென்று காந்தியார் சொன்ன உட் கருத்து வேறு, ஆனால் கோட்சே முதல் ராம் கோபாலன் வரை சொல்லும் ராமராஜ்யம் என்பது வேறு . இதை இன்று வரை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் அவர்களுக்குப் புரியவைப்பதுமான பணியை எந்த அரசியல் கட்சியையும், இயக்கத்தையும் விட திராவிடர் கழகம்தான் இன்று வரை புரிந்து கொண்டு காந்தியாரின் படுகொலைக்கு எதிர் வினையாக மதமும் அரசியலும் கலத்தல் கூடாது என்பதை அறிவுப் பூர்வமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

காந்தியார்  முகாமைப் பாராட்டினாரா?


இன்று நாம் பார்க்கும் தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிகைகளில் வரும் சில கட்டுரைகள் போன்றவற்றில் வலதுசாரி சிந்தனையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் ஏதோ பாகிஸ்தான் பிரிந்ததற்கு காந்தியார் தான் காரணம் என்பது போலவும், கோட்சேவை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் மறைமுகமாகவும், வெளிப்படை யாகவும் பேசியும் எழுதியும் வருகிறார்கள். நமக்கும் அடிக்கடி அதை கேட்பதினாலும், படிப்பதினாலும் அவை உண்மையாக இருக்குமோ என்கின்ற "கருத்து மயக்கம் " ஏற்படுவது இயல்பாகி சந்தேகமும் தோன்றும்.  காரர்கள் 1934ஆம் ஆண்டு காந்தியார்  முகாமிற்கு வந்தார் என்றும் அப்போது  ஸிஷிஷி-ன் பணிகளை பாராட்டினார் என்றும் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். அந்த பேச்சுக்கள் உண்மைதான் என்றாலும் உடனிருந்தே கொல்லும் வியாதி யாகத்தான் ஸிஷிஷி-யை காந்தியார் பார்த்தார் என்பதை 16.09.1947 அன்று காந்தியார்  உறுப்பினர்களிடையே பேசும் போது பொட்டில் அடித்தாற்போல் சில அறிவுரைகளை ஸிஷிஷி-க்கு சொன்னார். இந்துக்களிடையே ஒற்றுமை வளர்க் கும் எண்ணத்தை உருவாக்குவதாக சொல்லும்  ஸிஷிஷி தன் னுடைய பலத்தை மத நல்லிணக்கத்திற்காகவும் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் ஆகியவர்களின் ஒற்றுமைக்கு வழி வகை காணப்பயன்படுத்த வேண்டும் என்றும், சங்கத்தில் உறுப்பினர்கள் ஸிஷிஷி ஒழுங்காக நடந்துகொள்வதாக என்னால் உறுதி கூற முடியாது என்றும் சொன்ன காந்தியார்,  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுதல், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை பொய்யானவை என்று தங்களுடைய நடவடிக்கைகள் மூலம் ஸிஷிஷி நிரூபிக்கவேண்டும் என்றுக் கூறினார். மேற்படி கூட்ட முடிவில் கேள்விகள் கேட்கச் சொன்ன காந்தியார் அப்படி வந்த ஒரு கேள்விக்குப் பதில் கூறும் போது தீய செயல்கள் செய்பவர்களை கொன்றுவிட இந்து தர்மம் அனுமதிக்கிறதா? என்று கேட்க, தனிப்பட்ட யாரையும் தண்டிப்பது என்பது அரசாங்கத்தின் வேலையே தவிர தனிப்பட்ட நபர்களின் அல்லது மக்களின் வேலையல்ல என்று மேற்கண்ட கூட்டத்தில் ஆணித்தரமாக பதிலளித்தார். மேற்கண்ட கூட்டம் நடந்த காலம் என்பது இந்தியா - பாகிஸ் தான் என்று நாட்டு பிரிவினை நடந்து ஒருவருக்கொருவர் விரோதமாகவும், குரோதமாகவும் வெட்டிக்கொண்டும் கொலை செய்து கொண்டும் இருந்த காலம் அதிகபட்சமான இந்துக்கள் தரப்பில் மற்றவர்களை அரவணைக்கும் நோக்கம் பெருக வேண்டும் என்பதற்காக ஒருவருக்கொருவர் குரோதத்தை வளர்த்துக் கொண்டே சென்றால் அதற்கு முடி வில்லாமல் போய்விடும் என்பதும், பெரும்பான்மையினரான இந்துக்கள் சிறுபான்மையினரான மற்ற மத மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதும் காந்தியாரின் இறுதிக் கால நோக்கமாக இருந்தது.

காந்தியார் கொலையில் பங்கு பெற்றவர்கள்


ஆனால் காந்தியாரின் எண்ணத்திற்கு மாறாக இந்து மத வெறியர்கள் எங்கே காந்தியாரின் சொற்கள் மக்களை சென்றடைந்து ஒரு மத நல்லிணக்கம் உருவாகிவிடுமோ என்பதற்காகவும் அப்படி மத நல்லிணக்கம் உருவாகும் பட்சத்தில் தங்களின் சித்தாந்தமும் நோக்கமும் மக்களால் புறக்கணிக்கப்படும் என்ற அச்சத்தில் காந்தியைக் கொன்று விட முடிவு செய்திருந்தனர். அந்த முடிவுக்கு இந்து மத வெறியர்கள் தேர்ந்தெடுத்த கைகூலிகள்தான் வினாயக் கோட்சே, நாராயணன் ஆப்தே இவர்களை இயக்கும் மூளை வி டி. சாவர்க்கர். காந்தியார் படுகொலைக்கு எல்லா முமாக இருந்து உதவி செய்த நபர்கள் விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, டாக்டர்.பார்சுரே, சங்கர் கிஸ்தையா, திகம்பர் பாட்கே (அப்ரூவர்) கோபால் கோட்சே ஆகியோர் . காந்தியாரை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, டாக்டர் பார்ச்சுரே வாங்கித் தந்ததாகும். காந்தியார் கொலையில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு திகம்பர் பாட்கேவின் வாக்கு மூலம் பெரிதும் உதவியாக இருந்தது . தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு இந்த வழக்கிற்கு (காந்தியார் கொலை) யார் மூலகாரணமாக இருந்தார்கள் என்பதை நீதிமன்றத்தில் அஞ்சாமல் எடுத்துரைத்தார். அந்த அப்ரூவர் சாட்சியத்தில் தயாத்ராவ் (சாவர்க்கர்) காந்தியார் கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கோட்சேவும், ஆப்தேவும் சந்தித்தபோது ஆசீர்வாதம் வழங்கி எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொன்னதை தான் கேட்டதாகச் சொன்னார். ஆனாலும் கூட விசாரணை நீதிமன்றத்தால் அந்தமான் சிறை கைதியாக இருந்து ஆங்கிலேயரிடம் மண்டியிட்டு பல மன்னிப்பு கடிதம் எழுதித்தந்த சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார். இதில் இன்னொரு கொடுமை சாவர்க்கர் விடுதலையை எதிர்த்து அரசு மேல்முறையீடு எதுவும் செய்யவில்லை. இது மக்களுக்கு பலத்த சந்தேகங்களை உண்டாக்கியது. 15.11.1949 அன்று கோட்சேவும் ஆப்தேவும் தூக்கிலிடப்பட்டவுடன் எஞ்சிய குற்றவாளிகள் மூவர் மதன் லால் பா வா, கோபால் கோட்சே மற்றும் விஷ்ணு கார்க்கரே ஆகிய மூவரும் பதினான்கு ஆண்டுகள் சிறையிலிருந்து வெளிவந்தார்கள். வெளிவந்த மூவரில் இருவர் (விஷ்ணு கார்க்கரே மற்றும் கோபால் கோட்சே) தங்கள் செய்கை நியாயமானது என்று பல இடங்களில் கூட்டம் போட்டும், பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகளிலும் பேசிவந்தனர். தவளை தன் வாயால் கெடும்" என்பது போல தாங்கள் செய்த செயலுக்கு சாவர்க்கார் துணையாக இருந்தார் என பல இடங்களில் கூறியது மட்டுமல்லாமல் அவரை வெகுவாகப் பாராட்டி சிலாகித்துப் பேசிவந்தனர். பொதுமக்களும் காந்தியார் கொலை செய்தியில் மறைந் துள்ள உண்மைகள் வெளிவராமல் போய்விட்டன என்று பகிரங்கமாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர். சாவர்க்கரை விடுதலை செய்தது தவறு என்றும் அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் பேசினார்கள். ஆனால் 26.02.1962 அன்று சாவர்க்கர் இயற்கையாகவே மரணம் அடைந்தார். பின்பு இந்திரா அம்மையார் ஆட்சிக் காலத்தில் ஜீவன்லால் கபூர் என்கின்ற உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்துக் காந்தியார் கொலைக் கான உண்மை காரணம் ஆராயப்பட்டது. கிட்டத்தட்ட 407 ஆவணங்கள் மற்றும் 101 சாட்சிகள் ஆகியோரை பரிசீலித்தும், விசாரித்தும் காந்தியார் கொலையில் சாவர்க்கருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி அறிக்கையும் 1969ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பே சாவர்க்கார் மறைந்து விட்ட காரணத்தால் அவர்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாமல் போய்விட்டது.

பெரியார் காங்கிரசில் சேர்ந்து எப்படி?


தந்தை பெரியார் பொது வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டிருப்பதை அறிந்த டாக்டர்.வரதராஜுலு நாயுடு, ராஜ கோபாலச்சாரியார், திரு.வி.க. ஆகியோர் அவரை ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நேரத்தில் பார்த்து, பேசி காங்கிரசுக்கு அழைத்துவந்தார்கள். தந்தை பெரியாருக்கு காங்கிரஸின் தீண்டாமை ஒழிப்பு என்ற கொள்கை மிகவும் பிடித்திருந்தது. மேலும் தந்தை பெரியாருக்கு இயற்கை யாகவே ஜாதி மீது அபிமானம் இல்லாததால் தந்தை பெரியார் "காங்கிரஸ் ஜாதியை ஒழிக்கும்"  என்றும் அதுவும் "காந்தியார் ஜாதி ஒழிப்பிற்காக பாடுபடுவார்" என்றும் நம்பி காங்கிரஸில் சேர்ந்தார். காந்தியாரின் முரட்டு பக்தராக விளங்கிய தந்தை பெரியார் கிட்டத்தட்ட 29 பதவிகளை விட்டுவிலகி காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் விளைவாக முரட்டு கந்தை துணிகளை தோளில் சுமந்து தெருத் தெருவாக விற்றும், தனது குடும்ப உறுப்பினர்களை கதர் அணியச் செய்தார். காந்தியாரின் நிருமாண திட்டங்களில் பங்குபெற்று இரவும் பகலுமாக காங்கிரஸை வளர்க்க அரும்பாடுபட்டார். திரு.வி.க. வாழ்க்கை குறிப்புகள், கோவை அய்யா முத்துவின் நினைவுகள் மற்றும் அக்கால தலைவர்களின் சுய சரிதை களில் பெரியாரின் காங்கிரஸ் ஆதரவு எவ்வளவு வேகமாக இருந்தது என்பதை அறியலாம். கள்ளுக்கடை மறியலில் தனது குடும்ப பெண்களை நாகம்மையார் தங்கை கண் ணம்மாள்) பங்குபெறச் செய்து வெற்றி கண்ட பெருமை பெரியாரை மட்டுமே சாரும். ஆனால் காந்தியார் வர்ணா சிரமக் காவலராகவும், பார்ப்பனர்கள் சொல்வதை அப்படியே கேட்கும் நிலையில் இருந்ததற்காகவும், தீண்டாமை ஒழிப் பிற்கு காட்டும் அக்கறையை ஜாதி ஒழிப்பிற்கு காட்டவில்லை என்பதற்காகவும், மன வருத்தத்தில் இருந்தார் தந்தை பெரியார். அனைத்து ஜாதியினருக்கும் பிரதி நிதித்துவம் கொடுக்க வேண்டும் என்ற தனது தீர்மானம் நிறைவேறாமல் போய்விட்டதற்காக 1925-ல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட் டில் கட்சியில் இருந்து வெளியேறினார். அப்போதிலிருந்து "காங்கிரஸ் அழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும், மதம் அழிய வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும் மற்றும் பார்ப்பனர் ஒழிய வேண்டும்" என்கின்ற அய்ந்து முழக்கங்களை முன் வைத்து "சுய மரியாதை" இயக்கத்தைக் கட்டமைத்தார். ஆனாலும் காந்தியாரின் கதர் கொள்கையினை சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த சிறிது காலம் வரை தொடர்ந்தார். காந்தியார் கொள்கைகள் மீது தான் அவருக்கு மாறுபாடும், வெறுப்பும் இருந்ததே தவிர தனிப்பட்ட முறையில் காந்தியார் மேல் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் தந்தை பெரியார்.

காந்தியார் - பெரியார் சந்திப்பு


1927ஆம் ஆண்டு சர் ஆர்.கே.சண்முகம் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ) காந்தியாரை சந்தித்து பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது தமிழ் நாட்டில் பார்ப்பனர் , பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சி வேகமாக பரவியிருப்பதையும் அதற்கான காரணங்களையும் சுவைபட விளக்கிச் சொன்னார். இந்த செய்திகளை எல்லாம் எப்படி ஆதாரபூர்வமாக பேசுகிறீர்கள் என்று ஆர்.கே. எஸ்சிடம் காந்தியார் கேட்க எல்லாம் உங்கள் முன்னாள் சிஷ்யரான ஈ.வெ. ராமசாமியிடம் தெரிந்து கொண்டவைதான் என பதிலளிக்க, காந்தியாரோ நான் ஈ.வெ.ரா.வை பார்க்க வேண்டும் என்று சொன்னார். அதன்படி பெங்களூரில் முகாமிட்டு இருந்த காந்தியாரை முன்னாள் அமைச்சர் எஸ்.ராமநாதனுடன் சென்று பெரியார் சந்தித்தார். அப்போது பெரியார் காந்தியாரிடம் மூன்று செய்திகளை ஆழமாக வலியுறுத்தினார். அவை, காங்கிரஸ் ஒழிக்க பட வேண்டும், ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் அதற்கு இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டியது, பார்ப்பனர் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும், என்று வலியுறுத்தினார். அதற்கு காந்தியார் சொன்ன சமா தானங்கள் பெரியார் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. உத்தமமான பிராமணர்கள் ஏன் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என காந்தியார் வினவ பெரியார் அப்படி இந்தியாவில் யார் இருக்கிறார்கள் என திருப்பிக் கேட்டார். காந்தியார் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஏன் கோபால கிருஷ்ண கோகலே இருக்கிறாரே என்று சொல்ல மகாத்மா ஆன உங்களுக்கே இந்த பரந்த உலகத்தில் ஒருவர் மட்டுமே தெரியும் போது சாதாரண ஆத்மாவான எனக்கு எப்படி அவர் தெரிவார் என சொல்லி காந்தியாரை வாயடைக்கச் செய்தார். 1927-இல் இறுதியாக காந்தியாரிடம் பெரியார் சொன்ன கருத்து , இன்றைக்குப் பார்ப்பனர்களுக்கு தேவை என்னும் போது உங்களை தூக்கிவைத்துக் கொண்டாடு கிறார்கள், நாளை அவர்களுக்கு தேவை இல்லை என்றால் உங்களைக் கொலை செய்யக் கூட அஞ்சமாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு வந்தார். பின்னாளில் அதான் நடந்தது. பின்பு 1929ஆம் ஆண்டு பெரியார் தவிர்த்த சுய மரியாதை இயக்கத்தின் நிர்வாகிகள் .ராமநாதன், குத்தூசி குருசாமி, ஜீவானந்தம் போன்றோர் சென்று காந்தியாரை சந்தித்து சுய மரியாதை இயக்கக் கொள்கைகளை எடுத்துச் சொல்லிவிட்டு வந்தார்கள்.

தமிழ் நாட்டில் காந்தியார்


காந்தியாருக்கு தமிழ் நாட்டின் மேல் அதிகமான பிரியமுண்டு, குஜராத்தி குடியானவனை போல் தலைப்பாகை நீளமான ஜிப்பா அணிந்த காந்தியார் மதுரையில் விவசாயி களை பார்த்து மேல் சட்டை அணியாமல் வாழக் கற்றுக் கொண்டார். "மோ.க. காந்தி" என்று தமிழில் அவர் கையெழுத் துப் போடுவதற்க்கு உதவியாக இருந்தவர் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மன உறுதி, வலிமையையும் தில்லையாடி வள்ளியம்மையிடம் இருந்து பெற்றதாக பல இடங்களில் காந்தியார் சொல்லியுள்ளார். சமூக சீர்திருத்த எண்ணங்கள் அதிகம் தோன்றுவது தமிழ்நாட்டில் என்ப தையும் அவர் ஒத்துக் கொண்டார் என்பதை அ.ராமசாமி எழுதிய "தமிழ் நாட்டு காந்தி என்ற நூலில் அறிந்து கொள்ளலாம்.

பெரியாரின் காந்தியக் கொள்கை எதிர்ப்பு


எந்த அளவிற்கு தந்தை பெரியார் காந்தியாரை ஆதரித்தாரோ அதே அளவிற்கு சற்றும் குறையாமல் அவர் கொள்கைகளை விமர்சனம் செய்தார். காங்கிரஸ், ராட்டை, கதர், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றில் நேர் எதிரான கருத்துக்களை கொண்டிருந்தது மட்டுமில்லாமல் அதை கடுமையாக எதிர்தும் பிரச்சாரம் செய்துவந்தார். "பூனா ஒப்பந்தம்" ஏற்படுவதற்கு முன்பு டாக்டர் அம்பேத்கருக்கு ஆதரவாக நின்றார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. காந்தியாரின் நிர்மாண திட் டங்கள் குறிப்பாக ராமராஜ்யம், வர்ணாசிரம ஆதரவு நிலை ஆகியவற்றை பக்கம் பக்கமாக பெரியார் விமர்சித்து எழுதி வந்தார். 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தையும் காங்கிரஸின் அராஜக ப்போக்கையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பிரச்சாரம் செய்தார். காந்தியாராலும் அவரது கொள்கையாலும் நாடு முன்னேற்றம் அடையாது, அது பல நூற்றாண்டுகள் நம்மை பின்னுக்கு தள்ளிவிடும் என்றும் பெரியார் கூறினார். 1927 முதல் 1947 வரை காந்தியாரை விமர்சனம் செய்த தந்தை பெரியார் கோட்சேவால் காந்தியார் கொலை செய்ய பட்டவுடன் மிகுந்த துயரம் அடைந்து அதற்காக உளப்பூர்வமாக வருந்தினார்.

தன்னுடைய மனநிலை காந்தியார் கொலை நடந்த போது எவ்வாறு இருந்தது என்பதை அன்று கீழ்க்கண்டவாறு தந்தை பெரியார் பதிவு செய்கிறார்.

1927 அன்று தான் காந்தியா ரை பெங்களூருவில் சந்தித்த போது காந்தியாரை பார்ப்பனர்கள் கொலை செய்து விடுவார்கள் , என்று சொன்னது உறுதியாகிவிட்டதே என்று எண்ணி கலக்கமுற்ற பெரியார், காந்தியார் இறந்த போது வன்முறை பரவி விடக் கூடாது என்று மிகுந்த அக்கறை கொண்டார் . காந்தியாரை கொலை புரிந்த படுபாதக செயல் புரிந்த காவி கட்சியினர் காந்தியாரை ஒரு முஸ்லிம் நபர்தான் கொன்றுவிட்டார் என புரளியை பரவவிட்டனர் மேலும் திருப்பூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பள்ளப்பட்டி மற்றும் வாணியம்பாடி ஆகிய ஊர்களில் இருந்த முஸ்லிம் களின் உடைமைகளை கொள்ளையடித்தும், தீக்கிரையாக் கியும் அக்கிரமம் செய்தார்கள். இந்த வன்முறை தமிழகம் எங்கும் பரவி விட கூடாது என்ற எண்ணம் மனித நேயம் மிக்க தந்தை பெரியாரிடம் இருந்தது. எனவே பெரியார் கீழ்க்கண்டவாறு அறிக்கை வெளியிட்டார்.

"காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற சேதி யானது, எனக்குக் கேட்டதும் சிறிது கூட நம்ப முடியாத தாகவே இருந்தது . இது உண்மைதான் என்ற நிலை ஏற் பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்கு திரைமறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்க வேண்டும். அதுவும் காந்தியார் எந்த மக்களுக்கு ஆகப்பாடு பட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச்செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையேயாகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாக நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்.

மகாராஷ்டிராவும் தமிழ்நாடும்


காந்தியாரைக் கொன்றது ஒரு சித்பவன் பார்ப்பனர் என்று தெரிந்தவுடன் மகராஷ்ராவில் பல பார்ப்பனர் குடி யிருப்புகள் தாக்கப்பட்டன. பார்ப்பனர்களை காங்கிரஸில் சேர்க்கக் கூடாது என தீர்மானம் போட்டார்கள் ஆனால் பார்ப்பனர் எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்ற தமிழ் நாட்டில், தந்தை பெரியார் இயக்கம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அப்படி எந்தவிதமான வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது இல்லை. இது ஒன்றே தந்தை பெரியார் தனது இயக்கத்தை எவ்வாறு அறிவு இயக்கமாக மாற்றியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். தமிழ் நாட்டில் வன்முறை பரவக் கூடாது என்று நினைத்த தந்தை பெரியாரை கண்டுகொள்ளாமல் இருந்த வானொலி நிலையத்தார் தந்தை பெரியார் தங்கியிருந்த திருச்சிக்கே சென்று அவரது இரங்கல் உரையினை பதிவு செய்து 04.02.1948 அன்று ஒலி பரப் பினார்கள். இதன் மூலம் சமூகப் பதற்றம் தணிந்து தமிழ் நாட்டில் அமைதி நிலவியது. காவி கூட்டத்தினரின் கலவரத் திட்டம் பெரியாரின் ஒரு பேச்சால் தவிடு பொடியானது. தந்தை பெரியார் தன்னுடைய அறிக்கையில் காந்தியார் படுகொலையினை கடுமையாகக் கண்டித்து இந்த நாட்டிற்கு "காந்தி தேசம் அல்லது "காந்திஸ்தான் என பெயர் வைக்க வேண்டும் என கூறினார். கீழ்க்கண்டவாறு அவரது கருத்து அமைந்தது.

"காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம். அது நிரந்தரமானதாகவும், அதிசயமான பயனுள் ளதாகவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை.

1. இந்தியாவுக்கு ஹிந்துஸ்தான் என்கிற பெயருக்குப் பதிலாக காந்தி தேசம் அல்லது காந்திஸ்தான் என்ற பெயரிடலாம்.

2. இந்து மதம் என்ப தற்குப் பதிலாக காந்தி மதம் அல்லது காந்தினிசம் என்பதாக மாற்றப்படலாம்.

3. இந்துக்கள் என்பதற்குப் பதிலாக மெய்ஞானிகள் அல்லது சத்ஞானஜன் என்று பெயர் மாற்றப்படலாம்.

4. காந்தி மதக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள்தான் உண்டு. வர்ணாஸ்ரம தர்மமுறை அநுசரிக்கப்பட மாட்டாது ஞானமும் (அறிவும்) பக்ஷமும் என்பதான சன்மார்க்கங்களைக் கொண்டதாகும் என்பதாக ஏற்படுத்தி, கிருஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக காந்தி ஆண்டு என்று துவக்கலாம்."

காந்தியார் மறைவிற்கு தமிழ் நாடு முழுவதும் 29.02.1948 அன்று அனுதாப கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் , ஆடம்பர மற்றும் அதிக செலவு இல்லாமல், பேச்சாளர்கள் யாரும் பேசாமல், காந்தியார் கொலையை பற்றி மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி, அனைவரும் மவுன  அஞ்சலி செலுத்திவிட்டு கலைந்து சென்று விட வேண்டும் என்றும் பெரியார் கேட்டுக் கொண்டார். தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 18 வது மாநில மாநாட்டில் பெரியார் பேசும் போது "இருந்தவர் ஆரிய காந்தி, இறந்தவர் திராவிட காந்தி" என்று அவர் பேசிய பேச்சு 15.05.1948 மற்றும் 25.05.1948 அன்று வெளியான குடியரசு இதழில் பதிவு செய் யப்பட்டுள்ளது. மேற்படி பேச்சு கீழ்க்கண்டவாறு அமைந்தது.

"காந்தியார் உயிரோடிருந்தவரை அவருடைய போக் கைப் பெரும் அளவுக்குக் கண்டித்து வந்த எனக்கு, காந் தியார் மறைவுக்கு துக்கப்படவோ, அவரது மறைவுக்குப்பின் அவரைப் பற்றி புகழ்ந்து பேசவோ என்ன உரிமை யுண்டென்று சிலர் கேட்கலாம். சில காங்கிரஸ்காரர்களின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொள்ளவே நான் இவ் விதம் சூழ்ச்சி செய்வதாகவும் கருதியிருக்கலாம். ஆனால் தோழர்களே! இவை உண்மையல்ல காந்தியார் மறைவுக்கு ஆக எந்தக் காங்கிரஸ்காரர் துக்கப்பட்டார் ? அழுதார்...?

இருந்த காந்தியார், ஆரிய காந்தியார் ஆரியரால் உண்டாக்கப்பட்ட காந்தியார் , நம் எதிரிகளின் காந்தியார். ஆனால் இறந்த காந்தியார் நம் காந்தியார் ஆரியம் அழிந்து விடுமே என்று பயந்து ஆரியரால் கொல்லப்பட்டு கொலை யுண்ட காந்தியார். அதனால்தான் மற்றவர்களை விட நமக்கு தான் அவர் மறைவுக்காகத் துக்கப்படவும் உரிமையுண்டு என்றும் கூறிக்கொள்கிறோம்.

காந்தியார் மேலும் அவர் கொள்கைகள் மேலும் கடும் விமர்சனத்தை வைத்திருந்த தந்தை பெரியார் அவற்றை விமர்சனமாக மட்டுமே பார்த்தாரே தவிர தனிப்பட்ட ஒரு மனிதனுக்கு எதிரான ஒரு வெறுப்பாக அவர் பார்க்கவில்லை. இதுதான் தந்தை பெரியார் கொண்டிருந்த மனிதநேயம் ஆகும். சக மனிதனை, மதவெறி எப்பேற்பட்ட மனிதராக இருந்தாலும் கொன்றுவிடும் என்பதற்கு காந்தியார் ஒரு உதாரணம் என்றால் அப்படிபட்ட மதவெறியினை ஒழித்து நல்லிணக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துவது பெரியார் எனும் பெருநெறி என்று தாராளமாக நாம் சொல்லலாம்.

-  விடுதலை நாளேடு, 30.1.19