மழை பொழியவில்லை என்றால், கொடும்பாவி கட்டி இழுப்போமா, கோபால பஜனை செய்வோமா, என்று தான் புத்தி போகிறது. இது வெறும் ஏமாளிப்
புத்தி. இதிலேயே, எத்தரின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்தால்
மழை பெய்வதற்கு வருண ஜெபம் செய்வது என்று ஆரம்பிக் கிறார்கள். இப்படிப்பட்ட
விதமாகத்தான் நம்மவர்களின் சிந்தனை சென்று கொண்டிருக்கிறதேயொழிய, மேனாட்டு விஞ்ஞானிகள் போலவா, மழை இயற்கை நிகழ்ச்சிதான் என்றாலும், அதையே ஏதேனும் செயற்கை முறையால் நாம் உண்டாக்க
முடியாதா, என்று செல்கிறது. அவர்களின் சிந்தனை அந்தத்
துறையிலேயும் சென்று, இப்போது மழையை உண்டாக்கும் முறையையும் விஞ்ஞான
ரீதியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் - இனி இத்துறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள்
நடத்திய வண்ணம் இருக்கின்றனர்.
இங்கு வான மழை போலே, மேனி வண்ணம் கொண்டான் என்று பாடிக்கொண்டே
காலந்தள்ளுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஒரு ஊரில், மழை இல்லாமல் போகவே, அவ்வூர் புத்திசாலிகள், சூரியன் மீது கல்லை விட்டெறிந்தார்கள். மழை
வேண்டும் என்று, பயிர் வளரவில்லை எதிர்பார்த்தப்படி என்றால், விதையால் வந்த தவறா, உழவுமுறையால் வந்த தவறா, ஏதேனும் பூச்சி புழு அரிக்கிறதா, அல்லது மண்ணின் சத்தே கெட்டுவிட்டதா என்பன
போன்றவைகளிலே நம்மவர்களின் எண்ணம் போவதில்லை - பச்சையம்மனுக்கு பொங்கலிடுவது, அரசமரத்துக்கு மஞ்சள் பூசுவது என்று இப்படி
ஏதாவதொரு அர்த்தமற்ற விஷயத்தின் மீது தான் எண்ணம் போகிறது.
தமிழ்நாட்டுப் பிற்கால மன்னர்கள் பலர், மழை காலா காலத்திலே பொழியாமற் போனால் என்ன
செய்வதென்று, பயந்து மழையைச் பொழியச் செய்ய, வருண ஜெபம் செய்வதற்காகவே, அவர்களுக்கு மானியங்கள் - இனாம்கள் தரப்பட்டன.
தஞ்சை மாவட்டத்திலே, இப்படி வருண ஜெபம் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாம்கள், இன்றும் அந்தப் பரம்பரையினரிடம் உள்ளன
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)
எந்த அரசர்கள் பிற்போக்காளராயிருந்து வருண
ஜெபம் செய்தனர் என்று அண்ணா அவர்கள் குற்றசாட்டுகிறார் களோ, அதே அண்ணா பெயரைக் கட்சியில் தாங்கிய கட்சி - ஆட்சி அதே வருண
ஜெபத்தைச் செய்கிறது என்றால் அண்ணாவைப் புரிந்த அழகும் அவரை மதிக்கும் அழகும்
மிகப் பரிதாபமாகும்.
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் இந்த
ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்கள்
இயற்கையை நோக்கி வழிபாடு செய்வோரை படு கிண்டல் செய்து எழுதி இருக்கிறார்.
இயற்கையையோ அல்லது இயற்கைப் பொருட்களின் பண்புகளையோ வழிபாட்டுரையால் நாம்
மாற்றிவிட முடியுமா?
வழிபடுவதன் மூலம்
கலைகளை விரிவு படுத்துவதோ அல்லது அடக்கி வைக்கவோ நம்மால் ஆகுமா? பலியிடுவதன் மூலம் காற்றுகளின் திசையை மாற்றிட
நம்மால் இயலுமா? மண்டியிடுதல் நமக்குச் சொத்துகளைச் சேர்த்து
தருமா? வேண்டுதலைச் செய்வதன் மூலம் நாம் நோயைப் போக்கி
கொள்ள முடியுமா? சடங்கு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அறிவைப்
பெருக்கிக் கொள்ள இயலுமா? படையல் போடுவதன் மூலம் நன்மையையோ அல்லது
மதிப்பையோ நாம் பெற்றுவிடக் கூடுமா? (மதமும் மூட நம்பிக்கையும் பக்கம் 23)
இவ்வளவையும் எழுதிய நாவலர் இரா.நெடுஞ்செழியன்
தான் மாண்புமிகு நிதி அமைச்சராக இருக்கிறார். இந்த ஆட்சியில்தான் மழை பொழிவதற்காக
வழிபாடு நடத்தப்படுகிறது. அறிவிலும் இல்லை
அய்யா வழியுமில்லை
அண்ணா வழியுமில்லை
என்றாலும் இந்த ஆட்சியில் வருண ஜெபம் நடக்கிறது!
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)
அய்யா வழியுமில்லை
அண்ணா வழியுமில்லை
என்றாலும் இந்த ஆட்சியில் வருண ஜெபம் நடக்கிறது!
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)
-விடுதலை,24.4.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக