பக்கங்கள்

வியாழன், 23 ஜூலை, 2015

!கோதாவரி புஷ்கரம் விழா நெரிசலில் சிக்கி 27 பேர் பலி


மத மூட நம்பிக்கைகளினால் ஏற்படும் விபரீதங்கள் - இழப்புகள்

சென்னை, ஜூலை 14_ கடவுள் பக்தி, மத நம் பிக்கை, பூஜை புனஷ் காரத்தை நம்பி மக்கள் தம் இன்னுயிரையும், பொருள்களையும் இழந்து வருகின்றனர்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:
கோதாவரி புஷ்கரம் விழா நெரிசலில் சிக்கி 27 பேர் பலி
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இன்று (14.7.2014) கோதாவரி புஷ்கரம் விழா தொடங் கியது.
ராஜ முந்திரியில் ஆந் திர அரசு சார்பில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த கோதாவரி புஷ்கரம் விழாவை காஞ்சி சங்கா ராச்சாரியார் இன்று காலை புனித நீராடி தொடங்கி வைத்தாராம். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் புனித நீராடினாராம். அவரைத் தொடர்ந்து லட் சக்கணக்கான பக்தர்கள் கோதாவரியில் புனித நீராடினார்களாம். பக்தர் கள் குளிப்பதற்காக தனி யாக இடங்கள் ஒதுக்கப் பட்டிருந்தது.
ராஜ முந்திரியிலுள்ள கோட்டக்கும்மம் என்ற இடத்தில் கட்டுக்கடங்கா மல் பக்தர்கள் கூட்டம் இருந்தது. ஒரே நேரத்தில் அவர்கள் ஆற்றில் இறங் கியதால் நெரிசல் ஏற்பட் டது.
நெரிசலில் சிக்கி பலர் மயங்கி கீழே விழுந்தனர். கூட்டத்தில் மிதிபட்டு 27 பேர் பலியானார்கள். மேலும் 10-_க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். அவர்கள் ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிட மாக உள்ளது. சாவு எண் ணிக்கை மேலும் அதிகரிக் கக்கூடும் என அஞ்சப்படு கிறது.
விபத்து நடந்த கோட் டக்கும்மம் பகுதி ராஜ முந்திரி ரயில் நிலையம் அருகே உள்ளது. வெளி யூரில் இருந்து வந்த பய ணிகள் நேரடியாக அங்கு சென்றதால் லட்சக்கணக் கான பக்தர்கள் அங்கு திரண்டு விட்டனர்.
சூரிய உதயத்துக்கு முன் நீராட வேண்டும் என்ற எண்ணத்தில் அனை வரும் ஒட்டு மொத்தமாக நதியில் இறங்கியதால் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்துபற்றி தகவல் அறிந்ததும் ராஜமுந்திரி யில் முகாமிட்டு இருந்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தார்.

புஷ்கரம் விழாவில் பங்கேற்க பலர் வாகனங் களில் வந்தனர். ஆனால் அதனை நிறுத்துவதற்கு போதிய வசதி செய்யப் படவில்லை.
இதனால் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது. பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் தேங்கி நின் றன.
விபத்தில் 2 மகன்கள் பலி:
திதி கொடுத்து விட்டு திரும்பியபோது மற்றொரு விபத்தில் மகனையும் இழந்த சோகம்!
மதுரை செக்காலை மேட்டுத்தெருவைச் சேர்ந் தவர் ஜெயக்கொடி (வயது 50). இவருக்கு 3 மகன்கள். இதில் 2 பேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டனர்.
இதையடுத்து அவர் களுக்கு திதி கொடுப்ப தற்காக நேற்று மதுரையில் இருந்து ராமேசுவரத் துக்கு ஜெயக்கொடி உள் பட 6 பேர் வேனில் சென் றனர். பின்னர் அங்கி ருந்து வேனில் 6 பேரும் மதுரை திரும்பிக் கொண்டு இருந்தனர்.
வேன், பார்த்திபனூர் அருகே மரிச்சுக்கட்டி சாலையில் சென்றபோது மாடு ஒன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடியது.
இதில் நிலைதடுமாறிய வேன் எதிரே வந்த கார் மீது மோதி நொறுங்கியது. கார் சாலையில் கவிழ்ந் தது. இதில் ஜெயக்கொடி யின் மற்றொரு மகன் அரவிந்த்குமார்(18) படு காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.
வேனில் இருந்த மற்ற 5 பேர்களும் காயம் அடைந்தனர். கார் கவிழ்ந் ததில் அதில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந் தனர். உடனே படுகாயம் அடைந்த 8 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


விபத்து குறித்து தகவல் அறிந்த பார்த்திபனூர் காவல்துறையினர் விரைந்து சென்று அரவிந்த் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற் காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனை நரபலியிட முயற்சி
மந்திரவாதி கைது!
புதையல் எடுப்பதற்காக, மனநலம் பாதித்த சிறுவனை கடத்தி, நரபலியிட முயற்சித்த மாமியார், மருமகள், மந்திரவாதி உள்ளிட்ட அய்ந்து பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியை அடுத்த கோடாங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராசம்மாள், (60). இவரது மகன் ரவிக்குமார், (40), மருமகள் பானுமதி, 31. ரவிக்குமார் வீட்டில், அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை சேர்ந்த மந்திரவாதி, சத்யமூர்த்தி, (27), என்பவரின் அறிமுகம் கிடைத்தது. வீட்டில், அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதால், மனநிம்மதி இல்லை; வந்து சரி செய்யுங்கள் என, ரவிக்குமார் குடும்பத்தினர், மந்திரவாதியை அழைத்துள்ளனர்.
அங்கு வந்த மந்திரவாதி, 'இந்த வீட்டில் புதையல் இருக்கிறது; அவற்றை எடுத்தால், உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்' என தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களாக, புதையலை எடுக்க, தினமும் நள்ளிரவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. இதற்காக, வீட்டின் பின்புறம், ஆறு அடி ஆழத்தில் குழி வெட்டி, அதில் மந்திரவாதி இறங்கி பூஜை செய்து வந்துள்ளார். மந்திரவாதியுடன், தஞ்சை தாமஸ், (38), கரூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜேந்திரன் ஆகியோர் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், 'குழந்தை, கன்னிப்பெண், கர்ப்பிணிப் பெண்களை நரபலி கொடுத்தால், புதையல் கிடைத்துவிடும்' என, மந்திரவாதி தெரிவித்துள்ளார். அதன்படி, அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் முதல், குழந்தை, கன்னிப்பெண்கள் ஆகியோரை நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை, 9 மணிக்கு, ரவிக்குமார், ராசம்மாள், பானுமதி, மந்திரவாதி உள்ளிட்ட எட்டு பேர், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை நரபலி கொடுக்க கடத்த முயன்றுள்ளனர். அதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர் களை மடக்கி பிடித்து, அடி கொடுத்தனர்.
பொது மக்களிடம் இருந்து, ரவிக்குமார் உட்பட மூன்று பேர் தப்பினர்; மற்ற அய்ந்து பேரும் சிக்கினர். மந்திரவாதி, ராசம்மாள் உள்ளிட்ட அய்ந்து பேரை, காவல்துறையினரிடம் ஒப்படைக்க மறுத்து, பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். டி.எஸ்.பி., வந்தால் மட்டுமே ஒப்படைப்போம் என, தெரி வித்தனர். அய்ந்து மணி நேர போராட்டத்துக்கு பின், காவல்துறையினரிடம், ராசம்மாள், அவரது மருமகள் பானுமதி, மந்திரவாதி சத்யமூர்த்தி, கார் ஓட்டுநர் ராஜேந்திரன், தஞ்சை தாமஸ் ஆகிய அய்ந்து பேரையும் ஒப்படைத்தனர். பின், அய்வரையும், காவல்துறையினர் கைது செய்தனர்.
பணி முடிந்தும் திறக்கப்படாத நீர்த்தேக்க தொட்டிக்கு சிறப்புப் பூஜை, ஹோமமாம்
சென்னை ஆலந்தூர் பகுதியில் கட்டுமான பணி முடிந்தும் திறக்கப்படாத நீர்த்தேக்கத் தொட்டிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது. சென்னை மாநகராட்சி 165 ஆவது வார்டு, ஆலந்தூர் நிலமங்கை நகரில் மெட்ரோ வாட்டர் பகுதி அலுவலகம் மற்றும் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு  கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டட பணி நிறைவு பெற்றதை முன்னிட்டு கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நேற்று காலை நிலமங்கை நகரில் நடந்தது. நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் நரேஷ்குமார், மெட்ரோ வாட்டர் அதிகாரிகள், நிலமங்கை நகர் பொது நலச்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால், அலுவலகம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முதல்வர் திறந்து வைப்பதற்காக தேதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக