• Viduthalai
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்பு!
சென்னை,அக்.26- கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு செயல்முறை விளக்க நிகழ்ச்சி நேற்று (25.10.2022) மாலை 5.00 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் மற்றும் பகுத் தறிவாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது - கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது என்கிற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வண்ணம் நடைபெற்ற இந்நிகழ்வில் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங் கப்பட்டது. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, கிரகண மூடநம்பிக்கைகளை முறிய டிக்கின்ற இதுபோன்ற நிகழ்ச்சிகள்மூலம் பகுத் தறிவு, அறிவியல் மனப்பான்மை பரப்பப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
கழகத் துணைத் தலைவர் உரை
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையில்,
2022ஆம் ஆண்டிலும் கிரகண மூடநம்பிக் கையை முறியடித்திட இதுபோன்ற செயல் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. பத்திரி கைகள், தொலைக்காட்சிகள் கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது என்கிற மூடநம்பிக்கையை பரப்பி வருகின்றன.
சூரியன் நட்சத்திரம், சந்திரன் துணை கிரகம், பூமி முதன்மை கிரகம் என்று உள்ள நிலையில், அவர்கள் கூறுகின்ற கிரகங்கள் பட்டியலிலேயே பூமி இல்லை. பத்திரிகைகள் அறிவியல் உண்மையை எடுத்துரைக்காமல், உண்மைக்கு மாறான பொய்களை கட்டுக்கதைகளை கூறிவருகின்றன. கிரகண மூடநம்பிக்கையை முறியடித்திட 'விடுதலை' தவிர எந்த ஏடும் செய்திகள் வெளியிடவில்லை.
தந்தைபெரியார் சொன்ன 3 பேய்கள், 5 நோய்களில் பத்திரிகையும் உள்ளது. தந்தை பெரியார் சொன்னது இன்றும் அப்படியே உள்ளது. ராகு கேது என்கிற பாம்புகள் சந்திரனை விழுங்குகின்றன என்கிற மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டு உள்ளன. அறிவாளிகள் நாட்டில் குறைவாகத்தான் இருப்பார்கள். அவர்கள்தான் இங்கே வந்துள்ளார்கள். கிரகண நேரத்தில் உணவை உண்டு மூடநம்பிக்கையை முறியடிப்போம் என்றார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இதேபோன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கிரகண மூடநம்பிக்கை முறியடிக்கும் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில், இறையன்-திருமகள் பெயர்த்தியும், இசையின்பன், பசும்பொன் மகளும், பகலவனின் வாழ்விணையருமான சீர்த்தி நிறைமாத கர்ப் பிணியாக கிரகண மூடநம்பிக்கையை முறிய டிக்கும் செயல்முறை நிகழ்வில் துணிவுடன் பங்கேற்றார். அவரும் நேற்று நடைபெற்ற கிரகண மூடநம்பிக்கை முறியடிக்கும் செயல் முறை நிகழ்வில் கலந்துகொண்டதோடு, தன் மகன் மகிழனுடன் தானும் நலமுடன் இருப்பதை எடுத்துக்கூறினார்.
எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சுயமரியாதைச் சுடரொளி கோ.சொக்கலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்த எழிலரசி ஒன்பது மாத கர்ப்பிணியாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், குழந்தை பிறந்த பின்னரும் அதே மகிழ்ச்சியுடன் இருப்போம் என்றார்.
தோழர் சத்தியா பக்தி மிகுந்த குடும்பத்தில் இருந்து பகுத்தறிவுள்ள வாழ்விணையருடன் இணைந்ததால், தானும் துணிவுடன் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளதாகவும், கிரகணம் குறித்து எவ்வித அச்சமும் தனக்கு இல்லை என்றும் கூறினார். கர்ப்பிணிகள் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மேனாள் முதல்வர் ச.இராஜசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே..செ.கோபால், சி.வெற்றிசெல்வி, நூர்ஜகான், பூவை செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், செயலாளர் விடுதலை நகர் ஜெய ராமன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபன்னா, இளைஞரணி சோ.சுரேஷ், மாணவர் கழகம் பார்த்திபன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், கோவி.கோபால், மாணிக்கம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், பெரியார் நூலக வாசகர் வட்ட பொறுபபாளர்கள், புதுமை இலக்கிய தென்றல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
சூரியகிரகணம் உண்மையும், கட்டுக்கதைகளும்
சூரியகிரகணம் குறித்த மூடநம்பிக்கைளை முறியடிக்கும் நிகழ்ச்சி எனும் தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அன்னை மணியம்மையார் அரங்கில், ”சூரியகிரகணம் உண்மையும், கட்டுக் கதைகளும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு வானியல் அறிவியல் சங்கத்தின் மாநில ஆலோசகர் முனைவர் கு.இரவிக்குமார் படக்காட்சிகளுடன் கடந்த 2000 ஆண்டுகளாக சூரியகிரகணம் பற்றிய உலக அறிவியல், இந்திய துணைக்கண்டத்தில் நிலவிய அறிவியல், வைதீக மதம் அதற்கு ஏற்படுத்திய முட்டுக் கட்டைகள், அதனால் ஏற்பட்ட பின்னடைவு களை மிகவும் சுவையாக, பள்ளி மாணவர் களுக்கும் புரியும்படியாக விளக்கினார். முக்கியமாக பஞ்சாங்கமாக இருந்தாலும் சரி, வைதீகமாக இருந்தாலும் சரி 'What' என்பதற்கு பதில் சொல்லிவிடுவார்கள். அவர்கள் மட்டு மல்ல 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள்கூட சொல்லிவிடுவார்கள். அதாவது, இது என்ன (What) என்று கேட்டால், இது சூரியன், இது நிலா, இது பூமி என்று சொல்லிவிடுவார்கள். ஆனால்,, 'Why' என்று கேட்டால், அதற்கு அறிவியலால் மட்டும்தான் சொல்ல முடியும்.
பஞ்சாங்கமோ, மதங்களோ சொல்லாது. சொல்லவும் தெரியாது. காரணம், ஏன் என்று சொல்வதற்கு நீண்ட ஆய்வு தேவை! அதை அறிவியல்தான் நமக்கு தருகிறது.
ஆகவே நாம் அறிவியலைத்தான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கருத்தை முனைவர் கு.இரவிக்குமார் மாணவர்களுக்கு அழுத்தம், திருத்தமாக பதிய வைத்தார். இருதரப்பிலும் நடைபெற்ற உரையாடல் மூலமாக இக்கருத்து மாணவர்களிடையே பதியவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியாக திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி மாணவர்களிடையே தனது மாணவப்பருவத்தில் நடைபெற்ற சூரியகிரகணம் தொடர்பான மூடநம்பிக்கைகளை நகைச் சுவையாக எடுத்துரைத்தும், முனைவர் கு.இரவிக்குமார் வகுப்பு எடுத்த முறையை வாழ்த்தியும் பேசினார்.
முன்னதாக இதே அரங்கில் நடைபெற்ற மாணவர்களுக்கான சூரியகிரகணம் பற்றிய ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நினைவுப்பரிசு வழங்கி சிறப் பித்தார். இந்நிகழ்வில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுசெயலாளர் ஆ.வெங்கடேசன், கோவி.கோபால், திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாணவர்களின் பெற்றோரும், கழகத்தோழர்களும் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.
ஒசூரில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு
நேற்று (25.10.2022) மாலை 5.30மணிக்கு ஒசூர் உள்வட்டசாலை பெரியார்சர்க்கிள் பகுதியில் சூரியகிரகணம் மூடநம்பிப்கை ஒழிப்பு விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் கு.வணங்காமுடி தலைமையில் நடைபெற்றது.சூரியகிரகணம் குறித்த மூடநம் பிக்கையை விளக்கியும், இயற்கையாக நடைபெறும் நிகழ்வை மூடநம்பிக்கையை புகுத்தி மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது, சாப்பிடக்கூடாது என்ற நிலையில் திராவிடர் கழகம்சார்பில் அதன் பொறுப்பாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தியும்,திண்பண்டங்கள் சாப் பிட்டும் விழிப்புணர்வு செய்து காட்டினர்.இந் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, பகுத்தறி வாளர் கழக செயலாளர் சிவந்தி அருணாசலம், மாவட்ட மகளிர்பாசறை தலைவர் கோ.கண் மணி, மாநகர தலைவர் மூ.கார்த்திக்,மாவட்ட திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன் தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன், மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தாராபுரத்தில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு
25-10-2022 மாலை 5:30மணிக்கு சூரிய கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வண்ணம் தாராபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு மாட்டுக்கறி உணவு உண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.முனிசுவரன், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் வழக் குரைஞர் நா.சக்திவேல், ஓவியர் நா.மாயவன் மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
லால்குடி மாவட்ட கழகம் சார்பில் கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலிகூட்டம்
25.10.2022 மாலை 5மணிக்கு கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு காணொலிகூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் லால்குடி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றிய கழகத் தோழர்கள் பங்கேற்றனர். விடுதலைபுரம் இளைஞரணி தோழர்கள் கூட்டத்தினை ஒருங்கிணைத்து நடத்தி முடித்தனர்.
பொள்ளாச்சியில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு
நேற்று (25-10-2022) மாலை சூரிய கிரகணம் நிகழ்வையொட்டி பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கோவை சாலையின் முன்பு மூடநம்பிக்கையை முறியடிப்போம் என்ற பகுத்தறிவு நிகழ்ச்சி அரண் சட்ட மய்யம் சார்பாக சிறப்பாக நடைபெற்றது. மூடநம்பிக் கையை ஒழிக்கும் பணியில் வேகமாக செயலாற்றுவோம். பகுத்தறிவு பார்வையை உலகிற்கு வேகமாக பரவ செய்வோம் என்ற முழக்கத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
விருத்தாசலத்தில் கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு
சூரிய கிரகணத்தின் போது உண்ணக் கூடாது, வெளியில் வரக்கூடாது என்ற மூட நம்பிக்கைக்கு எதிராக விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகில் 25.10.2022 அன்று மாலை பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் சிற்றுண்டி உண்டு களித்து, மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு முழக்கம் எழுப்பப்பட்டது.
இதில், மாவட்டத் தலைவர் அ.இளங் கோவன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச் செல்வன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட அமைப்பாளர் வை.இளவரசன், சொற்பொழிவாளர் புலவர் இராவணன், வேப்பூர் வட்டாரத் தலைவர் பி.பழனிச்சாமி, கழுதூர் ம.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மு. முகமது பசீர், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.இராமராஜ், பாலச்சந்தர், சவரிமுத்து, இளங்கனி, வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர், நவ.1 25.10.2022 அன்று மாலை 5.30 மணிக்கு ஒசூர் உள்வட்டசாலை பெரியார்சர்க்கிள் பகுதியில் சூரியகிரகணம் மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப் புணர்வு செயல்முறை விளக்கம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பேராசிரியர் கு.வணங்கா முடி தலைமையில் நடைபெற்றது.
சூரியகிரகணம் குறித்த மூடநம்பிக்கையை விளக்கியும் இயற்கையாக நடைபெறும் நிகழ்வை மூடநம்பிக்கையை புகுத்தி மக்கள் யாரும் வெளிவரகூடாது, சாப்பிட கூடாது என்ற நிலையில் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொறுப் பாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தியும், திண்பண்டங்கள் சாப்பிட்டும் விழிப்புணர்வு செய்து காட்டினர். இந் நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்ன சாமி, பகுத்தறிவாளர் கழக செயலாளர் சிவந்திஅருணாசலம், மாவட்ட மகளிர்பாசறை தலைவர் கோ.கண்மணி, மாநகர தலைவர் மூ.கார்த்திக், மாவட்ட திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் க.கா.சித்தாந்தன், தமிழ்நாட்டு கல்வி இயக்கம் ஒப்புரவாளன் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக