பக்கங்கள்

வெள்ளி, 29 நவம்பர், 2024

கதை கேளு… கதை கேளு… ராஜராஜ சோழன் கதை கேளு.. ஓய்!! பெரியார் குயில் தாராபுரம்

 ஞாயிறு மலர்

விடுதலை நாளேடு

1039ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடும் தமிழ் மன்னன் ராஜராஜ சோழன் (எ) அருள் மொழி வர்மன் அடிமையாக வாழ்ந்த வரலாற்றை நினைவுபடுத்துவது அவசியமாகும்.

இம்மன்னனின் ஆட்சி செய்த 30 ஆண்டு காலமும் பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட வசதிகளை எல்லாம் எய்தி தங்களை நிலைப்படுத்திக் கொண்டார்கள் என்பது வரலாறாக காட்சியளிக்கிறது.

தன் ஆட்சியில் நிகழ்ந்தவற்றை மெய் கீர்த்திகளாக கல்வெட்டுகளில் பொறித்த முதல் மன்னன் ராஜராஜ சோழனே ஆவார்.

இவ்விடத்தில் ராஜராஜ சோழன் செய்த நற்காரியம் தன் புகழை பரப்ப நினைத்து பார்ப்பன சதி வேலைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
நாம் பெருமையாக கருதும் தஞ்சை பெருவுடையார் கோயில் முக்கிய சாட்சியாக எழுந்து நிற்கிறது. அதில் குறிப்பாக ராஜ ராஜ சோழனுடைய வரலாற்றைக் கூறும் நூல் “சிறீ ராஜராஜ விஜயம் “என்ற நூலையும் ராஜராஜேஸ்வர நாடகம் என்ற நாடக நூல் ஒன்றையும் தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகள் நமக்கு புலப்படுத்துகின்றன. ஆனால் அவை இன்று இல்லை.

தானும், தன் மனைவியரும் தன் வாரிசுகளும் சுற்றத்தாரும் தஞ்சை பெரிய கோயிலுக்கு வழங்கி உள்ள பரிசுகள் பொற்கலங்கள் 41,559 கழஞ்சு எடை அணிகலன்கள் 10,200 காசு விலை மதிப்புடையவை வெள்ளிக்கலங்கள் 50,650 கழஞ்சு எடையுள்ளவை ஒரு லட்சத்து 16,000 கலம் நெல்லும் 1100 காசு வருவாய் உள்ள கிராமங்கள் இவை எல்லாம் தஞ்சை பெரிய கோவிலுக்கு வழங்கப்பட்டது.

அது மட்டுமல்ல சேரர்களை வென்ற சோழனின் படைத்தலைவன் கம்பன் மணியன் கொண்டு வந்த மரகத தேவர் படிமம் ராஜராஜ சோழன் உத்தரவுப்படி திருப்பழனத்தாள் சிவன் கோவிலில் வைக்கப்பட்டது. ஆனால் அப்படிமம் இப்போது காணாமல் போய்விட்டது.

ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழன் இம்மன்னன் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் கங்கை விநாயகர் என்ற சிலையை வடநாட்டில் இருந்து கொண்டு வந்து அமைத்தார்.

வங்காள வரலாற்று அறிஞர் ஆர்.டி.பானர்ஜி என்பவர் கங்கை கரையிலிருந்து ராஜேந்திர சோழன் பல பார்ப்பனர்களை சைவாச்சாரியர்கள் என்று அழைத்து வந்து காஞ்சி மாநகரிலும் சோழ நாட்டிலும் குடி ஏற்றினான் என்று பதிவு செய்துள்ளார்.

ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் சோழ வரலாற்றின் முக்கியமான பெரும் போர் வீரன். ஆனால் இவ்வீரனை நான்கு பார்ப்பன சகோதரர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்தனர் என்று சிதம்பரம் தாலுகா, காட்டுமன்னார்கோவில், உடையார் குடியில் காணப்படும் கல்வெட்டு உறுதி செய்கிறது. இவர்கள் ராஜராஜ சோழன் தந்தையாகிய கண்டராதித்த சோழனுடைய அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகளும் ஆவர்.

ஆனால் இவ் வரலாறு திட்டமிட்டு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நூலில் மறைக்கப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழனின் முக்கிய போர்களில் ஒன்றான காந்தளூர் சாலை போரில் வென்று சாலா போகம் என்னும் கல்வி நிறுவனங்களை நிறுவினார். அப்பள்ளியில் வேதங்களும் வியாக்கரணங்களும் பயிற்சி அளிக்கப்பட்டன என்று பார்த்திவ சேகர புரத்து சாசனம் தெரிவிக்கிறது
இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் கதை சோழ ராஜ்ஜியத்தின் முக்கிய கதையாகும்.
நூல் உதவி : “பிற்கால சோழர் சரித்திரம் & தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக