முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பாக முதன்முதலில் வருண அமைப்பை எதிர்த்து பகுத்தறிவுச் சிந்தனை அடிப்படையில் குரல் கொடுத் தவர் கவுதம புத்தர் (கி.மு.500) ஆவார். அவரைத் தொடர்ந்து மகாவீரர் திருவள்ளு வர் (கி.மு.31) அதேபோன்று 900 ஆண்டு களுக்கு முன் வைதீக மத ஆச்சாரங் களையும் தீண்டாமைக் கொடுமைகளை யும் கண்டித்தவர் ஆதிசங்கரரும், இராமா னுஜரும். தொடர்ந்து கபிலர், திருமூலர், அசோகர் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகளா வர்.
அந்த வரிசையில் 19ஆம் நூற்றாண்டில் வருண அமைப்பை எதிர்த்தும் மனித நேயத்தை வலியுறுத்தியும் சமத்துவ - சமதர்ம - பொது உடமை - சீரதிருத்தக் கருத்துகளையும் மூடநம்பிக்கைக்கு எதி ரான பகுத்தறிவுச் சிந்தனை கருத்துகளை யும் தமது படைப்புகளால் முன்வைத்த முன்னோடி தத்துவஞானி வள்ளலார் இராமலிங்கர் (1816-1874) என்பதனை இவ் ஆய்வுக் கட்டுரையில் காண்போம்.
சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி வள்ளலார்
வள்ளலார் தம் படைப்புகளாக 6000-க் கும் மேற்பட்ட அருட்பா பாடல்களையும் கீர்த்தனைகளையும் கன்னித்தமிழில் அரசியல் - சமூகம் - பொருளாதாரம் - கலை இலக்கியம் - பண்பாடு - மருத்துவம் - சமயம் - மதம் - சமரசம் - தேசியம் - பக்தி, முக்தி, சித்தி என அனைத்து துறைகளோடு சமூக சீரதிருத்த பகுத்தறிவுச் சிந்தனை களையும் உள்ளடக்கிய சமரச சுத்த சன்மார்க்க கொள்கைகளாகப் பாடியுள் ளார். அந்த வகையில் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தையான பெரியார் அவர்களுக்கு முன்னோடியாக வள்ள லாரை அவரது படைப்புகளிலிருந்து ஒப் பிடலாம்.
வள்ளலார் தாம் வாழ்ந்த 50 ஆண்டு களில் முதல் 40ஆண்டுகள் வழிபாட்டுத் துதிப் பாடல்களையே பாடினார். இறுதி 10ஆண்டுகளில் தமது சிந்தனைகளில் பகுத்தறிவு தெளிவு பெற்று சமூக சீர் திருத்தத் திருப்புமுனை ஏற்பட்டு உருவ மற்ற வழிபாட்டை நடைமுறைக்கு கொண்டுவந்து மனிதநேயத்தை போதித் தார். மேலும் ஜாதி சமயப் பூசல்களையும், மத வேறுபாடுகளையும் கடுமையாகச் சாடினார். மூடநம்பிக்கைகளைக் கண்டித் தார் சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்தார். அதன் வெளிப்பாடே ஆறாம் திருமுறை யில் காணும் அரும்பொருளாக, சமூக சீர்திருத்தக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
நால்வருணம் ஆசிரமம் ஆனநம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மெய்வருணம் தோல்வருணம் கண்டறிவா ரிலைநீ
விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே
(திருவருட்பா பாடல்:4174)
மனிதநேய-பகுத்தறிவுச் சிந்தனையின் திறவுகோல் வள்ளலார்
இதுமாதிரியான புரட்சிக் கருத்துகள் இடம்பெற்றிருந்த வள்ளலாரின் படைப்பு களைக் கண்ணுற்ற தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கக் கருத்து களுக்கு வித்தானது அருட்பா எனக்கூறி ஆறாம் திருமுறையிலிருந்து 100 பாடல் களைத் திரட்டி 1935இல் தமது குடிஅரசுப் பதிப்பகத்தின் 3 ஆவது வெளியீடாக ‘இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு’ எனும் பெயரில் புலவர் சாமி.சிதம்பரனார் மூலம் தொகுத்து வெளியிட்டார். அதிலி ருந்து வள்ளார் படைப்பின் ஆறாம் திருமுறைகளில் காணும் சமூக சீர்திருத்த - பகுத்தறிவுக் கருத்துகளடங்கிய பாடல் களை திராவிட இயக்க மரபு வரித்துக் கொண்டது எனலாம்.
உள்ளம் உருகும் உன்னதப் பாடல் களையும் கல்லையும் கனிந்துருகச் செய் யும் கருணைமிகு பாடல்களையும் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டும் மனிதநேயப் பாடல்களையும் திருஅருட்பா எனும் படைப்பால் வள்ளலார் இயற்றியுள் ளதோடு தமிழக மக்களின் மூளையில் இடப்பட்டிருந்த மூடநம்பிக்கை எனும் விலங்கினை தம் பகுத்தறிவுச் சிந்தனை யெனும் திறவுகோலால் திறந்திட்ட பெரு மானாவார்!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
(திருவருட்பா பாடல்:3471)
என்று சொன்ன தலைசிறந்த மனித நேயச் சிந்தனை கொண்ட ஆன்மீகவாதி அருட்பிரகாச வள்ளலாரைத் தவிர வேறு ஒருவரை இவ்வுலகில் காண்பது அரி தாகும். புத்தருக்குப் பிறகும் பெரியாருக்கு முன்பாகவும் இடைப்பட்ட காலத்தில் வள்ளலார் இங்கு வாய்த்தது தமிழ் சமூகத் திற்கு மட்டுமல்லாது தமிழ் மொழிக்கும் புதுவை உள்ளிட்ட தமிழ் நாட்டிற்கும் பெருமை என்றே கொள்ளலாம். அவர் நம் மக்களைப் பார்த்து கூவி அழைக்கும் பாங்கினை நோக்குங்கால்:
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
(திருவருட்பா பாடல்:5564)
இவ்வாறாக பக்திமார்க்கத்திலிருந் தோருக்கும் தம் பகுத்தறிவு சிந்தனைக் கருத்துகளால் பாலமிட்டவர் வள்ளலார் ஆவர். எனவே வள்ளலாரை பகுத்தறிவுச் சிந்தனையின் திறவுகோல் என்றே எடுத் துக்கொள்ளலாம். அதேபோன்று வள்ள லாரை ஒரு ஆன்மீகவாதியாக எடுத்துக் கொண்டாலும் அவரது தளத்திலிருந்து புரட்சிக் கருத்துகளை துணிந்து சொன்ன முன்னோடி முதல் புரட்சியாளராகவும் வள்ளலாரைக் கொள்ளலாம். உதாரணமாக:
கலைஉணர்த்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக.
(திருவருட்பா பாடல்:3768)
என்றதும், மேலும்:
இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
வழக்கம் எல்லாம் குழிகொட்டி மண்மூடிப்போக
(திருவருட்பா பாடல்:4654)
மற்றொரு இடத்தில்:
“சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி!”
(திருவருட்பா பாடல்:4075)
மேலும்:
“மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டிலே இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார்”
(திருவருட்பா பாடல்: 4728)
வள்ளலாரின் திருவருட்பா ஆறாம் திருமுறையும் - பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையும் ஒப்பீடு
வள்ளலாரின் திருவருட்பாவில் ஆறு திருமுறைகளையும் அலசி ஆராயந்ததில் ஆறாம் திருமுறையின் முன்பகுதியான பூர்வஞான சிதம்பரப் பகுதி இடைப் பகுதியான உத்தரஞான சிதம்பரப் பகுதி அதேபோன்று முடிந்த பகுதியான சித்தி வளாகப் பகுதி ஆகியவை முழுக்க முழுக்க பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை களையும் அறிவியல் சிந்தனைகளையுமே வெளிப்படுத்துவதாக இயற்றப்பட்டுள்ளது.
பெரியார் அவர்கள் மக்களிடையே கூறிவந்த ஜாதி மதம் வேதம் சாஸ்திரம் புராணம் இதிகாசம் முதலியவைகளைப் பற்றிய ஒவ்வொரு கருத்தையும் வள்ளலார் இராமலிங்கரும் வாய்ப்பு கிடைக்குமிடங் களிலெல்லாம் குறிப்பிடத்தவறவில்லை.
தீண்டாமை எப்படி வந்தது என்றால் மதத்தால் வந்தது என்கின்றனர்; மதத்தால் ஏன் வந்தது என்று கேட்டால் அது சாஸ்திரப்படி என்கிறார்கள்; இந்த சாஸ் திரம் எப்படி வந்தது என்றால் அது ஆண் டவனின் ஆணை என்கிறார்கள்! அப்படி யானால், தீண்டாமையை நிலைக் கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதர வளிக்கும் சாஸ்திரத்தையும், அதை ஏற் படுத்திய கடவுளையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும் என்றார் பெரியார்.
(‘விடுதலை’, 19.04.1950)
சமத்துவத்திற்காகவும். தீண்டாமைப் பிணி போக்கும் மருத்துவராகவும் நோய் நாடி நோய் முதல்நாடி சீரதிருத்தம் செய் தார் பெரியார். மேலும் கோயிலில் தாழ்த் தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது அவர்களே புஜை செய்யவேண் டும், தட்சணைக் காசுகளை அவர்களே அடையவேண்டும். அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போடவேண்டுமென்று கிளர்ச்சி செய்யத் தான் போகின்றேன் என்றார் பெரியார்!...
(‘விடுதலை’, 22.08.1948)
வள்ளலார் நெறியில் மக்கள் வாழ்ந் தால் மனிதநேயம் மலரும்; அன்பு செழிக் கும்; ஒழுக்கம் உயர்ந்தோங்கும்; பண்பு மலர்ந்தோங்கும்; தீமைகள் யாவும் அழிந்து நன்மை மலரும். சமயவாதிகள் உன் தெய் வம் என் தெய்வம் எனப் பூசலிடுவதை வள்ளலார் அறியாமை என்கிறார்:
“பேருற்ற உலகிலுள்ள சமயமத நெறியெல்லாம்
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்பிள்ளை விளையாட்டு”
(திருவருட்பா பாடல்: 3677)
என்பதிலிருந்து தர்மத்தை தவிர சமய மும் இல்லை - தெய்வமும் இல்லை என்ப தாக அறியமுடிகிறது. எல்லா உயிர்களை யும் தமது உயிர்போல் நினைத்து சம உரிமை வழங்குபவர்தான் மனிதனாவான. எங்கும் வேறுபாடு பிளவு மக்களிடம் ஒற்றுமை இல்லை. சைவம்-வைணவம் இப்படித்தான் போனது பார்ப்பனர் - பறையர் என இப்படித்தான் பிரியக் காரணமானது.
எளிமையான ஆரவாரமில்லா வழி பாடுதான் சன்மார்க்க வழிபாடு என்கிறார் வள்ளலார். ஆனால் இன்றைய வழிபாட்டு முறையோ தேர்த்திருவிழா புனித நீராடல் பூப்பல்லக்குத் திருவிழா, குடமுழுக்கு, பங்குனி உத்திரம், பால் காவடி எனும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
முனைவர் த.ஜெயக்குமார்
உதவிப் பேராசிரியர்
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்,
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்
(தொடரும்)
25.2.2017 விடுதலை ஞா.ம.
ஒத்தாரும் உலர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்”
(திருவருட்பா பாடல்:4082)
(திருவருட்பா பாடல்:4615)
“மதம்எனும் பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம்”
(திருவருட்பா பாடல்:5799)
சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே”
(திருவருட்பா பாடல்:5805)
(‘விடுதலை’, 16.11.1969)
(‘விடுதலை’, 11.03.1948)
(‘விடுதலை’, 21.02.1948)
(‘விடுதலை’, 26.09.1956)
அதேபோன்று சுரண்டலுக்கு வழிவகுக் கும் மூடநம்பிக்கைகள் - கோயில் திரு விழா, பிரார்த்தனை, ஜோதிட மோசடி களையும் அறவே விட்டொழிக்க வேண் டும் என்றார் தந்தை பெரியார்.
(‘குடிஅரசு’, 11.08.1929)
தனது மார்க்கத்திற்கென்று-ஒரு தனிச் சங்கத்தை நிறுவியவர்!
தனது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக்கொடி கண்டவர்!
தனது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் கண்டவர்!
தனது மாரக்கத்திற்கென்று ஒரு தனி சபையைக் கட்டியவர்!
மேலும் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்! என்பதுவே
வள்ளலாரின் - சமரச சுத்த சன்மார்க்க நெறி! எனலாம்.