இந்த பேரிடர் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஆபத்து காலத்தில் எந்த கடவுளும் வரமாட்டார். மனிதன்தான் மனிதனைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கடவுளும் மதங்களும் பொய்த்தன. மனிதநேயம் நிமிர்ந்து நின்றது.. இந்த பத்து நாட்கள் எனக்கு கிடைத்த மன நிறைவு மெக்காவிற்கு சென்றாலும் எனக்கு கிடைக்காது. நடிகர் நாசர் அவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அரங்கில் இளைஞர்கள் கைதட்டி ஆரவாரித்து ஆமோதித்தினர்....... அவருக்கு பின் பேச வந்த இளையராஜா மறுக்கிறேன் பேர்வழி என்று உளறிக் கொட்டிய பொழுது அரங்கத்தில் ஓரிருவர் தவிர அனைவரும் அமைதியாக இருந்தனர்... .இசைஞானி தான் சுருதி தப்பி பேசுகிறோம் என்பதை கடைசி வரை உணரவில்லை....
நாசர் அணிந்திருந்த கறுப்புசட்டை அனைவரை யும் கவர்ந்தது...
நாசர் அணிந்திருந்த கறுப்புசட்டை அனைவரை யும் கவர்ந்தது...
இளையராஜாவின் தப்புத்தாளங்கள்
இளையராஜா தனது உரையில் 'உலகை இயக்குவது கடவுள்....எல்லாம் அவன் செயல்' என்றார். கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் ‘அப்படியென்றால் வெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியது கடவுள் செயலிற்கு விரோதமானது அல்லவா' என்று கேட்ட பொழுது அருகிலிருந்தோர் ‘கொல்' என்று சிரித்தனர்..... ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இளையராஜா மாணவர்களைப் பார்த்து மதியம் பாடல் ஒலிப்பதிவு உள்ளது.. நன்கு பாடத்தெரிந்தவர்கள் என்னுடன் வரலாம் என்றெல்லாம் நிகழ்ச்சிக்கு பொருந்தாமல் பேசியதனைக் கேட்க பரிதாபமாக இருந்தது...
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் (17.12.2015)
.-விடுதலை,18.12.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக