பக்கங்கள்

வியாழன், 24 ஜனவரி, 2019

இந்து மதத்தின் புதிர்கள்

பேராசிரியர் மு.நாகநாதன்




பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறிகளை நடைமுறைப் படுத்துவதற்கும் பெரும் தடையாக உள்ளது என்பதற்குத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளார்.

புதிர் 22இல் (Riddle-22) -இவரின் கருத்துகள், கடந்த 4 1/2 ஆண்டு மதவாத பாஜக ஆட்சியில் நடந்த மானுட கொடுமைகளால் நூற்றுக்கு நூறு, மெய்ப்பொருளானது.

அண்ணல் அம்பேத்கர்:

"நல்ல அரசு என்றால் நல்ல சட்டங்களும், நல்ல நிர்வாகமும் தேவை. இது தான் நல்ல அரசின் சாரம் ஆகும். இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன் அடிப்படையில் பார்க்கும்போது கீழ் நிலையில் இருக்கும் மக்களும் பெரும்பான்மையான மக்களும் பயன் பெறாத வகையில் ஆளும் அதிகாரத் தைத் தங்களின் வகுப்பு நலனுக்காக வைத்திருக்கும் போது நல்ல அரசாகத் தற்போது இருக்கமுடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

(Good Government means good laws and good administration. This is the essence of good Government. Nothing else can be.
Now there cannot be good Government
in this sense, if those who are invested with ruling power seek the advantage of their own class instead of the advantage of the whole people or those who are downtrodden--)
(Riddles in Hinduism- Dr.Babasahep Ambedkar--
Writings And Speeches vol 4-page 282) fraternity.


பிரெஞ்சுப் புரட்சியின் போது வலியுறுத்தப்பட்ட சகோதரத்துவம் தான் ஜனநாயகத்தின் வேர்.

சமத்துவம் என்ற சொல் அதன் முழுமையான உட்பட்ட பொருளை எடுத்துக்காட்டவில்லை. அதனால்தான் சரியாக மைத்திரி -( சமத்துவத்தின் முழு பொருளில்)- என்று புத்தர் குறிப்பிட்டுள் ளார்.இன்றும் இலங்கையில் மைத்திரி பாலா என்ற பெயரை சூட்டுகின்றனர்.

(What French Revolutionisits called fraternity.The word fraternity is not an adequate expression. The proper term is what the Buddha called, Maitree. Page 283)

இலங்கையிலும் இந்தியாவைப் போன்றே மைத்திரி ஏட்டளவில் தான் உள்ளது. நாட்டளவில் இல்லை.

அம்பேத்கர் மேலும் விளக்குகிறார்.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் வளரவில்லை. இதற்கான பதில் எளியது.

இந்து மதம் சகோதரத்துவத்தைக் கற்பிக்கவில்லை.

அதற்குப் பதிலாக சமூகத்தை ஜாதி வர்ணங்கள் அடிப்படையில் பிளவைக் கற்பிக்கிறது.

வகுப்பு உணர்வைத் தனியாக நிலைப் பெறச் செய்கிறது.

இத்தகைய அமைப்பில் ஜனநாயகத்திற்கு இடம் இல்லை.

இந்து சமூக அமைப்பு விபத்தின் காரணமாக ஜனநாயகத்தை இழக்கவில்லை.

ஜனநாயகம் இருக்கக் கூடாது என்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

(Why did democracy not grow in India?
The answer is simple .
The Hindu religion does not teach fraternity.
Instead it teaches division of society into classes or varnas and the maintenance of separate class consciousness.
In such a system where is the room for democracy.
The Hindu social system is undemocratic
not by accident. It is designed to be undemocratic.
(page- 285)


இன்று மோடி அரசில் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையத்தில், மய்ய வங்கியில், மத்திய புலனாய்வு துறையில் செய்யப்படும் குறுக்கீடுகள், இட ஒதுக்கீடு கொள்கையில் உயர் வகுப்பினருக்கு அவசரமாக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம், இந்தி, சமஸ்கிருதம் மொழிகளைத் திணிப்பதில் காண்பிக்கும் அவசரம் எல்லாம் யாருக்காக?

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது நாட்டுத் துரோக வழக்கைப் பதிவு செய்தது எதற்காக?

சமத்துவம் ஜனநாயகம் என்பது எல்லாம் உயர் வகுப்பு, உயர் வர்க்க நலன்களுக்காக என்பதைத் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் உணர்ந்து களம் அமைத்தனர். போராடினர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் புனிதமானது.

அதன் அடிப்படைக் கட்டமைப்பை (Basic Structure) பாதுகாக்கவேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர்.

இவர்கள் யார்?

இந்து சனாதனம் தான் இந்திய சமூகத்தின் கட்டமைப்பு என்பவர்கள்.

இந்து சனாதனம் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பாகவும் செயல்படுகிறது.

ஜனநாயகம் ஒரு சிலரின் கையில் தான் உள்ளது என்பதை 24 இந்து மதப் புதிர்களில் அறிவோடு சான்றுகளோடு அறிஞர் அம்பேத்கர் மெய்ப்பித்துள்ளார்.

இதனால் தான் பெரியார் 1957 ஆம் ஆண்டிலேயே சனாதனத்தைக் காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தனது 80ஆம் அகவையில் தீயிட்டார். சிறை தண்டனையும் பெற்றார்.

அறிஞர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் செய்த புரட்சியைப் படித்து ஆய்ந்து, தெளிந்து இளைஞர்கள் களமாட வேண்டும்.

- விடுதலை நாளேடு, 24.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக