பெண்களை உடன்கட்டை ஏற்றி கொளு த்திக் கொல்லுவது இந்துமத நம்பிக்கை என விட்டிருந்தால், உடன்கட்டை தடுப்புச்சட்டம் வந்திருக்குமா?
குழந்தைத் திருமணம் இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், பால்ய விவாக தடுப்புச் சட்டம் வந்திருக்குமா?
வர்ணாசிரம சாதி ஏற்றத்தாழ்வுகள் இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்னும் உரிமை கிடைத்திருக்குமா?
கணவன் இறந்தால், மனைவிக்கு மொட்டை அடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்காரவைப்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த சமூக தீமை ஒழிந்திருக்குமா?
மொட்டைப் பார்ப்பனத்தி என்ற நிலை தான் மாறியிருக்குமா?
பெண்களுக்குப் பொட்டுகட்டி கோவில் தேவதாசியாக்குவது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா?
பார்ப்பனர் அல்லாதோர் படிக்கக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், நாட்டின் பெரும்பான்மை யான மக்கள் படித்திருக்க முடியுமா?
சில பிரிவு பெண்கள் மேலாடை உடுத் தக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அனைத்துப் பெண்களுக்கும் மேலாடை அணிய உரிமையுண்டு என்ற சட்டம் வந்திருக்குமா?
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெ தற்கு என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், பெண் கல்வி சாத்தியப் பட்டிருக்குமா?
திருமணம் முடிந்த பெண், முதல் நாள் பார்ப்பன நம்பூதிரியுடன்தான் முதலிரவைக் கழிக்க வேண்டும் என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், இந்த இழி பழக்கம் மறைந்திருக்குமா?
ஒரே மத அமைப்பு என்று சொல்லிக் கொண்டு, ஒரு பிரிவின் மீது தீண்டாமை கடைபிடிப்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தீண்டாமைத் தடை சட்டம் வந்திருக்குமா?
ஒரே மத அமைப்பு என்று சொல்லிக் கொண்டு, எங்கள் கோவிலினுள் நுழை யாதே என்று மக்களின் ஒரு பிரிவினரைத் தடுப்பது இந்து மத நம்பிக்கை என விட் டிருந்தால், அனைத்து ஜாதிக்கும் ஆலய நுழைவுசாத்தியப்பட்டிருக்குமா?
பார்ப்பனர்கள் கடல்தாண்டி போகக் கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால்,இன்றைய நிலையில் லட்ச கணக்கான பார்ப்பனர்கள் வெளிநாடு களில் வசிக்க, வேலைசெய்ய முடியுமா?
உலகம் தட்டையானது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், உலகம் உருண்டையானது என்பது நிரூபிக்கப் பட்டிருக்குமா?
பூமியைத்தான் சூரியன் சந்திரன் போன்றவை சுற்றிவருகின்றன என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், அறிவியல் வளர்ந்திருக்குமா?
ராகு - கேது என்ற பாம்புகள் சூரியனை யும் சந்திரனையும் விழுங்குவதால்தான் கிரகணங்கள் உருவாகின்றன என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், வான்வெளி அறிவு வளர்ந்திருக்குமா?
பிரார்த்தனைசெய்தால் குணமாகும் என்பது இந்து மத நம்பிக்கை என விட் டிருந்தால், மருத்துவ அறிவியல் வளர்ந் திருக்குமா?
தமிழ் நீசபாஷை, தமிழில் கடவுளை வழிபடக்கூடாது என்பது இந்து மத நம்பிக்கை என விட்டிருந்தால், தமிழ் அர்ச் சனை என்னும் சட்டம் வந்திருக்குமா?
அன்று அகல் விளக்கில் முகம் காட்டிய அய்யப்பன் இன்று மின்சார விளக்கில் ஜொலிக்கிறான், இப்போது எங்கு போனது 'ஆகம விதி'?
48 நாள் விரதமிருந்த உங்களது கன்னிச் சாமிகள், இன்று 'காலையில் மாலை போட்டு சிறப்பு தரிசனத்தில் அன்றே மலையேறி, அன்று மாலையே சாராயக்கடைக்கு மலையேறும் போது எங்கே போனது 'உங்க ஆகம விதி?
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கோஷத்துடன் பெரு வழியில் 48 மைல்கள் நடந்த கால்கள் இன்று 4 கி.மீ. களாக சுருங்கிய போது எங்கே போனது உங்கள் 'ஆகம விதி' ?
இருமுடி கட்டிய பின் 'சென்று வருகிறேன் ' என்று கூட சொல்லக் கூடாது , என்ற உங்களது ஆகம விதி எவ்வாறு செல் போன்களை அனுமதிக்கிறது ?
இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் "ஆகம விதி" மதநம்பிக்கை பெண்களை மட்டும் அனுமதிக்காது என்றால் மதவாதி கள் இன்றும் பெண்களை தங்களின் அடி மைகளாக வைத்திருக்க முயன்றுகொண்டு இருக்கின்றனர் என்றுதானே பொருள். அதற்குச் சில பெண்களும் பெண் அரசியல் தலைவர்களும் அரசியல் லாபத்திற்காகத் துணை போகின்றனர் என்பதும் கவலைக் குரியதே, இருப்பினும் அவர்களின் போலி மதச்சாயமும் வெளித்துவிட்டது, பெண்கள் விழிப்படைந்துவிட்டார்கள்.
மதப்பயம் காட்டி அடக்கிவைக்க இது பழைய காலம் இல்லையப்பா, நாங்கள் தாடிக்காரர் பேத்தி, அடக்கி வைத்த காலம் போச்சு என்று பெண்கள் பாடும் காலம் வந்தாச்சு.
- க.அன்புமதி - அருள்மதி
- விடுதலை ஞாயிறு மலர், 5.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக