பக்கங்கள்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

‘அட ஆஞ்சநேயா!’ அர்ச்சகனைக்கூட காப்பாற்றும் சக்தியில்லையே!

ஆஞ்சநேயருக்கு மாலை போட்ட அர்ச்சகர் பரிதாப மரணம்




நாமக்கல், ஜன. 30- நாமக்கல் கோட்டை சாலையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 53). அர்ச்சகரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி பொது மேலாளராகவும் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாட்களில் நாமக்கல் ஆஞ்ச நேயருக்கு பணிவிடை செய்ய வருவார். அந்த வகையில் குடியரசு தினத்தன்று வெங்கடேசன் ஆஞ்சநேயருக்கு பணி விடை செய்ய வந்தார்.

18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு அவர் சுமார் 8 அடி உயரத்தில் பலகையில் நின்றபடி மலர்மாலை அணிவித்துக் கொண்டு இருந்தார். பின்னர் அந்த பலகையில் பின்னோக்கி வந்த வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக பலகையில் இருந்து கீழே தவறி விழுந் தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பரிதாப சாவு


இந்த நிலையில், வெங்கடேசனின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆன தால் மேல்சிகிச்சைக்காக அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் நள்ளிரவு இறந்தார்.

இது குறித்து நாமக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன வெங்கடேசனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், அரவிந்த் (25) என்ற மக னும் உள்ளனர். அரவிந்த் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கோவில் கருவ றைக்குள் வெங்கடேசன் தவறி விழுந்த தால், நேற்று முன்தினம் ஆஞ்சநேயர் கோவில் முழுவதும் தூய்மை செய்யப் பட்டு, அர்ச்சகர்கள் மூலம் கலசங்கள் வைத்து பரிகார பூஜை செய்யப்பட்ட தாம்.

-  விடுதலை நாளேடு, 30.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக