பக்கங்கள்

புதன், 22 ஜனவரி, 2020

சாக்ரடீசுக்கொரு பிளாட்டோ... பெரியாருக்கொரு வீரமணி!



1951-52 ஆம் ஆண்டுகளில் ஒடுக்கப் பட்ட மக்களின் வகுப்புவாரி உரிமைகள் குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டன. அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்காகக் குரல் கொடுத்தார். அவரது அழைப்பை ஏற்று இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவு கொடுத்தனர். அதனால் 1951 இல் நேரு காலத்தில் ஏற்பட்டதுதான் இந்திய அரச மைப்பின் முதல் சட்டத் திருத்தம். இருந் தாலும் இன்னும் நிறைவேற வேண்டிய கோரிக்கைகள் பல இருந்தன. சமூகநீதி என்பது இடஒதுக்கீடு மட்டும் அல்ல. இன்னும் பல உரிமைகள் இந்தச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே.

அனைவரும் சம உரிமை பெறுவது - ஆண்களும் பெண்களும் சமமான உரிமை பெறுவதுதான் சமூக நீதியாகும். அந்த நிலையை இன்னும் இந்தச் சமுதாயம் அடையவில்லை.

உழைக்கின்ற மக்களை ஜாதியின் பெய ரால், மதத்தின் பெயரால் கேவலப்படுத்தி அவர்களைக் கொடுமைப்படுத்தினர். இக் கொடுமைகளை ஒழிக்க தந்தை பெரியார், பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர், ஜோதிபாபூலே, சாகுமகராஜ், நாராயணகுரு போன்ற தலைவர்கள் சமூக சீர்திருத்தத் திற்காகப் போராடினார்கள்.

“மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும் சகோதரத்துவமும் தோன்ற வேண்டும். ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண் டும்; உலகுயிர் அனைத்தும் ஒன்றென்னும் எண்ணம் உதிக்க வேண்டும். வகுப்புச் சண்டைகள், ஜாதிச் சண்டைகள் மறைய வேண்டும்.” ('குடிஅரசு', 09.04.1933).

சமூகநீதிக்கான இந்தப் போராட்டத்தின் ஒருபடி தான் இடஒதுக்கீடு. அந்தப் படியை அடைவதற்கே எத்தனைப் போராட் டங்கள்! தம் இறுதிக் காலம் வரை உழைத்த தலைவர் பெரியாருக்குப் பிறகு சமூகநீதிக் கான குரலை உரத்து எழுப்பி யவர் திரா விடர் கழகத் தலைவர் வீரமணி. மண்டல் குழு பரிந்துரையை வெளிக் கொண்டுவர போராட்டங்கள், அதனை அமல்படுத்த பிரச்சாரம், போராட்டம், மாநாடு என தொடர்ந்து களம் கண்டவர். இடஒதுக்கீட் டுக்கு எதிராக பொருளாதார அளவு கோலைக் கொண்டுவந்து குறுக்கு சால் போட முனைந்தவர்களின் முதுகெ லும்பை முறித்த மதி நுட்பம். தமிழகத்தில் மட்டு மல்லாது இந்தியாவெங்கும் சிதறி யிருந்த சமூகநீதி உணர்வாளர்களை பெரி யார் என்னும் பெருங்குடையின் கீழ்க் கொணர்ந்து, நாடு தழுவிய சமூகநீதிப் போராட்டத்தைக் கட்டியெழுப்பிய வினைத் திட்பம். எந்த வகுப்புவாரி உரிமைக்காக பெரியார் காங்கிரசை விட்டு வெளியில் வந்தாரோ, அதே உரிமையை 69 விழுக் காடாக உயர்த்தி, அதே காங்கிரஸ் மத்தி யில் ஆட்சியில் அமர்ந்திருந்த போதே, முதல்வர், பிரதமர், குடியரசுத தலைவர் என மூன்று பொறுப்புகளிலும் வீற்றிருந்த பார்ப்பனர்களைக் கொண்டே நிறைவேற் றிக் காட்டிய ஆற்றல். சமூகநீதிக்கு இவரே அத்தாட்சி என சட்டப் புத்தகம் படித்தவர் முதல் சட்டப் புத்தகம் சமைப்பவர் வரை தெளியும் வகையில் சமூகநீதிக்காக நுணு கிப்படர்ந்த அருமருந்து. பெரியார் காலத் திலிருந்த இடஒதுக்கீட்டு உரிமையை இரட் டிப்பாக்கிய இமாலயச் சாதனை. எங்கேனும் சமூகநீதிக்கு ஆபத்து வந்தால், சரியாய்க் கண்டறிந்து ஆபத்தை அகற்றிட உதவும் ஈரோட் டுக் கண்ணாடி.

இப்படி தந்தை பெரியார் தம் இயக்கத் தால், தமிழர் தலைவர் கி.வீரமணியின் உழைப்பால் பலன்பெற்ற கோடிக்கணக் கான மக்களில், நன்றிப்பெருக்குடைய பெருமக்களால், பெரியாரை உலகமயமாக் கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பெரியார் பன்னாட்டமைப்பு.

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது

”தந்தை பெரியாரின் கருத்துகளை உல கம் முழுவதும் பரவும் வகை செய்தல் வேண் டும்” என்ற நோக்கத்தால் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 13.11.1994இல் பெரியார் பன் னாட்டமைப்பு (PERIYAR INTERNATIONAL) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் பொறுப்பாளர்களாக அமெ ரிக்கா வாழ் தமிழர்களான டாக்டர் சோம. இளங்கோவன், பேராசிரியர் இலக்குவன் தமிழ் ஆகியோர் இருந்து பணிகளைச் செய்தனர்.

தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சமூகநீதி மய்யத்தின் தலைவர் திரு.சந்திரஜித் யாதவ் மற்றும் அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரக அலுவலரான சின்காவும் கலந்து கொண் டனர்.

இதன் முதன்மைப் பணிகளுள் ஒன்றாக, சமூகநீதிக்காக உழைப்பவர்க்ளுக்கும், பெரியாரியலைப் பரப்புவோருக்கும் சிறப்பு செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” அளிக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது.

முதன்முதலில் பெரியார் பன்னாட்ட மைப்பினர் சமூகநீதியை நிலைநாட்ட தன் ஆட்சியை இழந்த மேனாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) அவர்க ளுக்கு வழங்க முடிவு செய்து (24.12.1996) அன்று சென்னை பெரியார் திடலில் “சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” அளிக்கும் விழாவை நடத்தினர். மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் உடல் நலிவு காரணமாக வர இயலாவிட்டாலும் அவரது கட்சியின் பிரதி நிதியான தமிழக ஜனதா தள முன்னணி வீரர் திரு.கா.ஜெகவீர பாண்டியன் அத னைப் பெற்றுக் கொண்டார்.

முதல் விருதைப் பெறும் மாமனிதரான மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள், “மண்ணுக் குள் புதைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட மண்டல் குழுப் பரிந்துரையைச் சட்டரீதி யாக அமல்படுத்திக் காட்டியவர் திரு. வி.பி.சிங் அவர்கள். அதற்காக ஆட்சியை யும் இழந்தவர்! “சமூகநீதிக்காக எத்தனை நாற்காலிகளையும் இழக்கத்தயார்” என்று குரல் கொடுத்த இலட்சியவீரராக அவர் காட்சி அளித்தார்.

இரண்டாவதாக, விருதுபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு.சீதாராம் கேசரி அவர்கள் “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” பெற்றுக்கொண்டு அவர்கள் வழங்கிய உரையில், இணையற்ற தலைவராகிய பெரி யாரைப் பின்பற்றுவோரிடமிருந்து சமூக நீதிக்கான விருதினைப் பெற்றுள்ள இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் பெரு மிதமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாகும். குறிப்பாக மகிழ்ச்சி அடைவது எதற்காக என்றால், பெரியாரின் மிகச் சிறந்த சீடரும் என்னுடைய நெடுநாளைய நண்பருமாகிய திரு.வீரமணி பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது என்பதற்காகத் தான் என்றார்.

இதே போன்று, பல்வேறு மாநிலத்திலும், பல்வேறு நாடுகளிலும் சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது வரை வழங்கப்பட்ட விருது பெற்றவர்களின் பட்டியலைப் பாருங்கள்.

தொகுப்பு: நூலகர் கி.கோவிந்தன்

- விடுதலை ஞாயிறு மலர் 30 11 19 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக