‘‘நான் இயேசுவின் தூதுவர்- 3 ஆவது நாள் நானும் உயிர்த்தெழுவேன்'' - மரணக் குழியில் புதைந்த பாதிரியார் பலி
ஜாம்பியா,ஆக.31 ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில், ‘‘தான் இயேசுவின் தூது வர் என்றும், தன்னை புதைத்தால் 3 நாள்களுக்கு பிறகு உயிர்த்தெழுவேன்'' என்றும் கூறி மண்ணில் புதைந்த பாதிரியார் ஜேம்ஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவை சேர்ந்தவர் பாதிரியாரான ஜேம்ஸ் சக் காரா (வயது 22). இவர் இயேசுவின் தூதர் என்று தன்னை அறிவித்துக் கொண்டார். பின்னர் இயேசுவை போல் தானும் 3 நாள்களில் உயிர்த்தெழுவேன் என கூறியிருந்தார். இதையடுத்து அவர் இருக்கும் சர்ச் பகுதியில் ஒரு இடத்தில் குழிதோண்டினார்.
அதில் தன்னைத் தானே புதைத்துக் கொண்டார். அப்போது அவர் பைபிளில் உள்ள இயேசுவின் பொன்மொழி களை படித்தார். மரணக்குழியில் படுத்த பாதிரி யாரின் கைகளை மற்றொரு பாதிரியார் கட்டியுள்ளார். பின்னர் மணலை போட்டு அந்த மரணக்குழியை மூடியுள்ளனர். 3 நாள்களுக்குப் பிறகு இவர்கள் அந்த மரணக்குழியை தோண்டி பார்த்தனர். அப்போதுதான் பாதிரியார் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதிரியாரின் உடலை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கைகளை கட்டி இந்த உயிரிழப்புக்கு துணை போன இன் னொரு பாதிரியாரை கைது செய்தனர்.
பாதிரியார் ஜேம்சுக்கு உதவியாக இருந்த இரு ஊழியர்கள் தலை மறை வாகிவிட்டனர். அவர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். இறந்து போன பாதிரியாரின் மனைவி கர்ப்பிணி யாக உள்ளார். குழியில் புதையும் சம்பவத்தை ஜேம்ஸ் வேறு யாரிடமும் கூறாமல், இருவரிடம் மட்டுமே கூறி அவர்களின் ஒத்துழைப்போடு இதை செய்துள்ளது தெரியவந்தது.
மூடநம்பிக்கையால் ஓர் உயிர் பறிபோனது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Casino Queen, MI - MapyRO
பதிலளிநீக்குFind 영천 출장샵 Casino 경상북도 출장샵 Queen, MI, 동두천 출장샵 revenue, 경주 출장안마 industry and 군포 출장샵