ஜம்மு, ஜன.2 ஜம்மு-_காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 16 பக் தர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஜம்முவின் கத்ரா பகுதியில் வைஷ்ணவி தேவி குகைக்கோயில் அமைந்துள்ளது.
புத்தாண்டையொட்டி வைஷ்ணவி தேவி கோயிலில் நேற்று (1.1.2021) அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் பெருகியது. அதிகாலை 2.30 மணி அளவில் கோயில் கருவறைக்கு வெளியே 3-ஆவது நுழைவுவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். அவர்கள் டில்லி, உத்தரப்பிரதேசம், அரி யானா உள்ளிட்ட மாநிலங் களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சுமார்
20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்தனர். அவர் களில் பலரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
காயமடைந்தவர்கள் கத்ரா வில் செயல்படும் நாராயணா மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளனர். ஜம்மு_-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்க ளுக்கு ஆறுதல் கூறினார். அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங் கப்படும்" என்று தெரிவித் துள்ளார்.
வைஷ்ணவி தேவி கோயில் விபத்து குறித்து பிரதமர் நரேந் திர மோடியிடம் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விளக்கம் அளித்தார். ஜம்மு பகுதியை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், கத்ரா பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
விபத்துக்கான காரணம் என்ன?
நேரில் பார்த்த சாட்சிகள் கூறும்போது, “பக்தர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. புத் தாண்டு என்பதற்காக வழக்கத் துக்கு அதிகமாக பக்தர்களை அனுமதித்தது தவறு” என்று தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் தில்பக் சிங், கத்ராவுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,
“வைஷ்ணவி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண் ணிக்கையை குறைக்குமாறு கோயில் அறக்கட்டளையிடம் அறிவுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் உத்தரவின்பேரில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.