வணக்கம்.
182). திராவிடம் அறிவோம்.
கிருஷ்ணமூர்த்திக்கும் நாரதமுனிவர் பெண் வடிவம் எடுத்து உறவு கொண்டு பிறந்த 60 பிள்ளைகளின் பெயர்கள்.
பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதுத, பிரசோத்பதி, ஆங்கிரசு, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, இவ்விருபதும் உத்தம வருஷங்கள், சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருத, சோபகிருத, குரோதி, விஸ்வாவக, பராபவா, இவ்விருபதும் மத்திம வருஷங்கள், பிலவாங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராஷா, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாஷி, குரோதன, அட்சய, இவ்விருபதும்அதம வருடங்களாம், (ஆதாரம்- அபிதான சிந்தாமணி பக்கம் 1691-92.)
மேற்கூறிய 60 வருஷங்களின் பெயர்களில் ஒன்றே ஒன்றாவது தமிழ்ச் சொல்லா? வெளிநாட்டவர் இதை கேட்டால் கை கொட்டி சிரித்து கேலி செய்யமாட்டார்களா?
அதைத் துணிவுடன் எதிர்த்தால் பார்ப்பனர்களின் ஆதரவு தங்களுக்கு கிட்டாமல் போய்விடும் என்பதால் பயந்தாங்கொள்ளிகளாக ,கோழைகளாக பெரிய பெரிய தமிழ் அறிஞர்கள் மனசாட்சியை மாற்றானுக்கு அடகுவைத்துவிட்டுப் போலிப் புகழுக்கும் பெருமைக்கும் தம்மை விற்றுக்கொள்ளளாமா?
இந்தக் குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்கள், புலவர்கள், 1921-ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள், மூன்று முக்கிய முடிவுகள் எடுத்தார்கள்,
1). திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது.
2). அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது
3). திருவள்ளுவர் காலம் கி.மு. 31.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை, இறுதி மாதம் மார்கழி, புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் கிழமைகள் வழக்கிள் உள்ளவை என்றும் முடிவு செய்தார்கள், முடிவுசெய்த தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க. தமிழ் காவலர் சுப்ரமணியபிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, , நாவலர் நா.மு. வேங்கடசாமி நாடார், நாவாலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க்காவலர், கி,ஆ.பெ, விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.
இதை ஏற்றுக்கொண்ட தமிழ் நாடு அரசு 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றிவருகிறது.
"நித்திரையில் உள்ள தமிழா சித்சிரை அல்ல உணக்கு தமிழ் புத்தாண்டு" என்று புரட்சிக்கவிஞர் தைத் திங்களே தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறினாரோ அதுபோல் மானமிகு தமிழர்கள் பச்சையப்பன் கல்லூரியில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று, செம்மொழித் தகுதியை மத்திய அரசுடன் போராடிப் பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது தை முதல் நாளை புத்தாண்டாக்கி காட்டினார்.
தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞரும் திராவிட இயக்கமும் தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே - வடமொழி ஆரியப் பண்டிகைகளைத் தவிர்த்து, பொங்கலே தமிழர் விழா" பெருவிழா, திராவிடர் திருவிழா - என்று கூறி பொங்கள் வாழ்த்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியவார்கள்.
நூல்; தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்.
எழுத்தாளர்; ஆசிரியர் கி. வீரமணி,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக