பார்ப்பன ஆதிக்கத்தால் பவுத்தமும், சமணமும் தமி ழகத்தில் அழித்தொழிக்கப் பட்ட வரலாற்றைச் சான்று களோடு நமக்குத் தந்த தமி ழறிஞர் திரு.மயிலை சீனி. வேங்கடசாமி, 1980 இல் இன் றைய தேதியில் மறைந்தார்.
கழுகுமலை புடைப்புச் சிற்பம், திருப்பரங்குன்றம் கழுவேற்று மரம் மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாத புரம் என எங்கும் பரவிக் கிடந்த சமண அடையாளங் களையும், அரிட்டா பட்டி (மதுரை), கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பல தென்மாவட்டங்களில் பவுத் தமும் பரவிக்கிடந்ததையும், இந்த இரண்டு மதங்களும் மக்களிடையே அதிகம் பர வியிருந்த போதும், பவுத்த, சமண சமயத்தினரிடையே மோதல்கள் நடந்ததாக வர லாற்றில் எங்கும் பதிய வில்லை என்றும், சிலப்பதி காரத்தில் பவுத்தம் மற்றும் சமணம் இரண்டுமே கலந்து தான் இலக்கியம் படைக்கப் பட்டது என்றும் பல தமிழறி ஞர்கள் அறிந்திருந்த போதி லும், அதை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை யோடு, எட்டாயிரம் சம ணர்கள் கழுவேற்றப்பட்டது கட்டுக்கதை என்று கூறிக் கொண்டு, திருஞானசம்பந்தர் எழுதிய பதிகங்களுக்குத் தவறான பொருள் கூறி வந்த வர்களுக்கு எதிரான மதுரை, கப்பலூர், யானைமலை உள் ளிட்ட பகுதிகளில் சமணர் கழுவேற்றம் நடந்த வரலாற் றுச் சான்றுகளை தனது நூல் வாயிலாக எடுத்துரைத்த பிறகுதான் பலருக்கு சம ணர்களின் கழுவேற்றம் குறித்த உண்மை தெரிய வந்தது.
இவர் எழுதிய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்'' என்ற நூல் இதுநாள் வரை களப் பிரர்கள் ஆட்சியில் தமிழ கத்தின் இருண்ட காலம் என்று கூறிவந்த புரட்டைத் துடைத்துப் போட்டது. களப்பிரர்கள் ஆட்சியின் போதுதான், அய்ம்பெருங் காப்பியம், திருக்குறள், நன் னெறி போன்ற அனைத்து வாழ்வியல் மற்றும் பல வணிகம் மற்றும் கப்பற் கட் டும் கலை தொடர்பான நூல் கள் அதிகம் எழுதப்பட்டன. இந்த வணிகம் மற்றும் கப் பல்கட்டும் கலை தொடர் பான நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டு விட் டன. இவற்றை தக்க சான்று களோடு தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ‘இந்தியன் எக்ஸ் பிரஸ்' 2000-ஆம் ஆண்டு களில் ‘இந்தியா மில்லியன் 2000' என்ற நூலில் குறிப்பிட் டுள்ளது.
இவரின் அரிய ஆய்வை நாம் நினைவு கூர்வோம்!
- மயிலாடன்
விடுதலை நாளேடு, 8.720
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக