பக்கங்கள்

திங்கள், 8 பிப்ரவரி, 2021

'அறிவு நாணயம்'

ஒற்றைப் பத்தி : ‘அறிவு நாணயம்'

வீராதி வீரர் என்றும், சூராதி சூரர் என்றும், எதையும் ,எவரையும் விமர்சிக்கும் எழுத்தர் என்றும் தன் முதுகைத் தானே தட்டிக் கொள்ளும் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி 'துக்ளக்' ஆண்டு விழாவில் (எல்லோருக்கும் அனுமதி கிடையாது. கை தட்டும் - ஜால்ராக்களுக்கு மட்டுமே அனுமதி - தஞ்சையில் வெட்ட வெளி மைதானத்தில் ஆண்டு விழா நடத்தி பட்ட அவமானம் போதாதா?) பேசியவை வாராவாரம் துக்ளக்கில்' வந்து கொண்டுள்ளன. இவ்வாரம் (10.2.2021, பக்கம் 11) வெளிவந்துள்ள பேச்சில் இடம் பெற்றிருப்பது என்ன?

"நீதிபதிகளாக வரவிரும்பி விண்ணப்பம் போடுபவர்களில் பலர், அரசியல்வாதிகளின் தயவையும் சிபாரிசையும் நாடி வருகிறர்கள்" (கை தட்டல்) என்று குருமூர்த்திவாள் பேசியதாக வெளிவந்துள்ளது.

அப்படியென்றால் இந்தப் பேச்சுக்காகத்தான் மன்னிப்பு வாங்கினாரா? உண்மையில் அவர் பேசியது என்ன?

"உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருப்பவர்கள் ஆட்சியிலிருக்கும் கட்சிக்காரர்களின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்களே!" என்று தானே பேசினார்.

அந்தப் பேச்சு பிரச்சினையான நிலையில் 'ஆம், நான் தான் அப்படிப் பேசினேன்' என்று அறிவு நாணயத்தோடு (மற்றவர்களைப் பார்த்து 'ஆண்மை'யிருக்கிறதா என்று கேட்டவராயிற்றே!) ஒப்புக் கொள்ளும் திராணியில்லாமல் மன்னிப்புக் கேட்ட மானமற்றதுகள் - வீராதி வீரர்கள் போல பேசலாமா, எழுதலாமா?

ஏற்கெனவே வாய் கொழுப்பில் பேசிவிட்டு பின் மன்னிப்புக் கேட்டு ஜகா வாங்கிய ராஜாக்கள் உண்டு.

பேசியது ஒன்று - 'துக்ளக்'கில் வெளிவந்தது வேறு ஒன்று. இதுதான் 'துக்ளக்'கின் நேர்மைக்கு அடையாளமா?

இதில் குறிப்பிடத்தக்கது என்ன வென்றால் 'அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்டதைக் கூட துக்ளக்கில்' வெளியிடும் யோக்கியதை இல்லை என்பது தான்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆசனத்தில் அமர்ந்திருந்த இரு பார்ப்பன நீதிபதிகளைப் பார்த்து 'பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு!' என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே - இந்தத் தர்ப்பைகள் எங்கே?

- மயிலாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக