பக்கங்கள்

வெள்ளி, 28 டிசம்பர், 2018

ஆசீவகம்

*ஆசீவகம்*

(Aseevagam / Ājīvika)

*தமிழரின் அழிக்கப்பட்ட நெறி*

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்

*ஆசீவகம்*
பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே.

அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர்.

ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில்

ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆஸ்த்திரேலியரான *ஏ.எல். பாசம்*
(Arthur Llewellyn Basham) ஆவார்.

ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை

பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர்.

அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும்.

தருக்கவியலில் இதனை
‘அயலார் கூற்று’ என்பர்.

நன்னூலார்
‘பிறர் மதம் கூறல்’ என்பார்.

மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான

மணிமேகலை, நீலகேசி,
சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும்

ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார்.

பேரா.முனைவர் டி.வி.மகாலிங்கம்,

இரா. விஜயலட்சுமி,

முனைவர் க.நெடுஞ்செழியன்,

ஆதி.சங்கரன்

ஆகிய தற்கால அறிஞர்கள் ஆசிவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

*முனைவர் க.நெடுஞ்செழியன்*

‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம் (Ajivikism: a vanished Indian religion)’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம்,

ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார்.

மௌரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர்

ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள்,

தமிழ் இலக்கியங்களிலோ கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும்

ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர்.

அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல்.பாசம்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர்.

ஆசீவகம் பற்றிய செய்திகளை தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கூட ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடங்கப் பெறவில்லை.

*ஆசீவகம் என்றால் என்ன?*

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம்.

எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார்.

வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார்.

எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை.
இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு.

ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர்.

ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம்.

கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும்
நாம் காணும் விடை
ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர்

வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும்,

அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில்

பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன.

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு
ஒரு இடம் இருந்தது.

அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை.

அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம்

(ஈவு+அகம்)
எனப் பெயர் பெற்றது.

(உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.)

இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக

ஈவு தந்ததால்

ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது.

கைம்மாறு கருதாத செம்மையான

கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல்,

இக்கற்படுக்கைகள்

ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும்,

இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம்
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு – தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் ஆசீவக சித்தர்கள் ஆவர்.

*ஆசீவக நெறியின் வேறு பெயர்கள் யாவை?*

1.அமணம்

அம்மண்ணம்(அம்+அண்ணம்)>அம்மணம்>அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்)>ஸ்ரமணம்>ஸ்ரமணா(Sramana)

அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்) என்றத் திரிபுக்கு

அம்மண்ணம் = அம்+அண்ணம் = அம்+ம்+அண்ணம்(தன்னொற்று மிகல்)

அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அண்ணம் - ஊழ்கியின் மேலண்ணம்

அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கப் பயிற்சி.

ஆசீவக நெறி – பின்னாளில் வடஇந்தியாவில் ஆஜீவிகா என்று மருவியது.

ஆசீவகம்>ஆஜீவகம்>ஆஜீவகா>ஆஜீவிகா(Ajivika)

தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா.முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.

இதன்மூலம்,

அமணம் – ஆசீவக நெறியைக் குறித்தது
அருகம் – ஜைன நெறியைக் குறித்தது

என்பது நமக்குப் புலப்படும்.

பிற்கால சொல்லான சமணம் எனும் கொடுந்தமிழ்ச் சொல் தமிழகத்தின் வடக்கில் ஸ்ரமணா(Sramana) எனத் திரிந்தது(கோட்பாடுகளும் சேர்த்துதான் திரிந்தன). இந்த ஸ்ரமணத்திலிருந்து தான் பின்னாளில், ஜைனம் மற்றும் புத்தம் பிரிந்தன. ஜைனமும் புத்தமும் பிரிந்த பிறகு, ஒரு காலக்கட்டத்தில் சமணம் என்ற சொல் ஆசீவகம், ஜைனம், புத்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துக் குறிக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் தான் ஆய்வாளர்கள் ஆசீவகம் ஜைனத்தின் ஒரு பிரிவாகவும், ஜைனம் என்பதற்கு சமணம் என்றும் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.

*ஆசீவகச் சித்தர்களின் வேறு பெயர்கள்*

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் ‘போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார்.

மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக
ஆண்பாற் பெயராகும்.

கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.

1.அமணர்

2.ஆசீவகர் (அ) ஆசீவகச் சித்தர் (அ) சித்தர்

3.ஐயன், ஐயனார், நல்வெள்ளையார் - கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை நிறத்தை அடைந்தவர்கள்

4.அண்ணர் (அ) அண்ணல்
3

References:
1.    History and Doctrines of the Ajivikas:3 A Vanished Indian Religion,1951
by A.L. Basham

2.    தமிழகத்தில் ஆசிவகர்கள்
by முனைவர் ர. விஜயலக்ஷ்மி

<<<<<<>>>>>>>>>>><<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக