சிந்தனை செய்வோம்

பக்கங்கள்

  • பகுத்தறிவு உலகு

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

பாரதியும் பொதுவுடைமையும் - எதிர்வினை (93)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (93)

பிப்ரவரி 1-15,2022
 January 28, 2022உண்மை

பாரதியும் பொதுவுடைமையும்

நேயன்

 

 

பாரதி பொதுவுடைமைவாதி என்று, பொதுவுடைமைவாதிகளே தூக்கிப் பிடிப்பது-தான் வியப்புக்குரியது; நகைப்புக்குரியது.

நூறு மனிதர்களில் ஒரே ஒருவன்தான் பொதுநலத்தைப் பற்றிச் சிந்திக்கிறான். ஆயிரத்தில் ஒருவன்தான் தன்னைப்போலவே பிறருக்கும் உணர்வுண்டு என்று எண்ணுகிறான். பத்தாயிரத்தில் ஒருவன்தான் எல்லோரும் சமம்,  எல்லோரும் பொது என்கிற உணர்வு கொள்கிறான். அப்படி பத்தாயிரத்தில் ஒருவன்தான் பொதுவுடைமைவாதியாக உருவாகிறான். அப்படிப்பட்ட பொதுவுடை-மைவாதிகளே சிலவற்றில் தவறான புரிதல் கொண்டுள்ளதை வரலாறு நெடுகக் காண முடியும்.

குறிப்பாக இந்தியாவில் மண்ணுக்கேற்ற மார்க்சியம் பேசியவர் பெரியார். ஆனால், பெரியார் ஒரு வறட்டுச் சித்தாந்தி என்றும். அவருக்குச் சரியான பொருளியல் பார்வை இல்லை என்றும். வருணபேதம் வர்க்கபேதம் ஒழிந்தால் சரியாகிவிடும் என்றும் பல்லாண்டு காலம் நம்பியும் பேசியும் வந்தனர். ஆனால், தந்தை பெரியார் சமதர்மமும், பொதுவுடை-மையுமே இந்த மண்ணுக்கு ஏற்றது என்பதை இப்போது புரிந்து கொண்டுவிட்டனர்.

அதேபோல், பாரதி பாடிய சில புரட்சி வரிகளைப் பிடித்துக் கொண்டு, அவரை புரட்சியாளர் போல், பொதுவுடைமைவாதி போல், சமதர்மவாதி போல் காட்டிப் பாராட்டி வருகின்றனர். உண்மையான புரட்சிவாதியான பாரதிதாசன் அவர்களைப் புறக்கணித்து வருகின்றனர்.

இவர்கள் பிடித்துக்கொண்டு நிற்கும் சில புரட்சி வரிகள் கூட சில காரணங்களுக்காக எழுதப்பட்டவை என்பதை இதற்கு முன் விளக்கிவிட்டேன். தமிழை உயர்த்திப் பாடியது, மீசை வைத்தது எல்லாம் தேவைக்கும், சூழலுக்கும், நிர்ப்பந்தத்திற்குமாகவே செய்யப்-பட்டவை என்பதை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு தெளிவுபடுத்தியுள்ளேன்.

மேலும், அவர் ஒவ்வொன்றிலும் தொடக்க காலத்தில் புரட்சியாளராகவும், முற்போக்கு-வாதியாகவும் இருப்பவரைப் போல் எழுதி-விட்டு, இறுதிக் காலத்தில் அதற்கு முற்றிலும் எதிராக, பிற்போக்கான நிலையில், ஆரிய இனவுணர்வுடனும், சமஸ்கிருத வெறியுடனும் பிற மத வெறுப்புடனும், வருணாஸ்ரமப் பற்றுடனும், பெண்ணடிமைச் சிந்தனையுடனும் எழுதினார் என்பதை ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் இதுவரை விளக்கி எழுதிவிட்டேன்.

உண்மை இப்படியிருக்க, அரைகுறையாக சில வரிகளை எடுத்துக்கொண்டு, ஆகா, ஓகோ என்ற பாரதியை யுகப்புரட்சிக் கவியாகக் காட்டுகிறார்கள். பொதுவுடைமைவாதிகள் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதியின் எழுத்துகளை முழுமையாகப் படித்துவிட்டு, சீர்தூக்கிப் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, பாரதி பொது-வுடைமைவாதியா? புரட்சியில் ஆர்வங் கொண்டவரா? என்பதை விளக்க விரும்புகிறேன்.

புரட்சிக்கு அஞ்சியவர் பாரதி

30.6.1906இல் ‘ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சி’ என்று தலைப்பிட்டு,

“ருஷ்யாவில் மறுபடியும் ராஜாங்கப் புரட்சிச் சின்னங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜார் சக்கரவர்த்தியின் அநீதிச் சிங்காதனம் சிதைந்து கொடுங்கோன்மை துண்டு துண்டாகக் கழிவு பெற்று வரும் ருஷ்யாவில் அமைதி நிலைக்க இடமில்லை. சில இடங்களில் நிலச் சேனையுடன் சேனைக்காரர்களும், ராணுவமும் கலகம் தொடங்கி, தொழிலாளிகள் கூட்டமும் சேர்ந்து விடுகின்றனர்’’ என்று எழுதிய பாரதி, 7.7.1906ஆம் நாள்,

“சென்ற வாரம் ருஷ்யாவைப் பற்றி எழுதிய குறிப்பிலே அத்தேசமானது ஒரு பெரிய ராஜாங்கப் புரட்சியேற்படும் (நிலையிலுள்ளது) என்று தெரிவித்தோம். அதற்கப்பால் வந்து கொண்டிருக்கும் தந்திகள் நமது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தி விட்டன. கைகலப்புகள் தொடங்கிவிட்டனவென்றால் ராஜாங்கம் எத்தனை தூரம் அமைதி கெட்ட நிலையிலிருக்க வேண்டுமென்பதை எளிதாய் ஊகித்து அறிந்து கொள்ளலாம்’’ என்று எழுதுகிறார்.

கொடுங்கோன்மைக்கு எதிராய் ரஷ்யாவில் நடத்தப்பட்ட புரட்சியை ‘கலகம்’ என்று எழுதியதோடு, அதைக் கண்டு அச்சப்படுவதாக எழுதியுள்ளார். உண்மையான ஒரு புரட்சியாளன் புரட்சியைக் கண்டு அச்சப்-படுவானா? அச்சப்படுகின்றவன் புரட்சி-யாளனாவானா?

‘அநீதி அழிந்து கொண்டிருப்பதற்கான அடையாளம் தெரிகிறது’ என்று கூறும் பாரதி அதற்கும் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? ஏன் அச்சப்படுகிறார்? அவர் புரட்சிவழியில், பல உயிர்களை இழந்து சமத்துவம் அடைவதை அறவே விரும்பவில்லை. பாரதியின் கொள்கையும், தீர்வும் வேறு. அதை கீழே படிக்கும்போது அறியலாம்.

1906இல் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் நடத்திய புரட்சியைப் பற்றி எழுதும்போது,

“இப்பொழுது மறுபடியும் பெரும் கலகம் தொடங்கி விட்டது. ருஷ்ய சக்ரவர்த்தியின் சிங்காதனம் இதுவரை எந்தக் காலத்திலும் ஆடாதவாறு அத்தனை பலமாக இருக்க, இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. பிரதம மந்திரியின் வீட்டை, வீட்டின் விருந்தின்போது வெடிகுண்டு எறியப்பட்டதும், சைன்யத் தலைவர்கள் கொலையுண்டதும், ராஜ  விரோதிகள் பகிரங்கமாக விளம்பரங்கள் பிரசுரிப்பதும், எங்கே பார்த்தாலும் தொழில்கள் நிறுத்தப்படுவதும், துருப்புகளிலே ராஜாங்கத்-தாருக்கு விரோதமாகக் கலகங்கள் எழுப்புவதும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்வதும் ஆகிய கொடூர விஷயங்களைப் பற்றித் தந்திகள் வந்த வண்ணமாக-வேயிருக்கின்றன’’ என்கிறார்.

அதேபோல், லெனின் செய்த புரட்சியையும் பாரதி கண்டிக்கிறார்.

“கொலையாலும் கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத் தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்’’ என்று கூறிவிட்டு, இதற்கடுத்த வரியிலேயே பாரதி கூறுகிறார்:

“இதற்கு நாம் என்ன செய்வோம்! கொலையாளிகளை அழிக்க, கொலையைத்-தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேரிடுகிறது என்று ஸ்ரீமான் லெனின் சொல்கிறார். இது முற்றிலும் தவறான கொள்கை.

கொலை கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. பாவத்தைப் புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும்… கொலையையும், கொள்ளையையும், அன்பினாலும், ஈகையாலும்தான் மாற்ற முடியும். இதுதான் கடைசி வரை கைகூடிவரக்கூடிய மருந்து. மற்றது போலி மருந்து.’’

“லெனின் வழி சரியான வழி இல்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோமாதலால் இந்தியாவின் ஸாத்தியா ஸாத்தியங்களைக் கருதியேதாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும், முதலாளிகளும் அய்ரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்-களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டு-மென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள். எனவே, கொள்கைகளுடன் கொலைகளும், சண்டைகளும், பலாத்காரங்-களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயலவேண்டும்’’ என்கிறார்.

ஆக, புரட்சியின் மூலம் சமதர்மத்தை உருவாக்கக் கூடாது. மாறாக, பிரபுக்களிடம் பிச்சை பெற்று ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற தர்மகர்த்தா முறையை ஆதரிக்கிறார்.

அதற்கு கடயத்தில் நடந்த நிகழ்வை எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.

(தொடரும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:24 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பாரதி, பொதுவுடைமை

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

பெண்ணுரிமையும் பாரதியும்! - எதிர்வினை (92)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (92)

ஜனவரி 16-31,2022
   January 19, 2022உண்மைtOn எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (92)

பெண்ணுரிமையும் பாரதியும்!

“மண வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்து போய்விடும். இன்று ஒரு மனைவி, நாளை வேறு மனைவி என்றால், குழந்தைகளின் நிலைமை என்ன ஆகும்? குழந்தைகளை எப்படி நாம் சம்ரக்ஷணை பண்ண முடியும்? ஆதலால் குழந்தைகளுடைய சம்ரக்ஷணையை நாடி ஏகபத்னிவிரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது” என்கிறார் பாரதி.

அதாவது குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒரு பெண் கடைசி வரை ஒருவனோடே வாழ்ந்தாக வேண்டும் என்கிறார்.

பிள்ளைகளுக்காக வேண்டி ஒத்து வராத ஒருவனோடு வாழ்ந்தாக வேண்டும் என்றால், பெண் விடுதலை எப்படி வரும்? பெண்ணுரிமை எப்படி பாதுகாக்கப்படும்?

பிள்ளைகள், கணவன்_மனைவி இருவருக்கும் உரியவர்கள். கட்டாயம் பிரிய நேரிடும்போது, பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொண்டு பிரிய வேண்டும் என்பதுதானே சரியாக இருக்கும்?

மாறாக, பிள்ளைகளுக்காக வாழ முடியாத கணவனோடு வாழ்ந்தே ஆக வேண்டும் என்பது, அந்தப் பெண்ணை வாழ்நாள் முழுக்க துன்பத்தில், இன்னலில், சிக்கலில், உளைச்சலில் தள்ளிவிடுமே! அப்படிப்பட்ட அக்குடும்பச் சூழலில் பிள்ளைகள் வளர்வதும் கேடல்லவா?

ஆனால், என்ன இருந்தாலும், எப்படி இன்னல், கேடு வந்தாலும் அந்த ஆணுடனே அவள் வாழ வேண்டும் என்கிறார் பாரதி.

கணவன்_மனைவி பிரிவை, மண முறிவை, தான் எழுதிய கதைகள் மூலமும் எதிர்க்கிறார் பாரதி.

வறுமையில் வாடும் ஏழைப் பெற்றோர், தங்கள் இளம் வயது மகளை ஒரு வயதான பிராமணனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். முதியவருடன் வாழப் பிடிக்காத அப்பெண், வேறு ஓர் ஆணைத் துணையாகத் தேடிப் போய்விடுகிறாள். இது இந்து கலாச்சாரத்திற்குக் கேவலம் என்று எண்ணிய பாரதி, அப்பெண் கிறித்துவ மதத்திற்கு மாறி விடுவதாகக் கதையைக் கொண்டு போகிறார்.

ஆக, கதையில்கூட, சனாதன தர்மம், இந்து கலாச்சாரம் கெடக் கூடாது, கெட்டுவிட்டதாகக் காட்டக் கூடாது; பெண்ணுரிமை, பெண் விடுதலை வந்துவிடக் கூடாது; அப்படி இந்து கலாச்சாரத்தில் நடப்பதாகக் காட்டிவிடக் கூடாது என்று உறுதியாய் இருந்தார் பாரதி.

தன் இறுதிக் காலத்தில் பாரதி எழுதிய இன்னொரு கதையில், ஓர் இளம் விதவைப் பெண், மறுமணம் செய்துகொள்ள முடிவு செய்து, விஸ்வநாத சர்மா என்பவரை மறுமணம் செய்து கொள்கிறார். ஒன்றரை வருடத்தில் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. அவன் குடும்ப வாழ்க்கைக்குத் தகுதியில்லா தவனாகிறான். ஆனாலும், அந்தப் பெண் வாழ்நாள் முழுக்க அவனுக்குப் பணிவிடை செய்தே காலம் கழிக்கிறாள். இது தெய்வீகக் காதல் என்கிறார்.

ஆக, ஒரு பெண் தன் வாழ்வைத் தொலைத்து ஒரு பைத்தியக்காரக் கணவனுக்கு பணிவிடை செய்தே வாழ்ந்துவிட வேண்டும் என்பதுதான் பெண்ணுரிமையா?

மனநலம் பாதிக்கப்பட்டவரை மற்றவர்கள்-தான் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த இளம் பெண் வேறு ஒரு துணையைத் தேடி, தேர்ந்து அவனுடன் வாழ வேண்டியதுதானே அப்பெண்ணின் உணர்வுக்கும், உரிமைக்கும் உகந்ததாக இருக்க முடியும்?

அப்படியில்லாமல், அவள் தன் உணர்வு-களை, விருப்பங்களை அடக்கி, ஒடுக்கி, வாழ்நாள் முழுக்க ஒரு மனநலம் பாதிக்கப்-பட்டவனோடே வேலைக்காரியாய் வாழ்ந்து-விட வேண்டும் என்பதுதான் முற்போக்குச் சிந்தனையா? பெண் விடுதலையா? மனைவிக்குப் பைத்தியம் பிடித்தால், எந்த இளம் வயது ஆணாவது மறுமணம் செய்யாது, அந்த மனநலம் பாதித்த பெண்ணுக்குப் பணிவிடை செய்து காலம் கழிப்பானா?

இவை மட்டுமல்ல, தன் குடும்பத்திலும் பாரதி பெண்ணுரிமைக்கு எதிராகவே நடந்துள்ளார்.

“ஒரு நாள் பாரதி 14 வயதான தமது மூத்த மகள் தங்கம்மாவைத் தம்முடன் கடயத்திலிருந்து அய்ந்து மைலில் உள்ள ஓர் அய்யனார் கோயிலுக்கு வருமாறு உத்தரவிட்டார். அக்கோவில் மலைச்சாரலில் காட்டு நடுவே உள்ளது… தங்கம்மா தயங்கி, வர மறுத்ததால் பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. மகள் கன்னத்தில் விரல் பதிய அறைந்துவிட்டார். தடுக்க வந்த மைத்துனர் மீதும், இளைய மாமனார் மீதும் காறி உமிழ்ந்தார்’’ என்று பாரதியை ஆய்வு செய்த ரா.பத்மநாபன் எழுதியுள்ளார்.

பாரதியைக் கண்ணை மூடிக் கொண்டு முற்போக்குவாதியாகக் காட்டும் சிலர் 120 ஆண்டுகளுக்கு முன்பே பாரதி எவ்வளவு முற்போக்காகப் பேசியுள்ளார் என்று அவரது தொடக்க காலக் கருத்துகளை மட்டும் எடுத்துக் காட்டி இறுதிக் காலக் கருத்துகளை மறைத்து விடுகின்றனர்.

பாரதிக்கு முன்பே இந்த மண்ணில் பலர் பெண்ணுரிமை பற்றிப் பேசியுள்ளனர். செயலிலும் காட்டியுள்ளனர்.

1882இல் “இந்து சுயக்கியான சங்கம்’’ என்ற அமைப்பு, விதவைத் திருமணம், ஜாதி மறுப்பு மணம், பெண் கல்வி, பார்ப்பனப் புறக்கணிப்பு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது.

“தத்துவ விசாரிணி, ‘தத்துவ விவேசினி’ ஆகிய ஏடுகளையும் இந்த அமைப்பு நடத்தியுள்ளது. தத்துவ விவேசினி 17.2.1881 இதழில், “பக்குவ காலத்தில் மணம் செய்யாமல் சிறு வயதிலேயே மணத்தை முடித்து யவ்வனப் பருவம் வருவதற்கு முன்னே பெண் காலம் சென்றால் பிள்ளைக்கு மறுவிவாகம் புரியலாமென்றும், பிள்ளை காலம் சென்றால் பெண் மறு விவாகம் புரியப்படாதென்றும் கருதி நமது தேசத்தில் சில வகுப்பார் மறுமணம் செய்யாது வருகின்றனர். இப்படிச் செய்யாதிருந்ததாலுண்டாகிய தீங்குகள் எண்ணிறந்தன…

யவ்வனப் பருவடைந்த பிறகுதான் பெண்களுக்கு விவாகம் செய்யலாமென்றும், கணவரையிழந்த சிறுமியர்களுக்குப் புனர்விவாகம் செய்யலாமென்றும், இடந்தராது போன காரணம் யாதோ! அறிவிற் சிறந்த மகான்களே! யோசியுங்கள்!’’ என்று எழுதியுள்ளது. பாரதிக்கு முன்பே, பு.முனுசாமி நாயகர், அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர், அயோத்திதாச பண்டிதர் போன்றோர் முற்போக்குச் சிந்தனைகளைப் பரப்பி இந்து சனாதனத்தைச் சாடியுள்ளனர்.

தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர் வாழ்வில் கொள்கை பரிணாமம் பெற்றிருக்கும் இளம் பருவத்திலிருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை மெல்ல மெல்ல அகன்றிருக்கும். ஆண்டு செல்லச் செல்ல, அவர்கள் சிந்தனைத் தெளிவு பெற்று ஒரு கொள்கை முடிவு எடுத்த பின் அவர்களின் இறுதிக் காலம் வரை அதில் பிறழ்வோ, முரண்பாடோ வந்ததில்லை. மேலும் மேலும் அறிவு, சிந்தனை, இவற்றில் வளர்ச்சியும், முதிர்ச்சியும், செம்மையும் மேம்பாடும் காணப்படும்.

ஆனால், பாரதி தொடக்க காலத்தில் மிக முற்போக்காக முழங்கிவிட்டு பின்னாளில் அதற்கு முற்றிலும் முரணாக மூட, சனாதன, பிற்போக்குக் கருத்துகளை கூறத் தொடங்கினார்.

பாரதியை முற்போக்குவாதியாகக் காட்ட முயல்வோர், அவரது தொடக்க காலக் கருத்துகளைக் கூறிவிட்டு, பிற்காலக் கருத்துகளை மறைத்து விடுகின்றனர். சிலர் சில வரிகளை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு பாரதியைப் புகழ்கின்றனர். பாரதியார் எப்படிப்பட்டவர் என்பதை அறிய இறுதிக்கால சிந்தனைகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

(தொடரும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:56 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: எதிர்வினை, பாரதி, பெண்ணுரிமை

பெண்ணுரிமையும் பாரதியும்! - எதிர்வினை (91)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (91)

ஜனவரி 1-15,2022
   January 3, 2022உண்மை

பெண்ணுரிமையும் பாரதியும்!

நேயன்

பாரதி முரண்பாடுகளின் மொத்தம் என்பதை முன்னமே சொல்லியுள்ளோம். அதிலும் பெண்ணுரிமை குறித்து பாரதி இரண்டு உச்சத்திற்கு சென்றுள்ளார். ஒன்று முற்போக்கின் உச்சம். மற்றது பிற்போக்கின் உச்சம்.

முரண்பாடு என்பது பரிணாமம் பெற்றிருப்பின் அது ஏற்கப்படக்கூடியது. ஆனால், பாரதி தொடக்க காலத்தில் அதி தீவிரமாகப் பெண்ணுரிமை பேசிவிட்டு, பின் தலைகீழாக மாறி எழுதுகிறார். அதுதான் சந்தர்ப்பவாதம்; அறிவு வயப்படாமல், உணர்ச்சி வசப்பட்டு கருத்துகளைக் கூறும் பக்குவமின்மை.

பெரியார், பாரதிதாசன் இவர்களின் தொடக்க காலத்திற்கும், அதன்பின் இறுதிக் காலம் வரை அவர்கள் பெற்றிருந்த புரட்சிப் பரிணாமத்திற்கும் ஓர் ஏற்றமான வளர்ச்சி நிலை இருந்தது.

ஆனால், பாரதி தொடக்கக் காலத்தில் முற்போக்கும் எழுச்சியும் கொண்டு எழுதிவிட்டு, பிற்காலத்தில் முரண்பாடுகளும், பிற்போக்குச் சிந்தனைகளையும் கொண்டு எழுதினார்.

“1904 முதல் 1906 வரை “சக்கரவர்த்தினி’’ என்ற பெண்களுக்கான இதழுக்கு பாரதி ஆசிரியராக இருந்தார். அக்காலத்தில் அவர்,

“பரிபூரண ஸமத்துவம் இல்லாத இடத்தில், நாம் ஆண் மக்களுடன் வாழ மாட்டோம்! என்று சொல்லுவதானால் நமக்கு நம்முடைய புருஷராலும், புருஷ சமூகத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மை உடையன வாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; தர்மத்திற்காக இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிறார்கள், ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின் பொருட்டாகத் தர்ம யுத்தம் தொடங்குங்கள்! நாம் வெற்றி பெறுவோம்’’ எனப் பாரதி பெண் விடுதலைக்காகப் பாடுபட பெண்களை அழைக்கிறார்.

மேலும் பாரதி,  “நான் எல்லா வகைகளிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மத முண்டானால் உன்னுடன் வாழ்வேன் இல்லாவிட்டால், இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன்; எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன்; நீ அடித்து வெளியே தள்ளினால் ரெஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும்.”

பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஆண்கள்தான் ஒழுங்காக இருக்க வேண்டும்.

“அடப் பரம மூடர்களே! ஆண்பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் பதிவிரதைகளாக எப்படி இருக்க முடியும்? பதிவிரதயத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகிறது.’’

“எண்ணிறந்த ஸ்திரீஹத்தி புரிந்து, இத்தேசத்துக்கெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் அரக்கனை மிதித்துக் கொல்லும்படியாக முதலிலே துக்கப்பட்ட ராம் மோஹனரின் திருவடியை நாம் மறந்துவிட்டால் நமக்கு உய்வுண்டாமா? எனப் பெண்களிடம் கேட்கிறார் பாரதியார்.

அது மட்டுமல்ல, ஸதியில் எரிக்கத் தயார் நிலையில் சுடுகாட்டில் இருந்த ஒரு இராசபுத்திரப் பெண்ணை (அக்பர் ஆட்சியில் சதிக்குத் தடை இருந்தது எனப் பாரதி குறிப்பிட்டுள்ளார்), ஒரு முகமதிய வாலிபன் அந்த இராச புத்திரர்களைக் கொன்று அந்தப் பெண்ணை மீட்டுச் செல்கிறான்; அந்த முசுலிம் வாலிபனுக்கும், அந்த இராசபுத்திரப் பெண்ணுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நடப்பதாகத் துளஸிபாயி என்னும் கதையின் வாயிலாகவும் உடன்கட்டை ஏறுதலை பாரதி எதிர்த்தார்.

1906 மேற்கண்டவாறு உடன்கட்டை ஏறுதலைக் கண்டித்து எழுதிய பாரதி, பின்னாளில் உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பவராக மாறி விடுகிறார்.

1910 பிப்ரவரியில் ‘கர்மயோகி’ இதழில் பாரதி எழுதியதாவது:

“நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரீகளே மஹா ஸ்திரீகளாவார்கள்” என்று உடன்கட்டை ஏறுதலை ஆதரிப்பவராக மாறிவிடுகிறார்.

தொடக்கக் காலத்தில் பாரதியார் குழந்தை மணத்தை எதிர்த்தார். கலப்புத் திருமணங்களை ஆதரித்தார். பெண்கள் விவாகரத்து செய்து கொள்வதையும் ஆதரித்துள்ளார். ஏன், பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை என்றால் திருமணமே செய்து கொள்ளாமல் கூட விட்டு விடலாம் என்று கூறியவர், பிற்காலத்தில் தன் கருத்துகளைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொள்கிறார்.

கற்பு நிலை யென்று சொல்ல வந்தால் – இரு

கக்ஷிக்கும் அஃது பொதுவில் வைப்போம்

வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்

வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் (கும்மி)

இவ்வாறு பெண் விடுதலைக் கும்மிப் பாடலை இயற்றிய பாரதிதான் பின்னாளில்,

“ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை முதலிய பெண்களின் சரிதைகளைக் கேட்கும் போது, இத்தகையோர்களுக்கு இம்மாதிரி மனப்போக்கு எவ்விதம் ஏற்பட்டதென்று நினைத்து நினைத்து மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. இம்மாதிரியான கற்புடைமை. இத்தேசத்துப் பெண்களுக்கு என்றும் ஒரு சிறந்த புவனமாக விளங்கி நின்றமை நமது நாட்டிற்கே ஒரு பெருமை ஆகும்’’ என பழைய சனாதன பெண்ணடிமை முறைகளை ஆதரிக்கிறார்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் பெண்ணடிமை நிலையை கற்பின் அடையாளமாகப் பிழைபடக் காட்டுகிறார் பாரதி.

1909 ‘ஆகஸ்ட் இந்தியா’ இதழில், ஒழுக்கம் உள்ள பெண்களைப் பற்றிப் பாரதி கூறும் போது, “ஓ இந்தியனே! சீதை, சாவித்திரி, தமயந்தி இவர்களும், இன்னும் இவர்களைப் போன்ற ஸ்திரீ ரத்தினங்களும் உன் பெண்மணிகளாவர். ஒழுக்கத்திற்கு அவர்களை நமக்கு முன்மாதிரியாக வைத்துக் கொள்ளலாம்’’ என்கிறார்.

இன்னும் பிற்காலத்தில் 1920 மே மாதத்தில் தேசியக் கல்வி’ என்ற தலைப்பில் பாரதி எழுதும் போது பெண்கள் விவாகரத்து செய்து கொள்ளக்கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். அதுகுறித்து அவர், “காதல்  விடுதலை வேண்டுமென்று கூறும் கக்ஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித் பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அக்னி சாக்ஷி வைத்து உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை என்று சத்யம் பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் சஹிக்கத்தக்க அல்லது சஹிக்கத் தகாத பந்தங்களாகவே முடிகின்றன வென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுதலே நியாயமென்றும், இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகின்ற தென்றும், ஆதலால் விவாகம் சாச்வபந்தம் என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கக்ஷியார் சொல்லுகிறார்கள்.

ஆனால் தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம், மேற்படி விடுதலைக் காதற் கொள்கையை அங்கீகாரம் செய்தல் சாத்தியமில்லை…. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மண வாழ்க்கைக்கும் பொருந்தாது’’ என்கிறார் பாரதி.

(தொடரும்…)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:39 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பாரதி, பெண்ணுரிமை

வியாழன், 9 மார்ச், 2023

மானமிகு ஆ.இராசா மீது பெண் எம்.பி.க்கள் புகாரா? 'பலே' 'பலே!'


      September 23, 2022 • Viduthalai

மின்சாரம்

'தினமலர்', 'இந்து தமிழ் திசை', 'துக்ளக்' பார்ப்பன வகையறாக்கள் மானமிகு ஆ. இராசாமீது அவதூறுச் சேற்றை கூச்ச நாச்சமில்லாமல் அள்ளி வீசுகின்றார்கள். அவர் கூறியதில் என்ன குற்றம் என்று அவர்களால் எடுத்துச் சொல்ல முடியவில்லை; காரணம் - அவர் கூறியதெல்லாம் உண்மை - ஆதாரப் பூர்வமானவை.

இந்த நிலையில் ராசாவுக்கு எதிராக பெண் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் புகார் செய்துள்ளார்களாம். 

இதைவிடக் கேவலம் ஒன்று இருக்க முடியுமா?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் மனு தருமத்தை முதலில் கொளுத்த வேண்டியவர்கள் பெண்கள்தான்.

இதைவிடக் கேவலமாக எழுத முடியாது - பேச முடியாது - புழுத்த நாய் குறுக்கே போனது என்பதுபோல அவ்வளவுக் கேவலமாக பெண்களைப்பற்றி மனுதர்மம் சாக்கடைக் கும்பி எழுதுகோலால் கிறுக்கித் தள்ளியுள்ளது.

எடுத்துக்காட்டுக்காக, ஒன்றிரண்டு இதோ! 

மனுதர்மம் அத்தியாயம் - 5 பாலியத்தில்' தகப்பன் ஆஞ்சையிலும், யௌவனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாது, ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது (சுலோகம் 148).

- இதன்படி பார்த்தால் பெண்கள் படிக்கலாமா? உத்தியோகம் செல்லலாமா? தேர்தலில் நிற்கலாமா? அமைச்சராகலாமா? நீதிபதியாகலாமா?

மனுதர்மம் அத்தியாயம் 9 என்ன கூறுகிறது?

மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள் (சுலோகம் 14).

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (சுலோகம் 17).

மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ்   - சாஸ்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன (சுலோகம் 19).

மனுதருமத்தில் உள்ளதை உள்ளபடியே மானமிகு ஆ. இராசா எடுத்துக் கூறினால் கோபம் கொப்பளிக்க கூக்குரல் போடும் அருமைச் சகோதரிகளான பெண் எம்.பி.க்களே!

மனு தர்மத்தில் கூறப்படும் பெண்கள்பற்றிய இந்தக்  கேவலத்தை, இழிவை ஏற்றுக் கொள் கிறீர்களா?

மனுதர்மம் தான் எங்கள் வழிகாட்டி என்று கூறும் மங்கையர்த் திலகங்களே, மனுதர்மம் கூறுவதை ஏற்று உங்கள் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்வீர்களா?

அடுத்து என்ன செய்யப் போகிறார்களாம்? 

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளனராம்.

அதில் ராசாவின் பேச்சு தொடர்பான பத்திரிகை செய்திகள், 'வீடியோ'வின் எழுத்து வடிவம் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து உள்ளனராம்.

லோக் சபாவில் மக்களவைத் தலைவர் இல்லாத நேரத்தில் சபையை நடத்துவதற்கு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக  மக்களவைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அதில் ஒருவரான ஆ.ராசாவை அந்தப் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வலியுறுத்தி உள்ளனராம்.

இது போன்றவற்றை வித்தாரமாக, விஸ்தாரமாக வெளியிடுவதற்கென்றே 'தினமலர்' என்ற திரிநூல் ஏடு 'அவதாரம்' எடுத்திருக்கின்றது ('தினமலர்' 22.9.2022 பக்கம் 9).

மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் முறையிடும் பெண் எம்.பி.க்களே, உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா?

யார் இந்த ஓர்பிர்லா?

'பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்.. 

லோக்சபா சபாநாயகர் பிர்லா சர்ச்சை பேச்சு'

ஜெய்ப்பூர் (11.9.2019) பிராமணர்கள் பிறப்பால் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில பிராமண மகாசபை கூட்டம் நடைபெற்றது. அதில் ஓம் பிர்லா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அக்கூட்டத்தில் பிர்லா பேசுகையில், "மற்ற சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக எப்போதும் உழைக்கும் ஒரு சமுதாயம்தான் பிராமண சமுதாயம். நாட்டுக்கே வழி காட்டிய சமுதாயம் பிராமண சமுதாயம். கல்வியையும், நெறிகளையும் சமூகத்தில் பரவி தழைத்தோங்கச் செய்தது பிராமண சமுதாயம்தான்.

இன்று கூட ஒரு கிராமத்தில் ஒரே ஒரு பிராமணக் குடும்பம் இருந்தாலும் கூட மற்றவர்களை அந்தக் குடும்பம் கல்வியிலும், தியாகத்திலும், சேவை மனப்பான்மையிலும் மற்றவர்களை விட உயர்ந்ததாக இருக்கும். பிராமணர்கள் பிறப்பாலேயே மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் ஆவர்" என்று கூறியிருந்தார்.

அத்தோடு நில்லாமல், இதுதொடர்பாக பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் கூடஅவர் கருத்து கூறியிருந்தார். அதில், பிராமணர்கள் தங்களது தியாகத்தாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். இதனால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் திகழ்கின்றனர் என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில மக்கள் சிவில் உரிமை கழக தலைவர் கவிதா சிறீவாத்சவா கூறு கையில், பிர்லா பேச்சு மிகத் தவறானது, கண்டனத்துக்குரியது. அவர் உடனடியாக இதை திரும்பப்  பெற வேண்டும்

ஒரு சமூகத்தை உயர்த்திப் பேசுவதன் மூலம் அவர் மற்ற சமூகங்களை தாழ்த்தியுள்ளார். இது அரசியல் சாசனச் சட்டம் 14ஆவது பிரிவின் படி தண்டனைக்குரியது. ஜாதிய துவேஷத்தை பரப்பியுள்ளார் ஓம் பிர்லா. இதுதொடர்பாக அவர் மீது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் மனு கொடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார் கவிதா.

பிறப்பால் உயர்ந்தவர்கள் பிராமணர்கள் என்று பிராமணர் மாநாட்டிற்குச் சென்று - அரசமைப்புச் சட்டத்தின்படி உயர்ந்த பதவிச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஒருவர் கூறுகிறாரே - இதற்குப் பெயர்தான் மனுதர்மப்புத்தி என்பது!

மனுதர்ம சிந்தனை உள்ளவர்கள், அதற்கு விரோதமாக அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் ஒருவர் சபாநாயகராக இருக்க லாமா என்று கேட்க வேண்டிய பெண்கள் மனு தர்மத்தை எதிர்த்து அரசமைப்புச் சட்டத்திற்கு உகந்த வகையில் உயர்ந்த வகையில் பேசிய மானமிகு ஆ. இராசாவைக் குறை கூறிப் புகார் செய்யலாமா?

மானமிகு ஆ. இராசா கூறியது எவ்வளவுப் பொறுப்பானது! வழிகாட்டத் தகுந்தது; மனிதத்தை உயர்த்தி மனு தர்மத்தின் கீழ்க் குணத்தை விமர்சித்தது - அவர் செய்துள்ள மகத்தான மானுடத்தொண்டாகும். குறிப்பாகப் பெண்கள் அவருக்கு ஒரு பாராட்டு விழாவையே நடத்த வேண்டும்.

பரவாயில்லை - இதைப் பூதாகரப்படுத்தியதன் மூலம் மனுதர்மத்தின் முகத்திரையைக் கிழித்துக் காட்டும் நல்லதோர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லவா!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:21 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆ.இராசா, தினமலர்

புதன், 1 மார்ச், 2023

வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!

 பதிலடிப் பக்கம்

       December 31, 2022 • Viduthalai

வரலாற்றுப் புரட்டர்கள் யார்? வானதி சீனிவாசனுக்குப் பதில்!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றறிஞர்களைக் கொண்ட அமைப்பான இந்திய வரலாற்றுப் பேரவையின் 81-ஆம் மாநாடு சென்னை கிறித்தவக் கல்லூரியில் கடந்த டிச. 27 அன்று தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின், “ வரலாறு, அறிவியல்பூர்வமான உண்மை யான வகையில் அமைந்திட வேண்டும். கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள். அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது.

அதனை ஏற்கக்கூடாது. அறிவுமிக்க சமுதாயம் அதை ஏற்றுக் கொள்ளாது. 

இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்.  கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம், நிர்வாகம் அனைத்திலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகள், காப்பாற்றப்பட வேண்டும். இத்தகைய சூழலில், இந்திய வரலாற்று காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் பணி என்பது மிக மிக முக்கியமானது! 

1994-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை, நான் இங்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். ‘மதச்சார்பின்மை என்பது, நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையாகும். அதை எந்த வகையிலும் மீறுவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு கட்சியும் மதவாதக் கட்சியாக இயங்க அனுமதிக்கக் கூடாது.

பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பிளவை உண்டாக்கி, அவர்களுக்குள்ளேயே படுகொலை களைத் தூண்டுகிற சக்திகளை இயங்க அனுமதித்தால், ஜனநாயகமே இல்லாமல் போய்விடும். ஒரு மதச்சார்பற்ற அரசு அந்த சக்திகளைக் கட்டுப்படுத்தி அழித்து, சமுதாயத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்' - என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். 

"நாங்கள் பழைமைவாதிகள் அல்ல"

இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இடையில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டதே வேற்றுமைகள்.

இந்த வேற்றுமைகளை, ஏற்றத்தாழ்வை நியாயப் படுத்தும் பொய் வரலாறுகளைப் புறந்தள்ளி மக்களை மய்யப்படுத்திய உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும். தமிழ்நாடு தொன்மையான வரலாறு கொண்ட நிலப்பரப்பு! இங்கே இந்த மாநாடு நடப்பது மிகமிகப் பொருத்தமானது! நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்றுக் கொண்டவர்கள்தான். ஆனால் பழைமைவாதிகள் அல்ல!  அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் எங்கள் வரலாற்றுப் பெருமைகளைப் பேசுகிறோம்” என்று முதலமைச்சர் தாம்பரத்தில் ஆற்றிய நெருப்பு உரை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி வரை பற்றி எரிகிறது.

மதச்சார்பற்ற சமத்துவ சமூகமாக இருந்த இந்த நாட்டில் ஒரு சிலரால் வேற்றுமைகள் உருவாக்கப் பட்டன என்று அவர் பேசியது யாரைப் பற்றி என்று எல்லோருக்கும் தெரியுமல்லவா? எப்போதும் எல்லாவற்றிற்கும் தாண்டிக் குதிக்கும் பா.ஜ.க.வின் பார்ப்பனச் சிண்டுகள், இதில் தாங்கள் தலையிட்டால், ‘எங்க தோப்பனார் பூஜை ரூமில் இல்லை’ என்கிற கதையாக மாட்டிக் கொள்வோமே என்று யோசித்து, எச்சரிக்கையாக ஒரு சூத்திர அம்பினை எய்திருக் கிறார்கள்.

பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டி ருக்கிறார், அதில், வழக்கமான ஆர்.எஸ்.எஸ்.சின் புரட்டுகளையே மீண்டும் உருட்டியிருக்கிறார்.

திராவிடம் என்பது கட்டுக்கதையாம்! ஆங்கிலே யர்கள் கட்டிவிட்டதாம்! இனவாதமாம்! சொல்கிறார் வானதி சீனிவாசன்!

திராவிடம் என்பது இனவாதமல்ல; இழிவுகள், ஒடுக்குமுறைகள் கொடுமைகளிலிருந்து காத்துநிற்கும் இன விழிப்புணர்வு! ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற பரந்த நோக்கம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற மாந்தநேயம்.

ஹிந்துத்துவா என்பது தான் மதவாதம் - மதவெறி! பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் சனாதனத்தைப் பாதுகாக்க முன்னிறுத்தப்படும் ஏவல் விலங்கு!

வெள்ளைக்காரனா காரணம்

திராவிடம் என்பது ஏதோ வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டது என்ற பொய்யைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆதாரத்துடன் பல முறை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்தப் பொய்யை அம்பலப்படுத்தி யிருக்கிறார். 

மநுதர்மம் என்ன வெள்ளைக்காரன் எழுதியதா?

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சுவி, நடன், கரணன், கஸன், திரவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத் திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையைய டைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)

பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற் சொன்னபடி சூத்திரர்களாய் விட்டார்கள். (அத் தியாயம் 10; ஸ்லோகம் 44)

திராவிடர்

திராவிடன் என்றால் யார் - திராவிடம் என்றால் என்ன என்று எழுதுகிறதே மநுதர்மம். 

‘அய்ம்பத்தாறு தேசங்களுள் ஒன்று’ என்றும், ’தமிழ்’ என்றும் திராவிடத்திற்குப் பொருள் சொல்கிறதே தமிழ்ப் பேரகராதி!

18 தேசங்களுள் ஒன்றாகத் திராவிடம் பற்றிச் சொல்கிறதே 9-ஆம் நூற்றாண்டின் திவாகர நிகண்டு!

8-ஆம் நூற்றாண்டின் குமரில பட்டர் சொல் கிறாரே!

12-ஆம் நூற்றாண்டு விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டில் வரும் ”திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரி மேலக் கொண்டான் திராவிட தேசம்” என்ற வரிகளில் வரும் திராவிடம் என்பது என்ன?

தளவாய்புரம் செப்பேட்டில் பாண்டியனைத் திராவிடன் (திரமிட) என்று குறிப்பிடும் சமஸ்கிருதப் பகுதியும், அதற்கு பாண்டிய தமிழாபரணன் என்று குறிப்பிடும் தமிழ்ப் பகுதியும் சொல்கிறதே!

வால்மீகி இராமாயணம், மகாபாரதம், பாகவதம், மச்சபுராணம் என்று இவர்களின் இதிகாச, புராணங்கள் எல்லாம் திராவிடம் என்று குறிப்பிடுகின்றனவே! பவுத்த, சமண இலக்கியங்கள், சீன, பிராக்ருத, பாலி மொழிப் பதிவுகள் எல்லாம் திராவிட என்ற சொல் லைத் தமிழர்கள்- திராவிடர்கள் என்ற நோக்கில் பயன்படுத்தியுள்ளனவே!

வெள்ளைக்காரர்கள் வருகைக்கு முன் தென் னாட்டை, தமிழ்நாட்டைக் குறிக்க திராவிடம் என்ற சொல் திராவிட என்றோ, த்ரமிட என்றோ பயன் படுத்தப்பட்டுள்ளதே, இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வார் அம்மையார்? 

ஆர்.எஸ்.எஸ். அச்செடுத்துக் கொடுத்த அரதப் பழசான அவதூறுக் குப்பைகளின் ஜெராக்ஸ் நகலைக் கையில் வைத்துக் கொண்டு இப்படியே காலம் தள்ளாமல், அறிவார்ந்த செய்திகளை அருள்கூர்ந்து அவர் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அவ்வளவு ஏன்? “நானும் ஒரு பச்சைத் திராவிடன் தான்!” என்று கச்சை கட்டினாரே, அதே பா.ஜ.க.வில் இருக்கும் இன்னொரு சூத்திரத் தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன். ஒரு முறை அவரிடமும் கேட்டுப் பார்க்கலாமே! 

பா.ஜ.க.வில் சூத்திரத் தலைமைகள் உருவாவணதற்கே தமிழ்நாட்டில் உள்ள  திராவிட இன உணர்வு தானே காரணம். ராதா ராஜன்கள் இருந்த இடத்தில் வானதி சீனிவாசன்கள் வந்து சேரவே திராவிட இயக்கம் இல்லா விட்டால் சாத்தியப்பட்டிருக்குமா? ஹெச்.ராஜாக்களும், திருப்பதி நாராயணன்களும், கே.டி.ராகவன்களும் தமிழ் நாட்டின் பாஜக தலைவராக முடியாமல், பெயரளவுக்கேனும் சூத்திரத் தமிழர்களை, தமிழச்சிகளை முன்னிறுத்துகிறதே பா.ஜ.க! 

திராவிட இன உணர்வின் பலன் மற்றவர்களை விட, புகைச்சல் பார்ப்பனர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பார்ப்பனரல்லா தாருக்குத் தெரியாதா என்ன?

திராவிடம் என்ற சொல்லுக்கு இத்தனைப் பெரிய வரலாறு உண்டு. ஆனால் இந்து மதம் என்ற பெயர் யார் வைத்தது? 'வெள்ளைக்காரன் வந்து கொடுத்த பெயர் தான் இந்து' என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் தனது 'தெய்வத்தின் குரலில்' ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது தெரியுமா அம்மையாருக்கு?

இன்னொன்று. 

தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ மன்றத்தின் விருது வழங்கப்படவில்லை என்ற வடிகட்டிய பொய்யை வாரிக் கொட்டியிருக்கிறார் அம்மையார்.

யுனெஸ்கோ விருது

1970-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்த கல்வி ஆண்டில்,  சென்னையில் யுனெஸ்கோ மன்றம் (Unesco Mandram) தந்தை பெரியார் உள்ளிட்ட பலரையும் அழைத்துப் பாராட்டி விருதளித்துச் சிறப்பித்ததே! அந்த அமைப்பு யுனெஸ்கோவால் உல கெங்கும் தொடங்கப்பட்ட யுனெஸ்கோ மன்றங்களுள் ஒன்றல்லவா? அந்த விழாவில் பங்கேற்று விருது வழங்கியவர் அன்றைய ஒன்றிய அமைச் சரும், கல்வியாளரும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான டாக்டர் திரிகுணசென் அல்லவா? உடன் பங்கேற்ற ஒன்றிய இணை அமைச்சர் பேராசிரியர் ஷேர் சிங் யார்? இவர்கள் திராவிட இயக்கத்தவரா? 

அன்றைய முதலமைச்சர் கலைஞர், சட்டப் பேரவைத் தலைவர் சி.பி.சிற்றரசு ஆகியோரைக் கூட, அவர்கள் அந்தப் பொறுப்பின் அடிப்படையில் நிகழ்ச்சியில் பங் கேற்றிருந்தாலும் திராவிட இயக்கத் தவர் என்று சொல்லி விடலாம். ஆனால், அன்றைய தலைமைச் செயலாளர் சி.ஏ.ராமகிருஷ்ணன் பங்கேற் றிருக்கிறாரே! அரசு விழா அல்லாத ஒன்றிலா ஒன்றிய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்? யுனெஸ்கோ மன்றம் என்ற அமைப்பே இல்லை என்று சொல்லப் போகிறார்களா? உலகம் முழுவதும் யுனெஸ்கோ கிளப் என்று உருவாக்கி நெறிப்படுத்தி வருகிறதே யுனெஸ்கோ நிறுவனம், அதை மறுக்கப் போகிறார்களா?

பெரியாருக்கு வழங்கப்பட்ட விருது, விருது வழங்கிய ஒளிப்படம், பத்திரிகைச் செய்திகள் அனைத்தும் ஆதாரங்களாக இருக்கின்றன. அவ் வளவு ஏன்? விருது வழங்கப்பட்டபோது உடனிருந்த பலரும் கூட உயிருடன் இருக்கும் இந்த நிலையிலேயே 50 ஆண்டுகளுக்கு முன், இதே சென்னையில் நடந்த வரலாற்றையே மறுத்துப் பொய்யுரைக்கும் இந்தக் கூட்டம், திராவிட இயக்கத்தைப் பார்த்து கட்டுக்கதை என்று கூறுவதா?

விருதுகளால் அளக்கப்பட முடிந்த ஆளுமையா தந்தை பெரியார்?

சிந்திக்கட்டும்

திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்வதன் மூலம் அது உண்மையாகாவிட்டாலும், மக்கள் மனதில் ஒரு சந்தேகத்தையாவது விதைத்துவிடுங்கள் என்று விவாதக் களத்திற்குச் செல்கையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனையை இங்கேயும் பின்பற்றிப் பார்க்கலாம் என்று நினைக் கிறாரா அம்மையார் வானதி?

கொஞ்சமேனும் கூர்மையாகப் பேசுவார் என்று பார்த்தால், அழி வழக்குகளைத் தூக்கி வந்து கொண்டிருக் கிறார் வழக்குரைஞர், பாவம்! 

பெண்களையும், சூத்திரர்களையும் இழிவாகப் பேசும் பகவத் கீதை, பெண்களைக் கல்வி கற்கக் கூடாது என்று தடுத்த ஹிந்து மதம், பிரதிலோமம்-அநுலோமம் என்று ஜாதி மறுப்புத் திருமணத்தை இழிவுபடுத்தும் மநுதர்மம் இவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு. வழக்குரைஞ ராகவும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவராகவும், தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் அம்மையார் வானதி சீனிவாசன் அவர்கள், மிச்சமிருக்கும் ஹிந்து மதக் குப்பை களையும், பார்ப்பன அடிமைத்தனத்தையும் தூக்கி எறிந்துவிட்டுச் சிந்திக்கட்டும்!

திருத்தப்பட்ட இந்திய வரலாறு கற்பிக்கப்படுமாம் - ஒன்றிய கல்வி அமைச்சர்

"‘கற்பனைக் கதைகளை சிலர் வரலாறாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் - அதனை நம்பி ஏமாந்து விடக்கூடாது - அதனை ஏற்கக் கூடாது. அறிவுமிக்க சமுதா யம் அதை ஏற்றுக் கொள்ளாது. இன்று நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்து என்பது இந்த வரலாற்றுத் திரிபுதான்.’ என்ற முதலமைச்சரின் இந்த வரிகளோடு, அப்படியே நான் உடன்படுகி றேன்” என்கிறார்  வானதி சீனிவாசன். உடன்பட்டுத் தானே ஆக வேண்டும். வரலாற்றுத் திரிபு செய்வ தென்று தீர்மானித்துத் தானே இந்துத்துவவாதிகள் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

நம் முதலமைச்சர் தமிழ்நாட்டின் தலைநகரில் உரையாற்றிய அதே நாளில் (டிசம்பர் 27) பீகார் மாநிலம் சசாரா மாவட்டம் ஜமுஹார் நகரில் உள்ள கோபால் நாராயணன் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் அங்கமாக ஆக்கப்பட்டுவிட்ட ஒன்றிய அரசின் நிறுவனமான இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் (ICHR), ஆர்.எஸ்.எஸ்.சின் ஒரிஜினல் அங்கமான அகில பாரதிய இதிகாஸ் சங்கலன் யோஜனாவுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ன பேசியிருக்கிறார்?

“Students across the country will be taught the "corrected" version of Indian history under the National Education Policy (NEP) from Vasant Panchami on January 26” 

“தேசிய கல்விக் கொள்கையின் கீழ் “திருத்தப்பட்ட” இந்திய வரலாறு நாடு முழுக்க உள்ள மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும்” என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். 

(எப்போதிலிருந்தாம்? ஜனவரி 26 - வசந்த பஞ்சமி அன்றிலிருந்தாம்! வடநாட்டில் அன்று தான் சரஸ்வதி பூஜையாம்! ஜனவரி 26  என்றால் இந்தியக் குடியரசு நாளாயிற்றே, அதெல்லாம் நினைவிருக்குமா ஹிந்துத்துவக் கல்வி அமைச் சருக்கு? அட, 'பாவப்பட்ட' இந்தியக் குடியரசே!)

எதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார் என்பது அன்றைக்கே அம்பலமாகிவிட்டதா, இல்லையா? 

இன்று நேற்றா? இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன் வாஜ்பேயி தலைமையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே இத்தகைய வரலாற்றுத் திரிபுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்களே! இதை எதிர்த்து நிற்கக் கூடிய அமைப்பான இந்திய வரலாற்றுப் பேரவை யின் (Indian history Congress) மாநாட்டில் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசினால், எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்களே என்று அவர்களுக்கு அதிர்ச்சியாகத் தானே இருக்கும்!

கண்ணாடியைப் பார்த்து முதலமைச்சர் பேசியிருப்பார் என்கிறார் வானதி அம்மையார்! டிரான்ஸ்பரண்ட் கண்ணாடிகளில் ஓடும் எழுத்துகளைப் பார்த்துப் பேசும் பிரதமர் மோடி என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?

கண்ணாடி என்றதும் நினைவுக்கு வருகிறது. ‘கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கொண்டு கல்லெறியாதீர்கள்!’ என்பார்கள் வழக்கமாக! நீங்கள் பா.ஜ.க.வுக்குள் இருந்தபடியே இன்னும் கொஞ்சம் பெரிய கற்களைத் தூக்கி எறியுங்கள் - அப்போதுதான் சீக்கிரம் உடையும்! ம்ம்.. ஆகட்டும்!

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார் 

மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:27 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: திராவிடம், பதிலடி, யுனஸ்கோ, விருது

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

பழங்குடியினர் காட்டுவாசிகளா? இழிவு படுத்தும் பா.ஜ.க.!

 

       November 26, 2022 • Viduthalai

பாணன்

பழங்குடியின சமூகங்களை ஆதிவாசிகளுக்குப் பதிலாக ‘வனவாசி’ என்று  மோடி மற்றும் பா.ஜ.க குறிப்பிடுவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ள நிலையில், அந்த வார்த்தைகளுக்கு வித்தியாசம் என்ன, அவற்றின் பயன்பாட்டின் வரலாறு என்ன? என்பதைக் காண்போம்!

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 21.11.2022 அன்று பழங்குடியின சமூகத்திற்காக பா.ஜ.க. மற்றும் அதன் சித்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும் ‘வனவாசி’ என்ற சொல்லை, காங்கிரசால் பயன்படுத்தப்படும் ‘ஆதிவாசி’ என்ற சொல்லுடன் வேறுபடுத்தி கேள்வி எழுப்பினார்.

“பா.ஜ.க.,வினர் உங்களை ஆதிவாசி என்று அழைப்பதில்லை. அவர்கள் உங்களை எப்படி அழைக்கிறார்கள்? வனவாசி (காட்டுவாசி)  என்கின்றனர். நீங்கள் இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. நீங்கள் காட்டில் வாழ்கிறீர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள், அதாவது நீங்கள் நகரங்களில் வாழ வேண்டும், உங்கள் குழந்தைகள் பொறியாளர்களாக, மருத்துவர்களாக வேண்டும், விமானத்தில் பறக்க வேண்டும், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அவர்கள் விரும்ப மாட்டார்கள்,” என்று பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மஹுவா தொகுதியில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி கூறினார்

பழங்குடியினரை விவரிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் பட்டியல் பழங்குடியினர் அல்லது “அனுசுசித் ஜன்ஜாதி” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. பல பழங்குடியினர் தங்களை ‘மூல்நிவாசி/ஆதிவாசி’ என்று குறிப்பிடுகின்றனர், அதாவது ‘முதல் குடிமக்கள்’. இது பொது சொற்பொழிவுகளில், ஆவணங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

காட்டுவாசிகள் என்று பொருள்படும் ‘வனவாசி’ என்பது சங் பரிவாரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த சங் பரிவார் அமைப்புகள் பழங்குடியினர் பகுதிகளில் “கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாக்க” பரவலாக செயல்படுகிறது. ஓரங்கட்டப்பட்ட பழங்குடி சமூகம் வர்ணாஸ்ரம கட்டமைப்பிற்கு வெளியே உள்ளவர்களாக கருதப்படுவதால், அவர்களை காட்டுவாசிகள் என்றே கூறிவந்தனர்

பழங்குடி சமூகங்களின் மாறிவரும் கலாச்சாரம் மற்றும் ஹிந்து மதத்திலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் அவர்களையும் உள்ளே இழுக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களுள் முக்கியமானவரான ராமகாந்த் கேசவ் தேஷ்பாண்டே, எம்.எஸ். கோல்வால்கருடன் கலந்தாலோசித்து, டிசம்பர் 26, 1952 அன்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூரில் அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமத்தை (ABVKA) நிறுவினார்.

பழங்குடியினரின் ‘ஹிந்துமயமாக்கலில்’ சங் பரிவார் முதன்மை கவனம் செலுத்தியது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு இது அவசியம் என்று கூறியும், அவர்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக்கூறி ஏமாற்றியது.  ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் எப்போதும் பா.ஜ.க.,வுக்கு தேர்தல் வெற்றிகளைப் பெற உதவியது.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்து ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்த இந்திய துணைக்கண்டத்திற்கு குடிபெயர்ந்தனர் என்ற ஆரியப் படையெடுப்பு கோட்பாட்டை, ஆர்.எஸ்.எஸ்.எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. 

பல ஆண்டுகளாக பழங்குடியினர் மத்தியில் பணியாற்றிய சங் பரிவார் தலைவரும், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான ஹர்ஷ் சவுகான், வனவாசி என்ற சொல் 1952 இல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நிறுவப்பட்டது என்கிறார்

காட்டுவாசி என்பது பெருமைக்குரிய வார்த்தையாம்

“காடுகளில் வசிப்பவர்கள் பாரம்பரியமாக வனவாசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ராமாயணத்தில் கூட, காடுகளில் வாழும் சமூகங்களை அடையாளம் காண இந்தக் குறிப்பு உள்ளது. வனவாசி என்ற பதம் காட்டுவாசிகளைப் பற்றிய சரியான கருத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இது பெருமைக்குரிய வார்த்தையாகும்” என்று ஹர்ஷ் சவுஹான்  கூறினார்.

“ஆதிவாசிகள் என்ற சொல் 1930களில் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. ஆதிவாசி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் இந்தியாவின் சூழலில் அது தவறு. அமெரிக்காவில் பழங்குடியினர் என்ற சொல் பழங்குடியினருக்கு அவர்களின் அடையாளத்தைப் பெற பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஆனால், வனவாசி எளிமையான வார்த்தை - அவர்கள் வனவாசிகள் என்பதை உணர்த்துகிறது” என்று ஹர்ஷ் சவுகான் விளக்கினார்.

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபை விவாதங்களின் போது, ​​ஹாக்கி வீரர் ஜெய்பால் சிங் முண்டா, “ஆதிவாசி” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வலியுறுத்தினார், மேலும் ‘பழங்குடியினர்’ என்ற வார்த்தை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டபோது “பஞ்சாதி” ஆனது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஜெய்பால் சிங் முண்டா பின்னர் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பழங்குடியின பிரதிநிதியாக ஆனார்.

“பல கமிட்டிகள் செய்த எந்த மொழிபெயர்ப்பிலும் ‘ஆதிவாசி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. இது எப்படி நடந்தது? ஏன் என்று கேட்கிறேன், அது செய்யப்படவில்லை. ‘ஆதிவாசி’ என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படவில்லை, ‘பஞ்சாதி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது ஏன்? நமது பழங்குடியினரில் பெரும்பாலானோர் காடுகளில் வாழ்வதில்லை. பட்டியல் பழங்குடியினரின் மொழி பெயர்ப்பு வார்த்தை ‘ஆதிவாசி’யாக இருக்க வேண்டும் என்று உங்கள் மொழிபெயர்ப்புக் குழுவுக்கு நீங்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதிவாசி என்ற சொல்லுக்கு அருள் உண்டு. பஞ்சாதி என்ற இந்த பழைய தவறான அடைமொழி ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை, ஏனெனில் சமீப காலம் வரை அது ஒரு நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனத்தைக் குறிக்கிறது, ”என்று ஜெய்பால் சிங் முண்டா கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மிகவும் கவனமாக மீனவர்களையும் வனவாசி என்ற பட்டியலில் சேர்க்க ரகசிய திட்டம் தீட்டி வருகிறது. அதாவது 4 வருண அமைப்பிற்கு வெளியே இருப்பவர்கள் அனைவருமே மனிதர்களோடு வாழத்தகுதி அற்றவர்கள் என்ற பார்வையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கொண்டுள்ளது., 

காரணம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் இவர்களுக்கு தொண்டூழியம் செய்ய சூத்திரர், ஆனால் தற்போது பார்ப்பனர் மற்றும் சூத்திரர்கள்(பார்ப்பனர் அல்லாதோர்) மட்டுமே என்று அவர்களே கூறுகின்றனர். இதற்கான கலியுகத்தில் நீதி கேட்டுப்போகும், பிராமணன் போஜனத்திற்கு உத்தியோகம் பார்ப்பான், சூத்திரன் தனது தருமத்திற்கான காரியத்தைச்செய்யமாட்டான் என்று உபநிடதம் கூறுவதாக பஜனைக்கோஷ்டி பார்ப்பனர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். 

 இப்போது சூத்திரர்கள் அல்லாத பழங்குடியினரை சேர்த்தால் வர்ணாஸ்ரம முறையில் குழப்பம் ஏற்படும் ஆகையால் அவர்களை மக்கள் வாழாத பகுதி(காடு)களில் வசிப்பவர்கள் காட்டுவாசிகள்(வனவாசி) என்று அழைக்கின்றனார். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவு

ஒடிசா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், மேற்கு வங்கத்தின் கிழக்கு மற்றும் மலைப்பகுதி மாவட்டங்கள், கிழக்கு மகாராட்டிரா போன்ற பகுதிகளில் வாழும் பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறமல் இருக்கவும் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்கவும் `வன்வாசி கல்யாண்’ என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக பெரும் நிதியை ஒதுக்கி பழங்குடியின கிராமம் கிராமாக சென்று கிளைகளை திறந்துள்ளது. 

ஒருபுறம் இவர்களை வன்வாசி என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் வனங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்று வருகிறது. குஜராத்தில் மூன்று ஆண்டுகள் பெண் முதலமைச்சராக இருந்த ஆனந்திபென் படேல் சிங்கங்கள் வாழும் கிர்காடுகளின் 250 ஏக்கர் நிலத்தை தனது மகளின் நிறுவனத்திற்கு சொற்ப விலைக்கு விற்க தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார். அவரது மகளோ சுரங்க முதலாளிகளுக்கு பல கோடி ரூபாய்களுக்கு நிலத்தை விற்றுவிட்டார். இந்த பிரச்சினை பெரிதாகி அவர் பதவி விலக நேரிட்டது. அந்த நிலங்கள் விற்கும் போது அந்த நிலங்களில் வழ்ந்த பழங்குடியினரின் நிலங்களும் சுரங்க முதலாளிகளின் வசமாகின. 

இன்றுவரை அந்தப்பழங்குடியினர் வாழ்வாதாரமின்றி மூதாதையார்கள் வாழ்ந்த நிலத்தில் அடிமைகளைப்போல் சுரங்க முதலாளிகளின் தயவில் வாழ்ந்து வரும் பெரும் அவலம் நீடிக்கிறது. 

பாஜக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொறுத்தவரை இன்றும் பழங்குடியினர் காட்டுவாசிகள் அதனால் தான் அவர்களை மோடி முதல் மோகன் பாகவத் வரை வன்வாசி(காட்டுவாசி) என்று அழைத்துவருகின்றனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:29 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: காட்டுவாசி, பழங்குடியினர், பாஜக

வியாழன், 16 பிப்ரவரி, 2023

சுப்ரீம் கம்யூனிட்டியும், ஆகார ஸுத்தமும்”! சற்சூத்திரர்களுக்குப் ‘பாடம்’ நடத்திய பார்ப்பனர்கள்



  February 12, 2023 • Viduthalai

அண்மையில்  இரண்டு காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வந்தன. இரண்டுமே கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் பேசப்பட்டவை. (ஏற்கெனவே இந்த மாநாட்டில் ரங்கராஜ் என்ற மேனாள் தொலைக்காட்சி செய்தியாளர் பேசிய உரையில்தான் கலைஞரை ஜாதிய வன்மத்தோடு பேசியிருந்தார். அது கடும் கண்டனத்திற்குள்ளானது)

தற்போது வந்த காட்சிப் பதிவுகளில் ஒன்று சொறி விட் நடிகர் ஒருவர் பேசியது. ஒன்றிரண்டு திரைப்படங்களில் 'தலை'யை மட்டும் காட்டியவர் போலும். ஒரு பார்ப்பனர், தகுதியே இல்லாவிட் டாலும் எப்படி இன்னொரு பார்ப் பனரைத் தூக்கி விடுகிறார் என்பதற்கு அந்த உரையிலேயே சான்றும் தருகிறார்.

“க்ரியேட்டிவிட்டிக்கு பிரம்மனைச் சொல் வாங்க... இங்கே தி பெஸ்ட் பிரைன்ஸ் (மூளை) இன் தி வேர்ல்டு இருக்கு... பிராமண், பிரம்மன் பெரிய ட்ஃபரன்ஸ் இல்லைன்னு நான் நினைக்கிறேன். கிரியேட்டிவிட்டிக்குப் பேர் போன இந்த பிராமின் கம்யூனிட்டி இஸ் தி சுப்ரீம் கம்யூனிட்டி இன் த வேர்ல்டு. அந்த சுப்ரீம் கம்யூனிட்டிக்குள்ள கம்மி யூனிட்டி இருந்திடக் கூடாது” என்று பேசிய துண்டுக் காணொலி ஒன்று வெளியானது. “அது சரி உங்க வாயி... உங்க உருட்டு”ன்னு விட்டுவிட்டுப் போயிட்டாலும், அதென்ன சுப்ரீம் கம்யூனிட்டி இன் த வேர்ல்டு... இதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கில்லையா? "கிக்ஷீஹ்ணீஸீ க்ஷீணீநீமீ வீs tலீமீ suஜீக்ஷீமீனீமீ க்ஷீணீநீமீ வீஸீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ" - அப்படின்னு ஹிட்லர் பேசுனது தான். ஆரிய இனம் தான் உலகின் உச்ச இனம் என்பது இவர்களின் மாயை. இருப்பதிலேயே பெஸ்ட் கிரியேட்டிவிட்டி மூளை எல்லாம் அவாள் மண்டைக்குள் தான் ஒளிந்துகிடக்கிறதாம். சோஷியல் மீடியாக்களெல்லாம் அந்த மொட்டைத் தலையிலேயே தாளம் போட்டுக் கொண்டிருக்க,  இதுக்கு ஒரு சில மயக்கமுற்ற பார்ப்பனரல்லா தாரிடமிருந்து, “ஆமா... ஆமா...” என்று குரல்கள் வேறு வந்தன- “என்ன இருந்தாலும் கலைத் துறையில் அவர்களின் சாதனை இருக்கிறதே...” என்று!

“‘இருக்கிறதே’ன்னு சொல்லப்படாதுங்க... இருந்த தே”-ன்னு சொல்லுங்க. ஏன்னா, அடுத்த வங்களை நுழைய விடாமல் தடுத்துக்கிட்டிருந்த வரைக்கும் தான் பார்ப்பன ஆதிக்கம் எல்லா துறையிலும் இருந்தது. இப்போதும் ஆதிக்கம் இருக்கும் துறைகளெல்லாம் யாரையும் வர விடாமல் செய்யப்படும் லாபிகளால் தான். என்றைக்கு பார்ப்பன ஆதிக்கத்தைத் தகர்த்து அனைவருக்கும் வாய்ப்பு என்ற நிலை உருவாகத் தொடங்கியதோ, அன்றைக்கே பார்ப்பன ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் பல்லிளிக்கத் தொடங் கிடுச்சுங்காணும்.

இசை என்றால் அவாள் தான், நடனம் என்றால் அவாள் தான், நடிப்பு என்றால் அவாள் தான், படிப்பு என்றால் அவாள் தான் என்று எங்கெல்லாம் ஆதிக்கம் இருந்ததோ, அங்கெல்லாம் பார்ப்பனரல் லாதார் நுழைந் ததும் அவ்வளவு நாளும் “இதுதான் இசை, இவ்ளோ தான் நடனம், நாங்க நடிக்கிறதுதான் நடிப்பு, நாங்க சொல் றதுதான் படிப்பு” என்ற ஏமாற்று எல்லைகளையெல்லாம் தகர்த்தெறிந்து உலகப் புகழ் பெறும் சாதனையாளர்களைக் கண்டாகி விட்டது. அதற்குப் பிறகு அந்தந்த துறைகளில் பார்ப்பன ரல்லாத சாதனையாளர்களிடம் மோத முடியாமல் முண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? அந்த சொறி விட் நடிகர் போன்றவர்களால் சம காலத்தில் உச்சம் தொட்ட கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், விவேக் போன்றவர்களைத் தொடவே முடியவில்லையே! வடிவேலு என்ற கலைஞனின் உடல்மொழியும், உரையாடல் வெளிப்பாடும், மண்ணின் மணமும் இவாளுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. கேட்டால் கிரியேட்டிவிட்டியில் உயர்ந்தவாளாம்!

இன்னொரு காணொலி! அதே மாநாட்டில் ஒரு பார்ப்பனப் பிரசங்கி பேசியிருக்கிறார். அவாளின் ஜாதி ஆணவமும், தீண்டாமை மனோபாவமும் எப்படி இருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது அந்த உரை.

“தூத்துக்குடிக்கு உபந்யாசத்துக்குப் போயிருந்தேன்.

ஒரு நாடார் பையன் வந்தான். ‘அடுத்த ஜென்மம் நான் பிராமணனாப் பொறக்கணும்’னான்.

‘வேண்டாம்... வேண்டாம் நீ நாடாராவே பிற’ன்னேன்.

‘ஏன்’ அப்படின்னான். 

‘பிராமணனாப் பொறந்தா கஷ்டம்டா! ஆசா ரத்தை கடைப்பிடிக்கணும். நிறைய பிரச்சினை. நீ நாடாராவே இரு.’

‘இல்ல சாமி, நாங்க பாவம் பண்றோமே..’

‘நீ பாவம் பண்ணாலும், உனக்கு அருகதை இருக்கு. நீ குடிக்கலாம், கொள்ளையடிக்கலாம், கூத்தியாளோடு இருக்கலாம், சீட்டாடலாம்...’

‘இதெல்லாம் பாவம் இல்லையா?’

‘பாவம் தான்.’

‘இந்தப் பாவத்தை எப்படி போக்குறது?

‘மாதம் மாதம் அமாவாசை வருதோ இல் லையோ, நூறு ரூபாவும் ஒன்பது கெஜ வேஷ்டியும் வாங்கி வெச்சுக்கோ, என்னை மாதிரி பிராமணாள் யாராவது ஒருத்தர் இருப்பா, அவர்கிட்ட கொடுத்து நமஸ்காரம் பண்ணு. சகல பாபமும் அவனுக்குப் போயிடும்.’

உடனே அவன் கேட்டான். ‘சாமி அப்புறம் அந்த பாவத்தை நீங்க எப்படி போக்கிப்பேள்?’னான்

‘அதப்பத்தி நீ கவலப்படாதே’

‘இல்ல சாமி, நான் தெரிஞ்சுக்கிறேன்’னு

‘நாங்க பிரம்ம யக்ஞம்னு ஒன்னு பண்றோம். அதப் பண்ணியாச்சுன்னா... எங்களுக்கு சகல பாவமும் போய்டும்’னேன்.

உடனே அவன் சொன்னான். ‘அந்த பிரம்ம யக்ஞ்யத்தை நான் பண்ணலாமா?’

‘நீ பண்ணப்பிடாது. நீ பாவம் தான் பண்ணனும்.’

இதுக்கு மேல ஏதாவது விளக்கம் வேணுமா? நாடார்வாள் முடிஞ்சதோ, அடுத்து ஒரு கவுண் டர்வாள்.

‘இப்போ என்னை தங்க வச்சிருக்கிறவர் ஒரு கவுண்டர் தான். அவா ஆத்திலயும் சாப்பிட மாட்டேன். அவா ஆத்தில தான் தங்கறேன், ஆனா சாப்பாடு மட்டும் நம்மளவா ஆத்திலிருந்து வருது...!’ என்றவர், பேச்சின் தொடக்கத்திலேயே ஒன்று சொன்னார்.

“எனக்கு போன் வந்திண்டே இருக்கு.நீங்க பி.ஜே.பி.கிட்ட சொல்லுங்கோ... இந்த அரிஜன் அப்பாய்ண்ட்மெண்ட்டுக்குன்னா. நாங்க சொல் லிண்டு தான் இருக்கோம். நீ ஆகமத்தைப் படின்னேன் நான்”

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆவதற்கு எதிராக யாரிடம் காய் நகர்த்துகிறார்கள். யார் அவர்களுக்குச் சார்பாக இருக்கிறார்கள் என்று பி.ஜே.பி.யின் உண்மை முகத்தைக் காட்டிவிட்டார் திருச்சி கல்யாணராமன் என்ற அந்தப் பார்ப்பனர்.

இந்தப் பேச்சு பரவியதும் இவரின் இன்னொரு பேச்சிலிருந்தும் ஒரு காணொலித் துணுக்கு வந்தது.

இன்னொரு உபந்யாசம். “ஒரு முறை அரிமளம் போறேன். செட்டியார் ஊருக்கு! சாப்பாட்டுக்கு பிரா மணன் இருக்கானான்னு, ஏற்பாடு பண்ணிட்டுத் தான் ஒத்துக்கிறது. அப்படி இல்லன்னா, ஆத்துக்காரி கூட வர்றா... நாங்க சமைச்சுக்கிறோம். ... ஆகார ஸுத்தம் முக்கியம்!”

தீண்டாமை என்பது யாருக்கோ உள்ள பிரச்சினை என்று கருதிக் கொண்டிருக்கும், ஸூத்திர ஜாதியாரைத் தான் ‘ஷாத்து ஷாத்து’ என்று சாத்தியிருக்கிறார் கல்யாணராமன். தொடக் கூடாத, புழங்கக்கூடாத ஜாதி என்று ஒடுக்கப்பட்ட மக்களையும், உயர்ஜாதி என்றும் தங்களையும் கருதிக் கொண்டிருப்போரைத் தான், ‘சுத்தம் இல் லாதவர்கள், பாவம் செய்யப் பிறந்த வர்கள்’என்று பட்டியலிடுகிறார். இதற்கிடையில் நாடார் சமூகத்திலிருந்து எதிர்ப்புக் குரல் வந்ததும், நான் அந்தப் பொருளில் சொல்லவில்லை என்று அந்தக் கருத்துக்கு மட்டும் மன்னிப்பு கேட்டு ஒரு காணொலி வெளியிட்டாராம் திரு.கல்யாணராமன். 

கல்யாணராமன் என்ற தனிநபர் மட்டும் அல்ல; அவர் பேசிய இந்த ஒரு பேச்சு மட்டுமல்ல;  அவரை இப்படி பேசச் செய்ததும், அவாளை இப்படி கருதச் செய்ததும் ஹிந்து மதமும், வர்ணாசிரம - சநாதன தர்மமும், பார்ப்பன ஆதிக்கமும் தான்.

ஜாதி இருக்கும் வரை, ஹிந்து மதம் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கமும், மற்றவர்கள் அனை வரையும் இழிவாகக் கருதும் மனநிலையும் இருந்தே தீரும். அதை ஒழிக்காமல் வீராப்பு பேசுவதெல்லாம் வெற்றுக் கூச்சலே! எனக்குக் கீழ் ஒருவன் இருக்க வேண்டும் என்ற எண்ணமே, எனக்கு மேல் ஒருவன் இருக்கலாம் என்ற எண் ணத்தையும் உருவாக்குகிறது. இதை பிறப்பிலேயே உறுதிப்படுத்தும் கேவலம் ஒழிக்கப்படும்வரை எதுவும் மாறாது. அவாள் மாநாட்டுப் பேச்சுகள் ஒட்டு மொத்த பார்ப்பன சமூகத்தின் உள்ளத்து வெளிப்பாடு. அவாள்லாம் அப்படி இல்லை இப்போ என்று பேஷிக் கொண்டிருக்கும் பாதந்தாங்கிகளுக்கும், ‘பிராமணன்னா இப்படித் தான் இருக்கணும்’ என்று ஆச்சாரத்தைக் கொஞ்சம் அவசரத்துக்காக விட்டொதுங்கும் பிராமணாளுக் கும் சொல்லியிருக்கிறார். 

அந்தப் பெரியவா பேச்சை 'ப்ராப்தி' இருந்தால் கேளுங்கோ... புத்தி இருந்தால் திருந்துங்கோ?

- சமா.இளவரசன்

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:34 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சூத்திரர்கள், தீண்டாமை, பார்ப்பனர்கள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

சிந்தனையாளர்கள்

சிந்தனையாளர்கள்

படம் செருகல்

படம் செருகல்
ஓபரா-அமெரிக்க நாத்திகர்
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள்
    முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மு...
  • நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! -தஸ்லிமா நஸ்ரீன்
    வ நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! - தஸ்லிமா நஸ்ரீன் ங்கதேசத்தின் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்...
  • பொன்மொழி
    தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த்  தோல்வியுறுவான்.   - நெப்போலியன் சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க...
  • ”வைக்கம் வீரர்” என்னும் பட்டம் தந்தவர் யார் தெரியுமா?
    எத்தர்களை  முறியடிக்கும் எதிர்வினை ( 53 ) : நேயன் இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் “தோசை மாவு புகழ்’’ ஜெயமோகன் ஈ.வெ.ரா தத்துவத்தின் ...
  • மறைந்த அயோத்திதாசர் தந்த சுடரை அணையாமல் காப்போம்!
    May 20, 2021  • Viduthalai   ஜாதி ஒழிப்பையும், வருணாசிரமப் பாதுகாப்பான பார்ப்பன வைதீக சனாதன மதமான ‘ஹிந்து மதம்' என்று பிற்காலத்தில் அழைக...
  • பாதர் எனக்கு ஒரு டவுட்?
    😇😇🤔 *மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?* *பாதர் : கேளு மகனே* *மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்...
  • வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! 1&2
    டாக்டர் துரை.சந்திரசேகரன் (வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாய...
  • சமூக நீதி காவலர் வி.பி.சிங்
      விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயக வாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக்...
  • புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்
    பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்.... (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ...
  • கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே
    ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை! -ஜோசப் இடமருகு நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்க...

லேபிள்கள்

  • .சிங்காரவேலர்
  • அக்ரகாரம்
  • அகவிலைப்படி
  • அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
  • அண்ணல் அம்பேத்கர்
  • அண்ணா
  • அந்தணர்
  • அந்தணர் என்போர்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமர்நாத்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்யப்பன்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அழகிரி
  • அழிப்பு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுக்கரசு
  • அன்பழகன்
  • அனுபவம்
  • அனுமதி மறுப்பு
  • ஆ.இராசா
  • ஆ.ராசா
  • ஆக்கிரமிப்பு
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசீவகம்
  • ஆத்மா மறுப்பு
  • ஆதிக்கம்
  • ஆய்வு
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்.
  • ஆரிய பூமி
  • ஆரியம்
  • ஆரியமாயை
  • ஆரியர்
  • ஆரியர்கள்
  • ஆன்மீகம்
  • இ.மு. சுப்ரமணியம்
  • இணைப்பு மொழி
  • இந்தி
  • இந்தியா
  • இந்தியா ?
  • இந்தியாவா ?
  • இந்தியாவா?
  • இந்து
  • இந்து மதம்
  • இந்துத்துவா
  • இந்துமத கொடுமை
  • இந்துமதம்
  • இந்துவெறி
  • இயக்கங்கள்
  • இயக்கம்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இராசராசன்
  • இராமச்சந்திரனார்
  • இராமலிங்க அடிகள்
  • இராமன்
  • இராமன் பட எரிப்பு
  • இராமாமிருதம்
  • இராமாயண காலம்
  • இராமாயணம்
  • இராமானுஜர்
  • இராவணன்
  • இழப்பு
  • இறுதிவுரை
  • இனம்
  • உணவு
  • உபநிடதம்
  • உபி
  • உமா மகேஸ்வரன்
  • உமாமகேசுவரனார்
  • உயிர்ப்பலி
  • உயிரிழப்பு
  • உரிமை
  • உரைகள்
  • ஊர்
  • எதிர்வினை
  • எம் பி
  • எரிப்பு
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓபரா
  • ஓமந்தூர் பி. ராமசாமி
  • க.அன்பழகன்
  • கட்சி
  • கட்டைவிரல்
  • கடவுள்
  • கடவுள் சிலை
  • கடவுள் மறுப்பு
  • கடை
  • கருப்புச் சட்டை
  • கருப்புச்சட்டை
  • கரோனா
  • கல்வி
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிதைகள்
  • கழகம்
  • களப்பிரர்
  • கற்பனை
  • கா.சு. பிள்ளை
  • காட்டுவாசி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • கார்த்திகை தீபம்
  • கால்டுவெல்
  • காவிரி
  • கான்சிராம்
  • காஷ்மீர்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கீழ்ப்பாக்கம்
  • கு.வெ.கி.ஆசான்
  • குங்குமம்
  • குடகு
  • குடியரசு இதழ்
  • குண்டுவெடிப்பு
  • குணம்
  • குமுதம்
  • குருக்கள்
  • குழந்தை
  • கேரளா
  • கேள்வி
  • கேள்வி பதில்
  • கேள்விகள்
  • கேள்வியும் பதிலும்
  • கைகள்
  • கைலி
  • கைவல்யம்
  • கொடுமை
  • கொலை
  • கோட்சே
  • கோயில்
  • கோயில்கள்
  • கோல்வால்கர்
  • கோழை
  • சங்கராச்சாரி
  • சட்டம்
  • சதி
  • சந்திராயன்
  • சபரிமலை
  • சமணம்
  • சமதர்மம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி விருது
  • சர்.சி.பி. அறிவுரை
  • சரத் யாதவ்
  • சரஸ்வதி நாகரிகம்
  • சரியா
  • சவர்க்கார்
  • சாகு மகராஜ்
  • சாகு மகாராஜ்
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாமி கைவல்யம்
  • சாலினி
  • சாவித்திரி பூலே
  • சாவு
  • சி.நடேசனார்
  • சிக்கல்
  • சிங்காரவேலர்
  • சித்தர்கள்
  • சித்திரவதை
  • சித்திரை
  • சிதம்பரம்
  • சிந்தனை
  • சிந்து
  • சிந்து – சரஸ்வதி
  • சிலை
  • சிவராஜ்
  • சிவன்
  • சின்னகுத்தூசி
  • சுடுகாட்டிலும் ஜாதி
  • சுப்பராயன்
  • சூத்திரர்கள்
  • செய்குத்தம்பி பாவலர்
  • சேரி
  • சொத்து
  • சௌந்தர பாண்டியனார்
  • டார்வின்
  • டி.ஏ.வி.நாதன்
  • தகுதி
  • தம்மபதம்
  • தமிழ்
  • தமிழ் அறிஞர்
  • தமிழ் இந்து
  • தமிழ் இலக்கணம்
  • தமிழ் தேசியம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் வேதம்
  • தமிழறிஞர்
  • தர்மதீர்த்தர்
  • தருமாம்பாள்
  • தலைவர்கள்
  • தளபதிராஜ்
  • தற்கொலை
  • தஸ்லிமா நஸ்ரீன்
  • தாகூர்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • தானம் 
  • திப்பு சுல்தான்
  • தியாகராயர்
  • திராவிடம்
  • திராவிடர் - ஆரியர்
  • திருக்குறள்
  • திருட்டு
  • திருப்பதி
  • திருமணம்
  • திருமா
  • திருவரங்கம்
  • திருவள்ளுவர்
  • திருவாங்கூர்
  • திருவிக
  • தில்லி
  • திலகர்
  • திறமை
  • தினமணி
  • தினமலர்
  • தீ விபத்து
  • தீங்கு
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • துரை.சந்திரசேகரன்
  • தேசியம்
  • தேவதாசி
  • தேவநேயப் பாவாணர்
  • தை
  • தொல்காப்பியம்
  • தொழிலாளர்
  • நம்பிக்கை
  • நம்பூதிரி
  • நரபலி
  • நன்னன்
  • நாகநாதன்
  • நாகரிகம்
  • நாசம்
  • நாராயண குரு
  • நாராயணகுரு
  • நாவலர்
  • நாஸ்திகம்
  • நீட்
  • நீதி
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நெரிசல்
  • நேயன்
  • பக்தி
  • பகத்சிங்
  • பகுத்தறிவாளர்
  • பகை
  • பட்டுக்கோட்டை அழகிரி
  • படத்திறப்பு
  • படை எடுப்பு
  • பண்டிகை
  • பண்டிதர்
  • பதவி
  • பதிப்புரிமை
  • பதிலடி
  • பதிலடிப் பக்கம்
  • பரமசிவம்
  • பரிதிமாற்கலைஞர்
  • பரிபாலனம்
  • பலி
  • பழங்குடியினர்
  • பனகல் அரசர்
  • பனகால் அரசர்
  • பாதிரியார்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பான்
  • பாரத் ?
  • பாரதம்
  • பாரதமா ?
  • பாரதமா?
  • பாரதி
  • பாரதியார்
  • பால்
  • பாலியல் வன்கொடுமை
  • பானகல் அரசர்
  • பாஜக
  • பிரசாதம்
  • பிராமணப் பெருமை
  • பிராமணர்
  • பிராமணியம்
  • பில்லி சூனியம்
  • புத்த - சமணம்
  • புத்தம்
  • புத்தர்
  • புரட்சி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புலவர் குழந்தை
  • பூசாரி
  • பூசை
  • பூணால்
  • பூணூல்
  • பூதம்
  • பெட்ரன்ட்ரஸ்ஸல்
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண் விமானி
  • பெண்கள்
  • பெண்ணுரிமை
  • பெரியார்
  • பெரியார
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேய்
  • பேராசிரியர்
  • பொதுப்பணி
  • பொதுவுடமை
  • பொதுவுடைமை
  • பொப்பிலி அரசர்
  • பொன்மொழி
  • பௌத்தம்
  • மகாத்மா ஜோதி பாஃபூலே
  • மணியம்மை
  • மத வன்முறை
  • மதம்
  • மதமாற்றம்
  • மந்திரமா தந்திரமா
  • மயிலாடன்
  • மயிலை சீனி.வேங்கடசாமி!
  • மருத்துவ மனை
  • மறுப்பு
  • மறைமலை அடிகள்
  • மறைமலையடிகள்
  • மறைவு
  • மன்னர்கள்
  • மன்னராட்சி
  • மனு ஆட்சி
  • மனுதர்மம்
  • மனோன்மணியம்
  • மாணிக்க நாயக்கர்
  • மாநாடு
  • மார்க்ஸ்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மாற்று மதம்
  • மின்சாரம்
  • மின்நூல்
  • மீசை
  • மு.வ
  • முத்துராமலிங்கம்
  • முதல்வர்
  • மூடத்தனம்
  • மூடநம்பிக்கை
  • மேயர் ந.சிவராஜ்
  • மைல்கல்
  • மோகன் பகவத்
  • யுனஸ்கோ
  • ரஞ்சித்
  • ராமர் கோயில்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராஜராஜ சோழன்
  • ராஜாராம் மோகன்ராய்
  • ருத்திரன்.
  • லாலா லஜபதி
  • லெனின்
  • வ.உ .சி
  • வ.உ.சி.
  • வகுப்புரிமை
  • வந்தேறிகள்
  • வர்ணம்
  • வரலாறு
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன்முறை
  • வா உ சி
  • வாஞ்சி
  • வி.பி.சிங்
  • வித்தியாசம்
  • விபச்சாரம்
  • விபத்து
  • விருது
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீழ்ச்சி
  • வெறுப்பு
  • வேத காலம்
  • வேதம்
  • வேப்பமரம்
  • வைக்கம்
  • வைக்கம் வீரர்
  • வைகுண்டர்
  • ஜடாமுடி
  • ஜனநாயகம்
  • ஜனாதிபதி
  • ஜாதி
  • ஜாதி வெறி
  • ஜி. யு. போப்
  • ஜீவனோபாயம்
  • ஜீவா
  • ஜோதிராவ் புலே
  • ஜோதிராவ் பூலே
  • ஸ்மார்த்தர்
  • ஸ்வஸ்திகா
  • ஹிட்லர்
  • Bunch of Thoughts

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (7)
    • ▼  ஆகஸ்ட் (1)
      • இந்தியா ? பாரத் ? ஒரு வரலாற்றுப் பார்வை- பேரா.இரவி...
    • ►  ஜூலை (3)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (70)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (25)
    • ►  மே (12)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2023 (45)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2022 (39)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (75)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (10)
  • ►  2020 (73)
    • ►  டிசம்பர் (26)
    • ►  நவம்பர் (4)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (77)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (9)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (68)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (28)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (32)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (16)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (35)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  மே (7)
    • ►  பிப்ரவரி (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.