வநான்
ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்!
-தஸ்லிமா நஸ்ரீன்
ங்கதேசத்தின்
எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு சுவோஜித் பக்சிக்கு
அளித்த பேட்டியின்போது, என்னை
முசுலீம் என்று அழைக்க வேண்டாம், நான் ஒரு நாத்திகர் என்று கூறி யுள்ளார்.
மத
அடிப்படைவாதத்தால் பாதிப் புக்கு உள்ளானவரான எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன்
கூறும்போது, மதத்தின்மீதான
விமர்சனம் என்பது முசுலீம் அல்லாத அறிஞர்கள் மட்டுமே செய்துவருவதன்று என்று
கூறியுள்ளார்.
1994ஆம்
ஆண்டில் பங்களாதேஷி லிருந்து எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார். இசுலாம்
மதத்தின்மீது விமர்சனத்தை முன்வைத்த காரணத் தால், மதத் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்
விடுத்தனர். அதிலிருந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளி நாடுகளில்
தஞ்சமடைந்துள்ளார்.
அண்மைக்காலங்களில்
அவர் நாடான பங்களாதேஷிலிருந்து அறிஞர்கள் ஒன்று நாட்டைவிட்டு வெளியேறு கிறார்கள்
அல்லது அங்கேயே இருப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்கிற நிலைமை உள்ளது.
நாத்திக
இணைய எழுத்தாளர் அகமத் ரஜீப் ஹைதார் என்பவர் இணையத்தில் தன்னுடைய பிளாக்கில் தாபா
பாபா என்கிற பெயரில் எழுதி வந்தார். அவர் ஷாபாக் போராட்டத் தின்போது
2013 ஆம்
ஆண்டில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
அதேபோன்று
நாத்திக இணைய எழுத்தாளரான அவிஜித் ராய் பங்களா பிளாக் எனும் வங்க மொழி பிளாக்காக
முக்டோ-_மோனா
(சுதந்திர சிந்தனை) இணையப் பக்கத்தை உருவாக்கி, நாத்திகக் கருத்துகளை
எழுதிவந்தவர். அவர் இந்த ஆண்டில் கடந்த மாதம் தலைநகர் டாக்காவில் மதத்தீவிரவாதக்
குழுக்களால் தாக்கப்பட்டு கொல்லப் பட்டார்.
பெண்ணுரிமையாளரும், மதசார்பற்ற மனிதநேயருமான தஸ்லிமா
நஸ்ரீன் தற்போது டில்லியில் தஞ்சமடைந்து வசித்துவருகிறார்.
தி இந்து
ஆங்கில நாளிதழ் செய்தியாளர் சுவோஜித் பக்சியிடம் நேர்காணலின்போது தஸ்லிமா நஸ்ரீன்
கூறும்போது, பங்களாதேஷ்
இப்போது சுதந்திர சிந்தனையாளர்களுக்கான இடத்தை மிகவும் சுருக்கிக்கொண்டு விட்டது.
மற்ற மதங்களைவிட இசு லாம் மதம் மோசமாக இருப்பதில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக
இல்லை என்று கூறினார்.
கேள்வி: அவிஜித் ராய் குறித்து கூறுங்களேன்.
தஸ்லிமா நஸ்ரீன்: நீண்ட கால மாக அவிஜித் ராயை
எனக்குத் தெரியும். செய்தித்தாள்கள் வெளியிடாத நாத்தி கம் மற்றும் மனிதநேயக்
கருத்துகள், பணிகளை
முக்டோ_மோனாவைத்
தொடங்கி அவைகளுக்கான இடத்தை அளித்துவந்தார். அவிஜித் ராய் அறிவியல் எழுத்தாளர், சுதந்திர சிந்தனையாளர், ஒரு நாத்திகர், ஒரு பகுத்தறிவாளர் ஆவார்.
அவை
குறித்த விவாதங்கள்மூலம் எதிரானவைகளை உடைத்து நிர்மூலமாக்க விரும்பி, தம் கருத்துகளுக்கான இடத்தை
பாதுகாக்க விரும்பினார். பின்னாளில், பிளாக்கி லிருந்து கருத்துகளை
நூல்களாக உருவாக்கத் தொடங்கினார். இசுலாம் உள்பட மதம்குறித்த கேள்விகளை ஒருவருக்கொருவர் எழுப்புவதற்கு
முக்டோ_மோனா இணையம் நுழை வாயிலாக அமைந்தது.
பங்களாதேஷில்
குறிப்பிட்ட காலத்தைக் கடந்து, சுதந்திர சிந்தனை யாளர்களுக்கான இடம் மறைந்து வருகிறது.
அவிஜித் ராய் அந்த இடத்தை மீண்டும் புதிய தளத்தின்வாயிலாக நிரப் பினார். மிக
உன்னதமான அவருடைய பங்களிப்புகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.
கேள்வி: சுதந்திர சிந்தனையாளர் களுக்கான இடம் சுருஙகியது எப் போது? எப்படி?
தஸ்லிமா நஸ்ரீன்: 1980களின் மத்தியில் ஜெனரல் ஹூசைன்
எர்ஷாத் காலத்தில் இந்த மாற்றம் ஏற்படுத்தப் பட்டது. மதச் சார்பின்மைக்கான
அரசமைப்புச்சட்டம் நீக்கப்பட்டு, இசுலாமிய நாடாக மாற்றப்பட்ட போது, 1969ஆம் ஆண்டில் அதை எதிர்த்து
நடைபெற்ற இயக்கத்தைக் கண்ட நான் சாட்சியாக உள்ளேன். 1970களில் புதிய சுதந்திரமடைந்த நாடாக
ஆனபிறகு நிலைமை முற்றிலும் மாறியது. மக்கள் தங்களின் கருத்துகளை கூற முடிந்தது.
எப்போதாவது
பெண்கள் பர்தாவை அணிவார்கள். ஆனால், சமூகம் படிப்படியாக மாற்ற
மடைந்தது. இசுலாமியச் சமுதாயத்தில் உள்ள பெண்கள் நிலைகுறித்தும், இசுலாம் மதத்தின்மீது நான் எழுதிய
விமர்சனங்களும் அவ்வப்போது 1980களில், 1990களின் தொடக்கத்தில் அதிகமாக விற்பனையாகும் செய்தித் தாள்களில்
பதிவாயின.
ஆனால், அதை யெல்லாம் இப்போது
நினைத்துகூடப் பார்க்க முடியாது. கருத்துகளை வெளியிடுவதில் சுதந்திரம் என்பது ஒரு
காலத்தில் இருந்தது என்கிற நிலை தான் தற்போது உள்ளது.
கேள்வி: அந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது?
தஸ்லிமா நஸ்ரீன்: முன்னேறக் கூடிய சமுதாயத்தில் குறிப்பிட்ட பிரிவினரே அதற்கு
பொறுப்பாவார்கள். 1994 ஆம் ஆண்டில் நான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன். அப் போது
ஒட்டுமொத்த சமுதாயமும் அமைதியாகவே இருந்தது. அப்போதே அதை எதிர்த்திருந்தால், அவிஜித் அடித்து கொல்லப்பட்டமை
நடந்திருக் காது. ஹூமாயூன் ஆசாத் குறிவைக்கப் பட்டார் அல்லது அகமத் ரஜிப் ஹைதார்
இசுலாத்தை விமர்சனம் செய்தமையால் கொல்லப்பட்டார்.
எது
எப்படியானாலும், பங்களா
தேஷ் நாட்டில் ஏற்படுகின்ற முரண் பாடுகள் மொழியின் அடிப்படையிலா, மதத்தின் அடிப்படையிலா என்பதில்
முரண்பாடுகள் உள்ளன.
கேள்வி: இதில் எப்படி தீர்வு காண முடியும்?
தஸ்லிமா நஸ்ரீன்: மதத்தின் பெயரால் கல்லெறிந்து
பெண்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும். சமத்துவத்துக்கான சட்டமாக இருக்க வேண்டுமே
தவிர, மதத்துக்கான
சட்டமாக இருக்கக்கூடாது.
பங்களாதேஷ்
பிறக்கும்போது மதச்சார்பற்ற கொள்கையுடன் வங் காளிகளுக்கான நாடாகவே பிறந்தது. 1952லிருந்து இன்றுவரையிலும் வங்க
முசுலீம்கள், இந்துக்கள், புத்த மற்றும் கிறித்தவ
மதத்தவர்கள் ஆகியோர் நாட்டின் மொழியாக வங்காள மொழி இருக்க வேண்டும் என்றே
விரும்புகிறார்கள். உருது மொழியை அல்ல.
எங்களுடைய
சுதந்திரத்தை எதிர்ப் பவர்கள் பாகிஸ்தான் இராணுவத்துடன் சேர்ந்து 1971ஆம் ஆண்டில் முப்பது இலட்சம் (மூன்று
மில்லியன்) மக்களைக் கொன்றார்கள். அவர்கள்தான் இப் போது பங்களாதேஷை இசுலாமிய
மயமாக்குவதில் ஈடுபட்டுக் கொண்டி ருப்பவர்களாக உள்ளார்கள். சுதந்திர
சிந்தனையாளர்கள், அறிஞர்களை
அவர்கள்தான் கொலை செய்கிறார்கள்.
பாகிஸ்தான்
நாடு மதச்சார்புள்ள நாடு. ஆனால், பங்களாதேஷ் அரச மைப்பு மதச்சார்பின்மையில் தொடர்ந்து
நீடித்திருக்கவேண்டும். மதத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். மதரசாக்கள் மூலமாக
கல்வி புகட்டுவதைவிட, மதச்சார்பற்ற
கல்வியையே கட்டாயமாக நாம் அளிக்க வேண்டும். மதத்தீவிர வாதிகளின் புகலிடமாக நாடு
மாறு வதற்கு அரசு இடம் கொடுக்கக் கூடாது.
கேள்வி: மதத்தின்மீதான உங்களு டைய
விமரிசனம் அதிகப்படியானது என்றும், ஆத்திரத்தை ஏற்படுத்தக் கூடியது
என்றும் மக்கள் கருது கிறார்களே?
தஸ்லிமா நஸ்ரீன்: மதம் பெண் களை ஒடுக்குகிறது.
சட்டங்கள் சமத் துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, மதத்தின் அடிப் படையில்
இருக்கக்கூடாது. பெண் களுக்கு திருமண உரிமை, மணவிலக்கு உரிமை, குழந்தை பராமரிப்பு மற்றும்
மரபுவழி உரிமைகள் இருக்கவேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல், மதத்தின்பெயரால், கல்வீசிப் பெண் களைக் கொல்வதை
நிறுத்த வேண்டும்.
இதுவா
ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது? நாகரிகமுள்ள எல்லா நாடுகளிலும் அரசுடன் மதம் கொண்டுள்ள உறவு
குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். அரசுடன் மதத்தைச் சேர்க்காமல்
விடுவிக்கப்படுவதுடன் அரசுடன் சேராமல் இருக்கவும் வேண்டும். மற்ற மதங்களை
ஆய்வுக்குட்படுத்தும்போது இசுலாம் மட்டும் விதிவிலக்காக இருக் கக்கூடாது.
மதச்சார்பற்ற
மனிதநேயத்தின் அடிப்படையில் என்னுடைய கருத்துகள் உள்ளனவாகும். ஆத்திரத்தை ஏற்படுத்
துவது என்று கூறினால், அதுதான்
முழுமையாக கோபப்பட வேண்டிய தாக இருக்கும்.
கேள்வி: ஆனால், உங்களுடைய
எழுத்துகள் அடிப்படைவாதங்களை வலுப்படுத்துவதாக கூறப்படுகிறதே?
தஸ்லிமா நஸ்ரீன்: அரசுகள்தான் அடிப்படைவாதங்களை
வலுப்படுத்தி வருகின்றன. என்னைப்போன்றவர்களை ஆதரிக்கவில்லை. மதத் தீவிரவாதிகள்
என்னுடைய தலைக்கு விலை வைக்கும் போது, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், என்மீது அரசு குறிவைத்தது.
அவாமி லீக்
கட்சியும், பங்களாதேஷ்
தேசியக் கட்சியும் அவர்களோடு கைகோர்த்துக்கொண்டு மக்கள்நல அரசாகத்தான்(?) செயல்பட்டு வரு கின்றன. மேற்கு
வங்கத்தில்கூட இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி தலைமையிலான அரசு என்னை
வெளியேற்றியது. திப்பு சுல்தான் இமாம் என்னுடைய தலைக்கு விலைகூறியதை தலைவணங்கி ஏற்றுக்கொண்டார்கள்
மார்க்சிஸ்ட்டுகள். அதிலும், மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த உடனேயே இமாமுடன் நட்பை
ஏற்படுத்திக் கொண்டார்.
கேள்வி: உங்கள்மீது கூறப்படும் மற் றொரு குற்றச்சாற்று
என்னவென்றால், இசுலாமை
எதிர்ப்பதன்மூலமாக நீங்கள் வலதுசாரிகளை வலுப்படுத்துவதாகக் கூறப்படுகிறதே?
தஸ்லிமா நஸ்ரீன்: முற்றிலும் முட்டாள்தனமானது. நான் இந்துமதம் உள்பட எல்லா
மதங்களையும் விமரி சனம் செய்கிறேன். இந்து சாமியார் களை, கார்வா சவ்த் மற்றும் சிவராத்திரி
போன்ற சடங்குகளையும், குஜராத்தில்
முசுலீம்கள்மீதான ஒடுக்குமுறைகளையும் நான் எதிர்த்துள்ளேன்.
குஜராத்
கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண நிதி திரட் டிய ஷாந்தா கோஷ்
கவிஞரிடம் நன் கொடையாக பத்தாயிரம் ரூபாய் தொகையை அளித்துள்ளேன். பங்களாதேஷில்
இந்துக்கள்மீதான ஒடுக்குமுறைகளை நான் எதிர்த் துள்ளேன். ஜெர்மன் நாசிக்கள், போஸ் னியா, பாலஸ்தீனம் மீது யூதர்களின்
ஒடுக்குமுறைகள், பாகிஸ்தானில்
கிறித்தவர்மீதான ஒடுக்குமுறைகள் இவை அனைத்தையும் எதிர்த் துள்ளேன்.
பிகே, வாட்டர் மற்றும் லாஸ்ட்
டெம்ப்டேஷன் ஆப் கிறிஸ்ட் (PK, Water and The Last Temptation of Christ) ஆகிய படங்களுக்கு ஆதரவாக
எழுதியும் வந்துள்ளேன்.
தயவு
செய்து என்னை முசுலிம் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு நாத்திகர்.
கேள்வி: இந்திய பகுத்தறிவாளர் களான நரேந்திர தபோல்கர் மற்றும் இந்திய
கம்யூனிஸ்ட்தலைவர் கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்பட்ட போது நீங்கள்
அமைதியாகத்தானே இருந்தீர்கள்?
தஸ்லிமா நஸ்ரீன்: யார் உங் களுக்கு சொன்னார்கள்? என்னுடைய டிவிட்டரைப் பார்த்து, சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
உடனடியாக என்னு டைய கருத்தை பதிவு செய்தேன். அதனாலேயே இந்துத்துவா சக்திகள் என்னை
வசை பாடினார்கள். ஆனா லும், இசுலாமிய
மதத்தீவிரவாதிகளின் என்மீதான அச்சுறுத்தல் பெரிதாக உள்ளது என்பதும் உண்மை.
பல்வேறு
மேற்கத்திய நாடுகளில் இருப்பதுபோல், மேற்கத்திய உலகு மட்டும்தான்
இசுலாமிய அடிப்படை வாதத்தை ஆபத்து இருப்பதாக எண்ணு கிறார்களா? அதை ஏற்கமுடியாது. மேற்குலகம்
இசுலாமிய அடிப்படை வாதிகளிடம் இருவேறு அணுகு முறைகளில் உள்ளன.
கேள்வி: ஒரு முசுலீம் எழுத்தாளர் என்கிற முறையில் உங்களின் எழுத்து
களில் இசுலாம்குறித்த மேற்கத்திய உலகின் கற்பனைகளை எதிரொலிப் பவையாக உள்ளன.
மேற்குலகத்தின் விருப்பங்களை சொல்வதற்கு உங்களைக் கட்டாயப்படுத்துகின்றனவா?
தஸ்லிமா நஸ்ரீன்: முசுலிம்கள் அவர்களின் மதத்தை
விமர்சனம் செய்யும் அளவுக்கு மூளை இல்லாத வர்கள் என்று சொல்கிறீர்களா? இசுலாத்தை விமர்சனம் செய்ய
முசுலீம் அல்லாத அறிஞர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதாக எண்ணுகிறீர்களா? அப்படி பார்ப்பது, முஸ்லீம்களின் மீதான விரோதப்
போக்காகவே மிக மோசமாக அமைந்துவிடும்.
கேள்வி: பங்களாதேஷ் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
தஸ்லிமா நஸ்ரீன்: நாட்டை ஆளுபவர்கள் முழுமையாக
அழிவு வேலைகளைச் செய்துவரும் இசுலா மியத் தீவிரவாதிகளை நீதியின் முன்
கொண்டுவரமாட்டார்கள். எப்படி ஆனாலும், அதுதான் கடந்த கால வரலாறு.
எதுவுமே நடைபெறாது. அதுமட்டுமன்றி, இயல்பாகவே அரசியலில் தொடர்போடு
உள்ளார்கள் என்பதால் இதுபோன்ற சம்பவங்கள் வரும் மாதங்களிலும் அதிகரித்துக்
கொண்டுதான் இருக்கும்.
_இவ்வாறு தி
இந்து ஆங்கில செய் தியாளர் சுவோஜித் பக்சி கேட்ட கேள் விகளுக்கு தஸ்லிமா நஸ்ரீன்
பதி லளித்தார்.
_ தி இந்து ஆங்கில நாளிதழ்,
21.3.2015
-விடுதலை ஞாயிறு மலர்,28.3.15,பக்கம்-2
தஸ்லிமா நஸ்ரீன்: மதத்தின் பெயரால் கல்லெறிந்து பெண்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும்.
பதிலளிநீக்குஇந்தக் கூற்றை ஏற்க முடியாது நுனி புல் மேய்ந்து விட்டு தான்தோன்றி தனமாக வாழ ஆசைப்படுவதுதான் பெண்ணுரிமையா.....