இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?
இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர் களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.
அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருதவில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள்.
வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள், அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா? அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தங்கள் மனப் பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.
ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்துகிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?
பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய் திருக்கிறீர்களே.
அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தி யங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே: கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத் திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா?
- வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.
பிராமணர்களின் உதடுகளில் உலாவுவது என்ன?
நமது நாட்டில் எவனாவது கீழ்ச் சாதியிற் பிறந்தவனாக இருப்பானாகில் அவனுக்கு மேற்கதி கிடையாது. (ஏன்? இக் கொடுமையென்ன?)
இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஒவ்வொருவனுக்கும், உயருவதற்கு வழியும், சந்தர்ப்பமும், நம்பிக்கையுமிருக்கின்றன. இன்று ஒருவன் எளியவனாகக் காணப்படுகின்றான். நாளை அவன் செல்வனும், கற்றறி வாளனும், மதிப்புடையோனுமாகக் கூடும். இங்கு ஒவ்வொரு வரும் ஏழைகளுக்கு உதவக் கவலையுடையவர்களாக விருக்கின்றனர்.
நாம் எல்லோரும் ஏழைகள் என்ற பேரிரைச்சல் இந்தியா வெங்கும் முழங்குகின்றதே. ஆனால், ஏழைகளின் நன்மைக்காக எத்தனை தரும மடங்களிருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் துன்ப துயரத்திற்காக எத்தனை பேர் உண்மையாகக் கண்ணீர் வடிக்கின்றனர்? நாமும் மனிதர் களா? அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் ஜீவனத்திற் காகவும் நாம் என்ன செய்கின்றோம்,
நாம் அவர்களைத் தீண்டுவதில்லையே! அவர்களை நாம் நெருங்குவதில்லையே! நாம் மனிதர்களா? அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள், அவர்கள் இந்தியாவில் அதோகதியடைந்திருக்கும் எளிய ஜனங் களுக்காக என்ன செய்கிறார்கள்? தீண்டாதே தீண்டாதே என்ற ஒரே மொழியன்றோ அவர்களுடைய உதடுகளில் சதா உலவு கின்றது?
நமது ஸநாதன மதம் அவர்களுடைய கையிலகப் பட்டுக் கொண்டு எவ்வளவு இழிவுற்றுப் பங்கமடைந்து விட்டது? நமது மதம் இப்பொழுது எந்நிலையிற் கிடக்கின்றது? அது இப்பொழுது தீண்டாதே மதத்தில்தான் புரள்கின்றது;
மற்றெங்குமன்று....
அன்பும் நல்லெண்ணமுமடைய
உங்கள் விவேகாநந்தா
உங்கள் விவேகாநந்தா
(சுவாமி விவேகாநந்தரின் கடிதங்கள் முதற்பாகம், பக்கம் 112, ராமகிருஷ்ண மடம், சென்னை)
- குன்றவாணன் குறிப்பு: தோழர் குன்றவாணன் இதன் நகலை ஞானபூமிக்கும் அனுப்பி உள்ளார்.
-விடுதலை,29.1.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக