1. “நான் ஒரு சனாதன இந்து’’.
2. “வேத - புராண - இதிகாச முதலிய தர்ம சாஸ்திரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’
3. “பகவான் அவதாரங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’
4. “மறு பிறப்பில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’
5. “வேத சாஸ்திரங்களில் கூறியுள்ள வர்ணாசிரம தர்மங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’
6. “விக்கிரக ஆராதனையில் எனக்கு நம்பிக்கை உண்டு.’’
என்று காந்தி முதலில் கூறினார்; எழுதினார்; அதன்படி நடந்தார். ஆகவேதான் அவர் மகாத்மா ஆக்கப்பட்டார்.
காந்தியாரை பார்ப்பனர் ஏன் சுட்டுக்கொன்றார்?
ஆனால், அதே காந்தியார் பின்னர்,
1. “கடவுள் என்ற ஒரு வஸ்து இருப்பதாக எனக்கு நம்பிக்கை இல்லை.’’
2. “இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை.’’
3. “அல்லாவும் _ இராமனும் எனக்கு ஒன்றுதான்-.’’
4. “பார்ப்பனர்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை.’’
5. “வேதத்தைப் போலவே கொரானையும் மதிக்கிறேன்.’’
6. “பலாத்காரமாய் சுவாதீனம் செய்துகொண்ட முஸ்லீம் பள்ளிவாசலை அவர்களுக்கு காலிசெய்து கொடுத்துவிட வேண்டும்.’’ என்று சொன்னார்.
ஆதலால், சுட்டுக் கொல்லப்பட்டார்.
புத்தரை விரட்டி, புத்த மதத்தைக் கொன்ற பார்ப்பனர் அவரை எப்படி விஷ்ணுவின் 10ஆவது அவதாரம் என்றார்களோ, அதுபோல் காந்தியாரை சுட்டுக்கொன்றுவிட்டு கொளுத்தி, அவர் சாம்பலை வைத்து கோவில் கட்டுகிறார்கள்.
இது பெரியாரின் துல்லிய கணிப்பு.
- உண்மை இதழ், 1-15.10.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக