பக்கங்கள்

வெள்ளி, 27 டிசம்பர், 2019

வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?

 

https://www.hindutamil.in/news/opinion/columns/531749-periyar-in-vaikkam.html

Published : 24 Dec 2019 07:34 AM
Last Updated : 24 Dec 2019 07:34 AM

வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்?

periyar-in-vaikkam

பழ.அதியமான்

வைக்கம் என்றதும் தமிழ்நாட்டினருக்கு மனத்தில் முதலில் விரியும் உருவமும் பெயரும் பெரியாருடையதுதான். வைக்கம் என்பது கேரளத்தில் பெரும்பான்மையருக்கு வைக்கத்தப்பன் குடிகொண்டுள்ள ஓர் ஊர். கொஞ்சம் வரலாறு தெரிந்தவர்களிடம் கேட்டால் சத்தியாகிரகம் நடைபெற்ற ஓரிடம். இன்னும் சமூக உணர்வாளர்களிடம் வினவினால் ஈழவர் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லான போராட்டம் நடந்த இடம் என்பர். ஆனால், தமிழ்நாட்டில் வைக்கம் என்றால் சமூக நீதியின் அடையாளம். அதை அடையப் போராடிய வீரர் பெரியார் என்பதாகப் பதில் விரிவடையும். “1924-25-ல் வைக்கம் போராட்டம் நிகழ்ந்த தருணத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரை ‘வைக்கம் வீரர் என்று எழுதினேன். அவருக்கு அது ஒரு பட்டப்பெயராகவே பிற்காலத்தில் ஆகிவிட்டது’ என்று திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார்.

எப்படித் தொடங்கியது போராட்டம்?

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் சிவன் கோயிலைச் சுற்றிலுமுள்ள நான்கு தெருக்களில் ஈழவர் உட்பட தாழ்த்தப்பட்டோர் நடக்கத் தடை இருந்தது. இத்தகைய தடை கேரளம் முழுவதும் அளாவியது. இத்தடையை நீக்கி அவ்வீதியில் நடக்க உரிமை வேண்டி நிகழ்ந்த சத்தியாகிரகமே வைக்கம் போராட்டம். ஈழவர் தலைவர் டி.கே.மாதவன் பல்லாண்டு முன்முயற்சியில் கிளர்ந்த இந்த வைக்கம் போராட்டத்தை உற்சவ மூர்த்தியாகவும் மூளையாகவும் முறையே கேரள காங்கிரஸ் தலைவர்கள் கே.பி.கேசவ மேனனும் ஜார்ஜ் ஜோசப்பும் தொடங்கி வைத்தனர். தமிழ்நாட்டுப் பெரியார், கேளப்பன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி போன்றோர் நடத்துநராகப் போராட்டத்தைச் செயல்படுத்த, ஆலோசகரான காந்தி நிறைவில் வந்து முடித்து வைத்தார் எனச் சுருக்கமாக வைக்கம் போராட்டச் சித்திரத்தை வரையலாம். இடையில் மன்னத்து பத்மநாபன் போன்றோர் பெரும் துணைவலியாக அமைந்தனர்.

1924 மார்ச் 30 அன்று கேரள காங்கிரஸ் ஆதரவில் தொடங்கிய போராட்டம் ஏப்ரல் முதல் வாரத்திலேயே தன் போராளிகள் அனைவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டுத் தலைவர்களின்றி தத்தளித்து நின்றது. வழிநடத்தும் தலைவர்களைக் கேட்டு காந்தி, ராஜாஜிக்கும், அவரையே வரும்படி வேண்டி பெரியாருக்கும் ஜார்ஜ் ஜோசப் எழுதினார். முதல் இருவரும் கோரிக்கையை நிராகரித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பெரியாரோ கேரள அழைப்பை ஏற்று வைக்கம் சென்றார். தான் கட்டாயம் வந்தே தீர வேண்டுமா என்று இரு முறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே பெரியார் கிளம்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ற அந்தஸ்திலேயே சென்றமையால், தலைமைப் பொறுப்பைத் தற்காலிகமாக ராஜாஜியைப் பார்க்கச் சொல்லி கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றார். வைக்கம் சென்ற 13 ஏப்ரல் 1924 முதல் அவர் தலைமையில் நடைபெற்ற வெற்றி விழா நிகழ்ந்த 29 நவம்பர் 1925 வரையான காலத்தில் பெரியார் போராட்டத்துக்குப் பங்களித்தார்.

எப்படி நடந்தது போராட்டம்?

தடைசெய்யப்பட்ட சாலைகளின் தடுக்கப்பட்ட இடங்களில் தினமும் குறைந்தது மூன்று பேர் சத்தியாகிரகம் செய்வர். 604 நாள் போராட்டம் நிகழ்ந்தது. பல நாள் பெரியார் தலைமை தாங்கினார். போலீஸாரின் தடியடியும் வாயடியும் குறைவின்றி நிகழ்ந்தன. வைதிகர் ஏற்பாடு செய்த அடியாட்களின் அக்கிரமங்களுக்கும் குறைவில்லை. சத்தியாகிரகிகளின் கண்ணில் சுண்ணாம்பைப் பூசிய சம்பவங்களும் நிகழ்ந்தன. மக்கள் ஆதரவைத் திரட்ட வைக்கத்தைச் சுற்றிலும் கிராமங்களிலும் சேர்த்தலை, வர்க்கலை, கோட்டயம் போன்ற நகரங்களிலெல்லாம் ஓயாமல் பிரச்சாரம் செய்தார் பெரியார். தெற்கே திருவனந்தபுரம், நாகர்கோவில் வரை அவரது பிரச்சாரப் பயணம் நீண்டது. மக்களிடமும் வியாபாரிகளிடமும் நிதி வசூலித்தார்.

வைக்கம் சத்தியாகிரகத்தை அகில இந்திய இயக்கமாக்கக் கேரளத் தலைவர்கள் கோரியபோது காந்தி இணங்கவில்லை. இயக்கம் பலவீனமாகிறதே என்று அவர்கள் வற்புறுத்தியபோது அதைச் சாகவிடாமல் சென்னை மாகாணத்தவர் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லிவிட்டார். எனவே, பெரியார் உட்பட தமிழ்நாட்டுத் தலைவர், தொண்டர்களின் பங்களிப்புக்கு காந்தியின் பொது அனுமதி இருந்தது எனக் கருதலாம். இத்தகைய வெளியார் உதவியின் இன்றியமையாமையை காந்தியை விடவும் சமஸ்தான ரெசிடெண்ட் சி.டபிள்யூ.இ. காட்டன் சரியாக உணர்ந்திருந்தார்: “சாலையை அனைவருக்குமாகத் திறப்பது என்ற பிரச்சினை உள்ளுர் சம்பந்தப்பட்டதாகவே இருப்பினும், வெளியிலிருந்து மட்டும் இதற்கு உதவி வராதிருந்தால் உண்மையில் இந்த இயக்கம் எப்போதோ பிசுபிசுத்துப்போயிருக்கும்” என்று 21 ஏப்ரல் 1924 அன்றைய குறிப்பில் அவர் சொல்கிறார்.

பிந்நாளில் 1980-களில் வைக்கம் போராட்டத்தைப் பற்றிய முதல் ஆய்வு நூலை எழுதிய கேரள வரலாற்றுப் பேராசிரியர் டி.கே.ரவீந்திரன் “பெரியாரின் வரவினால் இயக்கத்திற்குப் புதிய உயிர் கிடைத்தது” என்று பதிந்துள்ளார். மிகச் சமீபத்தில், காந்தியின் அகிம்சை தொடர்பில் வைக்கம் போராட்டத்தை ஆய்வுசெய்து அமெரிக்க ஆய்வாளர் மேரி எலிசபெத் கிங் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அவருக்கு கேரளப் பேராசிரியர் கே.கே.குசுமான் அளித்த நேர்முகத்தில் “ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக இந்தியா முழுவதும் அறிமுகமாகியிருந்த பெரியார் தன் வெடிப்புறப் பேசும் திறனால் இக்கட்டான நேரத்தில் போராட்டத்தை வளர்த்தெடுத்தார்” என்று விவரித்துள்ளார்.

என்ன செய்தார் பெரியார்?

அரசினரும் கேரளரும் மெச்சும்படியாக வைக்கத்தில் பெரியார் என்னதான் செய்தார்? மக்கள் ஆதரவைத் திரட்டும் பிரச்சாரமே அவரது முதன்மையான பணி. “நாடு என்ன உங்கப்பன் வீட்டுச் சொத்தா? நாட்டை பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்துவிட்ட பிறகு, நாடே கோயில் சொத்துதானே!” என்று மன்னரைப் பார்த்துப் பேசினார் பெரியார். மன்னர் திருமனசைப் பாராட்டலாமே தவிர எதிர்த்து பேசுவது கூடாது என்பது திருவாங்கூர் சமஸ்தான சம்பிரதாயம்.

கிறிஸ்தவரும் முஸ்லிம்களும் அந்தத் தெருவில் நடக்கலாம். இந்துவான ஈழவர் நடக்க அனுமதி இல்லை. இந்த முரண் ஏன் என்பது சத்தியாகிரகிகளின் வாதங்களுள் ஒன்று. அதற்குப் பதில் அளித்த அதிகாரிகள், அவர்களையும் வேண்டுமானால் தடுத்துவிடுகிறோம் என்று கூறினர். இதைக் கிண்டல் செய்தார் பெரியார். “நாங்கள் பசியாக இருக்கிறோம் என்று சொன்னால், பசியாக இருக்கிறோம் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்றால், மற்றவர் சாப்பிடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. அவர்கள் சாப்பிடும் உணவைப் பறித்துவிடுகிறோம் என்கிறது” என்றார்.

ஈழவரின் மீதான தீண்டாமையை மறுத்துப் பேசும்போது பெரியார் பின்வருமாறு பேசினார். “உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை பயன்படுகிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை, தாய் உண்டா? இடது கையைத் தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலது கையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும்போது நமது இடது கையை விட்டுவிட்டுச் செல்கிறோமா? வலது பக்கம் இடது பக்கத்தைவிட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லுகிறோமா அல்லது வலது காலால் உதைபடும்போது சந்தோஷப்படுகிறோமா?” என்று சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகப் பேசினார் பெரியார்.

தீண்டாமையைக் கண்டித்து இவ்வளவு வேகமாகப் பேசியோர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தலைவர்களான பெரியாரும் கோவை அய்யாமுத்துவும்தான். கிளர்ச்சிக்காரர் அனைவரையும் சிறைப்படுத்த அரசாங்கம் முயன்றது. வைக்கம் வந்த பதினைந்து நாட்களுக்குள் பெரியார் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. கோட்டயம் மாவட்டத்துக்குள் பிரவேசிக்கவும் தடை போடப்பட்டது. பின்னர், அந்தத் தடை கொல்லம் மாவட்டத்துக்கும் நீண்டது. எந்தத் தடையையும் மதிக்காமல் பெரியார் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார், சமஸ்தானம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். அரசாங்கம் பொறுக்க முடியாமல் ஒருகட்டத்தில் அவரைக் கைதுசெய்தது. நீதிமன்ற விசாரணையும் வைக்கத்தில் நிகழ்ந்தது. “இந்த நீதிமன்றம் நியாயம் செய்யும் என்ற நம்பிக்கை இல்லை. விசாரணை வெறும் வேஷம். நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க முடியாது” என்று அறிவித்ததோடு, “சமாதானம் உண்டுபண்ணவே நான் வைக்கத்துக்கு வந்தேன், எவ்விதமான தண்டனை விதித்தாலும் ஏற்கத் தயார்” என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார் பெரியார். இதையடுத்து நீதிமன்றம் 22 மே 1924-ல் ஒரு மாத வெறுங்காவல் தண்டனை அளித்தது. ஆறுக்குட்டியில் பெரியார் அத்தண்டனையை அனுபவித்தார்.

அடுத்தடுத்த சிறைத் தண்டனைகள்

சிறையிலிருந்து விடுதலை அடைந்த பெரியார் மீண்டும் நேராக வைக்கம் போனார். ஈரோட்டுக்குச் செல்வார் என்று எதிர்பார்த்த அரசாங்கம், ஏமாற்றமும் கோபமும் அடைந்தது. “கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைவதற்குத் தடை அமலில் இருக்கும்போது அவரை வைக்கத்திற்குள் நுழைய ஏன் அனுமதித்தீர்கள்?” என்று மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரை மாவட்ட மாஜிஸ்டிரேட் கடிந்துகொண்டார். ஆனால், அரசாங்கம் உடனே கைதுசெய்யவில்லை.

அரசாங்கத்தின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் பெரியார் தொடர்ந்து பிரச்சாரத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ராட்டையைப் போராட்டக் களத்தில் கொண்டுசெல்வதில் காவல் துறைக்கும் சத்தியாகிரகிகளுக்கும் பிரச்சினை எழுந்தபோது பெரியார் அதைத் தீர்த்துவைத்தார். தொடர்ந்து அவரை அரசாங்கம் வெளியில் விட்டுவைக்கவில்லை. முதல் சிறைவாசம் முடிந்து விடுதலையான 27-வது நாள் (18 ஜுலை 1924) மீண்டும் கைதுசெய்தது. இந்த முறையும் பெரியார் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க மறுத்தார். முதல் முறை உபாயமான தண்டனை விதித்தும் ‘எதிரி’ திருந்தவில்லை என்பதாலும், இரண்டாம் தடவையாக அரசு உத்தரவை மீறி நடந்திருப்பதாலும் நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதித்தார்.

இம்முறை ஆறுக்குட்டி சிறையில் பெரியாரை அடைக்கவில்லை. மற்ற சத்தியாகிரகிகள் இருந்த திருவனந்தபுரத்துக்கும் அனுப்ப அரசாங்கம் விரும்பவில்லை. கோட்டயம் மாவட்டச் சிறையில் அடைக்க விரும்பியது. அதற்காக வைக்கத்திலிருந்து புறப்பட்ட படகு, 20 மைல் தூரத்துக்குப் பிறகு பெருமழை, புயல் காரணமாக மேலும் போக முடியாமல் திரும்பிவிட்டது. வைக்கம் காவல் நிலையச் சிறையில் சில நாள் வைத்திருந்து பின் திருவனந்தபுரம் மத்தியச் சிறைக்கே அனுப்பி வைத்தது அரசாங்கம்.

திருவனந்தபுரம் மத்தியச் சிறையிலிருந்த கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உள்ளிட்ட சத்தியாகிரகிகள் அனைவரும் அரசியல் கைதிகளாகக் கருதப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட்டனர். ஆனால், பெரியார் அவ்வாறு நடத்தப்படவில்லை. ‘கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகிற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட மரப்பட்டை. இவற்றுடன் ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும் கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்துகொண்டிருந்தார். தண்டனை அடைந்த ஒரு சாதாரண கைதி ஒரு நாளைக்கு எவ்வளவு வேலை செய்வானோ அதைவிட இருமடங்கு வேலை செய்கிறார்.” இது பெரியாருடன் சிறையிருந்த கே.பி.கேசவ மேனனின் நேரடி சாட்சியம்.

பெரியாருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையைப் பொறுத்துக்கொள்ள இயலாத கேசவ மேனன், பெரியாருக்கு அரசியல் கைதி அந்தஸ்து அளிக்குமாறு சிறையிலிருந்தே அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார். எனினும், விடுதலை அடையும் வரை அதற்குப் பதில் வரவில்லை என்று தன் வாழ்க்கை வரலாறான ‘கடந்த கால’த்தில் குறித்துள்ளார்.

பெரியாருக்கு ஆதரவாக ராஜாஜி

பெரியாரின் நிலை ராஜாஜியையும் வருத்திற்று. பெரியாருக்கு ஆதரவாக அரசாங்கத்தைக் கண்டித்துப் பத்திரிகையில் எழுதினார் அவர். ஈ.வெ.ராமசாமி நாயக்கரைக் கடுங்காவல் தண்டனையில் வைத்திருப்பதும், இரும்பு விலங்கிட்டிருப்பதும், அவருக்குச் சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாகிரகிகள் சரியாகப் பெற்றுள்ளவற்றை அவருக்கு மறுப்பதும் நியாயப்படுத்தவே முடியாதவை என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதியிருந்தார் ராஜாஜி (27 ஆகஸ்ட் 1924). இந்தச் சமயத்தில் பெரியாருக்கு ராஜாஜி சூட்டிய புகழாரம் முக்கியமானது. “ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல அல்ல; உண்மையிலேயே!”

திரு.வி.க.வும் இக்கொடுமையைச் சாடினார். “திருவாங்கூர் அரசாங்கம் ஒரு சத்தியாகிரகியை இவ்வாறு துன்புறுத்துவது தருமமோ என்று கேட்கிறோம்” என்று மனம் நொந்தார் திரு.வி.க.

சிறை தளர்த்த முடியாத வீரர்

இரண்டாம் முறையாகச் சட்டத்தை மீறியிருப்பதால் தனிச்சலுகை எதுவும் அவருக்கு வழங்க வேண்டாம் என்ற மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் கருத்துக்குள் அரசாங்கம் ஒளிந்துகொண்டு விடுதலை வரை துன்புறுத்தியது. புதிய மன்னர் பொறுப்பேற்றதையடுத்து 30 ஆகஸ்ட் 1924 அன்று பெரியார் உட்பட 19 சத்தியாகிரகிகள் விடுவிக்கப்பட்டனர். விதிக்கப்பட்டிருந்த கடுந்தண்டனைக்காக கேரளமும் தமிழகமும் வருந்த, விடுதலையான பெரியாரோ, நாகர்கோவிலில் பேசும்போது, “நான் சிறையில் பட்ட கஷ்டத்திற்காக யாரும் வருந்த வேண்டாம். விடுதலைதான் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது” என்று வேதனையையும் வேடிக்கையாக எதிர்கொண்டார்.

அடுத்து பெரியார், கே.பி.கேசவ மேனன் உள்ளிட்டோர் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். “பொதுச்சாலைகளில் எல்லோரும் நடமாடலாம் என்பதை அனுமதிப்பதற்குரிய அறிகுறியாகவே எங்கள் விடுதலையைக் கொள்கிறோம். அப்படி நடக்காவிடில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம்” என்று அவ்வறிக்கையில் தெரிவித்தனர். இவ்வறிக்கை மூலம் அரசின் விடுதலையைச் சலுகையாக ஏற்காமல் அதையும் ஒரு நிபந்தனையாக மாற்றினர் சத்தியாகிரகிகள். கேட்டிலும் துணிந்து நின்றார் பெரியார்.

ஒன்றரை மாதங்களுக்கு மேல் சிறையிருந்த பெரியார், இந்த விடுதலைக்குப் பிறகும் வீட்டுக்குத் திரும்பவில்லை. வைக்கத்துக்கே சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார். நெடுங்கணா, நாகர்கோவில் போன்ற ஊர்களில் பத்து நாள் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, ஈரோட்டுக்கு செப்டம்பர் 10-ம் தேதி திரும்பினார். காத்திருந்ததுபோல் சென்னை மாகாணக் காவல் துறை 11-ம் தேதி பெரியாரைக் கைதுசெய்தது. இந்தக் கைது ஆறு மாதம் முன்பு மயிலாப்பூரில் பேசிய அரசு விரோத பேச்சு ஒன்றுக்கானது. வேறு அரசாங்கத்தால், வேறு காரணத்துக்காக, வேறிடத்தில் கைது நிகழ்ந்திருப்பினும் அவரை மீண்டும் வைக்கத்துக்குச் செல்ல ஒட்டாமல் தடுப்பதே நோக்கம் என்று ஊகிக்கலாம். எது எப்படியோ வைக்கத்துக்கு உடனடியாகச் செல்லவிடாமல் இந்தக் கைதும் வழக்கும் அவரைத் தடுத்துவிட்டன.

பெரியார் வைக்கத்தில் இருந்த காலத்திலும் சரி பிறகும் சரி, போராட்டம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது. பண நெருக்கடி அதில் முதலாவது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பெரியார் வழியாக ரூ.1000 கொடுத்தது. மற்ற பிரச்சினைகளை ஆலோசித்து முடிவெடுக்க பல ஆலோசனைக் கூட்டங்கள், சமாதானத் தூதுகள், பிரச்சாரக் குழுக்கள், மகளிர் அணிகள் அவ்வப்போது உருவாயின. அவை பலவற்றில் பெரியாரும் நாகம்மையாரும் இடம்பெற்றிருந்தனர். இவ்வகையில் திவானைச் சந்தித்து சமாதானம் பேச ஏற்பட்ட எட்டுப் பேர் கொண்ட குழுவில் பெரியாரும் ஒருவர்.

பெரியார் வைக்கத்தில் போராடிக்கொண்டிருந்த காலத்தில் அங்கு வந்த தலைவர்கள் அனைவரும் அவரைக் கலந்தாலோசித்தனர். ஆரிய சமாஜத் தலைவர் சிரத்தானந்தர் போராட்டம் நலிவுற்றிருந்த ஒரு கட்டத்தில் அதை எடுத்து நடத்தவும் ஒப்புக்கொண்டார். ராஜாஜி வைக்கம் வந்தபோது காவல் நிலைய சிறையில் இருந்த பெரியாரைச் சந்தித்த பிறகே ஆசிரமம் சென்றார். வரதராஜுலு நாயுடு, எஸ்.சீனிவாச ஐயங்கார், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோர் சத்தியாகிரக ஆசிரமத்தில் அவரைச் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சி.வி.வேங்கட ரமண ஐயங்கார் பெரியாருடன் பிரச்சினைக்குரிய சாலைகளைப் பார்வையிட்டார். ஆக இந்திய, தமிழகத் தலைவர்கள் பலரும் பெரியாருடன் போராட்டம் குறித்து விவாதித்தனர்.

காந்தி – பெரியார் சந்திப்பு

போராட்டத்தின் நிறைவுக் கட்டத்தில் வைக்கம் வந்த காந்தியுடனும் பெரியார் தொடர்பில் இருந்தார். டெல்லியிலிருந்து சென்னை வழியாக வந்த காந்தியை ஈரோட்டில் (8 மார்ச் 1925) வரவேற்றுவிட்டு, வர்க்கலையில் (12 மார்ச் 1925) அவரோடு இணைந்துகொண்டார். அதேபோல், நாராயண குருவைச் சந்தித்த காந்தியுடனான சிறு குழுவில் அவர் இருந்ததையும் காவல் ஆணையர் பதிவுசெய்துள்ளார். பெரியாரைக் கலந்தாலோசித்த பிறகே ராணியாரை காந்தி சந்தித்துப் பேசியதாகப் பலவிடங்களில் பிற்காலத்தில் தெரிவித்துள்ளார் பெரியார்.

வைக்கம் வருகையின்போது காவல் துறை ஆணையருடன் காந்தி மேற்கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் விளைபயனாய், ஓராண்டுக்கு முன்னால் பெரியாருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. ‘ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு விரோதமாகப் பிறப்பித்த தடை உத்தரவைத் திருவாங்கூர் கவர்ன்மென்டார் வாபஸ் வாங்கிக்கொண்டுவிட்டார்கள் என்பதைக் கேட்க வாசகர்கள் சந்தோஷமடைவார்கள்” என்று காந்தி ‘யங் இந்தியா’வில் (23 ஏப்ரல் 1925) தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.

மனைவியுடன் களம் சென்றார்

காங்கிரஸின் தமிழ்நாட்டுத் தலைவராகவே பெரியார் போராட்டத்தில் கலந்துகொண்டார். தனிப்பட்ட முறையில் அல்ல; அவர் வழியாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆயிரம் ரூபாயைப் போராட்டத்துக்கு அனுப்பியது. கிடைக்கும் பெயர் விவரப்படி, 50 பேர் அளவிலான தொண்டர்களுடன் சென்று அவர் அங்கு போராடினார். தன் குடும்பத்தையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். 15 மே 1924-ல் வைக்கம் வந்த நாகம்மையார், தொடர்ந்து நான்கு மாதம் சுற்றுப்பயணம் செய்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. நாகர்கோவில் தலைவர்கள் சிலரும் குடும்பத்துடன் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மிக முக்கியமான செய்தி, பெரியார் தன் வாழ்வின் நடுப்பகுதியில் வைக்கத்தில் 74 நாட்கள் சிறையிலும், 67 நாட்கள் வெளியிலுமாக 141 நாட்களைப் போராட்டத்துக்காகச் செலவிட்டார் என்பதாகும்.

ஆலோசகர் காந்தி கொள்கை அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட அயல் மதத்தவரை வெளியேற்றினார், சத்தியாகிரகிகள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை நிறுத்தினார், அகாலியர் நிறுவியிருந்த தரும உணவுச்சாலையை மறுத்தார், அயலிலிருந்து தொண்டர்களோ நிதியோ வருவதைத் தடைசெய்தார். இப்படியான காந்தியின் அறிவுறுத்தல்களால் போராட்டம் பல இன்னல்களைச் சந்தித்தது, இரு முறை சத்தியாகிரகிகள் நேரடியாகச் சென்று அவரிடம் முறையிட்டனர். இயக்கமும் பலவீனப்பட்டுவந்தது. எனினும், ஜார்ஜ் ஜோசப் தவிர, பொதுவெளியில் காங்கிரஸ்காரர் எவரும் எதிர்ப்பேச்சு பேசவில்லை, பெரியாரும் பேசவில்லை. ஒரு உண்மை சத்தியாகிரகியாகவே களத்தில் அவர் விளங்கினார். பின்னாளில் கருத்து வளர்ச்சியும், அதனால் பார்வை மாற்றமும் நேர்ந்த நிலையில் பெரியார் காந்தியின் அறிவுறுத்தல்களை விமர்சித்தார். சத்தியாகிரகத்தை நிறுத்திவிடவே காந்தியும் இராஜாஜியும் விரும்பினர் என்று இதே அறிவுறுத்தல்களையே காட்டி விமர்சித்தார்.

தீர்வு தந்த போராட்டம்

எப்படியோ நவம்பர் 1925-ல் போராட்டம் - பெரியாருக்கு ஏன் காந்திக்கும்தான் - முழு மகிழ்ச்சியைத் தராத, நான்கில் மூன்று தெருக்களில் மட்டும் அனுமதி என்ற ஒருவகை சமாதானத்துடன் முடிவுக்குவந்தது. சத்தியாகிரகத்தின் வெற்றி விழாவுக்குத் தலைமை தாங்க பெரியாரைக் கேரளர் அழைத்தனர். அயலிலிருந்து கலந்துகொண்ட ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. சத்தியாகிரகத்தின் வெற்றியைப் பற்றியும் தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்துவிடவில்லை. தெருவில் நடக்க உரிமை கேட்டவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது கையைப் பிடித்து அழைத்துச் செல்ல முன்வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்துக்கும் மகாத்மாவுக்கும் எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது விளங்குகிறது என்று பெரியார் வியந்தார் (குடிஅரசு, 6 டிசம்பர் 1925). போராட்டத்தின் வெற்றிவிழாவை பெரியாரின் தலைமையில் கொண்டாடியது மிக முக்கியத்துவமுடைய செய்தியாகும். கேரளர்கள் நன்றி மறக்காதவர்கள். இன்றும் வைக்கத்தில் கேரளர்கள் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது பெரியார் சிலை. தமிழ்நாட்டில்தான் சிலர் கேட்கிறார்கள், பேசுகிறார்கள், “பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?” என!

- பழ.அதியமான், வரலாற்று ஆய்வாளர்.

தொடர்புக்கு: athiy61@yahoo.co.in

டிசம்பர் 24: பெரியார் நினைவு நாள்

*****************************************************************************************

வைக்கம் போராட்டம்
பழ.அதியமான்
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
விலை: ரூ.325
9677778863

பழ.அதியமான் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் ‘வைக்கம் போராட்டம்’ நூலிலிருந்து...

விளையும் பயிர்" சிறுவயதிலேயே அறிவார்ந்த செயல்கள் மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைத்தவர்கள்


தந்தை பெரியார் முன்னிலையில் கி. வீரமணியின் முதல்முழக்கமும் அண்ணாவின் பாராட்டும்:

1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி.....

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென் னார்க்காடு மாவட்டத் திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இளவயதி லேயே கி.வீரமணியைப் ‘பகுத்தறிவுக் கொள் கையில் நாட்டம் கொள்ளச்செய்த அவரு டைய ஆசிரியர் திரு. ஆ.திரா விடமணி பி.ஏ..அவர்கள் பெருமுயற்சியால் தான் அம்மாநாடு கூட்டப்பட்டது. மாநாட் டிற்கு விருதுநகர் திரு.வி.வி.இராமசாமி அவர்கள் தலைவர். மாநாட்டுத் திறப்பாளர் அய்யா பெரியார் திராவிட நாட்டுப் படத் திறப்பாளர் தளபதி அறிஞர் அண்ணா. அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள். இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய, ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒரு பக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர் களைப் பார்க்கப் போகிறோம், எப்போது விடியும் என்ற ஆவல் கி.வீரமணி யின் உறக்கத்தினை ஓடோடச் செய்

தது. பொழுது விடிந்ததும் திரு.ஏ.பி.ஜனார்த் தனம், எம்,ஏ., அவர்கள் அய்யாவைப் பார்க்க கி.வீர மணியை அழைத்துப்போனார். அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங் கினார்கள். கி.வீரமணிக்கு ஆசை ஒரு பக்கம். அவரை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம்.அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தார். “இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபாடுள்ளவன். நண்பர் திராவிடமணி தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகி றான்’’ என்று அய்யாவுக்கு அறிமுகப் படுத்தி னார். தோழர் ஏ.பி.ஜனார்த்தனம், கி.வீரமணி அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமை யாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்து விட்டார். மறுநாள் மாநாட் டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். இம் மாநாட்டில் கி.வீரமணி உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும் கண்ட னங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்றும் அய்யா அவர்கள் வெளி யிட்ட கருத்தைவிட பேசிய முறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்து பேசிய அண்ணா அவர்கள் கி. வீரமணியின் பேச்சை வைத்தே துவக்கினார்.

“இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத் திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல் லாம் ஞானப்பால் அல்ல பெரியாரின் பகுத் தறிவுப்பால்தான்” என்று அறிஞர் அண்ணா அவர்கள் கி.வீரமணியைப் பற்றி குறிப் பிட்டார்கள்.

நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறிய மாநாட்டில் கி. வீரமணி:

1944 ஆகஸ்ட் 26, 27ஆம் நாள்களில் நீதிக்கட்சியின் 16ஆவது மாகாண மாநாடு சேலத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை யில் கூடியது. பழைமை வாதிகள் சிலர் திட்ட மிட்டுப் பெரியாரின் தலைமைப்பதவியைப் பறித்திடக் கனவு கண்டனர். சென்னையில் அண்ணா தலைமையில் கூடிய ஒரு மாநாட் டில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற பெயரைத் திராவிடர் கழகம் என மாற்ற வேண்டிப் பரிந்துரைக்கும் முடிவு மேற்கொள் ளப்பட்டிருந்தது. அதன்படி சேலத்தில் கட்சி யின் பெயர் திராவிடர்கழகம் என மாற்றப்பட் டது. சேலம் மாநாட்டின் முக்கியத்துவமே அண்ணாதுரை தீர்மானந்தான். பெரியார் விருப்பத்திற்கிணங்கவே அண்ணா இதனைக் கொணர்ந்து நிறை வேற்றினார்.

இதன்படி பிரிட்டிஷ் அரசால் அளிக்கப் பட்ட கவுரவப்பட்டங்களான சர், திவான்- பகதூர், ராவ்பகதூர், ராவ்சாகிப், கான்சாகிப் போன்றவைகளைக் கட்சியில் உள்ளோர் விட்டு விடவேண்டும். அதேபோலக் கவுரவ நீதிபதி, ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு நியமனங்கள், நாமினேஷன் மூலமாகப் பிரிட்டிஷ் அரசால் தரப்பட்ட எல்லாப்பதவி களையும் விட்டொழிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறியதன் வாயிலாக ‘சரிகைக்குல்லாய்க் கட்சி’ என்ற அவப்பெயர் ஒழிந்தது. இங்கு ஒரு தீர்மானத்தின் மீது பேசினார் கடலூர் சிறுவன் கி.வீரமணி. பத்துவயதுச்சிறுவன் கி.வீரமணி 1944 சேலம் மாநாட்டில் தீர்மானத்தை வழி மொழிந்து பேசியதன் மூலம் இயக்கத்தின் வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டார். வரலாறு படிப் போராக இல்லாமல் திராவிட இயக்க வரலாறு படைப் போராக கி. வீரமணி மாறினார்.

அய்சக் நியூட்டன்

1762-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று கிழக்கு இங்கிலாந்தில் உள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஊரில் பிறந்தார்.  அவ்வூருக்கு அருகில் உள்ள கிங்க்ஸ் ஸ்கூல் ஆப் கிராந் தம் என்ற பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு வயது 12. இப்போது கூட இந்த ஊரில் சில வீடுகள் மட்டுமே உள்ளது. மிகவும் அமைதியான இந்த கிராமத்தில் அன்று தூரத்தில் உள்ள மலைப்பகுதியில் இருந்து வரும் காற்றின் ஓசை மற்றும் மரக்கிளைகளின் ஓசையைத் தவிர வேறு ஒன்றுமே கேட்காது.

இந்த நிலையில் அவரை பள்ளிக்கு அழைத்துச்செல்ல குதிரை வண்டி ஒன்று தினசரி  தூரத்தில் உள்ள சிறிய குன்றின் பாதையில் வரும். குதிரைவண்டியில் குதிரையை அடிக்க சாட்டையைச் சொடுக் கும் ஓசை துல்லியமாக அய்சக்கின் காது களில் விழும். மற்றவர்கள் என்றால் இதை ஒரு சாதாரண ஓசை என்று விட்டுவிடு வார்கள். ஆனால், அய்சக் நியூட்டனுக்கு எதையுமே ஆய்வு நோக்கில் பார்க்கும் பக்குவம் அந்த சிறிய வயதிலேயே வந்து விட்டது. ஒவ்வொரு முறையும் சாட்டை ஓசை அவர் காதில் விழும் போது அதை கணக்கிட லானார். அதாவது தூரத்தில் இருந்து வரும் ஓசை அருகில் இருந்து வரும் ஓசை அதற் கான வேகம் ஓசையின் வேகம் போன்ற வற்றை கணக்கிட்டுக்கொண்டார்.

குளிர்காலம் மற்றும் மழைக் காலத்தில் ஓசையின் வேகம் அதிகமாகவும் வேனில் காலத்தில் வேகம் குறைவாவும் வருவதை கண்டார். இதனடிப்படையில் வெற்று வெளியில் ஓசையின் வேகம் குறைவாகவும், நீரில் ஓசையின் வேகம் அதிகமாகவும் பரவும் என்பதை கண்டுபிடித்தார். தனது 12 வயதில் கண்டுபிடித்த இந்த ஓசையின் வேகம் குறித்த ஆய்வே பிற்காலத்தில் ஒளியின் வேகம் குறித்த உன்னதமான பார்முலாவைத் தர

V =square root E/d. V=square root P/d  என்ற துவக்கப்புள்ளியாக அமைந்தது.

தன்னுடைய 17ஆவது வயதில் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக் கத் துவங்கினார். அப்போது பிளேக் நோய் பரவியதால் மீண்டும் தனது ஊருக்கே வந்துவீட்டிலேயே படிக்கலானார். அந்த காலக்கட்டத்தில் தான் அவர் புகழ்பெற்ற ஈர்ப் புவிசை கொள்கை உருவாக்கிய ஆப்பிள் விழும் நிகழ்வு நிகழ்ந்தது.

ஜேம்ஸ் வாட்

அயர்லாந்தில் உள்ள கிரீன்னோக் என் னும் ஊரில் 1736-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை மரப்பொருட்கள் தயாரிக் கும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இவரது தாயார் மிகச்சிறந்த கல்வியாளர்.  இவரது குடும்பத்தினர் கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபட்டவர்கள்.  குத்தகைக்கு கப்பல்களை எடுத்து பழுது பார்க்கும் பணியையும் செய்துவந்தனர். இந்த நிலையில் சிறுவன் ஜேம்ஸ் வாட் சிறுவயதிலேயே தனது தாத்தாவின் கப்பல் பராமரிப்பு பணியை உடனிருந்தே பார்த்துவந்தார்.

மிகவும் அதிகம் கேள்விகளைக் கேட் பவர். இவர்கள்குடும்பத்துடன் சாப்பிடும் போது ஒவ்வொரு குழந்தைகளும் கேள்வி கேட்கவேண்டும் என்று அவரது தாத்தா அன்புக் கட்டளையிடுவார்.  இதில் ஜேம்ஸ் வாட் அதிகம் கேள்வி கேட்பார். அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல அவரது அன்னை எப்போதும் தயாராக இருப்பார்.

தனது  15-ஆவது வயது கப்பலில் பழுது பார்க்கும் மிகவும் கனமான கருவிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்ல மிகவும் அதிக அளவு மனித ஆற்றல் செலவெடுப்பதும், இதற்கு தீர்வு இல்லையா என்றும் தனது தாத்தா விடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு அவரது தாத்தா இங்கிலாந்தில் நெம்புகோல் போன்ற ஒரு கருவி உள்ளது. ஆனால் அதை இயக்குவதற்கு மிகவும் கடினமானது என்று கூறினார்.

சில நாட்களிலேயே அவர் தனது தாத் தாவுடன் இங்கிலாந்து சென்று அந்த நெம்பு கோல் கருவியைப் பார்வையிட்டு வந்தார்.

அதை இயக்குவதற்கும் மனித ஆற்றல் அதிகம் செலவிடப்படுவதை கண்டார்.  அதே போல் அவரது ஊரின் தொலைவில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி கொண்டுவருவதற்கும் மனித ஆற்றல் செலவிடப்படுவதைக் கண்டார். மனித ஆற்றல் இல்லாமல் இவற்றை எப்படி இயக் குவது என்று அவர் தொடர்ந்து சிந்தித்து வந்தார். இதற்கான கேள்விகளையும் அவர் தனது தாத்தா மற்றும் அன்னையிடம் கேட்டு வந்தார்.. அவருக்கு 16ஆவது  வயதில் சாப்பிடும் போது சமையலறையில் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கும் போது மூடி விலகுவதைக் கண்டார். இது குறித்து தனது அன்னையிடம் கேட்டார். அதற்கு அவரது அன்னை பாத்திரத்தில் உள்ள நீர் சூடாகும் போது நீராவியாகி வெளியேறும் அந்த நீராவி வெளியேறும் போது எந்த ஒரு கனமான பொருள் இருந்தாலும் அதை விலக்கிவிட்டு நீராவி வெளியேறும் என்று கூறினார்.

இதனை அடுத்து அவர் அந்த தட்டின் மீது செங்கல் மற்றும் கனமான கற்களை வைத்தார். பாத்திரத்தில் உள்ள நீர் கொதிக் கும் போது கனமான செங்கல் மற்றும் கற்கள் இருந்த தட்டை மிகவும் எளிதாக அகற்றி விட்டு நீராவி வெளியேறியது.

தன்னுடை 16 வயதில் நீராவி ஆற்றலை நாம் ஏன் கருவிகளை இயக்க பயன்படுத்தக் கூடாது என்று தனது தாத்தாவிடம் கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து அவரது தாத்தா நீராவி இயந்திரம் குறித்து ஆய்வு செய்ய, அவரது சிறிய ஒரு அறையையே 16 வயது ஜேம்ஸ் வாட்டிற்கு கொடுத்தார். பள்ளியில் படித்துக்கொண்டே நீராவி கருவி குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவந்தார்.

1750-ஆம் ஆண்டு அவரது அறிவியல் ஆர்வத்தைக் கண்ட கிளாஸ்கோ பல் கலைக்கழக வேதியல் பேராசிரியர் ஜோசப் பிளாக் அவருக்கு, மாதிரி நீராவி எஞ்சின் ஒன்றை கண்டுபிடிக்க வேண்டிய அனைத்து உதவிகளையும் பல்கலைக்கழகத்தின் சார் பில் செய்துவந்தார். 1765-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுமுறை நாளான ஞாயி றன்று தன்னுடைய முதல் நீராவி எஞ்சினை இயக் கிக் காண்பித்தார். 15 வயது சிறுவனின் மனதில் உதித்த ஓர் அறிவியல் ஆர்வம் 36-ஆவது வயதில் நீராவி எஞ்சினாக உருப்பெற்று உலகில் தொழில் புரட்சி ஏற்பட்டது.  நீராவி எஞ்சினின் முதல் மாடல் தனது பேராசிரியரின் மிதிவண்டியை மாதிரியாக வைத்துதான் கண்டுபிடித்தார். என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. அடுத்த சில ஆண்டுகளிலேயே இவரது நீராவி எஞ்சின் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கரியைக் கொண்டுவர பயன்பட ஆரம்பித்தது.

ஜி ஜிங்பிங்க்

ஜி ஜிங்பிங் 15 ஜூன் 1953ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில் பிறந் தார். இவரது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பதவி வகித்துவந்தவர். அரசுக்கு எதிராக கம்யூனி சப் புரட்சி செய்தார் என்று கூறி பலமுறை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார் கள். பின்னர் இவர்  லுவேயங் பகுதிக்கு தனது குடும்பத்தோடு வந்து சேர்ந்தார். சீனாவின் கிழக்கு மாநில மான ஹெனானில் உள்ள ஒரு மாவட்டம் தான்  லுவோயங். இங்குதான் சீன அதிபர் ஜி ஜிங்பிங் கிராமும் உள்ளது,   தனது இரண்டு சகோதரி மற்றும் பெற்றோர் தாத்தா பாட்டியுடன் லியங் ஜீ என்ற கிராமத் திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு வயது 10.  சிறுவன் ஜி ஜிங் பிங் பள்ளிப் பாடத்தை விட அதில் செய்முறைப் பாடங் களை அதிகம் கவனிப்பார்,

அவரது கிராமம் மலைப்பகுதியில் உள்ளது குளிர்காலங்களில் பனியால் முழு மையாக  மூடிவிடும். சிறுவன் ஜி ஜிங் பிங்கிற்கு கொடுத்த வேலை என்னவென்றால் குளிர் காலத்தில் மாட்டுக்கொட்டிலில் பனி உள்ளே நுழைந்துவிடாதவாறு பார்த்துக்கொள்வது தான் அவரது வேலை.

வெளியில் கடுமையான குளிர் நில வினா லும் உள்ளே வெதுவெதுப்பான வெப்பம் நிலவ தொடர்ந்து கட்டைகளை எரித்து கொண்டே இருக்கவேண்டும், தூங்கி விட் டால் கட்டை அணைந்து ஈரமாகி மீண்டும் தீ பற்றவைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஆடுகள் மாடுகள் இறந்து போகும் நிலை ஏற்படும்.  நகர வாழ்க் கையில் இருந்து திடீரென்று கிராமத்திற்கு வந்த சிறுவன் ஜி ஜிங் பிங்கிற்கு அந்தக்குளிரில் மாடு மற்றும் ஆடுகள் இடையே கதகதப்பான சூழலில் தூங்குவது பிடிக்கும் ஆனால் தூங்கிவிட்டால் நெருப்பு அணைந்து போய் குளிர் மாட்டுக்கொட்ட கைக்குள் வந்துவிடும். ஆகவே இதை எப்படி எளிதாக்குவது என்ற சிந்தனையில் சில மாதங்களை மாட்டுக் கொட்டகையில் கழித்தார்.

இந்த நிலையில் அவரது பள்ளியில் மாட்டுச்சாணத்தில்  இருந்து எரிவாயுஎடுக் கும் பாடம் ஒன்றை ஆசிரியர் சொல்லும் போது ஆர்வமாக கேட்டார். பின்னர் பள்ளி முடிந்த பிறகு ஆசிரியரிடம் போய் மாட்டுச் சாணத்தில் எரிவாயு தயாரிக் கும் முறைகுறித்து விரிவாக கேட்டறிந்தார். இதைக் கேட்ட அவ ரது ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்து பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு பண்ணை வீடு ஒன்றில் உள்ள சாண எரிவாயு கலனைக் காண்பித்தார். இதைப் பார்வையிட்ட ஜி ஜிங் பி இதே போல் தனது மாட்டுக்கொட்டகையிலும் நான் செய் வேன் என்று கூறி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

நான்கு நாட்களாக தனது சகோதரிகளின் உதவியுடன் மாட்டுக்கொட்டகையில் சிறிய சாண எரிவாயு கலன் ஒன்றை அமைத்தே விட்டார்.   தன்னுடைய முதல் முயற்சியிலேயே சாண எரிவாயு கலன் மூலம் மாட்டுக் கொட் டகை முழுவதுமே வெதுவெதுப்பாக இருக் கும் வகையில் அமைந்துவிட்டார். சீனாவின் அதிபராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு அவரது சகோதரி தனது சகோ தரன் 11 வயதில் செய்த சாண எரிவாயு கலனை ஊடகம் ஒன்றிற்கு கான்பித்தார்.

இந்த வீடியோவை சீன அதிபரிடம் காட்டிய போது தனது சிறியவயது அனுப வத்தை நினைவு கூர்ந்தார். அவர் கூறும் போது நானும் எனது சகோதரிகளும் 4 நாட்கள் மிகவும்சிரமப்பட்டு சாண எரிவாயு கலனை செய்து முடித்தோம். பிறகு சாணத்தை அந்தக்கலனில் ஆசிரியர் கூறியது போல் தண்ணீர் கலந்து ஊற்றிவிட்டு அதிலிருந்து இணைக்கப்பட்ட குழாயில் எரிவாயு வரு வதை மிகவும் ஆர்வத்தோடு பார்த்துக் காத்திருந்தோம். இந்த நிலையில் முதலில் நான் தான் குழாயை சிறிது திறந்து தீக்குச்சி நெருப்பை அருகில் கொண்டு சென்றேன். அப்போது அந்த குழாயில் இருந்து வந்த எரிவாயு தீப்பிடித்துக் கொண்டது, இதைக் கண்ட நானும் எனது சகோதரிகளும் மகிழ்ச் சியில் கத்திவிட்டோம்.

இதனை அடுத்து வீட்டிற்கு வந்து எனது தந்தையை அழைத்துக்கொண்டு வந்து காண்பித்தோம் அவர் மகிழ்ச்சியில் எங்க ளைப் பாராட்டினார்.

அதன் பிறகு கொஞ்சம் பெரிய எரிவாயு கலன் ஒன்றை அப்பா செய்து கொடுத்தார். அதன் மூலம் எங்களது மாட்டுக்கொட்டகை மற்றும் அருகில் உள்ள மாட்டுக்கொட்டகை மற்றும் எங்கள்  வீட்டிற்கும் வெப்பம் கிடைக் கச்செய்தோம் என்று கூறினார்.

இளந் திராவிடர் கழகம்

13-4-43இல் கடலூர் O.T. வீரபத்திரசாமி கோயில் தெரு, தோழர் பெருமாள் அவர்கள் வீட்டின் மேல்மாடியில் தோழர் ஏ.பி. ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்களால் இளந் திராவிடர் கழகம் திறக்கப்பட்டு தோழர்கள் கி.வீரமணி (10 வயது) தலைவராகவும், பெ.லெனின் (10வயது) செயலாளராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். மாலையில் திரௌபதியம்மன் கோயில் திடலில் தோழர் பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் சனார்த்தனம் அவர்கள் அரிய சொற்பொழிவாற்றினார்.

-  விடுதலை ஞாயிறு மலர், 30.11.19

திங்கள், 23 டிசம்பர், 2019

இந்த ஏழை ஜனங்களுக்கு ஒதவுற மாதிரி....

தந்தை பெரியாருக்கு அன்று பிறந்தநாள். அய்யாவை வாழ்த்தவும், அவரிடம் வாழ்த்துப் பெறவும், தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் ஏராளமான தமிழர்கள் கூட்டம் அந்த நாளில் அலைமோதியது. அன்று காலையில் சேலம் திரு.வரதராஜுலுநாயுடு, அய்யா பெரியாரைப் பார்க்க வந்தார். இவர், சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து பெரியாரின் நெருங்கிய நண்பர். தலைவர் காமராசருக்கும் நெருக்கமானவர். வந்தவர், “முதலமைச்சர் காமராசர் அய்யாவைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல விரும்புகிறார். நான் போய் அழைத்துக் கொண்டு இருவருமாக வருகிறோம்!” என்று பெரியாரிடம் சொன்னார். பெரியார், “அய்யா காமராசர் முதல் மந்திரியா இருக்கிறவங்க... பல வேலைகள் இருக்கும். அவங்க இங்கே வந்து சிரமப்படக்கூடாது. நான் வந்து அவுங்களைப் பார்க்கறதுதான் மொற... மரியாதை” என்று மறுத்தார்.

வரதராஜுலு நாயுடு பிடிவாதமாய்ப் பேசினார், “பிறந்த நாளைக் கொண்டாடும் உங்களை, நல்ல நாளும் அதுவுமா வந்து வாழ்த்த நினைக்கிறார் ஒரு முதலமைச்சர். அது எப்படிய்யா நாம வேண்டாம்னு சொல்ல முடியும்?” என்று வற்புறுத்தி, மாலையில் காமராசரை அழைத்துக் கொண்டு வருவதற்கு சம்மதம் வாங்கிக் கொண்டு போனார். சொன்னதுபோலவே, மாலையில் காமராசரும், நாயுடுவும் ஒரே காரில் வந்து இறங்கினர். எந்தப் படாடோபமுமில்லை.

முதலமைச்சர் வருகிறார் என்னும் எந்த ஆடம்பரமும், ஆரவாரமுமில்லாமல் வந்தார் காமராசர். மிகுந்த மகிழ்ச்சியோடு பெரியார் அவரை எழுந்து வரவேற்றார். முக்கியமான ஒரு சிலர் மட்டுமே அங்கே நின்று கொண்டிருந்தனர். இரண்டு பெரியவர்களும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

வரதராஜுலு நாயுடு பெரியாரிடம் சொன்னார். “அய்யா என்னென்ன காரியம் ஆகணும்னு சொல்றீங்களோ, அதச் செய்து கொடுக்க காமராஜ் சித்தமாயிருக்கார். என்ன செய்யணும்னு சொல்லுங்கய்யா....” என்றார்.

இதைக் கேட்ட பெரியார், “நான் என்னய்யா கேக்கப் போறேன். தனிப்பட்ட மொறையில் எனக்கு என்ன தேவையிருக்கு..? இந்தத் தமிழ் ஜனங்களுக்கு ஒதவுற மாதிரி, அந்த நாலாஞ்ஜாதிய கைதூக்கிவிடற மாதிரி, அய்யா ஏதாவது செஞ்சாங்கன்னா அதுவே போதும்...” என்றார். பெரியார் தன் வார்த்தையை முடிப்பதற்குள், காமராசர் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று, “அய்யா, நானும் தமிழன்தான். நாலாஞ்ஜாதிதான்...!” என்றார்.

மெத்தப் பூரிப்போடு பெரியார் காமராசரின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, “அதுதாங்கய்யா வேணும்... அந்த ஞாபகம் தாங்கய்யா வேணும்!” என்றார்.

உடனே தன்கையுடன் கொண்டு வந்திருந்த ஒரு உறையைப் பிரித்து, அதிலிருந்த ஒரு பழைய புகைப்படத்தைப் பெரியாரிடம் கொடுத்தார் காமராசர். அதை அய்யா பெரியார் வாங்கிப் பார்த்தார். நெகிழ்ந்து போனார். அந்தப் படம் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்தபோது எடுத்தது. அதில், பெரியார் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க அந்த நாள் காங்கிரஸ்காரர்கள் பலரும் அதில் இருக்கின்றனர். காலடியில் காமராசர் ஓர் இளைஞராக, மிகச் சாதாரணத் தொண்டராக அமர்ந்திருக்கிறார்.

சற்று நேரம் அங்கே கனத்த மவுனம். இரண்டு பெரியவர்களும் தங்கள் கடந்த கால நினைவுகளில் கரைந்து போயிருக்கலாம். தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்துவிட்ட முதலமைச்சர் காமராசர் இவ்வளவு ஞாபகமாக, அந்தப் பழைய படத்தை இப்போது அய்யாவிடம் கொண்டு வந்து ஏன் கொடுக்க வேண்டும்...? “அய்யா, அன்று உங்கள் காலடியில் உட்கார்ந்த அதே பழைய தொண்டன்தான் நான். கட்டளையிடுங்கள், காத்திருக்கிறேன்!” என்று சொல்லாமல் சொல்லியிருப்பாரோ கர்மவீரர்...?

- திரு. உ.நீலன்

(தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்)

(சன் தொலைக்காட்சி அரசியல் விமர்சகர் திரு.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய “ஆகட்டும் பார்க்கலாம்“ என்ற நூலிலிருந்து. பக்கம் 160-161).

-  விடுதலை ஞாயிறு மலர், 14.12.19


வெள்ளி, 13 டிசம்பர், 2019

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்


நூல்    : புலவர் நன்னனின் அகமும் புறமும்

வெளியீடு        : ‘நன்னன் குடி’, ‘சிறுகுடி’,

                   22, முதல் தெரு, அரங்கராசபுரம்,

                   சைதாப்பேட்டை, சென்னை_600 015

                    தொலைபேசி: 044_2235 0193

                    கைபேசி: 98845 50166, 98406 59157

 நன்கொடை: ரூ.400.

 இணையம்:  www.maanannan.in

 

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே...

அண்ணாவும் பெரியாரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பேசினார்கள். அப்பேச்சு என்னைத் தெளிவுள்ளவனாக ஆக்கியது. பெரியாரின் பேச்சும், அண்ணாவின் ‘ஆற்றோரம்‘ என்ற பேச்சும் எனக்குப் பளிச்சென்று ஓர் ஒளியைக் கொடுத்தன போலிருந்தது. அதைத் தொடர்ந்து கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணன் அங்கே வந்தார். கிந்தனார் காலட்சேபம் அடடா! தொடக்கமே அமர்க்களமாக இருந்தது. பட்டமளிப்பு விழா மண்டபம் என்று ஒன்று இருந்தது. சாத்திரி கூடம் என்று சிலர் அதைச் சொல்லுவார்கள். சீனிவாச சாத்திரி என்பவர் பெயரால் கட்டப்பட்டது.

ஆனால், நாங்கள் அதைப் பட்டமளிப்பு விழா மண்டபம் என்றுதான் அழைப்போம். அதில்கூடக் கொள்கையை விட்டுப் போவது கிடையாது. அதில்தான் நடந்தது. மாடியிலே கடைசி வரிசையிலே மொட்டைப் பெஞ்சு என்று சொல்வார்களே முதுகு சாய்மானம் இல்லாத இருக்கைகள் அந்த மாதிரி பெஞ்சு போட்டிருப்பார்கள். அதிலே உட்கார்ந்தால் தெரியவில்லை என்பதால் ஒவ்வொரு பெஞ்சுலேயும் 10 பேர் நின்று கொண்டு இருந்தனர். இவர் காலட்சேபம் தொடங்குவதற்கு முன்பு இசைக்கருவிகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஓசை கேட்டது. சிறிது சலசலப்பு இருந்தது. பிறகு அடங்கிவிட்டது.

கலைவாணர் தொடங்கும்போதே கதா ஆரம்பத்திலே படார் இப்போ நீங்க போட்டீங்களே அந்தப் படார் இல்லை. இது விடப்படார், கைவிடப்படார். கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார் இப்படிதான் கலைவாணர் தொடங்கினார்.  எனக்கு இப்போது கேட்பது போல் உள்ளது. நந்தனார் கதையில் ஒரு அய்யர் வந்த மாதிரி இந்தக் கதையில் ஒரு அய்யர் வந்து உனக்கு எதுக்குடா படிப்புன்னு சொல்லுவார். அதைப் பார்க்க பார்க்க எனக்கு ஒரு வெறியே வந்தது. கொள்கை உரம் பாய்ந்த என் உள்ளத்தில் ஒரு வெறியே வந்தது. நாடு முழுவதும் அதைப் பரப்பினார்கள்.

எனக்கு எழுதுகிற ஆசை எல்லாம் வந்துவிட்டது. நீங்கள் பழைய ‘‘திராவிட நாடு’’ இதழ்களை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் அட்டையிலே நான் எழுதியிருப்பேன், பா. அது இலக்கணப்படி இருக்கும். கலிப்பா எல்லாம் எழுதுவேன், நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எழுதியிருக்கிறேன்.

பாலில் நீர் காண்பாய்; பகுத்தறிவுக் கண்

கொண்டு பைந்தமிழில் ஆரியம் காண்

என்பது ஒரு தொடர்.

நன்னன் நூலினை வெளியிடும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடமிருந்து பெற்று கொள்ளும் தளபதி மு.க.ஸ்டாலின், நன்னனின் துணைவியார் பார்வதி, மகள் வேண்மாள், துரை.சந்திரசேகரன் மற்றும் குடும்பத்தினர்.

30.7.2019 அன்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்வு.

பால்மானியைப் போட்டுப் பாலில் நீர் உள்ளதா என்று பார்க்கிறாயே.... உன் பகுத்தறிவு கொண்டு பைந்தமிழில் கலந்துள்ள ஆரியத்தைப் பிரித்தெடுப்பாய் என்பது பொருள்.

இதைக் கட்டம் கட்டி அட்டைப் பக்கத்திலே போட்டிருப்பார்கள். அதற்கு கீழே கா.மா.நன்னன் அண்ணாமலை நகர் என்று எழுதி இருக்கும். அண்ணாமலை நகர் என்று போட்டுக் கொள்வதிலே ஒரு பெருமை. எங்கள் ஊர்ப் பெயரைப் போட்டால் எவனுக்குத் தெரியும். அண்ணாமலை நகர் என்று சொன்னால் எல்லாருக்கும் தெரியும். அப்படி அதிலே எழுதத் தொடங்கினேன். அடுத்த மூன்று ஆண்டுகளிலே அந்த ஆர்வம் நல்ல முதிர்ச்சி பெற்றுவிட்டது. நான் படித்துவிட்டுத் தமிழாசிரியராக வந்தபோது கொள்கையிலே எனக்கு ஒரு பக்குவம் பதம் ஏற்பட்டுவிட்டது.

நல்ல பயிற்சி முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன். தலைப்பிலே எல்லாம் முதல் மாணவனாக இருந்தேன். அதனால்தான் எனக்கு அண்ணாமலை அரசர் கொடுத்த உதவித்தொகை மாதாமாதம் கிடைத்தது.

ஒருமுறை உ.வே.சாமிநாத அய்யர் பரிசு கொடுத்தார். முதலாண்டு படித்தபோது முதல் மாணவனுக்கு அய்ம்பது ரூபாய் பரிசு கொடுப்பதாகச் சொன்னார். புத்தகமாகக் கொடுப்பதாகவும் சொன்னார். நான் தான் முதல் மாணவனாக வந்தேன். நான் முதலாண்டு மாணவன். நான்கு ஆண்டுகளுக்கும் தேவையான புத்தகங்களை எழுதிக் கொடுத்தேன். அத்தனைப் புத்தகங்களையும் சாமிநாத அய்யர் எனக்குப் பரிசாகக் கொடுத்தார். விலை கொஞ்சம் கூடுதலாகக் கூட ஆயிற்று. ஒரு பட்டமளிப்பு விழாவிலே எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அவை அனைத்தையும் என்னால் தூக்க இயலவில்லை. அவ்வளவு புத்தகங்கள். பல்கலைக் கழகப் பதிவாளர் விசுவநாத அய்யர், “நீ இதை தொட்டு வைத்துவிட்டுப் போடா! நான் உன் அறைக்கு அனுப்புகிறேன்’’ என்றார்.

அதே மாதிரி அதை வாங்குவதுபோல் நடித்தேன் அவ்வளவுதான். தூக்கவெல்லாம் முடியாது. அவ்வளவு நூல்கள் பரிசாக வாங்கினேன். அப்படி இருந்த மாணவன் இறுதி ஆண்டில் எல்லாம் தேர்ச்சி பெற்றால் போதும், 35 மதிப்பெண்களுக்கு முன்னே பின்னே தான் இருக்கும். விரும்பி இருந்தால் என்னை மேலேற விடாமல் எளிதாக தடுத்திருக்கலாம். அப்போது இருந்த பேராசிரியர் இறுதி ஆண்டிலே, முதலில் இருந்தவர் கா.சு.பிள்ளை, என்னுடைய இறுதி ஆண்டுக்கு வந்தவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், பன்மொழிப்புலவர். அவருக்கு நம்முடைய கொள்கைகள் பிடிக்காது. ஆனாலும் நல்ல அறிஞர். நான் அவரையே எதிர்த்துப் பேசுவேன். வகுப்பிலே அணுஅணுவாக எதிர்த்துக் கேள்வி கேட்பேன். இலக்கிய மன்றக் கூட்டத்திலே அவர் தலைமையில் அவர் கொள்கையையே எதிர்த்துப் பேசுவேன்.

அதை எல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டு என்னை ஒழித்துக்கட்டுவது என்றால் எளிது. ஏனென்றால் அங்கு விளிம்பு நிலை மாணவர்கள்(Border Case) என்று சொல்வார்கள். ஒரு 4 அல்லது 5 மதிப்பெண்கள் குறைத்தால் போதும் தீர்ந்து போய்விடும். ஒரு 4 மதிப்பெண்கள் கூட்டிப்போட்டால் மேலே வந்துவிடமுடியும். இந்த நிலையிலேதான் நான் வந்தேன். இதற்குக் காரணம் முழுக்க முழுக்க இயக்கப் பணிகள்தான். வெள்ளிக்கிழமை கிளம்பினோம் என்றால், திங்கள்கிழமை காலையில்தான் கல்லூரி நேரத்துக்கு அவசர அவசரமாக வந்து சேருவோம். அப்படிக் கொள்கையிலே வெறிபிடித்து அதைப் பரப்புவதிலே ஈடுபாடு காட்டியிருக்கிறேன். பிறகு நானும் பெரியாருடைய தொண்டனாகச் சிறிது காலம் இருந்திருக்கிறேன்.

பெரியார் பின் சென்றோம்

கி.பி.1944ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களின் பிற்பகுதியில் முன்னிரவு நேரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதியிலிருந்த எம் அறைக்குப் பேராசிரியர் அன்பழகனாரின் தந்தை கல்யாணசுந்தரனார் (மணவழகனார்) வந்தார்.

அடுத்த நாள் மயிலாடுதுறையை அடுத்துள்ள வடகரை என்னும் ஊரில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா நடைபெறவிருப்பதாகவும், தந்தை பெரியார் அவ்விழாவில் பேருரையாற்ற வருவதாகவும், அதில் பேச மாணவப் பேச்சாளர் ஒருவர் வேண்டுமென்றும், தமக்குத் தகவல் வந்ததாகவும் கூறிய மணவழகர், அப்போது தமிழகத்திலேயே முதன்மைப் பேச்சாளர்களாகத் திகழ்ந்த நாவலருக்கும், பேராசிரியருக்கும் தேர்வுகள் முடிவடையாததாலும், எமக்குத் தேர்வு முடிந்துவிட்டதாலும் எம்மை அழைத்தார். கற்றுக்குட்டிப் பேச்சாளராக இருந்த யாம் அதைப் பெறலரும் வாய்ப்பாகக் கருதி ஏற்று வடகரை சென்று அவ்விழாவிற் பேசினோம்.

பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேசிய அது எமது இரண்டாம் பேச்சாக இருக்கக்கூடும். பெரியாரின் கொள்கைகளை ஓரளவு மட்டுமே புரிந்துகொண்டு அதில் ஈடுபட்டு ஓரிரண்டு ஆண்டுகளே ஆகி முரட்டுப் பேச்சாளராக இருந்த எமது முரட்டுப் பேச்சை விழா முடிந்த பின் பெரியார் பாராட்டியதோடு, அதில் இருந்த சில குறைகளையும் கூறிய முறையையும் சுட்டி எம்மைத் திருத்தினார்.

புலவர் தேர்வு முடிந்த நிலையிலிருந்த எம்மை இப்போது என்ன செய்யப் போகிறீர்கள் என்று அய்யா கேட்டார். ஒன்றுமில்லை; ஊருக்குச் சென்று சும்மாதான் இருக்கப் போகிறேன் என்ற எம்மையும் தம்மோடு வருமாறு அழைத்தார். அப்போது அய்யாவின் அசைக்க முடியாத தொண்டராக இருந்தவரும் அண்ணாமலையின் பழைய மாணவரும் எமது இனிய நண்பருமாகிய திரு.சா.கசேந்திரனும் எம்மை உசுப்பிவிட்டார். சிவனடியானைச் சிவபெருமானே நேரில் வந்து அழைத்தால் எப்படி அவன் அவர் பின் செல்வானோ அப்படி யாமும் பெரியார் பின் சென்றோம். அன்று குடந்தையிலே நெடும்பலம் சாமியப்பா தலைமையிலே பொதுக்கூட்டம். குடந்தை பூங்காவிலே நடந்தது. கொட்டாச்சிச் செட்டியார் வீட்டிலே சாப்பாடு. இப்படிப் பல இடங்களுக்கும் சென்றுவிட்டு ஈரோடு சென்றடைந்தோம். அங்குப் போனவுடன் அய்யா, “நீ பிரச்சாரத்துக்குப் போகிறாயா? இங்கே ‘குடிஅரசு’ அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறாயா?’’ என்று கேட்டார். எனக்குக் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் இருந்து பணிபுரியப் பிடிக்கவில்லை. ஏனென்றால் அங்கு கரிவரதசாமி என்று ஒருத்தர் இருந்தார்.

«««

கரிவரதசாமி தண்ணீர்த் தொட்டியிலே உள்ள தண்ணீரை எல்லாம் அளந்து பார்ப்பார். நாங்கள் எல்லாம் சிறுவர்கள்தானே, யாராவது இரண்டு சொம்பு அதிகமாக ஊற்றிக் குளித்திருப்போம். ஏன் தண்ணீர் குறைந்திருக்கிறது என்று கேட்பார். அவரிடத்தில் இருந்து நம்மால் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிப் பிரச்சாரத்துக்கு போகிறேன் என்று சொல்லி அய்யா கூடவே சென்றேன். அய்யாவோடு சென்றபோது இரண்டு மூன்று தப்பு செய்ய நேர்ந்துவிட்டது. அப்போது திரு.கசேந்திரன் இருந்தார். யார் கசேந்திரன்? திரு.ஈ.வெ.கி.சம்பத்தினுடைய மைத்துனர். சம்பத்தினுடைய தமக்கை மிராண்டாவை இவர் மணந்துகொண்டார். இவருடைய தங்கையை (சுலோச்சனா சம்பத்து), சம்பத்து மணந்து கொண்டார்.

சுலோச்சனா சம்பத்தினுடைய அண்ணன்தான் கசேந்திரன். அவர் படிக்கிற போதே எனக்கு நெருக்கமான நண்பர். நான் அய்யாவிடம் சென்றபோது அவர்தான் அங்குச் செயலாளர் போல, நான் அவருக்குக் கீழே ஒரு எடுபிடி போலப் போய்க்கொண்டிருப்பேன். அப்படிப் போய் கொண்டிருந்தபோது ஒரு சிறிய தப்பு செய்துவிட்டேன். திருச்செங்கோட்டிலே ஒரு கூட்டம். பொதுக்கூட்டம். அந்தக் கூட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் செய்தித்தாள்களுக்கு எழுதி அனுப்ப வேண்டும். நன்கொடை கொடுத்தவர்கள் பற்றி எழுத வேண்டும். 3 காலணா 4 காலணா நன்கொடை கொடுத்திருப்பார்கள். அவர்கள் பெயரெல்லாம் செய்தித்தாளிலே வரவேண்டும். சோடா வாங்கிக் கொடுத்திருப்பார்கள். வேர்க்கடலை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். பிரியாணி வாங்கி வந்து அய்யாவுக்குக் கொடுத்திருப்பார்கள். இதுபோல நிறைய இருக்கும் எல்லாம் எழுதி அனுப்பினேன்.

ஆனால், ஒன்றே ஒன்று விடுபட்டுப் போய்விட்டது. அது என்ன தெரியுமா? டாக்டர் சுப்பராயன் வீட்டிலிருந்து இலவசமாக மின்சாரம் கொடுத்தார்கள். அது விடுபட்டுப் போய்விட்டது. எனக்குச் சுப்பராயன் வேண்டாதவரா என்ன? அவர் சமீன்தார், அமைச்சராக வெல்லாம் இருந்தார், பெரிய மனிதர். பேராயக் கட்சியில் எல்லாம் இருந்தார். அவர் பிள்ளைகள்தான் மோகன் குமாரமங்கலம் போன்றவர்கள். குமாரமங்கலம் சமீன் அவர்களுடையது. அவர் நம்முடைய இயக்கத்திலே தொடர்புடையவராகவும் இருந்தார், அது தனி வரலாறு; வேறுபட்டுப் போனார். எல்லாம் உண்டு. அவர் வீட்டிலிருந்து இலவச மின்சாரம் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து நான் அதில் எழுதவில்லை.

மறுநாள் செய்தித்தாளிலே அய்யா அந்தச் செய்தியை பார்த்துவிட்டு யார் இதை எழுதியது? என்று கேட்டு என்னை அழைத்தார். என்ன போக்கிரித்தனம்? யோக்கிய பொறுப்பில்லை. அவர் வீட்டு மின்சாரம் கொடுத்திருக்கிறார்கள். அதைப் போடுவதற்கு உங்களுக்கு என்ன போச்சு. விளையாட்டுப் புத்தி. ஊர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறீர்கள் மைனர்கள். புடிச்சார் பாருங்கள் என்னை. இன்னும் ஏழு சன்மங்கள் என்று கதையிலே சொல்வார்கள் இல்லையா? தாங்கும். தப்புச் செய்வதை விடவே மாட்டார். ஒரு முறை நானும் சனார்த்தனமும் தூங்கிவிட்டோம். நாங்கள் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் தூங்கினோம். காலையில் எழுந்திருப்பதற்கு நேரம் ஆகிவிட்டது. அய்யா வீட்டிலிருந்து குதிரை வண்டி வைத்துக்கொண்டு இரயிலடிக்கு வந்துவிட்டார். எங்களை நேராக இரயிலடிக்கு வரச்சொல்லி இருந்தார்.

சுற்றும் முற்றும் பார்த்திருப்பார்; எங்களைத் தேடியிருப்பார்கள். நாங்கள் இரயிலடிக்கு நேரத்துக்குச் செல்லவில்லை. அவர் இரயில் ஏறிச் சென்றுவிட்டார். நாங்கள் வரவில்லை என்பதற்காக அய்யா காத்திருப்பாரா? அய்யா போய்விட்டார். நாங்கள் இருவரும் தூங்கி எழுந்து போவதற்குள் இரயில் போய்விட்டது. சனார்த்தனம்தான் மூத்தவர்; நான் பொடியன். அவரைத்தான் திட்டுவார். நமக்கு ஒன்றும் வராது என்று எனக்குத் துணிவு. அவர் நடுங்கிப் போனார். பிறகு, ஏதோ பேருந்து பிடித்து ஏதோ ஒரு சிற்றூர். அங்குப் போய்ச் சேர்ந்தோம். நாங்கள் போய்ச் சேர்ந்தபோது திருமணம் எல்லாம் முடிந்து அய்யா திண்ணையிலே அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்து அய்யா, “பசங்க பரவாயில்லையே சரியான நேரத்துக்கு தான் வருகிறார்கள்’’ என்று கூறினார். சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள் என்று பொருள். வேறு ஒன்றும் திட்டவில்லை. அவருக்குத் தெரியும் நாங்கள் சிறுவர்கள் என்று; இது ஒரு சிறு குறை.

இதேபோல் மற்றொரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன் பாருங்கள். மாணவர் சுற்றுப் பயணம் பற்றிக் கூறினேன் அல்லவா? அதிலே ஏற்காட்டுப் பயணமும் ஒன்று. நாங்கள் சேலத்திலிருந்து மாலையில்தான் கிளம்பி ஏற்காடு சென்றடைந்தோம். இரவு ஒரு கோடவுனில் தங்கினோம். அய்யா அங்குக் குடியிருந்தார். அங்குத் திராவிடர் கழகத்துக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று உண்டு. முன்னால் ஒரு பலகை போல் உயரமாக இருக்கும். அதிலே அய்யா அமர்ந்திருப்பார். தெருவிலே போவோர் வருவோரை எல்லாம் பார்க்கலாம். அப்படி ஒரு இடம். பெரிய வசதியான கட்டடம் எல்லாம் கிடையாது. யாரோ ஒரு கவுண்டர் இருந்தார் சமையலுக்கு.

காலையில் இட்லி சாப்பிடச் சொல்லி, எங்களைச் சேலத்துக்குப் புறப்படச் சொன்னார். எங்களிடம் கொஞ்சம் காசு கொடுத்து உங்களுக்கு நண்பகல் உணவு சேலத்தில் அதனால் உடனே புறப்படுங்கள் என்று கூறினார். அங்குச் சமையல் செய்து வைத்திருப்பார்கள். சாப்பாடு வீணாய்ப் போகும். அதனால் உடனே புறப்படுங்கள். மாலையில் அரிசிப்பாளையத்தில் கூட்டம் அதனால் போங்கள் என்று கூறினார். நாங்கள் எதுவும் பேசமுடியாது. எனக்கு மேல் தவமணிராசன் இருந்தார், ஏ.பி.சனார்த்தனம் இருந்தார், கசேந்திரன் இருந்தார். ஆசிரியர் வீரமணி இருந்தாரா? என்று நினைவு இல்லை. எல்லாம் ஏழு, எட்டு பேர்கள் இருக்கும். நான் அதிலே சிறுவன் கடைசியிலேதான் நிற்பேன். கொஞ்ச தூரம் சென்றவுடன் ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசை. சிறுவர்கள்தானே! அவரவர் எவ்வளவோ செலவு செய்து கொண்டு ஏற்காட்டுக்கு வருகிறார்கள்.

ஏழைகளின் உதகமண்டலம் (Poorman’s Ooty) என்று அதற்குப் பெயர். பார்க்க வேண்டும் என்று ஆசை. அய்யா போகச் சொல்லிவிட்டார். மதிய உணவு இங்கே இருக்காது. என்ன செய்வது என்று சிந்தித்தோம். பேருந்திலே இடம் கிடைக்கவில்லை என்று சொல்லி விடுவோம் என்று ஒருவன் யோசனை தெரிவித்தான். அந்தப் பிள்ளைகளிலேயே ஏமாற்றுகிற வேலையிலே கொஞ்சம் விவரமான சிறுவன் சொன்னான். உடனே அனைவரும் அதை ஏற்றுக் கொண்டோம். திரும்பிப் போனோம் அய்யா முன்னாடி அமர்ந்திருக்கிறார். போகும் போது நான் எல்லாம் பின்வாங்கிக் கொண்டேன். முன்னணித் தலைவர், பெரிய ஆள்கள் எல்லாம் முன்னால் போனார்கள். என்ன? என்று அய்யா கேட்டார். அய்யா பேருந்திலே இடம் கிடைக்கவில்லை என்று கூறினோம்.

போக்கிரிப் பசங்க! ஊர் சுத்திப் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறீர்கள். கவுண்டரே இவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போடாதீர்கள், பசங்களே! உங்களுக்கு சாப்பாடு சேலத்திலே இருக்கிறது. சமையல் செய்து வைத்திருப்பார்கள். இங்கே இருந்தீர்கள் என்றால் அவ்வளவும் வீணாய்ப் போகும்; போய்விடுங்கள் என்று கூறினார். அப்போது எல்லாம் பேருந்து இப்போதுபோல் 5 நிமிடத்திற்கு ஒன்று அல்லது அரை மணிநேரத்திற்கு ஒன்று என்றெல்லாம் கிடையாது.

காலையில் ஒரு பேருந்து போனால் பிறகு மாலையில்தான். நடுவிலே எல்லாம் பேருந்து கிடையாது. அது அய்யாவுக்குத் தெரியும். அதனால்தான் நாங்கள் பேருந்திலே இடம் கிடைக்கவில்லை என்று கூறினால் அடுத்த பேருந்திலே போங்கள் என்று சொல்லுவார் என்று எண்ணித் திரும்பிப் போனோம். ஆனால், அவர் பெரியார் இல்லையா! புரிந்துகொண்டார். ஊர் சுத்திப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோல் பித்தலாட்டம் செய்கிறீர்கள் என்று கூறினார். அங்க சாப்பாடு உங்களுக்குத் தயாராகுது போய் விடுங்கள். பேருந்து எல்லாம் தேவை இல்லை. இப்படியே குறுக்கே இறங்கிச் சென்றால், ஏறுவதுதான் கடினம். இறங்குவது எளிது; கிடுகிடு என்று போய்விடலாம். எட்டு மைல்தான் தூரம். பேருந்திலே சென்றால்தான் அதிக மைல் ஆகும். அது வளைந்து வளைந்து செல்ல வேண்டும். நிறைய கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும். இது அப்படி இல்லை. நேராகப் போகுது. இறங்கு முகம் நல்ல பாதை இருக்கிறது. மக்கள் அது வழியாக ஏறுகிறார்கள், இறங்குகிறார்கள். எட்டு மைல் தூரம், அவ்வளவுதான். இறங்கும்போது ஏதும் வலி தெரியாது! என்று கூறிவிட்டார். அய்யா கொஞ்சங்கூட இரக்கம் இல்லாமல் பேசுகிறாரே என்று மனசுக்குள்ளே ஓர் எண்ணம். ஒருத்தரும் நகரவில்லை எல்லாரும் தலையைத் தொங்கப் போட்டபடி நின்றிருந்தோம். நானும் அவர்கள் மறைவிலே பின்னாடி நின்றிருந்தேன்.

பெரியார் கண்ணிலேயே நான் பட்டிருக்க மாட்டேன். அப்படி நின்றிருந்தேன். பெரியார் பார்த்தார். பிறகு சரி சரி நாசமாய்ப் போங்க. கவுண்டரே ஆகட்டும் என்று கூறினார். அய்யா நாசமாய்ப் போங்க என்று கூறினால் சரி என்று பொருள். நாம் ஏதாவது சொன்னோம் என்றால் அது சரியில்லை இதனால் அதற்கு விரோதம் வரும். அது தப்பானது இப்படியெல்லாம் சொல்லுவார். மறுபடியும் நாம் அதை வற்புறுத்துகிறோம் என்று தெரிந்தால் நாம் என்றால் நான் இல்லை. ஆசிரியர் வீரமணி, ‘விடுதலை’ சம்பந்தம் போன்ற பெரியவர்கள். அவர்கள் ஏதாவது சொல்வார்கள் அய்யா மறுப்பார். இவர்கள் விடாது வலியுறுத்துவார்கள். இறுதியில் நாசமாய்ப் போங்கள் என்று கூறுவார். அதற்குச் சரி என்று பொருள் _ அய்யா மொழியிலே. அப்படிக் கூறியவுடன் நாங்கள் ஏற்காட்டைச் சுற்றிப் பார்த்தோம். வந்து நண்பகல் உணவை உண்டோம். பிறகு பேருந்து நிலையம் வந்தோம். அய்யாவும் பேருந்து நிலையம் வந்துவிட்டார். எங்களை ஏற்றி விடுவதற்காக; இந்தப் பயலுக திரும்பி வந்து விட்டால் என்ன செய்வது என்று ஒரு சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு இப்போது பேராசிரியர் அன்பழகன் வைத்திருக்கிறாரே, அது போன்ற கைத்தடி வைத்துக்கொண்டு, ஒரு கையின் மீது மற்றொரு கையை வைத்துக்கொண்டு நிற்கிறார். எனக்கு இப்போதும் கண் முன்னே அந்தக் காட்சி தெரிகிறது. அய்யாவினுடைய புருவங்களிலே அடர்த்தியாக முடி இருக்கும். சிங்கம் மாதிரிதான் இருக்கும்; இந்தத் தலைமுடியும் தாடியும் அவர் பார்வையும் சிங்கம் போலவே இருக்கும். வேட்டி மேலே ஒரு சால்வை; கால்களிலே செருப்பு; அந்தக் கைத்தடியை ஊன்றி நின்றிருந்தார். வண்டி புறப்பட்டுப் போகும் வரை அய்யா நின்றிருந்தார்.

எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அதாவது தப்புச் செய்தபோது கடுமையாகக் கண்டித்த அய்யா, எங்கள் ஆசையை அப்படியே விட்டுவிட்டால், பிள்ளைகள் கெட்டு விடுவார்கள் என்பதனால் சாப்பாடு கிடையாது என்று எங்களைக் கண்டித்தார். இது எங்களை மிரட்டுவதற்காகத்தான். அது எம் தலைவர்கள் கசேந்திரன், சனார்த்தனம், தவமணிராசன் போன்றவர்களுக்குத் தெரியும். அய்யா இப்படித்தான் சொல்வார்; பிறகு சோறு போடுவார் என்பது தெரியும். எனக்கு வேண்டுமானால் தெரியாது இருந்திருக்கலாம். பயந்து  கொண்டு இருந்திருப்பேன். ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, சாப்பிட்டு விட்ட பிறகு அய்யா வந்து வண்டி ஏற்றிவிட்டார். சேலம் போய்ச் சேர்ந்தோம். தவறு செய்யக்கூடாது. ஒழுக்கம் குன்றக் கூடாது. மற்றவற்றை எல்லாம் அய்யா பொறுத்துக் கொள்வார். கண்டிப்பார், யோக்கியப் பொறுப்பு இல்லை; என்ன யோக்கியம், என்ன நியாயம், அப்படின்னு சொல்லுவார்.

- உண்மை இதழ், 16-31.8.19

கார்த்திகை தீபமென வழங்கும் கார்த்துல தீபம் மெய்யும் - இந்து திரிபமும்.

#கார்த்திகை_தீப_வரலாறு

கார்த்திகை தீபமென வழங்கும் 
கார்த்துல 
தீபம் மெய்யும் - இந்து திரிபமும்.                       

இந்தியாவில் மானிடர்களால் 
போற்றப்பட்டு கொண்டாடி வரும் 

அனைத்து இந்து பண்டிகைகளும் 
இந்து மதத்தின் பண்டிகைகளா.?

என்று நாம்  கேள்வி எழுப்பினால்...

திருப்தியான பதில் இந்து மதத்தில் இல்லை மாறாக இந்து பண்டிகைகள் அனைத்திற்கும் இந்தியாவில் இரண்டு  வரலாறுகள் உண்டு

1  இந்து மதம் கூறுவது 
புராணம் கதைகள் அதாவது பொய் புரளிகள் நிறைந்த ஆதாரம்மற்ற வரலாற்று கதைகள்.

2  இந்த பண்டிகைகளுக்கு 
பௌத்த கூறும் 
வாய்மை நிறைந்த வரலாற்று ஆதாரங்கள்.

அந்த வரிசைகளில்  கார்த்திகை தீபமென வழங்கும் கார்த்துல தீபம் உண்மை வரலாறு

இந்த வரலாற்றை 
ஆக்கிரமித்துக் கொண்ட 
இந்து மதத்தின் திருட்டு புத்தியையும் 

அதை பற்றி தமிழ் இலக்கியங்களில் 
கூறும் ஆதாங்களுடன்  பார்ப்போம்.

முதலில் கார்த்துல தீபம் 
என்பதின் பொருள் அறிவோம்.

கார் என்றால் இருள், 

துலள் என்றால் விளக்குதல்,

 தீபம் என்றால் வெளிச்சம், 

அதாவது 

 "இருள் விலகி 
வெளிச்சம் பெருவதே இதன் அர்த்தம்" 

மக்கள் இருளை கண்டு அச்சமும் 
மூட நம்பிக்கையும், 
கொண்டுயிருந்த வேலையில்...

இதில் இருந்து மக்கள் வௌியேற,

வெளிச்சம் தேவையாய் இருந்த 
நிலையில் நெடுங்காலங்களுக்கு முன் 

மலாடபுரம் என்ற ஊரில் இருந்த 
பௌத்த சங்கத்தை சேர்ந்த அறிஞர்கள் மக்களுக்குப் 

பயன் தரக் கூடிய 
பல ஆய்வுகளைச் செய்து வந்தர்கள்.

அந்த  வரிசையில் மருந்துகளும் கண்டுபிடித்து 
மக்கள் பயன்பாட்டிற்க்கு அளித்தார்கள்.

அவ்வாறான பணியில் 
பேராமணக்கு - (கொட்டைமுத்து) 
என்னும் விதையிலிருந்தும்,

சிற்றாமணக்கு விதையிலிருந்தும் எண்ணெய் வடித்து எடுத்து

அதை மருந்துகளுடன் கலந்து
உபயோகித்து அதன் 
நற்பலன்களை அறிந்திருந்தார்கள்                   

அப்போது 
பெரிய பிரச்சனையாக இருந்தது இரவின் இருளைப் போக்க அது பெரிதும் 
உதவும் என 
பௌத்த அறிஞர்கள் நம்பினார்கள். 

ஏனெனில் இருட்டில் விளக்கை 
ஏற்றும் பழக்கம் அப்போது இல்லை. 

மாறாக இருளை போக்க  காய்ந்த மரத்தினை வெட்டி அதைக் தீயிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தைத்தான் மக்கள் பயன்படுத்த முடியும்,

ஆனால் அதிலும் பிரச்சனை இருந்தது.
வெளிச்சமும் நீண்ட நேரம் கிடைக்காது,

நெருப்பு அவிந்துப் போவதால் உண்டாகும் புகை மூச்சு திணறலும்,
பல நோய்களையும் உருவாக்கும்.

இருப்பினும் விறகின் வெளிச்சப்பயன்ழகள் குறைவுதான்.

அந்த கையறு நிலையில்தான் 

ஆமணக்கு விதைகளில் கிடைத்த நெய் பெரிய வரமாக அமைந்தது.

பௌத்த சங்கத்தோரான அறிஞர்கள் 
 கண்டறிந்த ஆமணக்கு நெய்யில் 
தீபத்தை ஏற்றி சோதனை செய்தார்கள்.

அப்போது 
பிரகாசமான குளிர்ந்த ஒளி கிடைத்தது.

சிறிய 
இடத்திலிருந்து பெரிய ஒளி  கிடைத்தது 
பௌத்த 
அறிஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, 

தமது கண்டுபிடிப்பை மக்களுக்கு பயன்படுத்த  பௌத்த அறிஞர்கள்  முனைந்தார்கள்.

ஆனால் 

மக்கள் உடனே இதனை  
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்...
 
முதலில் மன்னனின் 
இசைவைப் பெற விரும்பினார்கள்.

ஆனந்தித்து என்னும் தேசத்தை ஆண்டு வந்த அரசனிடம் புத்த சங்க அறிஞர்கள் 
இக் கண்டுபிடிப்பை  காண்பித்தார்கள்.

அரசரும் வீடுகளில் இக்கண்டு பிடிப்பை பயண்படுத்த உடனே இசையவில்லை.

ஏனெனில் 
நெருப்பினால் உண்டாகும் புகை பலவிதமான நோய்களை உருவாக்கும் என்பது மட்டுமல்ல...

நெருப்பினால் பலவித பிரச்சனைகள் உண்டாகலாம் என்று மன்னன் அச்சப்பட்டான். 

அதனால் அந்த ஆமணக்கு எண்ணெய்யை சோதிக்க மன்னன் விரும்பினான்.  

அதன்படி ச
யாருக்கும் தீங்கு நேராவண்ணம், 

தனது வசிப்புகளுக்கு அருகில் உள்ள அண்ணாந்து குன்றின் 
( தற்போதைய அண்ணாமலை ) 
உச்சியில் ஒரு பள்ளத்தை வெட்டச் செய்து 

நிறைய ஆமணக்கு நெய்யை தயாரிக்கச் செய்து அதை குன்றின் உச்சிக்கு கொண்டுபோய் வெட்டிய பள்ளத்தில் ஊற்றி,

பருத்தியால் 
திரித்த திரிவுடன்  கொளுத்தச்  செய்தது 

அந்த ஒளியின் புகையால் மலைபகுதி முழுவதும் 
ஆடு,மாடு,விலங்களுக்கு எந்தவிதமான தீங்கும் விளையாதைத் கண்டு 

அனைவருக் வெளிச்சம் கிடைக்குமென 
மக்களின் நம்பிக்கையை உணர்ந்த மன்னர் அனைத்து வீடுகளிலும் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி 

தீபம் ஏற்றிக் கொள்ளவும்,பேராமணக்கையும் சித்தாமணக்கையும் வீடுகள்  தேசமெங்கும் அதிகமாக விளைவிக்க ஆனையிட்டார்.

அதன்படி முதல் மூன்று நாட்கள் மக்கள் தீபத்தை வீட்டுக்கு வெளியே வைத்து விக சோதித்துக் கொண்டனர்.

அதனால் 
தீங்கேதும் விளையாததைக் கண்ட பின்னரே வீட்டுக்குள் ஆமணக்கு நெய்யாலான தீபத்தை  கொண்டு சென்றனர். 

அது முதற்கொண்டு அனைவரும் வீட்டிலேயே  ஆமணக்காலான தீபத்தை  வைத்துக் கொள்ளும் வழக்கம் வந்தது.

அப்படி 

பௌத்த பிக்குகள் 
கண்டு பிடித்த அந்த ஆமணக்கு 
நெய்களால் சோதிக்கப்பட்ட இடம்தான் 

அண்ணாந்து மலை என்ற 
திருவண்ணா மலையாக மறுவியது என்பதைச் 
சொல்ல வேண்டிய தேவையும் உள்ளது.

புத்தசங்க அறிஞர்கள் இக் கண்டு பிடிப்பை சோதித்த காலம் முன் பனிக் காலமாகும்.

அதனால் மழைக் காலம் முடிந்து 
முன் பனித் தொடங்கும் காலத்தின் 

முதல் பௌர்ணமியில் 
அவர்கள் தமது சோதனையைச் செய்தனர். 

பௌத்தர்களின் 
கண்டு பிடிப்புகளான பௌத்த நெறி 

பௌத்த சங்கம் பல நாடுகளில் பரவுவது போல இந்த கண்டுபிடிப்பும் பரவியது. 

சீனப் பயணிகள் இதைப்பற்றி குறிப்பை எழுதியுள்ளனர். அவர்கள் நாட்டிலும் ஆமணக்கு நெய்யை அறிமுகப்படுத்தினர்.

அவர்களும் அந் நாளைக் 
கொண்டாடி வருகின்றனர் என்றும்

அயோத்திதாச பண்டிதரும்,
தமிழ் இலக்கியங்களும் குறிப்பிடுகிறது.

நாளடைவில் 
பௌத்தம் வீழ்ச்சிவுற்ற காலங்களில்  

இந்துமதம் இந்த கண்டுப் பிடிப்பை தனக்கானதாக ஆக்கிரமத்தது.

இதற்க்காக 

ஒரு ஆதாரமற்ற 
பொய்யான வரலாற்றையும் 
திரித்து கூறிக் கொண்டிருக்கிறது.

அதாவது சிவபெருமான் தான் முதற் கடவுள் எனவும் 
அவரை சோதி பிழம்பாக பார்வையிட 

பிரம்மணும்,விஷ்ணுவும்,
வழிவகுக்க ஆலயங்களின் முன் 
வாழை மரம் நட்டு 
பனையோலை அதனை சுற்றி அடைத்து

"சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு 
சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து 

சிவபெருமானே சோதிப்பிழம்பாகத் 
தோன்றி காட்சியளிக்கிறார் 

என  நினைவு கூர்ந்து வழிபடுவேண்டுமாம். 
பிறகு வீடுகளில் தீபம் ஏற்றவேண்டுமாம்,

பழங்காலங்களில் ஆமணக்கு தீபம் சோதணைக்கு மூன்று நாட்கள் வீடுகளில் வாசல்களில் வைத்ததையும்

குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் 
என மூன்றாக திரித்து விட்டு விட்டார்கள்.

என 

நம்பகமற்ற கதைகளை வரலாறாக இந்து மதம் கூறுவது இம்ம தத்தின் 
யோக்கிதையை வெளிப் படுத்துகிறது.

எனவே மெய்யை மெய்யாகவும் 
பொய்யை பொய்யாகவும் கூறுவோம்.

ஆதார நூல்:-

#பதார்த்த_சிந்தாமணி
#பெருந்திரட்டு_பாசமட்சி
#பின்கலை_நிகண்டு