பக்கங்கள்

வெள்ளி, 27 டிசம்பர், 2019

விளையும் பயிர்" சிறுவயதிலேயே அறிவார்ந்த செயல்கள் மூலம் உலகை திரும்பிப் பார்க்க வைத்தவர்கள்


தந்தை பெரியார் முன்னிலையில் கி. வீரமணியின் முதல்முழக்கமும் அண்ணாவின் பாராட்டும்:

1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி.....

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென் னார்க்காடு மாவட்டத் திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இளவயதி லேயே கி.வீரமணியைப் ‘பகுத்தறிவுக் கொள் கையில் நாட்டம் கொள்ளச்செய்த அவரு டைய ஆசிரியர் திரு. ஆ.திரா விடமணி பி.ஏ..அவர்கள் பெருமுயற்சியால் தான் அம்மாநாடு கூட்டப்பட்டது. மாநாட் டிற்கு விருதுநகர் திரு.வி.வி.இராமசாமி அவர்கள் தலைவர். மாநாட்டுத் திறப்பாளர் அய்யா பெரியார் திராவிட நாட்டுப் படத் திறப்பாளர் தளபதி அறிஞர் அண்ணா. அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள். இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய, ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒரு பக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர் களைப் பார்க்கப் போகிறோம், எப்போது விடியும் என்ற ஆவல் கி.வீரமணி யின் உறக்கத்தினை ஓடோடச் செய்

தது. பொழுது விடிந்ததும் திரு.ஏ.பி.ஜனார்த் தனம், எம்,ஏ., அவர்கள் அய்யாவைப் பார்க்க கி.வீர மணியை அழைத்துப்போனார். அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங் கினார்கள். கி.வீரமணிக்கு ஆசை ஒரு பக்கம். அவரை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம்.அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தார். “இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபாடுள்ளவன். நண்பர் திராவிடமணி தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகி றான்’’ என்று அய்யாவுக்கு அறிமுகப் படுத்தி னார். தோழர் ஏ.பி.ஜனார்த்தனம், கி.வீரமணி அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமை யாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்து விட்டார். மறுநாள் மாநாட் டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். இம் மாநாட்டில் கி.வீரமணி உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும் கண்ட னங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்றும் அய்யா அவர்கள் வெளி யிட்ட கருத்தைவிட பேசிய முறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்து பேசிய அண்ணா அவர்கள் கி. வீரமணியின் பேச்சை வைத்தே துவக்கினார்.

“இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத் திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல் லாம் ஞானப்பால் அல்ல பெரியாரின் பகுத் தறிவுப்பால்தான்” என்று அறிஞர் அண்ணா அவர்கள் கி.வீரமணியைப் பற்றி குறிப் பிட்டார்கள்.

நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறிய மாநாட்டில் கி. வீரமணி:

1944 ஆகஸ்ட் 26, 27ஆம் நாள்களில் நீதிக்கட்சியின் 16ஆவது மாகாண மாநாடு சேலத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை யில் கூடியது. பழைமை வாதிகள் சிலர் திட்ட மிட்டுப் பெரியாரின் தலைமைப்பதவியைப் பறித்திடக் கனவு கண்டனர். சென்னையில் அண்ணா தலைமையில் கூடிய ஒரு மாநாட் டில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற பெயரைத் திராவிடர் கழகம் என மாற்ற வேண்டிப் பரிந்துரைக்கும் முடிவு மேற்கொள் ளப்பட்டிருந்தது. அதன்படி சேலத்தில் கட்சி யின் பெயர் திராவிடர்கழகம் என மாற்றப்பட் டது. சேலம் மாநாட்டின் முக்கியத்துவமே அண்ணாதுரை தீர்மானந்தான். பெரியார் விருப்பத்திற்கிணங்கவே அண்ணா இதனைக் கொணர்ந்து நிறை வேற்றினார்.

இதன்படி பிரிட்டிஷ் அரசால் அளிக்கப் பட்ட கவுரவப்பட்டங்களான சர், திவான்- பகதூர், ராவ்பகதூர், ராவ்சாகிப், கான்சாகிப் போன்றவைகளைக் கட்சியில் உள்ளோர் விட்டு விடவேண்டும். அதேபோலக் கவுரவ நீதிபதி, ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு நியமனங்கள், நாமினேஷன் மூலமாகப் பிரிட்டிஷ் அரசால் தரப்பட்ட எல்லாப்பதவி களையும் விட்டொழிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறியதன் வாயிலாக ‘சரிகைக்குல்லாய்க் கட்சி’ என்ற அவப்பெயர் ஒழிந்தது. இங்கு ஒரு தீர்மானத்தின் மீது பேசினார் கடலூர் சிறுவன் கி.வீரமணி. பத்துவயதுச்சிறுவன் கி.வீரமணி 1944 சேலம் மாநாட்டில் தீர்மானத்தை வழி மொழிந்து பேசியதன் மூலம் இயக்கத்தின் வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டார். வரலாறு படிப் போராக இல்லாமல் திராவிட இயக்க வரலாறு படைப் போராக கி. வீரமணி மாறினார்.

அய்சக் நியூட்டன்

1762-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று கிழக்கு இங்கிலாந்தில் உள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஊரில் பிறந்தார்.  அவ்வூருக்கு அருகில் உள்ள கிங்க்ஸ் ஸ்கூல் ஆப் கிராந் தம் என்ற பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு வயது 12. இப்போது கூட இந்த ஊரில் சில வீடுகள் மட்டுமே உள்ளது. மிகவும் அமைதியான இந்த கிராமத்தில் அன்று தூரத்தில் உள்ள மலைப்பகுதியில் இருந்து வரும் காற்றின் ஓசை மற்றும் மரக்கிளைகளின் ஓசையைத் தவிர வேறு ஒன்றுமே கேட்காது.

இந்த நிலையில் அவரை பள்ளிக்கு அழைத்துச்செல்ல குதிரை வண்டி ஒன்று தினசரி  தூரத்தில் உள்ள சிறிய குன்றின் பாதையில் வரும். குதிரைவண்டியில் குதிரையை அடிக்க சாட்டையைச் சொடுக் கும் ஓசை துல்லியமாக அய்சக்கின் காது களில் விழும். மற்றவர்கள் என்றால் இதை ஒரு சாதாரண ஓசை என்று விட்டுவிடு வார்கள். ஆனால், அய்சக் நியூட்டனுக்கு எதையுமே ஆய்வு நோக்கில் பார்க்கும் பக்குவம் அந்த சிறிய வயதிலேயே வந்து விட்டது. ஒவ்வொரு முறையும் சாட்டை ஓசை அவர் காதில் விழும் போது அதை கணக்கிட லானார். அதாவது தூரத்தில் இருந்து வரும் ஓசை அருகில் இருந்து வரும் ஓசை அதற் கான வேகம் ஓசையின் வேகம் போன்ற வற்றை கணக்கிட்டுக்கொண்டார்.

குளிர்காலம் மற்றும் மழைக் காலத்தில் ஓசையின் வேகம் அதிகமாகவும் வேனில் காலத்தில் வேகம் குறைவாவும் வருவதை கண்டார். இதனடிப்படையில் வெற்று வெளியில் ஓசையின் வேகம் குறைவாகவும், நீரில் ஓசையின் வேகம் அதிகமாகவும் பரவும் என்பதை கண்டுபிடித்தார். தனது 12 வயதில் கண்டுபிடித்த இந்த ஓசையின் வேகம் குறித்த ஆய்வே பிற்காலத்தில் ஒளியின் வேகம் குறித்த உன்னதமான பார்முலாவைத் தர

V =square root E/d. V=square root P/d  என்ற துவக்கப்புள்ளியாக அமைந்தது.

தன்னுடைய 17ஆவது வயதில் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக் கத் துவங்கினார். அப்போது பிளேக் நோய் பரவியதால் மீண்டும் தனது ஊருக்கே வந்துவீட்டிலேயே படிக்கலானார். அந்த காலக்கட்டத்தில் தான் அவர் புகழ்பெற்ற ஈர்ப் புவிசை கொள்கை உருவாக்கிய ஆப்பிள் விழும் நிகழ்வு நிகழ்ந்தது.

ஜேம்ஸ் வாட்

அயர்லாந்தில் உள்ள கிரீன்னோக் என் னும் ஊரில் 1736-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை மரப்பொருட்கள் தயாரிக் கும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இவரது தாயார் மிகச்சிறந்த கல்வியாளர்.  இவரது குடும்பத்தினர் கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபட்டவர்கள்.  குத்தகைக்கு கப்பல்களை எடுத்து பழுது பார்க்கும் பணியையும் செய்துவந்தனர். இந்த நிலையில் சிறுவன் ஜேம்ஸ் வாட் சிறுவயதிலேயே தனது தாத்தாவின் கப்பல் பராமரிப்பு பணியை உடனிருந்தே பார்த்துவந்தார்.

மிகவும் அதிகம் கேள்விகளைக் கேட் பவர். இவர்கள்குடும்பத்துடன் சாப்பிடும் போது ஒவ்வொரு குழந்தைகளும் கேள்வி கேட்கவேண்டும் என்று அவரது தாத்தா அன்புக் கட்டளையிடுவார்.  இதில் ஜேம்ஸ் வாட் அதிகம் கேள்வி கேட்பார். அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல அவரது அன்னை எப்போதும் தயாராக இருப்பார்.

தனது  15-ஆவது வயது கப்பலில் பழுது பார்க்கும் மிகவும் கனமான கருவிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்ல மிகவும் அதிக அளவு மனித ஆற்றல் செலவெடுப்பதும், இதற்கு தீர்வு இல்லையா என்றும் தனது தாத்தா விடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு அவரது தாத்தா இங்கிலாந்தில் நெம்புகோல் போன்ற ஒரு கருவி உள்ளது. ஆனால் அதை இயக்குவதற்கு மிகவும் கடினமானது என்று கூறினார்.

சில நாட்களிலேயே அவர் தனது தாத் தாவுடன் இங்கிலாந்து சென்று அந்த நெம்பு கோல் கருவியைப் பார்வையிட்டு வந்தார்.

அதை இயக்குவதற்கும் மனித ஆற்றல் அதிகம் செலவிடப்படுவதை கண்டார்.  அதே போல் அவரது ஊரின் தொலைவில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி கொண்டுவருவதற்கும் மனித ஆற்றல் செலவிடப்படுவதைக் கண்டார். மனித ஆற்றல் இல்லாமல் இவற்றை எப்படி இயக் குவது என்று அவர் தொடர்ந்து சிந்தித்து வந்தார். இதற்கான கேள்விகளையும் அவர் தனது தாத்தா மற்றும் அன்னையிடம் கேட்டு வந்தார்.. அவருக்கு 16ஆவது  வயதில் சாப்பிடும் போது சமையலறையில் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கும் போது மூடி விலகுவதைக் கண்டார். இது குறித்து தனது அன்னையிடம் கேட்டார். அதற்கு அவரது அன்னை பாத்திரத்தில் உள்ள நீர் சூடாகும் போது நீராவியாகி வெளியேறும் அந்த நீராவி வெளியேறும் போது எந்த ஒரு கனமான பொருள் இருந்தாலும் அதை விலக்கிவிட்டு நீராவி வெளியேறும் என்று கூறினார்.

இதனை அடுத்து அவர் அந்த தட்டின் மீது செங்கல் மற்றும் கனமான கற்களை வைத்தார். பாத்திரத்தில் உள்ள நீர் கொதிக் கும் போது கனமான செங்கல் மற்றும் கற்கள் இருந்த தட்டை மிகவும் எளிதாக அகற்றி விட்டு நீராவி வெளியேறியது.

தன்னுடை 16 வயதில் நீராவி ஆற்றலை நாம் ஏன் கருவிகளை இயக்க பயன்படுத்தக் கூடாது என்று தனது தாத்தாவிடம் கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து அவரது தாத்தா நீராவி இயந்திரம் குறித்து ஆய்வு செய்ய, அவரது சிறிய ஒரு அறையையே 16 வயது ஜேம்ஸ் வாட்டிற்கு கொடுத்தார். பள்ளியில் படித்துக்கொண்டே நீராவி கருவி குறித்து தொடர்ந்து ஆய்வு செய்துவந்தார்.

1750-ஆம் ஆண்டு அவரது அறிவியல் ஆர்வத்தைக் கண்ட கிளாஸ்கோ பல் கலைக்கழக வேதியல் பேராசிரியர் ஜோசப் பிளாக் அவருக்கு, மாதிரி நீராவி எஞ்சின் ஒன்றை கண்டுபிடிக்க வேண்டிய அனைத்து உதவிகளையும் பல்கலைக்கழகத்தின் சார் பில் செய்துவந்தார். 1765-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுமுறை நாளான ஞாயி றன்று தன்னுடைய முதல் நீராவி எஞ்சினை இயக் கிக் காண்பித்தார். 15 வயது சிறுவனின் மனதில் உதித்த ஓர் அறிவியல் ஆர்வம் 36-ஆவது வயதில் நீராவி எஞ்சினாக உருப்பெற்று உலகில் தொழில் புரட்சி ஏற்பட்டது.  நீராவி எஞ்சினின் முதல் மாடல் தனது பேராசிரியரின் மிதிவண்டியை மாதிரியாக வைத்துதான் கண்டுபிடித்தார். என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. அடுத்த சில ஆண்டுகளிலேயே இவரது நீராவி எஞ்சின் நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கரியைக் கொண்டுவர பயன்பட ஆரம்பித்தது.

ஜி ஜிங்பிங்க்

ஜி ஜிங்பிங் 15 ஜூன் 1953ஆம் ஆண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில் பிறந் தார். இவரது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பதவி வகித்துவந்தவர். அரசுக்கு எதிராக கம்யூனி சப் புரட்சி செய்தார் என்று கூறி பலமுறை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார் கள். பின்னர் இவர்  லுவேயங் பகுதிக்கு தனது குடும்பத்தோடு வந்து சேர்ந்தார். சீனாவின் கிழக்கு மாநில மான ஹெனானில் உள்ள ஒரு மாவட்டம் தான்  லுவோயங். இங்குதான் சீன அதிபர் ஜி ஜிங்பிங் கிராமும் உள்ளது,   தனது இரண்டு சகோதரி மற்றும் பெற்றோர் தாத்தா பாட்டியுடன் லியங் ஜீ என்ற கிராமத் திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு வயது 10.  சிறுவன் ஜி ஜிங் பிங் பள்ளிப் பாடத்தை விட அதில் செய்முறைப் பாடங் களை அதிகம் கவனிப்பார்,

அவரது கிராமம் மலைப்பகுதியில் உள்ளது குளிர்காலங்களில் பனியால் முழு மையாக  மூடிவிடும். சிறுவன் ஜி ஜிங் பிங்கிற்கு கொடுத்த வேலை என்னவென்றால் குளிர் காலத்தில் மாட்டுக்கொட்டிலில் பனி உள்ளே நுழைந்துவிடாதவாறு பார்த்துக்கொள்வது தான் அவரது வேலை.

வெளியில் கடுமையான குளிர் நில வினா லும் உள்ளே வெதுவெதுப்பான வெப்பம் நிலவ தொடர்ந்து கட்டைகளை எரித்து கொண்டே இருக்கவேண்டும், தூங்கி விட் டால் கட்டை அணைந்து ஈரமாகி மீண்டும் தீ பற்றவைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஆடுகள் மாடுகள் இறந்து போகும் நிலை ஏற்படும்.  நகர வாழ்க் கையில் இருந்து திடீரென்று கிராமத்திற்கு வந்த சிறுவன் ஜி ஜிங் பிங்கிற்கு அந்தக்குளிரில் மாடு மற்றும் ஆடுகள் இடையே கதகதப்பான சூழலில் தூங்குவது பிடிக்கும் ஆனால் தூங்கிவிட்டால் நெருப்பு அணைந்து போய் குளிர் மாட்டுக்கொட்ட கைக்குள் வந்துவிடும். ஆகவே இதை எப்படி எளிதாக்குவது என்ற சிந்தனையில் சில மாதங்களை மாட்டுக் கொட்டகையில் கழித்தார்.

இந்த நிலையில் அவரது பள்ளியில் மாட்டுச்சாணத்தில்  இருந்து எரிவாயுஎடுக் கும் பாடம் ஒன்றை ஆசிரியர் சொல்லும் போது ஆர்வமாக கேட்டார். பின்னர் பள்ளி முடிந்த பிறகு ஆசிரியரிடம் போய் மாட்டுச் சாணத்தில் எரிவாயு தயாரிக் கும் முறைகுறித்து விரிவாக கேட்டறிந்தார். இதைக் கேட்ட அவ ரது ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்து பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு பண்ணை வீடு ஒன்றில் உள்ள சாண எரிவாயு கலனைக் காண்பித்தார். இதைப் பார்வையிட்ட ஜி ஜிங் பி இதே போல் தனது மாட்டுக்கொட்டகையிலும் நான் செய் வேன் என்று கூறி வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

நான்கு நாட்களாக தனது சகோதரிகளின் உதவியுடன் மாட்டுக்கொட்டகையில் சிறிய சாண எரிவாயு கலன் ஒன்றை அமைத்தே விட்டார்.   தன்னுடைய முதல் முயற்சியிலேயே சாண எரிவாயு கலன் மூலம் மாட்டுக் கொட் டகை முழுவதுமே வெதுவெதுப்பாக இருக் கும் வகையில் அமைந்துவிட்டார். சீனாவின் அதிபராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு அவரது சகோதரி தனது சகோ தரன் 11 வயதில் செய்த சாண எரிவாயு கலனை ஊடகம் ஒன்றிற்கு கான்பித்தார்.

இந்த வீடியோவை சீன அதிபரிடம் காட்டிய போது தனது சிறியவயது அனுப வத்தை நினைவு கூர்ந்தார். அவர் கூறும் போது நானும் எனது சகோதரிகளும் 4 நாட்கள் மிகவும்சிரமப்பட்டு சாண எரிவாயு கலனை செய்து முடித்தோம். பிறகு சாணத்தை அந்தக்கலனில் ஆசிரியர் கூறியது போல் தண்ணீர் கலந்து ஊற்றிவிட்டு அதிலிருந்து இணைக்கப்பட்ட குழாயில் எரிவாயு வரு வதை மிகவும் ஆர்வத்தோடு பார்த்துக் காத்திருந்தோம். இந்த நிலையில் முதலில் நான் தான் குழாயை சிறிது திறந்து தீக்குச்சி நெருப்பை அருகில் கொண்டு சென்றேன். அப்போது அந்த குழாயில் இருந்து வந்த எரிவாயு தீப்பிடித்துக் கொண்டது, இதைக் கண்ட நானும் எனது சகோதரிகளும் மகிழ்ச் சியில் கத்திவிட்டோம்.

இதனை அடுத்து வீட்டிற்கு வந்து எனது தந்தையை அழைத்துக்கொண்டு வந்து காண்பித்தோம் அவர் மகிழ்ச்சியில் எங்க ளைப் பாராட்டினார்.

அதன் பிறகு கொஞ்சம் பெரிய எரிவாயு கலன் ஒன்றை அப்பா செய்து கொடுத்தார். அதன் மூலம் எங்களது மாட்டுக்கொட்டகை மற்றும் அருகில் உள்ள மாட்டுக்கொட்டகை மற்றும் எங்கள்  வீட்டிற்கும் வெப்பம் கிடைக் கச்செய்தோம் என்று கூறினார்.

இளந் திராவிடர் கழகம்

13-4-43இல் கடலூர் O.T. வீரபத்திரசாமி கோயில் தெரு, தோழர் பெருமாள் அவர்கள் வீட்டின் மேல்மாடியில் தோழர் ஏ.பி. ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்களால் இளந் திராவிடர் கழகம் திறக்கப்பட்டு தோழர்கள் கி.வீரமணி (10 வயது) தலைவராகவும், பெ.லெனின் (10வயது) செயலாளராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். மாலையில் திரௌபதியம்மன் கோயில் திடலில் தோழர் பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் சனார்த்தனம் அவர்கள் அரிய சொற்பொழிவாற்றினார்.

-  விடுதலை ஞாயிறு மலர், 30.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக