பக்கங்கள்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

தகுதி, திறமை என்பதே புரட்டு!

 

உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு: தமிழர் தலைவரின் விளக்கவுரை

சென்னை, பிப்.20 தகுதி, திறமை என்பதே புரட்டு என்று தந்தை பெரியார் சொன்னதை எடுத்துக்காட்டி   விளக்கவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்.

உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு

கடந்த 1.2.2022 அன்று மாலை  ‘‘உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு'' என்ற தலைப்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

“…Much has been made of merit in this case; but equal merit pre-supposes equal opportunity, and I think it goes without saying that the toiling masses are denied all those opportunities which a few literate people living in big cities enjoy. To ask the people from the villages to compete with those city people is asking a man on bicycle to compete with another on a motorcycle, which in itself is absurd. Then again, merit should also have some reference to the task to be discharged. Mr. Tyagi interrupted Dr. Deshmukh by saying that it is a fight for the illiterates. I think, however sarcastic that remark may be, he was probably right. Self-government, means a government by the people, and if the people are illiterate, a few leaders have no right to usurp all the power to themselves. This cry, this bogey of merit and fair-play is being raised by those who are in a[n] advantageous position and who stand to suffer if others also come into the picture.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

''தகுதி குறித்து பேசப்படுகிறது, அதாவது அனைவருக்கும் சமமான நிலை வரும் போது தான் தகுதி குறித்துப் பேசவேண்டும்  இங்கு பெரிய நகரங்களில்  மேல்தட்டு வர்க்கத்தில் கல் வியறிவு பெற்றவர்கள் அனுபவிக்கும் அனைத்து வாய்ப்புகளும்  உழைக்கும் மக் களுக்கு மறுக்கப் படுகின்றன. கல்வி அறிவு எளிதில் கிட்டாத மக்களை அனைத்து வசதி களும் வளங்களை யுடைய மக்களுடன் போட்டி போடச் சொல்வது, சைக்கிள் ஓட்டும் மனிதனை  மோட்டார் சைக்கிளில் செல்வாரோடு போட்டி யிடச் சொல்வது போன்றது.  முதலில் இங்கே தகுதி என்பதே விவாதத்திற்கு உள்ளானது ஆகும். 

சிலர் இது கல்விவளம் இருந்தும் படிக்காமல் இருப்பவர்களின் போராட்டம் என்று கூறுகின் றனர். அதாவது அவர்களின் ஏளன மனநிலையே ஆகும்.   மக்களாட்சி என்பது மக்களால் நடத்தப் படும் அரசாங்கம் என்று பொருள்படும், இங்கு நிர்வாகத் திறமைகள் மதிப்பிடப்படுகின்றன. மக்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்த கார ணத்தால்  சிலர் அனைத்து அதிகாரத்தையும் தங்களிடம் வைத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர். 

இப்போது மற்றவர்கள் தங்களின் உரிமை களைக் கேட்கும் போது அவர்களின் நியாயமான கோரிக்கைகளை செவிகொடுத்துக்கேட்காமல் அதனை நாடகம் என்கிறனர். அவர்களால் தங்களின் உரிமை பாதிக்கப்படும் என்று நினைக் கின்றனர்.''

என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய தத்துவத்தை உண்டாக்கினர். இதுதான் புதிய கோணத்தில், இந்தத் தீர்ப்பினுடைய அருமையான பகுதி - சிறப்பு எங்கே இருக்கிறது என்று சொன்னால்,

மெரிட் என்பதும்,  ரிசர்வேஷன் என்பதும் 

ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல!

'மெரிட்' என்பதும், ரிசர்வேஷன் என்பதும், இரண்டு வெவ்வேறு அம்சங்கள், ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.

இரண்டு அம்சங்கள் என்றால், இருமுனை (bizary)  என்று இருக்கக்கூடியதல்ல.

ரிசர்வேஷன் என்பது, வாய்ப்பவர்களுக்கு வாய்ப் பைக் கொடுத்தால், எல்லோரும் வருவார்கள்.

எனவே, சமத்துவம் என்று சொல்லும்பொழுது, 

Substantive Equality என்று உண்மையான சமத்துவமா?

அல்லது Formal Equality   - ஒப்புக்கான - சட்டப்படி பேசுகின்ற சமத்துவமா?

இரண்டு பேரையும் ஒன்றாக விட்டுவிட்டேன் என்று சொல்லுகின்ற சமத்துவமா? என்பதற்கு, அரசி யல் சட்ட நிர்ணய சபையிலிருந்து எடுத்து சொன்னது மட்டுமல்ல நண்பர்களே, அதைவிட மிக முக்கியமாக மற்ற தீர்ப்புகளிலிருந்தும் எடுத்துச்சொல்கிறார்.

மெஜாரிட்டி தீர்ப்பு - மைனாரிட்டி தீர்ப்பு

இதில் இன்னொரு செய்தி என்னவென்றால், இந்தத் தீர்ப்புகளில், மெஜாரிட்டி தீர்ப்பு - மைனாரிட்டி தீர்ப்பு என்று சொல்வார்கள்.

மைனாரிட்டித் தீர்ப்பை -Dissenting Judgment  என்று சொல்வார்கள்.

மூன்று நீதிபதிகள் தீர்ப்பு எழுதும்பொழுது, இரண்டு நீதிபதிகளுடைய தீர்ப்பு ஒன்றாக இருந்து, மூன்றாவது நீதிபதியினுடைய தீர்ப்பு வித்தியாசமாக இருந்தால், சில நேரங்களில், Dissenting Judgement-ட்டையே பின்னாளில் வரக்கூடியவர்கள் சரியானது என்று பட்டால்  கையாளுவார்களே தவிர, மெஜா ரிட்டி தீர்ப்பை எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.

சட்ட முறையில், தீர்ப்பு எழுதுகின்ற முறையில் இது மிக சர்வ சாதாரணம்.

Justice R. Subba Rao -  

T. Devadasan vs Union of India

அப்படி வருகிறபொழுது,Justice R. Subba Rao -  T. Devadasan vs Union of Indiaஎன்ற ஒரு வழக்கில், 16(4) என்பது வேலைவாய்ப்பு, அதைப்பற்றி தெளிவூட் டுவதற்காக மிக அருமையான ஒரு செய்தியை எடுத்துச் சொல்கிறார்.

சமத்துவம் என்றால் என்ன?

இதுதானே முக்கியம். ஆகா, சம வாய்ப்பு கொடுக் கலாமே! இரண்டு பேரும் திறமை அடிப்படையில் போட்டி போடட்டும். அதிக மதிப்பெண் வாங்கிய வனுக்குக் கொடு; குறைந்த மதிப்பெண் வாங்கியவனை வெளியே தள்ளு என்றால்  என்ன அர்த்தம்?

பசியாக இருப்பவன் முக்கியமா? புளியேப்பக் காரன் முக்கியமா? என்று கேட்டால்,

இரண்டு பேரும் ஒன்றுதான் என்று, இரண்டு பேருக்கும் சம வாய்ப்பு கொடுத்தால், விருந்தில் யாருக்குப் பயன் அதிகம்?  இருப்பது கொஞ்சம்தான்.

இங்கே ஒரு உதாரணத்தை சொல்லுகிறார்.

என்ன சொல்லுகிறார் என்றால், சமத்துவம் என்றால் என்ன?

“Article 14 lays down the general rule of equality. Article 16 is an instance of the application of the general rule with special reference to opportunity of appointments under the state. It says that there shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the state. If it stood alone, all the backward communities would go to the wall in a society of uneven basic social structure; the said rule of equality would remain only a utopian conception unless a practical content was given to it. Its strict enforcement brings about the very situation it seeks to avoid. To make my point clear, take the illustration of a horse race. Two horses are set down to run a race - one is a first class race horse and the other an ordinary one. Both are made to run from the same starting point. Though theoretically they are given equal opportunity to run the race, in practice the ordinary horse is not given an equal opportunity to compete with the race horse. Indeed, that is denied to it. So a handicap may be given either in the nature of  extra weight or a start from a longer distance. 

By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one. The same difficulty had confronted the makers of the constitution at the time it was made. Centuries of calculated oppression and habitual submission reduced a considerable section of our community to a life of serfdom. It would be well nigh impossible to raise their standards if the doctrine of equal opportunity was strictly enforced in their case. They would not have any chance if they were made to enter the open field of competition without adventitious aids till such time when they could stand on their own legs. That is why the makers of the constitution introduced clause (4) in Article 16. 

The expression - nothing  in this article is a legislative device to express its intention in a most emphatic way that the power conferred thereunder is not limited in any way by the main provision but falls outside it. It has not really carved out an exception, but has preserved a power untrammelled by the other provisions of the article.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

''அரசமைப்புச்சட்டப் பிரிவு-14 அனைவருக் குமான சமமான  பொது உரிமையை வழங்கு கிறது. பிரிவு-16 என்பது மாநிலத்தின் கீழ் நிய மனம் செய்வதற்கான சிறப்புஅதிகார விதியைப் பயன்படுத்துவதற்கானது ஆகும்.

 மாநில அரசின் கீழ் உள்ள  வேலைவாய்ப்பு அல்லது நியமனம் தொடர்பானவைகளில்  அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. பிற்படுத் தப்பட்ட சமூகங்களுக்கு சமச்சீரற்ற அடிப்படை சமூகக் கட்டமைப்பில் அவர்களுக்குமான உரிமை வழங்கப்படாவிட்டால் அதனைப் பெற் றுத்தரும் சூழ்நிலையை உருவாக்கவேண்டும் இதில் எனது கருத்தை தெளிவுபடுத்த, குதிரைப் பந்தயத்தினைக் கூறுகிறேன். இரண்டு குதிரை களில் ஒன்று முதல் வகுப்பு பந்தயக் குதிரை, மற்றொன்று சாதாரணமானது. இரண்டும் ஒரே துவக்கக் கோட்டிலிருந்து ஓடுகின்றன

 பந்தயத்தில் ஓடுவதற்கு அவைகளுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், நடைமுறையில் சாதாரண குதிரைக்கு பந்தயக் குதிரையுடன் போட்டியிட சம வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. உண்மையில், அது மறுக்கப்படுகிறது.  அதாவது மாற்றுத்திறனாளிக்கு அதிகமான பளுவைக் கொடுத்து ஓடச்சொல்வது போன்றது. இவ்வாறு செய்வதன் மூலம், போட்டி கேலிக்கூத்தாக மாறிவிடும்

 அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய காலத்திலும் அதே சிரமத்தை அதை உருவாக் கியவர்களும் எதிர்கொண்டனர்.

 பல நூற்றாண்டுகளாக நிலவிய  ஒடுக்குமுறை மற்றும் பழக்கவழக்கங்களை கருத்தில் கொண் டனர்.  நமது  சமூகத்தின் கணிசமான பகுதி அடி மைத்தனமான வாழ்க்கை முறையாக இருந்தது. சம வாய்ப்புக் கோட்பாட்டை அவர்கள் அமல் படுத்தினால், அவர்களின் தரத்தை உயர்த்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும். அவர் களுக்கான எந்த அடிப்படை உதவிகளும் இல்லாமல் சமமான போட்டிக்குள் நுழையச் செய்தால் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக் காது.  அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் பிரிவு 16 இல் ஷரத்து (4) அய் அறிமுகப்படுத்தினர்."

வழக்குரைஞராக இங்கே இருப்பவர்கள், ஆங் கிலம் தெரிந்தவர்கள் அதை அப்படியே எடுத்து எழுதிக்கொண்டு, மற்றவர்களுக்கும் இதைப் பரப்ப வேண்டும்.

சமூகநீதியினுடைய தத்துவ ரீதியான 

தத்துவக் கோட்பாடு என்ன?

இப்பொழுது நாம் என்ன சொல்லிக் கொண் டிருக்கிறோமோ -  திராவிட இயக்கம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறதோ - தந்தை பெரியார் என்ன சொல்லுகிறாரோ - இன்றைக்கு நாம் எந்த சமூகநீதிக்காகப் போராடிக் கொண் டிருக்கின்றோமோ - அந்த சமூகநீதியினுடைய தத்துவ ரீதியான தத்துவக் கோட்பாடு என்ன? என்பதற்கு இந்த விளக்கங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.

இன்னொரு வழக்கில், ஜஸ்டிஸ் ஏ.எம்.ரே  அவர் கள் சொல்லும்பொழுது,

''ஒருவன் சைக்கிளில் செல்லுகிறான்; இன்னொ ருவன் மோட்டார் சைக்கிளில் செல்லுகிறான். இரு வருக்கும் சம வாய்ப்பு கொடுத்துவிட்டேன் என்று சொன்னால், மோட்டார் சைக்கிளில் செல்லுபவன் வேகமாக செல்லுவாரா? அல்லது சைக்கிளில் செல் லுபவர் வேகமாக செல்லுவாரா?'' என்று அவர்கள் தெளிவாகக் கேட்டு, இதை எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள்.

இதுவரையில் இட ஒதுக்கீடுக்கு எதிராகக் கொடுத்த தீர்ப்புகளில், என்ன தத்துவம் சொன் னார்கள்? 16(4) என்று சொல்லக்கூடிய வேலை வாய்ப்பு - அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

“Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the state.”

இதன் தமிழாக்கம் வருமாறு:

''அரசின் கருத்துப்படி, மாநிலத்தின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில்  போதுமான அளவு எண்ணிக்கையில் இல்லாத பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான  நியமனங்கள் அல்லது பதவிகளில் இடஒதுக்கீடு கொடுப்பதற்கு எந்த விதிகளும் தடுக்காது.''

விதிவிலக்கே தவிர, இது விதியினுடைய அடிப்படைக் கூறு அல்ல!

இது ஒரு விதிவிலக்கே தவிர, இது விதியினுடைய அடிப்படைக் கூறு அல்ல என்று ஒரு வியாக்கி யானத்தை இதுவரையில் செய்தார்கள். 

அதை மறுத்து இந்தத் தீர்ப்பில், இல்லை, இது விதிவிலக்கல்ல; இதுதான் மிக முக்கியமான தத்துவம் என்று ஒரு புதிய வெளிச்சத்தை நீதிபதிகள் சந்திரசூட், போபண்ணா  ஆகியோர் கொடுத்த தீர்ப்பின் மூலமாக மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கின்றனர்.

இப்படி சொல்லும்பொழுது, மிக அற்புதமான ஒரு சொல்லை அவர்கள் கையாண்டிருக்கிறார்கள்.

Cultural Capital

Cultural Capital- சில பேருக்கு -  அப்பன் படித் திருக்கிறார்; அதனால், ஒருவருக்கு வாய்ப்பு ஏற்பட் டிருந்தால், நம்மைப் போன்று வெளிப்படையாகப் பேசாமல், நாகரிகமாக, நாசூக்காக சொல்லும்பொழுது, பண்பாட்டு அடிப்படையில் ஏற்பட்ட மூலதனம் அது. ஏகாதிகாரம் வைத்துக் கொண்டிருந்தார்கள் அல் லவா!  Cultural Capital - என்ற வார்த்தையை மிக அழகாகப் பயன்படுத்தினார்கள்.

அவர்களுக்குத் திறமை எப்படி வரும்?

A combination of the family habit  ஒருவருடைய குடும்பம் மிக வசதியான குடும்பம். சூழ்நிலை - வாய்ப்பு.

அய்.ஏ.எஸ்.சாக இருப்பவரின் பிள்ளையின் குடும்பமும், காலங்காலமாக நாங்கள்தான் படிப்போம் என்று மனுதர்மத்தில் சொல்லக்கூடிய உயர்ஜாதியைச் சேர்ந்த குடும்பமும் - படிப்பில்லாத அனிதாக்கள் குடும்பமும் எப்படி ஒன்றாக முடியும்?

அப்படி இருந்தும், நம்முடைய பிள்ளைகள் மேலே வருகிறார்கள். அப்படி வந்தாலும், அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில்லை.

நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பின் 30 ஆம் பக்கத்தில்,

A  combination of family habitus, community linkages and inherited skills work to the advantage of individuals belonging to certain classes, which is then classified as ‘merit’, reproducing and reaffirming social hierarchies.

இப்படி வருவதைத்தான் அவன் தகுதி என்கிறான். அந்தத் தகுதி எல்லோருக்கும் எப்படி வரும்? ஏனென் றால், காலங்காலமாக அடிமையாக்கி வைத்திருக் கிறார்கள்.

தகுதி, திறமை என்பதே புரட்டு!

சமூகத்தில் காலங்காலமாக, பாரம்பரியமாக அனு பவித்துக் கொண்டிருக்கின்ற ஏகபோகம் என்பது இதுதான்.

இப்படி சொல்லிவிட்டு, இந்தத் தகுதி அடிப் படையை நொறுக்குகிறார்.

தகுதி, திறமை என்பதே புரட்டு. பெரியார் அய்யா அவர்கள், தகுதி, திறமை, புரட்டு என்பதை வரிசை யாக, காலங்காலமாக சொல்லுவார். நம்முடைய நீதிக் கட்சித் தலைவர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

ஏனென்றால், நம்மவர்கள் படிக்காமல் இருப்பதற்கு அவர்கள் சொன்ன காரணம்,  அவர்களுக்குத் தகுதி இல்லீங்க என்பதுதான்.

"தகுதி, என்னங்க தகுதி - மதிப்பெண் வாங்கி யிருக்கிறார்களே" என்று சொல்லும்பொழுது,

While Examination are necessary and convenient  method of distributing educational opportunity

வாய்ப்புகளைப் பரவலாகக் கொடுப்பதற்குத் தேர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல வாய்ப்புதான் - தேவைதான் - ஆனால்,

Mark may not always  to the best Good and  individual merit .

வெறும் மதிப்பெண்கள் அல்ல!

தனிப்பட்ட ஒருவருடைய தகுதியை, அவ ருக்குத்தான் அறிவு உண்டு என்று நிர்ணயிப்பது வெறும் மதிப்பெண்கள் அல்ல.

இந்த மதிப்பெண்களே ஒரு போலித்தனமான ஏமாற்று வேலை. தங்களுக்குத்தான் மதிப்பு இருக்கிறது  என்பதற்காகத்தான் அந்த மதிப்பெண்.

இந்த நேரத்தில் நண்பர்களே, ஒரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும்.

மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரு தேர்வுக் குழு அமைப்பர். அதில் மூன்று பேர் இருப்பார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதி என்.சோமசுந்தரம் தலைமையில் மருத்துவக் குழு!

ஆட்சிக்கு வந்தவுடன், அந்தக் குழுவை முதல மைச்சர் அண்ணா அவர்கள் நியமித்தார்.

அந்தக் குழுத் தலைவர் யார் என்றால், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என்.சோமசுந்தரம் அவர்கள்தான். மற்ற இரண்டு பேர் மருத்துவர்கள்.

நிறைய பிற்படுத்தப்பட்டவர்கள், வாய்ப்பில்லாத சமுதாயத்தினருக்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கு இடம் கிடைத்தது.

இராஜகோபாலாச்சாரியார் தன்னுடைய பத்திரி கையான சுயராஜ்யாவில், 'டியர் ரீடர்' என்கிற பத்தியில், சோமசுந்தரம் அவர்கள் ஒரு வகுப்புவாதி. அதனால்தான், அவர்  உயர்ஜாதிக்காரர்களுக்கு வாய்ப்பில்லாமல் செய்கிறார். மற்றவர்களுக்கு அதிக மதிப்பெண் அளித்து, வாய்ப்புகளைக் கொடுக்கிறார் என்று எழுதினார்.

சி.இராஜகோபாலாச்சாரியார் அவர்களே, பொறுப் பற்ற முறையில் எழுதினார்.

நீதிபதி சோமசுந்தரம் அவர்கள், நேர்மையான நீதிபதி என்று பெயர் எடுத்தவர். முதலமைச்சர் ஓமந்தூரார் காலத்தில் மத்திய அரசால், இவரது பரிந்துரையால் நியமிக்கப்பட்டவர் அவர்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக