பக்கங்கள்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

பாரதியின் ஜாதி வெறி - எதிர்வினை (79)

 

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (79) : 

ஜுலை 1-15,2021

நேயன்

ஆரியர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பது குறித்து பாரதி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “ஆரியராகிய நாம் ஏன் வீழ்ச்சி பெற்றோம்? நமது தர்மங்களை நாம் இழந்ததனால். அறிவை அபிவிருத்தி செய்தல்; பல்லாயிர வகைப்பட்ட சாஸ்திரங்கள், அதாவது அறிவு நூல்களைப் பயிற்சி செய்து வளர்த்தல், தர்மத்தை (மனுதர்மத்தை) அஞ்சாது போதனை செய்தல் முதலியன பிராமண தர்மங்களையும், வீரத்தன்மையைப் பரிபாலித்தல் போன்ற க்ஷத்ரிய தர்மங்களையும், வியாபாரம், கைத்தொழில் போன்ற வைசிய, சூத்திர தர்மங்களையும் நாம் சிதைய இடங்கொடுத்து விட்டோம்… இதுவே நம் வீழ்ச்சிக்குக் காரணம்’’ என்கிறார். (பாரதியார் புதையல் பெருந்திரட்டு)

பாரதி ஓர் வர்ணாஸ்ரம வெறியர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

“ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய்விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்றும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்ம தேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்குச் சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல் அசிரத்தையாக இருப்போமேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும். அதில் சந்தேகமில்லை’’ என்கிறார் பாரதியார். 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் பாரதியார் உலகம் முழுவதும் ஹிந்து தர்மத்தைப் பரப்ப வேண்டும் என எழுதியுள்ளார்.

நம் நாட்டில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பாரதி காணும் ஒரே தீர்வு “கலியுகம் ஒழிந்து மீண்டும் கிருதயுகம் வரவேண்டும். அப்போது மீண்டும் நால்வருணம் ஏற்படும். அப்போது மாதம் மும்மாரி பொழியும். அப்போதுதான் பஞ்சமும் இராது என்பதுதான் அவரின் இறுதிக்காலக் கொள்கையாகும்.’’

ஜாதிப்பற்று இல்லையென்றால், ஜாதி ஒழிப்பில் முனைப்பும், ஈடுபாடும் அவருக்கு இருந்திருந்தால், தன்னை ஆரிய பிராமணன் என்று ஏன் அவர் அழைத்துக் கொள்ள வேண்டும்? அவ்வாறு அழைக்கிறார், தன் இனம் ஜாதி மேலெழ ஆர்வம் காட்டுகிறார். வர்ணாஸ்ரம தர்மம் ஒழிந்ததே; வர்ணாஸ்ரம தருமம் பின்பற்றப்படாததே!

இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர பாரதியார் கூறும் ஒரே தீர்வு என்ன தெரியுமா?

“கலியுகம் ஒழிந்து மீண்டும் கிருதயுகம் வரவேண்டும். அப்போது மீண்டும் நால்வருணம் ஏற்படும். அப்போது மாதம் மும்மாரி பொழியும். அப்போதுதான் பஞ்சமும் இராது’’ என்பதே. (பாரதி தமிழ் _ பெ.தூரன்)

அப்படியென்றால் என்ன பொருள்? கலியுகத்தில் ஜாதி ஒழிந்து வருகிறது. நால் வருணம் மறைந்து வருகிறது. எல்லா வருணத்தாரும் எல்லா தொழிலையும் செய்யும் அளவிற்கு பெரும்பாலும் மாறிவிட்டனர். அதனால்தான் உலகில் பல பிரச்சினைகள்.

எனவே, மீண்டும் உலகம் வளப்பம் அடைய, தவறாது மழை பொழிய, பஞ்சம் விலக மீண்டும் கிருதாயுகம் வந்து, வர்ணாஸ்ரம தர்மம் நடைமுறைக்கு வரவேண்டும் என்கிறார். அதாவது உலக வளப்பத்திற்கும், வளர்ச்சிக்கும் வர்ணாஸ்ரம தர்மம் கட்டாயம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்கிறார்.

பிராமணர் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார். இந்துமத சாஸ்திரங்களைப் பயின்று பரப்ப வேண்டும் என்கிறார். அவற்றை நடைமுறைப் படுத்த வேண்டும் என்கிறார். அவனவன் அவன் குலத் தொழிலையே செய்ய வேண்டும் என்கிறார். இதைவிட வர்ணாஸ்ரம, சனாதன, இந்துத்துவா வெறி வேறு என்ன இருக்க முடியும்?

மனுதர்மம் பிராமணர்களுக்கு மட்டுமே உயர்வு, நன்மை தரக்கூடியது. மற்றவர்களுக்கு இழிவையும், தாழ்வையும், கேவலத்தையும் தரக் கூடியது. அப்படிப்பட்ட மனுதர்மத்தை அஞ்சாது பரப்ப வேண்டும் என்கிறார்.

மனுதர்மம் அநீதியானது, மனித நேயத்திற்கு எதிரானது என்று நன்றாகத் தெரிந்தும், அதை அஞ்சாது பரப்ப வேண்டும். நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார். இதன் மூலம் இவரது வர்ணாஸ்ரம வெறியும், மனுதர்மம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற துடிப்பும் இருந்தது நன்கு உறுதியாகிறது.

“கடயத்தில் மொத்தம் 30 பெரிய மிராசுதார்களும் பல சில்லரை நிலஸ்வான்களும் உள்ளனர். அவர்களாகவே வந்து ஏழைகளிடம் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தம் என்னவென்றால், “அதாவது எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி ‘தொழில் நிர்வாக சங்கம்’ என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த்தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில் (மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானா வகைப்பட்ட கைத்தொழில்கள். அவை இந்தக் கிராமத்திற்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத்தொழில்களின் இன்னின்ன தொழிலிற்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்றம் மேற்படி தொழில் நிருவாகச் சங்கத்தார் தீர்மானம் செய்வார்கள். அந்தப்படி கிராமத்திலுள்ள நாம் அத்தனைபேரும் தொழில் செய்ய வேண்டும். அந்தத் தொழில்களுக்குத் தக்கபடியாக ஆண் பெண் குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரிலும் ஒருவர் தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்தப்படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் எங்கள் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு ப்ரதிக்ஞை செய்து கொடுக்கிறோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஏற்பட்ட விஷயத்தை எங்களில் முக்கியஸ்தர் கையெழுத்திட்டு செப்புப் பட்டயம் எழுதி இந்தக் கோயிலில் அடித்து வைக்கிறோம். இங்ஙனம் ப்ரதிக்ஞை செய்து, இதில் கண்ட கொள்கைகளின்படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் கிராமத்தில் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும், பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து பின்னர் அதனை உலகத்தாரெல்லாருங் கைக்கொண்டு நன்மையடைவார்கள். இது அப்பட்டமான வர்ணாஸ்ரம முறை ஆதரவு அல்லவா?

பாரதி கடயத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, “பாரதி, நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால்தான் என்ன?’’ என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே, “கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்விக்க வேண்டியது. அதன் பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம்’’ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப் பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி விடுவிடு என்று தம் வீடு போய்ச் சேர்ந்தார். அப்போது காலை 11:00 மணி இருக்கும்.

நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கவும் ஊரார் பயப்படுவார்கள். மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தம் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருதி அதைப்  பொருட்படுத்தாமல் இருந்தார்.

வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம் “உன் போன்ற மானங் கெட்டவர்களின் செய்கையால்தானே நாராயணப்பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று’’ என்று சொல்லி, அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டார்.

அர்ச்சகர் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப் பிள்ளைக்குக் கட்டுக் கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாதுரையை வரச் சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியைக் கடயத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக்கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் நாராயணப்பிள்ளை.

(தொடரும்…)

“நான்கு வேதங்களின் ” சின்னமான “ஸ்வஸ்திகா”வை “நாஜிஸ்டான” ஹிட்லர் தேர்வு செய்தது ஏன்?

 ஞாயிறு மலர்விடுதலை நாளேடு

Published September 7, 2024

ஹிந்து மதத்தில் சுவஸ்திகா சின்னம் புனிதமாக பார்க்கப்பட்டாலும், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் அமெரிக்காவில் இது ஒரு ஆத்திரமூட்டும் அடையாள மாகப் பார்க்கப்படுகிறது.

ஹிட்லர் நாஜி ஜெர்மனியின் கொடியில் ‘ஹக்கன்க்ரூஸ்’ (Hakenkreuz) அல்லது கொக்கி வடிவிலான சிலுவையைப் பயன்படுத்தினார். இது ஸ்வஸ்திகாவைப் போன்ற ஒரு உருவம். அதனால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மேற்கத்தியர்கள், குறிப்பாக யூதர்களிடையே யூத இன அழித்தொழிப்பு பற்றிய வலிமிகுந்த நினைவுகளின் அடையாளமாக இந்த குறியீடு மாறியது.
சமண – பவுத்த மதங்களில் உள்ள ஸ்வஸ்திக் கொள்கைகள் நான்கு புறமும் எடுத்துச்செல்லும் அடையாளமாக பயன்படுத்தப்பட்டது அவ்வளவே.

செங்குத்தான கோடு ஒன்றை நடுவில் ஒரு கிடைமட்டக் கோட்டால் வெட்டி, அவற்றின் நான்கு முனைகளிலிருந்தும் கோடுகளை நீட்டி, எட்டு செங்கோணங்களைக் கொண்ட ஒரு வடிவம். ஒரு ஸ்வஸ்திகாவை உருவாக்கும் போது, அதில் நான்கு இடைவெளிகள் விடப்படுகின்றன,
அதையே புள்ளிகள் வைத்து புனிதமாக்கி ஹிந்து மதத்தில் பயன்படுத்தினார்கள். கணக்குப் புத்தகங்கள், புனித நூல்கள், கடைகள், வாகனங்கள், புதுமனைப் புகுவிழாக்கள், குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாக்கள், திருமணச் சடங்குகள், ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. மதச் சடங்குகள், திருமணங்களின் போது இந்த சின்னத்தை வரைகையில், ‘ஸ்வஸ்திக் மந்திரம்’ உச்சரிக்கப்படுகிறது.
இதில், இந்து மத நம்பிக்கையின்படி நலன் ஏற்பட வேண்டி, வருணன், இந்திரன், சூரியன், குரு மற்றும் கருடன் ஆகியோரிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நான்கு திசைகள், நான்கு பருவங்கள், நான்கு யுகங்கள், நான்கு வேதங்கள், நான்கு வர்ணங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன.

‘ஹேக்கன்கிராஸ் அல்லது ஹூக் கிராஸ்’
1871-ஆம் ஆண்டில், ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹென்ரிச் சிஸ்லெமன், பண்டைய டிராய் நகரத்தை (இன்றைய துருக்கியில் இருக்கிறது) அகழாய்வு செய்த போது, மண் பாண்டங்களில் சுமார் 1,800 வகையான ‘கொக்கி சிலுவைக்’ குறியீடுகளைக் கண்டுபிடித்தார். இது ஸ்வஸ்திகா போன்ற ஒரு வடிவம். அவர் இதை ஜெர்மானிய வரலாற்றில் இருக்கும் கலைப்பொருட்களுடன் பொருத்தினார்.
டிராய் நகரத்தில் வசித்தவர்கள் ஆரியர்கள் என்றும், இந்த மண் பாண்டங்களில் காணப்பட்ட ஒற்றுமைகளை, நாஜிக்கள் ஆரியர்களுக்கும் தங்களுக்குமான இனத் தொடர்ச்சிக்கான சான்றுகள் என்று நம்புவதற்கு வழிவகுத்தது என்றும் மானுடவியலாளர் க்வென்டோலின் லேக் குறிப்பிடுகிறார்.

ஹிட்லர் தனது கட்சி சின்னமாக ஸ்வஸ்திகாவை ஏற்றுக்கொண்டதற்கு முக்கிய காரணம், ஜெர்மானியர்கள் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் காணப்படும் ஒற்றுமையே என நம்பப்படுகிறது.
இந்த ஒற்றுமையின் மூலம்தான் இந்தியர்களும் ஜெர்மானியர்களும் ஒரே ‘தூய்மையான’ ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று ஜெர்மானியர்களை நாஜிக்கள் நம்ப வைத்தனர்.
1920-ஆம் ஆண்டில், அடால்ஃப் ஹிட்லர் புதிதாக உருவாக்கப்பட்ட தனது கட்சிக்கு ஒரு சின்னத்தைத் தேடும் போது, அவர் ‘ஹேக்கன்க்ரூஸ்’ அல்லது வலதுசாரி ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தினார். 1933-ஆம் ஆண்டில், ஹிட்லரின் பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ் ஸ்வஸ்திகா அல்லது கொக்கிச் சிலுவையின் வணிகப் பயன்பாட்டை தடை செய்யும் சட்டத்தை இயற்றினார்.

ஜெர்மனியின் ஆட்சியாளரான அடால்ப் ஹிட்லர், தனது சுயசரிதையான ‘மெய்ன் காம்ப்’ நூலின் ஏழாவது அத்தியாயத்தில் நாஜி கொடியின் தேர்வு, அதன் நிறங்கள் மற்றும் சின்னங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஹிட்லரின் கூற்றுப்படி, புதிய கொடி ‘மூன்றாம் (ஜெர்மன்) ரைக்’-அய்க் குறிக்கிறது.
நாஜிக் கட்சியின் கொடி 1920-ஆம் ஆண்டு கோடை காலத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், சிவப்புப் பின்னணியில் ஒரு வெள்ளை வட்டத்திற்குள் கருப்பு ‘ஹேக்கன்கிராஸ்’ இருந்தது. இந்த உருவம் இடது பக்கம் 45 டிகிரி கோணத்தில் சாய்ந்த ஸ்வஸ்திகா.

சிவப்பு நிறம் சமூக இயக்கத்தின் அடையாளமாக இருந்தது. வெள்ளை என்பது தேசியவாதத்தின் கருத்தை பிரதிபலிக்கிறது. ஸ்வஸ்திகா ஆரியர்களின் போராட்டத்தையும் வெற்றியையும் குறிக்கிறது.
‘தி சைன் ஆஃப் தி கிராஸ்; ஃப்ரம் கிளட்டனி டூ ஜீனோசைடு’ (‘The Sign of the Cross: From Gluttony to Genocide’) என்ற புத்தகத்தில், டாக்டர் டேனியல் ரான்கூர் லாஃபேர்ரார், ஹிட்லர் தனது குழந்தைப் பருவத்தை ஆஸ்திரியாவில் உள்ள பெனடிக்டைன் மாண்டிசோரியில் கழித்தார் என்று குறிப்பிடுகிறார். அங்கு பல இடங்களில் ‘கொக்கிச் சிலுவை’ பொறிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் தனது குழந்தைப் பருவ நினைவுகளுக்காக அந்தச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம், என்கிறார் அவர்.
இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்கள், மாற்றுத்திறனாளிகள், ரோமானி மற்றும் சின்டி இன மக்கள், கறுப்பின மக்கள், ஸ்லாவ் இன மக்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், சோவியத் மற்றும் போலந்து மக்கள் என, சுமார் 60 லட்சம் மக்களை இந்தக் கொடியின் கீழ் நாஜிக்கள் கொன்றனர்.

ஜெர்மனி மற்றும் நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அய்ரோப்பிய நாடுகளில் உள்ள யூதர்கள் ஹிட்லரின் படைகளால் துன்புறுத்தப்பட்டனர். ஹோலோகாஸ்டில் இறந்த பல லட்சம் யூதர்களுக்கு, ‘ஹேக்கன்க்ரூஸ்’ அல்லது ‘கொக்கிச் சிலுவை’ பயங்கரமான நினைவுகளைத் தூண்டும் ஒரு சின்னமாகும்.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தச் சின்னம் ‘நவ நாஜிக்கள்’ (Neo-Nazis) மற்றும் பல வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் குறியீடு, பண்டைய கிறிஸ்தவக் கல்லறைகள், ரோம் நகரின் நிலத்தடிக் கல்லறைகள், எத்தியோப்பியாவின் லாலிபெலாவில் உள்ள கல் தேவாலயம் மற்றும் ஸ்பெயினின் கோர்டோபா கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றில் காணப்படுகிறது.

யூத இன அழித்தொழிப்பான ‘ஹோலோகாஸ்ட்’ குறித்த என்சைக்ளோபீடியா குறிப்பின் படி, “7,000 ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவில் ஸ்வஸ்திகா பயன்படுத்தப்பட்டது. இது வானத்தில் சூரியனின் இயக்கம் மற்றும் இயக்கத்தைக் குறிக்கும்.”
இந்தக் குறியீடு, வெண்கல யுகத்தின் போது அய்ரோப்பா முழுவதும் பிரபலமடைந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஹரப்பா நாகரிக காலத் தளங்களில் காணப்படும் சில எச்சங்களில் ஸ்வஸ்திகா சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

19-ஆம் நூற்றாண்டில், தாமஸ் வில்சன் தனது ‘தி ஸ்வஸ்திக்: தி ஏர்லியஸ்ட் நோன் சிம்பல் அண்ட் இட்ஸ் மைக்ரேஷன்ஸ்’ (‘The Swastik: The Earliest Known Symbol and its Migrations’) என்ற புத்தகத்தில், ஸ்வஸ்திகா சின்னம் பண்டைய காலத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது என்று குறிப்பிடுகிறார். தாள்கள், கேடயங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றிலும் ஸ்வஸ்திகா சின்னம் காணப்படுகிறது. இது ஒரு வால் நட்சத்திரத்தைக் குறிக்கும் உருவம் என்று சிலர் நம்பினர்.
ஹோலோகாஸ்டில் இறந்த பல லட்சம் யூதர்களுக்கு, ‘ஹேக்கன்க்ரூஸ்’ அல்லது ‘கொக்கிச் சிலுவை’ பயங்கர மான நினைவுகளைத் தூண்டும் ஒரு சின்னமாகும்.

பண்டைய கிரேக்கர்கள் தங்கள் குடங்கள் மற்றும் குவளைகளில் ஸ்வஸ்திகா சின்னத்தை வரைந்தனர். நார்வேயின் நம்பிக்கையின்படி, ஸ்வஸ்திகா என்பது ‘தோர்’ என்ற கடவுளின் சுத்தியல்.
மேற்கத்திய நாடுகளில் விளம்பரம் மற்றும் ஆடைகளில் ஸ்வஸ்திகா சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டது. இது ஒரு கட்டத்தில் கோகோ கோலா விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது.
நாஜிக்களால் ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, பிரபல டேனிஷ் பீர் நிறுவனமான ‘கார்ல்ஸ்பெர்க்’ தனது லோகோவில் ஸ்வஸ்திகா சின்னத்தை வைத்திருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஃபின்லாந்து விமானப் படையின் அதிகாரப்பூர்வ முத்திரையில் ஸ்வஸ்திகா சின்னம் இடம்பெற்றிருந்தது. பிரிட்டனில், ஸ்வஸ்திகா சாரணர் இயக்கத்தினரால் பயன்படுத்தப்பட்டது மற்றும் ஒரு பேட்ஜாகவும் வழங்கப்பட்டது.

நாஜி முத்திரைக்கும் மங்களச் சின்னத்திற்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வெளிநாடுவாழ் இந்தியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
‘ஹேக்கன்க்ரூஸ்’ (‘Hackenkreuz’) இடதுபுறமாக 45 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கும். ஆனால், ஸ்வஸ்திகாவோ நேராக வலதுபுறமாக உள்ளது.
ஸ்வஸ்திகாவின் முதல் தோற்றம் சுமேரியர்களின் வரை படங்களில் இருந்து துவங்கியது. அவர்கள் வரைபடங்களில் வானத்தில் உள்ள பொருட்களைக் குறிக்க வட்டம், அய்ங்கோணம், அறுகோண வடிவங்களைப் பயன்படுத்தினர். சூரியனை குறிக்க வட்டம் மற்றும் கதிர் கோடுகளைப் பயன்படுத்தாமல் ஸ்வஸ்திக் போன்ற குறியீட்டை பயன்படுத்தினர்.
இதையே நாடோடிகளான ஆரியர்கள் தங்களை சூரியவம்சம் என்று கூறிக் கொண்டு சுமேரியர்களின் வரைபடத்தில் இருந்த ஸ்வஸ்திக்கை திருடிக்கொண்டு தங்களது அடையாளமாக கொண்டுவந்து விட்டனர்.


புதன், 11 செப்டம்பர், 2024

நாராயணகுரு

 Published August 20, 2024, விடுதலை நாளேடு

கேரளத்தின் முதல் பகுத்தறிவு இதழ் நாராயணகுருவின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க துவங்கப்பட்டது. இதில் நாராயணகுரு கடவுள் மறுப்புக் கொள்கைகளை எழுதியுள்ளார்.

நாராயண குருவின் முதல் சீடன் துவங்கிய முதல் பகுத்தறிவு நாத்திக இதழ் யுக்திவாதி(கேள்விகேட்பவன்)
நாராயண குருவிற்கு பல கடவுள் மறுப்பாளர்கள் நண்பர்களாக இருந்தனர். நாராயண குரு நம்பிக்கை சார்ந்த உறவுகளையும் பொருட்படுத்தாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதான அளப்பரிய அக்கறையே அவருக்கு பல பகுத்தறிவாளர்கள் நண்பர்களாக இருந்ததைக் காட்டுகிறது

அவரது சிந்தனையை எழுத்துவடிவமாக்கி மக்களிடையே கொண்டு செல்ல அவரது நெருங்கிய நண்பரும் முதன்மை சீடர் என்று மக்களால் அழைக்கப்பட்டவருமான சகாவு அய்யப்பன் போர்க்குணமிக்க நாத்திகர் என்று அழைக்கப்பட்டவர்.
சகாவு அய்யப்பன் இதழ் ஒன்றைத்துவங்கினார். அதற்கு பெயர் யுக்திவாதி, மலையாளத்தில் முதல் பகுத்தறிவு/நாத்திகம்/மூடநம்பிக்கை ஒழிப்பு/உழைப்பைச் சுரண்டும் சடங்குமுறைகளை கடுமையாக எதிர்த்து பல கட்டுரைகள் இதில் வெளியாகியது
நாராயண குருவின் புகழ்பெற்ற வாக்கியமான ஜாதி வேண்டா, மதம் வேண்டா, தெய்வம் வேண்டா மனுஷ்யனு (ஜாதி இல்லை, இல்லை மதம், மனிதனுக்கு கடவுள் இல்லை), என்று அந்த நூலின் அட்டைப்படத்தில் முகப்பு சுலோகமாக இருந்தது
20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்துக்களிடையே நிலவிய ஜாதிவெறி மேல்ஜாதி மக்கள் சூத்திர மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுடன் உணவு உண்ண மறுத்தனர். இந்த நடைமுறையை நியாயப்படுத்த அவர்களால் ஹிந்து மத நூல்கள் ஏராளமாக மேற்கோள் காட்டப்பட்டன.


நாராயணகுருவின் ஜாதியற்ற, சமயமற்ற சமுதாயம் என்ற கொள்கையின் படி அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் “பந்திபோஜனம்” என்ற முறையைக் கொண்டுவந்தார்.
ஆனால் அங்கே வந்த உயர்ஜாதியினர் நாராயண குருவை அவமதிக்கும் நோக்கத்தில் அவரை “புலையப்பன்” என்று அழைத்தனர் புலையர்களுடன் விருந்து உண்ணுவதை மிகவும் கொச்சையாக இழிவான வார்த்தைகளால் விமர்சித்து ஏளனம் செய்தனர்.
இதனை அடுத்து யுக்திவாதி இதழில் நாராயண குரு இவ்வாறு எழுதினார்.
“ஒருவரின் மதம், உடை, மொழி போன்றவை எதுவாக இருந்தாலும், அவர்கள் மனிதர்கள்தான் கலப்புத் திருமணங்கள் மற்றும் சமபந்தி போஜனங்கள் தவறில்லை”. நாராயணகுருவின் இந்த எழுத்தே அவர் குறிப்பாக ஹிந்து மதம் மற்றும் ஸநாதன விதிமுறைகளுக்கு எதிராக நிற்கிறார். அவரது இந்தக் கருத்து அவரை பகுத்தறிவு சின்னமாக மாற்றுகிறது.

இருப்பினும் அவரை ஜாதியுடன் அடையாளம் காண மேற்கொண்ட முயற்சிகளை மேற்கொண்டனர். மீண்டும் அவர் எழுதுகிறார் ” நான் ஜாதிகளையும் மதங்களையும் விட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் சிலர் நான் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் என்று நினைக்கிறார்கள். அது சரியல்ல. நான் குறிப்பிட்ட ஜாதியையோ மதத்தையோ சார்ந்தவன் அல்ல. என்னை குறிப்பிட்ட மதத்தின் ஜாதியின் அடையாளமாக கொள்பவர்களை புறக்கணியுங்கள் என்று எழுதினார்
சகாவு அய்யப்பனைத் தவிர எம்.சி.ஜோசப், சி.வி.குன்ஹிராமன் மற்றும் மிதவாடி கிருஷ்ணன் போன்ற மலையாள உலகில் புகழ்பெற்ற பகுத்தறிவுவாதிகள் உருவாக காரணமாக இருந்தவர் நாராயண குரு