பக்கங்கள்

புதன், 11 செப்டம்பர், 2024

நாராயணகுரு

 Published August 20, 2024, விடுதலை நாளேடு

கேரளத்தின் முதல் பகுத்தறிவு இதழ் நாராயணகுருவின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்க துவங்கப்பட்டது. இதில் நாராயணகுரு கடவுள் மறுப்புக் கொள்கைகளை எழுதியுள்ளார்.

நாராயண குருவின் முதல் சீடன் துவங்கிய முதல் பகுத்தறிவு நாத்திக இதழ் யுக்திவாதி(கேள்விகேட்பவன்)
நாராயண குருவிற்கு பல கடவுள் மறுப்பாளர்கள் நண்பர்களாக இருந்தனர். நாராயண குரு நம்பிக்கை சார்ந்த உறவுகளையும் பொருட்படுத்தாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதான அளப்பரிய அக்கறையே அவருக்கு பல பகுத்தறிவாளர்கள் நண்பர்களாக இருந்ததைக் காட்டுகிறது

அவரது சிந்தனையை எழுத்துவடிவமாக்கி மக்களிடையே கொண்டு செல்ல அவரது நெருங்கிய நண்பரும் முதன்மை சீடர் என்று மக்களால் அழைக்கப்பட்டவருமான சகாவு அய்யப்பன் போர்க்குணமிக்க நாத்திகர் என்று அழைக்கப்பட்டவர்.
சகாவு அய்யப்பன் இதழ் ஒன்றைத்துவங்கினார். அதற்கு பெயர் யுக்திவாதி, மலையாளத்தில் முதல் பகுத்தறிவு/நாத்திகம்/மூடநம்பிக்கை ஒழிப்பு/உழைப்பைச் சுரண்டும் சடங்குமுறைகளை கடுமையாக எதிர்த்து பல கட்டுரைகள் இதில் வெளியாகியது
நாராயண குருவின் புகழ்பெற்ற வாக்கியமான ஜாதி வேண்டா, மதம் வேண்டா, தெய்வம் வேண்டா மனுஷ்யனு (ஜாதி இல்லை, இல்லை மதம், மனிதனுக்கு கடவுள் இல்லை), என்று அந்த நூலின் அட்டைப்படத்தில் முகப்பு சுலோகமாக இருந்தது
20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்துக்களிடையே நிலவிய ஜாதிவெறி மேல்ஜாதி மக்கள் சூத்திர மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுடன் உணவு உண்ண மறுத்தனர். இந்த நடைமுறையை நியாயப்படுத்த அவர்களால் ஹிந்து மத நூல்கள் ஏராளமாக மேற்கோள் காட்டப்பட்டன.


நாராயணகுருவின் ஜாதியற்ற, சமயமற்ற சமுதாயம் என்ற கொள்கையின் படி அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் “பந்திபோஜனம்” என்ற முறையைக் கொண்டுவந்தார்.
ஆனால் அங்கே வந்த உயர்ஜாதியினர் நாராயண குருவை அவமதிக்கும் நோக்கத்தில் அவரை “புலையப்பன்” என்று அழைத்தனர் புலையர்களுடன் விருந்து உண்ணுவதை மிகவும் கொச்சையாக இழிவான வார்த்தைகளால் விமர்சித்து ஏளனம் செய்தனர்.
இதனை அடுத்து யுக்திவாதி இதழில் நாராயண குரு இவ்வாறு எழுதினார்.
“ஒருவரின் மதம், உடை, மொழி போன்றவை எதுவாக இருந்தாலும், அவர்கள் மனிதர்கள்தான் கலப்புத் திருமணங்கள் மற்றும் சமபந்தி போஜனங்கள் தவறில்லை”. நாராயணகுருவின் இந்த எழுத்தே அவர் குறிப்பாக ஹிந்து மதம் மற்றும் ஸநாதன விதிமுறைகளுக்கு எதிராக நிற்கிறார். அவரது இந்தக் கருத்து அவரை பகுத்தறிவு சின்னமாக மாற்றுகிறது.

இருப்பினும் அவரை ஜாதியுடன் அடையாளம் காண மேற்கொண்ட முயற்சிகளை மேற்கொண்டனர். மீண்டும் அவர் எழுதுகிறார் ” நான் ஜாதிகளையும் மதங்களையும் விட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் சிலர் நான் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் என்று நினைக்கிறார்கள். அது சரியல்ல. நான் குறிப்பிட்ட ஜாதியையோ மதத்தையோ சார்ந்தவன் அல்ல. என்னை குறிப்பிட்ட மதத்தின் ஜாதியின் அடையாளமாக கொள்பவர்களை புறக்கணியுங்கள் என்று எழுதினார்
சகாவு அய்யப்பனைத் தவிர எம்.சி.ஜோசப், சி.வி.குன்ஹிராமன் மற்றும் மிதவாடி கிருஷ்ணன் போன்ற மலையாள உலகில் புகழ்பெற்ற பகுத்தறிவுவாதிகள் உருவாக காரணமாக இருந்தவர் நாராயண குரு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக