பக்கங்கள்

செவ்வாய், 22 நவம்பர், 2016

அண்ணா பதில் சொல்கிறார்


(திராவிட நாடு இதழில், வாசகர்களின் முக்கிய வினாக்களுக்கு அண்ணா அளித்த அரிய விடைகள் இங்கே தரப்படுகின்றன ஆ.ர்.)
கேள்வி: ஏடுகளில் காணப்படும் கலாச்சார வரலாற்றின் அடிப்படை யை ஆதாரமாகக் கொண்டு ஆரியர் _ திராவிடர் என்று பேசுகிறீரே, இன இலக் கணங்கள் இன்று மாறு பட்டுள்ளன என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்?
பதில்: மறுக்கவில்லை நண்பரே! மறுத்ததுமில்லை. இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை.
ஆனால், இவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்திருந்தும் கூட ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை பாவனை ஆகியவைகளை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியும் உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம். இந்தப் போக்கைக் கொண்டுதான் ஆரியர், திராவிடர் என்று கூறுகிறோம். வாழ்க்கை முறை மனப்பான்மை இவைகளையே முக்கியமாக கவனிக்கிறோம்.
ஜப்பான் நாட்டவனொருவன் மக்கள் பிறவியில் பேதம் கிடையாது என்று கூறி அத்தகைய பேதம் இருக்கும் முறைகளை மறுப்பானானால் அவனையும் திராவிடன் என்று நான் கொள்வேன் என்று பெரியார் சென்ற கிழமை குமரிமுனையருகே நாகர் கோயிலில் கூறி இருக்கிறார் என்பதை நண்பருக்குக் கவனப்படுத்துகிறேன்.
சுருக்கமாகவும் சூட்சமத்தைக் காட்டும் முறையிலும் கூறுவதானால் வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரிப்பவர் ஆரியர். வர்ணாஸ்ரம தர்மம் கூடாது சமத்துவமே நிலவவேண்டும் என்பவர்கள் திராவிடர் சுயதர்மம் கோருவோர் ஆரியர். சமதர்மம் கோருவோர் திராவிடர். திராவிடர் ஒரு குறிச்சொல். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை இலட்சியத்தைக் காட்டவே அதனை உபயோகிக்கிறோம்.
பழைய ஏடுகளிலே இருந்து இதற்கான ஆதாரங்கள் காட்டும் போது நாம் அந்த நாள் கலாச்சாரம் அவ்வளவையும் ஆதரிக்கிறோம் என்பதல்ல பொருள். ஆரியர் திராவிடர் என்று. தனித்தனி இனமாக இருந்த வரலாற்று உண்மையைக் காட்டவே அந்த ஏடுகளைப் பயன்படுத்துகிறோமேயன்றி அந்த ஏடுகளிலே உள்ளபடி, நாடு மீண்டும் ஆக வேண்டும் என்பதற்கல்ல.
அந்த நாள் வாளும், வேலும், ஈட்டியும், சூலமும், பறையும், பரசலும் இன்றும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நமது நோக்கம். ஒரு காலத்தில் ஜாதியும் அதையொட்டிய பேத முறைகளும் வர்ணாஸ்ரமமும் அதை வளர்த்துப் பலன் பெற்ற கூட்டமும் இல்லாமல், மக்கள் அனைவரும் சமம், என்ற பெரு நோக்குடன் வாழ்ந்து வந்தனர்.
இந்தப் பகுதியிலே இருந்து வந்த பெரும்பாலான மக்கள் அவர்கள் திராவிடர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கொண்டிருந்த அந்தக் கொள்கை இன்று நமக்கு வேண்டும் என்று கூறுகிறோம். இதிலே பரிகசிக்கவோ அருவருக்கவோ காரணமில்லையே!
-அண்ணா- திராவிட நாடு, 16.11.1947
-விடுதலை,5.6.15

மதத்தில் இடமில்லை அறிவுக்கு


பொதுவாக, மதம் சில கொள்கை களை எடுத்துக்கூறி இதுதான் உண்மை, இதைத்தான் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகவும் பலாத்காரமாக கட்டாயப்படுத்தியும் சாதிக்க ஆரம் பித்தது.
மதத்துக்கு யாவற்றையும் படித்து ஆராய்ந்து தேடித் தெரியக்கூடிய அறிவு என ஒன்று இருப்பதைப் பற்றி கவலை கிடையாது. விஞ்ஞானம் அய்யத்தோடும் தயக்கத்தோடும் பேசுகிறது.
ஏனெனில் விஞ்ஞானத்தின் தன்மையே இதுதான் உண்மை என்று எதையும் சாதிக்க இயலாது. பகுத்தறிவின் துணை கொண்டு எதையும் நன்கு சோதித்து ஆராய்ந்து பார்த்த பிறகே அது ஒன்றை முடிவு கட்ட இயலும். விஞ்ஞானத்தையும், விஞ்ஞான முறைகளையுமே நான் விரும்புகிறேன் என்பதை நான் உனக்குச் சொல்லத் தேவை இல்லை.
-நேரு, உலக சரித்திரம் பக்கம் 346
-விடுதலை,5.6.15

ஞாயிறு, 20 நவம்பர், 2016

மகிசா சுரன் யார்?

ஸ்மிருதிரானிக்கு அர்ப்பணம்! மகிசா சுரன் யார்?

முத்து.செல்வன்
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் தில் மாணவர்கள் சிலரால்  மகிசாசுர விழா கொண்டாடப்பட்டதற்கு, நாடா ளுமன்றத்தில் உரையாற்றிய மாந்த வளத்துறை அமைச்சர் சுமிருதி இரானி,  கண்டனம் தெரிவித்த பின்னணியில் இத்தகைய விளக்கங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. (‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நன்றி: பெங்களுரு பதிப்பு
02-_02_2016)
மகிஷா என்பது அன்றைய மகிஷவூர் பகுதியை ஆண்ட மன்னன் பெயர், அவன் புத்த சமயத்தைச் சார்ந்தவன் என்றும் மாந்த மதிப்பை உணர்ந்தவன் என்றும், சமூகநீதிக்காகப் போராடியவன் என்றும் தன் மக்கள் நலனுக்காகவே ஆட்சி புரிந்தவன் என்றும் அசோகபுரம் என்னும் பகுதியில் வாழும் மக்கள் இன்றளவும் அவனைத் தங்கள் முன் னோன் என்று போற்றி வழிபட்டு வருவதாகவும் மைசூரு மாநகர மன்ற உறுப்பினர் புருசோத்தம் கூறியுள்ளார்.
புத்த சமயத்தை சார்ந்து  மக்கள் நலனுக்காகவே ஆட்சி புரிந்த மகி சனைப் பொறுக்கமாட்டாத  பார்ப் பனர்கள் (பூசாரி வகுப்பினர்) அவனுக்கு அரக்கன் (அசுரன்) முத்திரை குத்தி அவனை மகிசாசுரன் என்று அழைத் தனர்.
மகிசவூர் (மகிஷவூர்  நம்முடைய தமிழ் இலக்கியங்களில் எருமையூர் என்றழக்கப்பட்டது) என்பதே இன்று மைசூரு ஆகும். அவனை அழிப்பதற்குப் பல வகைகளிலும் முயன்று  இறுதியில் அவனைக்  கொன்றுவிட்டு சாமுண் டேசுவரி போரிட்டுக் கொன்றதாகக் கூறிவிட்டனர்.
மகிசனுக்கு என்று தனியாகக் கோயில் ஏதுவுமில்லை என்றாலும் அவனுடைய வம்சாவளியினர் என்போர் ஆண்டுதோறும் சாமுண்டி மலைக்குச் சென்று அவனுடைய சிலையை வழி பட்டு வருகின்றனர். முன்னர்  மகாப லேசுவர் மலை என்று அழைக்கப்பட்ட மலை இன்று சாமுண்டேசுவரி மலை என்று அழைக்கப்படுகிறது..  அவனு டைய நல்லாட்சியின் காரணமாகவே இந்த நகரம் மகிசவூர் என்றழைக்கப் பட்டது என்றும் புருசோத்தம் கூறி யுள்ளார்.
மகிசன் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய நல்லாட்சியையும் புகழையும் பொறுக்க மாட்டாத பார்ப்பனரகள் (பார்ப்பனர் கள் என்று வெளிப்படையாகக் கூறாமல், பூசாரி வகுப்பினர்    என்றே     கூறு கிறது) அவனை அரக்கன் என்று அழைத்தது மட்டுமல்லாமல் அவனைச் சூழ்ச்சியால் கொன்றுவிட்டு,
மகிசாசுர மர்த்தன கதையைக் கட்டிவிட்டனர் அந்தக் கதை எந்தவித ஆதாரமும் இல்லாதது என்றும் மகிச என்னும் நூலாசிரியர் சித்தசுவாமி என்பார் கூறியுள்ளார். மேலும் இந்தப் பகுதிக்கு 1449 இல் மகிசவூர் என்று பெயரிடப் பட்டதாகவும் மகிசனுடைய சிலை மகாபலேசுவர் மலையின் முகப்பில் சிக்கதேவராயரின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதென்றும் கூறுகிறார்.
சித்த சுவாமி மண்டியாவில் உள்ள மாவட்டப் பயிற்சி நிலையத்தின் முதல்வர் ஆவார். கடந்த ஆண்டு அக்டோபர்த் திங்களில் தலித் நல அறங்காப்பகத்தினர் மகிச விழாவைக் கொண்டாடி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மகிச விழாவை  அரசே கொண்டாட வேண்டும் என்னும் வேண்டுகோளையும் முன்வைத்தனர்.
கருநாடகத்தின் பல பகுதிகளின் மகிச வழிபாடு நடைபெறுகின்றது என்றும், அந்தப் பகுதி வேளாண்குடி மக்களின் வேளாண் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும்  எருமை மாடுகள் இன்றியமையாதவை என்பதால் அவற்றையும் மக்கள் வழிபடுகின்றனர்.
அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற மகிசனுடைய பெயரிலும் அது பொதிந்துள்ளது என்றும் இன்றும் அந்தப் பகுதி மக்கள் விழாக்காலங்களில் எருமைத்தலை உருவம் தாங்கிய தலை யணியை அணிந்து கொள்வது வழக்க மாக உள்ளது என்றும் ஹம்பியில் உள்ள கன்னடப் பல்கலைக் கழகத்தில் பழங்குடி ஆய்வு மய்யத்தின் தலைவரராகவுள்ள  கே. எம். மேட்ரி கூறியுள்ளார்.
-விடுதலை ஞா.ம.5.3.16

வியாழன், 10 நவம்பர், 2016

‘‘காகித ஓடம் கடல் அலை மேலே...!''

இம்மாதம் (நவம்பர்) 8 ஆம் தேதி இரவு மத்திய அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய திடீர் உரை, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு செல்லாது; நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம்.  (கிஜிவி) வங்கி வசதிகள் இயங்காது; நாளை (9.11.2016) வங்கிகள் இயங்காது. அதற்கு மறுநாள் முதல் இயங்கும்.

நாளை (10.11.2016) பழைய இந்த நோட்டுகளை, வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்; நேற்றுவரை பெட்ரோல் பங்குகள், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பழைய நோட்டுகளை - இந்த இடைக்காலத்தில் கொடுத்து செலவு செய்தால், அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அறிவித்தார்!

இந்த கருப்புப் பணவேட்டையில் திமிலங்கள் சிக்குமோ என்னவோ தெரியவில்லை; நடுத்தர ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், விவசாயத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மக்கள் இவர்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு இந்த ‘திடீர் அறிவிப்பு’ ஒரு பெரும் ‘சோதனையாகவே’ ஆகிவிட்டது!

நேற்று கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய் சாப்பாட்டுக் கடையில் கொடுத்து, சிற்றுண்டியோ, சாப்பாடோ கூட சாப்பிட முடியாத நிலை; காரணம், கடைக்காரர்கள் வாங்க முடியாத நிலை. பணமிருந்தும் பட்டினி!

மருந்து கடைகளிலும்கூட பற்பல இடங்களில் தெளிவற்ற நிலை. சுங்கச் சாவடிகளில் ஏகப்பட்ட தகராறு. நல்வாய்ப்பாக இன்று முதல் இரண்டு நாள்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

அழுகும் பொருள் விற்பனை யாளர்களுக்கு ஏகப்பட்ட நட் டம்; காரணம் கையில் பணம் உள்ளவர்களால் - 500 ரூபாய் நோட் டினைக் கொடுத்தால் ஏற்க மறுக்கும் நிலை இருப்பதால், விற்பனையோ இல்லை. மீன் விற்காமல் கண்ணீர் கடல்தான்!

கையில், பையில் உள்ள பணத் தால் பசி தீர்க்க முடியவில்லை; சில மணிநேரத்தில் அது வெறும் ‘காகிதமாகி’ மதிப்பிழந்து விட்டது!

குறுக்கு வழிகளிலோ, லஞ்சம் பெற்று கோடியாய் குவித்தவர்கள் நிலை எப்படியோ - அவர்கள் இதற் குள்ளாக மாற்றுவழி கண்டுபிடிக் காமலா இருப்பார்கள்!

என்றாலும், சில நாள்களுக்கு முன் நாம் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனை’ கட்டுரையில் ‘பணத்தால் எதனையும் வாங்க முடியுமா?’ என்று கேட்டிருந்தோம். பதில் கிடைத்துவிட்டது பார்த்தீர்களா?

அதற்குப் பிறகு நம் மக்கள் இப்போது ‘காகித ஓடம் கடல் அலைமேலே’ என்பதுபோல, கையில் பணம் இருந்தும், வயிற்றில் பசி, மனதில் வேதனை என்பனவற்றை அனுபவித்துக் கொண்டுள்ளனர்!

மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளும் பட்டினி கிடக்கிறார்கள் என்றவுடன், மனித நேயம் மிகுந்த திருநெல்வேலி உணவு விடுதியாளர் ஒருவர் அத்தகையவர்களுக்கு இலவசமாக கட்டணமின்றி உணவு அளித்துக் காப்பாற்றியுள்ளார் என்ற செய்தி மனிதநேயம் வற்றிப் போகவில்லை என்பதை உலகுக்குத் துல்லியமாய் உணர்த்தியது!

இதற்கிடையில், நேற்றுமுன்தினம் 8 ஆம் தேதி விடிவிடிய நகைக் கடைகளில் இடையிலாத வியாபாரம் - தங்கம் விலை திடீர் ஏற்றம்!

அப்போது பொன் மேலும் மின் னியது; பணம் சிறுத்தது, சிணுங்கியது!

ஒரு சில மணிநேரத்தில், மக்கள் பொருளாதார ‘சூறைப்புயலில்’ சிக் கியதுபோல் உணர்ந்த நிலை!

பின்னால் ஏற்படப்போகும்  ஆரோக்கியத்துக்கு இப்போது இத்தகைய பொருளாதார ‘விக்கல்கள்’ தவிர்க்க இயலாதவை என்று பொரு ளாதார நிபுணர்கள் அலசி ஆராய்ந்து கூறினாலும், அன்றாடத் தொழில் வருவாயில் வாழும் அடிமட்ட மக்கள் - திடீர் என்று பணம் வெற்று காகிதமாய் மதிப்பிழந்து விட்டதே என்று அவலத்தில் சிக்கி அழுது கொண்டே கூறுகிறார்கள்.

எப்படியானாலும், பணத்தைச் சேர்த்துக் குவித்து, கணக்கில் காட்டாத சுறாக்களுக்கும், திமிலங்களுக்கும் சரியான வலையாய் அமைந்தால்தான் எண்ணிய இலக்கை எட்ட முடியும்!

இடையில் சிக்கி அவதியுறும் நடுத் தட்டு மக்கள் கடல்தான் எப்போதும் போல்! உ.பி.யில் நோட்டு எரிப்பாம்!

என்ன உலகம்! எனவே, குறிக் கோள் இன்றி பணம் பணம் என்று அலையாதீர்! பிறகு இப்படி பணத்திற்கு திடீர் மாரடைப்புபோல் ஏற்பட்டால், அலறாதீர் என்பதே இந்த பணத்தாக்குதல் மூலம் கற்றுக் கொடுக்கப்படும் பாடமாகும்!

புரிந்துகொள்ளுவோமாக!
-விடுதலை,10.11.16

ஆபத்துப் பாந்தவனா - ஆபத்துத் தந்தவனா?


-விடுதலை,13.6.16

புதன், 9 நவம்பர், 2016

பாதர் எனக்கு ஒரு டவுட்?

😇😇🤔
*மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?*

*பாதர் : கேளு மகனே*

*மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்படி படைத்தார் பாதர்?*

*பாதர் : நல்ல கேள்வி. சுருக்கமாக சொல்கிறேன் கேள் மகனே*

*முதல் நாள் - பகலையும், இரவையும் படைத்தார்*

*இரண்டாம் நாள் - வானத்தை படைத்தார்*

*முன்றாம் நாள் - பூமியில் புல், பூண்டு, மரம், செடிகளையும் படைத்தார்.*

*நான்காம் நாள் - பகலை ஆள பெரிய சுடரான சூரியனையும், இரவை ஆள சிறிய சுடரான சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார்*

*மண்ணாங்கட்டி : பாதர் நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க*

*பாதர் : என்னப்பா உன்னோட பிரச்சனை?*

*மண்ணாங்கட்டி : சூரியனை நான்காம் நாள் படைத்தார் என்று சொல்லுறீங்க பிறகு எப்படி சூரியன் இல்லாம முதல் நாள் பகல் வந்துச்சி?*

*பாதர் : உன்கிட்டே சாத்தான் இருக்கான். சண்டே சர்ச்சுக்கு வா. கொஞ்சம் ஜெபம் செய்தால் சரியா போயிடும்.*☠

😂😂😂😜😜

திராவிட இயக்கம் இந்து மதத்தினை மட்டும்தான் விமர்சிக்குமா ?

பேராசிரியர்.  சுபவீ :-

திராவிட இயக்கம் இந்து மதத்தினை மட்டும்தான் விமர்சிக்குமா ?

இஸ்லாம், கிறிஸ்தவத்தை விமர்சிக்காதா ?

மதங்களில் காணப்படும் கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கைகளுக்காக திராவிட இயக்கம் அதை எதிர்ப்பதில்லை. கடவுள் நம்பிக்கையும் , மூட நம்பிக்கையும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானது.

இந்து மதத்தின் மீதான கூடுதல் தாக்கம் ஏன் என்றால், அதிலே காணப்படும் வருணாசிரம முறை. அம்முறை இந்து மதத்திற்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு குணம்.

பைபிள் படி, குரான் படி என்றுதான் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். தன் வேதத்தைப் படிக்காதே என்றும்,  கோயிலுக்குள் நுழையாதே என்றும் அவர்கள் சொல்வதில்லை !

ஆனால் கோயிலுக்குள் நுழையாதே, வேதத்தைப் படிக்காதே என்று சொன்னது இந்து மதம்தான்.

மேக்ஸ்மில்லர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத்தான்  தமிழில் மொழிபெயர்த்து எல்லோரும் படிக்கிறார்கள்.

வரும், அதிலிருந்து சாதி, சாதியிலிருந்து கிளைசாதி, அதிலிருந்து உட்சாதி என நாலாயிரத்துக்கு மேற்பட்ட பிரிவுகளை கொண்டு,  ஒவ்வொரு சாதிக்கும் கோயிலில் ஒரு எல்லையை வகுத்து பெரும்பான்மையானவர்களை கோயிலுக்குள்ளேயே அனுமதிக்காத ஒரு மதத்தை எதிர்ப்பதில் என்ன தவறு ?

மற்ற மதங்களில் பிரிவில்லையா ? என்றால்.... இருக்கிறது. இந்து மதத்திலும் சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்று ஆறு பிரிவுகள் உண்டு. இந்த பிரிவுகள் வேறு. சாதி அடுக்குகள் வேறு. நாம் எதிர்ப்பது மதப் பிரிவுகளை அல்ல. சாதி அடுக்குகளையே... !

இந்து மதத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்று இந்துக்கள் சொல்வார்களேயானால் திராவிட இயக்கத்தினர் இந்து மதத்தை எதிர்க்கப் போவதில்லை.
சாதிகள் பிறப்பின் அடிப்படையில் அல்ல, குணத்தின் அடிப்படையில்தான் பிரிக்கப் பட்டதாக கீதையில் கிருஷ்ணரே சொல்லிவிட்டார் என்று சொல்வீர்களேயானால்,  அதே கீதையில்தான் மனிதர்களுக்கான குணத்தை நானே படைத்தேன் என்று இருக்கிறது... மனிதனைப் படைத்து , அவனுக்கு குணத்தையும் படைத்து, குணத்தின் அடிப்படையில் இழிவையும் படைத்த இந்துக் கடவுளை நாம் ஏற்பது சரியா ?

ராமரே சத்திரியர் தானே ? கிருஷ்ணரே சூத்திரர்தானே ? என்று பதில் சொல்வீர்களேயானால் இந்த இரண்டு கதாபாத்திரத்தையும் இயக்கியவன் யார் என்று பதில் சொல்லுங்களேன்....

மத அடிப்படையில் சிறுபான்மை மக்களின் தீவிரவாதம் என்பது இந்தியாவில் எதிர்விணையாகத்தான் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அதுவும் கண்டிக்கப் படவேண்டியதே.

இந்திய சமூகத்திற்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும் இந்து மத தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப் படவேண்டும்...

ஆகவே திராவிட இயக்கம் இந்து மதத்தின் மீது முன்வைக்கும் விமர்சனம் நியாயமானதே....

-பேராசிரியர்.  சுபவீ!