பக்கங்கள்

புதன், 9 நவம்பர், 2016

திராவிட இயக்கம் இந்து மதத்தினை மட்டும்தான் விமர்சிக்குமா ?

பேராசிரியர்.  சுபவீ :-

திராவிட இயக்கம் இந்து மதத்தினை மட்டும்தான் விமர்சிக்குமா ?

இஸ்லாம், கிறிஸ்தவத்தை விமர்சிக்காதா ?

மதங்களில் காணப்படும் கடவுள் நம்பிக்கை மற்றும் மூடநம்பிக்கைகளுக்காக திராவிட இயக்கம் அதை எதிர்ப்பதில்லை. கடவுள் நம்பிக்கையும் , மூட நம்பிக்கையும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானது.

இந்து மதத்தின் மீதான கூடுதல் தாக்கம் ஏன் என்றால், அதிலே காணப்படும் வருணாசிரம முறை. அம்முறை இந்து மதத்திற்கு மட்டுமே உரிய ஒரு சிறப்பு குணம்.

பைபிள் படி, குரான் படி என்றுதான் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். தன் வேதத்தைப் படிக்காதே என்றும்,  கோயிலுக்குள் நுழையாதே என்றும் அவர்கள் சொல்வதில்லை !

ஆனால் கோயிலுக்குள் நுழையாதே, வேதத்தைப் படிக்காதே என்று சொன்னது இந்து மதம்தான்.

மேக்ஸ்மில்லர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத்தான்  தமிழில் மொழிபெயர்த்து எல்லோரும் படிக்கிறார்கள்.

வரும், அதிலிருந்து சாதி, சாதியிலிருந்து கிளைசாதி, அதிலிருந்து உட்சாதி என நாலாயிரத்துக்கு மேற்பட்ட பிரிவுகளை கொண்டு,  ஒவ்வொரு சாதிக்கும் கோயிலில் ஒரு எல்லையை வகுத்து பெரும்பான்மையானவர்களை கோயிலுக்குள்ளேயே அனுமதிக்காத ஒரு மதத்தை எதிர்ப்பதில் என்ன தவறு ?

மற்ற மதங்களில் பிரிவில்லையா ? என்றால்.... இருக்கிறது. இந்து மதத்திலும் சைவம், சாக்தம், வைணவம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்று ஆறு பிரிவுகள் உண்டு. இந்த பிரிவுகள் வேறு. சாதி அடுக்குகள் வேறு. நாம் எதிர்ப்பது மதப் பிரிவுகளை அல்ல. சாதி அடுக்குகளையே... !

இந்து மதத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்று இந்துக்கள் சொல்வார்களேயானால் திராவிட இயக்கத்தினர் இந்து மதத்தை எதிர்க்கப் போவதில்லை.
சாதிகள் பிறப்பின் அடிப்படையில் அல்ல, குணத்தின் அடிப்படையில்தான் பிரிக்கப் பட்டதாக கீதையில் கிருஷ்ணரே சொல்லிவிட்டார் என்று சொல்வீர்களேயானால்,  அதே கீதையில்தான் மனிதர்களுக்கான குணத்தை நானே படைத்தேன் என்று இருக்கிறது... மனிதனைப் படைத்து , அவனுக்கு குணத்தையும் படைத்து, குணத்தின் அடிப்படையில் இழிவையும் படைத்த இந்துக் கடவுளை நாம் ஏற்பது சரியா ?

ராமரே சத்திரியர் தானே ? கிருஷ்ணரே சூத்திரர்தானே ? என்று பதில் சொல்வீர்களேயானால் இந்த இரண்டு கதாபாத்திரத்தையும் இயக்கியவன் யார் என்று பதில் சொல்லுங்களேன்....

மத அடிப்படையில் சிறுபான்மை மக்களின் தீவிரவாதம் என்பது இந்தியாவில் எதிர்விணையாகத்தான் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அதுவும் கண்டிக்கப் படவேண்டியதே.

இந்திய சமூகத்திற்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும் இந்து மத தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப் படவேண்டும்...

ஆகவே திராவிட இயக்கம் இந்து மதத்தின் மீது முன்வைக்கும் விமர்சனம் நியாயமானதே....

-பேராசிரியர்.  சுபவீ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக