பக்கங்கள்

ஞாயிறு, 20 நவம்பர், 2016

மகிசா சுரன் யார்?

ஸ்மிருதிரானிக்கு அர்ப்பணம்! மகிசா சுரன் யார்?

முத்து.செல்வன்
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் தில் மாணவர்கள் சிலரால்  மகிசாசுர விழா கொண்டாடப்பட்டதற்கு, நாடா ளுமன்றத்தில் உரையாற்றிய மாந்த வளத்துறை அமைச்சர் சுமிருதி இரானி,  கண்டனம் தெரிவித்த பின்னணியில் இத்தகைய விளக்கங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. (‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நன்றி: பெங்களுரு பதிப்பு
02-_02_2016)
மகிஷா என்பது அன்றைய மகிஷவூர் பகுதியை ஆண்ட மன்னன் பெயர், அவன் புத்த சமயத்தைச் சார்ந்தவன் என்றும் மாந்த மதிப்பை உணர்ந்தவன் என்றும், சமூகநீதிக்காகப் போராடியவன் என்றும் தன் மக்கள் நலனுக்காகவே ஆட்சி புரிந்தவன் என்றும் அசோகபுரம் என்னும் பகுதியில் வாழும் மக்கள் இன்றளவும் அவனைத் தங்கள் முன் னோன் என்று போற்றி வழிபட்டு வருவதாகவும் மைசூரு மாநகர மன்ற உறுப்பினர் புருசோத்தம் கூறியுள்ளார்.
புத்த சமயத்தை சார்ந்து  மக்கள் நலனுக்காகவே ஆட்சி புரிந்த மகி சனைப் பொறுக்கமாட்டாத  பார்ப் பனர்கள் (பூசாரி வகுப்பினர்) அவனுக்கு அரக்கன் (அசுரன்) முத்திரை குத்தி அவனை மகிசாசுரன் என்று அழைத் தனர்.
மகிசவூர் (மகிஷவூர்  நம்முடைய தமிழ் இலக்கியங்களில் எருமையூர் என்றழக்கப்பட்டது) என்பதே இன்று மைசூரு ஆகும். அவனை அழிப்பதற்குப் பல வகைகளிலும் முயன்று  இறுதியில் அவனைக்  கொன்றுவிட்டு சாமுண் டேசுவரி போரிட்டுக் கொன்றதாகக் கூறிவிட்டனர்.
மகிசனுக்கு என்று தனியாகக் கோயில் ஏதுவுமில்லை என்றாலும் அவனுடைய வம்சாவளியினர் என்போர் ஆண்டுதோறும் சாமுண்டி மலைக்குச் சென்று அவனுடைய சிலையை வழி பட்டு வருகின்றனர். முன்னர்  மகாப லேசுவர் மலை என்று அழைக்கப்பட்ட மலை இன்று சாமுண்டேசுவரி மலை என்று அழைக்கப்படுகிறது..  அவனு டைய நல்லாட்சியின் காரணமாகவே இந்த நகரம் மகிசவூர் என்றழைக்கப் பட்டது என்றும் புருசோத்தம் கூறி யுள்ளார்.
மகிசன் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்றும் அவனுடைய நல்லாட்சியையும் புகழையும் பொறுக்க மாட்டாத பார்ப்பனரகள் (பார்ப்பனர் கள் என்று வெளிப்படையாகக் கூறாமல், பூசாரி வகுப்பினர்    என்றே     கூறு கிறது) அவனை அரக்கன் என்று அழைத்தது மட்டுமல்லாமல் அவனைச் சூழ்ச்சியால் கொன்றுவிட்டு,
மகிசாசுர மர்த்தன கதையைக் கட்டிவிட்டனர் அந்தக் கதை எந்தவித ஆதாரமும் இல்லாதது என்றும் மகிச என்னும் நூலாசிரியர் சித்தசுவாமி என்பார் கூறியுள்ளார். மேலும் இந்தப் பகுதிக்கு 1449 இல் மகிசவூர் என்று பெயரிடப் பட்டதாகவும் மகிசனுடைய சிலை மகாபலேசுவர் மலையின் முகப்பில் சிக்கதேவராயரின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதென்றும் கூறுகிறார்.
சித்த சுவாமி மண்டியாவில் உள்ள மாவட்டப் பயிற்சி நிலையத்தின் முதல்வர் ஆவார். கடந்த ஆண்டு அக்டோபர்த் திங்களில் தலித் நல அறங்காப்பகத்தினர் மகிச விழாவைக் கொண்டாடி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மகிச விழாவை  அரசே கொண்டாட வேண்டும் என்னும் வேண்டுகோளையும் முன்வைத்தனர்.
கருநாடகத்தின் பல பகுதிகளின் மகிச வழிபாடு நடைபெறுகின்றது என்றும், அந்தப் பகுதி வேளாண்குடி மக்களின் வேளாண் தொழிலுக்கும் வாழ்க்கைக்கும்  எருமை மாடுகள் இன்றியமையாதவை என்பதால் அவற்றையும் மக்கள் வழிபடுகின்றனர்.
அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற மகிசனுடைய பெயரிலும் அது பொதிந்துள்ளது என்றும் இன்றும் அந்தப் பகுதி மக்கள் விழாக்காலங்களில் எருமைத்தலை உருவம் தாங்கிய தலை யணியை அணிந்து கொள்வது வழக்க மாக உள்ளது என்றும் ஹம்பியில் உள்ள கன்னடப் பல்கலைக் கழகத்தில் பழங்குடி ஆய்வு மய்யத்தின் தலைவரராகவுள்ள  கே. எம். மேட்ரி கூறியுள்ளார்.
-விடுதலை ஞா.ம.5.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக