பக்கங்கள்

வியாழன், 26 மே, 2022

வடலூரும் - ஈரோடும்

 

வடலூர் இராமலிங்க அடிகளார் பிறந்த நாளான அக்டோபர் 5 தனிப்பெரும் கருணை நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்வள்ளலார் கருத்துக்களையும் தந்தை பெரியாரின் கருத்துக்களையும் தொகுத்து தருகிறது இந்தத் தொகுப்பு/

ஊருக்குப் பெயரும் பெருமையும் உண்டாவது அங்கு தோன்றிய பெரியார்களால்தான் என்பது சர்வசாதாரணமான உண்மை . பெரியார் இராமசாமி அவர்கள் தலைசிறந்த சீர்திருத் தத் தந்தை என்னும் பெருமைமலைவிளக்கென இன்று விளங்கிவிட்டதுபகைவனும் பாராட்டிமகிழும் பெருந்தொண்டினை இன்று பெரியார் ஆற்றிவருகின்றார்இதனை மறுப்பவன்ஒன்று அறிவிலியாக இருக்கவேண்டும்இன்றேல் சூழ்ச்சிக்காரக் கும்பலைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும்.

இங்கும் அங்குமாக சில பல மாறுபாடுகள் இருப்பினும்சமூகத்தைச் செப்பனிடும் தொண்டில் வடலூராரும்ஈரோட் டாரும் தன்னிகரற்ற பெரியார்கள் என்பது பலருக்கும் ஒப்ப முடிந்ததுசமத்துவத்தையும்சகோதரத்துவத்தையும், ‘ அன்பே ஆண்டவன்’ என்னும் நோக்கத்தையும் மக்களுக்குப் போதிக் கவேஇராமலிங்க அடிகளார், 1867-ஆம் ஆண்டில் “சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினைத் தோற்றுவித்தார்கள் : தான் எண்ணியவாறு ஜாதிசமயக் கட்டுப்பாடுகள் ஒழிந்துபோக வில்லை என்று இறுதியில் வருந்தினார்கள்பகுத்தறிவு வளரமூடப்பழக்க வழக்கங்கள் ஒழிய-ஜாதி மதக் கொட்டங்கள் மறைய-மனிதன் மனிதனாக வாழ - ஈரோட்டுப் பெரியார், 2-5-1925-ல் தமது சுயமரியாதை இயக்கத்திற்கு “குடிஅரசு “ என்னும் வார இதழை ஆரம்பித்தார்கள்அன்று பெரியார் கூறியவைகளைக் கவனியுங்கள்:

மக்களுக்குள் சுயமரியாதையும்சமத்துவமும்சகோதரத்துவமும் ஓங்கி வளரவேண்டும்.

உயர்வுதாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்று என்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளரவேண்டும்.

இதனோடு ஒப்பிட்டு வடலூர் அடிகளாரின் பொன் மொழி களையும் நோக்குங்கள்:

‘’பலவகைப்பட்ட சமய பேதங்களும்சாத்திர பேதங்களும்ஜாதிபேதங்களும்ஆசார பேதங்களும் போய்சுத்த சன் மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்அது கடவுள் சம்மதம்,

(அருட்பா )

இன்றுவடலூர் சென்று வள்ளலாரின் திருவாக்குகளைப் பாராயணம் செய்து பக்திப்பரவசமடையும் அடியார்களில் எத் தனைபேர்அடிகளாரின் உண்மை எண்ணம் நிறைவேற - ஜாதிமதம் ஒழியபுராணக் குப்பைகள் நீங்கத் தியாகம் செய்து செய்கை முறையில் வெளிவந்துமக்களிடையே பாடுபடுகிறார் கள் என்று கேட்கின்றோம்அந்த அடிகளார் எண்ணத் தையும் நிறைவேற்றி வைக்க அரும்பாடு படுபவர் அந்த ஈரோட்டுப் பெரியார்தானே என்பதையாரே மறுக்க வல்லார்ஆனால் ஒன்று:

அன்றைய தினமே வடலூரார் ஒரு உண்மையினைத் தெளி வாகக் கூறிவிட்டார்ஜாதிமதசமயபுராணவேத கால மெல்லாம் மலையேறி விட்டதுஉலகம் இனி இவைகளைப் பின் பற்றாதுபிற்காலத்தில் ஞானிகள் வருகின்றனர்புது உலகை உண்டாக்குவர் என்று கூறிவிட்டார்இவ்வுண்மையினைஅடிகளார் மறைந்துஅய்ந்து ஆண்டுகட்குப் பின்னர்த் தோன் றிய ஈரோட்டுப் பெரியார் செய்துகாட்டி வெற்றி காணுகின்றார் என்பது மிகையாகாதன்றோவடலூரார் தெளிவு படுத்தி யதைக் காணுங்கள் :

இதுவரையில் கர்ம சித்தருடைய காலம்அதனால் சம யங்களும்மதங்களும் பரவியிருந்தனஇப்போது வரப்போ கிறது ஞானசித்தருடைய காலம் - இனிஜாதி சமய முதலான ஆசாரங்களெல்லாம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே விளங்கும்சமயமதங்களில் சொல்லுகிற கர்த்தாக்கள்மூர்த்திகள்ஈசுவரன்பிரமம்சிவம்முதலிய தத்துவங்கள் காலப்பிரமாண பரியந்தம் இருப்பதே யொழிய அதற்குமேலிராது

(அருட்பா)

மேற்கூறிய தெய்வீகக் கோளாறுகளும்கற்பனைகளும் நாட்டில் மறைந்துவிடும் காலம் வந்தே தீரும் என்றார்இன்று நம் கண்முன் பொய்ச்சாத்திரக் குப்பைகளையும்தேவாதிதேவக் கூட்டங்களையும் வெறுத்தொதுக்கி உண்மையினை நம் பெரியார் நமக்கு உரைத்தே வருகின்றார்:

இந்தநாட்டின் படிப்புமக்கள் தொட்டதை யெல்லாம் கடவுள் செயல் என்று சொல்லிமுயற்சியை அலட்சியப் படுத்தவும்சோம்பேறியாக்கவும்உட்காரவுமே பயன்படுகிறதுஅதனால் சோம்பேறிகளும்சாதுக்களும்சந்நியாசிகளும் இங்கு அதிகமாகி விடுகிறார்கள்.”- பெரியார் (மேல்நாடும்கீழ்நாடும்)

வெறியர்களை உண்டாக்கும் மதத்தை வேரோடு களைந் தெறிவோம்சாத்திரங்கள் ஒழிந்தால்தான் சமாதானம் நிலவும்.’’

பெரியார் (13-3-1948]

 

தாய்மொழிப் பற்று

அந்தக் காலத்திலேயே அடிகளுக்குவடமொழி வெறுப்பும்தாய்மொழிப்பற்றும் அளவு கடந்திருந்தது என்பதையறிய நாம் வியப்புற வேண்டியிருக்கின்றதுவடமொழியின்டம்பமான - கற்பனையான - விரும்பத்தகாத குணபாவங்களையும் அடிகளார் குறித்துத் தன் தாய் மொழியின் மேம்பாட்டினை இலகுவாக எடுத்துக் காட்டி விட்டார்கள் .

இடம்பத்தையும்ஆரவாரத்தையும்பிரயாசத்தையும்பெருமறைப்பையும்போது போக்கையும் உண்டுபண்ணுகிற ஆரியம் (சமஸ்க்ருதம்முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாதுபயிலுதற்கும்அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடைய தாய்சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி (தமிழ்ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென் மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித்தருளினீர்’’

இவ்வாறு தனதுள்ளத்தைத் திறந்து காட்டிகருணையும்அன்புமே ஆண்டவன் என்று அறுதியிட்டுக் கூறிய இராம லிங்கப் பெருமான் தமிழ் மொழியின் அருமையினைக்கூறி மகிழ்ந்தார்மொழிப்பற்றே வேறு எந்தப்பற்றுக்கும் அடிப் படையானது என்பதைப் பெரியார் பலமுறையும் எடுத்துக் காட்டியுள்ளார். 1924-ஆம் ஆண்டில்திருவண்ணாமலையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் தலைமை தாங்கிய பொழுது பெரியார் கூறினார்:

‘’ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்று களுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும்மொழிப் பற்றிராதாரிடத்துத் தேசப்பற்றிராதென்பது நிச்சயம்தேசம் என்பது பாஷையை அடிப்படையாகக் கொண்டிலங்குவதுஆதலால்தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண் டுமென்பது எனது பிரார்த்தனை. “

“ இந்நாட்டில் ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவடமொழிக்கு உயர்வு கொடுக்கப் பல வழிகளிலும் சூழ்ச்சி செய்துஉலக வாழ்க்கையில் ஒருஒடிந்துபோன குண்டுசிக் கும் பயன்படாத பாஷையாகிய அவ்வடமொழிக்கு எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறது என்பதுவெகுநாளாகத் தமிழ் மக்கள் கவனித்துவரும் செய்தியாகும் - பெரியார் (10-5-1931)

“ என்னருந்தமிழேநீதான் மலையாளம்நீயே தெலுங்குநீயே கன்னடம் “-

பெரியார் (சென்னைப் பேச்சு)

நாங்கள் திராவிட நாடுதிராவிட மொழி என்று கூறும் போது மொழி போச்சு  மொழி போச்சு’ என்று கூப்பாடு போடுந்தோழனேஎங்கள் முயற்சியால் எதுபோகும்உன் அறியாமை வேண்டுமானால் போகுமேயொழியஉண்மையில்தமிழுக்கோதமிழ்நாட்டிற்கோ கடுகளவேனும் தீமை வருமா?”

பெரியார் (சென்னைப் பேச்சு)

ஒரு வேடிக்கை!

நாட்டிற்கென்று தமது உடல் பொருள் ஆவி அனைத்தை யும் அர்ப்பணம் செய்த பெரியோர்களின் வாழ்க்கையினைத் துருவி ஆராயுங்கால்கேவலம் பள்ளிப் படிப்பினால் அவர்கள் மேதாவிகளாகஅல்லது சமூக சீர்திருத்தத் தலைவர்களாக விளங்கினார்கள் என்று யாரும் கூறமுடியாதுபெரியார் கூறு வன நம்மை வியப்புறச் செய்கின்றன:

நான் பள்ளியில் படித்தகாலம் மிகச்சொற்ப காலமே யாகும்திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 3-வருடமும்பள்ளிக்கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக்கூடத்தில் 2-வருடமும் தான் படித்தவன்...... எனக்குப் படிப்பே வராது என்று என் பெற்றோர் முடிவு கட்டி விட்டதாகவும்நான் மிகவும் துடுக்கான பிள்ளையாய் இருந்ததாகவும்ஆதலால் என்னைப் பள்ளியில் பகலெல்லாம் பிடித்து வைத்திருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று கருதியதாகவும் சொன்னார்கள்நான் படித்த நாலு வார்த்தை பிழையறக்கூட எழுத முடியாது என்பது தான்.’’

பெரியார் (21-7-1939 கோவை)

தோழர்களேஇன்றைய பெரியார் அவர்களை நம்முன் காணுகின்ற நாம்அவர்கள் மேலே கூறிய வார்த்தைகளை நினைத்து வியப்புறுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்இஃது உலக இயற்கையே போலும்!

கல்வி கற்கவில்லை என்பதனால் நமது வடலூர் வள்ள லாருக்கு உணவு உடை முதலியன கொடுக்காதே என்றுநமது அடிகளை வளர்த்துவந்த அவரது தமையனார் சபாபதி பிள்ளை அவர்கள்தனது மனைவியாரிடம் கீழ்க்கண்டவாறு கூறிவிட்டார்!

நம்முடைய தம்பி இராமலிங்கம் நமது கருத்துக் கிணங்க கல்வி பயிலாது பலவகையான துறையில் காலத்தை வீணே போக்குகின்றான்ஆதலால் அவனுக்கு இன்று முதலாக நம் வீட்டில் உணவும் உடையும் அளிக்க வேண்டாம்‘’

இந்தக் கடுமையான உத்தரவைக் கேட்ட அடிகளாரின் அண்ணியார்அடிக்கடி அடிகளாரிடத்தில் பின்வருமாறு கூறுவ துண்டு :

தங்கள் தமையனார் சொற்படி கல்வி பயிலுவதில் கருத்தைச் செலுத்தினால் இத்துணைத் துன்பங்களும் நேராவேஆதலால் இனியாவது எனக்காகத் தாங்கள் கல்வி பயிலுவதில் கருத்தைச் செலுத்த வேண்டும்

உலகம் உய்யும் அன்பு நெறியினை-சகோதரத்துவம் என் னும் மெய்ந்நெறியினைப் புகட்டித் தந்தருளிய இராமலிங்க வள்ளலாரின் இளமைப் பருவம் நம்மைத் திகைக்க வைத்து விடுகின்றது என்பது மிகையாகாது.

வேறுபாடு

அடிகளார் அன்று ஆரம்பித்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம் முழு வெற்றியினையும் அடையவில்லை என்று கூற முடி யும்காரணம் அவர்கள் எண்ணங்கள்ஜாதிக்கொடுமைகளும்மதத்திமிரும் பிடித்தாட்டிய நாட்டில்புரட்சிகரமானதாகவே காணப்பட்டனபுரட்சிகரமான எண்ணங்களை நாட்டில் புகுத்த அவர்கள்புரட்சிகரமான பாதையில் செல்லவில்லைசெல்லு வதற்கு அவர் மனம் இடம் கொடுக்கவில்லைஅதற்குக் கார ணம் அவர்கள் எல்லாம் வல்ல சர்வ வியாபியான ஆண்ட வனை மக்களுக்குக் காட்டிஜாதி மத சமய பேதங்களைக் கண்டித்தார்சுருங்கக் கூறவேண்டுமானால் “மயிலே இறகு போடு’ என்னும் பழமொழியைப்போல் அவரது நோக்கமும் பாதையும் சென்றன என்றும் கூறலாம்.

“ அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ் ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரேயுள்ளார் என்கின்ற மெய்யறிவை விளக்கி வைத்தருளினீர்சைவம்வைணவம்சமணம்பவுத்தம் முதலாக அளவிறந்த சமயங்களும்அச்சமயத்தில் குறித்த சாதனங்களும்தெய்வங்களும்கதிகளும் தத்துவசித்தி விகற்பங்களும்வேதங்கள்ஆகமங்கள்புராணங்கள்சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் கற்பனைக் கலைகள் என்றும்அவைகளை அடையாதபடி தடை செய்வித்தருளினீர்” (அருட்பா)

ஆதலால்இனியேனும் ஜீவர்களாகிய நாம் விரைந்துவிரைந்துவீண்போகாமல் உண்மை அறிவுஉண்மை அன்புஉண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெறுவோம்

ஜாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்து அலைந்து வீணேநீர் அழிவது அழகு அலவே

(அருட்பா)

இவ்வாறு வடலூரார் உள்ளமும்நோக்கமும் ஆசையும் அளவிலாது இருந்தனஉருகி உருகிப்பாடினார்கள்பிரசங் கித்தார்கள்ஆரியத்தில் மூழ்கிய மக்கள் எளிதில் பின்பற்றி னார்களாமேலும் அடிகளார் நெஞ்சு கொதித்துக் கூறியவை களைப் பார்ப்போம்.

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் கொள்வாரில்லை ; முன் உள்ளவர்கள் உண்மை யைத் தெரிய வொட்டாது மண்ணைப்போட்டு மறைத்து விட் டார்கள்

(அருட்பா)

 வள்ளலாரின் இந்தக் கொள்கைகளை அப்படியே இன்று நமது பெரியார் வாழ்க்கையிலும் கண்டு தான் வருகின்றோம்ஜாதி மத சமய பேதங்களை அழித்துப் பொசுக்கவே ஈரோட் டுப் பெரியார்சுயமரியாதைச் சங்கத்தை நிறுவித் தொண்டாற்றி வருகின்றார்அரும்பாடு படுகின்றார்; “மயிலே இறகு போடு” என்ற பாதை வெற்றியளிக்காது என்பது பெரியார் நோக்கம்இங்குதான் வடலூராருக்கும் ஈரோட்டாருக்கும் உள்ள வேறுபாடு காணக்கிடக்கின்றதுபுரட்சி மனப்பான்மையொன்றே கைமேல் பலன் தரும் என்பதைப் பெரியார் நன்கு கண்டவர்கள்நாட்டில் மலிந்து கிடக்கும் நாசக்காரக் கொள்கைகள் மடிய எதையும் தியாகம் செய்ய வேண்டுமென்கிறார்ஆண்டவனை முன்னே நிறுத்தி மக்களை மூடவழக்கங்களிலிருந்து விடுவித்துஅன்பு-சமத்துவம்-சகோதரத்துவம்இவைகளைப் போதித்த வடலூரார் போலல்லாதுஉலகத்தை நம் கண்முன்னே நிறுத்திக்கொண்டு மக்களுடைய காட்டுமிராண்டித் தனமான வாழ்க்கையினை எடுத்துக்காட்டி-புரட்சி மனப்பான்மையுடன் செயல் முறையில் இன்றே செய்ய வேண்டுமென்று பெரியார் கர்ச்சனை செய்து வருகின்றார்:

மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாதுகண்ணில் படக் கூடாதுதெருவில்கூட நடக்கக்கூடாதுகோயிலுக்குள் போகக் கடாதுகுளத்தில்கூடத் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கின்ற கொள்கைகள் உள்ள இந்த நாட்டைப் பூகம்பத்தால் அழிக்க லாயாஎரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்கலாமா?”

பெரியார்

‘’உனக்கு உரிமை மறுக்கும் சட்டத்தையும்சாஸ்திரத் தையும் நெருப்பிலிட்டுப் பொசுக்க வேண்டும்இந்த உரிமை யினை மறுக்கும் மதத்தை மடியச் செய்யவேண்டும்“- பெரியார்

- (திருச்சிப் பேச்சு)

 உயர்ந்த ஜாதி என்று எவனெவன் திமிரோடு உங்கள் முன் வருகிறானோஅவனைக் குறுக்கேவரும் பாம்பைப்போல் கருதித் துரத்தி அடிக்க வேண்டும்அதுதான் ஜாதி ஒழிப்புக் குச் சரியான மருந்துஅது இன்ஜெக்ஷன் மாதிரி உடனே வேலைசெய்ய ஆரம்பித்துவிடும்.”- பெரியார் (28-1-48

“ அறியாமையால் சில அற்பர்கள் நம்மை வகுப்பு வாதி கள் என்று குறைகூறி வருகிறார்கள்நாம் வகுப்பு வாதிகள் அல்லஎல்லோருக்கும் மேலாக வகுப்புகள் ஒழிய வேண்டுமென்று கூறிவருவது நாம்தான்வகுப்புகளை ஒழிப்பதுதான் நமது முக்கிய வேலையாகவும் இருந்து வருகிறது.”

பெரியார் [13-3-48]

ஆரிய மதப்பித்தலாட்டங்களும்ஆணவத் திமிர்பிடித்த ஜாதிக்கும்பல்களும் மலிந்து வேரூன்றி விட்ட இந்த நாட்டில் கைகண்ட மருந்து பெரியார் கொடுக்கும் புரட்சி மனப்பான்மையேயாகும் என்பதை யாரும் அறிவார்வடலூரார் இக் கொடுமைகளை கண்டு அழுது அழுது கண்ணீர் வடித்தார் - மனம் கசிந்தார் - விசனப்பட்டார் - ஜாதி மதப் பேய்கள் ஓடுவதைக் காணோம்-”கடை விரித்தோம்கொள்வாரில்லை” என் றும் கூறிவிட்டார்அடிகளார் நெஞ்சு நெக்குவிட உருகி உருகிப் பாடினார் அவைகளைச் செயல் முறையில் இன்று நாட்டில் நிறுத்திக்காட்ட முனைந்து நிற்பவர் ஈரோட்டுப் பெரியார் ஒருவரேயன்றிஅருட்பாப் புத்தகங்களைப் பாராயணம் பண்ணிக்கொண்டு சாதுகளாய் இருக்கும் கூட்டம் அல்ல என்று வெளிப்படையாகக் கூறுவோம்வடலூரார் வருந்திக் கூறினார்:

1. வேதநெறி அகமத்தின் நெறிபவுராணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூது அனைத்தும் உளவனைத்தும் காட்டி

2. கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண்டாடும்

கண்மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போக

3. அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல்

வேண்டும்

இச்சாதிசமயவிகற்பங்கள் எல்லாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல்

4. ஜாதிகுலம்சமயமெலாம் தவிர்த்து எனை

தனித்த திரு அமுதளித்த தலைமைப் பொருளே

5. நால் வருணம் ஆச்சிரமம் ஆசாரம் முதலா

நவின்ற கலைச் சரித மெலாம் பிள்ளை விளையாட்டே

6. ஜாதி சமயங்களிலே வீதி பல வகுத்த

சாத்திரக் குப்பைகள் எலாம் பாத்திரம் அன்று

எனவே

7. ஜாதி மதம் சமயமெனும் சங்கடம் விட்டு அறியேன்

சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டறியேன்

8. இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம்

இவை முதலா இந்திர ஜாலம் கடையா யுரைப்பார்

மயலொரு நூல் மாத்திரந்தான் ஜாலமென அறிந்தார்

மகனே நீ நூலனைத்தும் ஜாலமென அறிக!!

9. சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

நேத்திரங்கள் போல் காட்ட நேராவே

ஜாதி மதம் தவிர்த்தவரே அணையவாரீர்!” என்று இவ்வாறாக வடலூரார் பதறிப் பதறி அழுதார்கள்சமூகத் தைக்கண்டு கண்ணீர் வடித்தார்கள்மூடப்பழக்க வழக்கங்களை அறவே கண்டித்தார்கள்ஆனால் அவருடைய பொன்னே போன்ற கருத்துக்களை இன்று நாட்டில் செயல் முறையில் செய்ய ஒருவரேனும் வந்துளராஒரே ஒரு பெரியார் ஈரோட்டு இராமசாமியைத் தவிர்த்து வேறு எவர் காட்டில் வெளியில் வந்து பொதுமக்களிடைக் கூறினார்கள்கோயில்களில் தேங்காய் உடைப்பதும்புஷ்பங்களால் அலங்கரித்து அழகு படுத்துவதும் இறைவனை வணங்கும் வழிகள் அல்லவே என்றார் வடலூரார்.

தேங்காயும் பூவும்

தெய்வத்திற்குப் பலியிடும் கொடிய வழக்கத்தைச் சுவாமிகள் கண்டிப்பாகத் தடுத்து வந்தார்கள்அத்துடன் தேங்காயைக் கூடப் பலியிடுதல் கூடாது என்றும்ஆண்டவரை வாயார வாழ்த்துவது தவிரபுஷ்பத்தால் அர்ச்சித்தல் முறையானதல்ல வென்றும்அபிஷேகாதிகள்புஷ்ப அலங்காரங்கள்தீப அலங் காரங்கள் முதலியனவும்வாகனங்களில் ஏற்றி ஆடம்பரங்க ளுடன் உலவி வருதல் முதலியனவும்சன்மார்க்கத்துக்கு உரி யன அல்லவென்றும்இப்படிப்பட்ட ஆரவாரங்கள் கூடா தெனவும்அரிதிற் கிடைக்கும் பணத்தை ஏழைகளின் பசி நிவர்த்திக்கே உபயோகிக்க வேண்டுமென்றும் அடிக்கடி மெய் யன்பர்களுக்கு உபதேசித்து வந்தார்கள் “

(வள்ளலார் திவ்ய சரித்திரம்)

அன்பர்களேசிந்தித்துப் பாருங்கள்இவ்வுண்மைகளை வாழ்க்கையில் நடை முறையில் இன்று காண்கிறோமாஇவ்வாறு பெரிய மாறுதல்களை நாட்டில் நிலைநிறுத்த ஆசைப்பட்ட இராமலிங்க வள்ளலாரை அக்காலத்திலேயே பார்ப்பனர்களும் ஜோதித்துக் குறும்பாட்டங்களும் செய்து வந்தனர் என்பது அருட்பாவினைக் கற்போர் நன்கு அறிவர்ஒரு சந்தர்ப்பத்தில் வடலூரார்

பாலும் நீரும் போலும் பார்ப்பன சிநேகம்

என்று கூறும்படியான சந்தர்ப்பமும் உண்டாகியிருந்தது அருட்பாவில் காணப்படுகின்றதுஎதனை எண்ணி இவ்வாறு கூறினார் என்று நாமே முடிவு கட்டிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

மூடப் பழக்க வழக்கங்கள்

அறிவுக்கும்-அன்புக்கும் வாழ்க்கைக்கும் சிறிதும் ஒத்திராத மூடப்பழக்கங்களை அடிகளார் அறவே கண்டித்தார்கள்மதங் கள்-சமயங்கள் - இவற்றை இப்படித்தான் கண்டித்தார்கள் என்று அறுதியிட்டுக் கூறமுடியாதுஅவ்வளவு வேகம் அவ ருடைய உள்ளத்தில் இருந்ததென்பதை அவருடைய பாடல்கள் எளிதில் எடுத்து இயம்பிவிடுகின்றன.

1. மதமென்று சமயமென்றும் சாத்திரங்கள் என்றும்

மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும்,

பதமென்று பதமடைந்த பத்தர் அனுபவிக்கும்

பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா

விரிந்த விதமொன்றும் தெரியாதே மயங்கினேன்

2. மதத்திலே அபிமானங்கொண்டு உழல்வேன்

வாட்டமே செயு கூட்டத்தில் பயில்வேன்

3. ஜாதியே மதமே வாழ்க்கையே யென

வாரிக் கொண்டலைந்தேன்

4. கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்

கூட்டமும்அக்கூட்டத்தே கூவுகின்ற கலையும்,

கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியும்

காட்சிகளும் காட்சி தரும் கடவுளரும் எல்லாம்

--பிள்ளை விளையாட்டு

மதங்களில் உள்ள வேதாந்திசித்தாந்தி என்று பெய ரிட்டுக்கொண்ட பெரியவர்களும்உண்மையறியாதுசமய வாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள்ஆனதினால்நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம்

(அருட்பா)

மேற்கூறியவைகளும்இன்னும் இவை போன்று தமது உரைகளையெல்லாம் இந்த மதங்களை ஒழிப்பதற்காகவே - அலறி அலறி வடலூரார் எழுதியுள்ளார்கள்இந்த உண்மைகளைக் கடந்த முப்பது ஆண்டுகட்கு மேலாகப் பெரியாரும்சுயமரி யாதைச் சங்கமும் பிரசாரம் செய்து வந்திருக்கிறது என்பதைப் பலரும் அறிவர்இதனையறியாப் புல்லர்கள் - பேயர்கள் - பேதைகள் பெரியாரைக் குறை கூறினால் “ இந்த நாடு உருப் படுமா?” என்றுதான் நாம் கேட்கவேண்டியிருக்கிறது. -

இந்த மதங்களால் பிரத்தியட்சத்தில் நடமாடுகிற மனிதனையே மனிதன் அறியாமல் அடிஉதைதுவேஷம் வெறுப்புக்கொண்டு விலகி பிரிந்து இருக்கும்போது இனிக்காண முடியாததாய் இருக்கிற கடவுளை எப்படி அறிய முடியும்சிந்தித் துப் பாருங்கள்

பெரியார் (தத்துவ விளக்கம்)

மனிதரில் அறிவாளி பரோபகாரிதயவு தாட்சண்யம் உள்ளவன் என்று பிரிக்கலாமே தவிர தெய்வத் தன்மையுடைய வன்தெய்வீகத் தன்மையோடு உண்டாக்கப் பட்டவன் என்று சொல்ல என்ன நியாயமிருக்கிறது” பெரியார் (தத்துவவிளக்கம்)

“ எல்லா மதங்களும் ஒழிந்தே தீரவேண்டும்மதம் மக்க ளுடைய அறிவைத் தடைப்படுத்தக் கூடாதுஉரிமையைப் பறிமுதல் செய்யக்கூடாதுமக்களனைவரும் ஒன்றென்னும் உண்மை நிலவ வேண்டும்இவை வாயளவில் அல்லது நூலளவில் இருத்தல் போதாது

               (பெரியார் கொள்கை)

மதம் என்பது ஒரு போதை தரும் (வெறி உண்டாக்கும்வஸ்து என்று பல அறிஞர்கள் கூறியிருப்பதுபோல் மதத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு இருப்பவர்களுக்கு ஆவேசமும்வெறியும் உண்டாவதுதான் முக்கிய பலனாக இருக்கின்றதேயொழியஅது கஷ்டப்படுகிற ஒரு பாவமும் அறியாத பாமரமக்களுக்குக் காரியத்தில் இன்று என்ன நன்மை செய்திருக்கிறதுசெய்கிறதுமதத்தால் மக்களுக்கு என்ன ஒழுக்கம் ஏற்பட்டிருக்கிறது

பெரியார் (இலங்கைச் சொற்பொழிவு).

மிருக ஜாதிகளிடைக் காணப்படும் ஒற்றுமைகூட மனித ஜாதிகளிடை கானோமே!” - பெரியார் (12-3-1948)

வள்ளலாரும் மயங்கினார்

வடலூர் வள்ளலார் ஆரம்ப காலங்களில் சைவம்வைணவம் என்கிற மதங்களாகிய மயக்கத்தில் ஆழ்ந்து விட்டதாகக் கூறி நமக்கு எச்சரிக்கை செய்கின்றார்அருட்பாவில் அவர் எழுதியுள்ளவைகளை அப்படியே தருகின்றோம்:

நாம் பார்த்தும்கேட்டும்லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம்ஆகமம்புராணம்இதிகாசம்முதலியவைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம்“-

நான் முதலில் சைவசமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாதுநான் பாடிய முதலாவது திருமுறையில் நன்றாகத் தெரியும்ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் அப்போது இருந்ததென்றால்அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்ததுஇப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதனால் ஆண் டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார்

கைலாசபதி யென்றும்வைகுண்டபதி யென்றும்சத்திய லோகபதி யென்றும்இடம்வாகனம்ஆயுதம்வடிவம் ரூபம் முதலியவையையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார் கள். ‘ தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?’ என்று கேட்பவருக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள்.”

இது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர் களும் உண்மையறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறி இருக்கின்றார்கள்ஆனால்இதை மறைத்தவன் ஒரு வல் லவன் -

......” இதுபோல்சைவம்வைணவம்முதலிய சமயங்களி லும்வேதாந்தம்சித்தாந்தம்முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்

[அருட்பா]

இன்றைய மக்கள் வள்ளலார் உரைகளைப் பின்பற்றுகிறார் களாஇல்லைஏன்அவர் ஆரிய மதத்தைக் கண்டித்தார்எனவே ஆரியர்கள் ஒரு திராவிடத் தமிழ்ப்பெரியாரைப் புகழ்ந்து போற்றவில்லை.

ஆரியர் எவ்வழி அவ்வழி நாங்களும்“ என்று பகுத் தறிவு இழந்துஇனப்பற்றை மறந்து-ஆரிய அடிமைகளான தமிழர்களும் வடலூராரைப் பின்பற்றாது சென்றனர்இன்று அவர் பாடலைப்பாடினால் போதுமாஏட்டுச் சுரக்காயாக இருக் கவா வள்ளலார் எழுதினார்செயல்களில் நிலைநிறுத்த முனைந் தார்களா?

பெரியார் அவர்கள் கூறுவதைக் கூர்ந்து கவனியுங்கள் :

வருணாச்சிரமம் இருக்க வேண்டும் ; ஜாதி இருக்கவேண் டும் ; ராஜாக்கள் இருக்கவேண்டும்முதலாளிகள் இருக்கவேண் டும்மதம் இருக்க வேண்டும்வேதம்புராணம் இதிகாசம் இருக்க வேண்டும் ; இன்றைக்கு இருக்கிற இவைகள் எல்லாம் இருக்கவேண்டும்என்கிற கட்சிகள் எதுவாயிருந்தாலும் அவைகள் சுயமரியாதை இயக்கத்தின் வைர வரிகள்.

பெரியார் (1933)

மதம் இல்லாவிட்டால்மேல் மகனும்மேல் ஜாதியும்கீழ் மகனும்கீழ் ஜாதியும்சாதாரண ஆத்மாவும் மகாத்மா வும் இருக்கமுடியாது” --பெரியார் (தத்துவ விளக்கம்)

மதத்தைக் காப்பாற்றுவதன் பயனாய் மக்கள் ஜீவனை இழக்கும்படியான தொல்லை அனுபவிக்கின்றனர்சுருங்கச் சொன்னால்மதத்தால் மக்கள் வேறுபாடும்குரோதமும்ஏற் பட்டு மனிதாபிமானம் இல்லாமல்நாடு துன்பத்தை அனுபவிக் கிறது என்று சொல்லலாம்“ - பெரியார் (மேல்நாடும் கீழ்நாடும்)

தமிழ்ப் புலவர் சிலர் ஆரியர் கொணர்ந்த பொய்வழக் கினைப் பருகி அறிவு மயங்கி அப்பொய்யினை மெய்யாகப் பிறழக் கொண்டுஇராமாயணம் பாரதம் முதலிய பொய் நூல்களை ஆக்கினர்

பெரியார் (திருச்சி பிரசங்கம்)

புரோகிதனும்மற்றச்சடங்குகளும் கூடதிராவிட மக் களைப் பொறுத்த வரையில்ஏன்பிற மக்களைப் பொறுத்த வரையிலும்கூடஇடைக்காலத்தில் தோன்றியிருக்க வேண்டும்.”

பெரியார் (12-3--48)

(“வடலூரும் ஈரோடும்“ எனும்

திருக்குறள் வீ.முனுசாமி அவர்களின் நூல்)

வெள்ளி, 20 மே, 2022

நீட்டுக்கு முன்பும் பின்பும் என்ன நிலை

 பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? மக்கள் சிந்தனைக்கு...

 தமிழ்நாட்டில் 2007ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு இல்லை.

+2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடங்கள் அளிக்கப்பட்டு வந்தன.

இதன் காரணமாக முதல் தலை முறையைச் சேர்ந்தவர்கள்கிராமப் புறங்களைச் சேர்ந்த ஏழை - எளிய மக்கள் மருத்துவக் கல்லூரியில் அடி எடுத்து வைத்தனர்பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு?

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற கண்ணிவெடியைப் பதுக்கி வைத்திருந்தவர்கள் ஆயிற்றே.

தந்தை பெரியார் குரல் கொடுத்து நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் (இராமராய நிங்கர்பிரதமராக இருந்தபோதுதான் அந்தச் சூழ்ச் சியைத் தவிடு பொடியாக்கினார்.

அதன் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்கள் டாக்டர்கள் ஆனார்கள்சுப்பன் எம்.பி.பி.எஸ்., குப்பன் எம்.டி என்ற போர்டுகளைக் கண் குளிர பார்க்க முடிந்தது.

இதனை ஒழிக்க வேண்டும் என்பது தான் உயர் ஜாதி பார்ப்பனப்பூணூல் கூட் டத்தின் பெருங்கனவாக இருந்து வந்தது.

பொருத்தமாக பிஜேபி ஆட்சி மத்தியில் வந்தாலும் வந்தது - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டாலும் 'நீட்தேர்வு உச்சநீதி மன்றத்தால் செல்லாது என்று ஆக்கப்பட்டு விட்டது.

2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிஜேபி ஆட்சியோமறுசீராய்வு மனு போட்டு கெட்டிக் காரத்தனமாக 'நீட்டுக்கு உயிரை உண்டாக்கி விட்டதுஅதன் பலனை ஒடுக்கப்பட்ட மக்கள் அனுப விக்கும் பெருங் கொடுமை இப்பொழுது!

எந்த அளவு பாதிப்பு?

இந்தப் புள்ளி விவரத்தைப் படியுங்கள்படியுங்கள்

2018ஆம் ஆண்டில் 'நீட்தேர்வு இல்லாத நிலையில் +2 அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கும்பிற்படுத்தப்பட் டோருக்கும் கிடைத்த இடங்களையும், 2017 முதல் 'நீட்வந்தபின் கிடைக்கப் பெற்ற இடங்களையும் கண்ணுள்ளவர்கள் கொஞ்சம் கருத்தால் சிந்தித்துப் பார்க் கட்டும்

2016ஆம் ஆண்டின் நிலை என்ன?

திறந்த போட்டி 884 இடங்களில்

பிற்படுத்தப்பட்டோர் - 599

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 159

முசுலிம் - 32

தாழ்த்தப்பட்டோர் - 23

மலைவாழ் மக்கள் - 01

உயர்ஜாதி - 68

'நீட்இல்லாதபோது 2016இல் தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெற்ற இடங்கள் - 30 'நீட்வந்த பிறகு - 5

2016இல் சி.பி.எஸ்.இயில் படித்தவர்கள்

பெற்ற இடங்கள் - 62

'நீட்வந்த பிறகு - 1220 (20 மடங்கு அதிகம்)

தமிழ் வழியில் படித்தவர் நீட்டுக்கு முன்

2015 - 2016 இல் - 510 இடங்கள்

2016 - 2017 இல் - 537 இடங்கள்

'நீட்வந்த பிறகு

2017 - 2018 இல் - 52

2018 - 2019இல் - 106.

பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று தெரிகிறதா?

மருத்துவக் கல்லூரி கனவு கண்டு 'நீட்என்னும் கொடுவானால் தற்கொலைக்கு ஆளான அனிதா என்ற பெண் +2 தேர் வில் பெற்ற மதிப்பெண்கள் எத்தனைத் தெரியுமா?

1200க்கு 1176 (கட் ஆஃப் மார்க் - 196.75)

(மருத்துவக் கல்லூரியில் சேரும் பாடங்களில்)

'நீட்தேர்வில் பெற்றது வெறும் - 86,

அஸ்வத் பெற்ற மதிப்பெண் - 171

கட்ஆப் 199 - (25%)

'நீட்'டில் பெற்றது - 270 (37%)

 நிவாதனி - 11181

கட்ஆப் - 199 (5%)

'நீட்'டில் - 337 - கட்ஆப் -(46%)

ஆர்ஜனனி - 182

கட்ஆப் - 198.5

நீட்டில் 279 - கட்ஆப் - 38%

நூமிளா - 1175

கட்ஆ ப் - 197.5 (88.5)

'நீட்'டில் - 203 (28%)

மதுவதனா- 1168

கட்ஆப் - 197.5

'நீட்'டில் - 278 (38%)

கினாஷியா பிரகாஷ் - 1173

கட்ஆ ப்- 199.5 (99.75%)

'நீட்'டில் - 297 (41%)

மித்திலா - 1166

கட்ஆப் - 197 (98.5%)

'நீட்'டில் - 185 (25%)

ஆயில் வாரியா - 1147

கட்ஆப் - 196.5(99.75%)

'நீட்'டில் - 207 (28%)

+2 தேர்வில் இவ்வளவு மதிப்பெண் களை இவர்கள் குவித்திருந்தாலும்நீட்டில் எவ்வளவுக் குறைவான மதிப்பெண்கள் - இதன் சூழ்ச்சி புரிகிறதா?

மக்கள் மத்தியில் இவற்றை விளக்க வேண்டாமா?

ஒடுக்கப்பட்ட மக்களின் உயிரைப் பறித்த இந்த நீட்டை ஒழிக்க வேண்டாமா?

கலிபூங்குன்றன்

துணைத் தலைவர்திராவிடர் கழகம்

Comments

வியாழன், 19 மே, 2022

இணைப்பு மொழியாக இருப்பதற்கு பயன் நிறைந்ததாக இருப்பது 'ஹிந்தி'யா அல்லது 'ஆங்கில'மா?

 

  • சீனிவாசன் ரமணி, விக்னேஷ் ராதா கிருஷ்ணன் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி
  • பிரபல ஆய்வு எழுத்தாளர்களால்  'இந்து' ஏட்டில் (15.4.2022 பக்கம் 9) எழுதப்பட்டுள்ள ஆய்வுப் பூர்வமான தரவுகள் நிறைந்த கட்டுரை இது.
  • போஜ்புரி, ராஜஸ்தானி உள்ளிட்ட 56 பிரிவுகளை உள்ளடக்கியதுதான் ஹிந்தி.
  • இந்தியாவின் தகவல் நுட்ப தலைநகரமாக பெங்களூரு திகழ்வதற்குக் காரணமே ஆங்கிலம்தான்.
  • பயன் நிறைந்ததாக இருப்பது ஆங்கிலமா? ஹிந்தியா? என்பதுதான் முக்கிய கேள்வி - பயன்பாடுதான் முக்கியம்.
  • ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் மாநிலங்கள்தான் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளைக் காட்டுகின்றன (படம் 1)
  • ஹிந்தி பேசும் மாநிலங்களிலிருந்து தான் ஏராளமான மக்கள் ஹிந்தி  பேசாத மாநிலங்களுக்குக் குடியேறுகின்றனர்.
  • இதுபோன்ற அரிய தகவல்கள் இக்கட்டுரையில் குவிந்து கிடக்கின்றன.

(இணைப்பு மொழியாக ஹிந்தியைவிட ஆங்கிலம் இருப்பதே பயன் நிறைந்தது என்று குடியேற்றம் மற்றும் முன்னேற்ற சூழ்நிலை மாற் றத்தைக் கணிக்கும் புள்ளி விவரங்கள் ஒரு உறுதியான வழக்கைக் காட்டுகின்றன).

2011 மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது தங்களது  கடிதப் போக்குவரத்துக்கு ஹிந்தி மொழிதான் முதல் தேர்வு என்று 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 15 மாநில யூனியன் பிரதேச மக்கள்தான் தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் ஒரு நிபந்தனை உள்ளது. போஜ்புரி, ராஜ்ஸ்தானி, ஹிந்தி, சத்தீஷ்கர் உள்ளிட்ட 56 மொழிகள் (தாய் மொழிகள்) உள்ளடங்கிய மொழி யாக ஹிந்தி (ஒரு குடை) மொழி இருக்கிறது.

43% இந்தியர்கள் ஹிந்தி பேசுவதாகக் கூறப்பட்டாலும் 8.26% மக்கள் மட்டுமே குறிப்பாக தங்கள் தாய்மொழியாக ஹிந்தி பேசுகிறார்கள். ஹிந்தி இணைப்பு மொழியாக செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இதைக் குறிப்பிட்டுதான், மாநில மக்கள் ஒருவருடன் ஒருவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளும் போது ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியாவின் ஹிந்தி மொழியில் செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

அவ்வாறு அவர் கூறியது எதிர்க்கட்சிகளிடமிருந்து கண்டனங் களையும் விமர்சனங்களையும் எழுப்பியது. பெங்களூரு இந்தியா வின் தகவல் தொழில் நுட்ப தலைநகரமாக ஆனதற்கு ஆங்கில மொழியே காரணம் என்று கருநாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலை வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

ஆங்கில மொழிக்கு மாற்றாக, ஹிந்தியைத் திணிப்பதற்கான வாதமே அது பெரும்பான்மையான இந்திய மக்களால் பேசப்படுகிறது என்பதுதான். ஆனால் ஹிந்தி மொழி பெரும்பான்மையான இந்தியர் களால் பேசப்படும் மொழி என்றுகூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு பதில், ஒரு பயன்பாட்டு கேள்விக்கு பதில் கூற வேண்டும். இந்திய குடிமக்கள் மேன்மையான வாழ்க்கை ஒன்றைத் தேடும்போது, ஹிந்தி - ஆங்கிலம் இரண்டு மொழிகளில் எந்த மொழி பயன் நிறைந்ததாக இருக்கும் என்பதுதான் அந்தக் கேள்வி. வேறு சொற்களில் கூறுவதானால், ஹிந்தி பேசும் உள்ளூர் மக்கள் ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதால் அதிக பயன் அடைவார்களா அல்லது ஹிந்தி மொழி பேசாத மக்கள் மீது அவர்கள் பயன் பெறுவதற்கு ஹிந்தி மொழி திணிக்கப்பட வேண்டுமா?

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மனிதவள மேம்பாட்டு அட்டவணையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதிக மக்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் பகுதிகள் மேலான மனித வள மேம்பாட்டுக் குறியீடுகளைக் காட்டுகின்றன. (படம் 1) ஹிந்தி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ள பகுதிகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், அதை விடக் குறைவான மனிதவள மேம்பாட்டு குறியீடுகளைக் காட்டுகின்றன. (படம் 2) இதன் பொருள் என்ன வென்றால், உயர்ந்த வாழ்க்கைத் தரத்துக்கும் அதிக அளவில் ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதற்கும் இடையே ஒரு ஆக்க பூர்வமான தொடர்பு இருப்பது தெரிய வருகிறது.

இதுவும்கூட குடி பெயர்பவர்களுடன் தொடர் புள்ள எண்ணிக்கையில் இருந்து பெறப்பட்டதாகும். மேலான வாழ்வாதாரங்களைத் தேடி ஹிந்தி பேசும் மக்கள் கொண்ட மாநிலங்களில் இருந்து கூடுதலான மக்கள் ஹிந்தி பேசாத மாநிலங்களுக்குக் குடிபெயர் கின்றனர். 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பொருளாதார ஆய்வில் பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் விவரங் களைப் பகுத்தாய்வு செய்வதன் மூலம் வேலையுடன் தொடர்புடைய குடியேற்ற விவரங்களை அளவிடு வதற்கு பயன்படுத்தப்பட்டது. இத்தகைய கீழ் வகுப்பு ஒன்றில் பயணம் செய்யும் அதிக அளவு பொருளாதார வசதியற்ற மக்கள் பெரும்பாலும் வேலை தொடர்பான காரணங்களுக்காகவே பயணம் செய்கிறார்கள் என்று அந்த ஆய்வறிக்கை வாதாடுகிறது. 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் அது போன்ற 90 லட்சம் பயணிகள் மேற்கொண்ட பயணங்களில் 200 கி.மீ. தொலைவுக்கும் குறைவான தூரம் பயணித்த பயணிகள் சேர்க்கப்படவில்லை.

2015-2016 ஆம் நிதியாண்டில் மாநில அளவில் பயணம் செய்த இறுதியான பயணிகளின் எண்ணிக்கை பற்றிய வரை படத்தை (படம் 4) காட்டுகிறது. தமிழ்நாடு, மகாராட்டிரா, குஜராத், மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், கருநாடகா, பஞ்சாப் மற்றும் டில்லி போன்ற மாநிலங்களில் அதிக அளவிலான மக்கள் மற்ற மாநி லங்களில் இருந்து குடிபெயர்ந்து உள்ளனர். உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், அரியானா, இமாசல பிரதேசம், சத்திஷ்கர் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான மக்கள் மற்ற மாநிலங்களக்குக் குடி பெயர்ந்துள்ளனர்.

அதிக அளவில் மக்கள் குடிபெயர்ந்த மாநிலங் களைக் காட்டும் 3ஆவது வரைபடத்துடன் இதனைப் பொருத்திப் பார்க்கும்போது, அதிக அளவில் மக்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களுடன் இந்த புள்ளி விவரங்கள் பொருந்துகின்றன. அதற்கு மாறாக அதிக அளவில் ஹிந்தி பேசும் மக்கள் குடியேறிய ஹிந்தி பேசாத மக்கள் வாழும் பகுதிகளில் இந்தி பேசும் மக்கள் வெகு சிலரே இருக்கின்றனர். இதற்கு விதி விலக்காக இருப்பவை கேரள, ஒடிசா மாநிலங்களும், மகாராட்டிரா மாநிலத் தின் சில பகுதிகளும்தான்.

இந்தியை தாய் மொழியாக பேசுபவர்களை மட் டுமே படம் 3 காட்டவில்லை; தங்களது இரண்டாவது மொழி அல்லது மூன்றாவது மொழி என்று ஹிந்தியைத் தேர்ந்து எடுத்திருக்கும் மக்களையும் இந்த படம் காட்டுகிறது. ஹிந்தி பேசும் மக்கள் 50% சதவிகிதம் அளவில் வாழும் ஹிந்தி மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்குக் குடியேறிய மக்கள் பற்றி 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் பகுத்தாய்வு ஒன்று (படம் 3) எதிர்மறைப் போக்கைக் காட்டுகிறது. இந்த மாநிலங்களில் இருந்து இதர மாநிலங் களுக்குக் குடியேறிச் செல்லும் மக்கள் மற்ற மாநிலங் களில் இருந்து ஹிந்தி பேசப்படும் மாநிலங்களுக்குக் குடிபெயரும் மக்களின் எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கை கொண்டதாக இருப்பதாகும் என்பதையே இந்த புள்ளி விவரங்களை காட்டுகின்றன. வேலை மற்றும் கல்வி ஆகிய காரணங்களுக்காக குடிபெயர்தல் உள்ளிட்ட அனைத்து வகையிலான குடிபெயர்தல்களும் இந்த பாணியில் தான் இருக் கின்றன என்பது தெரிய வருகிறது.

சுருங்கக் கூறினால் ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கை கொண்ட மக்கள் ஹிந்தி பேசப்படாத மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்து செல்கின்றனர் என்றும் ஒரு பகுதியின் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டுக்கும் அதிக அளவிலான மக்கள் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி மொழி இருப்பதைவிட ஆங்கில மொழி இருப்பதையே இவை வலியுறுத்திக் கூறுகின்றன. இந்திய ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு இது.

நன்றி: 'தி இந்து' 15.4.2022

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்