பக்கங்கள்

வியாழன், 1 டிசம்பர், 2016

ஜாதி பற்றி சுபாஷ் சந்திரபோஸ்


ஜாதியை ஒழிப்பதில் நான் அதிக தீவிர நம்பிக்கை யுடையவன். அது சம்பந்தமாக என்னாலான பிரசாரமும் செய்து வருகிறேன். சமத்துவம், நியாயம் என்ற கொள்கை களையே அடிப்படையாகக் கொண்டு உண்டாக்கப்படும் புதிய சமூகம், சுதந்திர இந்தியாவுக்கு அறிகுறியாகும்.
சிலர் தீண்டாமையை மாத்திரம் வெறுக்கிறார்களே ஒழிய, சமபந்தி போஜனத்தையும், கலப்பு மணத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அத்தகைய மனோபாவம் நான் கொண்ட வனல்ல. நாம் எல்லோரும் ஒன்று என்றால்  மனிதனுக்கு மனிதன் எவ்வித வேற்றுமையும் இருக்கலாகாது.
எந்த காரணத்தைக் கொண்டு இந்த ஜாதி உண்டாக்கப் பட்டதோ, அது சுதந்திர இந்தியாவுக்கு பொருந்தியதல்ல. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் கல்வி கற்கவும், சண்டைசெய்வதில் பழகவும், சுதந்திரமாகத் தன்னுடைய ஜீவனோபாயத்தைச் சம்பாதிக்கவும் வேண்டிய வசதிகள் இருக்க வேண்டுமென்று நவீன இந்தியா எதிர்பார்க்கிறது.
ஆகையால் எல்லா வகையிலும் ஜாதியை ஒழிக்க வேண்டியது உடனே கவனிக்கப்பட வேண்டிய தாகும். அந்த வகையில் லாகூர் ஜட்பட்டோரக் மண்டலமும், அதுபோன்ற வேறுபல சங்கங்களும் செய்து வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். அவர்களது முயற்சி வெற்றிபெறுமென்றும், சுதந்திர இந்தியாவுக்கு ஒரு புதிய சமூகத்தையும், ஜாதியையம் கொடுத்துதவுவார்களென்றும் நம்புகிறேன்.
(26.10.1930இல் கல்கத்தாவில் திரு.சுபாஷ்சந்திரபோஸ் கூறிய அபிப்பிராயம்)


பார்ப்பனர் சதி
புத்தருடைய காலத்தில் இந்தியாவில் பழைய வைதீக சமயம் பிரபலமாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பே அதில் புரை ஏற்பட்டு அது தன் உயர் நிலைமை மாறி வீழ்ச்சியடைய ஆரம்பித்து விட்டது. அதில் பிராமணக் குருமார்கள் பலவிதமான சடங்குகளையும், பூஜைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.
பூஜைகள் அதிகமானால் குருக்கள் மாருக்குக் கொண்டாட்டம் தானே! ஜாதிக்கட்டுப்பாடு மிகவும் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. குருக்கள்மார் சாதாரண ஜனங்களை மந்திரம், தந்திரம், மாயம், உச்சாடனம் என்று மிரட்டித் தம் வசப்படுத்திக் கொண்டு க்ஷத்திரிய அரசர்களைக் கூட எதிர்க்க ஆரம்பித்தார்கள்.
இவ்வாறாக பிராமணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் போட்டி வளர்ந்து கொண்டு வந்தது. பழைய வைதீக சமயத்தில் வந்து புகுந்துவிட்ட குற்றங்களையும் குருமாரின் கொடுமையையும் புத்தர் அஞ்சாது தாக்கினார்.
- நேரு, உலக சரித்திரம், பக்கம் 93.
-விடுதலை,15.5.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக